Friday, 20 July 2018

அரசு பாட புத்தகங்களை தனியார் பள்ளிகள் பின்பற்றுகிறன: உதயச்சந்திரன்

''சி.பி.எஸ்.சி., பள்ளிகளும், தனியார் பள்ளிகளும், அரசு புத்தகங்களை பின்பற்றும் நிலைக்கு மாறிவிட்டன,'' என, பள்ளிக்கல்வி துறை செயலர் உதயச்சந்திரன் தெரிவித்தார். சேலம் மாவட்டம், ஓமலுாரில், பள்ளிக்கல்வித் துறை செயலர் உதயச்சந்திரன் தலைமையில் நேற்று, புதிய பாடத் திட்டம் குறித்து, ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், அவர் பேசியதாவது: வழக்கமாக பாட புத்தகங்கள் எழுதும் பணியை, ஆசிரியர்களும், ஆசிரியர் பயிற்றுனரும் சேர்ந்து செய்வர். இந்த முறை, இது மாற்றப்பட்டு, பாடப் புத்தகம் எழுதுவது, மக்கள் இயக்கமாக மாற்றப்பட்டுள்ளது.துவக்கப் பள்ளி ஆசிரியர்கள், குழந்தைகளை எளிதாக கையாளும் வகையில், தெரிந்த சொற்களை கொண்டு, அகர வரிசையில் பாடம் நடத்தும் வகையில், அமைக்கப்பட்டுள்ளது. ஒன்று முதல் எட்டு வரை பயிலும் மாணவர்கள், எதில், பலவீனமாக உள்ளனர் என்பதை ஆராய்ந்து, புதிய பாடத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.நீட் தேர்வில், பிளஸ் 1 பாடத்திலிருந்து, 50 சதவீதம் கேள்விகள் கேட்கப்படுகின்றன. இதில், 99 சதவீத கேள்விகள், நமது புத்தகத்திலிருந்து கேட்கப்பட்டுள்ளது. இதனால், சி.பி.எஸ்.சி., பள்ளிகளும், தனியார் பள்ளிகளும், அரசு புத்தகங்களை பின்பற்றும் நிலைக்கு மாறிவிட்டன.பிளஸ் 1 பாட புத்தகத்தில், அனைத்து பாட பிரிவினருக்குமான மேற்படிப்புகள் குறித்தும், அதை எங்கு படிக்கலாம் என்பதும் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. புதிய பாடத் திட்டத்தின் மூலம், அடுத்த நான்கு ஆண்டுகளில், தமிழக மாணவர்கள், அகில இந்திய போட்டி தேர்வுகளில், அதிக அளவில் பங்கேற்கும் வாய்ப்பு பெறுவர். மாணவர்களின் கனவுகளை நிறைவேற்றுவது, ஆசிரியர்கள் கையில் உள்ளது என்றார்.


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Monday, 16 July 2018

வேலை - கால அட்டவணை - 16 JULY 2018


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

விமான நிறுவனத்தில் அப்ரண்டிஸ் பயிற்சிப் பணி

விமான நிறுவனம் இந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட் எனப்படும் விமான நிறுவனம், இந்திய விமானப்படையின் கீழ் செயல்படுகிறது. தற்போது இந்த நிறுவனத்தில் அப்ரண்டிஸ் பயிற்சிப் பணிக்கு 61 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். எலக்ட்ரானிக்ஸ், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், சிவில், ஐ.டி., கம்ப்யூட்டர் சயின்ஸ் போன்ற என்ஜினீயரிங் டிப்ளமோ படித்தவர்கள் இந்த பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் 26 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் இது பற்றிய விவரங்களை www.halindia.com என்ற இணையதள பக்கத்தில் பார்த்துவிட்டு, 27-7-2018-ந் தேதிக்குள் சென்றடையும் வகையில் விண்ணப்பம் அனுப்ப வேண்டும்.


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

சென்ட்ரல் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் எனப்படும் பொதுத்துறை நிறுவனத்தில் உதவி பொது மேலாளர், கணக்கு அதிகாரி உள்ளிட்ட பணி

எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் சென்ட்ரல் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் எனப்படும் பொதுத்துறை நிறுவனத்தில் உதவி பொது மேலாளர், கணக்கு அதிகாரி உள்ளிட்ட பணிகளுக்கு 33 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். பி.இ., பி.டெக். மற்றும் சி.ஏ., ஐ.சி.டபுள்யு.ஏ., எம்.பி.ஏ. படித்தவர்களுக்கு பணிகள் உள்ளன. அதிகபட்சம் 50 வயதுடையவர்களுக்கும் பணிகள் உள்ளன. அந்தந்த பணிக்கான சரியான கல்வித்தகுதி, வயது வரம்பு உள்ளிட்ட முழுமையான விவரங்களை இணையதளத்தில் பார்த்துவிட்டு விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பம் 21-7-2018-ந் தேதி செயல்பாட்டிற்கு வரும். 11-8-2018-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். விரிவான விவரங்களை https://hr2016.celsolar.in என்ற இணையதள பக்கத்தில் பார்க்கலாம்.


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

பெல் நிறுவனத்தில் வேலை

பாரத மிகுமின் நிறுவனம் சுருக்கமாக பெல் (BHEL) எனப்படுகிறது. தமிழகத்தின் திருச்சி உள்பட நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் இதன் கிளை நிறுவனங்கள் செயல்படுகின்றன. தற்போது பெங்களூருவில் உள்ள பெல் கிளைக்கு புராஜெக்ட் என்ஜினீயர் மற்றும் சூப்பிரவைசர் பணிக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 74 பணியிடங்கள் உள்ளன. புராஜெக்ட் என்ஜினீயர் பணிக்கு 40 இடங்களும், சூப்பிரவைசர் பணிக்கு 34 இடங்களும் உள்ளது குறிப்பிடத்தக்கது. இட ஒதுக்கீடு அடிப்படையிலான பணியிட விவரத்தை இணையதளத்தில் பார்க்கலாம். விண்ணப்பதாரர்கள் 1-7-2018-ந் தேதியில் 33 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், டெலிகம்யூனிகேசன், இன்ஸ்ட்ருமென்டேசன், சிவில், மெக்கானிக்கல் போன்ற பிரிவில் பி.இ., பி.டெக் படிப்பை 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். நேர்காணல் நடத்தப்பட்டு தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள். விருப்பமுள்ளவர்கள் ரூ.200 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் இந்த கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. இணையதளம் வழியே விண்ணப்பம் சமர்ப்பிக்க கடைசி நாள் 21-7-2018-ந் தேதியாகும். பின்னர் நகல் விண்ணப்பத்தை தேவையான சான்றுகளுடன் 26-7-2018-ந் தேதிக்குள் குறிப்பிட்ட முகவரியை சென்றடையும்படி அனுப்ப வேண்டும். விண்ணப்பிக்கவும், www.bheledn.com என்ற இணையதள பக்கத்தைப் பார்க்கலாம்.


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

மருத்துவ துறையில் மருந்தாளுனர் பணிகள்

தமிழக மருத்துவ பணிகள் தேர்வு வாரியமான எம்.ஆர்.பி. அமைப்பு, பார்மசிஸ்ட் (மருந்தாளுனர்) பணியிடங்களை நிரப்ப விண்ணப்பம் கோரி உள்ளது. மொத்தம் 229 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் சித்தா பிரிவில் 148 இடங்களும், ஆயுர்வேத பிரிவில் 38 இடங்களும், ஓமியோபதி பிரிவில் 23 இடங்களும், யுனானி பிரிவில் 20 இடங்களும் உள்ளன. இவை தற்காலிக பணியிடங்களாகும். பார்மசிஸ்ட் டிப்ளமோ படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். சில பிரிவு பணிகளுக்கு குறிப்பிட்ட பணி அனுபவம் கேட்கப்பட்டள்ளது. விண்ணப்பதாரர்கள் 1-7-2018-ந் தேதியில் 57 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் ரூ.500 கட்டணம் செலுத்தி இணையதள விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். 30-7-2018-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் http://www.mrb.tn.gov.in/ என்ற இணையதள பக்கத்தைப் பார்க்கலாம்.


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

தமிழக காவல் துறையில் 309 சப்-இன்ஸ்பெக்டர் பணிகள்

தமிழக சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் சுருக்கமாக TNUSRB என அழைக்கப்படுகிறது. தற்போது இந்த அமைப்பு காவல்துறையில் ஏற்பட்டுள்ள சப்-இன்ஸ்பெக்டா் (தொழில்நுட்பம்) பணியிடங்களுக்கு விண்ணப்பம் கோரி உள்ளது. மொத்தம் 309 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்கள் வருமாறு... விண்ணப்பதாரர்கள் 1-7-2018-ந் தேதியில் 20 முதல் 28 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வுகள் அனுமதிக்கப்படும். எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேசன் பிரிவில் டிப்ளமோ என்ஜினீயரிங்/ தொழில்நுட்பம் படித்தவர்கள் வி்ண்ணப்பிக்க தகுதியானவர்கள். விருப்பமுள்ளவர்கள் ரூ.500 கட்டணம் செலுத்தி இணையதள விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும். இணையதள விண்ணப்பம் சமர்ப்பிக்க கடைசிநாள் 10-8-2018-ந் தேதியாகும். விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் http://www.tnusrbonline.org/ என்ற இணையதள பக்கத்தைப் பார்க்கலாம்.


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

சென்னை ரெயில்பெட்டி தொழிற் சாலையில் பயிற்சிப் பணிக்கு 707 பேர் தேவை.

ரெயில்பெட்டி தொழிற்சாலையில் 707 பயிற்சிப் பணிகள் சென்னை ரெயில்பெட்டி தொழிற் சாலையில் பயிற்சிப் பணிக்கு 707 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:- சென்னை பெரம்பூரில் ஐ.சி.எப். எனப்படும் ரெயில்பெட்டி தொழிற்சாலை செயல்படுகிறது. தற்போது இந்த நிறுவனத்தில் அப்ரண்டிஸ் பயிற்சிப் பணியிடங்களுக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. மொத்தம் 707 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். பணிப்பிரிவு வாரியாக உள்ள இடங்கள் விவரம் : கார்பெண்டர்-54, எலக்ட்ரீசியன் -116, பிட்டர் -230, மெஷினிஸ்ட் - 48, பெயிண்டர் - 30, வெல்டர் - 219, எம்.எல்.டி. ரேடியாலஜி, எம்.எல்.டி. பேதாலஜி 4, பி.ஏ.எஸ்.ஏ.ஏ. -2. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி அறிவோம்... வயது வரம்பு விண்ணப்பதாரர்கள் 1-10-2018-ந் தேதியில் 15 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 24 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும். கல்வித்தகுதி 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு படித்தவர்கள் இந்த பயிற்சி பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். சில பணிகளுக்கு என்.டி.சி.,/ ஐ.டி.ஐ. பயிற்சி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். தேர்வு செய்யும் முறை கல்வியில் பெற்ற மதிப்பெண் சதவீதம், உடல்தகுதி, அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். விண்ணப்பிக்கும் முறை விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணைய தளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 8-8-2018-ந் தேதியாகும். தேவையான சான்றிதழ்கள், புகைப்படம், கையொப்பத்தை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும் என்பதால் இதற்கான ஏற்பாடுகளை முன்கூட்டியே செய்து கொள்ளவும். தகவல்கள் அனைத்தும் குறிப்பிட்ட செல்போன் எண்கள் மற்றும் மெயில் முகவரி மூலமே நடைபெறும். இது பற்றிய விவரங்களை www.icf.indianrailways.gov.in என்ற இணையதள பக்கத்தைப் பார்க்கவும்,


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் அப்ரண்டிஸ் பயிற்சிப் பணிகளுக்கு 765 பேர் தேர்வு

நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் அப்ரண்டிஸ் பணிகள் நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் அப்ரண்டிஸ் பயிற்சிப் பணிகளுக்கு 765 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இது பற்றிய விவரம் வருமாறு:- நெய்வேலி நிலக்கரி நிறுவனம் சுருக்கமாக என்.எல்.சி. என அழைக்கப்படுகிறது. மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான இது அவ்வப்போது ஏராளமான இளைஞர்களுக்கு பயிற்சிப் பணிவாய்ப்பை வழங்குவது உண்டு. தற்போது அப்ரண்டிஸ் பயிற்சிப் பணிக்கு 765 பேரை தேர்வு செய்ய அறிவிப்பு வெளியாகி உள்ளது. பிரிவு வாரியான பணியிடங்கள் விவரம் : பிட்டர் - 120, டர்னர் -45, மெக்கானிக் -130, எலக்ட்ரீசியன் - 100, வயர்மேன் - 120, மெக்கானிக் டீசல் -25, மெக்கானிக் டிராக்டர் -25, கார்பெண்டர்- 10, பிளம்பர் -20, வெல்டர் - 70, பி.ஏ.எஸ்.ஏ.ஏ. -40, அக்கவுண்டன்ட் - 20, டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் - 20, அசிஸ்டன்ட் - 20 இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்க்கலாம். கல்வித்தகுதி பணியிடங்கள் உள்ள பிரிவில் ஐ.டி.ஐ. படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். அக்கவுண்டன்ட் பணிக்கு பி.காம். பட்டதாரிகளும், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் பணிக்கு பி.எஸ்சி. கணினி அறிவியல் பட்டதாரிகளும், எச்.ஆர். அசிஸ்டன்ட் பணிக்கு பி.பி.ஏ. பட்டதாரிகளும் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு விண்ணப்பதாரர்கள் 1-10-2018-ந் தேதியில் 14 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும். விண்ணப்பிக்கும் முறை விருப்பமும், தகுதியும் இருப்பவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பம் இணைய தனத்தில் இன்று செயல்பாட்டிற்கு வருகிறது. 25-7-2018-ந் தேதி விண்ணப்பிக்க கடைசிநாளாகும். பின்னர் பூர்த்தியான விண்ணப்பத்தை நகல் எடுத்து, 30-7-2018-ந் தேதிக்குள் குறிப்பிட்ட முகவரிக்கு சென்றடையும்படி அனுப்ப வேண்டும். விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.nlcindia.com என்ற இணையதள முகவரியைப் பார்க்கவும்.


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

மத்திய தாதுவள நிறுவனத்தில் 245 பணியிடங்கள்

தாது வள நிறுவனத்தில் 245 பணியிடங்கள் மத்திய தாதுவள நிறுவனத்தில் 245 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இது பற்றிய விவரம் வருமாறு:- தாதுவள ஆராய்ச்சி கழக நிறுவனம் சுருக்கமாக எம்.இ.சி.எல். (MECL) என்று அழைக்கப்படுகிறது. பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான இந்த நிறுவனத்தில் தற்போது டெபுடி ஜெனரல் மேனேஜர், மேனேஜர், அசிஸ்டன்ட், மெக்கானிக், டிரைவர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு 245 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் அதிகபட்சமாக டெக்னீசியன் டிரிலிங் பணிக்கு 41 இடங்களும், மெட்டீரியல் அசிஸ்டன்ட் பணிக்கு 18 இடங்களும், அசிஸ்டன்ட் (எச்.ஆர்.) பணிக்கு 29 இடங்களும், டிரைவர் பணிக்கு 30 இடங்களும் உள்ளன. இதர பணிகளுக்கான காலியிட விவரங்களை இணையதளத்தில் பார்க்கலாம். இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்ப்போம்... வயது வரம்பு : ஒவ்வொரு பணிக்கும் வயது வரம்பு வேறுபடுகிறது. அதிகாரி தரத்திலான பணிகளுக்கு 40 முதல் 50 வயதுடையவர்களுக்கு பணிகள் உள்ளன. அசிஸ்டன்ட் உள்ளிட்ட அலுவலக பணிகளுக்கு 30 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மாற்றுத்திறனாளிகள், முன்னாள் படைவீரர்களுக்கு வயது வரம்பில் அரசு விதிகளின்படி தளர்வு அனுமதிக்கப் படுகிறது. கல்வித்தகுதி சி.ஏ., ஐ.சி.டபுள்யு.ஏ., பி.இ., பி.டெக் போன்ற என்ஜினீயரிங்-தொழில்நுட்ப படிப்புகள், எம்.எஸ்சி., எம்.டெக். படித்தவர்கள் அதிகாரி தரத்திலான பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். இளநிலை பட்டப்படிப்புகள், டிப்ளமோ என்ஜினீயரிங் படிப்புகள், ஐ.டி.ஐ., தட்டச்சு தெரிந்தவர்களுக்கு அலுவலக பணியிடங்களில் வாய்ப்புகள் உள்ளன. ஒவ்வொரு பணிக்குமான சரியான வயது வரம்பு, கல்வித்தகுதி, பணியிட விவரங்களை இணையதளத்தில் பார்க்கலாம். விண்ணப்பிக்கும் முறை விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பப்பதிவு இன்று (16-7-2018) தொடங்குகிறது. விண்ணப்பிக்க கடைசிநாள் 16-8-2018-ந் தேதியாகும். விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.mecl.co.in என்ற இணையதள பக்கத்தைப் பார்க்கலாம்.


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

என்.சி.சி. வீரர்கள் ராணுவத்தில் சேர்ப்பு

என்.சி.சி. வீரர்கள் ராணுவத்தில் சேர்ப்பு ராணுவத்தில் பயிற்சியுடன் கூடிய பணிக்கு என்.சி.சி. வீரர்கள் சேர்க்கப்படுகிறார்கள். இது பற்றிய விவரம் வருமாறு:- இந்திய ராணுவம் நாட்டின் பாதுகாப்பு அரணாக விளங்கி வருகிறது. பல்வேறு சிறப்பு பயிற்சிகளின் அடிப்படையில் தகுதியான இளைஞர்கள் ராணுவத்தில் சேர்க்கப்பட்டு பயிற்சிக்குப் பின் பணி நியமனம் செய்யப்பட்டு வருகிறார்கள். தற்போது என்.சி.சி. 45-வது சிறப்பு நுழைவின் அடிப்படையில் பட்டப்படிப்பு படித்த என்.சி.சி. வீரர்களை ராணுவத்தில் சேர்க்க அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 55 பேர் சேர்க்கப்படுகிறார்கள். இதில் ஆண்கள் 50 பேர், பெண்கள் 5 பேர். இந்திய குடியுரிமை பெற்ற, திருமணமான மற்றும் திருமணமாகாத ஆண்கள், திருமணமாகாத பெண்கள் இந்த பயிற்சி யில் சேரலாம். இதில் சேருவதற்கு விண்ணப்பதாரர் பெற்றிருக்க வேண்டிய இதர தகுதி விவரங்கள் கீழே... வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 19 முதல் 25 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அதாவது 2-1-1994 மற்றும் 1-1-2000 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்திருக்க வேண்டும். கல்வித் தகுதி: அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் குறைந்தபட்சம் ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப்படிப்பை 50 சதவீத மதிப்பெண்களுடன் நிறைவு செய்திருக்க வேண்டும். அத்துடன் என்.சி.சி. பயிற்சியில் “சி” சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். பட்டப்படிப்பில் இறுதியாண்டு படித்துக் கொண்டிருப்பவர்களும் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். இவர்கள் முதல் 2 வருட படிப்பில் 50 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். தேர்வு செய்யும் முறை: என்.சி.சி. பயிற்சியில் பெற்றிருக்கும் தகுதியின் அடிப்படையில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலானவர்கள் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். அவர்கள் ஸ்டேஜ்-1, ஸ்டேஜ்-2 எனும் இரு நிலைகளில் தேர்வுக்கு உட்படுத்தப்படுவார்கள். இதில் குழு தேர்வு, உளவியல் தேர்வு, நேர்காணல் ஆகியவை அடங்கும். இறுதியாக மருத்துவ பரிசோதனை நடைபெறும். அனைத்திலும் தேர்ச்சி பெறுபவர்கள் பயிற்சியில் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள். அவர்கள் 49 வார கால பயிற்சிக்கு உட்படுத்தப்படுவார்கள். பயிற்சியில் தேர்ச்சி பெறுபவர்கள் லெப்டினன்ட் தரத்திலான அதிகாரி பணியில் நியமனம் பெறலாம். விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 2-8-2018-ந் தேதியாகும். விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.joinindianarmy.nic.in என்ற இணையதள முகவரியை பார்க்கலாம்.


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Friday, 13 July 2018

அரசுப் பதவி உயர்வுகளில் எஸ்சி, எஸ்டிக்கு இடஒதுக்கீடு! தடை விதிக்க முடியாது - உச்ச நீதிமன்றம்.

அரசுப் பதவி உயர்வுகளில் எஸ்சி மற்றும் எஸ்டிக்கான இட ஒதுக்கீட்டில் கீரிமி லேயர் வரையறையைப் பொருத்துவதற்கு எதிராக இடைக்காலத் தடை விதிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு ஒன்றின் விசாரணையில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையில் நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர் மற்றும் டி.ஒய்.சந்திரசௌத் ஆகியோர் கொண்ட அமர்வானது தனது தீர்ப்பில் கூறியதாவது: 2006இல் நாகராஜ் எதிர் இந்திய அரசு என்ற வழக்கில், கீரிமி லேயா் வரையரையை அரசுப் பதவி உயர்வுகளில் எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவினருக்குப் பொருத்துவது குறித்துத் தீர்ப்பு அளிக்கப்பட்டது. அந்தத் தீர்ப்புக்கு எதிராக இடைக்காலத் தடை விதிக்க முடியாது என்று கூறியுள்ளது. ஆனால், இந்தப் பிரச்சினையை ஏழு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கொண்ட அரசியல் சட்ட அமர்வு விசாரிக்கும் என்றும் கூறியுள்ளது. முன்னதாக அரசின் அட்டார்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் இப்பிரச்சினையை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏழு பேர் கொண்ட அரசியல் சட்ட அமர்வு விசாரிக்க வேண்டும். ஏனெனில் ரயில்வேத் துறையிலும் பல்வேறு அரசின் சேவைத் துறைகளிலும் இப்பிரச்சினை குறித்து வேறுபட்டநீதிமன்ற தீர்ப்புகள் வந்துள்ளதால் குழப்பம் நிலவுகிறது. அதைத் தீர்த்து வைக்க அரசியல் சட்ட அமர்வு விசாரிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அவருக்குப் பதிலளிக்கும் விதமாக, தற்போது ஓர் அரசியல் சட்ட அமா்வானது பல்வேறு பிரச்சினைகளை விசாரித்துக் கொண்டிருக்கிறது. அதனால் இந்த வழக்கை உடனே எடுத்துக்கொள்ள முடியாது. ஆகஸ்ட் முதல் வாரத்தில் இந்த வழக்கின் விசாரணையை அரசியல் சட்ட அமர்வு எடுத்துக்கொள்ளும் என்று தெரிவித்தனர்.


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

காலி பணியிடங்களுக்கு தகுந்தபடி, ஆசிரியர்கள் நியமனம் நடைபெறும் - சிறப்பு ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு நடத்தி 15 நாட்களுக்குள் பணி நியமனம்

தமிழக பள்ளிக்கல்வித்துறையில் மேற்கொள்ளப்பட்டுள்ள நிர்வாக மாற்றங்கள் தொடர்பாக, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை ஆகிய 5 மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கான நிர்வாக பயிற்சி முகாம் திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசியதாவது: தமிழக அரசு பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.27,205 கோடி ஒதுக்கியிருக்கிறது. தமிழகம் முழுவதும் 3 ஆயிரம் ஸ்மார்ட் வகுப்பறைகள் அடுத்த மாதம் தொடங்கப்படும். அடுத்த கல்வி ஆண்டில் அனைத்து வகுப்புகளுக்கும் புதிய பாடத்திட்டம் அமல்படுத்தப்படும். அப்போது தமிழக மாணவர்களின் கல்வித்தரம் உயரும். 9 முதல் பிளஸ் 2 வரையிலான வகுப்பு மாணவர்களுக்கு கம்ப்யூட்டர் பயிற்சி அளிக்க ரூ.500 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 36 பள்ளிகளில் ஒரு மாணவர்கூட இல்லை. 842 பள்ளிகளில் 10 மாணவர்களுக்கும் குறைவாக உள்ளனர். எனவே, மாணவர் எண்ணிக்கை அடிப்படையில் ஆசிரியர்கள் மாற்றப்பட்டுள்ளனர். பள்ளிகளில் உள்ள கழிப்பிடங்களை சுத்தம் செய்வதற்காக, ஜெர்மன் நாட்டில் இருந்து ஆயிரம் நவீன இயந்திரங்கள் வாங்கப்படுகிறது. அதன்மூலம் 20 ஆயிரம் பள்ளிகளை சுத்தம் செய்ய முடியும். அதன் விபரங்கள் உடனுக்குடன் எங்களுக்கு வந்துசேரும். நீட் தேர்வை தமிழில் எழுதிய மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண் வழங்க மதுரை ஐகோர்ட் சிறப்பான உத்தரவிட்டிருக்கிறது. இதுதொடர்பாக, தமிழக முதல்வர் மத்திய அரசின் கவனத்துக்கு எடுத்து செல்வார். சிறப்பு ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு நடத்தி 15 நாட்களுக்குள் பணி நியமனம் வழங்கப்படும். காலி பணியிடங்களுக்கு தகுந்தபடி, ஆசிரியர்கள் நியமனம் நடைபெறும். 2012-13, 2013-14ம் ஆண்டுகளில் டெட் தேர்ச்சி பெற்ற 22 ஆயிரம் பேருக்கு பணி வழங்கப்பட்டுள்ளது. மேலும் 82 ஆயிரம் பேர் காத்திருக்கின்றனர். அவர்களுக்கு 7 ஆண்டுகள் வரை வாய்ப்பு இருக்கிறது. வெயிட்டேஜ் மதிப்பெண் முறை இருக்காது. டெட் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் பணி வழங்கப்படும். வேலைவாய்ப்பு அலுவலக பதிவுக்கு முன்னுரிமை கிடையாது இவ்வாறு அவர் பேசினார்.


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

அரசு உதவி பெறும் பள்ளிகளில் உபரி பணியிடங்களை, கணினிஆசிரியர் பணியிடமாக மாற்ற வேண்டும்.

அரசுப்பள்ளிகளில் பாடத்திட்டங்கள் மேம்படுத்தப்பட்டு வரும் நிலையில், அதர பழசான கம்ப்யூட்டர்களால் கற்பித்தல் பணி போராட்டமாக இருப்பதாக ஆசிரியர்கள் புலம்புகின்றனர். தமிழகத்தில் பல ஆண்டுகளுக்கு பின் பாடத்திட்டங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. முதல் கட்டமாக 1, 6, 9 மற்றும் பிளஸ் 1 பாடத்திட்டங்கள் மாற்றப்பட்டன. கற்பித்தலில் புதுமை ஏற்படுத்தும் வகையில் பல அம்சங்கள் பாடத்திட்டத்தில் புகுத்தப்பட்டுள்ளன.குறிப்பாக மேல்நிலை கல்வியில் கணினி பாடம் அனைத்து பாடப் பிரிவிற்கும் கொண்டு வரப்பட்டுள்ளது. இதனால் வாரத்தில் ஒரு கணினி ஆசிரியர் 50க்கும் மேற்பட்ட பாடவேளைகளை கையாள வேண்டியுள்ளது. அரசு பள்ளிகளுக்கு 12 ஆண்டுகளுக்கு முன் வழங்கப்பட்ட கம்ப்யூட்டர்கள்தான் தற்போதும் பயன்பாட்டில் உள்ளன. இவற்றில் 'அப்டேட் வெர்ஷனை' பயன்படுத்த முடியவில்லை. அடிக்கடி பழுதடைகின்றன. கம்ப்யூட்டர் பாடம் நடத்துவது பெரும் போராட்டமாக உள்ளதாக ஆசிரியர்கள் புலம்புகின்றனர். தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலை பள்ளி கணினி ஆசிரியர்கள் சங்க மாநில தலைவர் சங்கரலிங்கம் கூறியதாவது: ஒரு பள்ளிக்குஒரு ஆசிரியர் என்பதால் கம்ப்யூட்டர் ஆசிரியர், வாரத்தில் குறைந்தபட்சம் 40 பாடவேளை கையாள வேண்டியுள்ளது. கூடுதல் ஆசிரியர் நியமித்தால்தான் தரமான கற்பித்தல் சாத்தியமாகும். 2005-06ல் 1880 அரசு பள்ளிகளுக்கு தலா 9 கம்ப்யூட்டர்கள் வழங்கப்பட்டன. 'அப்டேட்' இல்லாத அந்த கம்ப்யூட்டர்களையே ஆசிரியர் பயன்படுத்துகின்றனர். அடிக்கடி பழுதாவதால் கற்பித்தல் பணி சவாலாகிறது. நவீன தரத்துடன் கணினி ஆய்வகம் ஏற்படுத்த வேண்டும். அரசு உதவி பெறும் பள்ளிகளில் உபரி பணியிடங்களை, கணினிஆசிரியர் பணியிடமாக மாற்ற வேண்டும், என்றார்.


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

அனைத்து வகை பள்ளிகளிலும், ஜூலை 15 - கல்வி வளர்ச்சி நாள் கொண்டாட உத்தரவு!

தமிழக பள்ளிகளில், 15ம் தேதி கல்வி வளர்ச்சி நாள் கொண்டாட, உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழக முன்னாள் முதல்வர், மறைந்த காமராஜரின் பிறந்த நாள், வரும், 15ம் தேதி, அரசின் சார்பில் கொண்டாப்படுகிறது. இந்த நாளை, கல்வி வளர்ச்சி நாளாக கடைபிடிக்க, தமிழக அரசுஉத்தர விட்டுள்ளது. இதன்படி, அனைத்து வகை பள்ளிகளிலும், அன்று, காமராஜரின் வரலாறு, அவரது திட்டங்கள், சாதனைகள், கல்விக்கு அவர் ஆற்றிய பணிகள் குறித்து, மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த, ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.பள்ளிகளில், சிறப்பு நிகழ்ச்சிகள், போட்டிகள் நடத்தி,காமராஜர் பெயரில் பரிசு வழங்கவும், உத்தரவிடப்பட்டு உள்ளது.


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

தேசிய ஆசிரியர் விருதுக்கு விண்ணப்பிக்க 2 நாள் அவகாசம்!

தேசிய ஆசிரியர் விருதுக்கு விண்ணப்பிக்க, இன்னும் இரண்டு நாட்கள் மட்டும் அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது. மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் சார்பில், ஆசிரியர்களுக்கான தேசிய விருது, ஜூனில் அறிவிக்கப்பட்டது. 'இந்த விருதுக்கு, ஜூன், 15 முதல், 30 வரை, நேரடியாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்' என, மத்திய அரசு அறிவித்தது. ஆனால், எதிர்பார்ப்பை விட குறைந்த அளவு ஆசிரியர்களே விண்ணப்பித்ததால், கூடுதலாக, 15 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டது. இதன்படி, வரும், 15ம் தேதிக்குள், தேசிய விருதுக்கு விண்ணப்பிக்க வேண்டும். 'இந்த விண்ணப்பங்களை மாவட்ட பரிசீலனை குழுவினர் ஆய்வு செய்து, வரும், 16ம் தேதி முதல், 24ம் தேதிக்குள், மாநில கமிட்டியிடம் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். 'மாநில கமிட்டியினர், ஜூலை, 31க்குள், மத்திய அரசின் தேசிய விருது பரிசீலனை கமிட்டிக்கு பரிந்துரைக்க வேண்டும்' என, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அறிவித்துள்ளது.


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

வரும் கல்வி ஆண்டில் இருந்து 11ம் வகுப்பு மாணவர்களுக்கு லேப்டாப், சைக்கிள் வழங்கப்படும்: அடுத்த வாரம் 3,000 பள்ளிகளில் 'ஸ்மார்ட் கிளாஸ்' துவக்கம்': அமைச்சர் செங்கோட்டையன்

தமிழகம் முழுவதும் இந்த ஆண்டு முதல் பிளஸ்-2 தேர்வு முடிவு வெளியான 15 நாளில், தனியார் கல்லூரிகளில் உணவு, இருப்பிட வசதியுடன் ஆண்டுதோறும் 25,000 மாணவர்களுக்கு ஆடிட்டிங் பயிற்சி (சி.ஏ) அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விரைவில் அனைத்து பள்ளிகளிலும் பயோமெட்ரிக் கருவி பொருத்தப்படும் வரும் கல்வி ஆண்டில் இருந்து 11ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு அரசின் இலவச லேப்டாப் மற்றும் சைக்கிள் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். ''தமிழகத்தில், அடுத்த வாரம் முதல், 3,000 அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் துவங்க உள்ளது,'' என, அமைச்சர் செங்கோட்டையன் பேசினார். திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த, தளரப்பாடி, சகாயபுரம், பூமாட்டு காலனி ஆகிய, ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி கட்டடம், சமையற்கூடம், கழிவறை மற்றும் ஆரணியில், ஒரு கோடியே, 61 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள பள்ளிக் கட்டடம் ஆகியவற்றை, அமைச்சர் செங்கோட்டையன் துவக்கி வைத்தார். இதை தொடர்ந்து, திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில், தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பாக, சேலம், வேலூர், திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஆகிய, ஐந்து மாவட்டங்களை சேர்ந்த, 21 பேருக்கு கனவு ஆசிரியர் விருதுகளும், 13 பள்ளிகளுக்கு, புதுமைப் பள்ளி விருதுகளும் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில், அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது: பள்ளிக்கல்வித்துறைக்கு, 27 ஆயிரத்து, 200 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில், 68 கல்வி மாவட்டத்தை, 120 கல்வி மாவட்டமாக மாற்றியமைத்து, 892 வட்டார கல்வி அலுவலர்கள் நியமிக்கப்பட்டு, கூடுதல் அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு வட்டார கல்வி அலுவலர், 35 முதல் 40 பள்ளிகள் வரை ஆய்வு செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில், 3,000 பள்ளிகளில் அடுத்த வாரம் முதல், ஸ்மார்ட் வகுப்பு துவங்கப்பட உள்ளது. ஒன்பது முதல் பிளஸ் 2 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, 500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் முற்றிலும் கணினி மயமாக்கப்படுகிறது. இவ்வாறு, அவர் பேசினார். கலெக்டர் கந்தசாமி, அமைச்சர் ராமச்சந்திரன், பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் பரிதீப்யாதவ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

பொறியியல் கலந்தாய்வை தாமதமாக தொடங்க நீதிமன்றத்தில் அனுமதி கோருவோம்: உயர்கல்வித் துறை அமைச்சர்.

மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை நிறுத்திவைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால், பொறியியல் பொதுப் பிரிவு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை காலதாமதமாக தொடங்க நீதிமன்றத்திடம் அனுமதி கோரவுள்ளதாக உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்தார். திருநெல்வேலியில் மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற பல்வேறு கட்டட திறப்பு விழா நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், செய்தியாள்களிடம் மேலும் கூறியதாவது: கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்துக்கு கட்டமைப்பு நிதியாக ரூ.20 கோடிக்கு மேல் ஒதுக்கப்பட்டு கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. இப்போது ரூ. 1.7 கோடி அளவிலான பல்வேறு பணிகள் நிறைவு பெற்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. வரும் 18ஆம் தேதி சுந்தரனார் பல்கலைக்கழகத்துக்கு தேசிய தர நிர்ணயக் கமிட்டி (நாக்) வருகை தரவுள்ளது. இப்பல்கலைக்கழகத்துக்கு ஏ++ தர அந்தஸ்தை பெறுவதற்கான அனைத்து கட்டமைப்பு வசதிகளும் மேம்படுத்தப்பட்டுள்ளன. பொறியியல் கலந்தாய்வு: நிகழாண்டு புதிதாக பொறியியல் கல்லூரிகள் உருவாக்கப்படவில்லை. பொறியியல் மாணவர் சேர்க்கைக்காக 509 கல்லூரிகள் பதிவு செய்துள்ளன. அந்தக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கான 1 லட்சத்து 78 ஆயிரத்து 139 இடங்களுக்கு கலந்தாய்வு நடைபெறவுள்ளது. பொறியியல் கலந்தாய்வுக்காக ஆன்லைன் மூலமாக 1 லட்சத்து 59 ஆயிரத்து 631 பேர் பதிவு செய்துள்ளனர். சான்றிதழ் சரிபார்ப்புக்கு பிறகு 1 லட்சத்து 4 ஆயிரத்து 453 பேர் கலந்தாய்வில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர். ஏற்கெனவே இருந்த 26 பொறியியல் கல்லூரிகள் வேறு கல்லூரிகளாக மாற்றப்படவுள்ளன. அதனால், அந்தக் கல்லூரிகளுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறவில்லை. மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு தள்ளிப்போகும் காரணத்தால், பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை தாமதமாக தொடங்குவதற்கு அனுமதி கோரி நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை மனு தாக்கல் செய்யவுள்ளோம். நீதிமன்றத்தின் அனுமதிப்படி கலந்தாய்வு நடத்தப்படும். நிகழாண்டு புதிதாக கலை, அறிவியல் கல்லூரி தொடங்குவதற்கான வாய்ப்பு இல்லை. இந்த ஆண்டு 41 உறுப்புக் கல்லூரிகள், அரசுக் கல்லூரிகளாக மாற்றப்பட்டுள்ளன. இதேபோல் 264 புதிய பாடப் பிரிவுகளை வழங்கியிருக்கிறோம். உயர்கல்வித் துறையில் இந்திய அளவில் மாணவர் சேர்க்கை விகிதம் 25.2 சதவீதமாக இருந்தாலும்கூட, தமிழகத்தில் மாணவர் சேர்க்கை 46.9 சதவீதமாக உள்ளது. இதன்மூலம் இந்தியாவுக்கே வழிகாட்டும் வகையில் தமிழக மாணவர்கள் முதலிடத்தில் உள்ளனர். வரும் 2020இல் 30 சதவீத மாணவர் சேர்க்கைக்கு மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. ஆனால் அதை நாம் இப்போதே தாண்டிவிட்டோம். முறைகேடு இல்லை: பல்கலைக்கழகத்தில் ஊழல் நடைபெறுவதாகக் கூறப்படுவது தவறான தகவல். இந்தியாவே திரும்பிப் பார்க்கும் வகையில் தமிழகம் வளர்ந்திருக்கிறது. அதற்கு அவப்பெயர் ஏற்படுத்தும் நோக்கில் தவறான தகவல் பரப்பப்படுகிறது. தவறு செய்பவர்களை கடுமையாக தண்டிக்கும் வகையில் தமிழக அரசு செயல்பட்டு வருகிறது என்றார்.


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

வேளாண் கலந்தாய்வில் அனைத்து இடங்களும் நிரம்பின: 19-ஆம் தேதி முதல் சான்றிதழ் சரிபார்ப்பு.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக மாணவர் சேர்க்கைக்காக நடைபெற்ற ஆன்லைன் கலந்தாய்வில் அனைத்து இடங்களும் நிரம்பியிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சான்றிதழ் சரிபார்ப்பு வரும் 19ஆம் தேதி தொடங்குகிறது. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் 14 உறுப்பு, 26 இணைப்புக் கல்லூரிகளில் உள்ள வேளாண்மை, தோட்டக் கலை, வனவியல், உணவு - ஊட்டச்சத்து அறிவியல் உள்ளிட்ட 12 பட்டப் படிப்புகளில் உள்ள 3,422 இடங்களுக்கு 2018-19ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைமுறைகள் கடந்த 2 மாதங்களாக நடைபெற்று வருகின்றன. சிறப்புப் பிரிவினர் உள்ளிட்ட பிற ஒதுக்கீடுகளுக்கான இடங்கள் தவிர 2,593 இடங்களை ஆன்லைன் கலந்தாய்வு மூலம் நிரப்ப முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து கடந்த 9ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை ஆன்லைன் கலந்தாய்வு நடைபெற்றது. கலந்தாய்வுக்கு உரிய கட்டணம் செலுத்தி 8,986 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்திருந்தனர். இவர்களில் 5,337 பேர் கலந்தாய்வில் பங்கேற்றுள்ளனர். இவர்கள் தங்களுக்கான முதல் மூன்று விருப்பப் பாடங்களைத் தேர்வு செய்துள்ளனர். முதல் 2,593 பேரைத் தவிர மற்ற மாணவர்கள் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர். யார், யார் எந்தெந்தப் பாடங்களுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர், யாரெல்லாம் காத்திருப்போர் பட்டியலில் உள்ளனர் என்ற விவரங்கள் பல்கலைக்கழக இணையதளத்தில் வியாழக்கிழமை வெளியிடப்பட்டது. மாணவர்கள் தங்களுக்கு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டதற்கான கடிதத்தை ஆன்லைன் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி மாணவர்கள் கடிதங்களை பதிவிறக்கம் செய்து வருகின்றனர். சேர்க்கைக் கட்டணமாக ரூ. 20 ஆயிரம் செலுத்த வேண்டும். அதன் பிறகு ஜூலை 19ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை நடைபெறும் சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்று தங்களிடம் உள்ள அனைத்து சான்றிதழ்களையும் காண்பிக்க வேண்டும். கட்டணம் செலுத்தாத, சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்காதவர்கள் யாரேனும் இருந்தால் அவர்களுக்கு அடுத்த இடத்தில் இருப்பவர்கள் அந்த இடத்தைப் பூர்த்தி செய்து கொள்வார்கள். இவ்வாறு தரவரிசைப் பட்டியலில் யாரெல்லாம் முன்னேறிச் செல்ல இருக்கின்றனர் என்ற விவரம் வரும் 21ஆம் தேதி தெரிவிக்கப்படும் என்று பல்கலைக்கழக முதன்மையர் (வேளாண்மை) மகிமை ராஜா தெரிவித்துள்ளார்


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

தமிழில் நீட் தேர்வெழுதியோருக்கு கருணை மதிப்பெண் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு: சிபிஎஸ்இ திட்டம்

தமிழில் நீட் தேர்வெழுதியோருக்கு கருணை மதிப்பெண் வழங்குமாறு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய சிபிஎஸ்இ திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நீட் தேர்வில், ஆங்கில பதிப்பில் இருந்து மொழிபெயர்க்கப்பட்ட தமிழ் கேள்விகளில் பிழை இருந்ததாக தொடரப்பட்ட வழக்கில் கடந்த 10-ஆம் தேதி உயர் நீதிமன்ற மதுரை கிளை இந்த உத்தரவை பிறப்பித்தது. பிழையுள்ள 49 கேள்விகளுக்கும் தலா 4 மதிப்பெண்கள் என்ற அடிப்படையில், 196 மதிபெண்களை வழங்கி, தரவரிசைப் பட்டியலை திருத்தி வெளியிடுமாறு சிபிஎஸ்இ-க்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. கேள்விகளில் பிழை இருந்ததால் மாணவர்கள் குழப்பத்துக்கு ஆளானதாகக் கூறி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவரும், மாநிலங்களவை எம்.பி.யுமான டி.கே.ரங்கராஜன் தொடுத்த வழக்கின் அடிப்படையில், மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் கிடைக்க வழிவகை ஏற்பட்டது. இந்நிலையில், உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு தொடர்பாக சட்ட வல்லுநர்களுடன் சிபிஎஸ்இ ஆலோசித்து வருவதாகவும், அதன் அடிப்படையில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வது குறித்து இறுதி முடிவு எடுக்கப்பட உள்ளது என்றும், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மேல்முறையீடு என்னவாகும்?: பிராந்திய மொழிகளில் நீட் தேர்வு எழுத விரும்பும் மாணவர்களுக்கு, ஆங்கிலத்துடன், அவர்களது பிராந்திய மொழியுடன் கூடிய இரண்டு கேள்வித் தாள்கள் வழங்கப்படும். ஒருவேளை, பிராந்திய மொழிக்கான மொழிபெயர்ப்பு தெளிவின்றி இருந்தால், ஆங்கில கேள்வித்தாளே இறுதியானதாகக் கருதப்படும்'' என்று நீட் தேர்வுக்காக சிபிஎஸ்இ வகுத்துள்ள விதிமுறைகளில் ஏற்கெனவே குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விதிமுறையை சுட்டிக் காட்டி, உச்ச நீதிமன்றத்தில் சிபிஎஸ்இ தமது வாதத்தை முன்வைக்கக் கூடும் என்று கருதப்படுகிறது. நீட் தேர்வானது, 180 கேள்விகளுக்கு தலா 4 மதிப்பெண் அடிப்படையில், மொத்தம் 720 மதிப்பெண்களுக்கு நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு, மொத்தம் 11 மொழிகளில், 136 மையங்களில் நடத்தப்பட்ட நீட் தேர்வு முடிவுகள் கடந்த மாதம் 4-ஆம் தேதி வெளியாகின. தமிழகத்தில் 10 நகரங்களில் 170 தேர்வு மையங்கள் மூலம் 1.07 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வு எழுதினர்.


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

திருவண்ணாமலையில் 5 மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்பு.

திருவண்ணாமலையில் 5 மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு நிர்வாக பயிற்சி வகுப்பு நடந்தது. இதில் அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டார். திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் திருவண்ணாமலை, வேலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் ஆகிய 5 மாவட்டங்களை சேர்ந்த கல்வி அலுவலர்களுக்கான நிர்வாக பயிற்சி வகுப்பு நடந்தது. இந்த பயிற்சி வகுப்புக்கு அமைச்சர் செங்கோட்டையன் தலைமை தாங்கினார். அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் முன்னிலை வகித்து பேசினார். கலெக்டர் கந்தசாமி வரவேற்றார். நிகழ்ச்சியில் அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது:- மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா பதவியில் இருந்தபோது பள்ளிக்கல்வித்துறையில் பல்வேறு திட்டங்களை கொண்டு வந்து செயல்படுத்தினார். பள்ளி மாணவர்களுக்கு 14 பொருட்களை வழங்கினார். பல கோடிகள் ஒதுக்கி நலத்திட்டங்களை கொண்டு வந்தார். தற்போதைய அரசும், இந்த ஆண்டு ரூ.27 கோடியே 25 லட்சத்து 88 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இது 4-ல் ஒரு பகுதி ஒதுக்கிய நிதியாகும். இந்த அரசின் நடவடிக்கையில் பள்ளிக்கல்வித்துறையில் பல்வேறு சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. 68 கல்வி மாவட்டங்கள் 120 கல்வி மாவட்டங்களாக மாற்றப்பட்டுள்ளது. கல்வி அதிகாரிகளுக்கு அதிகாரங்கள் பல வழங்கப்பட்டுள்ளது. ஏனெனில் நீங்கள் ஆய்வு மேற்கொள்ளும் போது, சிறிய தவறு ஏற்பட்டால் அதுகுறித்து உடனடி நடவடிக்கை எடுக்கக்கூடாது. முதலில் நீங்கள் அறிவுரை வழங்க வேண்டும். ஏன் என்றால் தவறு செய்யாதவர்கள் யாரும் இல்லை. சிறிய தண்டனைக்காக நல்ல அதிகாரியை நாம் இழந்து விடக்கூடாது. மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு வாகனங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வட்டார கல்வி அலுவலர்களுக்கும் வாகனங்கள் வழங்குவது தொடர்பாக அரசு பரிசீலனை செய்து வருகிறது. வட்டார கல்வி அலுவலர்களுக்கு பணிபுரியும் இடத்தில் அலுவலகங்கள் அமைத்துத் தர நடவடிக்கை எடுக்கப்படும். நீங்கள், கட்டிடங்கள் இருக்கிறதா? கழிப்பிடம் உள்ளதா? மாணவர்கள் பள்ளிக்கு வருகிறார்களா? என்பதை ஆய்வு செய்து அரசுக்கு கடிதம் அனுப்ப வேண்டும். பெற்றோர் ஆசிரியர் சங்கம் சரியாக செயல்படவில்லை என்றால் எங்களது கவனத்துக்கு கொண்டு வாருங்கள். அது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும். 3 ஆயிரம் பள்ளிகளுக்கு ஸ்மார்ட் கிளாஸ் கொண்டு வரும் திட்டத்தை அறிவித்திருக்கிறோம். அடுத்தவாரம் இந்த பணிகள் தொடங்க உள்ளது. இதற்கான ஒப்பந்த வேலைகள் நடைபெற்று வருகிறது. 9 முதல் 12-ம் வகுப்பு வரை கணினிமயமாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக ரூ.500 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் பலர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ஆனால் செப்டம்பர் மாதத்திற்குள் பள்ளியில் மாணவர்கள் அதிகமாக சேர்ந்தால் மீண்டும் அவர்கள் அதேபள்ளியில் மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். 848 பள்ளிகளில் 10 பேருக்கும் குறைவாக உள்ளனர். வட்டார கல்விஅலுவலர்கள் எங்கு வேண்டுமானாலும் சென்று பணியாற்றலாம். அதற்கான நடவடிக்கையை அரசு மேற்கொண்டு வருகிறது. நீங்கள் விரும்பும் பகுதிக்கு உங்களை மாற்ற அரசு நடவடிக்கை எடுக்கும். கல்வியில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த இந்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதனால் ஆசிரியர்களுக்கு இதுபோன்ற பயிற்சி வகுப்புகளை நடத்துகிறது. இந்த மாத இறுதிக்குள் 5 கட்டங்களாக பயிற்சி அளிக்கப்படும். பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான பெரிய பிரச்சினை கழிவறைகளை சுத்தம் செய்வது. இதை போக்க, ஜெர்மனி நாட்டில் இருந்து ஆயிரம் வாகனங்களை ரோட்டரி சங்கத்தோடு இணைந்து இறக்குமதி செய்ய உள்ளோம். இந்த வாகனங்கள் 20 ஆயிரம் பள்ளிகளை சுத்தம் செய்யும். இதுகுறித்து உடனடியாக கல்வித்துறைக்கு தகவல் அனுப்பும் வசதியும் முதல்- அமைச்சர் ஒப்புதலோடு செயல்படுத்தப்படும். மாணவர்கள் சேர்க்கைக்கு பிறகு வருகை குறித்து பெற்றோருக்கு குறுந்தகவல் அனுப்பும் திட்டம் கொண்டு வரப்படும். புதிய ஆசிரியர் பணியிடங்கள் விரைவில் உருவாக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார். அதைத்தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் பிரதீப்யாதவ் பேசினார். இதையடுத்து 21 ஆசிரியர்களுக்கு ‘கனவு ஆசிரியர்’ விருதுகளையும், 13 பள்ளிகளுக்கு புதுமை பள்ளி விருதும் அமைச்சர் செங்கோட்டையன் வழங்கினார். நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட செயலாளர் பெருமாள்நகர் கே.ராஜன், எம்.பி.க்கள் வனரோஜா, சேவல் வெ.ஏழுமலை, எம்.எல்.ஏ.க்கள் பன்னீர்செல்வம், தூசி கே.மோகன் மற்றும் 5 மாவட்ட கல்வி அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

பிளஸ்-2 தேர்ச்சி பெற்ற மாணவர்கள் பள்ளிகளிலேயே வேலைவாய்ப்புக்கு பதிவு செய்யலாம்.

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை ஆணையர் பா.ஜோதிநிர்மலா சாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளின் மூலமாக 2011-ம் ஆண்டு முதல் நேரடியாக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இணையதளத்தில் ( https://tnvelaivaaipu.gov.in ) பதிவு செய்துவருகிறார்கள். 2018-ம் ஆண்டிற்கான 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களின் மதிப்பெண் சான்றிதழ் வருகிற 16-ந் தேதி வழங்கப்பட உள்ளதை அடுத்து அன்று முதல் 30-ந் தேதி வரை 15 நாட்களுக்கு ஒரே பதிவு மூப்பு தேதி வழங்கி மாணவர்கள் தங்கள் பயின்ற பள்ளியிலேயே இணையதளம் வாயிலாக வேலைவாய்ப்பு அலுவலக பதிவுப் பணி நடைபெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளிலும் இவ்வசதியினை பயன்படுத்தி மாணவர்கள் வேலைவாய்ப்பு பதிவுகள் மேற்கொள்ளலாம். சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்களும் வேலைவாய்ப்புத்துறையின் இணையதளத்தில் பதிவு செய்யலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Thursday, 12 July 2018

‘நீட்’ தேர்வு மதிப்பெண் விவகாரம்: தமிழக மாணவர்களுக்கு சாதகமான நடவடிக்கையை அரசு எடுக்கும் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் பேட்டி

‘நீட்’ தேர்வு மதிப்பெண் தொடர்பான விவகாரத்தில் தமிழக மாணவர்களுக்கு சாதகமான நடவடிக்கையை அரசு எடுக்கும் என்று அமைச்சர் சி.விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார். சென்னை எழும்பூர் அரசு கண் ஆஸ்பத்திரியின் 200-வது ஆண்டு விழா ஆஸ்பத்திரி வளாகத்தில் நேற்று நடைபெற்றது. ஆஸ்பத்திரி இயக்குனர் பி.எஸ்.மகேஷ்வரி தலைமை தாங்கினார். மருத்துவ கல்வி இயக்குனர் எட்வின் ஜோ, ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரி டீன் ஜெயந்தி, டாக்டர் மலர்விழி முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினர்களாக சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர், செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவில் பலூன்களை பறக்கவிட்டு, கண் தானம் செய்வதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு உறுதிமொழி அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தலைமையில் எடுத்துக்கொள்ளப்பட்டது. பின்னர் 200-வது ஆண்டு தொடக்க விழா கல்வெட்டு திறக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து கண் விபத்து சிகிச்சை குறித்த சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கில், எழும்பூர் அரசு கண் ஆஸ்பத்திரியின் 200-வது ஆண்டு சின்னத்தை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வெளியிட்டார். மருத்துவத்துறையில் சிறப்பாக சேவை ஆற்றிய டாக்டர் எஸ்.நடராஜன் கவுரவிக்கப்பட்டார். முன்னதாக அமைச்சர் சி.விஜயபாஸ்கர் நிருபர்களிடம் கூறியதாவது:- எழும்பூர் அரசு ஆஸ்பத்திரி 200-வது ஆண்டு விழாவையொட்டி முதல்-அமைச்சர் ஒப்புதலோடு ரூ.50 லட்சத்தில் நினைவு நுழைவாயில் அமைக்கப்படும். ‘நீட்’ தேர்வு மதிப்பெண் தொடர்பாக சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளை சி.பி.எஸ்.இ.க்கு உத்தரவிட்டுள்ளது. அந்த தீர்ப்பின் முழு விவரம் எங்களுக்கு இன்னும் கிடைக்கவில்லை. இந்த விவகாரத்தில் சி.பி.எஸ்.இ. என்ன நிலைப்பாடு எடுக்கிறது என்பதை பார்த்த பிறகு அரசு அடுத்தகட்ட நடவடிக்கையை மேற்கொள்ளும். தமிழக மாணவர்களுக்கு சாதகமான நடவடிக்கையை அரசு எடுக்கும். இவ்வாறு அவர் கூறினார்.


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Wednesday, 11 July 2018

தமிழ் நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் அறிவித்துள்ள சார்பு ஆய்வாளர் (தொழில்நுட்பம்) வேலை அறிவிப்பு | விண்ணப்பிக்க கடைசி நாள் 10.8.2018. காலிப்பணியிடங்கள் : 309

தமிழ் நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் அறிவித்துள்ள சார்பு ஆய்வாளர் (தொழில்நுட்பம்) வேலை அறிவிப்பு | விண்ணப்பிக்க கடைசி நாள் 10.8.2018. காலிப்பணியிடங்கள் :  309
தமிழ் நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் அறிவித்துள்ள சார்பு ஆய்வாளர் (தொழில்நுட்பம்) வேலை அறிவிப்பு | ONLINE மூலம் விண்ணப்பிக்க கடைசி நாள் 10.8.2018. காலிப்பணியிடங்கள் : 309. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமம் சார்பில் சார்பு ஆய்வாளர் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமம், தமிழகத்தில் காவலர்களுக்கான தேர்வினை நடத்தி தகுதிவாய்ந்த நபர்களை தேர்வு செய்து வருகிறது. இந்நிலையில் காவல்துறையில் காலியாக உள்ள 309 சார்பு ஆய்வாளர்கள் (Technical SI) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பாணையை தற்போது வெளியிட்டுள்ளது. தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் http://www.tnusrbonline.org/ என்ற இணையதளத்தில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பத்தை சமர்ப்பிக்க கடைசி நாள் 10.08.2018. விண்ணப்பம் செய்பவர்களுக்கு உதவ ஏதுவாக தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமில்லாமல் மாநகரத்தில் உள்ள காவல் ஆணையாளர் அலுவலகங்களிலும், மற்றும் மாவட்டங்களிலுள்ள காவல் கண்காணிப்பாளர் அலுவலங்களிலும் உதவி மையம் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. உதவிமைய தொலைபேசி எண்கள்.. 1. 044-40016200 2.044-28413658 3.9499008445 4.9176243899 5.9789035725 கல்வித் தகுதி: குறைந்தபட்டசம் எலக்ட்ரானிக்ஸ் @ கம்யூனிகேஷனில் டிப்ளமோ படித்திருக்க வேண்டும். அல்லது எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேஷனில் பொறியியல் படிப்பு முடித்திருக்க வேண்டும். சம்பளம்: 36,900- 1,16,600 மேலும் விவரங்களுக்கு http://www.tnusrbonline.org/SI%20(Tech)%20Notification.pdf என்ற இணையதள முகவரியை அணுகலாம்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

தமிழில் நீட் தேர்வு எழுதியவர்களுக்கு 196 மதிப்பெண் கூடுதலாக வழங்க வேண்டும் புதிய தர வரிசை பட்டியல் தயாரிக்க உத்தரவு உயர் நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பு

தமிழில் நீட் தேர்வு எழுதியவர்களுக்கு 196 மதிப்பெண் கூடுதலாக வழங்க வேண்டும் புதிய தர வரிசை பட்டியல் தயாரிக்க உத்தரவு உயர் நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பு. தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு வினாத்தாள் மொழி பெயர்ப்பு தவறு காரண மாக 49 கேள்விகளுக்கு தலா 4 மதிப்பெண்கள் வீதம் ஒவ்வொருவருக்கும் கூடுதலாக 196 மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. இந்த மதிப்பெண்கள் அடிப்படையில் புதிய தர வரிசைப் பட்டி யல் தயாரித்து கலந்தாய்வு நடத்தவும் அதுவரை தற்போது நடைபெறும் கலந்தாய்வை நிறுத்தி வைக்கவும் நீதிபதிகள் உத்தர விட்டுள்ளனர். தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவ, மாணவிகளுக்கு வினாத்தாளில் தவறான மொழி பெயர்ப்புக்காக கருணை மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினரும் எம்பியுமான டி.கே.ரங்கராஜன், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநலன் மனு தாக்கல் செய்தார். அதில் கூறியிருந்ததாவது: நாடு முழுவதும் மே 6-ல் நடைபெற்ற நீட் தேர்வில் இயற்பியல், வேதியியல், உயிரியல் ஆகிய பாடங்களில் இருந்து 180 கேள்விகள் கேட்கப்பட்டன. ஒவ்வொரு கேள்விக்கும் 4 பதில்கள் அளிக்கப்பட்டு, அதில் சரியான பதிலை தேர்வு செய்ய வேண்டும். தவறாக மொழிபெயர்ப்பு இந்த நீட் தேர்வில் தமிழ் வினாத் தாளில் 49 வினாக்கள் தவறாகக் கேட்கப்பட்டிருந்தன. ஆங்கிலத்தில் இருந்து தமிழில் கேள்விகள் தவறாக மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. இதனால் தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவ, மாணவிகளுக்கு 49 வினாக்களுக்கும் தலா 4 மதிப்பெண்கள் வீதம் 196 மதிப்பெண்கள் வழங்க வேண்டும். மேலும் பிளஸ் 2 மதிப்பெண் கள் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கையை நடத்த உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது சிபிஎஸ்இ சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், “தேர்வு நடத்துவது, தேர்வு முடிவெடுப்பது மட்டுமே சிபிஎஸ்இ வேலை. வினாத் தாள் ஆங்கிலத்தில் இருந்து தமி ழில் மொழி மாற்றம் செய்யும் போது தமிழ் வார்த்தைகள் சரியானதா என்பதை சிபிஎஸ்இ-யால் உறுதி செய்ய முடியாது. தமிழ் மொழியில் இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடங்களை கற்பிக்கும் அனுபவமிக்க ஆசிரியர்களைக் கொண்டே ஆங் கில வினாத்தாள் தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்டது. ஒவ் வொரு மாநிலத்திலும் இந்த முறையே பின்பற்றப்பட்டது. பிராந்திய மொழியில் புழக்கத்தில் உள்ள அகராதியை அடிப்படை யாக வைத்தே மொழிபெயர்ப்பு பணிகளை ஆசிரியர்கள் மேற்கொண்டனர்” எனக் கூறப்பட்டிருந்தது. இந்த பதிலை ஏற்க மறுத்த நீதிபதிகள் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர். தேர்வு முடிவில் அவசரம் ஏன்? இந்நிலையில் இந்த வழக்கில் நீதிபதிகள் சி.டி.செல்வம், ஏ.எம். பஷீர்அகமது அமர்வு நேற்று தீர்ப்பளித்தது. அதில் கூறியிருப்பதா வது: வழக்கு தாக்கல் செய்த நிலையில், நீட் தேர்வு முடிவுகளை வெளியிடாமல் நிறுத்தி வைத்திருக்க வேண்டும். அதை செய்யாமல், வழக்கு தாக்கல் செய்த அன்றே தேர்வு முடிவுகளை வெளியிட்டது நியாயமற்றது. மேலும் நீதிமன்றத்தில் விசாரணையின்போது தமிழக மருத்து வக் கலந்தாய்வுக்கான தரவரிசைப் பட்டியல் இப்போதைக்கு வெளியிடப்படாது என உறுதி அளிக்கப்பட்ட நிலையில், தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட் டது. நீட் தேர்வு முடிந்ததும் விடை சுருக்கத்தை வெளியிடுமாறு நீதிமன்றம் கேட்டபோது, அதற்கு சிபிஎஸ்இ மறுத்துவிட்டது. தேசிய அளவில் நடைபெறும் இதுபோன்ற தேர்வில் இவ்வாறான போக்கை கடைபிடிப்பதை ஏற்க முடியாது. மாணவர்களுக்கு பாராட்டு நீட் தேர்வு வினாவில் உள்ள தவறைப் புரிந்து பதில் எழுதிய மாணவர்களைப் பாராட்ட வேண்டும். இதை மேம்போக்காகக் கருதாமல் மாணவர்களின் நிலையில் இருந்து பார்க்க வேண்டும். தனித் தேர்வு எழுதும் மாணவர்கள் (பள்ளிக்குச் சென்று படிக்காதவர்கள்) நீட் தேர்வில் பங்கேற்க முடியாத நிலை உள்ளது. ஏழை மாணவர்கள் பலர் பால் பாக்கெட் போட்டும் வீடு வீடாக நாளிதழ்களை போட்டும் பள்ளிக் குச் செல்லாமல் படித்து தேர்வு எழுதி வெற்றி பெறுகின்றனர். அவர்களை நீட் தேர்வு எழுத அனுமதிப்பதில்லை. இந்த மாணவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவே தனியாகப் படிக்கின்றனர். அப்படி இருப்பவர்களை நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கக் கூடாது என தடுக்க என்ன காரணம். இவ்வளவு மணி நேரம் பள்ளியில் இருக்க வேண்டும், அறிவியல் பாடங்களில் செய்முறை அறிவு பெற்றிருக்க வேண் டும் என்பதால், அந்த மாணவர் கள் நீட் தேர்வை எழுத விடாமல் தடுக்கப்படுகின்றனரா? பள்ளிக்குச் சென்று தேர்வு எழுதி பெறும் மதிப்பெண்கள் மட்டும் முக்கியமல்ல, இதுபோல் தனியாகப் படிக்கும் மாணவர்களையும் அரசும் கல்வி அமைப்புகளும் ஊக்கப்படுத்த வேண்டும். தனித் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு செய்முறை அறிவு வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என நீதிமன்றம் நம்புகிறது. இந்த வழக்கில் மொழி மாற்றத் தில் தவறு நடைபெற்றது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு மொழி மாற்றத்தில் தவறு நிகழ்ந்த 49 கேள்விகளுக்கும் தலா 4 மதிப்பெண்கள் வீதம் ஒவ்வொருவருக்கும் கூடுதலாக 196 மதிப்பெண்கள் வழங்க வேண்டும். இந்த மதிப்பெண்கள் அடிப்படையில் 2 வாரத்தில் புதிய தரவரி சைப் பட்டியலை சிபிஎஸ்இ வெளியிட வேண்டும். அதுவரை தற்போதைய தரவரிசைப் பட்டியலையும் கலந்தாய்வையும் நிறுத்தி வைக்க வேண்டும். புதிய தரவரிசைப் பட்டியல் அடிப்படையில் மருத்துவக் கலந்தாய்வு நடத்தி மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்களை சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர். இந்த வழக்கில் பிளஸ் 2 மதிப்பெண்கள் அடிப்படையில் மருத் துவ மாணவர் சேர்க்கை நடத்த உத்தரவிட வேண்டும் என்ற மனுதாரரின் கோரிக்கையை ஏற்க உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Monday, 9 July 2018

என்ஜினீயர்களுக்கு வேலை.விண்ணப்பம் சமர்ப்பிக்க கடைசி நாள் 11-7-2018

மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் நிறுவனம் பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (பி.இ.எல்.), ராணுவத்திற்குத் தேவையான எலக்ட்ரானிக்ஸ் உபகரணங்கள் தயாரிப்பில் ஈடுபடும் இந்த நிறுவனத்தில் தற்போது டெபுடி என்ஜினீயர் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பம் கோரி உள்ளது. மொத்தம் 86 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. நேர்காணல் அடிப்படையில் இந்த பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. விண்ணப்பதாரர்கள் 1-6-2018 தேதியில் 26 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். எஸ்.சி.,எஸ்.டி., ஓ.பி.சி. பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும். எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேசன், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் டெலி கம்யூனிகேசன், கம்யூனிகேசன், டெலி கம்யூனிகேசன், மெக்கானிக்கல் போன்ற பிரிவுகளில் பி.இ., பி.டெக் படித்தவர்கள் இந்த பணிகளுக்கு வி்ண்ணப்பிக்கலாம். பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினர் ரூ.500 கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். ஆன்லைன் விண்ணப்பம் சமர்ப்பிக்க கடைசி நாள் 11-7-2018-ந் தேதியாகும். இதற்கான நேர்காணல் 19-8-2018-ந் தேதி நடைபெறுகிறது. விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் http://bel-india.in/ என்ற இணையதள பக்கத்தைப் பார்க்கலாம்.


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

கடற்படையில் அலுவலக வேலைகள்

இந்திய கடற்படையில் அந்தமான் நிகோபர் கமாண்டிங் பிரிவில் மாஸ்டர், என்ஜின் டிரைவர், லஸ்கர், கிரெஸ்ஸர், தீயணைப்பு வீரர் போன்ற பணிகளுக்காக 100 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் அதிகபட்சமாக லஸ்கர் பணிக்கு 52 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். ஒவ்வொரு பணிக்கும் உள்ள காலியிட விவரத்தை முழுமையான விளம்பர அறிவிப்பில் பார்க்கலாம். மெட்ரிகுலேசன் தேர்ச்சியுடன் குறிப்பிட்ட பணி அனுபவம் உள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் 42 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும். எழுத்துத் தேர்வு மற்றும் உடல் தகுதி தேர்வுகளின் அடிப்படையில் தகுதியானவர்கள் பணியில் சேர்க்கப்படுவார்கள். விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் ஏ4 காகிதத்தில் குறிப்பிட்ட மாதிரியில் விண்ணப்ப படிவம் தயாரித்து நிரப்பி அனுப்ப வேண்டும். அத்துடன் தேவையான சான்றுகள் இணைக்க வேண்டும். விண்ணப்பங்கள் அறிவிப்பில் இருந்து 45 நாட்களுக்குள் The Admiral Superintendent {for Manager Personnel}, Naval Dockyard, Visakhapatnam 530014 என்ற முகவரிக்கு சென்றடைய வேண்டும். இதற்கான அறிவிப்பு 30-6-2018 அன்று வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. விரிவான விவரங்களை www.indiannavy.nic.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

எல்லைக் காவல் படையில் வேலை.

எல்லைக் காவல் படையில் தொழில்நுட்ப பணிகளுக்கு 207 பேர் தேர்வு செய்யப் படுகிறார்கள். இது பற்றிய விவரம் வருமாறு:- எல்லைக் காவல் படை சுருக்கமாக பி.எஸ்.எப். எனப்படுகிறது. துணை ராணுவ படைப்பிரிவான இதில் தற்போது ‘குரூப்-சி’ பிரிவிலான தொழில்நுட்ப பணிகளுக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. வெகிகிள் மெக்கானிக், ஆட்டோ எலக்ட்ரீசியன், வெல்டர், டர்னர், கார்பெண்டர், ஸ்டோர் கீப்பர், பெயிண்டர், வல்கனைஸ், பிட்டர், பிளாக்ஸ்மித் போன்ற பிரிவில் பணியிடங்கள் உள்ளன. மொத்தம் 207 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். ஒவ்வொரு பணி வாரியாக உள்ள காலியிடங்கள் விவரத்தை முழுமையான விளம்பர அறிவிப்பில் பார்க்கலாம். விண்ணப்பதாரர்கள் 18 வயது பூர்த்தி அடைந்தவர்களாகவும், 25 வயதுக்கு உட்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும். 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன், பணியிடங்கள் உள்ள ஏதேனும் ஒரு பிரிவில் ஐ.டி.ஐ. படித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 3 ஆண்டு பணி அனுபவம் அவசியம். விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் குறிப்பிட்ட மாதிரியான விண்ணப்ப படிவம் மற்றும் அனுமதி அட்டை படிவத்தை நிரப்பி அனுப்ப வேண்டும். அறிவிப்பில் இருந்து 30 நாட் களுக்குள் விண்ணப்பம் சென்றடைய வேண்டும். இதற்கான அறிவிப்பு ஜூன் 30- ஜூலை-6 தேதியிட்ட எம்ப்ளாய்மென்ட் நியூஸ் இதழில் வெளியாகி உள்ளது. விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்யவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.bsf.nic.in என்ற இணையதள பக்கத்தைப் பார்க்கவும்.


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

வனத்துறையில் பயிற்சிப் பணிகள் விண்ணப்பிக்க கடைசி நாள் 1-8-2018

வனத்துறையில் பயிற்சிப் பணிகள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி. வனத்துறையில் அப்ரண்டிஸ் பயிற்சிப் பணியிடங்களுக்கு விண்ணப்பம் கோரி உள்ளது. மொத்தம் 158 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் 10 இடங்கள், எஸ்.சி. பிரிவினருக்கான பற்றாக்குறை பணியிடங்களாகும். விண்ணப்பதாரர்கள் 1-4-2018-ந் தேதியில் 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். இட ஒதுக்கீடு பெறுபவர்கள் 35 வயதுக்கு உட்பட்டிருக்க வேண்டும். முன்னாள் படைவீரர்கள் 37 வயதுடையவர்களாக இருக்கலாம். பாரஸ்ட்ரி பட்டப்படிப்பு படித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். வேளாண்மை, தோட்டக்கலை, உயிரியல் உள்ளிட்ட 15 விதமான அறிவியல் பட்டப்படிப்பு படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் விண்ணப்பப் பதிவு கட்டணமாக ரூ.150 மற்றும் தேர்வு கட்டணமாக ரூ.150 செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 1-8-2018-ந் தேதியாகும். 3-8-2018-ந் தேதிக்குள் கட்டணம் செலுத்த வேண்டும். இதற்கான எழுத்துத் தேர்வு செப்டம்பர் 23 முதல் 30-ந் தேதி வரை நடைபெறுகிறது. இது பற்றிய விவரங்களை www.tnpsc.gov.in என்ற இணையதள பக்கத்தில் பார்க்கலாம்.


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

ரிசர்வ் வங்கியில் அதிகாரி வேலை

ரிசர்வ் வங்கியில் 166 அதிகாரி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இது பற்றிய விவரம் வருமாறு:- வங்கிகளின் வங்கி எனப்படுவது ரிசர்வ் வங்கி. இந்த வங்கியில் அதிகாரியாக பணிவாய்ப்பை பெறுவது இளைஞர்கள் பலரின் கனவாக இருக்கிறது. தற்போது இந்த வங்கியில் கிரேடு-பி, தரத்திலான அதிகாரி பணியிடங்களை நிரப்ப விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 166 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 1-7-2018-ந் தேதியில் 21 வயது பூர்த்தி அடைந்தவர்களாகவும், 30 வயதுக்கு உட்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர், ஓ.பி.சி. பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள், முன்னாள் படைவீரர்களுக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும். இளநிலை பட்டப்படிப்பு மற்றும் முதுநிலை படிப்பு படித்தவர்களுக்கு பணியிடங்கள் உள்ளன. சில பிரிவு பணிகளுக்கு அனுபவம் அவசியம். பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினர் ரூ.850-ம், எஸ்.சி.,எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரூ.100-ம் கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்ப கட்டணம் மற்றும் ஆன்லைன் விண்ணப்பம் சமர்ப்பிக்க கடைசி நாள் 23-7-2018-ந் தேதியாகும். இந்த பணிகளுக்கான பேஸ் 1 தேர்வு ஆகஸ்டு 16-ந் தேதியும், பேஸ்2 தேர்வு, செப்டம்பர் 6, 7-ந் தேதிகளிலும் நடக்கிறது. விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்துகொள்ளவும் https://www.rbi.org.in/ என்ற இணையதள பக்கத்தைப் பார்க்கவும்.


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

விமான ஆணைய நிறுவனத்தில் 908 அதிகாரி பணிகள்

விமான ஆணைய நிறுவனத்தில் மேலாளர், ஜூனியர் எக்சிகியூட்டிவ் போன்ற அதிகாரி பணிகளுக்கு 908 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இது பற்றிய விவரம் வருமாறு:- இந்திய விமான ஆணைய நிறுவனம் சுருக்கமாக ஏ.ஏ.ஐ. (AAI) என்று அழைக்கப்படுகிறது. தற்போது இந்த நிறுவனத்தில் பல்வேறு பிரிவுகளில் மேலாளர் (மேனேஜர்) மற்றும் ஜூனியர் எக்சிகியூட்டிவ் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. அதிகபட்சமாக மேனேஜர் பணியிடங்களில் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் 324 இடங்களும், சிவில் பிரிவில் 71 இடங்களும், எலக்ட்ரிக்கல் பிரிவில் 52 இடங்களும், ஜூனியர் எக்சிகியூட்டிவ் பணியிடங்களில் ஏர் டிராபிக் கண்ட்ரோல் பிரிவில் 200 இடங்களும், ஏர்போர்ட் ஆபரேசன்ஸ் பிரிவில் 69 இடங்களும் இருப்பது குறிப்பிடத்தக்கது. இவை தவிர நிதி, தீயணைப்பு, டெக்னிக்கல், அபிஸியல் லாங்வேஜ், கமர்சியல் போன்ற பிரிவில் மேலாளர், ஜூனியர் எக்சிகியூட்டிவ் பணியிடங்கள் உள்ளன. மொத்தம் 908 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்ப்போம்... வயது வரம்பு... மேலாளர் பிரிவு பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் 30-6-2018 தேதியில் 32 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். ஜூனியர் எக்சிகியூட்டிவ் பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் 27 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி. பிரிவினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள், முன்னாள் படைவீரர்கள் ஆகியோர் அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும். கல்வித்தகுதி: பி.காம், ஐ.சி.டபுள்யு.எ., சி.ஏ., எம்.பி.ஏ., பி.இ., பி.டெக் படித்தவர்களுக்கு பணியிடங்கள் உள்ளன. சில பணிகளுக்கு குறிப்பிட்ட பணி அனுபவம் அவசியம். அந்தந்த பணிக்கான சரியான கல்வித்தகுதியை முழுமையான விளம்பர அறிவிப்பில் காணலாம். கட்டணம்: விண்ணப்பதாரர்கள் ரூ.1000 கட்டணம் செலுத்த வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள், பெண் விண்ணப்பதாரர்கள் இந்த கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும், தகுதியும் இருப்பவர்கள் இணைய தளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பம் 16-7-2018 அன்று இணைய தளத்தில் செயல்பாட்டிற்கு வரும். 16-8-2018-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். கட்டணம் செலுத்த 18-8-2018-ந் தேதி கடைசி நாளாகும். இதற்கான ஆன்லைன் தேர்வு 11-9-2018 முதல் 14-9-2018 வரை நடைபெறுகிறது. விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் https://www.aai.aero/ என்ற இணையதள பக்கத்தை பார்க்கலாம்.


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

சுரங்க நிறுவனத்தில் 528 பணியிடங்கள்

கோல் இந்தியா சுரங்க நிறுவனத்தில் மருத்துவ அதிகாரி பணியிடங்களுக்கு 528 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இது பற்றிய விவரம் வருமாறு:- மத்திய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்று கோல் இந்தியா. சுரங்கத்துறை நிறுவனமான இதில் தற்போது சீனியர் மெடிக்கல் ஸ்பெஷலிஸ்ட்/மெடிக்கல் ஸ்பெஷலிஸ்ட், சீனியர் மெடிக்கல் ஆபீசர் பணியிடங்களுக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 528 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். மெடிக்கல் ஸ்பெஷலிஸ்ட் பணிக்கு 352 இடங்களும், சீனியர் மெடிக்கல் ஆபீசர் பணிக்கு 176 இடங்களும் உள்ளன. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்க்கலாம்... வயது வரம்பு: மெடிக்கல் ஸ்பெஷலிஸ்ட் பணி விண்ணப்பதாரர்கள் 1-4-2018-ந் தேதியில் 35 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். சீனியர் மெடிக்கல் ஸ்பெஷலிஸ்ட் பணி விண்ணப்பதாரர்கள் 42 வயதுக்கு உட்பட்டிருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி. பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும். கல்வித்தகுதி: எம்.பி.பி.எஸ். படித்தவர்கள் மெடிக்கல் ஸ்பெஷலிஸ்ட் பணிக்கு விண்ணப்பிக்கலாம். எம்.பி.பி.எஸ். படிப்புடன் முதுநிலை மருத்துவ படிப்பு, முதுநிலை டிப்ளமோ படிப்புகள், டி.என்.பி. படித்தவர்கள் சீனியர் மெடிக்கல் ஸ்பெஷலிஸ்ட் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். கட்டணம் : இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க கட்டணம் ஏதும் கிடையாது. தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். 28-7-2018-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.coal.india.in என்ற இணையதள பக்கத்தைப் பார்க்கவும்.


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Sunday, 8 July 2018

இணையவழிக் கல்வியில் தமிழகம் முதலிடம்: பள்ளிக் கல்வித் துறை செயலர் உதயச்சந்திரன் தகவல்

இணையதளத்தைப் பயன்படுத்தி கல்வி கற்பதில் நாட்டிலேயே தமிழகம் முதலிடத்தில் இருப்பதாக பள்ளிக் கல்வித் துறை செயலர் த.உதயசந்திரன் கூறியுள்ளார். இதுகுறித்து அவர், கோவையில் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை மேலும் கூறியதாவது: தமிழக அரசு புதிதாக வெளியிட்டுள்ள 1, 6, 9, 11 -ஆம் வகுப்புகளுக்கான பாடநூல்களில், கணினித் தொழில்நுட்பம் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டுள்ளது. முதல்முறையாக தமிழில் அச்சிடப்பட்டுள்ள பாடநூல்கள் யாவும் ஒருங்குறி (யூனிகோட்) முறையில் அச்சிடப்பட்டுள்ளன. மேலும், ஒவ்வொரு பாடத்திலும் இணைய வழங்கல் என்று கூறும்படி ஆசிரியர்களும், மாணவர்களும் இணையதளம் சென்று பயன்படுத்தக்கூடிய பல்வேறு செய்திகளை இந்தப் பாடங்களில் இணைத்துள்ளோம்.மாணவர்கள் 6 -ஆம் வகுப்பு முதலே இணையதளக் கல்வி, கணினித் தமிழ், தமிழ் இணையம் ஆகியவற்றைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காக கணினி அறிவியல் பாடமானது அறிவியல் பாடத்துடன் சேர்த்து கற்பிக்கப்படுகிறது. அதேபோல், மாணவர்கள் தங்களின் பாடங்களை விடியோக்கள், புகைப்படங்கள், செயல் விளக்கங்கள் மூலமாக கற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காக விரைவுக் குறியீடுகள் (க்யூ.ஆர்.கோடு) ஆங்காங்கே வழங்கப்பட்டுள்ளன. விரைவுக் குறியீடுகளை பாடங்களில் வழங்கும் முயற்சியில் மகாராஷ்டிரம், ஆந்திரம், உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்களும் முயற்சி செய்தாலும் தமிழகம்தான் முதன்முதலில் அறிமுகம் செய்தது. அத்துடன் மிக அதிக அளவாக 144 பாடங்களில், 2,895 குறியீடுகளை இடம்பெறச் செய்துள்ளோம்.மேலும், இவற்றைப் பயன்படுத்துவதிலும் தமிழகம் தற்போது முன்னோடியாக இருப்பது தெரிய வந்துள்ளது. தேசிய அளவில் பயன்படுத்தப்படும் மொத்த விரைவுக் குறியீடுகளில் 60 சதவீதம் அளவுக்கு தமிழகத்தின் பங்களிப்பு உள்ளது. தமிழகத்தில் தினசரி சுமார் 2 லட்சம் மாணவர்களும், ஆசிரியர்களும் விரைவுக் குறியீடுகளைப் பயன்படுத்துகின்றனர். தமிழக மாணவர்களை அடுத்தடுத்த நவீன தொழில்நுட்ப தலைமுறைகளுக்கு கொண்டு செல்வதில் பள்ளிக் கல்வித் துறை பெரும் பங்காற்றி வருகிறது. இதன் ஒரு பகுதியாக மாநிலம் முழுவதிலும் 3 ஆயிரம் பள்ளிகளில் திறன்மிகு வகுப்பறைகள் (ஸ்மார்ட் கிளாஸ்)தொடங்கப்பட உள்ளன என்றார் அவர்


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

100 உயர் நிலைப்பள்ளிகள் 100மேல்நிலைப்பள்ளிகள் தரம் உயர்ந்தப்படுவது குறித்த அறிவிப்பு நாளை வெளியாகும்.

100 உயர் நிலைப்பள்ளிகள் 100மேல்நிலைப்பள்ளிகள் தரம் உயர்ந்தப்படுவது குறித்த அறிவிப்பு நாளை வெளியாகும்  என்று தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

ஆண்டுக்கு இரு, 'நீட்' தேர்வு அறிவிப்பால் மாணவர்கள்...மகிழ்ச்சி : எதில் அதிக மதிப்பெண் பெறுவரோ அதுவே ஏற்கப்படும்

ஆண்டுக்கு இரு, 'நீட்' தேர்வு அறிவிப்பால் மாணவர்கள்...மகிழ்ச்சி : எதில் அதிக மதிப்பெண் பெறுவரோ அதுவே ஏற்கப்படும் | *சி.பி.எஸ்.இ.,யால் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வந்த, 'நீட்' மருத்துவ நுழைவுத் தேர்வு, ஐ.ஐ.டி., படிப்புகளுக்கான, ஜே.இ.இ., மற்றும் பல்கலை பேராசிரியர் பணிகளுக்கான, 'நெட்' தேர்வுகளை, என்.டி.ஏ., எனப்படும், தேசிய தேர்வு முகமை என்ற புதிய அமைப்பு இனி நடத்தும்,'' என, மத்திய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர், பா.ஜ.,வைச் சேர்ந்த பிரகாஷ் ஜாவடேகர் அறிவித்துள்ளார் *ஆண்டுக்கு இரு நீட் தேர்வு, எதில் அதிக மதிப்பெண் பெறுவரோ, அது ஏற்கப்படும்; ஆண்டு முழுவதும் இலவச பயிற்சி உள்ளிட்ட பல்வேறுஅறிவிப்புகளால், மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் *உயர் கல்விகளுக்கான நுழைவுத்தேர்வுகளை, தன்னாட்சி அதிகாரம் பெற்ற சிறப்பானதொரு அமைப்பின் மூலம் நடத்த ஏற்பாடு செய்யப்படும்' என, மத்திய நிதி அமைச்சர் பதவி வகித்து வந்த அருண் ஜெட்லி, 2017 - 18பட்ஜெட்டில் அறிவித்தார் *இதையடுத்து, இந்த தேர்வுகளை நடத்த, தேசிய தேர்வு முகமை என்ற அமைப்பை உருவாக்க, மத்திய அரசு திட்டமிட்டது *இது தொடர்பாக, 2017, நவம்பரில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில், தேசிய தேர்வு முகமை என்ற தனி அமைப்புக்கு, ஒப்புதல் அளிக்கப்பட்டது *மருத்துவப் படிப்புகளுக்கான, நீட் தேர்வு, ஐ.ஐ.டி., படிப்புகளுக்கான, ஜே.இ.இ., மற்றும் பல்கலை பேராசிரியர் பணிகளுக்கான, 'நெட்' எனப்படும், தேசிய தகுதி தேர்வு ஆகியவற்றை, சி.பி.எஸ்.இ., எனப்படும், மத்திய இடைநிலை கல்வி வாரியம் நடத்தி வந்தது. 'இந்த தேர்வுகளை, புதிதாக உருவாக்கப்பட்டுள்ள தேசிய தேர்வு முகமை என்ற அமைப்பு நடத்தும்' என, மத்திய அரசு நேற்று அறிவித்தது *இது தொடர்பாக, மத்திய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர், பிரகாஷ் ஜாவடேகர், செய்தியாளர்களிடம் கூறியதாவது: இதுவரை, ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் நடத்தப்பட்டு வந்த நீட், ஜே.இ.இ., தேர்வுகள், இனி, ஆண்டுக்கு, இருமுறை நடத்தப்படும் *நீட் தேர்வுகள், பிப்ரவரி மற்றும் மே மாதங்களில் நடத்தப்படும். மாணவர்கள் எந்த தேர்வில் அதிக மதிப்பெண் பெறுகின்றனரோ, அதுவே ஏற்கப்படும். ஜே.இ.இ., தேர்வுகள், ஜனவரி மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடத்தப்படும் *பல்கலை பேராசிரியர் பணிகளுக்கான, நெட் தேர்வுகள், டிசம்பர் மாதம் நடத்தப்படும். இந்த தேர்வுகள் அனைத்தும் கணினி மயமாக்கப்படுகின்றன. இதற்காக, அனைத்து நகரங்கள்,கிராமங்களில் உள்ள பள்ளிகள், கல்லுாரிகளில், அரசு கணினி பயிற்சி மையங்கள் துவங்கப்பட உள்ளன *இந்த மையங்களில், மாணவர்கள் ஆண்டு முழுவதும், இலவச பயிற்சி பெறலாம். இதன் மூலம், கிராமப்புறங்களில் வசிக்கும் மாணவர்கள், நீட் தேர்வுக்கு முன், தங்களை சிறப்பாக தயார் செய்து கொள்ள முடியும். இந்த மையங்கள், சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் செயல்படும் *விருப்பம் உள்ள அனைவரும், இதில் சேர்ந்து பயிற்சி பெறலாம். ஆகஸ்ட் மூன்றாம் வாரத்தில் இருந்து,இலவச கணினி பயிற்சி மையங்கள் செயல்பட துவங்கும். இதுகுறித்த விரிவான அறிவிப்பு, விரைவில் வெளியிடப்படும் *ஒவ்வொரு தேர்வும், நான்கு அல்லது ஐந்து நாட்களில் நடத்தப்படும். இதில், பாடத்திட்டம், கேள்வி வடிவம் மற்றும் தேர்வு எழுதும் மொழியில் மாற்றம் எதுவும் இல்லை. வரும் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள நெட் தேர்வு, புதிதாக உருவாக்கப்பட்டுள்ள, தேசிய தேர்வு முகமை மூலம், முதல் முறையாக நடத்தப்பட உள்ளது *இந்த தேர்வுகள், பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த மென்பொருள் மற்றும் நவீன தொழில்நுட்ப உதவியுடன் நடத்தப்படும். சர்வதேச தரத்தில் நடைபெறும் புதிய தேர்வு முறையில், கேள்வித்தாள் வெளியாவது போன்ற முறைகேடுகள் நடப்பதற்கு வாய்ப்பு இல்லை.இவ்வாறு அவர் கூறினார் *ஆண்டுக்கு இரு, 'நீட்' தேர்வு, எதில் அதிக மதிப்பெண் பெறுவரோ, அது ஏற்கப்படும்; ஆண்டு முழுவதும் இலவச பயிற்சி உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளால், மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் *நிபுணர்கள் குழு தயார்! *புதிய தேர்வு நடைமுறையை, சிறப்பாக செயல்படுத்த, கல்வி நிபுணர்கள், ஆராய்ச்சியாளர்கள், புள்ளியியல் ஆய்வாளர்கள், உளவியல் நிபுணர்கள் ஆகியோரை, அரசு நியமனம் செய்ய உள்ளது *இவர்களின் உதவியுடன், தேர்வு முறையில் எதிர்கொள்ளப்படும் நடைமுறை சிக்கல்கள் சரி செய்யப்படும்.வினா தாள்களை வடிவமைக்க, நிபுணர் குழு அமைக்கப்பட உள்ளது. கேள்விகளை தயார் செய்வதில், அவர்கள் நிபுணத்துவம் பெற்றவர்களாக இருப்பர் *நிபுணர் குழுவுக்கான உறுப்பினர்கள், தேர்வு செய்யப்பட்டு விட்டதாகவும், அவர்கள் விரைவில், தேசிய தேர்வு முகமையில் இணைந்து பணியாற்றுவர் என்றும் கூறப்படுகிறது


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

கல்வித்துறையில் அதிகாரம் யாருக்கு தலைமை ஆசிரியர்கள் போர்க்கொடி

கல்வித்துறையில் அதிகாரம் யாருக்கு தலைமை ஆசிரியர்கள் போர்க்கொடி | அரசு மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்களை கண்காணிக்கும் அதிகாரம் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு கொடுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு கிளம்பியது மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களை கண்காணிப்பது, பணப்பலன் வழங்குவது, பணிப்பதிவேட்டை பராமரிப்பது போன்ற பணிகளை முதன்மைக் கல்வி அலுவலர்கள் செய்து வந்தனர். சமீபத்தில் கல்வித்துறையில் சீர்த்திருத்தம் செய்யப்பட்டது அதன்படி மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களை கண்காணிக்கும் அதிகாரம் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு வழங்கப்பட்டது மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு இணையானது மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடம் இதனால் 'இணையான பணி நிலையில் உள்ளோர் தங்களை கண்காணிக்க அதிகாரம் கிடையாது; பழைய நிலையே தொடர வேண்டுமென, போர்க்கொடி துாக்கியுள்ளனர்.தலைமை ஆசிரியர்கள் கூறியதாவது சில இடங்களில் பொறுப்பு மாவட்டக் கல்வி அலுவலர்களாக உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் உள்ளனர். அவர்கள் எப்படி மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களை கண்காணிக்க முடியும் மேலும் பட்டதாரி ஆசிரியர் நிலையிலுள்ள வட்டார கல்வி அலுவலர்களை கண்காணிக்கும் அதிகாரம் முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது அவர்களுக்கு அடுத்த நிலையில் உள்ள எங்களை மாவட்டக் கல்வி அலுவலர்கள் கண்காணிப்பது நியாயமற்றது, என்றனர்.கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'கல்வித்துறை பணியாளர்களின் பணி விதிகள் திருத்தி அமைக்கும் பணி நடந்து வருகிறது. விரைவில் குழப்பம் தீர்ந்துவிடும்,' என்றார்


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

NHIS மாதாந்திர சந்தா இனி 150 ரூபாய்க்கு பதிலாக 350 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

NHIS மாதாந்திர சந்தா இனி 150 ரூபாய்க்கு பதிலாக 350 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

நீட் தேர்வு ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நடத்த வேண்டும்- அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

நீட் தேர்வு ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நடத்த வேண்டும்- அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி கோவை: நீட் தேர்வை ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே நடத்த வலியுறுத்துவோம் என்று தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று ஞாயிற்றுக்கிழமை கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது செய்தியாளர்கள் நேற்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு ஆண்டுக்கு இரண்டு முறை நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளார் இது குறித்து தமிழக அரசின் நிலைப்பாடு என்ன என்று கேள்வி எழுப்பினர், இந்த கேள்விக்கு பதிலளித்த செங்கோட்டையன், ஆண்டுக்கு இரண்டு முறை நீட் தேர்வு நடத்துவது குறித்து மத்திர அரசிடமிருந்து எங்களுக்கு கடிதம் எதுவும் வரவில்லை. ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே நீட் தேர்வை நடத்த வேண்டும் என்று மத்திய அரசிடம் வலியுறுத்துவோம் என்று தெரிவித்தார். மேலும், தொடர்ந்து பேசிய அமைச்சர் செங்கோட்டையன், நீட் தேர்வுக்காக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பள்ளி வேலை நாட்களில் ஒரு மணி நேரமும் விடுமுறை நாட்களில் 3 மணி நேரமும் பயிற்சி அளிக்கப்படும். தமிழகத்தில் மேலும், 100 உயர்நிலைப் பள்ளிகள், 100 மேல்நிலைப் பள்ளிகள் உருவாக்குவது பற்றி நாளை அறிவிக்கப்படும். அனைவருக்கும் வேலை என்ற உத்தரவாதத்துடன் 12-ஆம் வகுப்பிலேயே மாணவர்களுக்கு திறன் பயிற்சி அளிக்கப்பட உள்ளது." என்று தெரிவித்தார்.


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE