Wednesday, 31 May 2017

TRB | Direct Recruitment of Graduate Assistants - 2016 | பட்டதாரி ஆசிரியர் சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

Direct Recruitment of Graduate Assistants - 2016 | PROVISIONAL LIST OF CANDIDATES CALLED FOR CERTIFICATE VERIFICATION Teachers Recruitment Board issued Notification Advt.No. 02/2017 on 27.04.2017 to select candidates for the Notified Vacancies from 2012 TNTET, 2013 TNTET and 2014 Special TNTET qualified candidates. Now,Teachers Recruitment Board has released the list of candidates called for Certificate Verification. Candidates are advised to download the certificate verification call letters and other forms (Bio Data form, Identification form, Authorization letter if necessary) and attend the certificate verification as per the schedule given therein. Call letters will not be sent through post. Calling for certificate verification is not a guarantee for selection. It is only part of the selection process and is independent of the appointment process which will be done by the respective Departments. Utmost care has been taken in preparing the list and in publishing it. Teachers Recruitment Board reserved the right to correct any errors that may have crept in. Incorrect list will not confer any right of enforcement.
Direct Recruitment of Graduate Assistants - 2016
CERTIFICATE VERIFICATION LIST
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

PGTRB RECRUITMENT 2017 | முதுகலை ஆசிரியர் போட்டித்தேர்வு கடைசி தேதி நீடிக்கப்பட்டுள்ளது | Last date for submission of application through online mode : 02.06.2017 | Date of Written Examination : 02.07.2017.

PGTRB RECRUITMENT 2017 | முதுகலை ஆசிரியர் போட்டித்தேர்வு கடைசி தேதி நீடிக்கப்பட்டுள்ளது | Last date for submission of application through online mode : 02.06.2017 | Date of Written Examination : 02.07.2017.
PGTRB RECRUITMENT 2017 | முதுகலை ஆசிரியர் போட்டித்தேர்வு கடைசி தேதி நீடிக்கப்பட்டுள்ளது | Last date for submission of application through online mode : 02.06.2017 | Date of Written Examination : 02.07.2017.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

3 சதவீதத்தில் இருந்த மாற்றுத்திறனாளிகளுக்கான இடஒதுக்கீடு 4 சதவீதமாக உயர்வு முதல்-அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவிப்பு

3 சதவீதத்தில் இருந்த மாற்றுத்திறனாளிகளுக்கான இடஒதுக்கீடு 4 சதவீதமாக உயர்வு முதல்-அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவிப்பு | மாற்றுத் திறனாளிகளுக் கான இடஒதுக்கீட்டை 4 சதவீதமாக உயர்த்தி முதல்-அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:- மாற்றுத்திறனாளிகளின் நலனில் தமிழ்நாடு அரசு அக்கறைக் கொண்டுள்ளது. மாற்றுத் திறனாளிகளை அரசு பணியிடங்களில் பணி அமர்த்துவதில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக திகழ்ந்து வருகிறது. 1981-ம் ஆண்டிலிருந்தே மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பில் 3 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. அவற்றில் பார்வை குறைபாடுடையோர், செவித்திறன் குறைபாடுடையோர் மற்றும் கை, கால் பாதிக்கப்பட்டோர் ஆகியோர்களுக்கு தலா ஒரு சதவீதம் பணியிடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு பயன்பெற்று வருகின்றனர். மாற்றுத் திறனாளிகளுக்கான உரிமைகள் சட்டம் 2016-ன்படி, மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு பணியிடங்களில் 4 சதவீதம் இடஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். அதனடிப்படையில், ஏற்கனவே நடைமுறைப்படுத்தி வந்த 3 சதவீதம் இடஒதுக்கீட்டை 4 சதவீதமாக தமிழக அரசு பணிகளிலும் உயர்த்தி வழங்க நான் ஆணையிட்டுள்ளேன். அதன்படி, மாற்றுத் திறனாளிகளுக்காக அரசு பணிகளில் செய்யப்படவிருக்கும் 4 சதவீதம் ஒதுக்கீட்டில், பார்வை குறைபாடுடையோர்க்கு ஒரு சதவீதமும்; செவித்திறன் குறைபாடுடையோர்க்கு ஒரு சதவீதமும்; கை, கால் பாதிக்கப்பட்டோர் (மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டோர், தொழுநோயால் பாதிக்கப்பட்டோர், குள்ளத்தன்மையுடையோர், அமில வீச்சினால் பாதிக்கப்பட்டோர் மற்றும் தசைச் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டோர் ஆகியோர் உட்பட) ஒரு சதவீதமும்; புறஉலக சிந்தனையற்றோர், அறிவுசார் குறைபாடுடையோர், மனநலம் பாதிக்கப்பட்டோர் மற்றும் மேலே குறிப்பிட்ட வகைக்குள் வருபவர்களில் ஒன்றுக்கு மேற்பட்ட பிரிவுகளில் பாதிக்கப்பட்டோருக்கு (செவித்திறன் குறைபாடு மற்றும் பார்வைத்திறன் குறைபாடு ஆகிய இரண்டாலும் பாதிக்கப்பட்டோர் உட்பட) ஒரு சதவீதமும் என ஒதுக்கீடு வழங்கவும் நான் உத்தரவிட்டுள்ளேன். அதற்கான அரசாணைகளும் வெளியிடப்பட்டுள்ளன. இந்த 4 சதவீத இடஒதுக்கீடானது அனைத்து அரசுப் பணியிடங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், வாரியங்கள், உள்ளாட்சி அமைப்புகள், கல்வி நிறுவனங்கள், அரசு உள்ளாட்சி அமைப்புகள், அரசின் நிதி உதவி பெறும் அமைப்புகள் ஆகியவற்றிற்குப் பொருந்தும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Tuesday, 30 May 2017

FINAL PROMOTIONAL PANEL FOR COUNSELLING | 2017 - 2018 - SGT TO BT - TAMIL - ENGLISH - MATHS - SCIENCE - HISTORY- GEOGRAPHY - COUNSELLING PANEL

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

தனியார் பள்ளிகளில் சேர 79 ஆயிரம் விண்ணப்பங்கள் கட்டாய கல்வி உரிமை சட்டத்தில் குலுக்கல் முறையில் சேர்க்கை என அரசு தகவல்

தனியார் பள்ளிகளில் சேர 79 ஆயிரம் விண்ணப்பங்கள் கட்டாய கல்வி உரிமை சட்டத்தில் குலுக்கல் முறையில் சேர்க்கை என அரசு தகவல் | இலவச, கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் சேர 79,842 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. குலுக்கல் முறையில் மாணவர் சேர்க்கை நடைபெறும். தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு ஜூன் 5-ம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட பள்ளியில் சேர்க்கை வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: குழந்தைகளுக்கான இலவச, கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் சிறுபான்மையற்ற தனியார் சுயநிதிப் பள்ளிகளில் நுழைவுநிலை வகுப்பில் 25 சத வீதம் ஒதுக்கீட்டில், வாய்ப்பு மறுக்கப்பட்ட, நலிவடைந்த பிரிவி னரின் குழந்தைகளைச் சேர்க்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதற்கு இணையம் வாயிலாக விண்ணப்பிக்க கடந்த ஏப்ரல் 20 முதல் மே 26 வரை அவகாசம் வழங்கப்பட்டது. இதில் மொத்தம் 79,842 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. ஒவ்வொரு பள்ளிக்கும் விண் ணப்பித்துள்ள குழந்தைகளின் பட்டியல் 30-ம் தேதி (இன்று) பதி விறக்கம் செய்யப்படும். நிர்ண யிக்கப்பட்ட இடங்கள் அல்லது அதைவிட குறைவான விண்ணப் பங்கள் பெறப்பட்டிருந்தால், தகுதி யான அனைத்து குழந்தைகளும் சேர்க்கப்படுவார்கள். இந்தப் பெயர் பட்டியல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களால் 31-ம் தேதி (நாளை) அந்த பள்ளிகளுக்கு வழங்கப்படும். நிர்ணயிக்கப்பட்ட இடங்களை விட கூடுதலாக விண்ணப்பங்கள் வந்திருந்தால், சம்பந்தப்பட்ட பள்ளிகளில் 31-ம் தேதி (நாளை) குலுக்கல் முறையில் குழந்தைகள் தேர்வு செய்யப்படுவார்கள். குலுக்கல் நடத்துவதற்காக கல்வித் துறை பிரதிநிதி ஒருவரும், மாவட்ட ஆட்சியரால் நியமிக்கப்படும் பிரதிநிதி ஒருவரும் ஒவ்வொரு பள்ளிக்கும் அனுப்பி வைக்கப்படுவர். சேர்க்கைக்கு விண்ணப்பித் துள்ள குழந்தைகளின் பெற்றோர், பள்ளி முதல்வர் முன்னிலையில் குலுக்கல் நடக்கும். விண்ணப் பங்கள் அதிக அளவில் பெறப் பட்டுள்ள பள்ளிகளில் குலுக்கல் நடக்கும்போது, மாவட்டக் கல்வித் துறை உயர் அதிகாரிகள், வரு வாய்த் துறை உயர் அதிகாரிகள் சென்று பார்வையிடுவார்கள். முதலாவதாக, வாய்ப்பு மறுக்கப்பட்ட சிறப்பு பிரிவினர் களான ஆதரவற்றவர்கள், எச்ஐவி யால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், மூன்றாம் பாலினத்தவர், துப்புரவுத் தொழிலாளர்களின் குழந்தைகள், மாற்றுத்திறன் குழந்தைகளிடம் பெறப்பட்ட தகுதியான விண்ணப் பங்கள் குலுக்கலின்றி தேர்வு செய்யப்படும். அதற்குப் பிறகு, ஒரு கி.மீ. தொலைவுக்குள் வசிக்கிற, வாய்ப்பு மறுக்கப்பட்ட, நலிவடைந்த பிரிவினரின் குழந்தை களுக்கு குலுக்கல் நடத்தப்படும். அதன் பிறகும், இடங்கள் காலியாக இருந்தால், ஒரு கி.மீ.க்கு அதிகமான தொலைவில் வசிக்கும் குழந்தைகளுக்கு குலுக்கல் நடத்தப்படும். ஒவ்வொரு பள்ளிக்கும் நுழைவு நிலை வகுப்பின் ஒவ்வொரு பிரிவுக் கும் 5 இடங்கள் வீதம் குலுக்கல் முறையில் காத்திருப்பு பட்டியல் தயார் செய்யப்படும். குலுக்கலில் தேர்வான குழந்தைகள் பள்ளியில் சேராவிட்டால் காத்திருப்பு பட்டியலில் இருப்பவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு செய்யப்பட்ட குழந்தைகளுக்கு ஜூன் 5-ம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட பள்ளியில் சேர்க்கை வழங்கப்படும்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

தொடக்கக்கல்வி பட்டயப்படிப்பு மாணவர் சேர்க்கை அறிவிப்பு 2017-2018 | ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.விண்ணப்பிக்க கடைசி தேதி 21.06.2017

தொடக்கக்கல்வி பட்டயப்படிப்பு மாணவர் சேர்க்கை அறிவிப்பு 2017-2018 | ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.விண்ணப்பிக்க கடைசி தேதி 21.06.2017.2017-18-ம் கல்வி ஆண்டிக்கான தொடக்க கல்வி பட்டய படிப்பு ஒற்றைச்சாளர முறை மாணவர் சேர்க்கைக்குரிய விண்ணப்பங்களை இன்று (புதன்கிழமை) காலை 10 மணி முதல் 21.6.2017 அன்று மாலை 5 மணி வரை www.tnscert.org என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம். பொதுபிரிவு, பிற்பட்ட வகுப்பு, மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவு மாணவர்களுக்கு ரூ.500-ம், தாழ்த்தப்பட்ட, பழங்குடியின பிரிவு மாணவர்களுக்கு ரூ.250-ம் விண்ணப்ப கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ‘டெபிட்’, ‘கிரெடிட்’ கார்டு, இணையதள வங்கி சேவை ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தி விண்ணப்ப கட்டணத்தை செலுத்தலாம். விண்ணப்பத்தில் அளிக்க வேண்டிய விவரங்கள் பற்றிய விளக்கங்கள், தமிழ்நாட்டில் உள்ள ஆசிரியர் பயிற்சி நிறுவனம் சேர்ந்த விவரங்கள், கல்வி தகுதி, வயது வரம்பு, சிறப்பு இட ஒதுக்கீடு மற்றும் விண்ணப்பங்கள் பதிவேற்றம் விவரங்களை www.tnscert.org என்ற இணையதளத்தை பார்த்துக் தெரிந்து கொள்ளலாம்.
தொடக்கக்கல்வி பட்டயப்படிப்பு மாணவர் சேர்க்கை அறிவிப்பு 2017-2018 | ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.விண்ணப்பிக்க கடைசி தேதி 21.06.2017 
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

எஸ்.எஸ்.எல்.சி. சிறப்பு துணை பொதுத்தேர்வு அறிவிப்பு. 31.5.2017 முதல் 3.6.2017 வரை விண்ணப்பிக்க வேண்டும்.

எஸ்.எஸ்.எல்.சி. சிறப்பு துணை பொதுத்தேர்வு அறிவிப்பு 31.5.2017 முதல் 3.6.2017 வரை விண்ணப்பிக்க வேண்டும்.| எஸ்.எஸ்.எல்.சி. சிறப்பு துணை பொதுத்தேர்வுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் தனியார் 'இன்டர்நெட்' மையம் மூலம் விண்ணப்பிக்க இயலாது. மார்ச்-2017 எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் தோல்வியுற்றவர்கள், வருகை புரியாதவர்களுக்காக வருகிற 28.6.2017 முதல் 6.7.2017 வரை எஸ்.எஸ்.எல்.சி. சிறப்பு துணை பொதுத்தேர்வு நடைபெற இருக்கிறது. இந்த தேர்வு எழுத விண்ணப்பிக்க விரும்பும் தேர்வர்கள் அவரவர் பயின்ற பள்ளிகள், தேர்வு எழுதிய தேர்வு மையங்கள் மூலம் 31.5.2017 முதல் 3.6.2017 வரை ஆன்-லைனில் விண்ணப்பிக்க வேண்டும். தனியார் 'இன்டர்நெட்' மையங்கள் மூலம் விண்ணப்பிக்க இயலாது. தேர்வுக்கட்டணம் ரூ.125 மற்றும், ஆன்-லைன் பதிவுக்கட்டணம் ரூ.50 என மொத்தம் ரூ.175-ஐ ஆன்-லைனில் விண்ணப்பிக்கும் பள்ளிகள், தேர்வு மையங்களிலேயே பணமாக செலுத்த வேண்டும். தேர்வுக்கூட அனுமதிச்சீட்டுகளை (ஹால் டிக்கெட்) இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். பதிவிறக்கம் செய்ய வேண்டிய நாட்கள் பின்னர் அறிவிக்கப்படும். தேர்வர் தமக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தேர்வு மையம் குறித்து தேர்வுக்கூட அனுமதிச்சீட்டில் அறிந்து கொள்ளலாம். தேர்வர்களுக்கு தேர்வு எழுத தற்போது வழங்கப்படும் அனுமதி முற்றிலும் தற்காலிகமானது எனவும், தேர்வர்களின் விண்ணப்பம் மற்றும் தகுதி குறித்து ஆய்வு செய்யப்பட்ட பின்னரே தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்படுகிறது. மேற்கண்ட தகவல் அரசு தேர்வுகள் இயக்குனர் தண்.வசுந்தராதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது  | DOWNLOAD
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

மேல்நிலை சிறப்பு துணை பொதுத்தேர்வு அறிவிப்பு. 29.05.2017 (திங்கட் கிழமை) முதல் 01.06.2017 (வியாழக் கிழமை) வரை விண்ணப்பிக்க வேண்டும்.

மேல்நிலை சிறப்பு துணை பொதுத்தேர்வு அறிவிப்பு. 29.05.2017 (திங்கட் கிழமை) முதல் 01.06.2017 (வியாழக் கிழமை) வரை விண்ணப்பிக்க வேண்டும் | நடைபெற்று முடிந்த மார்ச் 2017 தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள்/ வருகைப்புரியாதவர்களுக்காக வருகிற 23.06.2017 அன்று தொடங்கி 06.07.2017 வரை நடைபெறவிருக்கும் ஜூன்/ஜூலை 2017, மேல்நிலை சிறப்புத் துணைத் தேர்வெழுத விண்ணப்பிக்க விரும்பும் தேர்வர்கள் பள்ளிகள்/ தேர்வு மையங்கள் மூலம் ஆன்-லைனில் விண்ணப்பிக்க வேண்டும். பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளியின் மூலமாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையங்கள் மூலமாகவும் மட்டுமே ஆன்-லைனில் விண்ணப்பிக்க இயலும். விண்ணப்பிக்க விரும்பும் தேர்வர்கள் பள்ளிகள்/ தேர்வு மையங்களுக்கு நேரில் சென்று 29.05.2017 (திங்கட் கிழமை) முதல் 01.06.2017 (வியாழக் கிழமை) வரை ஆன்-லைனில் விண்ணப்பிக்க வேண்டும். தனியார் Browsing Centre கள் மூலம் விண்ணப்பிக்க இயலாது. தேர்வுக் கட்டணம் செலுத்தும் முறை: தனித்தேர்வர்கள் ஒரு பாடத்திற்கு ரூ.50 + (இதர கட்டணம் ரூ.35/-) மற்றும் ஆன்-லைன் பதிவுக் கட்டணமாக ரூ.50/- ஐ சேர்த்து பணமாக மட்டுமே செலுத்த வேண்டும். தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுகள் விநியோகம் தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுகள் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். பதிவிறக்கம் செடீநுய வேண்டிய நாட்கள் பின்னர் அறிவிக்கப்படும். தேர்வர் தமக்கு ஒதுக்கீடு செடீநுயப்பட்டுள்ள தேர்வு மையம் குறித்து தேர்வுக்கூட அனுமதிச்சீட்டில் அறிந்துக் கொள்ளலாம். தேர்வர்களுக்கு தேர்வெழுத தற்போது வழங்கப்படும் அனுமதி முற்றிலும் தற்காலிகமானது எனவும், தேர்வர்களின் விண்ணப்பம் மற்றும் தகுதி குறித்து ஆய்வு செய்யப்பட்ட பின்னரே தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்படும். மேற்கண்ட தகவல் அரசு தேர்வுகள் இயக்குனர் தண்.வசுந்தராதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது | DOWNLOAD
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

வீட்டில் இருந்தபடியே அரசு சான்றிதழ்களை செல்போன் மூலம் பதிவிறக்கம் செய்யும் ‘உள்ளங்கையில் சான்றிதழ்’ திட்டம்.

வீட்டில் இருந்தபடியே அரசு சான்றிதழ்களை செல்போன் மூலம் பதிவிறக்கம் செய்யும் 'உள்ளங்கையில் சான்றிதழ்' திட்டம் | வீட்டில் இருந்தபடியே அரசு சான்றிதழ்களை செல்போன் மூலம் பதிவிறக்கம் செய்யும் உள்ளங்கையில் சான்றிதழ் என்ற திட்டத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தொடங்கிவைத்தார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- நிர்வாகக் கட்டிடம் சேலம், ஜாகீர்அம்மாபாளையத்தில் அமைந்துள்ள தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் தகவல் தொழில் நுட்பவியல் சார்ந்த சிறப்புப் பொருளாதார மண்டலத்தில், தமிழ்நாடு மின்னணு நிறுவனத்தின் நிர்வாக மற்றும் தகவல் தொழில்நுட்ப கட்டிடத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமைச் செயலகத்தில் காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார்.கோயம்புத்தூர், விளாங்குறிச்சியில் அமைந்துள்ள தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் தகவல் தொழில் நுட்பவியல் சார்ந்த சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் தமிழ்நாடு மின்னணு நிறுவனத்தின் மூலம் கட்டப்பட்ட நிர்வாகக் கட்டிடத்தையும் அவர் திறந்து வைத்தார். தமிழ் மென்பொருள் தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் மூலம் தமிழ் மென்பொருள்களை உருவாக்கும் திட்டத்தின் முதற்கட்டமாக 15 தமிழ் மென்பொருட்கள் உருவாக்க திட்டமிடப்பட்டது. அவற்றில். "தமிழிணையம் ஒருங்குறி மாற்றி" மற்றும் "தமிழிணையம் ஒருங்குறி எழுத்துக்கள்" ஆகிய 2 தமிழ் மென்பொருட்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இவற்றை முதல்-அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தொடங்கி வைத்தார்.தமிழிணையம் ஒருங்குறி மாற்றியின் (தமிழ் யூனிகோட் கன்வெர்டர்) பயன்பாட்டை அதிகரிக்கும் வகையில், முதற்கட்டமாக 10 புதிய (பான்ட்) தமிழிணையம் ஒருங்குறி எழுத்துருக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இவற்றை தமிழ் இணையக் கல்விக்கழக இணையதளத்திலிருந்து (http://www.tamilvu.org/tkbd/index.html) இலவசமாகப் பதிவிறக்கம் செய்யலாம். உள்ளங்கையில் சான்றிதழ் அரசு இ-சேவை மையங்களின் சேவைகளை இன்னும் எளிமையான முறையில் பெறுவதற்கு, அனைத்து இ-சேவை மையங்களிலும் 2.5.2017 முதல் அரசு சேவை பெற விரும்பும் விண்ணப்பதாரரின் கைப்பேசி எண்கள் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் விண்ணப்பதாரர் அவர்கள் கேட்கும் சான்றிதழ்களுக்கு ஒப்புதல் கிடைக்கப் பெற்றவுடன் அவர்களின் பதிவு செய்யப்பட்ட கைப்பேசி எண்ணுக்கு குறுந்தகவலாக டைனி யூ.ஆர்.எல். அனுப்பி வைக்கப்படும்.பின்னர் ஸ்மார்ட் செல்போன் மூலம் சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இந்த 'உள்ளங்கையில் சான்றிதழ்' என்ற திட்டத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி இணைய வழியாக தொடங்கி வைத்தார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Monday, 29 May 2017

விளையாட்டை பாடமாக சேர்க்க மத்திய அரசு முடிவு

விளையாட்டை பாடமாக சேர்க்க மத்திய அரசு முடிவு | மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு டெல்லியில் கூறியதாவது: ஒவ்வொருவருடைய வாழ்க்கை யிலும் விளையாட்டு என்பது ஒருங்கிணைந்த ஒன்றாக இருக்க வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு, பள்ளிப் பாடத்தில் விளையாட்டு கல்வியைப் புகுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. விளையாட்டில் சிறந்து விளங்கும் மாணவ, மாணவிகள் மண்டல, மாநில மற்றும் தேசிய அளவில் அடுத்தடுத்துச் செல்ல பள்ளியில் இருந்தே குடும்பத்தின ரும், சமூகத்தினரும் அவர்களுக்குத் தேவையான ஊக்கத்தை அளிப்பார்கள் என நம்புகிறேன். விளையாட்டு உடல் மற்றும் மன ரீதியாக மாற்றத்தைத் தருவதுடன், குழு மனப்பான் மையையும் ஏற்படுத்துகிறது. இந்தியாவின் கலாச்சார விளையாட்டான கபடி மற்றும் கோ கோ-வை ஒலிம்பிக்கில் சேர்ப்பதற்கான முயற்சியை பிரதமர் எடுத்து வருகிறார். இவ்வாறு வெங்கய்ய நாயுடு தெரிவித்தார்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

பள்ளிகளில் பாடபுத்தகம் ஜூன் 7-ம் தேதி விநியோகம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பள்ளி புத்தகங்கள் விற்பனை மையம் பாடநூல் கழகம் தகவல்

பள்ளிகளில் பாடபுத்தகம் ஜூன் 7-ம் தேதி விநியோகம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பள்ளி புத்தகங்கள் விற்பனை மையம் பாடநூல் கழகம் தகவல் | அண்ணா நூற்றாண்டு நூலகத் தில் பள்ளி பாட புத்தகங்கள் விற்பனை மையம் அமைக்கப் பட்டு வருவதாகவும், ஜூன் 7-ம் தேதி பள்ளிகள் திறக்கும் போது பாடபுத்தகம் உறுதியாக மாணவர்களுக்கு கிடைக்கும் என்றும் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் கழகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழகத்தில் ஒன்று முதல் பிளஸ் 2 வரையிலான வகுப்பு களுக்கு தேவையான இலவசம் மற்றும் விற்பனைக்கான புத்தகங் கள் அச்சிடப்பட்டு, தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக் கப்பட்டுள்ளது. ஒன்றாம் வகுப்பு முதல் 9-ம் வகுப்புவரை முதல் பருவத்துக்கு ஒரு கோடியே 22 லட்சம் இலவச புத்தகம், 79 லட்சத்து 77 ஆயிரம் விற்பனைக்கான புத்தகங்கள், ஒரு லட்சத்து 35 ஆயிரம் பிற மொழி புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டுள்ளன. 10-ம் வகுப்புக்கு ஆண்டு முழுமைக்கும் 39 லட்சத்து 48 ஆயிரம் இலவச புத்தகம், 15 லட்சத்து 51 ஆயிரம் விற்பனைக்கானது, பிளஸ் 1 வகுப்புக்கு 59 லட்சத்து 12 ஆயிரம் இலவசம், 20 லட்சத்து 50 ஆயிரம் விற்பனைக்கான புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டுள்ளன. பிளஸ் 2 வகுப்புக்கு 59 லட்சத்து 45 ஆயிரம் இலவசம் மற்றும் 23 லட்சத்து 59 ஆயிரம் விற்பனை புத்தகங்கள் தயாராகியுள்ளன. இலவச புத்தகங்கள் அனைத் தும் சம்பந்தப்பட்ட 67 கல்வி மாவட்ட அலுவலகங்களின் தேவைக்கு ஏற்ப 100 சதவீதம் அனுப்பப்பட்ட அப்பாட நூல்கள் முதன்மை கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் கள் மூலம் நேரடியாக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது. ஜூன் 7-ம் தேதி பள்ளி திறக் கும்போது உறுதியாக புத்தகங்கள் மாணவர்களுக்கு கிடைக்கும். கடந்தாண்டு முதல் விற்பனைக் கான புத்தகங்கள் சுயநிதி மற்றும் தனியார் பள்ளிகள் இணையதளம் மூலம் பதிவு செய்து பெறும் வசதி செய்யப்பட்டுள்ளது. இந் தாண்டு 12 ஆயிரத்து 240 பள்ளிகள் முன்பதிவு செய்துள்ளனர். அதற்கேற்ப புத்தகங்கள் வழங்கப்படுகிறது. இதற்கான இணையதளம் 'www.textbookcorp.in' ஆகும். சுயநிதி மற்றும் தனியார் பள்ளிகளுக்கு கடந்த 27-ம் தேதி வரை ரூ.39 கோடியே 13 லட்சத்துக்கு புத்தகங்கள் விற்கப்பட்டுள்ளன. புத்தகங்களை இணையதளத் தின் மூலம் மாணவர்கள், பெற்றோர் மற்றும் பொதுத்தேர்வு எழுதும் தனி நபர்கள் அவர்கள் குறிப்பிடும் முகவரியிலேயே அஞ்சல் வழியில் பெறும் வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும், பொது சேவை மையம் மூலமும் புத்தகங்களை பெறலாம். பதிவு செய்த புத்தகங்கள் ஒருமுறை மட்டுமே வழங்கப்படும் என்பதால், விற்பனை நோக்கில் ஒரே தலைப்பில் ஒன்றுக்கு மேற்பட்ட புத்தகங்களை பதிவு செய்து வெளிச்சந்தையில் அதிக விலைக்கு விற்பது தடுக்கப்பட்டுள்ளது. பாடநூல் கழக தலைமையிடத்தில் பிரத்யேக மையங்கள் மூலம் விற்கப்படுகிறது. கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகம் மற்றும் அனைத்து மாவட்ட தலைமை நூலகத்துக்கும் போட்டித் தேர்வுக்கு பயன்படும் வண்ணம் 6 முதல் 12-ம் வகுப்பு வரை தமிழ் மற்றும் ஆங்கில வழி நூல்கள் வழங்கப்பட்டுள்ளன. அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பாடநூல் விற்பனை நிலையம் அமைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

சி.பி.எஸ்.இ. கல்விக்கொள்கையில் மத்திய அரசு தலையிடாது மந்திரி பிரகாஷ் ஜவடேகர் பேட்டி

சி.பி.எஸ்.இ. கல்விக்கொள்கையில் மத்திய அரசு தலையிடாது மந்திரி பிரகாஷ் ஜவடேகர் பேட்டி | சி.பி.எஸ்.இ., கல்விக்கொள்கையில் மத்திய அரசு தலையிடாது என மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் கூறினார். வழக்கத்துக்கு மாறாக மிகக்கடினமான கேள்வித்தாள் கொடுக்கப்பட்டுள்ளது என்று மாணவர்களால் கருதப்படுகிறபோது, மாணவர்கள் மீது கருணை காட்டி தாராளமாக மதிப்பெண் வழங்குவது மிதமான கல்விக்கொள்கை என்று கருதப்படுகிறது. ஆனால், சி.பி.எஸ்.இ., மற்றும் 32 பிற கல்வி வாரியங்கள் ஒருமித்த கருத்தை எட்டிய நிலையில், மிதமான கல்விக்கொள்கை கடந்த மாதம் ரத்து செய்யப்பட்டது. ஆனால் இது தொடர்பான ஒரு வழக்கில், இந்த மிதமான கல்விக்கொள்கையை சி.பி.எஸ்.சி., தொடர வேண்டும் என்று டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டது. மேலும், "சி.பி.எஸ்.இ., எடுத்துள்ள முடிவு (மிதமான கல்விக்கொள்கையை கைவிடுதல்) மாணவர்களிடம் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும். விளையாட்டு தொடங்கி விட்ட பிறகு விதிமுறைகளை மாற்ற முடியாது. தேர்வுக்கு மாணவர்கள் பதிவு செய்து விட்ட பிறகு, கருணை மதிப்பெண்கள் வழங்கும் முறையை கைவிடுவது சரியானதல்ல" எனவும் கூறியது. இந்த உத்தரவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்வது பற்றி சி.பி.எஸ்.இ., பரிசீலிப்பதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அப்படி ஒரு நடவடிக்கையை சி.பி.எஸ்.இ., மேற்கொண்டால், அது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தி விடும்; தேர்வுமுடிவுகளை வெளியிடுவதையும் தாமதப்படுத்தி விடும் என்று சட்ட வல்லுனரால் சி.பி.எஸ்.இ.க்கு ஆலோசனை கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில், மிதமான கல்விக்கொள்கையை பின்பற்றித்தான் 12-ம் வகுப்புக் கான தேர்வு முடிவுகளை சி.பி.எஸ்.இ., வெளியிட்டு உள்ளது. இந்த நிலையில், மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர், செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் இந்த மிதமான கல்விக்கொள்கை தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த பிரகாஷ் ஜவடேகர், "மிதமான கல்விக்கொள்கை பிரச்சினையில் நாங்கள் தலையிட மாட்டோம். இது கல்வி தொடர்பானது. இது தொடர்பாக கல்வி வாரியங்கள்தான் முடிவு எடுக்க வேண்டும்" என்று திட்டவட்டமாக கூறினார். மேலும்," கல்வி வாரியங்கள்தான் ஒன்றுடன் ஒன்று ஆலோசனை நடத்தி முடிவு எடுத்துள்ளன. எனவே அவைதான் இனியும் முடிவு எடுக்கும். ஆனால் வரும் கல்வி ஆண்டின் இடையே எந்த மாற்றத்தையும் திடீரென நடைமுறைப்படுத்தினாலும், அது புத்திசாலித்தனமாக இருக்காது என்று நான் நம்புகிறேன்" என்றும் அவர் கூறி உள்ளார்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு தேர்வில் சென்னை மண்டலத்தில் 92.6 சதவீதம் பேர் தேர்ச்சி

சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு தேர்வில் சென்னை மண்டலத்தில் 92.6 சதவீதம் பேர் தேர்ச்சி | சி.பி.எஸ்.இ. 12-வது வகுப்பு தேர்வில் சென்னை மண்டலத்தில் 92.6 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர். சி.பி.எஸ்.இ. தேர்வு முடிவு மத்திய கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ.யின் 12-வது வகுப்பு தேர்வு கடந்த மார்ச் மாதம் 9-ந் தேதி தொடங்கி ஏப்ரல் 29-ந் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வை இந்தியா முழுவதும் 10 ஆயிரத்து 673 பள்ளிக்கூடங்களில் இருந்து 10 லட்சத்து 20 ஆயிரத்து 762 மாணவ-மாணவிகள் எழுதினார்கள். தேர்வு முடிவு எப்போது வரும் என்று மாணவர்-மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து இருந்தனர். இந்த நிலையில் சி.பி.எஸ்.இ. 12-வது வகுப்பு தேர்வு முடிவு நேற்று வெளியானது. www.results.nic.in, www.cbseresults.nic.in, www.cbse.nic.in ஆகிய இணையதளங்களில் முடிவு வெளியிடப்பட்டது. சி.பி.எஸ்.இ. தேர்வில் டெல்லியை அடுத்த நொய்டாவைச் சேர்ந்த மாணவி ரக்‌ஷா கோபால் 500-க்கு 498 மதிப்பெண்கள் எடுத்து முதல் இடம் பெற்று உள்ளார். சண்டிகாரை சேர்ந்த பூமி சாவந்த் என்ற மாணவி 497 மதிப்பெண்கள் எடுத்து 2-ம் இடம் பிடித்து இருக்கிறார். சண்டிகாரை சேர்ந்த ஆதித்யா ஜெயின், மனட் லுத்ரா ஆகியோர் தலா 496 மதிப்பெண்கள் பெற்று 3-வது இடத்தை பிடித்து இருக்கிறார்கள். பள்ளிக்கூடங்களுக்கு முதல்வர்கள், ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் வந்து தேர்வு முடிவுகளை மதிப்பெண்களுடன் தெரிந்து கொண்டனர். இந்திய அளவில் 8 லட்சத்து 37 ஆயிரத்து 229 பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர். இந்த தேர்ச்சி 82.02 சதவீதம் ஆகும். கடந்த ஆண்டு தேர்ச்சி 83.05 சதவீதம் ஆகும். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டில் தேர்ச்சி சதவீதம் குறைந்து இருக்கிறது. சி.பி.எஸ்.இ தேர்வில் 95.62 சதவீத தேர்ச்சியுடன் திருவனந்தபுரம் மண்டலம் முதல் இடத்தை பிடித்து உள்ளது. தமிழகம், புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகா, மராட்டியம், கோவா, அந்தமான்-நிகோபார் தீவுகள், டாமன்-டையூ ஆகியவற்றை உள்ளடக்கிய சென்னை மண்டலம் 92.6 சதவீத தேர்ச்சியுடன் 2-வது இடத்தில் உள்ளது. டெல்லி மண்டலம் 88.37 சதவீத தேர்ச்சியுடன் 3-வது இடத்தை பெற்று இருக்கிறது. சி.பி.எஸ்.இ. தேர்வில் மாணவிகள் 87.5 சதவீதமும், மாணவர்கள் 78 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். அரசு பள்ளிகள் 82.28 சதவீதமும், அரசு உதவி பெறும் பள்ளிகள் 81.63 சதவீதமும், சுயநிதி பள்ளிகள் 79.27 சதவீதமும், ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளிகள் 94.6 சதவீதமும், கேந்திர வித்யாலயா பள்ளிகள் 94.6 சதவீதமும், மத்திய திபெத் நிர்வாக பள்ளிகள் 83.57 சதவீதமும் தேர்ச்சி பெற்று உள்ளன. மாற்றுத்திறனாளிகள் 2,449 பேர் தேர்வு எழுதியதில், 2,123 பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர். இது 86.69 சதவீத தேர்ச்சி ஆகும்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Sunday, 28 May 2017

12,000 பகுதி நேர ஆசிரியர்களின் பணி நிரந்தரம் குறித்து வரப்போகும் சட்டப் பேரவை கூட்டத் தொடரில் முடிவு!|

12,000 பகுதி நேர ஆசிரியர்களின் பணி நிரந்தரம் குறித்து வரப்போகும் சட்டப் பேரவை கூட்டத் தொடரில் முடிவு!| பகுதி நேர சிறப்பு ஆசிரியர்கள் 12,000 பேருக்கு சம்பள உயர்வு மற்றும் பணி நிரந்தரம் செய்யும் தீர்மானம் குறித்து விரைவில் நடைபெறவுள்ள சட்டப் பேரவைக் கூட்டத்தொடரில் முடிவெடுக்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஓவியம், உடற்கல்வி, கைத்தொழில் உள்ளிட்ட பாடப்பிரிவுகளில் பணிபுரிய தற்காலிக ஆசிரியப் பணியிடங்கள் கடந்த ஆண்டுகளில் நிரப்பப் பட்டன. அந்த ஆசிரியர்களுக்கு முதலில் நிர்ணயிக்கப் பட்ட சம்பளத் தொகை ரூ.5000 அது பின்னர் 2007 ஆம் ஆண்டில் ரூ.7000 உயர்த்தப் பட்டது. தற்போது இப்படி தற்காலிகமாக நியமிக்கப் பட்ட ஆசிரியர்களை நிரந்தரமாக்கி அவர்களுக்கும் நிரந்தர ஆசிரியர்களுக்குரிய வகையில் சம்பள உயர்வு, பணியிட மாற்றம், பணிச்சேவை ஊக்கத் தொகைகள் முதலியவற்றைப் பெற்றுத் தரும் வகையில் நடைபெறவுள்ள சட்டப் பேரவைக் கூட்டத்தொடரில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவிருப்பதாக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Saturday, 27 May 2017

மத்திய அரசின் 7-வது ஊதியக்குழு பரிந்துரைகள் தொடர்பாக கருத்து கேட்பு கூட்டம் தொடங்கியது. ஜூன் இறுதியில் அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது.

மத்திய அரசின் 7-வது ஊதியக்குழு பரிந்துரைகள்: தமிழக அரசு ஊழியர் சங்கங்களுடன் கருத்து கேட்பு கூட்டம் தொடங்கியது ஜூன் இறுதியில் அரசுக்கு அறிக்கை தாக்கல் | மத்திய அரசின் 7-வது ஊதியக்குழு பரிந்துரைகள் தொடர்பாக தமிழக அரசு ஊழியர் சங்கங்களுடன் அலுவலர் குழுவின் கருத்து கேட்பு கூட்டம் தொடங்கியது. ஜூன் இறுதியில் அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. மத்திய அரசின் 7-வது ஊதியக்குழு பரிந்துரைத்துள்ள திருத்திய ஊதிய விகிதங்கள் குறித்து மத்திய அரசு எடுத்துள்ள முடிவுகளைத் தொடர்ந்து, தமிழ்நாடு அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி நிறுவனங்களில் பணியாற்றும் அலுவலர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கும் அவற்றை நடைமுறைப்படுத்துவது குறித்து ஆராய்வதற்கு தமிழக அரசால் அலுவலர் குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழுவின் முதல் கூட்டம் 16-ந் தேதியன்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. நிதித் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் க.சண்முகம் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில், அலுவலர் குழுவின் உறுப்பினர்களான, உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் நிரஞ்சன் மார்டி, பள்ளிக்கல்வித் துறை செயலாளர் உதயச்சந்திரன், பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறை செயலாளர் ஸ்வர்ணா ஆகியோரும் உறுப்பினர் செயலாளர் உமாநாத்தும் பங்கேற்றார்கள். இக்கூட்டத்தில் மத்திய அரசு செயல்படுத்தியுள்ள 7-வது ஊதியக் குழுவின் ஊதிய விகிதங்கள் மற்றும் ஓய்வூதியங்கள் குறித்த பரிந்துரைகள் குறித்தும், படிகள் பற்றிய பரிந்துரைகள் மத்திய அரசின் பரிசீலனையில் இருப்பது குறித்தும், இவற்றின் அடிப்படையில் தமிழக அரசின் தற்போதைய ஊதியம் மற்றும் ஓய்வூதிய விகிதங்களை திருத்தி அமைப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டன. தமிழக அரசு ஏற்கனவே அறிவித்தபடி, 13.3.17 முதல் 15.5.17 தேதிவரை பல்வேறு அமைப்புகளிடமிருந்து பெறப்பட்டுள்ள கோரிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இதன் அடுத்த கட்டமாக, அரசு அலுவலர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் அமைப்புகளை நேரடியாக சந்தித்து கருத்துகளை கேட்டறிய முடிவு செய்யப்பட்டது. தொடங்கியது அதன்படி, மே 26 மற்றும் 27-ந் தேதிகளில் அரசின் அங்கீகாரம் பெற்ற அனைத்து அலுவலர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் அமைப்புகளையும், ஜூன் 2 மற்றும் 3-ந் தேதி அனைத்து அங்கீகாரம் பெறாத அலுவலர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் அமைப்புகளையும் அலுவலர் குழு நேரில் சந்திக்க அந்தக் குழு முடிவு செய்தது. பின்னர் நிருபர்களுக்கு, க.சண்முகம் அளித்த பேட்டி வருமாறு:- தமிழகத்தில் அங்கீகரிக்கப்பட்ட 149 சங்கங்கள் உள்ளன. 100-க்கும் மேற்பட்ட அங்கீகரிக்கப்படாத சங்கங்கள் உள்ளன. அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களுடன் 2 நாட்கள் கருத்து கேட்புகூட்டம் நடத்தப்படும். காலை மற்றும் மாலை வேளையில் இந்தக் கூட்டம் நடக்கும். 6-வது ஊதியக் குழுவில் உள்ள முரண்பாடுகளைக் களைந்த பிறகு 7-வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்தவேண்டும் என்று சங்கங்கள் கூறியுள்ளன. 7-வது ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்தும்போது ஊதிய விகிதத்தை மாற்றி அமைப்பது பற்றி நடவடிக்கை எடுக்கப்படும். புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தும் அதிகாரம் எங்களுக்குக் கிடையாது. அதை அரசுதான் முடிவு செய்யும். அனைத்து சங்கங்களுடன் பேசிவிட்டு ஜூன் மாத இறுதியில் அரசிடம் அறிக்கை தாக்கல் செய்வோம். இவ்வாறு அவர் கூறினார்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

தொழிற்பயிற்சி நிலையத்தில் 6 பாடப்பிரிவுகளில் சேர 7-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் பெருநகர சென்னை மாநகராட்சி அறிவிப்பு

தொழிற்பயிற்சி நிலையத்தில் 6 பாடப்பிரிவுகளில் சேர 7-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் பெருநகர சென்னை மாநகராட்சி அறிவிப்பு | தொழிற்பயிற்சி நிலையத்தில் 6 பாடப்பிரிவுகளில் சேர 7-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று பெருநகர சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. இதுதொடர்பாக பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- இலவச பயிற்சி பெருநகர சென்னை மாநகராட்சி தொழிற்பயிற்சி நிலையத்தில் 6 பாடப்பிரிவுகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. சென்னை பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கும், பெருநகர சென்னை மாநகராட்சி ஊழியர்களின் குழந்தைகளுக்கும் மாணவர்கள் சேர்க்கையில் முன்னுரிமை அளிக்கப்படும். மீதி காலியாக உள்ள இடங்கள் சென்னை மாவட்டத்தில் உள்ள பிற பள்ளிகளில் படித்த ஏழை மாணவர்களுக்கு அரசால் வெளியிடப்படும் விதிகளின்படி சேர்க்கை வழங்கப்படும். தொழிற்பயிற்சி நிலையத்தில் முற்றிலும் இலவச பயிற்சி அளிப்பது சிறப்பம்சமாகும். பயிற்சி பெறும் மாணவர்களுக்கு இலவச சீருடை, பஸ் பாஸ், பயிற்சி காலத்தில் மாதந்தோறும் பயிற்சி உதவித்தொகையாக ரூ.500, இலவச மடிக்கணினி வழங்கப்படுகிறது. பயிற்சி முடித்த பயிற்சியாளர்களுக்கு முன்னணி நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற்று தரப்படுகிறது. கலந்தாய்வு விண்ணப்பப்படிவம் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் அடுத்த மாதம் (ஜூன்) 7-ந் தேதி ஆகும். விண்ணப்பப் படிவம் சமர்ப்பித்தவர்கள் சேர்க்கைக்காக 9-ந் தேதி காலை 10 மணிக்கு சென்னை மாநகராட்சி தொழிற்பயிற்சி நிலையம், இ-டிப்போ லாரி நிலையம் ரோடு, முத்தையா தெரு அருகில், லாயிட்ஸ் காலனி, ராயப்பேட்டை, சென்னை-14 என்ற முகவரியில் நடைபெறும் கலந்தாய்வில் அனைத்து அசல் சான்றிதழ்களுடன் கலந்துகொள்ள வேண்டும். கலந்தாய்வின் போது விண்ணப்பதாரரின் மதிப்பெண் தகுதி தரவரிசையின்படி மற்றும் இடஒதுக்கீட்டின் அடிப்படையில் பாடப்பிரிவு ஒதுக்கீடு செய்து பயிற்சியில் சேருவதற்கு அனுமதி வழங்கப்படும். பயிற்சியில் சேர வயது வரம்பு 15 முதல் 40 வயது ஆகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி இடஒதுக்கீடு வழங்காத பள்ளிகள் மீது புகார் செய்ய ஏற்பாடு மாணவர் சேர்க்கை விவரங்களை இணையதளத்தில் வெளியிட உத்தரவு

இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி இடஒதுக்கீடு வழங்காத பள்ளிகள் மீது புகார் செய்ய ஏற்பாடு மாணவர் சேர்க்கை விவரங்களை இணையதளத்தில் வெளியிட உத்தரவு | இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி, 25 சதவீத இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத் தாத தனியார் சுயநிதி பள்ளிகள் மீது புகார் செய்ய ஏற்பாடு செய் யப்பட்டுள்ளது. மேலும், இடஒதுக் கீடு சேர்க்கை விவரங்களை அனைவரும் தெரிந்துகொள்ளும் வகையில் இணையதளத்தில் வெளியிடவும் தனியார் பள்ளி களுக்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி தனியார் சுயநிதி பள்ளிகளில் (சிறு பான்மையினர் பள்ளிகள் நீங்க லாக) சமுதாயத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு 25 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். இந்த சிறப்பு இடஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கப்படும் மாணவர்களுக்கு ஆகும் செலவினங்களை சம்பந்தப் பட்ட பள்ளிகளுக்கு அரசு வழங்கி விடும். அவகாசம் முடிந்தது இந்த ஆண்டு தனியார் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீட்டு இடங்களில் சேர ஆன்லைன் விண்ணப்ப முறை அறிமுகப்படுத்தப்பட்டது. | DOWNLOAD.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

பிளஸ் 2 விடைத்தாள் நகல் கோரி 99 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். அவர்களுக்கான விடைத்தாள் நகல் அடுத்த வாரத்தில் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட உள்ளது.

அடுத்த வாரம் பிளஸ் 2 விடைத்தாள் நகல் பதிவேற்றம் | பிளஸ் 2 விடைத்தாள் நகல் கோரி 99 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். அவர்களுக்கான விடைத்தாள் நகல் அடுத்த வாரத்தில் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட உள்ளது. 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 12-ம் தேதி வெளியிடப்பட்டது. பிளஸ் 2 தேர்வில் விடைத்தாள் நகல், மறுகூட்டல், மதிப்பீடு ஆகியவற்றுக்கு மாண வர்கள் விண்ணப்பிக்கலாம். அதன் படி, மறுகூட்டல் மற்றும் மறு மதிப்பீட்டுக்கான அடிப்படையான விடைத்தாள் நகல் பெறுவதற்கு விண்ணப்பிக்க மே 12 முதல் 15-ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட் டது. இந்த நிலையில், மாணவர்கள் நலனை கருத்தில்கொண்டு கால அவகாசம் மே 18-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. 99 ஆயிரம் பேர் விண்ணப்பம் விடைத்தாள் நகல் கோரி 99 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்திருப்பதாகவும், அவர்களுக்கான விடைத்தாள் நகல் அடுத்த வாரத்தில் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்படும் என்று அரசு தேர்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். எந்த இணையதளத் தில் இருந்து விடைத்தாள் நகலை பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்ற விவரம் பின்னர் அறிவிக்கப் படும்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வு முடிவு நாளை (28.05.2017) வெளியீடு.

சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வு முடிவு நாளை வெளியீடு | சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை (ஞாயிற்றுக்கிழமை) வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 9-ல் தொடங்கி ஏப்ரல் 29-ல் முடிவடைந்தது. நாடு முழுவதும் 10 லட்சத்து 98 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தேர்வு எழுதியுள்ளனர். தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, மகாராஷ்டிரா, கோவா, புதுச்சேரி, அந்தமான் நிக்கோபார் தீவுகள், டாமன்-டையு ஆகிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை உள்ளடக்கிய சென்னை மண்டலத்தில் 59 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்தத் தேர்வில் கலந்துகொண்டனர். மாநில பாடத்திட்டத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு 2 வாரங்கள் ஆகிவிட்ட நிலையில், சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்னும் வெளியிடப்படாததால் மாணவர்கள் கவலை அடைந்திருந்தனர். இந்நிலையில் தேர்வு முடிவுகள் மே 28-ம் தேதி (நாளை) காலையில் வெளியிடப்படும் என்று சிபிஎஸ்இ நேற்றிரவு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.  தேர்வு முடிவுகளை www.results.nic.in, www.cbseresults.nic.in, www.cbse.nic.in ஆகிய இணையதளங்களில் பார்க்கலாம் என்று சிபிஎஸ்இ மக்கள் தொடர்பு அதிகாரி ராமசர்மா அறிவித்துள்ளார். சிபிஎஸ்இ தேர்வு முடிவில் ரேங்க் பட்டியல் எதுவும் வெளியிடப்படுவதில்லை. இதேபோல தமிழக அரசும் இந்த ஆண்டில் இருந்து பிளஸ் 2, எஸ்எஸ்எல்சி தேர்வில் ரேங்க் பட்டியல் வெளியிடும் முறையை கைவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

தமிழகத்தில் நிலவி வரும் கடும் வெயில் காரணமாக பள்ளிகள் திறப்பு ஜூன் 7-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அறிவிப்பு

கடும் வெயில் காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு ஜூன் 7-ம் தேதிக்கு தள்ளிவைப்பு அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு | தமிழகத்தில் நிலவி வரும் கடும் வெயில் காரணமாக பள்ளிகள் திறப்பு ஜூன் 7-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நேற்று அறிவித்தார். இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்திலேயே வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்ததால், தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு முன்கூட்டியே தேர்வுகள் நடத்தப்பட்டு கோடை விடுமுறை விடப்பட்டது. விடுமுறை முடிந்து ஜுன் 1-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தமிழகம் முழவதும் வெயில் சுட்டெரித்து வருகிறது. வடமாவட்டங்களில் சராசரியாக 40 டிகிரி செல்சியஸுக்கு மேல் வெப்பநிலை பதிவாகி வருகிறது. கடும் வெயில் காரணமாக பள்ளிகள் திறக்கும் தேதி தள்ளி வைக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு நிலவியது. மேலும் பள்ளிகள் திறப்பு தேதியை தள்ளி வைக்க வேண்டும் என, அரசுக்கு அனைத்துத் தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் வந்த வண்ணம் இருந்தன. பல்வேறு ஆசிரியர் சங்கங் களும் அரசை வலியுறுத்தின. தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு (ஜாக்டா) ஒருங்கிணைப் பாளர் பி.கே.இளமாறன் தலைமையில் அந்த அமைப்பின் நிர்வாகிகள் அமைச்சர் செங்கோட்டை யனை தலைமைச் செயலகத்தில் கடந்த 25-ம் தேதி சந்தித்த னர். பள்ளிகள் திறப்பு தேதியை 2 வாரங்களுக் காவது தள்ளிவைக்க வேண்டும் என்று அப்போது அவர்கள் வேண்டுகோள் விடுத்தனர். இந்நிலையில் கோடை விடுமுறை முடிவடைய உள்ள நிலையில், திட்டமிட்டபடி ஜூன் 1-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படுமா அல்லது தள்ளி வைக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் மத்தியில் இருந்து வந்தது. இதனிடையே, அரசு பள்ளிகளின் உட்கட்ட மைப்புகளை அம்பத்தூர் தொழிற்பேட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தினரின் பங்களிப் போடு மேம்படுத்துவது தொடர்பான நிகழ்ச்சி சென்னை அம்பத்தூரில் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற அமைச்சர் செங்கோட்டையனிடம் பள்ளி திறப்பு தேதி குறித்து செய்தியாளர்கள் கேட்டனர். அதற்குப் பதிலளித்து அவர் கூறியதாவது: பொது மக்களின் வேண்டுகோளை ஏற்று, ஜூன் 2 அல்லது 3-ம் தேதி திறக்க வேண்டிய பள்ளிகள் ஜூன் 7-ம் தேதி திறக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி அனுமதி வழங்கியுள்ளார். ஆகவே, முதல்வர் உத்தரவின்பேரில் தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளும் ஜூன் 7-ம் தேதி (புதன்கிழமை) திறக்கப்படும். கோடை வெயில் காரணமாக பள்ளிகள் திறக்கும் தேதி தள்ளிவைக்கப்படுகிறது. பள்ளிகள் திறக்கும் நாள் அன்றே மாண வர்களுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கப்படும். தொடர்ந்து ஒரு வாரத்தில் இலவச பஸ் பாஸ் வழங்கவும் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அமைச்சர் கூறினார்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Friday, 26 May 2017

விழுப்புரம், தருமபுரி, ராமநாதபுரத்தில் புதிய சட்டக் கல்லூரிகள் தொடங்க தமிழக அரசு முடிவு

விழுப்புரம், தருமபுரி, ராமநாதபுரத்தில் புதிய சட்டக் கல்லூரிகள் தொடங்க தமிழக அரசு முடிவு இந்த கல்வியாண்டிலேயே மாணவர் சேர்க்கை | தமிழகத்தில் விழுப்புரம், தருமபுரி, ராமநாதபுரத்தில் அரசு சட்டக் கல்லூரிகள் தொடங்கப்படும். இக்கல்லூரிகளில் 3 ஆண்டு, 5 ஆண்டு படிப்புகளில் இந்தக் கல்வியாண்டு முதல் மாணவர்கள் சேர்க்கை நடக்கும் என்று முதல்வர் கே.பழனிசாமி அறிவித்துள்ளார். இதுதொடர்பாக முதல்வர் கே.பழனிசாமி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தெற்காசியாவில் முதன் முதலாக சட்டக் கல்விக்கு என தனியாக தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் நிறுவப்பட்டது. இதன் கீழ் தற்போது 7 அரசு சட்டக் கல்லூரிகள், ஒரு தனியார் சுயநிதி சட்டக் கல்லூரி இயங்கி வருகின்றன. மேலும், ரங்கத்தில் ரூ.100 கோடியில் தமிழ்நாடு தேசிய சட்டப் பள்ளியும் திறக்கப்பட்டது. இந்நிலையில், குறைந்த செலவில் தரமான சட்டக் கல்வியை மாநிலம் முழுவதும் உள்ள மாண வர்களுக்கு வழங்கும் வகையில், தமிழகத்தில் படிப்படியாக போதிய எண்ணிக்கையில் அரசு சட்டக் கல்லூரிகள் நிறுவ தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. விழுப்புரம், தருமபுரி, ராமநா தபுரம் மாவட்டங்கள் மற்றும் அருகே உள்ள பிற மாவட்டங்களில் அரசு சட்டக் கல்லூரி எதுவும் இல்லை. இந்த மாவட்டங்களைச் சேர்ந்த தகுதிவாய்ந்த மாண வர்கள் சட்டம் பயில ஏதுவாக விழுப்புரம், தருமபுரி, ராமநாத புரத்தில் தலா ஒரு சட்டக் கல்லூரி இந்தக் கல்வியாண்டு முதல் தொடங்கப்படும். இந்தப் புதிய அரசு சட்டக் கல்லூரிகளில் 3 ஆண்டு சட்டப் படிப்புக்கு 80 மாண வர்களும், 5 ஆண்டு சட்டப் படிப்புக்கு 80 மாணவர்களும் தமிழ் நாடு அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகம் மூலம் இந்தக் கல்வியாண்டு முதல் சேர்க்கப்படுவார்கள். இதற்கான ஆரம்பகட்டப் பணி களை மேற்கொள்ள ஒவ்வொரு கல்லூரிக்கும் ஒரு தனி அலுவலர் நியமிக்கப்படுவார். இக்கல்லூரி களுக்குத் தேவையான ஆசிரி யர்கள், பிற ஊழியர்கள் நியமனம், நூலகப் புத்தகங்கள், அறை கலன்கள் மற்றும் இதர தேவை களுக்காக தலா ரூ.2.27 கோடி வீதம், 3 கல்லூரிகளுக்கும் ரூ.6.81 கோடி செலவு ஏற்படும். புதிய அரசு சட்டக் கல்லூரிகளில் 3 ஆண்டு சட்டப் படிப்புக்கு 80 மாணவர்களும், 5 ஆண்டு சட்டப் படிப்புக்கு 80 மாணவர்களும் சேர்க்கப்படுவார்கள்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

மாற்றுத்திறனாளிகளுக்கு உரிய இடஒதுக்கீடு வழங்காததால், முதுகலை ஆசிரியர் பதவிக்கான தேர்வு அறிவிப்பை ரத்து செய்யக்கோரிய வழக்கிற்கு, பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

மாற்றுத்திறனாளிகளுக்கு உரிய இடஒதுக்கீடு வழங்கவில்லை: முதுகலை ஆசிரியர் பதவிக்கான தேர்வு அறிவிப்பை ரத்து செய்யக்கோரி வழக்கு தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு நோட்டீசு | மாற்றுத்திறனாளிகளுக்கு உரிய இடஒதுக்கீடு வழங்காததால், முதுகலை ஆசிரியர் பதவிக்கான தேர்வு அறிவிப்பை ரத்து செய்யக்கோரிய வழக்கிற்கு, பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் நலச்சங்கத்தின் மாநில செயலாளர் எஸ்.நம்புராஜன். இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:- ஆசிரியர் தேர்வு வாரியம் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள், உடல் கல்வி இயக்குனர்கள் நிலை-1 ஆகிய பதவிகளுக்கு தேர்வு நடத்துவது குறித்து கடந்த 9-ந் தேதி ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு, மாற்றுத்திறனாளிகளுக்கு எதிராக உள்ளது. 2016-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம், பிரிவு 34-ன்படி, மொத்த பதவிகளில், 4 சதவீதம் இடங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கவேண்டும். ஆனால், பழைய சட்டங்களை பின்பற்றி 3 சதவீத இடங்களை மட்டும் ஒதுக்கி, ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மொத்தம் 1,663 ஆசிரியர் பதவிகளுக்கு இந்த தேர்வு நடத்தப்படுகிறது. இதில், வெறும் 18 இடங்கள் மட்டுமே மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இது, மொத்த இடங்களில் 3 சதவீதத்துக்கும் குறைவாக உள்ளது. கடந்த 2016-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட மாற்றுத்திறனாளிகள் உரிமை சட்டத்தின்படி, 67 இடங்கள் (4 சதவீதம்) மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்க வேண்டும். ரத்து செய்ய வேண்டும் மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இடஒதுக்கீட்டை வழங்கியும், உடல் ஊனம் குறித்து நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை நீக்கியும், புதிய அறிவிப்பை வெளியிடும்படி ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு இந்த ஐகோர்ட்டு உத்தரவிட வேண்டும். கடந்த 9-ந் தேதி பிறப்பித்த அறிவிப்பை ரத்து செய்யவேண்டும். அந்த அறிவிப்பாணையின் அடிப்படையில் மேற்கொண்டு தேர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கூடாது என்று தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு தடைவிதிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது. பதிலளிக்க வேண்டும் இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.மகாதேவன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், மனுவுக்கு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளர், ஆணையர் மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் ஆகியோர் பதிலளிக்க வேண்டும் என்று நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டனர். விசாரணையை வருகிற ஜூன் 2-ந் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

பிளஸ்-2 தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு சிறப்பு துணைத்தேர்வு 29-ந்தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

பிளஸ்-2 தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு சிறப்பு துணைத்தேர்வு 29-ந்தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் | பிளஸ்-2 தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு சிறப்புத்துணைத்தேர்வு அடுத்த மாதம் 23-ந்தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கு வருகிற 29-ந்தேதி முதல் அடுத்த மாதம் (ஜூன்) 1-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம். அரசு தேர்வுகள் இயக்குனர் தண்.வசுந்தராதேவி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- 29-ந்தேதி முதல் விண்ணப்பிக்கலாம் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பிளஸ்-2 தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள், தேர்வுக்கு வராதவர்களுக்காக அடுத்த மாதம் 23-ந்தேதி முதல் ஜூலை 6-ந்தேதி வரை சிறப்பு துணைத்தேர்வு நடைபெறுகிறது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் ஆன்லைன் மூலம் வருகிற 29-ந்தேதி முதல் ஜூன் 1-ந்தேதி வரை விண்ணப்பிக்க வேண்டும். பள்ளி மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளியின் மூலமாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையங்கள் மூலமாகவும் மட்டுமே ஆன்-லைனில் விண்ணப்பிக்க இயலும். விண்ணப்பிக்க விரும்பும் தேர்வர்கள் பள்ளிகள் மற்றும் தேர்வு மையங்களுக்கு நேரில் சென்று ஆன்-லைனில் விண்ணப்பிக்க வேண்டும். தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுகள் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். பதிவிறக்கம் செய்ய வேண்டிய நாட்கள் பின்னர் அறிவிக்கப்படும். தேர்வர் தமக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தேர்வு மையம் குறித்து தேர்வுக் கூட அனுமதிச் சீட்டில் அறிந்து கொள்ளலாம். அட்டவணை
தேர்வுக்கால அட்டவணை விவரம் வருமாறு:-
ஜூன் 23-ந்தேதி -தமிழ் முதல் தாள்
24-ந்தேதி -தமிழ் 2-வதுதாள்
27-ந்தேதி -ஆங்கிலம் முதல் தாள்
28-ந்தேதி -ஆங்கிலம் 2-வது தாள்
29-ந்தேதி -வேதியியல், அக்கவுண்டன்சி
30-ந்தேதி - வணிகவியல், மனை அறிவியல், புவியியல்,கணிதம்
ஜூலை 1-ந்தேதி -கணிதம், விலங்கியல், நுண் உயிரியல், நியூட்ரிஷியன் மற்றும் டயட்டிக்ஸ்
3-ந்தேதி -கம்யூனிகேட்டிவ் இங்கிலீஷ், இந்திய கலாசாரம், கம்ப்யூட்டர் சயின்ஸ், உயிரி வேதியியல், சிறப்பு தமிழ்
4-ந்தேதி -தொழில் கல்வி தேர்வுகள், அரசியல் அறிவியல், நர்சிங்(பொது), புள்ளியியல்
5-ந்தேதி- உயிரியல், வரலாறு, தாவரவியல், வர்த்தக கணிதம்
6-ந்தேதி -இயற்பியல், பொருளாதாரம்
 இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார். | DOWNLOAD
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Thursday, 25 May 2017

தனியார் பள்ளி, கல்லூரிகளில் வேலை வேண்டுமா ? தங்கள் தகுதிக்கும் திறமைக்கும் எற்ற ஊதியம் வேண்டுமா ? உடனே பதிவு செய்யவும்

தனியார் பள்ளி, கல்லூரிகளில் வேலை வேண்டுமா ? தங்கள் தகுதிக்கும் திறமைக்கும் எற்ற ஊதியம் வேண்டுமா ? தங்களுக்கு பிடித்த வேலையையும், ஊதியத்தையும் நீங்கள் தேர்ந்தெடுங்கள். உங்கள் தேர்விற்கு www.teachersrecruit.com நுழைந்து பதிந்து பயன் பெறுவீர். இச்சேவையை முற்றிலும் இலவசமாக பள்ளி, கல்லுரிகளுக்கும் மற்றும் ஆசிரியர் பணி தேடுபவருக்கும் கொடுத்து இருப்பதால் மிக பெரிய அளவில் பணியிடங்கள் வெளியிடப்பட்டுள்ளது. இச்சேவையை பயன்படுத்தி பயன் அடைவீர். ஆசிரியர் / விரிவுரையாளர் பணி தேடுபவர்களுக்கு: www.teachersrecruit.com/signup/seeker இங்கே உள்ள இணைப்பினை பின் தொடர்வீர். இதுவரை பதிவு செய்யாத அனைத்து ஆசிரியர்களுக்கு உடனே பதிவு செய்யவும்
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

கேள்வித்தாள் பாரபட்சமாக இருந்ததாக வழக்கு ‘நீட்’ தேர்வு முடிவை வெளியிட இடைக்கால தடை மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

கேள்வித்தாள் பாரபட்சமாக இருந்ததாக வழக்கு 'நீட்' தேர்வு முடிவை வெளியிட இடைக்கால தடை மதுரை ஐகோர்ட்டு உத்தரவு | நீட் தேர்வு முடிவை வெளியிட இடைக்கால தடை விதித்த மதுரை ஐகோர்ட்டு, இதுதொடர்பாக ஜூன் 7-ந் தேதிக்குள் பதில் அளிக்குமாறு சி.பி.எஸ்.இ.க்கு உத்தரவிட்டது. திருச்சியை சேர்ந்த சக்திமலர்கொடி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:- 'நீட்' தேர்வு இந்தியாவில் மருத்துவம், பல் மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான தேசிய தகுதி காண் நுழைவுத்தேர்வு (நீட்) கடந்த 2012-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. 2013-ல் நீட் தேர்வு நடந்தது. இந்த தேர்வில் இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் பாடங்களில் இருந்து தலா 45 மதிப்பெண் வீதம் மொத்தம் 180 மதிப்பெண்களுக்கு கேள்விகள் கேட்கப்பட்டன. அப்போது நீட் தேர்வுக்கு எதிராக 115 மாணவர்கள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை ஏற்று, நீட் தேர்வை ரத்து செய்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. பின்னர் இந்த வழக்கை 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரித்து பல்வேறு விதிமுறைகளை நடைமுறைப்படுத்தி நீட் தேர்வு நடத்த உத்தரவிட்டது. இதுதொடர்பாக கடந்த ஆண்டு அவசர சட்டம் இயற்றப்பட்டது. இதையடுத்து கடந்த 7-ந் தேதி நாடு முழுவதும் நீட் தேர்வு நடந்தது. இந்த தேர்வை ஆங்கிலத்தில் நான் எழுதினேன். கேள்வித்தாளில் பாரபட்சம் இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி, ஆங்கிலம் உள்ளிட்ட 10 மொழிகளில் தேர்வு நடந்தது. நாடு முழுவதும் ஒரே நேரத்தில் நீட் தேர்வு நடக்கும்போது பிராந்திய மொழிகளில் வழங்கப்பட்ட வினாத்தாள்களில் ஒரே மாதிரியான வினாக்கள் கேட்கப்பட்டு இருக்க வேண்டும். ஆனால் இதற்கு மாறாக நீட் தேர்வில் பிராந்திய மொழி வினாத்தாள்களில் வெவ்வேறு வகையில் வினாக்கள் இடம் பெற்றிருந்தன. நீட் தேர்வில் வெவ்வேறான கேள்விகளுடன் கூடிய வினாத்தாளின் அடிப்படையில் மருத்துவம், பல் மருத்துவ மாணவ சேர்க்கையை மேற்கொள்வது சட்டவிரோதம். குஜராத்தி, இந்தி ஆகிய மொழிகளில் நடந்த தேர்வில் மட்டும் எளிமையான வினாக்களும், ஆங்கிலம் உள்பட மற்ற மொழித்தேர்வுகளில் கடினமான கேள்விகளும் கேட்கப்பட்டுள்ளன. மேலும் தமிழகத்தில் ஆங்கிலத்தில் நடந்த தேர்வில் ஒருமாதிரியான வினாத்தாளும், தமிழில் இருந்த கேள்வித்தாளில் வேறு வகையான கேள்விகளும் இடம் பெற்றிருந்தது தெரியவந்துள்ளது. வாய்ப்பு பறிபோகும் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு மாதிரியான கேள்வித்தாள் வழங்கப்படும் என அறிவிக்கப்படவும் இல்லை. கன்னடம், மராத்தி, வங்காள மொழிகளில் தேர்வு எழுதியவர்களும் இதே பிரச்சினையை சந்தித்து உள்ளனர். இந்த பாகுபாட்டை அனுமதித்தால் ஒரு பிரிவினர் பயனடைவார்கள். மற்றொரு பிரிவினர் பாதிக்கப்படுவார்கள். நீட் தேர்வின் அடிப்படையில் மருத்துவம், பல் மருத்துவ படிப்புகளுக்கு திறமையான மாணவர்கள் தேர்வு செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் பறிபோவதை ஏற்க முடியாது. ரத்து செய்ய வேண்டும்
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

இந்த ஆண்டு பிளஸ் 2 மாணவர்கள் பழைய முறைப்படியே தேர்வு எழுதலாம் அரசு தேர்வுகள் இயக்குநர் விளக்கம்

இந்த ஆண்டு பிளஸ் 2 மாணவர்கள் பழைய முறைப்படியே தேர்வு எழுதலாம் அரசு தேர்வுகள் இயக்குநர் விளக்கம் | இந்த ஆண்டு பிளஸ் 2 செல்லவுள்ள மாணவர்களுக்கு பழைய முறைப்படியே (1200 மதிப்பெண்) பொதுத்தேர்வு நடைபெறும் என அரசுத் தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி விளக்கம் அளித்தார். வரும் கல்வி ஆண்டிலிருந்து (2017-18) பிளஸ் 1 வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. புதிய தேர்வு முறையின்படி, மேல்நிலைக் கல்வியில் (பிளஸ் 1, பிளஸ் 2) ஒவ்வொரு பாடத்துக்கான மதிப்பெண் 200-ல் இருந்து 100 ஆக குறைக்கப்படுகிறது. அதன்படி, ஒட்டுமொத்த மதிப்பெண் 1200-ல் இருந்து 600 ஆக குறைந்துவிடும். பிளஸ் 1 பொதுத்தேர்வு, அதைத் தொடர்ந்து வரும் பிளஸ் 2 பொதுத்தேர்வு ஆகியவை 600 மதிப்பெண்ணுக்கு நடத்தப்படும். இந்த இரு பொதுத்தேர்வுகளின் மதிப்பெண்களும் பிளஸ் 2 இறுதி தேர்வுக்குப் பிறகு ஒருங்கிணைந்த மதிப்பெண் சான்றிதழாக வழங்கப்படும். பிளஸ் 1 வகுப்புக்கு வரும் கல்வி ஆண்டிலிருந்து பொதுத்தேர்வு அறிமுகப்படுத்தப்படும் நிலையில், இந்த ஆண்டு பிளஸ் 1 முடித்துவிட்டு பிளஸ் 2 செல்லும் மாணவர்களுக்கு பழைய நடைமுறையின்படி 1200 மதிப்பெண்ணுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படுமா? அல்லது 600 மதிப்பெண்ணுக்கு தேர்வு அமைந்திருக்குமா? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அரசுத் தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி கூறியதாவது: இந்த ஆண்டு பிளஸ் 1 முடித்துவிட்டு பிளஸ் 2 செல்லும் மாணவர்களுக்கு பழைய நடைமுறையின்படி 1200 மதிப்பெண்ணுக்கு பொதுத்தேர்வு நடைபெறும். இந்த ஆண்டு பிளஸ் 1 சேர்ந்துவிட்டு அடுத்த ஆண்டு பிளஸ் 2 செல்ல இருக்கிற மாணவர்களுக்குத்தான் புதிய தேர்வுமுறையின்படி 600 மதிப்பெண்ணுக்கு தேர்வு நடைபெறும். அவர்களுக்கு பிளஸ் 1 மதிப்பெண், பிளஸ் 2 மதிப்பெண் (ஒவ்வொன்றுக்கும் தலா 600 மதிப்பெண்) ஆகியவற்றுடன் கூடிய ஒருங்கிணைந்த மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும். இவ்வாறு வசுந்தராதேவி கூறினார்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE