Thursday, 27 April 2017

நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க சட்ட மசோதாக்களுக்கு குடியரசு தலைவரின் ஒப்புதலை பெற்றுத்தர வேண்டும் பிரதமருக்கு முதல்வர் கே.பழனிசாமி கடிதம்

நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க சட்ட மசோதாக்களுக்கு குடியரசு தலைவரின் ஒப்புதலை பெற்றுத்தர வேண்டும் பிரதமருக்கு முதல்வர் கே.பழனிசாமி கடிதம் | நீட் தேர்வில் இருந்து தமிழகத் துக்கு விலக்கு அளிக்க தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப் பட்ட சட்ட மசோதாக்களுக்கு குடி யரசு தலைவரின் ஒப்புதலை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கு மாறு பிரதமர் நரேந்திரமோடிக்கு முதல்வர் கே.பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். இதுதொடர்பாக பிரதமர் நரேந்திரமோடிக்கு முதல்வர் கே.பழனிசாமி நேற்று எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: மருத்துவக் கல்லூரிகளில் முதுகலை படிப்புகளில் மாநில அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு நீட் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்துவது தொடர்பாக உள்ள முட்டுக்கட்டை நிலையை நீக்குமாறு கடந்த 20-ம் தேதி நான் தங்களுக்கு கடிதம் எழுதியதை தங்களுடைய கவனத்துக்கு கொண்டுவர விரும்புகிறேன். தமிழகத்தில் முதுகலை மருத்துவப் படிப்புகளில் 50 சதவீத இடங்கள் எம்பிபிஎஸ் முடித்துவிட்டு அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் டாக்டர்களுக்கு ஒதுக்கப் படுகிறது. பொது நுழைவுத்தேர்வு மூலம் 50 சதவீத இடங்களை நிரப் புவது காலம் காலமாக கடைப் பிடிக்கப்படும் கொள்கையாக இருக்கிறது. இது அரசு மருத்துவ மனைகளில் சேவை செய்யும் டாக்டர்களை ஊக்குவிக்க உதவு கிறது. மேலும் கிராமப்புற, மலைப் பிரதேச மற்றும் எளிதில் செல்ல முடியாத தொலைதூரங்களில் பணிபுரியும் டாக்டர்களுக்கு சிறப்பு ஊக்குவிப்புகளாகவும் தரப்படுகிறது. நுழைவுத்தேர்வில் மதிப்பெண் 90 சதவீத அளவிலும், சிறப்பு ஊக்குவிப்பாக 10 சதவீத அளவிலும் கணக்கிடப்பட்டு வழங்கப்படுகிறது. இந்நிலையில் மருத்துவ இள கலை, முதுலை படிப்புகளுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வில் (NEET-நீட்) தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கக் கோரும் சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. அந்த சட்ட மசோதாக்கள் குடியரசு தலைவருக்கு அனுப்பப்பட்டு, அவரின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் 2016-ம் ஆண்டு செப்டம்பர் 9-ம் தேதி மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு எழுதிய கடிதத்தில், "மாநில அரசுங்களின் தனிப்பட்ட இடஒதுக்கீட்டு கொள்கையில் நீட் தேர்வு முறை குறுக்கீடாக இருக்காது. கிராமப்புற, மலைப்பிரதேச மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண்களை முதுகலை மருத்துவப் பட்டப்படிப்புகளுக்கு அளிப்பது மாநிலங்களின் உரிமை என உறுதி அளித்திருந்தார். அதன்படி தமிழகத்தில் முதுகலை மருத்துவப் படிப்புகளுக்கான அறிக்கைகள் வெளியிடப் பட்டன. ஆனால் கடந்த 17-ம் தேதி 50 சதவீத இடஒதுக்கீடு தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பால் ஒரு வினோதமான சூழல் ஏற்பட்டுள்ளது. தமிழகம் பின்பற்றி வரும் இப்போதைய நடைமுறை தொடர தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதாக்களுக்கு குடியரசு தலைவரின் ஒப்புதல் பெற்றுத்தர வேண்டும். இதுவே நிரந்தரத் தீர்வாக இருக்கும். சட்ட மசோதாக்களுக்கு குடியரசு தலைவரின் ஒப்புதல் விரைந்து கிடைக்க தாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மருத்துவ மாணவர்கள் படிப்பைத் தொடர உதவி செய்ய வேண்டும். இவ்வாறு முதல்வர் கே.பழனிசாமி கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

No comments: