Monday, 31 July 2017

BT TO PGT PROMOTION PANEL DOWNLOAD | பள்ளிக்கல்வித்துறையில் இரண்டாம் கட்டமாக முதுகலையாசிரியராக பதவி உயர்வு வழங்க தகுதி வாய்ந்த நபர்களின் பெயர்ப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

PGT,HSHM TO HSSHM PROMOTION PANEL DOWNLOAD | BT TO PGT (TAMIL) PROMOTION PANEL DOWNLOAD | BT TO PGT (ENGLISH-SM) PROMOTION PANEL DOWNLOAD | BT TO PGT (ENGLISH-CM) PROMOTION PANEL DOWNLOAD | BT TO PGT (MATHS) PROMOTION PANEL DOWNLOAD | BT TO PGT (PHYSICS) PROMOTION PANEL DOWNLOAD | BT TO PGT (CHEMISTRY) PROMOTION PANEL DOWNLOAD | BT TO PGT (BOTANY) PROMOTION PANEL DOWNLOAD | BT TO PGT (ZOOLOGY) PROMOTION PANEL DOWNLOAD | BT TO PGT (ECONOMICS-SM) PROMOTION PANEL DOWNLOAD | BT TO PGT (ECONOMICS-CM) PROMOTION PANEL DOWNLOAD | BT TO PGT (COMMERCE-SM) PROMOTION PANEL DOWNLOAD | BT TO PGT (COMMERCE-CM) PROMOTION PANEL DOWNLOAD | பட்டதாரி ஆசிரியர் பணியிலிருந்து பணிமாறுதல் மூலம் முதுகலையாசிரியராக பதவி உயர்வு வழங்க முதன்மைக் கல்வி அலுவலர்களிடமிருந்து பெறப்பட்ட கருத்துருக்களின் அடிப்படையில் தகுதி வாய்ந்த நபர்களின் பெயர்ப்பட்டியல், பதவி உயர்வு அளிக்கப்படவுள்ள ஆசிரியர்களை காட்டிலும் அதிகமாக தயாரிக்கப்பட்டு, தேர்ந்தோர் பெயர்ப்பட்டியல் இரண்டாம் கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது  DOWNLOAD
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

உடனடி தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களை ஆக.4-ம் தேதி வரை கல்லூரிகளில் சேர்க்கலாம் சென்னை பல்கலைக்கழகம் அனுமதி

உடனடி தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களை ஆக.4-ம் தேதி வரை கல்லூரிகளில் சேர்க்கலாம் சென்னை பல்கலைக்கழகம் அனுமதி | உடனடி தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களை ஆக.4-ம் தேதி வரை சேர்த்துக்கொள்ள உறுப்பு கல்லூரிகளுக்கு சென்னை பல் கலைக்கழகம் அனுமதி அளித் துள்ளது. இதுதொடர்பாக சென்னை பல்கலைக்கழக பதிவாளர் (பொறுப்பு) பேராசிரியர் எஸ்.கருணாநிதி, வெளியிட்டுள்ள செய் திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: இளங்கலை, முதுகலை படிப்பு கள், மற்றும் எம்பிஏ படிப்பில் இறுதி ஆண்டு இறுதி செமஸ்டரில் ஒரேயொரு பாடத்தில் தோல்வி அடையும் மாணவர்களின் நலனை கருத்தில்கொண்டு சென்னை பல்கலைக்கழகம் கடந்த 2010 முதல் உடனடி தேர்வை நடத்தி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் மறுமதிப் பீடு முடிவுகள் வெளியிடப்பட்ட பின்னரே உடனடி தேர்வு நடத்தப் படும். அந்த வகையில், இந்த ஆண்டு ஜூலை 28-ம் தேதி மறு மதிப்பீடு முடிவுகள் வெளியிடப் பட்ட நிலையில், மறுநாள் (29-ம் தேதி) தகுதியுடைய மாணவர்களுக்கு உடனடி தேர்வுகள் நடத்தப்பட்டன. இதன் முடிவுகள் அநேகமாக ஆகஸ்டு 2-ம் தேதி வெளி யிடப்படலாம். எனவே, பட்டப் படிப்பில் உடனடி தேர்வெழுதி தேர்ச்சி பெற்ற மாணவர்களைக் காலியிடங்கள் இருப்பின் முதுகலை படிப்பில் ஆகஸ்டு 4-ம் தேதி வரை சேர்த்துக்கொள்ள பல்கலைக்கழக துறைகளுக்கும், உறுப்பு கல்லூரி களுக்கும் அனுமதி அளிக்கப் படுகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

TRB SPECIAL TEACHERS RECRUITMENT 2017 | தமிழக அரசு பள்ளிகளில் 1325 சிறப்பு ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.

TRB SPECIAL TEACHERS RECRUITMENT 2017 | 1325 சிறப்பு ஆசிரியர் பணியிடங்கள் | தமிழக அரசு பள்ளிகளில் 1325 சிறப்பு ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:-தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் சுருக்கமாக டி.ஆர்.பி. என அழைக்கப்படுகிறது. தமிழகத்தில் 2011 புள்ளி விவரத்தின்படி 80.33 சதவீதம் பேர் கல்வியறிவு பெற்றவர்களாக உள்ளனர். இந்திய அளவில் அதிகமான கல்வி அறிவு பெற்ற மாநிலங்களில் தமிழகமும் ஒன்று. தமிழக கல்வித் துறையில் வழங்கப்படும் பல்வேறு சலுகைகள், அதிகமானவர்களை கல்வி அறிவைப் பெற தூண்டி உள்ளது.மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்குவதற்காக தகுதியான ஆசிரியர்களை தேர்வு செய்வதற்காக டி.ஆர்.பி. அமைப்பு உருவாக்கப்பட்டது. தற்போது தமிழக அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப டி.ஆர்.பி. அமைப்பு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இந்த அறிவிப்பின்படி 1325 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இவை உடற்கல்வி, ஓவியம், இசை, தையல் கலை போன்ற சிறப்பு ஆசிரியர் பணியிடங்களாகும்.இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்ப்போம்...
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் 18 வயது பூர்த்தி அடைந்தவர்களாகவும், அதிகபட்சம் 57 வயதுக்கு உட்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும். 1-7-2017-ந் தேதியை அடிப்படையாகக் கொண்டு வயது வரம்பு கணக்கிடப்படுகிறது.
கல்வித்தகுதி:
விண்ணப்பதாரர்கள் 12-ம் வகுப்பு, டிப்ளமோ அல்லது பட்டப்படிப்பு ஆகியவற்றுடன், பணி சார்ந்த கலைப் படிப்புகளிலும் டிப்ளமோ அல்லது பட்டப்படிப்பு படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
கட்டணம் :
பொது மற்றும் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்கள் ரூ.500 கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.எஸ்.சி., எஸ்.சி.எ., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரூ.250 கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். கட்டணத்தை இணையதளம் வழியாக செலுத்தலாம்.
தேர்வு செய்யும் முறை:
எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிக்க கடைசி நாள் 18-8-2017-ந் தேதியாகும். இதற்கான எழுத்துத் தேர்வு 23-9-2017-ந் தேதியாகும்.விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் : http://trb.tn.nic.in என்ற இணையதள முகவரியைப் பார்க்கலாம்.  
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

PLUS ONE MODEL QUESTION PAPER DOWNLOAD | 11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் இன்று (31.07.2017) வெளியிடப்படுகிறது

11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் இன்று (31.07.2017) வெளியிடப்படுகிறது | தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் பேசியதாவது: 11-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் இன்று (31.07.2017)  வெளியிடப்பட உள்ளது. இது மாணவர்களிடையே நிலவும் தேவையற்ற அச்ச உணர்வினை போக்க உதவும். அத்துடன் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் வகையில் மாணவர்களுக்கு 450 பயிற்சி மையங்கள் மூலம் சனிக்கிழமைகளில் பயிற்சி வழங்கப்படும். அத்ததுடன் ஆரம்ப கல்வி வகுப்புகளில் ஸ்மார்ட் வகுப்பறைகளை அறிமுகம் செய்வது தொடர்பாகவும் ஆலோசித்து வருகிறோம். இவ்வாறு செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். PLUS ONE MODEL QUESTION PAPER DOWNLOAD
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Sunday, 30 July 2017

பிரதமரின் தேசிய திறன் மேம்பாடு திட்டத்தின் கீழ் பிளஸ்-2 முடித்தவர்களுக்கு ‘இயற்கை வழிகாட்டி’ பயிற்சி

பிரதமரின் தேசிய திறன் மேம்பாடு திட்டத்தின் கீழ் பிளஸ்-2 முடித்தவர்களுக்கு 'இயற்கை வழிகாட்டி' பயிற்சி | பிரதமர் நரேந்திர மோடி 2015-ல் தேசிய திறன் மேம்பாடு மற்றும் சுயதொழில் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இதற் கென தனி அமைச்சகமும் உருவாக் கப்பட்டது. இதன் அடிப்படையில் பல மத்திய அமைச்சகங்கள் பல்வேறு சுய வேலைவாய்ப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. இதன்படி, மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் சோதனை அடிப்படையில் ஒரு வேலைவாய்ப்பு பயிற்சி திட்டத்தை அமல்படுத்த திட்டமிட்டுள்ளது. 'பசுமை திறனாய்வு வளர்ச்சி நிகழ்வு' என்ற பெயரிலான அந்த திட்டத்தில் 'இயற்கை வழிகாட்டி (Nature's Guide' எனும் பயிற்சிப் பணி உருவாக்கப்பட்டுள்ளது. 10 -ம் வகுப்பு, பிளஸ்-2 மற்றும் கல்லூரி படிப்பை பாதியில் விட்டவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. பயிற்சியை முடிப்பவர்கள் நம் நாட்டின் சுற்றுலா தலங்கள், வனம் மற்றும் வனவிலங்கு சரணலாயம் ஆகியவற்றில் சுற்றுலா பயணிகளுக்கு வழிகாட்டி யாக பணியாற்ற முடியும். இந்திய விலங்கியல் ஆய்வகம் மற்றும் இந்திய தாவரவியல் ஆய்வகம் ஆகியவை சார்பில், 10 மாவட்டங்களில் மட்டும் முதற் கட்டமாக இது அறிமுகப்படுத்தப் பட உள்ளது. இதற்காக, டேராடூன், தென் சிக்கிம், இட்டாநகர், புனே, அலகாபாத், ஜோத்பூர், வடக்கு 24 பர்கனாஸ், தென் அந்தமான், கோழிக்கோடு மற்றும் கோயம் புத்தூர் ஆகிய 10 மாவட்டங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து இந்திய விலங்கியல் ஆய்வகத்தின் இயக்குநர் டாக்டர் கைலாஷ் சந்திரா 'தி இந்து'விடம் கூறும்போது, "உயர்கல்வியை தொடர முடியாதவர்களுக்கு இந்த வழிகாட்டிக்கான பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதுபோன்ற வர்கள் புதிய வகை திறனாய்வு பயிற்சியை பெற வேண்டிய அவசியமும் ஏற்பட்டுள்ளது. இதில் செயல் விளக்க வகுப்புகள் மற்றும் களப்பயிற்சி என 3 மாதங்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். ஒவ்வொரு மாவட்டத்திலும் 10 பேர் தேர்ந்தெடுக் கப்பட்டு பயிற்சி அளிக்கப்படும். இவர்கள் தங்கள் பகுதிகளில் உள்ள வனம், வனவிலங்குகள் மற்றும் புலிகள் சரணாலயம் ஆகியவற்றில் வழிகாட்டிகளாக பணியாற்ற முடியும்" என்றார். இயற்கை, தாவரம் மற்றும் விலங்குகள் ஆகியவற்றின் மீது ஆர்வம் உள்ளவர்கள் இப்பயிற்சிக் காக தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். பயிற்சிக்கு பின் மத்திய அரசின் சான்றிதழ் பெறும் இவர்களுக்கு சுற்றுலா வழிகாட்டி பணி கிடைக்கும் எனக் கருதப்படுகிறது. இந்திய தாவரவியல் ஆய்வகத் திலும் அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுவதால் அவர்கள், தோட்டக்கலை மற்றும் பயிர்கள் பாதுகாப்பு தொடர்புடைய அரசு பணிகளிலும் சேர வாய்ப்புள்ளதாகக் கருதப்படு கிறது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

அங்கன்வாடி பணியாளர், உதவியாளர் காலிப்பணியிடங்கள் ஆகஸ்ட் 7 வரை விண்ணப்பிக்கலாம்.

சென்னை மாவட்டத்தில் அங்கன்வாடி பணியாளர், உதவியாளர் காலிப்பணியிடங்கள் ஆகஸ்ட் 7 வரை விண்ணப்பிக்கலாம் | தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை மாவட்டத்தில் ஒருங் கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்தில் அங்கன்வாடி பணியாளர் (443 காலி பணியிடங்கள்), குறு அங்கன் வாடி பணியாளர் (158 காலி பணியிடங் கள்), அங்கன்வாடி உதவியாளர் 643 காலி பணியிடங்களுக்கு விண்ணப் பங்கள் வரவேற்கப்படுகின்றன. அங்கன்வாடி பணியாளர், குறு அங்கன்வாடி பணியாளர் பணி யிடங்களுக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி யுடன் வயது 25 முதல் 35 வயது வரையும், அங்கன்வாடி உதவியாளர் பணியிடத்துக்கு 20 வயது முதல் 40 வயதுடன் தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். தகுதி வாய்ந்த உள்ளூர் மகளிர் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு உரிய விண்ணப்பங் களை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டப் பணிகள் இணைய தளமான www.icds.tn.nic.in-ல் பதிவிறக் கம் செய்து விண்ணப்பிக்கலாம். மேலும், அந்தந்த பகுதியில் உள்ள குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகங்களிலும் விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளலாம். விண்ணப்பங்களை ஆகஸ்ட் 7-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு அந்தந்தப் பகுதியில் உள்ள குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் அல்லது 'மாவட்ட திட்ட அலுவலர், 2/124, தியாகராயா சாலை, தேனாம்பேட்டை, சென்னை-18' என்ற முகவரியில் அணுகலாம்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

மாணவர்களுக்கு இறையன்பு ஐஏஎஸ் அறிவுரை

சென்னையில் மாணவர் விடுதி விழா மாணவர்களுக்கு இறையன்பு ஐஏஎஸ் அறிவுரை | சமுதாயத்தில் மேன்மையோடு வாழ கையில் இருக்கும் அட்சய பாத்திரம் கல்வி என்று ஆதி திராவி டர் மாணவர் விடுதி விழாவில் ஐஏஎஸ் அதிகாரி வெ.இறையன்பு கூறியுள்ளார். சென்னை மயிலாப்பூர் கபாலி தோட்டத்தில் அமைந்துள்ள ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல மாணவர் விடுதியில் ரூ.1 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்டுள்ள விவேகானந்தர் அரங்கம், போதி அரங்கம் மற்றும் அகில இந்திய இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஊழியர் சங்க உதவியுடன் ரூ.3 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள அம்பேத்கர் விளையாட்டு அரங்கம் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதி கள் தொடக்கவிழா நடைபெற்றது. விழாவுக்கு ஓய்வு பெற்ற நீதிபதி கே.சந்துரு முன்னிலை வகித்தார். விவேகானந்தர் அரங்கை ராமகிருஷ்ணா மருத்துவமனை நிர்வாகி சுவாமி தர்மிஷ்தானந்தா வும், போதி அரங்கை அம்பேத்கர் மக்கள் படை நிறுவனர் மு.மதி பறையனாரும், அம்பேத்கர் விளையாட்டு அரங்கை தமிழக அரசின் பொருளாதாரம் மற்றும் புள்ளியல் துறை முதன்மைச் செயலர் வெ.இறையன்புவும் திறந்துவைத்தனர். தொடக்க விழாவில் இறையன்பு பேசியதாவது: மாணவர்களின் திறன்களை மேம்படுத்த வகுப்பறைப் பயிற்சி அளிக்கும் வகையில் போதி அரங்கமும், மனதை ஒழுங்குபடுத்த உதவும் யோகா பயிற்சி அளிக்க விவேகானந்தர் அரங்கமும் இங்கே அமைக்கப்பட்டு உள்ளன. ஆங்கில பேச்சாற்றலை வளர்க்க  இந்த விடுதியில் தங்கி யிருந்து படிக்கும் மாணவர்கள், கிராமப்புறங்களில் இருந்து வந்தவர்களாகவும், முதல்தலை முறை பட்டதாரிகளாகவும் இருப்பீர்கள். உங்கள் திறமை களை மேம்படுத்த, ஆங்கில பேச்சாற்றலை வளர்க்க இங்குள்ள நூலகத்தையும் இதர வசதிகளை யும் நன்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள். தினமும் ஒரு மணி நேரம் நூல் கள் படித்தால் மொழியறிவு, அறிவுத்திறன் வளர்வதுடன் தன்னம்பிக்கையும் வளரும். யாரும் புறக்கணிக்க முடியாத நிலைக்கு உயர வேண்டுமானால் அது கல்வியறிவால் மட்டுமே முடியும். சமுதாயத்தில் மேன்மையோடு வாழ கையில் இருக்கும் அட்சய பாத்திரம் கல்வி. அறிவால்தான் அம்பேத்கர் தனது திறமைகளை மேம்படுத்திக்கொள்ள முடிந்தது. ஒருசிலருக்கு வசதி வாய்ப்புகள் இருக்கிறதே, நமக்கு வசதிகள் குறைவாக உள்ளதே என ஒரு போதும் நினைக்க வேண்டாம். கிடைக்கின்ற வாய்ப்புகளை பயன் படுத்திக்கொண்டு சமுதாயத் துக்கு முன்மாதிரியாகத் திகழ வேண்டும். இவ்வாறு இறையன்பு கூறினார்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

மீன்வளப் பல்கலை. பி.டெக் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்

மீன்வளப் பல்கலை. பி.டெக் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம் | தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக் கழகத்தில் பி.டெக் பட்டப்படிப் பில் சேர இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று பல்கலைக்கழகம் தெரி வித்துள்ளது. இது குறித்து பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் எஸ். பெலிக்ஸ், நேற்று வெளியிட்ட செய்தி: தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக் கழகத்தில் பி.டெக் (உயிரி தொழில்நுட்பம்) பட்டப் படிப்புக் கான சேர்க்கை நடைபெற உள்ளது. இந்த படிப்பு சென்னை பழைய மாமல்லபுரம் சாலையில் உள்ள வாணியஞ்சாவடியில் உள்ள பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெறும். அதற்கான கல்வித் தகுதி பிளஸ் 2 என நிர்ணயிக் கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 31 வரை பல்கலைக்கழகத்தில் உள்ள 20 இடங்களில் சேர www.tnfu.ac.in என்ற இணையதளம் மூலம் ஆகஸ்ட் 3 முதல் 31-ம் தேதி வரை விண்ணப் பிக்கலாம். மாணவர்கள் இதை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு தமிழ்நாடு மீன்வள பல்கலைக் கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

தமிழக அரசு சார்பில் மாணவர்களுக்கு விபத்து காப்பீட்டு திட்டம் | பிளஸ்-1 மாணவர்களின் அச்சத்தை போக்க சிறப்பு திட்டம் | பள்ளி மாணவர்களுக்கு ‘ஸ்மார்ட் கார்டு’ திட்டம் | 54 ஆயிரம் கேள்விகள், விடைகள் அடங்கிய புத்தகத்திற்கான திட்டம் - பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தகவல்.

தமிழக அரசு சார்பில் மாணவர்களுக்கு விபத்து காப்பீட்டு திட்டம் பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தகவல்.இதன் மூலம் ஒரு கோடியே 27 லட்சம் பேர் பயன் பெறுவார்கள். | தமிழகத்தில் மாணவர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. மாணவர்கள் நலன் கருதி பிளஸ்-2 மற்றும் 10-ம் வகுப்பு தேர்வில் ரேங்க் பட்டியல் வெளியிடுவதை அரசு ரத்து செய்தது. இதையடுத்து பிளஸ்-1 வகுப்புக்கு பொதுத்தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த நிலையில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா திருவண்ணாமலை நகராட்சி மைதானத்தில் கொண்டாடப்பட்டது. அப்போது பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களை ஊக்குவித்தல் நிகழ்ச்சியை பாராளுமன்ற துணை சபாநாயகர் மு.தம்பிதுரை மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ஆகியோர் தொடங்கிவைத்தனர். இதில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசியதாவது:- மாணவர்களுக்காக தமிழக அரசு பல்வேறு நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மாணவர்கள் பிளஸ்-1 பொதுத்தேர்வை நினைத்து அச்சப்பட தேவையில்லை. பிளஸ்-1 மாணவர்களின் அச்சத்தை போக்க சிறப்பு திட்டம் ஒன்றை நாளை (திங்கட் கிழமை) அரசு அறிவிக்க உள்ளது. இன்னும் ஒரு வார காலத்தில் பள்ளி மாணவர்களுக்கு 'ஸ்மார்ட் கார்டு' திட்டம் அறிவிக்கப்பட உள்ளது. 1 கோடியே 27 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் விபத்து காப்பீட்டு திட்டம் ஒரு வாரத்தில் அறிவிக்கப்பட உள்ளது. அதேபோல் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்கள் வெளியிடப்பட உள்ளது. பொதுத்தேர்வை எதிர்கொள்ளும் வகையில் மாணவர்களுக்கு 54 ஆயிரம் கேள்விகள், விடைகள் அடங்கிய புத்தகத்திற்கான திட்டம் அறிவிக்கப்பட உள்ளது. மேலும் பொது தேர்விற்காக 450 மையங்களில் சனிக்கிழமை தோறும் முழு பயிற்சி அளிக்க விரைவில் திட்டம் அறிவிக்கப்பட உள்ளது. பிளஸ்-1 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான மாதிரி வினா-விடையும் வெளியிடப்பட உள்ளது. மாணவர்கள் பொதுத்தேர்வை அச்சமின்றி எதிர்கொள்ள வேண்டும். மூச்சு நின்றால் மட்டும் மரணம் அல்ல. முயற்சி நின்றாலும் மரணம் தான். எனவே, மாணவர்கள் முயற்சியை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

TRB GOVT POLYTECHNIC LECTURER NEW NOTIFICATION | VACANCIES:1058 | EXAM DATE:16.09.2017 | ONLINE APPLY LAST DATE: 11.08.2017

TRB - POLYTECHNIC ENGINEERING LECTURES POST RECRUITMENT - NEW NOTIFICATION PUBLISHED. TRB GOVT POLYTECHNIC LECTURER NOTIFICATION  | VACANCIES:1058 | EXAM DATE:16.09.2017 | ONLINE APPLY LAST DATE: 11.08.2017 | Direct Recruitment of Lecturers (Engineering / Non-Engineering) in Govt.Polytechnic Colleges for the year 2017 -18 அரசு தொழில்நுட்பக் கல்லூரிகளில் 1058 விரிவுரையாளர் பணியிடங்கள்: தேர்வு நாள்: 16.09.2017 விண்ணப்பிப்பதற்கான தேதி: 29.07.2017 முதல் 11.08.2017  | DOWNLOAD-ENG | DOWNLOAD-TAMIL | DOWNLOAD-SYLLABUS | PRESS NEWS | ONLINE REGISTRATION
Date of Notification : 16.06.2017
Commencement of Submission of Online Applications : 29.07.2017
Last date for Submission of Online Applications: : 11.08.2017
Date of Written Examination : 16.09.2017

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Saturday, 29 July 2017

TNPSC HALL TICKET FOR THE WRITTEN EXAMINATION (OBJECTIVE TYPE) TO THE POST OF GROUP-II A SERVICES.

TNPSC HALL TICKET FOR THE WRITTEN EXAMINATION (OBJECTIVE TYPE) TO THE POST OF GROUP-II A SERVICES. | தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் – செய்தி வெளியீடு | தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வருகிற 06.08.2017 அன்று முற்பகல், ஒருங்கிணைந்த குடிமைப் பணிகளுள் தொகுதி II-அ [நேர்காணல் அல்லாத பதவிகள்]-ல் அடங்கிய 1953 காலிப்பணியிடங்களுக்கான எழுத்து தேர்வினை நடத்தவுள்ளது. இத்தேர்வுக்கென 7.50 லட்சத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. சரியான முறையில் விவரங்களைப் பதிவு செய்து, உரிய விண்ணப்பக்கட்டணம் மற்றும் தேர்வுக்கட்டணம் செலுத்திய விண்ணப்பதாரர்களுக்கு தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளமான www.tnpscexams.net மற்றும் www.tnpsc.gov.in-ல் வெளியிடப்பட்டுள்ளது. மேற்படி பதவிக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்ப எண் (Application number)/பயனாளர் குறியீடு (Login id) மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து, நுழைவுச்சீட்டினை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் அல்லது தங்களது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளதற்கான காரணத்தைத் தெரிந்துகொள்ளலாம். சரியான முறையில் விண்ணப்பங்களைப் பதிவு செய்து, உரிய விண்ணப்பக்கட்டணம் செலுத்தியும் நுழைவுச்சீட்டு கிடைக்கப்பெறாத, தகுதியான விண்ணப்பதாரர்கள், தாங்கள் பணம் செலுத்தியதற்கான செலுத்துச்சீட்டின் (Challan) நகலுடன் கீழ்கண்ட விவரங்களை தேர்வாணையத்தின் மின்னஞ்சல் முகவரியான contacttnpsc@gmail.com-க்கு 02.08.2017ம் தேதிக்குள் அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். விண்ணப்பதாரரின் பெயர் விண்ணப்ப எண் (Application number) தேர்வுக் கட்டணம் (ரூபாய்) கட்டணம் செலுத்திய இடம்: அஞ்சலகம் / வங்கி வங்கிக்கிளை / அஞ்சலக முகவரி: நுழைவுச்சீட்டினை பதிவிறக்கம் செய்துகொள்வதில் ஏதேனும் சந்தேகம் இருப்பின் 1800 425 1002 என்ற கட்டணமில்லாத் தொலைபேசியிலோ அல்லது contacttnpsc@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலோ தொடர்பு கொண்டு தெளிவு பெறலாம். தேர்வு கட்டுபாடு அலுவலர், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் DOWNLOAD
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Friday, 28 July 2017

HIGHER SECONDARY HM PROMOTION COUNSELLING POSTPONED | மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் கலந்தாய்வு அடுத்த வாரத்துக்கு ஒத்திவைப்பு Vவைத்து பள்ளிக்கல்வி இயக்குநர் அறிவித்துள்ளார்.

HIGHER SECONDARY HM PROMOTION COUNSELLING POSTPONED | மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் கலந்தாய்வு அடுத்த வாரத்துக்கு ஒத்திவைப்பு Vவைத்து பள்ளிக்கல்வி இயக்குர் அறிவித்துள்ளார்.  2017-2018 ஆம் கல்வியாண்டிற்கு அரசு/ நகராட்சி மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கான  01.01.2017 நிலவரப்படியான தகுதிவாய்ந்தோர் முன்னுரிமைப் பட்டியலில் உள்ளவர்களுக்கு அரசு  மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வு கலந்தாய்வு 28.07.2017 அன்று காலை 9.00 மணிக்கு இணையதளம் வழியாக அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலங்களில்   நடைபெற இருந்தது. அரசு மேல்நிலைப்பள்ளிகளில் தற்போது காலியாக உள்ள 120  தலைமை ஆசிரியர் பணியிடங்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டியுள்ள நிலையில் , சுழற்சி பட்டியலில் வரிசை எண். 622 முதல் 820 வரை இடம் பெற்றுள்ள ஆசிரியர்களில் பதவி உயர்வு துறப்பு செய்பவர்களின் பணியிடங்களையும் மாணவர்கள் நலன் கருதி நிரப்ப வேண்டிஇருந்ததால்,  இந்த சுழற்சி   பட்டியலில் வரிசை எண். 622 முதல் 820 வரை  இடம்பெற்றுள்ள முதுகலை ஆசிரியர் மற்றும் அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்விற்கான கலந்தாய்வில் கலந்து கொள்ள இருந்தனர்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

SSLC RESULT JUNE 2017 | பத்தாம் வகுப்பு சிறப்புத் துணைத்தேர்வு எழுதிய தனித்தேர்வர்களுக்கான தேர்வு முடிவு இன்று (28.07.2017) வெளியாகிறது.

SSLC RESULT | பத்தாம் வகுப்பு சிறப்புத் துணைத்தேர்வு எழுதிய தனித்தேர்வர்களுக்கான தேர்வு முடிவு இன்று (28.07.2017) வெளியாகிறது. பத்தாம் வகுப்பு துணை தேர்வு முடிவுகள், இன்று வெளியாகின்றன. அரசு தேர்வுத்துறை இயக்குனர், வசுந்தராதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு: பத்தாம் வகுப்புக்கான துணைத் தேர்வு, ஜூன், ஜூலையில் நடந்தது. இதற்கான முடிவுகள், இன்று பிற்பகலில் வெளியிடப்படுகின்றன. மாணவர்கள், தங்களின் தேர்வு முடிவுகளை, தற்காலிக மதிப்பெண் சான்றிதழாக, www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மறுகூட்டலுக்கு, ஜூலை, 31, ஆக., 1 என, இரண்டு நாட்களில், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்தில விண்ணப்பிக்கலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

தையல், ஓவியம், இசை உள்ளிட்ட 1,325 சிறப்பாசிரியர் பணியிடத்தை நிரப்ப செப்டம்பர் 23-ம் தேதி எழுத்துத் தேர்வு ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு

தையல், ஓவியம், இசை உள்ளிட்ட 1,325 சிறப்பாசிரியர் பணியிடத்தை நிரப்ப செப்டம்பர் 23-ம் தேதி எழுத்துத் தேர்வு ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு | தையல், ஓவியம், இசை உள்ளிட்ட சிறப்பாசிரியர் பதவிகளில் 1,325 காலியிடங்களை நிரப்ப செப்டம்பர் மாதம் 23-ம் தேதி எழுத்துத்தேர்வு நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. அரசுப் பள்ளிகளில் ஓவியம், தையல், இசை, உடற்கல்வி சிறப்பாசிரியர் பணியிடங்கள், இதுவரை வேலைவாய்ப்பு அலு வலக பதிவுமூப்பு (சீனி யாரிட்டி) அடிப்படையில் நிரப்பப் பட்டு வந்தன. தற்போது முதல் முறையாக ஆசிரியர் தேர்வு வாரியத்தின் போட்டித்தேர்வு மூலமாக அப்பணியிடங்கள் நிரப் பப்பட உள்ளன. இதற்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. அதன்படி, 327 ஓவிய ஆசிரியர், 663 உடற்கல்வி ஆசிரியர், 86 இசை ஆசிரியர், 248 தையல் ஆசிரியர் (மொத்த காலியிடம் 1,325) பணியிடங்களை நிரப்ப செப்டம்பர் 23-ம் தேதி எழுத்துத்தேர்வு நடைபெற இருக் கிறது. இத்தேர்வுக்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணைய தளத்தை (www.trb.nic.in) பயன்படுத்தி ஆகஸ்ட் 18-ம் தேதிக்குள் ஆன்-லைனில் விண் ணப்பிக்க வேண்டும் என்று அதன் தலைவர் டி.ஜெகன்நாதன் அறிவித்துள்ளார். எழுத்துத்தேர்வு மற்றும் வெயிட்டேஜ் மதிப்பெண் அடிப் படையில் பணி நியமனம் நடக் கும். எழுத்துத்தேர்வுக்கு 95 மதிப்பெண்ணும், வேலை வாய்ப்பு பதிவுமூப்புக்கு அதிக பட்சம் 5 மதிப்பெண்ணும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. ஒவ் வொரு பதவிக்கும் நிர்ணயிக் கப்பட்டுள்ள கல்வித்தகுதி, தேர்வுக்கான பாடத்திட்டம், தேர்வு முறை முதலான விவரங்களை ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் இருந்து விரிவாகத் தெரிந்துகொள்ளலாம். எழுத்துத்தேர்வில் தேர்ச்சி பெறுவோர் ஒரு காலியிடத் துக்கு 2 பேர் என்ற விகிதாச் சார அடிப்படையில் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப் படுவார்கள். சான்றிதழ் சரிபார்ப் பின்போது பதிவுமூப்புக்கு ஏற்ப குறிப்பிட்ட மதிப்பெண் வழங்கப்படும். இறுதியாக, எழுத் துத்தேர்வு மதிப்பெண், வெயிட் டேஜ் மதிப்பெண் அடிப்படை யில் சிறப்பாசிரியர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். பதிவுமூப்பு ஆண்டுக்கான மதிப்பெண் விவரம் வருமாறு:- 1 முதல் 3 ஆண்டுகள் வரை - 1 மதிப்பெண் 3 முதல் 5 ஆண்டுகள் வரை - 2 மதிப்பெண் 5 முதல் 10 ஆண்டுகள் வரை - 3 மதிப்பெண் 10 ஆண்டுகளுக்கு மேல் - 5 மதிப்பெண் 3 லட்சம் பேர் விண்ணப்பிப்பர் பதிவுமூப்பு ஓராண்டுக்குள் இருந்தால் அதற்கு மதிப்பெண் எதுவும் அளிக்கப்படாது. சிறப்பாசிரியர் தேர்வுக்கு ஏறத்தாழ 3 லட்சம் பேர் விண்ணப்பிக்கக்கூடும் என ஆசிரியர் தேர்வு வாரியம் எதிர்பார்க்கிறது.
  1.  SPECIAL TEACHERS - NOTIFICATION - TAMIL DOWNLOAD
  2.  SPECIAL TEACHERS - NOTIFICATION - ENGLISH DOWNLOAD
  3.  PSTM Certificate
  4.  TRB - SYLLABUS FOR DIRECT RECRUITMENT OF SPECIAL TEACHERS
  5.  Click here - G.O MS - 68 - DOWNLOAD
  6.  Click here - G.O MS - 21 - DOWNLOAD
  7.  Click here - Online Application form for Special Teachers
  8.  STUDY MATERIALS DOWNLOAD - 1 STUDY MATERIALS DOWNLOAD - 2
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Thursday, 27 July 2017

இளநிலை அறிவியல் அலுவலர் பதவிக்கான எழுத்துத் தேர்வு முடிவு வெளியீடு.இதற்கான சான்றிதழ் சரிபார்ப்பு 04.08.2017 அன்று தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெறும்.

இளநிலை அறிவியல் அலுவலர் பதவிக்கான எழுத்துத் தேர்வு முடிவு - தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் செய்தி வெளியீடு தமிழ்நாடு தடய அறிவியல் சார்நிலைப்பணியில் அடங்கிய இளநிலை அறிவியல் அலுவலர் பதவிக்கான எழுத்துத் தேர்வு 16.10.2016 மு.ப. & பி.ப. அன்று நடத்தப்பட்டது. அதில் மொத்தம் 4413 தேர்வர்கள் பங்கேற்றனர். விண்ணப்பதாரர்கள் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள், இடஒதுக்கீட்டு விதி மற்றும் அப்பதவிகளுக்கான அறிவிக்கையில் வெளியிடப்பட்ட பிற விதிகளின் அடிப்படையில், சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தற்காலிகமாகத் தெரிவு செய்யப்பட்ட 15 விண்ணப்பதாரர்களின் பதிவெண்கள் கொண்ட பட்டியல்-IV தேர்வாணைய வலைதளம் www.tnpsc.gov.in-ல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான சான்றிதழ் சரிபார்ப்பு 04.08.2017 அன்று தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெறும்.| The Written Examination for the post of Junior Scientific Officer in Tamil Nadu Forensic Science Subordinate Service was held on 16.10.2016 FN & AN. Totally 4413 candidates have appeared for the said Examination. Based on the marks obtained in the above said Examination, following the rule of reservation of appointments and as per the other conditions stipulated in the Notification, a list of register numbers of 15 candidates (List-IV) those who have been provisionally admitted to Certificate Verification to the said post is available at the Commission's Website " www.tnpsc.gov.in ". The Certificate Verification will be held on 04.08.2017 at the Commission's office. V. SHOBHANA, I.A.S., CONTROLLER OF EXAMINATIONS
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

‘நீட்’ விவகாரத்தில் நல்ல அறிவிப்பு விரைவில் வெளியாகும் முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன் தகவல்

'நீட்' விவகாரத்தில் நல்ல அறிவிப்பு விரைவில் வெளியாகும் முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன் தகவல் | நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு தற்காலிக விலக்கு அளிப்பதற்கான நல்ல அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன் கூறி யுள்ளார். முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது வீட்டில் தனது ஆதரவாளர்களுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். இதில் மதுசூதனன், மைத்ரேயன், க.பாண்டியராஜன், செம்மலை, கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வ நாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த ஆலோசனைக் கூட்டத்துக் குப் பிறகு க.பாண்டியராஜன் நிருபர்களிடம் கூறியதாவது: டெல்லியில் பிரதமர் மோடியை முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் சந்தித்தபோது நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். நீட் தேர்வில் இருந்து தமிழகத் துக்கு நிரந்தர விலக்கு கிடைக்க வேண்டும் என்பதே எங்களுடைய விருப்பம். இருப்பினும் தற்போதைய சூழலில் 2 ஆண்டு களுக்கு தற்காலிக விலக்கு கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும். இந்த அறிவிப்பு வெளியான பிறகு தமிழகத்தில் உள்ள இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான இடங்களுக்கு பழைய நடைமுறையிலேயே கலந் தாய்வு நடத்தலாம். ராமேசுவரத்தில் வியாழன் அன்று நடைபெறும் அப்துல் கலாம் மணி மண்டபம் திறப்பு விழாவில் ஓ.பன்னீர்செல்வம் கலந்துகொள்கிறார். நாங்களும் கலந்துகொள்ள உள்ளோம். அந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி யைச் சந்தித்து பேச உள் ளோம். அதிமுக அணிகள் இணைப்பு தொடர்பாக இன்றைய கூட்டத்தில் ஆலோசிக்கப்படவில்லை. அதே சமயம் அதிமுக அணிகள் இணைப்பு தொடர்பான பிரச்சினைகளுக்கு அடுத்த மாதத்துக்குள் நிச்சயம் நல்ல தீர்வு கிடைத்துவிடும். இவ்வாறு அவர் கூறினார்.  
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கான கல்வித்தகுதியில் மாற்றம் உயர்கல்வித் துறை செயலர் சுனில் பாலிவால் உத்தரவு.தேர்வுக்கு விண்ணப்பிக்க வசதியாக ஆசிரியர் தேர்வு வாரியம் உரிய கால அவகாசம் அளித்து அறிவிப்பு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கான கல்வித்தகுதியில் மாற்றம் உயர்கல்வித் துறை செயலர் சுனில் பாலிவால் உத்தரவு | அரசு பாலிடெக்னிக் கல்லூரி பொறியியல் பிரிவு விரிவுரையாளர் பணிக்கான கல்வித் தகுதியில் மாற்றம் செய்து உயர்கல்வித் துறை செயலர் சுனில் பாலிவால் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளார். அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் பொறியியல் மற்றும் பொறியியல் அல்லாத பாடப்பிரிவுகளில் (கணிதம், இயற்பியல், வேதியியல் ஆங்கிலம்) 1,058 விரிவுரையாளர் பணியிடங்களை எழுத்துத்தேர்வு மூலம் நேரடியாக நியமிக்க ஆசிரியர் தேர்வு வாரியம் அண்மையில் ஓர் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. அதன்படி, பொறியியல் பிரிவு விரிவுரையாளர் பணிக்கு சம்பந்தப்பட்ட பொறி யியல் பாடத்தில் முதல் வகுப்பு பட்டமும் பொறியியல் அல்லாத பிரிவு எனில், குறிப் பிட்ட பாடப்பிரிவில் முதுகலை படிப்பில் முதல் வகுப்பு பட்டமும் பெற்றிருக்க வேண்டும். இந்த நிலையில், பொறியியல் விரிவுரையாளர் தேர்வுக்கு முதல் வகுப்பில் இளங்கலை பட்டம் பெறாத பட்சத்தில் முதுகலை படிப்பில் (எம்இ, எம்டெக்) முதல் வகுப்பு பெற்றிருந்தால் அவர்களும் விண்ணப்பிக்கத் தகுதியுடைவர் ஆவர். ஆனால், அதற்கான வாய்ப்பு விண்ணப்பத்தில் இல்லாததால் ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள விரிவுரையாளர் தேர்வுக்கான அறிவிப்பை ரத்துசெய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் மனுதாரரின் கோரிக்கையை ஏற்று 1058 விரிவுரையாளர் தேர்வு அறிவிப்பை ரத்துசெய்து உத்தரவிட்டது. விரிவுரையாளர் தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் ஜூலை 7-ம் தேதி என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதற்கு 2 நாட்களுக்கு முன்பாக இந்த தீர்ப்பு வெளியானது. ஆனால், உயர் நீதிமன்றத் தீர்ப்பு தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் எந்த அறிவிப்பையும் வெளியிட வில்லை. இதைத்தொடர்ந்து, கடைசி நாளான ஜூலை 7-ம் தேதி வரையிலும் விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் விண்ணப்பித்த வண்ணம் இருந்தனர். ஒருசிலர் நீதிமன்ற உத்தரவு காரணமாக, விரிவுரையாளர் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாமா? வேண்டாமா? என்று குழப்பம் அடைந்தனர். இந்த நிலையில், அரசு பாலிடெக்னிக் பொறியியல் பிரிவு விரிவுரையாளர் பணிக்கான கல்வித்தகுதியில் மாற்றம் செய்து உயர்கல்வித் துறை செயலர் சுனில் பாலிவால், ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது. அரசு பாலிடெக்னிக் கல்லூரி பொறியியல் பிரிவு விரிவுரையாளர் பணிக்கு சம்பந்தப்பட்ட பொறியியல் பாடத்தில் முதல் வகுப்பு (60 சதவீத மதிப்பெண்) பட்டம் பெற்றி்ருக்க வேண்டும். முதுகலை பொறியியல் பட்டதாரி யாக இருந்தால் இளங்கலை அல்லது முதுகலைப் படிப்பில் முதல் வகுப்பு பட்டம் பெற்றிருக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. அரசின் இந்த உத்தரவு மூலம், பிஇ, பிடெக் படிப்பில் முதல் வகுப்பு பெறாமல் எம்இ, எம்டெக் படிப்பில் முதல் வகுப்பு பெற்றிருப்பவர்களும் விரிவுரையாளர் தேர்வுக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர் ஆகிறார்கள். எனவே, இதுபோன்ற கல்வித்தகுதி உடைய நபர்கள் பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வுக்கு விண்ணப்பிக்க வசதியாக ஆசிரியர் தேர்வு வாரியம் உரிய கால அவகாசம் அளித்து அறிவிப்பு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக, எழுத்துத்தேர்வுக்கான தேதியும் தள்ளிவைக்கப்படும்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

என்ஜினீயரிங் கல்லூரிகளில் புதிய பாடத்திட்டம் அமல் இனி ‘அரியர்ஸ்’ என்பதே கிடையாது

என்ஜினீயரிங் கல்லூரிகளில் புதிய பாடத்திட்டம் அமல் இனி 'அரியர்ஸ்' என்பதே கிடையாது | என்ஜினீயரிங் கல்லூரிகளில் இந்த கல்வி ஆண்டில் புதிய பாடத்திட்டம் அமல்படுத்தப்படுகிறது. மாணவர்கள் எடுத்த துறை தவிர, வேறு துறைகளில் உள்ள 2 விருப்ப பாடங்களை தேர்வு செய்து படிக்க வேண்டும். மேலும் 'அரியர்ஸ்' இல்லாத புதிய தேர்வு முறை கொண்டு வரப்படுகிறது. புதிய பாடத்திட்டம் தமிழ்நாட்டில் அண்ணா பல்கலைக்கழக கல்லூரிகளில் 4 ஆண்டுக்கு ஒரு முறை பாடத்திட்டம் மாற்றப்பட வேண்டும். 2013-ம் ஆண்டு பாடத்திட்டம் மாற்றப்பட்டது. இதையடுத்து இந்த கல்வி ஆண்டில் புதிய பாடத்திட்டம் அமல்படுத்தப்படுகிறது. இது குறித்து ஆலோசனை நடத்த சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் கல்விக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. உயர் கல்வித்துறை முதன்மை செயலாளர் சுனில் பாலிபால், தமிழ்நாடு தொழில்நுட்பக்குழு ஆணையர் ராஜேந்திர ரத்னு, அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் கணேசன், கிண்டி என்ஜினீயரிங் கல்லூரி டீன் டி.வி.கீதா உள்பட பலர் கலந்து கொண்டனர். வேலைவாய்ப்பு கூட்டம் முடிந்ததும் கல்விக்குழு டீன் டி.வி.கீதா நிருபர்களிடம் கூறியதாவது:- சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள 3 கல்லூரிகளிலும், குரோம்பேட்டையில் உள்ள எம்.ஐ.டி. கல்லூரியிலும் பாடத்திட்டம் மாற்றப்பட்டு நடைமுறையில் இருந்து வருகிறது. அதேபோல் ஒரு துறையை தேர்ந்து எடுத்து படிக்கும் போது அவர் வேறு ஒரு துறையில் கண்டிப்பாக அவரது விருப்பப்படி 2 பாடங்களை தேர்ந்து எடுத்து படிக்க வேண்டும். இந்த முறை ஏற்கனவே இந்த 4 கல்லூரிகளிலும் அமலில் உள்ளது. இந்த கல்வி ஆண்டில் தமிழகத்தில் உள்ள 518 என்ஜினீயரிங் கல்லூரிகளிலும் புதிய பாடத்திட்டம் அமல்படுத்தப்படுகிறது. புதிய பாடத்திட்டத்தில் வேலைவாய்ப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் தொழிற்சாலைகளில் பயிற்சி, கம்ப்யூட்டர் அறிவு ஆகியவையும் இடம் பெற்றுள்ளது. புதிய பாடத்திட்டத்தின்படி ஒரு துறையை தேர்ந்து எடுத்து படிக்கும் மாணவர்கள் மற்றொரு துறையில் குறைந்தது 2 விருப்ப பாடங்களையாவது படிக்க வேண்டும். இது விருப்பத்தின் அடிப்படையில் படிக்கும் முறை என்று அழைக்கப்படுகிறது. உதாரணமாக மெக்கானிக்கல் பிரிவை எடுத்து படிக்கும் மாணவர், மெக்கானிக்கல் பிரிவில் உள்ள 2 பாடங்களுக்கு பதிலாக கணினி அறிவியல் பாடத்தில் ஏதாவது இரு பாடங்களை எடுத்து படிக்க வேண்டும். இது கட்டாயம். பி.இ. படிக்கும் போது 3-வது ஆண்டு கடைசியில் மாணவர்கள் 8.5 கிரேடு மதிப்பெண்கள் எடுத்திருந்து, அவர்கள் கடைசி ஆண்டு படிக்க முடியாவிட்டால் 5-வது ஆண்டு கல்லூரிக்கு வந்து 4-வது வருட படிப்பை தொடரலாம். இனி 'அரியர்ஸ்' என்ற பேச்சுக்கே இடம் இல்லை. ஒரு மாணவர் பி.இ. முதல் பருவ தேர்வில் ஒரு பாடத்தில் தேர்ச்சி பெறவில்லை என்றால் அவருடைய 'இன்டர்னல்' மதிப்பெண் ரத்து ஆகிவிடும். அவர் மீண்டும் 3-வது பருவ தேர்வில் தேர்ச்சி பெறாத முதல் பருவத்திற்கான 'இன்டர்னல்' தேர்வை எழுத வேண்டும். பிறகு அவர் பருவ தேர்வை எழுத வேண்டும். அவர் விரும்பினால் தேர்ச்சி பெறாத பாடத்திற்கு உரிய வகுப்பில் உட்கார்ந்து கேட்கலாம். தேர்ச்சி பெறாத பாடத்திற்கு உரிய 'இன்டர்னல்', பருவ தேர்வை 7 ஆண்டுக்குள் எழுதலாம். இதனால் 'அரியர்ஸ்' என்ற வார்த்தை ஒழிக்கப்படுகிறது. தற்போது சிறிய அளவில் கிரேடு முறையில் மாற்றம் கொண்டு வரப்படுகிறது. '0' என்றால் மிகச்சிறப்பு. 10 கிரேடு புள்ளிகள். மதிப்பெண்கள் 91 முதல் 100 வரை. 'ஏ+' என்றால் சிறப்பு. 9 கிரேடு புள்ளிகள். மதிப்பெண்கள் 81 முதல் 90 வரை. 'ஏ' என்றால் மிகவும் நல்லது. 8 கிரேடு புள்ளிகள். மதிப்பெண்கள் 71 முதல் 80 வரை. 'பி+' என்றால் நல்லது. 7 கிரேடு புள்ளிகள். மதிப்பெண்கள் 61 முதல் 70 வரை. 'பி' என்றால் சராசரி நிலை. 6 கிரேடு புள்ளிகள். மதிப்பெண்கள் 50 முதல் 60 வரை. 50 மதிப்பெண்களுக்கு கீழே உள்ளவர்கள் மீண்டும் தேர்வு எழுத வேண்டும். இவ்வாறு டி.வி.கீதா தெரிவித்தார். பேட்டியின் போது கல்விக்குழு துணை இயக்குனர் ஜி.கீதா உடன் இருந்தார்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Wednesday, 26 July 2017

TRB ANNOUNCED TO FILL 1325 SPECIAL TEACHERS | 1325 சிறப்பாசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் போட்டித்தேர்வு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

TRB ANNOUNCED 1325 SPECIAL TEACHERS RECRUITMENT 2017 - NOTIFICATION - Teachers Recruitment Board College Road, Chennai-600006 Direct Recruitment of Special Teachers (Physical Education, Drawing, Music, Sewing) in School Education and other Departments for the years 2012 to 2016. Click here for Notification Click here - G.O MS - 21 Click here - G.O MS - 68 Click here - Online Application form for Special Teachers.NOTIFICATION - ENGLISH NOTIFICATION - TAMIL
>>>>>>>
§DATE OF NOTIFICATION26.07.2017
§EMPLOYMENT TYPE:Govt Job
§APPLICATION:ONLINE
§WEBSITE:http://trb.tn.nic.in/
§NAME OF THE POST:Special Teachers (Physical Education, Drawing, Music, Sewing)
§EDUCATIONAL QUALIFICATION:REFER PROSPECTUS
§VACANCIES:1325
§SALARY:Rs.5200-20200 + GP - 2800
§SELECTION PROCEDURE:Competitive Exams
§LAST DATE:18.08.2017
§DATE OF EXAMINATION:23.09.2017
  1.  SPECIAL TEACHERS - NOTIFICATION - TAMIL DOWNLOAD
  2.  SPECIAL TEACHERS - NOTIFICATION - ENGLISH DOWNLOAD
  3.  PSTM Certificate
  4.  TRB - SYLLABUS FOR DIRECT RECRUITMENT OF SPECIAL TEACHERS
  5.  Click here - G.O MS - 68 - DOWNLOAD
  6.  Click here - G.O MS - 21 - DOWNLOAD
  7.  Click here - Online Application form for Special Teachers
  8.  STUDY MATERIALS DOWNLOAD - 1 STUDY MATERIALS DOWNLOAD - 2
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

PGT,HSHM TO HSSHM PROMOTION COUNSELLING ANNOUNCED | அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெற கலந்தாய்வு 28.07.2017 அன்று காலை 9.00 மணிக்கு இணையதளம் வழியாக அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலங்களில் நடைபெற உள்ளது.

2017-2018 ஆம் கல்வியாண்டிற்கு அரசு/ நகராட்சி மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கான  01.01.2017 நிலவரப்படியான தகுதிவாய்ந்தோர் முன்னுரிமைப் பட்டியலில் உள்ளவர்களுக்கு அரசு  மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வு கலந்தாய்வு 28.07.2017 அன்று காலை 9.00 மணிக்கு இணையதளம் வழியாக அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலங்களில்   நடைபெற உள்ளது.அரசு மேல்நிலைப்பள்ளிகளில் தற்போது காலியாக உள்ள 120  தலைமை ஆசிரியர் பணியிடங்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டியுள்ள நிலையில் , சுழற்சி பட்டியலில் வரிசை எண். 622 முதல் 820 வரை இடம் பெற்றுள்ள ஆசிரியர்களில் பதவி உயர்வு துறப்பு செய்பவர்களின் பணியிடங்களையும் மாணவர்கள் நலன் கருதி நிரப்ப வேண்டியுள்ளதால்,  இந்த சுழற்சி   பட்டியலில் வரிசை எண். 622 முதல் 820 வரை  இடம்பெற்றுள்ள முதுகலை ஆசிரியர் மற்றும் அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் அனைவரையும் தவறாமல் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்விற்கான கலந்தாய்வில் கலந்து கொள்ள வேண்டும். DOWNLOAD PANEL
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

தமிழ்நாடு சிறப்பு இளைஞர் காவல் படைக்கு புதிதாக 10 ஆயிரத்து 500 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கான பணி நடந்து வருவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறப்பு இளைஞர் காவல் படைக்கு 10,500 பேர் நியமனம் | தமிழ்நாடு சிறப்பு இளைஞர் காவல் படைக்கு புதிதாக 10 ஆயிரத்து 500 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற் கான பணி நடந்து வருவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக் கப்பட்டுள்ளது. தமிழ்நாடு சீருடைப் பணி யாளர் தேர்வு வாரியத்தால் 2014-ல் சிறப்புக் காவல் இளைஞர் படைக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதில் 10 ஆயிரத்து 99 நபர்களில், 8 ஆயிரத்து 500 பேர் இரண்டாம் நிலைக் காவலர்களாகத் தமிழ்நாடு சிறப்புக் காவல் படையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதன் தொடர்ச்சியாக, தமிழ்நாடு சிறப்புக் காவல் இளைஞர் படையில் காலியாக உள்ள இடங்களுக்கு, மேலும் 10 ஆயிரத்து 500 பேர், 2017 மற்றும் 2018-ம் ஆண்டில் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதுகுறித்து, போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறும் போது, "தமிழ்நாடு சிறப்பு காவல் இளைஞர் படையில் சேர அடுத்த மாதம் 23-ம் தேதி முதல் விண்ணப்பம் விநியோகிக்கப்பட உள்ளது. இதனை அனைத்து தபால் நிலையங்களிலும் பெற் றுக் கொள்ளலாம். அக்டோபர் 1-ம் தேதி வரை பெற்றுக்கொள்ளும் வகையில் நடவடிக்கை எடுக் கப்பட்டு வருகிறது. தேர்வு நாள் நவம்பர் 10-ம் தேதி தமிழகம் முழுவதும் நடக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது" என்றார்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு? மத்திய அரசு சம்மதம் தெரிவித்திருப்பதாக தகவல்-மாணவர்கள், பெற்றோர் மகிழ்ச்சி

நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு? மத்திய அரசு சம்மதம் தெரிவித்திருப்பதாக தகவல்-மாணவர்கள், பெற்றோர் மகிழ்ச்சி | நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க மத்திய அரசு சம்மதம் தெரிவித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. இதனால் மாணவர்கள், பெற்றோர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டுக்கான இளநிலை, முதுநிலை படிப்புகளுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வில் (NEET - நீட்) இருந்து விலக்கு அளிக்க கோரும் சட்ட மசோதாக் கள் தமிழக சட்டப்பேரவையில் கடந்த பிப்ரவரி 1-ம் தேதி நிறை வேற்றப்பட்டன. இந்த சட்ட மசோ தாக்கள் குடியரசுத் தலைவர் ஒப்பு தலுக்காக அனுப்பி வைக்கப்பட் டன. அது ஏற்கப்படுகிறதா, நிராகரிக்கப்படுகிறதா என எந்த முடிவும் தெரிவிக்கப்படவில்லை. இந்த சூழலில், நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் முது நிலை மருத்துவப் படிப்புகளுக் கான கலந்தாய்வு நடத்தி முடிக் கப்பட்டது. இதில் அரசு மருத்து வர்களுக்கான 50 சதவீத இடஒதுக் கீடுக்கு பதிலாக, புதிதாக மதிப் பெண் முறை கொண்டுவரப்பட் டது. இதைத் தொடர்ந்து நீட் மதிப்பெண் அடிப்படையில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புக ளுக்கும் கலந்தாய்வு நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. இதற்கிடையில், ஏழை, கிரா மப்புற மாணவர்கள் பாதிக்கப் படுவதை தடுக்க எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான மாண வர் சேர்க்கையில் மாநில பாடத் திட்டத்தில் படித்த மாணவர் களுக்கு 85 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந் தாய்வை கடந்த 17-ம் தேதி தொடங்க தமிழக அரசு திட்ட மிட்டிருந்தது. கடந்த 14-ம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியிட இருந்த நிலையில், சிபிஎஸ்இ மாணவர்கள் தொடர்ந்த வழக்கில், தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் திட்டமிட்டபடி கலந்தாய்வு தொடங்கவில்லை. தரவரிசைப் பட்டியலும் வெளியி டப்படவில்லை. அந்தத் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மேல் முறையீடு செய்தது. அந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. இந்த நிலையில், நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவது ஒன்றே தீர்வு என்பதை உணர்ந்த தமிழக அரசு, பிரதமர் மோடியை சந்தித்து வலியுறுத்த முடிவு செய்தது. அதன்படி நேற்று டெல்லி சென்ற முதல்வர் கே.பழனிசாமி பிரதமர் மோடியை சந்தித்து நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்குமாறு வேண்டுகோள் விடுத்தார். சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். நீட் தேர்வில் இருந்து தமிழகத் துக்கு விலக்கு கோரி பல்வேறு கட்சியினரும் தொடர்ந்து வலியு றுத்தி வருகின்றனர். இக்கோரிக் கையை வலியுறுத்தி பிரதமர் மோடியை முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்தார். குடியரசுத் தலைவர், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை அன்புமணி ராமதாஸ் சந்தித் தார். சி.விஜயபாஸ்கர் தலைமையி லான அமைச்சர்கள் குழுவினர், அதிமுக, திமுக எம்பிக்கள் மத்திய அமைச்சர்களை சந்தித்தனர். இந்நிலையில், தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து 2 அல்லது 3 ஆண்டுகள் வரை விலக்கு அளிக்க மத்திய அரசு சம்மதம் தெரிவித்திருப்பதாக நேற்று தகவல்கள் வெளியாயின. இதனால் மாணவர்கள், பெற்றோர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதுபற்றி சுகாதாரத் துறை அதிகாரிகள், மருத்துவர்கள் சங்க நிர்வாகிகளிடம் கேட்டபோது, ''நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க மத்திய அரசு சம்மதம் தெரிவித்திருப்பதாக தகவல்கள் வெளியாகின்றன. இன்னும் உறுதியான தகவல்கள் கிடைக்கவில்லை. நீட் தேர்வில் இருந்து விலக்கு கிடைத்தால் ஏழை, கிராமப்புற மாணவர்க ளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்'' என்றனர்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

கிண்டி ஐடிஐ-யில் சேர விண்ணப்பிக்கலாம்.

கிண்டி ஐடிஐ-யில் சேர விண்ணப்பிக்கலாம் | கிண்டி ஐடிஐ தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் இரண்டாம் கட்டமாக வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன்  வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- சென்னை அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் காலியாகவுள்ள தொழில்நுட்பப் பயிற்சிகளுக்கு www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். ஆண்கள் 14 வயது முதல் 40 வயது வரை விண்ணப்பிக்கலாம். பெண்கள் 14 வயது முதல் வயது உச்சவரம்பு இல்லை. விண்ணப்பதாரர் ஒன்றுக்கு மேற்பட்ட மாவட்டங்களில் விண்ணப்பிக்க விரும்பினால் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் தனித்தனியாக இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். மேலும் பயிற்சி காலத்தில் மாதந்தோறும் அரசு உதவித் தொகையாக ரூ.500 வழங்கப்படும். மேலும், அரசின் இலவச மடிக்கணினி, பாடப்புத்தகம், வரைபடக் கருவிகள், சீருடைகள், மிதிவண்டி, இலவச பஸ் பாஸ் ஆகியனவும் வழங்கப்படுகிறது. மேலும் விவரங்கள் பெற துணை இயக்குனர், அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், கிண்டி, சென்னை-32 என்ற முகவரியில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என்று செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

குடியரசுத் தலைவராக ராம்நாத் கோவிந்த் பதவியேற்றார்

குடியரசுத் தலைவராக ராம்நாத் கோவிந்த் பதவியேற்றார் நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார் புதுடெல்லி நாடாளுமன்ற மைய மண்டபத்தில்  நடைபெற்ற நிகழ்ச்சியில் நாட்டின் 14-வது குடியரசுத் தலைவராக ராம்நாத் கோவிந்த் (71) பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். நாட்டின் 13-வது குடியரசுத் தலைவராக இருந்த பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் கடந்த 24-ம் தேதியுடன் முடிவடைந்தது. புதிய குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த 17-ம் தேதி நடைபெற்றது. இதில் பாஜக கூட்டணி சார்பில் பிஹார் மாநில முன்னாள் ஆளுநர் ராம்நாத் கோவிந்தும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில், மக்களவை முன்னாள் தலைவர் மீரா குமாரும் போட்டியிட்டனர். நாடு முழுவதும் உள்ள எம்எல்ஏக்கள், எம்பிக்கள் வாக்களித்தனர். தேர்தல் முடிவு கடந்த 20-ம் தேதி வெளியானது. இதில் ராம்நாத் கோவிந்த் 65.65 சதவீத வாக்குகள் பெற்று வெற்றி பெற்று புதிய குடியரசுத் தலைவராக தேர்வானார். இந்நிலையில், குடியரசுத் தலைவராக இருந்து வந்த பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் முடிந்தது. அவருக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரிவு உபசார நிகழ்ச்சி நடைபெற்றது. இதையடுத்து புதிய குடியரசுத் தலைவரின் பதவியேற்பு விழா நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக குடியரசுத் தலைவர் மாளிகையில் இருந்து பிரணாப் முகர்ஜியும், ராம்நாத் கோவிந்தும் நாடாளுமன்றத்துக்கு புறப்பட்டுச் சென்றனர். செல்லும் வழியில் ராணுவ வீரர்கள் அணி வகுத்து மரியாதை செலுத்தினர். நாடாளுமன்ற வாயிலில் இருவரையும் குடியரசு துணைத் தலைவர் ஹமீது அன்சாரி, மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் ஆகியோர் வரவேற்று நாடாளுமன்ற மைய மண்டபத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கு நடந்த நிகழ்ச்சியில் நாட்டின் 14-வது குடியரசுத் தலைவராக ராம்நாத் கோவிந்த் பதவியேற்றார். அவருக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். குடியரசுத் தலைவராக பதவியேற்ற ராம்நாத் கோவிந்துக்கு பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர். பின்னர், குடியரசுத் தலைவர் மாளிகைக்கு பாரம்பரிய மரியாதை களுடன் ராம்நாத் கோவிந்த் அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு பதிவேட்டில் கையெழுத்திட்டு குடியரசுத் தலைவராக பொறுப் பேற்றுக் கொண்டார். 
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

ராமேசுவரத்தில் ரூ.15 கோடி செலவில் அப்துல் கலாம் மணிமண்டபம் பிரதமர் மோடி நாளை (27.07.2017)திறந்து வைக்கிறார்.

ராமேசுவரத்தில் ரூ.15 கோடி செலவில் அப்துல் கலாம் மணிமண்டபம் பிரதமர் மோடி நாளை திறந்து வைக்கிறார் | ராமேசுவரத்தில் ரூ.15 கோடி செலவில் கட்டப்பட்ட அப்துல் கலாம் மணிமண்டபத்தை பிரதமர் மோடி நாளை (வியாழக்கிழமை) திறந்துவைக்கிறார். ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தை அடுத்த தங்கச்சிமடத்தில் பேய்க்கரும்பு பகுதியில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் நினைவிடம் உள்ளது. இங்கு மத்திய அரசின் பாதுகாப்புத்துறை சார்பில் ரூ.15 கோடி செலவில் அப்துல் கலாம் மணிமண்டபம் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ளது. இதில், அக்னி ஏவுகணையின் மாதிரி வடிவம், செயற்கைகோள் மாதிரி, கலாமின் 700-க்கும் மேற்பட்ட புகைப்படங்கள், அவர் தொடர்பான 91 ஓவியங்கள் இடம்பெற்றுள்ளன. அப்துல் கலாமின் 2-ம் ஆண்டு நினைவு தினமான நாளை (வியாழக்கிழமை) இந்த மணிமண்டபத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைக்கிறார். இதற்காக அவர் டெல்லியில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டு மதுரைக்கு நாளை காலை 10 மணி அளவில் வருகிறார். அங்கிருந்து ராணுவ ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு காலை 11 மணிக்கு மண்டபம் முகாமில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிகாப்டர் இறங்கு தளத்தை அடைகிறார். அதன்பின் கார் மூலம் புறப்பட்டு காலை 11.20 மணிக்கு அப்துல் கலாம் மணிமண்டபத்துக்கு வருகிறார். அங்கு அமைக்கப்பட்டுள்ள கொடிக்கம்பத்தில் பிரதமர் தேசிய கொடி ஏற்றுகிறார். பின்பு மணிமண்டபத்தை திறந்துவைக்கிறார். 
பிறகு ராமேசுவரத்தில் இருந்து டெல்லி வரை செல்லும் 'அப்துல்கலாம்-2020' என்ற சாதனை பிரசார வாகனத்தை அவர் கொடி அசைத்து தொடங்கிவைக்கிறார். இதையடுத்து, அங்கிருந்து காலை 11.55 மணிக்கு புறப்பட்டு மண்டபம் முகாம் அருகே இந்திய கடலோர காவல்படை குடியிருப்பு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள விழா மேடைக்கு வருகிறார். அங்கு ராமேசுவரம்-அயோத்தி இடையேயான புதிய ரெயில் சேவையையும், ஆழ்கடல் மீன்பிடிப்பு திட்டத்தையும் தொடங்கிவைத்து சிறப்புரையாற்றுகிறார். விழாவில், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மத்திய மந்திரிகள் நிர்மலா சீதாராமன், பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் மத்திய-மாநில அமைச்சர்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்துகொள்கின்றனர். பிரதமர் வருகையையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மண்டபம் முதல் ராமேசுவரம் வரை 2000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். சாலையின் இருபுறமும் தடுப்பு வேலிகள் அமைத்து அனைத்து வாகனங்களையும் போலீசார் தீவிர சோதனை செய்து வருகின்றனர். இதேபோல, ராமேசுவரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் துணை ராணுவப்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பிரதமர் வந்து செல்வதற்கான ஏற்பாடுகளை ராணுவ ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. பாம்பன், மண்டபம், ராமேசுவரம் ரெயில் நிலையங்களை நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் துணை ராணுவம் தனது முழு கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளது. இந்த ரெயில் நிலையங்களில் பார்சல்கள் அனுப்ப தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. பயணிகள் போக்குவரத்து மட்டுமே முழுமையாக மேற்கொள்ளப்படுகிறது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகம், தொழிற்சாலைகளில் ‘வந்தே மாதரம்’ பாடலை பாடவேண்டும் ஐகோர்ட்டு உத்தரவு.

பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகம், தொழிற்சாலைகளில் 'வந்தே மாதரம்' பாடலை பாடவேண்டும் ஐகோர்ட்டு உத்தரவு | பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்கள், தொழிற்சாலைகள், தனியார் நிறுவனங்களில் தேசபக்தி பாடலான 'வந்தே மாதரம்' பாடலை பாடவேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு நீதிபதி எம்.வி.முரளிதரன் உத்தரவிட்டுள்ளார். ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வில் பங்கேற்ற கே.வீரமணி என்பவர், சென்னை ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், 'ஆசிரியர் தகுதித்தேர்வில் இரண்டாம் தாளுக்கான 'டி' டைப் வினாத்தாளில் கேள்வி எண் 107-ல் 'வந்தே மாதரம்' என்ற பாடல் எந்த மொழியில் முதலில் எழுதப்பட்டது? என கேட்கப்பட்டு இருந்தது. அதற்கு நான் வங்க மொழி என பதில் அளித்து இருந்தேன். ஆனால் 'கீ-ஆன்சரில்' சமஸ்கிருதம் என உள்ளது. அனைத்து பாடப்புத்தகங்களிலும் வந்தே மாதரம் வங்க மொழியில் எழுதப்பட்டது என்றுதான் உள்ளது. இதனால் இந்த தேர்வில் 89 மதிப்பெண் பெற்ற என்னால் 90 மதிப்பெண் பெற்று தேர்ச்சிபெற முடியவில்லை. எனவே, எனக்கு ஒரு மதிப்பெண் வழங்கி என்னை தேர்ச்சி பெற்றவனாக அறிவிக்க வேண்டும். அதுவரை ஒரு ஆசிரியர் பணியிடத்தை நிரப்பாமல் காலியாக வைத்திருக்க உத்தரவிட வேண்டும்' என்று கூறியிருந்தார். அட்வகேட் ஜெனரல் விளக்கம் இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு நீதிபதி எம்.வி.முரளிதரன், இதுதொடர்பாக அட்வகேட் ஜெனரல் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும், வக்கீல்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் ஆகியோரும் இந்த பாடல் எந்த மொழியில் முதலில் எழுதப்பட்டது? என்பதற்கு ஆதாரங்களுடன், இந்த ஐகோர்ட்டுக்கு உதவலாம் என்றும் உத்தரவிட்டார். இதையடுத்து இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அட்வகேட் ஜெனரல் ஆர்.முத்துகுமாரசாமி ஆஜராகி, 'வந்தே மாதரம் பாடல் வங்க மொழியில் எழுதப்பட்ட சமஸ்கிருத பாடல்' என்று விளக்கம் அளித்தார். ஐகோர்ட்டு வக்கீல்கள் எஸ்.சுஜாதா, ஏ.எஸ்.பிலால், அண்ணாத்துரை ஆகியோர் இது சமஸ்கிருத பாடல் அல்ல. வங்கமொழியில் எழுதப்பட்ட பாடல் என்று ஆதாரங்களுடன் வாதிட்டார்கள். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி எம்.வி.முரளிதரன்... DOWNLOAD
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஒரு நாள் வேலைநிறுத்தம் மத்திய அரசுக்கு இணையான ஊதியம் கோரி 22-ந் தேதி நடக்கிறது.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஒரு நாள் வேலைநிறுத்தம் மத்திய அரசுக்கு இணையான ஊதியம் கோரி 22-ந் தேதி நடக்கிறது | மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அடுத்த மாதம் 22-ந் தேதி ஒரு நாள் வேலைநிறுத்தம் செய்யப்போவதாக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்கள் இணைந்த 'ஜாக்டோ-ஜியோ' கூட்டமைப்பு புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்துசெய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டுவர வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகிறது. கோரிக்கைகளை நிறைவேற்றுவது தொடர்பாக ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பின் அவசர ஆலோசனை கூட்டம் தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர்கள் கழக அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்ட முடிவில் ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் ஜெ.கணேசன், பெ.இளங்கோவன் மற்றும் உயர்மட்டக்குழு உறுப்பினர் அ.மாயவன் ஆகியோர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்துசெய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். ஊதிய உயர்வு வழங்க தாமதமானால் 20 சதவீதம் இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும். ஊதிய முரண்பாடுகளை களையவேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராடி வருகிறோம். கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காக அரசு அமைத்துள்ள குழு தீர்வுகாணாமல் காலநீட்டிப்பு செய்து வருகிறது. இதை கண்டித்தும், கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் ஆகஸ்டு 5-ந் தேதி கோட்டையை நோக்கி பேரணியாக செல்ல முடிவு செய்துள்ளோம். அதைத்தொடர்ந்து 22-ந் தேதி ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தம் செய்ய இருக்கிறோம். அதன்பிறகும் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என்றால் செப்டம்பர் மாதம் 7-ந் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் செய்ய உள்ளோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

TUFIDCO RECRUITMENT 2017 | TUFIDCO RECRUITS COMPANY SECRETARY | NO OF POST 1 | LAST DATE 09..08.2017


>>>>>>>
§DATE OF NOTIFICATION20.07.2017
§EMPLOYMENT TYPE:Govt Job
§APPLICATION:OFFLINE
§WEBSITE:---
§NAME OF THE POST:COMPANY SECRETARY
§EDUCATIONAL QUALIFICATION:REFER PROSPECTUS
§VACANCIES:3
§SALARY:-
§SELECTION PROCEDURE:MERIT
§LAST DATE:09.08.2017
§DATE OF EXAMINATION:NIL
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE