Sunday, 5 February 2017

தொடக்கக்கல்வி பட்டய தேர்வு எழுதியவர்கள் விடைத்தாள் மறுகூட்டல், நகல் பெற விண்ணப்பிக்கலாம் அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு

தொடக்கக்கல்வி பட்டய தேர்வு எழுதியவர்கள் விடைத்தாள் மறுகூட்டல், நகல் பெற விண்ணப்பிக்கலாம் அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு | அரசு தேர்வுகள் இயக்குனர் தண்.வசுந்தராதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- கடந்த ஜூன் மாதம் நடந்த தொடக்கக்கல்வி பட்டய தேர்வு எழுதிய ஆசிரியர் பயிற்சி மாணவர்களும், தனித்தேர்வர்களும் விடைத்தாளின் மறுகூட்டல் மற்றும் நகல் கோரி விண்ணப்பிக்கலாம். விடைத்தாளின் நகல் பெறப்பட்ட பின்னர் விருப்பம் உள்ளவர்கள் மறுகூட்டல், மறுமதிப்பீடு செய்ய விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் www.tndge.in என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து, அதனை பூர்த்தி செய்து, அதில் குறிப்பிட்டுள்ள கட்டண தொகையை 6-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை சம்பந்தப்பட்ட மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களில் நேரடியாக செலுத்தி ஆன்லைன் மூலம் பதிவேற்றம் செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறது. விடைத்தாள் நகல் வேண்டி விண்ணப்பிப்பவர்கள் ஒரு பாடத்திற்கு ரூ.275 மற்றும் ஆன்லைன் கட்டணம் ரூ.50 சேர்த்தும், விடைத்தாள் மறுகூட்டலுக்கு விண்ணப்பிப்பவர்கள் ஒரு பாடத்திற்கு ரூ.205 மற்றும் ஆன்லைன் கட்டணம் ரூ.50 சேர்த்தும் கட்டணம் செலுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments: