Thursday, 31 May 2018

CLASS 1,6,9,11 TEXT BOOKS ONLINE | தமிழ்நாடு அரசுப் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள பாடப்புத்தகங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பெற்றுள்ளன.

CLASS 1,6,9,11 TEXT BOOKS ONLINE | தமிழ்நாடு அரசுப் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள பாடப்புத்தகங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பெற்றுள்ளன | DOWNLOAD 

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

அரசு பள்ளி ஆசிரியர் பொது இடமாறுதல் கலந்தாய்வு அரசாணை வெளியீடு உபரி ஆசிரியர்களை பணிநிரவல் செய்ததும் கலந்தாய்வு

அரசு பள்ளி ஆசிரியர் பொது இடமாறுதல் கலந்தாய்வு அரசாணை வெளியீடு உபரி ஆசிரியர்களை பணிநிரவல் செய்ததும் கலந்தாய்வு | அரசு பள்ளிகளில் ஆசிரியர் பொது இடமாறுதல் கலந்தாய்வில் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் தொடர்பான அரசாணையை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது. உபரி ஆசிரியர்களை பணிநிரவல் செய்த பின்னரே கலந்தாய்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 2018-2019-ம் கல்வி ஆண்டில் ஆசிரியர் பொது இடமாறுதல் கலந்தாய்வின்போது பின்பற்றப்பட வேண்டிய நெறிமுறைகள் தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலர் பிரதீப் யாதவ் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:- பள்ளிக் கல்வித் துறை மற்றும் தொடக்கக்கல்வித் துறையின் கீழ் இயங்கும் அரசு பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து வகை ஆசிரியர்களின் பொது இடமாறுதலுக்கு குறிப்பிட்டுள்ள நெறிமுறைகள் கடைப்பிடிக்கப்பட வேண்டும். உபரியாக உள்ள.. காலிப்பணியிடங்களை கலந்தாய்வுக்கு காட்டும்போது ஆசிரியர்கள் உபரியாக உள்ள காலியிடங்களை இயக்குநரின் தொகுப்புக்கு கொண்டுசெல்ல வேண்டும். அந்த பணியிடங்களை கலந்தாய்வுக்கு காட்டக்கூடாது. இந்த இடங்களுக்கு மாறுதலும் வழங்கக்கூடாது. உபரி ஆசிரியர் பணியிடங்களை பணிநிரவல் செய்த பின்னர் பொது இடமாறுதல் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். முன்னுரிமை மனமொத்த மாறுதல் அடிப்படையில் மாறுதல் பெற்றவர்கள் மீண்டும் ஏற்கெனவே பணிபுரிந்த பள்ளிக்கே மனமொத்த மாறுதலில் செல்ல அனுமதிக்கக் கூடாது. முன்னுரிமை பட்டியலில் இடம்பெற்றவர்களுக்கு கலந்தாய்வின்போது முன்னுரிமை வரிசை அடிப்படையில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். இவ்வாறு அந்த அரசாணையில் கூறப்பட்டுள்ளது.  DOWNLOAD

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் பயோமெட்ரிக் முறையில் ஆசிரியர்களின் வருகை பதிவு செய்யப்படும் சட்டசபையில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அறிவிப்பு

தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் பயோமெட்ரிக் முறையில் ஆசிரியர்களின் வருகை பதிவு செய்யப்படும் சட்டசபையில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அறிவிப்பு | தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் பயோமெட்ரிக் முறையில் ஆசிரியர்களின் வருகை பதிவு செய்யப்படும் என்று சட்டசபையில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அறிவித்தார். தமிழக சட்டசபையில் பள்ளிக்கல்வித் துறை மானியக் கோரிக்கை மீது எம்.எல்.ஏ.க்கள் விவாதித்தனர். அவர்களுக்கு பதிலளித்து அந்தத் துறையின் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசியதாவது:- மீண்டும் பள்ளி சேர்க்கை அரசுத் தேர்வில் தோல்வியுற்ற மாணவர்கள் உடனடியாக வரும் ஜூன் மாதத்திலே மீண்டும் தேர்வெழுதி தேர்ச்சி பெறலாம். அதிலும் தவறும் மாணவர்களுக்காக அவர்கள் பயின்ற பள்ளியிலேயே மீண்டும் பயில்வதற்கு அரசு பரிசீலனை செய்து வருகிறது. தற்போது தரப்படும் மதிப்பெண் சான்றிதழ்கள், எளிதில் தீப்பிடிக்காத, கிழியாத வகையில் உள்ளன. ரூபாய் நோட்டுகளில் இருப்பதுபோல 11 ரகசிய குறியீடுகள் கொண்ட பாதுகாப்பு அம்சங்கள்கூடிய மதிப்பெண் சான்றிதழில் தமிழ் மற்றும் ஆங்கிலத்திலும் மாணவர்களின் பெயர் இடம்பெற்றுள்ளது. நீட் தேர்வு 1, 6, 9 மற்றும் 11 வகுப்புகளுக்கு 2018-2019-ம் ஆண்டுக்கான புதிய பாடத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இது கல்வியாளர்கள் பாராட்டும் வகையில் அமைந்துள்ளது. மூன்று ஆண்டுகளில் அனைத்து வகுப்புகளுக்கும் புதிய பாடத்திட்டம் என்ற இலக்கை, இந்த ஆண்டிலேயே அடையத் தீர்மானித்து பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. மேல்நிலை வகுப்புகளில் மொழிப்பாடங்களில் உள்ள தாள் 1 மற்றும் 2 ஆகியவற்றை ஒரே தாளாக மாற்றியமைக்க அரசு பரிசீலித்து வருகிறது. நீட் தேர்வுக்கு 412 பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டன. உணவு மற்றும் தங்கும் வசதிகளுடன் 9 பயிற்சி மையங்கள் ஏற்படுத்தப்பட்டு, 26 நாட்களுக்கு, ஸ்பீடு, சைதன்யா, ஆலன் போன்ற சிறந்த நிறுவனங்களுடன் பயிற்சிகள் வழங்கப்பட்டன. இதன்மூலம், மருத்துவ நுழைவுத் தேர்வை மாணவர்கள் எளிதாக எதிர்கொண்டனர். பள்ளிகள் தரம் உயர்வு தமிழகத்தில் கடந்த ஆண்டு 150 நடுநிலைப் பள்ளிகளும், 100 உயர்நிலைப் பள்ளிகளும் தரம் உயர்த்தப்பட்டன. இந்த ஆண்டு 100 நடுநிலைப் பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளாகவும், 100 உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மக்கள் தொகை அதிகமுள்ள பள்ளிகள் இல்லாத குடியிருப்புப் பகுதிகளில் 20 புதிய தொடக்கப் பள்ளிகள் தொடங்கப்பட்டுள்ளன. பள்ளிக்கூடங்களில் 4,362 ஆய்வக உதவியாளர் பணியிடங்களும் 2,373 முதுகலை ஆசிரியர் பணியிடங்களும் நிரப்பப்பட்டுள்ளன. கனவு ஆசிரியர் விருது 128 பள்ளிகளுக்கு ரூ.1 கோடியே 92 லட்சம் செலவில் புதுமைப்பள்ளி விருது வழங்கப்பட உள்ளது. அதனடிப்படையில் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு 1 லட்சம் ரூபாயும், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு ரூ.2 லட்சமும் வழங்கப்படும். அதுபோல 192 ஆசிரியர்களுக்கு ரூ.10 ஆயிரம் வீதம் ரூ.19.2 லட்சம் செலவில் பாராட்டுச் சான்றிதழுடன் கூடிய கனவு ஆசிரியர் விருது வழங்கப்படவுள்ளது. அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் தமிழ்வழிக் கல்விப் பயிலும் 10 மற்றும் 12-ம் வகுப்பு பயிலும் மாணவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக பெருந்தலைவர் காமராஜர் விருது வழங்கப்பட உள்ளது. மாவட்டத்திற்கு 30 மாணவர்கள் என மொத்தம் 960 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட உள்ளது. வெளிநாட்டு கல்விச் சுற்றுலா 8 முதல் 12-ம் வரை பயிலும் மாணவர்கள் அறிவியல், தொழில்நுட்பம், கலை மற்றும் இலக்கியம் ஆகிய ஒவ்வொரு துறையிலிருந்தும் தலா 25 மாணவர்கள், 2 ஆசிரியர்கள் மற்றும் ஒரு பணியாளர் வீதம் மொத்தம் 112 பேர் ரூ.3 கோடி செலவில் வெளிநாட்டு கல்விச்சுற்றுலா அனுப்பி வைக்கப்படுவார்கள். தற்போது முதல்கட்டமாக, பின்லாந்து அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு 50 மாணவர்கள் அறிவியல், தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் பின்லாந்து, சுவீடன் அழைத்துச் செல்ல ஏற்பாடு நடைபெற்று வருகிறது. மாவட்ட கல்வி அலுவலகங்கள் பள்ளிக் கல்வித்துறையின் செயல்பாடுகளை எளிமைப்படுத்துவதற்காக அதன் நிர்வாகத்தில் பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொண்டு 68 மாவட்ட கல்வி அலுவலகங்கள் நிர்வாக வசதிக்காக 120 மாவட்ட கல்வி அலுவலகங்களாக உயர்த்தப்பட்டுள்ளன. ரூ.200 கோடி செலவில் அரசுப் பள்ளிகளில் கூடுதல் வகுப்பறைகள், தளவாடங்கள், ஆய்வகங்கள், நூலகங்கள், கழிப்பறைகள், குடிநீர்வசதி மற்றும் சுற்றுச்சுவர் ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பள்ளிகளில் தூய்மைப் பணிகளை 100 நாள் வேலை வாய்ப்புத் திட்டப் பணியாளர்களைக் கொண்டு மேற்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஸ்மார்ட் கிளாஸ் சென்னையில் பள்ளிக் கல்வி இயக்கக டி.பி.ஐ. வளாகத்தில் எம்.ஜி.ஆரின் நினைவைப் போற்றும் வகையில் அவர் பெயரில், ஒரு லட்சம் சதுரஅடி பரப்பளவில் ரூ.39.90 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த கல்வித் துறைக்கான கட்டிடம் கட்டும் பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளன. 3 ஆயிரத்து 90 உயர்நிலைப் பள்ளிகளில் 10 கணினிகளுடனும், 2 ஆயிரத்து 939 மேல்நிலைப் பள்ளிகளுக்கு 20 கணினிகளுடனும் கூடிய ஹைடெக் ஆய்வகம் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 3 ஆயிரம் பள்ளிகளில் ஒரு பள்ளிக்கு தலா ரூ.2 லட்சம் வீதம் ரூ.60 கோடி செலவில் ஸ்மார்ட் கிளாஸ் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ரோபாடிக் பயிற்சி இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழக அரசுப் பள்ளிகளில் உலகத்தர தொழில்நுட்பத்தோடு ரோபாடிக் பயிற்சி வகுப்புகள் மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சிகள் தொடங்க பரிசீலித்து வருகிறது. கடைசியாக எடுத்த புள்ளி விவரத்தின்படி, இந்தியாவின் எழுத்தறிவு நிலை 74.04 சதவீதமாகும். தமிழகத்தின் எழுத்தறிவு சதவீதம் 80.3 ஆகும். தற்போதும்கூட, பள்ளிகளே இல்லாத பகுதிகளில் 20 புதிய தொடக்கப் பள்ளிகள் திறந்து அரசு சாதனை புரிந்துள்ளது. 2020-ம் ஆண்டிற்குள் நூலகங்களில் ஒரு கோடி உறுப்பினர்கள் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். உலகத் தமிழ்ச் சங்கம் கண்ட மதுரையில் ரூ.6 கோடி மதிப்பில் மாபெரும் நூலகம் அமைக்க ஆவன செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பதிலளித்துப் பேசினார். புதிய அறிவிப்புகள் அதைத் தொடர்ந்து பள்ளிக்கல்வித் துறைக்கான புதிய அறிவிப்புகளை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு:- அரசுப் பள்ளி ஆசிரியர்களின் வருகைப் பதிவு, பயோமெட்ரிக் என்ற தொட்டுணர் கருவி மூலம் நடைமுறைப்படுத்தப்படும். அரசுப் பள்ளிகளில் நூலகங்கள் அமைக்கப்படும். பாடத் திட்டத்துடன் திறன் சார்ந்த கல்வியைப் பெறும் வகையில் 2018-19-ம் ஆண்டில் 67 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் தொழிற்கல்வித் திட்டம் செயல்படுத்தப்படும். கன்னிமாரா பொதுநூலகம் 1896-ம் ஆண்டு கட்டப்பட்டு, 122 ஆண்டுகள் தொன்மை வாய்ந்த கன்னிமாரா பொதுநூலகம் புதுப்பிக்கப்படும். காஞ்சீபுரம், திருவள்ளூர், திருப்பூர் மாவட்ட நூலகங்கள் நவீன வசதியுடன் கூடிய மாதிரி நூலகமாக மேம்படுத்தப்படும். மாணவர்களை அரசுப் பள்ளிகளுக்கு ஈர்க்கும் திட்டம், வரும் கல்வி ஆண்டு முதல் அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்படும். அனைத்து ஒன்றியத் தலைமையிடங்களிலும் மாணவர்களுக்கான ஆதார் சேர்க்கை மையங்கள் உருவாக்கப்படும். ஒரு மாவட்டத்துக்கு ஒன்று வீதம் 32 மாவட்டங்களில் விளையாட்டு மேம்பாட்டுப் பள்ளிகள் ஏற்படுத்தப்படும். மாவட்ட மைய நூலகங்களில் பார்வையற்ற வாசகர்களுக்கென்று தனிப்பிரிவு தொடங்கப்படும். அரசுப் பள்ளிகள் இணைப்பு அனைத்து பள்ளிகளிலும் ஒவ்வொரு மாதமும் பெற்றோர் ஆசிரியர் கூட்டம் நடத்தப்படும். பேராசிரியர்களின் வழிகாட்டுதலைப் பெறும் வகையில் உயர் கல்வி நிறுவனங்களுடன் அரசுப் பள்ளிகள் இணைக்கப்படும். பிற மாநில அறிவியல், தொழில்நுட்பம், கல்வி சார்ந்த தேசிய நிறுவனங்களைப் பார்வையிட தமிழக மாணவர்களுக்கு வாய்ப்பு ஏற்படுத்தப்படும். பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கத்தின் கீழ், ரூ.160 கோடி திட்ட மதிப்பீட்டில், செயல்படுத்தப்படும் கற்கும் பாரதம் என்ற திட்டத்தின் நிதி விவரங்களை நிர்வகிக்க உதவிக் கணக்கு அலுவலர் என்ற பணியிடம் உருவாக்கப்படும். நூலகங்களில் வைபை படித்த இளைஞர்களுக்கு போட்டித் தேர்வுகள் குறித்த விவரங்களைப் பெறுவதற்காக மென்பொருள் உருவாக்கப்படும். சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், கோவை மாவட்ட நூலகங்களில் வைபை வசதி ஏற்படுத்தப்படும். தமிழ்நாடு அரசு கேபிள் தொலைத்தொடர்பு மூலம், கல்வி சார்ந்த காணொலிக் காட்சிகள் ஒளிபரப்பப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளின் கவுரவ விரிவுரையாளர் பணி வரைமுறை செய்யப்படும் அமைச்சர் கே.பி.அன்பழகன் அறிவிப்பு

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளின் கவுரவ விரிவுரையாளர் பணி வரைமுறை செய்யப்படும் அமைச்சர் கே.பி.அன்பழகன் அறிவிப்பு | அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்களின் பணி வரைமுறை செய்யப்படும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் அறிவித்தார். சுற்றுச்சுவர் தமிழக சட்டசபையில் உயர்கல்வித்துறை மானியக் கோரிக்கை மீது எம்.எல்.ஏ.க்கள் விவாதித்தனர். அவர்களுக்கு அந்தத் துறையின் அமைச்சர் கே.பி.அன்பழகன் பதிலளித்து பேசினார். பின்னர் அவர் வெளியிட்ட புதிய அறிவிப்புகள் வருமாறு:- தமிழகத்தில் தற்போது 98 அரசு கலை மற்றும் அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் பகுதி சுற்றுச்சுவர் உள்ள 83 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் 7 அரசு கல்வியியல் கல்லூரிகளுக்கு சுற்றுச்சுவர் அமைக்கப்படும். அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் 586 காவலர்கள், பெருக்குபவர்கள் மற்றும் துப்புரவாளர்கள் உள்ளிட்ட பணியிடங்கள் வெளிமுகமை மூலம் நிரப்பப்படும். ஊக்கத் தொகை உயர்வு அரசு மற்றும் அரசு உதவிபெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் தமிழ் வழியில் கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் அவர்களை ஊக்குவிக்கும் பொருட்டும் இக்கல்லூரிகளில் இளங்கலை மற்றும் இளமறிவியல் பட்ட வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஊக்கத்தொகை ரூ.400, 2018-19-ம் கல்வியாண்டு முதல் ரூ.900 என உயர்த்தி வழங்கப்படும். அரசு கலை மற்றும் அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 2 ஆயிரத்து 334 உதவிப்பேராசிரியர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் அறிவிக்கை வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்களின் பணி வரைமுறை செய்யப்படும். முதுநிலை பட்டப்படிப்பு கோவை அரசினர் பொறியியல் கல்லூரி வளாகத்தில் உள்ள ஆசிரியர் மேம்பாட்டு பயிற்சி நிலையத்திற்கு ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லா பணியிடங்கள் தோற்றுவிக்கப்படும். சேலம் அரசினர் பொறியியல் கல்லூரியில் எம்.இ. கம்யூனிகேசன் சிஸ்டம் என்ற முதுநிலை பட்டப்படிப்பு தொடங்கப்படும். பல்கலைக்கழகங்களுக்கு ரூ.25 கோடி ஆராய்ச்சி நிதி வழங்கப்படும். கிராமப்புற புதுமை விருது 1990-ம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை, சங்கரன்கோவில், பணகுடி ஆகிய இடங்களில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் மூன்று மனோ கல்லூரிகள் தொடங்கப்பட்டன. ஒவ்வொரு கல்லூரிக்கும் முதல் தளம் மற்றும் இரண்டாம் தளங்களுடன் கூடிய கூடுதல் கட்டிடங்கள் கட்டப்படும். அறிவியல் நகரத்தின் மூலமாக கிராமப்புற கண்டுப்பிடிப்பாளர்களுக்கு கிராமப்புற புதுமை விருது வழங்கப்படும். கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சு கிராமத்தில் குறுங்கோளரங்கம், முப்பரிமாண காட்சிக்கூடம் ஆகியவற்றை உள்ளடக்கிய மாவட்ட அறிவியல் மையம் அமைக்கப்படும். ஒருங்கிணைந்த கற்றல் தமிழ்நாடு மாநில உயர் கல்வி மன்றத்தின் மூலமாக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கான ஆங்கில மற்றும் வேலை வாய்ப்பு திறனுக்கான ஒருங்கிணைந்த கற்றல், பிரிட்டிஷ் கவுன்சில் உடன் இணைந்து அளிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

கல்லூரி நிர்வாக ஒதுக்கீட்டில் பயிலும் எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கான உதவித்தொகையை நிறுத்தக்கூடாது பிரதமருக்கு, எடப்பாடி பழனிசாமி கடிதம்

கல்லூரி நிர்வாக ஒதுக்கீட்டில் பயிலும் எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கான உதவித்தொகையை நிறுத்தக்கூடாது பிரதமருக்கு, எடப்பாடி பழனிசாமி கடிதம் | கல்லூரி நிர்வாக ஒதுக்கீட்டில் பயிலும் எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கான உதவித்தொகையை நிறுத்தக்கூடாது என பிரதமருக்கு, எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். விதியில் மாற்றம் பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி எழுதிய கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:- கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் நிர்வாக ஒதுக்கீட்டுக்கான கட்டணத்தை ஏப்ரல் மாதத்தில் இருந்து திரும்ப பெற முடியாது என்று கல்வி உதவித்தொகை திட்ட வழிகாட்டி விதியில் சமீபத்தில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. தமிழகத்தில் அதிக அளவில் எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினர் ஏழ்மை நிலையில் உள்ளனர். இவர்களால் ‘மெரிட்’ மூலம் அரசு இடஒதுக்கீட்டை பெற முடியாது. சுயநிதி கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் இவர்கள் படித்து, கல்வி உதவித்தொகை மூலம் பயனடைந்து வருகின்றனர். அதிருப்தி ஏற்படும் இந்த திட்டம் ஏராளமான மாணவர்களை உயர்கல்வி மற்றும் தொழில்நுட்ப கல்வியில் சேர வழிவகை செய்கிறது. ஒட்டுமொத்த கல்வி சேர்க்கை விகிதம், 45 சதவீதத்தை தாண்ட இந்த திட்டம் மிக பயனுள்ளதாக உள்ளது. எனவே புதிய விதிகளை வகுத்து, நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான கல்வி கட்டணத்தை திரும்ப பெற முடியாது என்று கூறுவதால், அவர்களுக்கு உயர் மற்றும் தொழில்நுட்ப கல்வி மறுக்கப்படுவதோடு, ஏற்றதாழ்வற்ற சமுதாயத்தை உருவாக்கும் இலக்கை அடைவதில் பின்னடைவு ஏற்பட்டுவிடும். மேலும் இது எஸ்.சி., எஸ்.டி. இனத்தவர் மத்தியில் அதிருப்தியை உருவாக்கும். நிலுவைத்தொகை சமூக நீதி, எஸ்.சி., எஸ்.டி. இனத்தவர் மேம்பாடு போன்றவற்றுக்கான திட்டங்களை வலுப்படுத்த அரசு எடுக்கும் முயற்சிகளை, திருத்தப்பட்ட வழிகாட்டி நீர்த்துப்போக செய்து விடும். மத்திய பட்ஜெட்டில் இதற்கான நிதி ஒதுக்கீடு பல ஆண்டுகளாக தேக்க நிலையில் உள்ளது. அந்த வகையில் மார்ச் மாதம் வரை தமிழக அரசுக்கு மத்திய அரசு தரவேண்டிய நிலுவைத்தொகை ஆயிரத்து 803 கோடியே 50 லட்சம் ஆகும். ஏற்கனவே இருக்கும் பயன்களை குறைப்பதற்காக விதிகளில் மாற்றங்களை கொண்டு வருவதற்கு பதிலாக, நிதி ஒதுக்கீட்டை மேலும் அதிகரிக்க வேண்டும். மற்ற மத்திய அரசு திட்டங்களில் உள்ளது போல, கல்வி உதவித்தொகை திட்டத்திலும் மத்திய மற்றும் மாநில அரசுகளின் பங்களிப்பு முறையே 60:40 சதவீதம் என்றளவில் இருக்க வேண்டும். நிறுத்தக்கூடாது எனவே இதில் நீங்கள் தலையிட்டு, எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களை பாதிக்கும் விதிகளை திரும்ப பெற நடவடிக்கை வேண்டும். கல்லூரி நிர்வாக ஒதுக்கீட்டில் பயிலும் எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கான உதவித்தொகையை நிறுத்தக்கூடாது. மேலும் இந்த திட்டத்தின் கீழ் மாநில அரசுக்கு தர வேண்டிய நிலுவைத்தொகையை விரைவாக மத்திய அரசு அளிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

188 அரசு பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி

188 அரசு பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பிளஸ் 1 பொதுத்தேர்வில் 7,070 மேல்நிலைப்பள்ளிகளில் இருந்து 8 லட்சத்து 47 ஆயிரத்து 648 மாணவ- மாணவிகளும், தனித்தேர்வர்களாக 16,020 பேரும் கலந்து கொண்டனர். தேர்வில் 2,054 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளன. மொத்தமுள்ள 2,724 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 188 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளன. மேலும், பிளஸ் 1 தேர்வெழுதிய 2,729 மாற்றுத்திறனாளிகளில் 2,450 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

பிளஸ்-2 விடைத்தாள் நகல் ஜூன் 2-ந் தேதி முதல் பதிவிறக்கம் செய்யலாம் மறுகூட்டல், மறுமதிப்பீட்டுக்கு 4-ந் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்

பிளஸ்-2 விடைத்தாள் நகல் ஜூன் 2-ந் தேதி முதல் பதிவிறக்கம் செய்யலாம் மறுகூட்டல், மறுமதிப்பீட்டுக்கு 4-ந் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் பிளஸ்-2 விடைத்தாள் நகல் ஜூன் மாதம் 2-ந் தேதி முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்றும், மறு கூட்டல், மறு மதிப்பீட்டுக்கு 4-ந் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்றும் அரசு தேர்வுகள் இயக்குனர் தண்.வசுந்தராதேவி தெரிவித்துள்ளார். இது குறித்து அரசு தேர்வுகள் இயக்குனர் தண்.வசுந்தராதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- விடைத்தாள் நகல் 2018-ம் ஆண்டு மார்ச் மாதம் பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதி விடைத்தாள்களின் நகல்கோரி விண்ணப்பித்த மாணவர்கள் அடுத்த(ஜூன்) மாதம் 2-ந் தேதி அன்று பிற்பகல் 2 மணி முதல் scan.tnd-ge.in என்ற இணையதளத்திற்குச் சென்று தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியினை பதிவு செய்து தாங்கள் விண்ணப்பித்த பாடங்களுக்குரிய விடைத்தாள்களின் நகலினை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். 4-ந் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் விடைத்தாள்களின் நகலினை பதிவிறக்கம் செய்தபிறகு மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க விரும்பினால் இதே இணையதள முகவரியில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இவ்விண்ணப்பப் படிவத்தினை பூர்த்தி செய்து, இரு நகல்கள் எடுத்து ஜூன் 4-ந் தேதி முதல் 6-ந் தேதி வரையிலான தேதிகளில் காலை 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் உரிய முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டிற்கான கட்டணத்தினை முதன்மைக் கல்வி அலுவலகத்தில் பணமாகச் செலுத்த வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

தமிழக அரசின் உதவித்தொகை பெற வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம் சென்னை மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் அறிவிப்பு

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை பெற, சாந்தோமில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழக அரசால் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித் தொகை வேலைவாய்ப்பு அலுவலகங்களால் வழங்கப்படுகிறது. 10-ம் வகுப்பு, பிளஸ் 2 மற்றும் பட்டப்படிப்பு போன்ற கல்வித்தகுதிகளைப் பெற்று, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளுக்கு மேல், வேலைவாய்ப்பின்றி காத்திருப்பவர்கள் உதவித்தொகை பெற, சாந்தோமில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை அணுக வேண்டும். 10-ம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்கள் உதவித்தொகை விண்ணப்பத்தைப் பெற, சாந்தோமில் உள்ள தொழில் திறனற்றோருக்கான மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை அணுக வேண்டும். வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓராண்டு உயிர்ப்பதிவேட்டில் உள்ள மாற்றுத்திறனாளிகள், கிண்டி மகளிர் தொழிற்பயிற்சி நிலையத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். வருமான உச்சவரம்பு இல்லை இவர்களுக்கு கல்வித்தகுதி, குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பு இல்லை. தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் உரிய விண்ணப்ப படிவத்தை சம்பந்தப்பட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பெற்று விண்ணப்பிக்கலாம். ஏற்கெனவே உதவித்தொகை பெற்று வரும் பயனாளிகளில் விண்ணப்பம் சமர்ப்பித்து ஓராண்டு முடிந்தவர்கள், சுய உறுதிமொழி ஆவணத்தை, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு எண், உதவித்தொகை எண் மற்றும் ஆதார் எண் ஆகிய விவரங்களுடன் நேரில் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புக்கான நீட் தேர்வு முடிவுகள் ஜூன் 5-ம் தேதி வெளியீடு

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு நடந்த நீட் தேர்வு முடிவுகளை வரும் 5-ம் தேதி வெளியிட சிபிஎஸ்இ திட்டமிட்டுள்ளது. நாடுமுழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள் மற்றும் ஆயுர்வேதா, யோகா மற்றும் இயற்கை மருத்துவம், சித்தா, ஓமியோபதி (ஆயுஷ்) படிப்புகளுக்கு 2018-19-ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு ( நீட்) கடந்த 6-ம் தேதி நடந்தது. மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) நடத்திய நீட் தேர்வை, இதற்கு விண்ணப்பித்திருந்த 13 லட்சத்து 26 ஆயிரத்து 775 மாணவர்களில் 90 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் எழுதினர். தமிழகத்தில் மட்டும் சுமார் 1 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வில் பங்கேற்றனர்.தமிழ், ஆங்கிலம், உட்பட மொத்தம் 11 மொழிகளில் நீட் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வு முடிவுகளை வரும் வரும் 5-ம் தேதி www.cbseneet.nic.in இணையதளத்தில் வெளி யிட சிபிஎஸ்இ திட்டமிட்டுள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Wednesday, 30 May 2018

பிளஸ் 1 வகுப்புகளுக்கான பொது தேர்வு முடிவுகள் | 91.3 சதவீதம் பேர் தேர்ச்சி..

பிளஸ் 1 வகுப்புகளுக்கான பொது தேர்வு முடிவுகள் இன்று வெளியாகி உள்ளன. இதில் மாணவ மாணவிகள் என 91.3 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் முதன் முறையாக பிளஸ்-1 மாணவ மாணவிகளுக்கு அரசு பொதுத்தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 8 லட்சத்து 61 ஆயிரத்து 915 பள்ளி மாணவ-மாணவிகளும், 1,753 தனித்தேர்வர்களும் எழுதினர். மொத்தத்தில் 8 லட்சத்து 63 ஆயிரத்து 668 பேர் தேர்வெழுதினர். விடைத்தாள் மதிப்பீடு செய்யப்பட்டு மதிப்பெண்கள் கம்ப்யூட்டரில் பதிவு செய்யும் பணி முடிவடைந்தது. இதையடுத்து பிளஸ்-1 தேர்வு முடிவுகள் இன்று காலை 9 மணிக்கு வெளியாகின. இதில் தேர்வு எழுதிய மாணவ மாணவிகளில் 91.3 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வு எழுதிய மாணவர்களில் 87.4 சதவீதம் பேரும், மாணவிகளில் 94.6 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த வருடம் மாணவர்களை விட மாணவிகள் 7.2 சதவீதம் பேர் அதிகளவில் தேர்ச்சி அடைந்துள்ளனர். இந்த தேர்வு முடிவில் 97.3 சதவீதம் தேர்ச்சியுடன் ஈரோடு முதலிடம் பிடித்துள்ளது. தொடர்ந்து 96.4 சதவீதம் தேர்ச்சியுடன் திருப்பூர் 2வது இடமும் மற்றும் 96.2 சதவீதம் தேர்ச்சியுடன் கோவை 3வது இடமும் பிடித்துள்ளன. 80.21 சதவீதம் தேர்ச்சியுடன் விழுப்புரம் கடைசியிடம் பிடித்துள்ளது. மொத்தம் 2,054 மேனிலை பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. இதேபோன்று 2,724 அரசு பள்ளிகளில் 188 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. | RESULT
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

PLUS ONE RESULT - MARCH 2018 | பிளஸ் 1 பொதுத்தேர்வின் முடிவுகள் இன்று (மே 30) காலை 9 மணிக்கு வெளியிடப்படுகின்றன.

இன்று பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவு இந்த ஆண்டு முதல்முறையாக நடத்தப்பட்ட பிளஸ் 1 பொதுத்தேர்வின் முடிவுகள் இன்று (மே 30) காலை 9 மணிக்கு வெளியிடப்படுகின்றன. கடந்த ஆண்டு வரையில் பிளஸ் 1 தேர்வானது பள்ளி அளவிலான சாதாரண தேர்வாகவே நடத்தப்பட்டு வந்தது. இந்த ஆண்டிலிருந்துதான் எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 போன்று பிளஸ் 1 தேர்வும் பொதுத்தேர்வாக மாற்றப்பட்டுள்ளது. அந்த வகையில், முதலாவது பிளஸ் 1 பொதுத்தேர்வு மார்ச் 7 முதல் ஏப்ரல் 16-ம் தேதி வரை நடைபெற்றது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பள்ளி மாணவ - மாணவிகள், தனித்தேர்வர்கள் என 8 லட்சத்து 63 ஆயிரம் பேர் தேர்வெழுதியுள்ளனர். இந்த நிலையில், ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி தேர்வு முடிவுகள் இன்று காலை 9 மணிக்கு வெளியிடப்படுகின்றன. மாணவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதளங்களில் பதிவெண் மற்றும் பிறந்த தேதியைக் குறிப்பிட்டு மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ள லாம்  www.tnresults.nic.in | www.dge1.tn.nic.in | www.dge2.tn.nic.in  DOWNLOAD
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

பள்ளிக்கல்வித் துறையின் நிர்வாக அமைப்பில் பல்வேறு புதிய மாற்றங்கள் | 52 புதிய கல்வி மாவட்டங்கள் பள்ளிக்கல்வித் துறை உத்தரவு...


பள்ளிக்கல்வித் துறையின் நிர்வாக அமைப்பில் பல்வேறு புதிய மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரி, மெட்ரிகுலேஷன் பள்ளிகள் ஆய்வாளர் ஆகிய பணியிடங்கள் மாவட்ட கல்வி அதிகாரிக்கு இணையான பதவியாக இருப்பதால் அப்பணியிடங்களை மாவட்ட கல்வி அதிகாரி பணியிடங்களாக மாற்ற முடிவுசெய்யப்பட்டது. அதன்படி, 32 மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரி பணியிடங்கள், 17 மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர் பணியிடங்கள், 2 மாவட்ட முறைசாரா கல்வி அலுவலர், ஒரு ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள் ஆய்வாளர் பணியிடங்கள் மாவட்ட கல்வி அதிகாரி பணியிடங்களாக தற்போது மாற்றப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து, புதிதாக 52 கல்வி மாவட்டங்களை தொடங்க பள்ளிக்கல்வித் துறையின் முதன்மைச் செயலர் பிரதீப் யாதவ் உத்தரவிட்டார். அதன்படி, 52 புதிய கல்வி மாவட்டங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. இதனால், கல்வி மாவட்டங்களின் எண்ணிக்கை 119 ஆக உயர்ந் துள்ளது. DOWNLOAD
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Tuesday, 29 May 2018

பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் நாளை (புதன்கிழமை) காலை 9 மணிக்கு வெளியிடப்படுகின்றன.

நாளை பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவு பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் நாளை (புதன்கிழமை) காலை 9 மணிக்கு வெளியிடப்படுகின்றன. பிளஸ் 1 பொதுத்தேர்வு மார்ச் 7-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 16-ம் தேதி முடிவடைந்தது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பள்ளி மாணவ-மாணவிகள், தனித்தேர்வர்கள் என 8 லட்சத்து 63 ஆயிரம் பேர் தேர்வெழுதியுள்ளனர். தேர்வு முடிந்தவுடன் விடைத்தாள்கள் திருத்தும் பணி தொடங்கியது. விடைத்தாள் மதிப்பீட்டுப்பணியும் அதைத்தொடர்ந்து, மதிப்பெண் பட்டியல் தயாரிக்கும் பணியும் விரைவாக மேற்கொள்ளப்பட்டன. இந்த நிலையில், ஏற்கெனவே, அறிவிக்கப்பட்டபடி, பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் நாளை (மே 30 புதன்கிழமை) காலை 9 மணிக்கு வெளியிடப்படுகின்றன. தேர்வு முடிவுகள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்ட அடுத்த சில வினாடிகளில் தேர்வெழுதிய அனைத்து மாணவர்களுக்கும், தனித்தேர்வர்களுக்கும் தேர்வுக்கு விண்ணப்பித்தபோது அவர்கள் அளித்திருந்த செல் போன் எண்ணுக்கு மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகள் குறுஞ்செய்தி (எஸ்எம்எஸ்) மூலமாக அனுப்பப்படும். மேலும் மாணவர்கள் தேர்வு முடிவுகளை கீழே கொடுக்கப்பட்டுள்ள அரசு தேர்வுத்துறையின் இணையதளங்களிலும் மதிப் பெண் விவரங்களுடன் அறிந்து கொள்ளலாம். www.tnresults.nic.in www.dge1.tn.nic.in www.dge2.tn. nic.in எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 பொதுத் தேர்வுகளில் ரேங்க் பட்டியல் வெளியிடும் முறை கடந்த ஆண்டு நிறுத்தப்பட்டது. அதன்படி, கடந்த 16-ம் தேதி வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவின்போதும், 23-ம் தேதி வெளியான எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவின்போதும் ரேங்க் பட்டி யல் வெளியிடப்படவில்லை. அதேபோல, நாளை வெளியாக உள்ள பிளஸ் 1 தேர்வு முடிவிலும் ரேங்க் பட்டியல் வெளியிடப் படாது. கடந்த 2017-ம் ஆண்டு வரை பிளஸ் 1 தேர்வு பள்ளி அளவிலான சாதாரண வருடாந்திர தேர்வாகவே நடத்தப்பட்டது. இந்த ஆண்டிலிருந்துதான் முதல்முறையாக பொதுத்தேர்வாக நடத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தேர்வு முடிவு வெளியான பிறகு அனைவரும் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும். மாணவர்கள் ஒருவேளை தேர்வில் தோல்வி அடைந்தாலும் அவர்கள் கவலைப்படத் தேவையில்லை. அனைத்து மாணவர்களுமே 12-ம் வகுப்பு சென்றுவிடலாம். தேர்ச்சிபெறாத பாடங்களை சிறப்பு துணைத்தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுவிடலாம். அடுத்த ஆண்டு பிளஸ் 2 தேர்வை முடிக்கும்போது இரு பொதுத்தேர்வுகளின் (பிளஸ் 1, பிளஸ் 2) மதிப்பெண்கள் அடங்கிய தொகுப்பு மதிப்பெண் பட்டியல் (Consolidated Marksheet) வழங்கப்படும்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

ஓய்வூதிய நலத்திட்டங்களுக்கு விண்ணப்பித்தவர்கள் வங்கிகளில் ஏ.டி.எம். கார்டை பெற்றுக்கொள்ளலாம் வருவாய்த்துறை அறிவிப்பு

ஓய்வூதிய நலத்திட்டங்களுக்கு விண்ணப்பித்தவர்கள் வங்கிகளில் ஏ.டி.எம். கார்டை பெற்றுக்கொள்ளலாம் வருவாய்த்துறை அறிவிப்பு | தமிழக அரசு வருவாய் நிர்வாக கமிஷனர் சத்யகோபால் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு அரசு சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் சமுதாயத்தில் நலிவடைந்த பிரிவினரின் நலனுக்காக முதியோர் ஓய்வூதியம், மாற்றுத் திறனாளிகளுக்கான ஓய்வூதியம் மற்றும் விதவைகள் ஓய்வூதியம் உள்ளிட்ட 9 வகையான ஓய்வூதிய நலத்திட்டங்களை வழங்கி வருகிறது. மேற்படி ஓய்வூதியம் பெறும் பயனாளிகளின் நலனுக்காக தொடர்புடைய வங்கிகளின் மூலம் பணப்பற்று அட்டை (ஏ.டி.எம்./ ரூபே கார்டு) வழங்க மாநில வங்கி ஒருங்கிணைப்பாளர்களின் குழுமத்திடம் கேட்டுக் கொள்ளப்பட்டதற்கிணங்க, முதற்கட்டமாக பணப்பற்று அட்டை தேவை என விண்ணப்பம் அளித்த பயனாளிகளுக்கு தொடர்புடைய வங்கிகள் மூலம் பணப்பற்று அட்டை வழங்க வங்கிகள் தயார் நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பணப்பற்று அட்டை பெற விண்ணப்பித்துள்ள பயனாளிகள் தொடர்புடைய வங்கிகளை அணுகி தங்களுக்கான பணப்பற்று அட்டையை பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இதுவரை பணப்பற்று அட்டை கோரி விண்ணப்பிக்காதவர்கள் அதற்கான விண்ணப்பத்தினை தொடர்புடைய வங்கியில் உடனடியாக சமர்ப்பிக்குமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு தேர்வு முடிவு இன்று வெளியீடு

சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு தேர்வு முடிவு இன்று வெளியீடு | இந்தியா முழுவதும் மார்ச் 4-ந்தேதி சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு தேர்வு தொடங்கியது. இந்த தேர்வு ஏப்ரல் 4-ந்தேதி வரை நடைபெற்றது. தேர்வை 16 லட்சத்து 38 ஆயிரத்து 428 மாணவ-மாணவிகள் எழுதினார்கள். தேர்வு முடிவு இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிடப்படுகிறது. தேர்வு முடிவை மாணவ-மாணவிகள் www.results.nic.in, www.cbseresults.nic.in , www.cbse.nic.in ஆகிய இணைய தளங்களில் பார்க்கலாம்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

1, 6, 9, 11-ம் வகுப்புகளுக்கு இந்த வருடம் அமல் வீடியோ, ஆடியோ வசதியுடன் புதிய பாடத்திட்டம் கல்வித்துறை பாடத்திட்ட செயலாளர் உதயச்சந்திரன் தகவல்

1, 6, 9, 11-ம் வகுப்புகளுக்கு இந்த வருடம் அமல் வீடியோ, ஆடியோ வசதியுடன் புதிய பாடத்திட்டம் கல்வித்துறை பாடத்திட்ட செயலாளர் உதயச்சந்திரன் தகவல் 1, 6, 9, 11-ம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் வருகிற கல்வி ஆண்டில் அறிமுகப்படுத்தப்படுகிறது. மாணவர்கள் வீடியோ மற்றும் ஆடியோ வசதியுடன் பாடப்புத்தகங்களை விரும்பி படிக்கும் வகையில் இந்த பாடத்திட்டம் உருவாக்கப்பட்டு உள்ளது என்று பள்ளிக்கல்வித்துறை பாடத்திட்ட செயலாளர் த.உதயச்சந்திரன் கூறினார். பல வருடங்களுக்கு பிறகு தமிழகத்தில் புதிய பாடத்திட்டம் 1, 6, 9, 11 ஆகிய 4 வகுப்புகளுக்கு 2018-2019-ம் கல்வி ஆண்டில் அறிமுகப்படுத்தப்படுகிறது. இதுகுறித்து சென்னையில் பள்ளிக்கல்வித்துறை பாடத்திட்ட செயலாளர் த.உதயச்சந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:- பள்ளிக்கூட அளவில் புதிய பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது. இதற்காக இந்தியாவில் சிறப்பான பாடப்புத்தகங்களை கொண்டுள்ள முக்கிய மாநிலங்கள் மற்றும் சிங்கப்பூர் உள்பட பல வெளிநாடுகளில் பாடப்புத்தகங்கள் எவ்வாறு உள்ளன என்று முதலில் ஆய்வு செய்யப்பட்டது. அதில் உள்ள நல்ல கருத்துகள் மட்டும் எடுக்கப்பட்டு புதிய பாடத்திட்டம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. ஒவ்வொரு பாடப்புத்தகத்திலும், ஒவ்வொரு பாடத்திலும் அதை விரிவாக மாணவர்கள் படிக்க விரும்பினால் அதற்க ான புத்தகங்களின் தலைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. அகராதி பாடப்புத்தகங்களை தமிழிலும், ஆங்கிலத்திலும் படிக்கலாம். அதன் காரணமாக ஒவ்வொரு புத்தகத்திலும், ஒவ்வொரு பாடத்திலும் வார்த்தைகள் அகராதி போல இடம் பெற்றுள்ளன. அதாவது தமிழ்மொழியில் இருந்து ஆங்கிலத்திலும், ஆங்கிலத்தில் இருந்து தமிழிலும் மொழி பெயர்க்கப்பட்ட அர்த்தங்கள் இடம் பெற்றுள்ளன. அவை பாடத்தின் பின்புறத்திலும் மட்டுமல்ல, புத்தகத்தின் பின்பக்கத்திலும் இடம் பெற்று இருக்கிறது. 11-வது வகுப்பு, 12-வது வகுப்பு மாணவ-மாணவிகள் ‘நீட்’ உள்ளிட்ட போட்டித் தேர்வை எதிர்கொள்ள பாடப்புத்தகங்களில் கடந்த சில ஆண்டுகளில் கேட்கப்பட்ட கேள்விகள் மற்றும் பதில்களுடன் இடம் பெற்றுள்ளன. பாடங்கள் அனைத்தும் மாணவர்கள் விரும்பி படிக்கும் வகையில் பல வண்ணங்களில் அமைக்கப்பட்டு இருக்கிறது. 11-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு மாணவ-மாணவிகள் அடுத்து என்ன படித்தால் நல்லது என்பதை அறிந்து கொள்ளும் பொருட்டு அந்த படிப்புகளின் முழு விவரமும் கொடுக்கப்பட்டுள்ளன. மருத்துவம், என்ஜினீயரிங் மற்றும் நிறைய படிப்புகள் உள்ளன. என்ன படிப்பை எங்கே படிக்கலாம் என்ற விவரமும் தொகுத்து தரப்பட்டு இருக்கிறது. அதன்மூலம் மாணவ- மாணவிகள் மேல்படிப்பை மேற்கொள்வது பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள முடியும். பாடங்களில் விரைவு கோடு முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதை இணையதளம் கொண்ட செல்போனில் படம் எடுத்து அதை செயல்படுத்தினால் அதற்குரிய வீடியோ மற்றும் ஆடியோவை காணலாம். அவை அனைத்தும் பாடத்துடன் இணைந்ததுதான். அந்த விரைவு கோட்டை பள்ளிகளில் கம்ப்யூட்டர் மூலம் பயன்படுத்தி மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. அதாவது வீடியோ மற்றும் ஆடியோ வசதியுடன் புதிய பாடத்திட்டம் அமைந்திருக்கிறது. பாடப்புத்தகத்தில் இடம் பெற்றுள்ள ஒரு பாடலை வீடியோ மற்றும் ஆடியோ வாயிலாக வழங்கினால் மாணவர்கள் மகிழ்ச்சியுடன் பார்த்து படிப்பார்கள். தொழிற்கல்வி மாணவ- மாணவிகளுக்கு பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்பட்டு 20 வருடங்கள் ஆகி விட்டது. எனவே அந்த பாடத்திட்டம் முழுமையாக மாற்றி அமைக்கப்பட்டு இருக்கிறது. அதிகம் கம்ப்யூட்டர் படிக்கும்படி பாடத்திட்டம் உள்ளது. அடிப்படை எந்திரவியல், அடிப்படை பொறியியல், அடிப்படை மின் பொறியியல், அடிப்படை மின்அணு பொறியியல், அடிப்படை கட்டிட பொறியியல், ஊர்தி பொறியியல், நெசவியல், செவிலியம், வேளாண் அறிவியல் உள்ளிட்ட தொழில்கல்வி படிப்புகளில் நிறைய மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த பாடத்திட்டம் மாணவர்களின் அறிவு சிந்தனையை தூண்டி வேலை வாய்ப்பை முன்நிறுத்தியும் போட்டித்தேர்வை எதிர்கொள்ளும் வகையிலும் அமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த பாடத்திட்டம் குறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. முதலில் மாநில அளவில் ஆசிரியர்களுக்கு 2 நாள் பயிற்சி அளிக்கப்படும். அதன்பிறகு மாவட்டத்தின் முன்னணி ஆசிரியர்களுக்கு பயிற்சி தரப்படும். அவர்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆசிரியர்களுக்கும் பயிற்சி அளிப்பார்கள். ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பாடம் சொல்லிக்கொடுக்கும் பணி பாதிக்காத வகையில் 2 நாட்கள் பயிற்சி அளிக்கப்படும். ஒவ்வொரு பருவத்திற்கும் ஆசிரியர்களுக்கு பயிற்சி தரப்படும். பயிற்சி அளிக்க அட்டவணை வெளியிடப்படும். இவ்வாறு இவ்வாறு தெரிவித்தார்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

8 லட்சத்து 63 ஆயிரம் பேர் எழுதிய பிளஸ்-1 தேர்வு முடிவுகள் நாளை (புதன்கிழமை) காலை 9 மணிக்கு வெளியிடப்படுகிறது.


8 லட்சத்து 63 ஆயிரம் பேர் எழுதிய பிளஸ்-1 தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு | 8 லட்சத்து 63 ஆயிரம் பேர் எழுதிய பிளஸ்-1 தேர்வு முடிவுகள் நாளை (புதன்கிழமை) வெளியிடப்படுகிறது. பிளஸ்-1 தேர்வு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் முதன் முறையாக பிளஸ்-1 மாணவ-மாணவிகளுக்கு அரசு பொதுத்தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 8 லட்சத்து 61 ஆயிரத்து 915 பள்ளி மாணவ-மாணவிகளும், 1,753 தனித்தேர்வர்களும் எழுதினர். மொத்தத்தில் 8 லட்சத்து 63 ஆயிரத்து 668 பேர் தேர்வெழுதினர். மேலும், வேலூர், கடலூர், புதுக்கோட்டை, கோவை, மதுரை, பாளையங்கோட்டை, திருச்சி மற்றும் புழல் சிறைகளில் 62 ஆண் கைதிகள் புழல் சிறையில் அமைக்கப்பட்டு இருந்த தேர்வு மையத்தில் தேர்வெழுதினர். நாளை வெளியீடு மாணவ-மாணவிகள் காப்பி அடிப்பதை தடுக்க 4,000 பேர் கொண்ட பறக்கும் படை அமைக்கப்பட்டிருந்தது. விடைத்தாள் மதிப்பீடு செய்யப்பட்டு மதிப்பெண்கள் கம்ப்யூட்டரில் பதிவு செய்யும் பணி முடிவடைந்து உள்ளது. இதையடுத்து பிளஸ்-1 தேர்வு முடிவுகள் நாளை (புதன்கிழமை) காலை 9 மணிக்கு வெளியிடப்படுகிறது. இந்த தேர்வு முடிவுகளை ( www.tnresults.nic.in, www.dge.tn.nic.in, www.dge2.tn.nic.in ) என்ற இணையதளங்களில் தெரிந்து கொள்ளலாம். DOWNLOAD
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Monday, 28 May 2018

பொதுத்துறை நிறுவனத்தில் ஐ.டி.ஐ. அப்ரண்டிஸ் டிரெயினி பயிற்சிப் பணிக்கு விண்ணப்பம்

பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்று, சொசைட்டி பார் அப்ளைடு மைக்ரோவேவ் எலக்ட்ரானிக்ஸ் என்ஜினீயரிங் அண்ட் ரிசர்ச் (சாமீர்). தற்போது இந்த நிறுவனத்தில் ஐ.டி.ஐ. அப்ரண்டிஸ் டிரெயினி பயிற்சிப் பணிக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 42 பேர் தேர்வு செய்யப்படுவார்கள். பிட்டர், டர்னர், மெஷினிஸ்ட், வெல்டர், எலக்ட்ரீசியன், எலக்ட்ரோ பிளேட்டர், எலக்ட்ரானிக் மெக்கானிக், ஐ.டி. இ.எஸ்.எம். போன்ற பிரிவில் பணியிடங்கள் உள்ளன. விண்ணப்பதாரர்கள் 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் ஐ.டி.ஐ. படித்திருக்க வேண்டும் அல்லது 12 படித்திருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் இதற்கான நேர்காணலில் பங்கேற்கலாம். மும்பையில் 28-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை நேர்காணல் நடக்கிறது. விரிவான விவரங்களை www.sameer.gov.in என்ற இணையதளத்தில் பார்த்துவிட்டு தேவையான சான்றுகளுடன் நேரில் ஆஜராகலாம்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

காப்பீட்டு நிறுவனத்தில் பணி

காப்பீட்டு நிறுவனம் : ஜெனரல் இன்சூரன்ஸ் கார்ப்பரேசன் ஆப் இந்தியா ( ஜி.ஐ.சி.) என்பது பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களில் ஒன்றாகும். தற்போது இந்த நிறுவனத்தில் ஸ்கேல் 1 தரத்திலான உதவி மேலாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. 21 முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். ஏதேனும் ஒரு பிரிவில் முதுநிலை பட்டப்படிப்பை 60 சதவீத மதிப்பெண்களுடன் நிறைவு செய்தவர்கள் விண்ணப்பிக்கலாம். முதுநிலை இந்தி, ஆங்கிலம் படித்தவர்களுக்கும் பணியிடம் உள்ளது. விண்ணப்பதாரர்கள் 8-5-2018-ந் தேதியில் 21 முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். விருப்பம் உள்ளவர்கள் 29-5-2018-ந் தேதிக்குள் இணையதள விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும். எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இது பற்றிய விவரங்களை gicofindia.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

விக்ரம் சாராபாய் அணுசக்தி மையத்தில் ஆராய்ச்சி உதவியாளர், டெக்னீசியன் பணி

மும்பையில், விக்ரம் சாராபாய் அணுசக்தி மையத்தில் ஆராய்ச்சி உதவியாளர், டெக்னீசியன் உள்ளிட்ட பணிகளுக்கு 36 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். சிவில், எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், ஐ.டி., கம்ப்யூட்டர் சயின்ஸ் போன்ற என்ஜினீயரிங் பட்டப்படிப்பு மற்றும் இதர அறிவியல் கலை பட்டப்படிப்பு படித்தவர்களுக்கும் பணியிடங்கள் உள்ளன. 10-ம் வகுப்பு படித்தவர் களுக்கு டிரைவர் பணியிடங்கள் உள்ளன. அதிகபட்சம் 35 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். வெவ்வேறு பணிக்கும் வயது வரம்பு வேறுபடுவதால் அந்தந்த பணிக்கான வயது வரம்பை இணையதளத்தில் பார்க்கலாம். விருப்பமுள்ளவர்கள் குறிப்பிட்ட கட்டணம் செலுத்தி 4-6-2018-ந் தேதி இணையதள விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். இது பற்றிய விவரங்களை http://dcsem.gov.in/ என்ற இணையதள பக்கத்தில் பார்க்கலாம்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

ஐ.ஐ.டி. கல்வி மையத்தில், பதிவாளர், உதவி பதிவாளர், உதவியாளர் பணி

புவனேஸ்வரில் செயல்படும் ஐ.ஐ.டி. கல்வி மையத்தில், பதிவாளர், உதவி பதிவாளர், உதவியாளர், சூப்பிரண்டென்டிங் என்ஜினீயர், அசிஸ்டன்ட் என்ஜினீயர், ஜூனியர் அக்கவுண்ட்ஸ் ஆபீசர், டெக்னீசியன், டிரைவர் போன்ற பணிகளுக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 42 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். 30 வயது முதல் 57 வயதுடையவர்களுக்கு பணிவாய்ப்பு உள்ளது. அந்தந்த பணிக்கான வயது வரம்பை இணையதளத்தில் பார்க்கலாம். இளநிலை பட்டப்படிப்பு, முதுநிலை பட்டப்படிப்பு, பி.இ., பி.டெக் படிப்பு படித்தவர்கள், டிப்ளமோ படிப்பு படித்தவர்களுக்கு வாய்ப்பு உள்ளது. எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர், மாற்றுத் திறனாளிகள், பெண் விண்ணப்பதாரர்கள், மூன்றாம் பாலினத்தவர் தவிர்த்த மற்றவர்கள் ரூ.500 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம். விருப்பமும், தகுதியும் இருப்பவர்கள் 9-6-2018-ந் தேதிக்குள் இணையதள விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். இது பற்றிய விவரங்களை http://www.iitbbs.ac.in/ என்ற இணையதளத்தில் பார்த்துவிட்டு விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

வேளாண்மை ஆராய்ச்சியாளர்கள் தேர்வு வாரிய அறிவிப்பு

வேளாண்மை ஆராய்ச்சியாளர்கள் தேர்வு வாரியம் (ஏ.எஸ்.ஆர்.பி.) நிறுவனம் குறிப்பிட்ட பிரிவுகளில் இயக்குனர், துணை இயக்குனர், உதவி இயக்குனர், திட்ட இயக்குனர், திட்ட துணை இயக்குனர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப விண்ணப்பம் கோரி உள்ளது. மொத்தம் 31 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். விண்ணப்பதாரர்கள் 4-6-2018-ந் தேதியில் 60 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். இவர்கள் வேளாண்மை சார்ந்த குறிப்பிட்ட பாடப் பிரிவுகளில் பி.எச்டி. படித்திருப்பதுடன், குறிப்பிட்ட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் ரூ.1500 கட்டணம் செலுத்தி தபால் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் 4-6-2018-ந் தேதிக்குள் குறிப்பிட்ட முகவரியைச் சென்றடைய வேண்டும். இது பற்றிய விவரங்களை http://asrb.org.in/ என்ற இணையதள முகவரியில் பார்க்கலாம்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

தேசிய அனல்மின் நிறுவனத்தில் பணி

தேசிய அனல்மின் நிறுவனம் (என்.டி.பி.சி.) தென் மண்டல கிளையில் இருந்து டிப்ளமோ என்ஜினீயர்களை டிரெயினி பணியிடங்களை நிரப்ப விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 30 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். பிரிவு வாரியாக மெக்கானிக்கல் - 14 இடங்கள், எலக்ட்ரிக்கல் - 10, சி.அண்ட் ஐ - 6 இடங்கள் உள்ளன. எலக்ட்ரிக்கல், எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ், மெக்கானிக்கல், இன்ஸ்ட்ருமென்டேசன், எலக்ட்ரானிக்ஸ், புரொடக்சன் போன்ற பிரிவில் டிப்ளமோ என்ஜினீயரிங் படித்தவர்கள் விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் 9-5-2018 தேதியில் 25 முதல் 35 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினர் ரூ.300 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பு மற்றும் கட்டணத்தில் விலக்கு அனுமதிக்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இணைய தளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 4-6-2018-ந் தேதியாகும். இது பற்றிய விவரங்களை http://www.ntpccareers.net/ என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

இந்தியன் ஆயில் நிறுவனத்தில் ஆபரேட்டர் பணி:

இந்தியன் ஆயில் நிறுவனத்தில் ஆபரேட்டர் பணி: இந்தியன் ஆயில் கழக நிறுவனம் சுருக்கமாக ஐ.ஓ.சி.எல். எனப்படுகிறது. மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான இதன் தெற்கு மண்டல கிளையின் விற்பனை பிரிவில் ஜூனியர் ஆபரேட்டர் மற்றும் ஜூனியர் ஆபரேட்டர் (ஏவியேசன்) பணிக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 58 பேர் தேர்வு செய்யப் படுகிறார்கள். ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு, புதுச்சேரி போன்ற இடங்களில் பணியிடங்கள் உள்ளன. 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் 2 ஆண்டு ஐ.டி.ஐ. படிப்பு படித்தவர்கள், 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று ஹெவி லைசென்சு பெற்றவர்கள் போன்றோர் விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் இணையதளத்தில் முழுமையான விவரங்களைப் பார்த்துவிட்டு விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். ரூ.150 கட்டணம் செலுத்த வேண்டும். 16-6-2018-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். எழுத்துத் தேர்வு 30-7-2018-ந் தேதி நடக்க உள்ளது. இது பற்றிய விவரங்களை www.iocl.com என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

டிப்ளமோ என்ஜினீயர்களுக்கு உர நிறுவனத்தில் பணிகள்

டிப்ளமோ என்ஜினீயர்களுக்கு உர நிறுவனத்தில் பணிகள் தேசிய உர நிறுவனத்தில் டிப்ளமோ என்ஜினீயர் களுக்கு வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இது பற்றிய விவரம் வருமாறு:- தேசிய உர நிறுவனம் சுருக்கமாக என்.எப்.எல் என அழைக்கப்படுகிறது. இது மினி ரத்னா அந்தஸ்து பெற்ற பொதுத் துறை நிறுவனமாகும். இந்த நிறுவனம் உரம் தயாரிப்பு மற்றும் விற்பனை மற்றும் அது சார்ந்த வேளாண் ஆய்வுப் பணிகளில் ஈடுபடுகிறது. தெலுங்கானா, அரியானா, பஞ்சாப், உத்தரபிரதேசம் உள்ளிட்ட 7 இடங்களில் இதன் கிளைகள் செயல்படுகிறது. உத்தரபிரதேசத்தில் செயல்படும் இதன் தலைமை நிறுவனத்தில் இருந்து தற்போது ஜூனியர் என்ஜினீயரிங் அசிஸ்டன்ட் மற்றும் தீயணைப்பு வீரர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 129 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் ஜூனியர் என்ஜினீயரிங் அசிஸ்டன்ட் பணிக்கு மட்டும் 127 பேர் தேர்வு செய்யப் படுவது குறிப்பிடத்தக்கது. பதிண்டா, பானிபட், விஜய்பூர், நங்கல் போன்ற கிளைகளில் இந்த பணியிடங்கள் உள்ளன. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்ப்போம்... வயது வரம்பு : விண்ணப்பதாரர்கள் 18 வயது பூர்த்தி அடைந்தவர் களாகவும், 30 வயதுக்கு உட்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும். கல்வித்தகுதி: மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், இன்ஸ்ட்ருமென்டேசன், புரொடக்சன் போன்ற பிரிவுகளில் டிப்ளமோ என்ஜினீயரிங் மற்றும் பி.எஸ்.சி. அறிவியல் பட்டப்படிப்புகள் படித்தவர்கள் ஜூனியர் என்ஜினீயரிங் அசிஸ்டன்ட் பணிக்கு விண்ணப்பிக்கலாம். 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் தீயணைப்பு வீரர் பணிக்கு விண்ணப்பிக்கலாம். கட்டணம் : விண்ணப்பதாரர்கள் ரூ.235 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் முன்னாள் படைவீரர்கள், மாற்றுத் திறனாளிகள் போன்றோர் இந்த கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. தேர்வு செய்யும் முறை: ஆன்லைன் தேர்வு மற்றும் உடல்தகுதி, சான்றிதழ் சரிபார்த்தல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். ஓட்டப்பயிற்சி, எடை தூக்குதல், கயிற்றில் ஏறுதல், பார்வைத்திறன் சோதனை போன்றவற்றின் அடிப்படையில் குறிப்பிட்ட உடல் தகுதி சோதிக்கப்படும். விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசிநாள் 17-6-2018-ந் தேதியாகும். இதற்கான ஆன்லைன் தேர்வு 7-7-2018 அன்று நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கவும் விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் nflrecruitment@nfl.co.in என்ற இணையதள பக்கத்தைப் பார்க்கலாம்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

கொங்கன் ரெயில்வேயில் வேலை

கொங்கன் ரெயில்வேயில் வேலை இந்திய ரெயில்வே துறையின் கீழ் செயல்படும் துணை நிறுவனம் கொங்கன் ரெயில்வே. மகாராஷ்டிராவில் இருந்து கர்நாடகா வரை இதன் ரெயில்வே சேவை நடக்கிறது. இது மற்ற ரெயில்வே மண்டலங்களின் கீழ் வருவதில்லை. தற்போது இந்த கொங்கன் ரெயில்வே நிறுவனத்தில் டிராக்மேன், கலாசி உள்ளிட்ட பணிகளுக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 100 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் டிராக்மேன் பணிக்கு 50 பேரும், ஏ பிமேன் பணிக்கு 37 பேரும், கலாசி பணிக்கு 13 பேரும் தேர்வு செய்யப்படுகிறார்கள். இந்த பணிகளுக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பதாரர்கள் 1-7-2018-ந் தேதியில் 18 முதல் 31 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும். சி.பி.டி. எனப்படும் கணினித் தேர்வு, மருத்துவ பரிசோதனை ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பதாரர்கள் ரூ.500 கட்டணம் செலுத்த வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் முன்னாள் படைவீரர்கள், பெண் விண்ணப்பதாரர்கள் ரூ.250 கட்டணம் செலுத்தினால் போது மானது. விருப்பமும், தகுதியும் இருப்பவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். 21-6-2018-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். இது பற்றிய விரிவான விவரங்களை http://konkanrailway.com/ என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

அணுசக்தி நிறுவனங்களில் ஆராய்ச்சியாளர், டெக்னீசியன் வேலை

அணுசக்தி நிறுவனங்களில் ஆராய்ச்சியாளர், டெக்னீசியன் வேலை 477 காலியிடங்கள் அணுசக்தி நிறுவனங்களில் ஆராய்ச்சியாளர், டெக்னீசியன் போன்ற பணிகளுக்கு 477 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:- மத்திய அணுசக்தி துறையின் கீழ் பல்வேறு அணுமின் நிறுவனங்கள் மற்றும் அணுசக்தி ஆராய்ச்சி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. தற்போது கல்பாக்கத்தில் செயல்படும் இந்திரா காந்தி அணுசக்தி ஆராய்ச்சி மையத்தில் தொழில்நுட்ப அதிகாரி, ஆராய்ச்சி உதவியாளர், ஸ்டிபென்டரி டிரெயினி உள்ளிட்ட பணியிடங்களுக்கு 248 பேரை தேர்வு செய்ய அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதேபோல மும்பையில் இயங்கும் அணுசக்தி கனநீர் வாரிய நிறுவனத்தில் 229 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இதில் டெக்னீசியன், ஆராய்ச்சி அதிகாரி, நர்ஸ் போன்ற பணியிடங்கள் உள்ளன. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை அறிவோம்... கல்பாக்கம் கல்பாக்கம் அணுசக்தி ஆராய்ச்சி மையத்தில் உள்ள 248 பணியிடங்களில் இட ஒதுக்கீடு அடிப்படையில் பொது பிரிவினருக்கு 122 இடங்களும், ஓ.பி.சி. பிரிவினருக்கு 58 இடங்களும், எஸ்.சி. பிரிவினருக்கு 48 இடங்களும், எஸ்.டி. பிரிவினருக்கு 20 இடங்களும் உள்ளன.அதிகபட்சமாக ஸ்டிபென்டரி டிரெயினி பணிக்கு மட்டும் 197 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். ஆர்கிடெக்சர், சிவில், சேப்டி, மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், இன்ஸ்ட்ருமென்டேசன், கெமிக்கல், கெமிஸ்ட்ரி போன்ற பிரிவில் டிப்ளமோ என்ஜினீயரிங், என்ஜினீயரிங் பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு பணியிடங்கள் உள்ளன. ஐ.டி.ஐ. படித்தவர்களுக்கும் கணிசமான பணியிடங்கள் உள்ளன. அந்தந்த பணிக்கான கல்வித்தகுதி, வயது வரம்பு விவரங்களை இணையதளத்தில் பார்க்கலாம். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 17-6-2018-ந் தேதியாகும். இது பற்றிய விரிவான விவரங்களை www.igcar.gov.in என்ற இணையதள விண்ணப்பத்தை பார்க்கலாம். மும்பை கனநீர் வாரியம் மும்பை அணுசக்தி கனநீர் வாரிய நிறுவனத்தில் ஸ்டிபென்டரி டிரெயினி, டெக்னீசியன், சயின்டிபிக் ஆபீசர் போன்ற பணிக்கு 229 இடங்கள் உள்ளன. கெமிக்கல், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், கெமிஸ்ட்ரி, பயோசயின்ஸ் போன்ற பிரிவில் டிப்ளமோ என்ஜினீயரிங் படித்தவர்கள் ஸ்டிபென்டரி டிரெயினி பணிக்கு விண்ணப்பிக்கலாம். 12-ம் வகுப்பு அறிவியல் பிரிவில் படித்தவர்கள் மற்றும் 10-ம் வகுப்பு தேர்ச்சிக்குப்பின் ஐ.டி.ஐ. படித்தவர்களுக்கும் கணிசமான பணியிடங்கள் உள்ளன. இவர்கள் எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், டர்னர், மெஷினிஸ்ட், வெல்டர் போன்ற பிரிவில் ஐ.டி.ஐ. படித்தவர்களாக இருக்க வேண்டும். என்ஜினீயரிங் தொழில்நுட்ப பட்டப்படிப்பு படித்தவர்கள், மருத்துவ பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு ஆராய்ச்சி அதிகாரி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். ஒவ்வொரு பணிக்கும் வயது வரம்பு, கல்வித்தகுதி வேறுபடுகிறது. அந்தந்த பணிக்கான வயது வரம்பு, கல்வித்தகுதியை இணையதளத்தில் பார்க்கலாம். ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. உடல் பரிசோதனையும் நடத்தப்படும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 25-6-2018-ந் தேதியாகும். இது பற்றிய விவரங்களை www.hwb.gov.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

கடற்படையில் மாலுமி பணிக்கு பிளஸ்-2 படித்தவர்கள் சேர்ப்பு

இந்திய கடற்படையில் மாலுமி பணிக்கு பிளஸ்-2 படித்தவர்கள் சேர்க்கப்படுகிறார்கள். இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:- இந்திய கடற்படையில் பல்வேறு பயிற்சிகளின் அடிப்படையில் தகுதியான இளைஞர்கள் பணியில் சேர்க்கப்பட்டு வருகிறார்கள். தற்போது ‘செய்லர் பிப்ரவரி-2019’ என்ற பயிற்சி சேர்க்கையின் அடிப்படையில் பிளஸ்-2 படித்தவர்களை மாலுமி பணியில் சேர்க்க அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்திய குடியுரிமை பெற்ற, திருமணமாகாத ஆண்கள் இந்த பயிற்சி யில் சேர விண்ணப்பிக்கலாம். இவர்கள் குறிப்பிட்ட கால பயிற்சிக்குப் பின் பணி நியமனம் பெறலாம். பயிற்சியில் சேர விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதிகளை இனி பார்ப்போம்... வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 1-2-1998 மற்றும் 31-1-2002 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்திருக்க வேண்டும். இந்த இரு தேதிகளில் பிறந்தவர்களும் விண்ணப்பிக்கத் தகுதி உடையவர்களே. கல்வித் தகுதி: மேல்நிலைக் கல்வி (10+2 முறையில்) அல்லது அதற்கு இணையான கல்வித்தகுதி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். இவர்கள் கணிதம் மற்றும் இயற்பியல் பாடங்கள் அடங்கிய பிரிவை தேர்வு செய்து படித்திருப்பதுடன், இந்த பாடங்களில் 60 சதவீதத்திற்கு குறைவில்லாமல் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். தேர்வு செய்யும் முறை: எழுத்துத் தேர்வு, உடல்உறுதித் திறன் தேர்வு, மருத்துவ பரிசோதனை ஆகியவற்றின் அடிப் படையில் தகுதியானவர்கள் பயிற்சியில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். 22 வார கால பயிற்சி யில் தேர்ச்சி பெறுபவர்கள் பணி நியமனம் பெறலாம். இவர்கள், ‘மாஸ்டர் சீப் பெட்டி ஆபீசர்-1’ பணி வரை பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு பெற முடியும். உடல் தகுதி: விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 157 செ.மீ. உயரமும், அதற்கேற்ற எடையும் இருக்க வேண்டும். மார்பளவு 5 செ.மீ. விரியும் திறனுடன் இருக்க வேண்டும். பார்வைத்திறன் கண்ணாடியின்றி 6/6, 6/9 மற்றும் கண்ணாடியுடன் 6/6, 6/6 என்ற அளவுக்குள் இருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணைய தளம் வழியாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். தேவையான இடத்தில், புகைப்படம் மற்றும் கையொப்பத்தை பதிவேற்றம் செய்ய வேண்டும். இறுதியில் பூர்த்தியான விண்ணப்பத்தை சொந்த உபயோகத்திற்காக கணினிப் பிரதி எடுத்து வைத்துக் கொள்ளவும். இணையதள விண்ணப்பம் சமர்ப்பிக்க கடைசி நாள் : 15-6-2018-ந் தேதி. இதற்கான ஆன்லைன் தேர்வு செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் பார்க்க வேண்டிய இணையதள முகவரி: www.joinindiannavy.gov.in

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

பி.எப். நிர்வாக கட்டணம் 0.5 சதவீதமாக குறைப்பு ரூ.900 கோடி மிச்சமாகும் என கணிப்பு

ஊழியர் வருங்கால வைப்பு நிதிக்கான (இபிஎப்) நிர்வாக கட்டணத்தை 0.65 சதவீதத்தில் இருந்து 0.5 சதவீதமாக குறைக்க இபிஎப் மத்திய அறங்காவலர்கள் வாரியம் (சிபிடி) ஒப்புதல் அளித்துள்ளது. இதன்மூலம் நிறுவனங்களுக்கு ஆண்டுக்கு சுமார் ரூ.900 கோடி மிச்சமாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஊழியர்கள் சார்பில் நிறுவனங்கள் செலுத்தும் பிஎப் தொகையில் 0.65 சதவீதம் வரை நிர்வாக கட்டணமாக பிஎப் அமைப்பு விதித்து வந்தது. கடந்த பிப்ரவரி 21-ம் தேதி நடந்த அறங்காவலர்கள் வாரிய கூட்டத்தில் இதை 0.5 சதவீதமாகக் குறைக்க முடிவு எடுக்கப்பட்டது. அதாவது 0.15 சதவீதம் குறைக்கப்பட உள்ளது. வரும் ஜூன் 1-ம் தேதி முதல் இது அமலுக்கு வர உள்ளது. ரூ.900 கோடி மிச்சம் இதன்மூலம் நிறுவனங்களுக்கான செலவு குறையும். குறிப்பாக, நிறுவனங்களுக்கு ஆண்டுக்கு மொத்தம் ரூ.900 கோடி மீதமாகும் என கணிக்கப்பட்டுள்ளது. அதனால் பல ஊழியர்களை பிஎப் அமைப்புக்குள் கொண்டுவர நிறுவனங்கள் முயற்சி செய்யும் என பிஎப் ஆணையர் வி.பி. ஜாய் தெரிவித்துள்ளார். பிஎப் அமைப்பு கடந்த நிதி ஆண்டு நிறுவனங்களிடமிருந்து நிர்வாகக் கட்டணமாக ரூ.3,800 கோடி வசூல் செய்தது. இந்த தொகையை வைத்துதான் பிஎப் அமைப்பு செயல்பட்டு வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக வசூலிக்கப்பட்ட நிர்வாகக் கட்டணத்தில் ரூ.20,000 கோடி உபரியாக உள்ளது. இதன்மூலம் ஆண்டுக்கு ரூ.1,600 கோடி அளவுக்கு வட்டி வருமானம் கிடைக்கிறது. அதனால் நிர்வாகக் கட்டணத்தை குறைத்துள்ளோம், இதனால் பிஎப் தொகையை நிர்வகிப்பதில் எவ்வித சிக்கலும் இருக்காது என்று வி.பி. ஜாய் தெரிவித்தார். ஒரு நிறுவனம் பணியாளர்களுக்கு செலுத்தும் மொத்த சம்பளத்தில் குறிப்பிட்ட சதவீதம் நிர்வாகக் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாகவே பிஎப் அமைப்பு நிர்வாகக் கட்டணத்தை குறைத்து வருகிறது. 2015-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி நிர்வாகக் கட்டணம் 1.1 சதவீதத்தில் இருந்து 0.85 சதவீதமாக குறைக்கப்பட்டது. கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 0.85 சதவீதத்தில் இருந்து 0.65 சதவீதமாகக் குறைக்கப்பட்டது. இப்போது 0.5 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. சுமார் 5 கோடி சந்தாதாரர்களின் ரூ.10 லட்சம் கோடி தொகையை பிஎப் அமைப்பு நிர்வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

20 ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களை மூடுவதற்கு தடை கோரி வழக்கு

தமிழகத்தில் 20 மாவட்டங்களில் செயல்படும் ஆசிரியர் பட்டயப் பயிற்சி நிறுவனங்களை மூடுவதற்கு தடை கோரி தொடரப்பட்ட வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை இடைநிலை ஆசிரியர்களாக, ஆசிரியர் பட்டயப் பயிற்சி முடிப்பவர்கள் நியமிக்கப்பட்டு வந்தனர். இந்நிலையில் இடைநிலை ஆசிரியர் பணிக்கும் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டதால் ஆசிரியர் பட்டயப் பயிற்சி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கை ஒவ்வொரு ஆண்டும் கணிசமாக குறைந்து வருகிறது. இதன்காரணமாக மொத்தம் உள்ள 32 மாவட்டங்களில், சென்னை, கடலூர் உள்ளிட்ட 12 ஆசிரியர் பட்டயப் பயிற்சி நிறுவனங்களை மட்டும் வைத்துக்கொண்டு, வேலூர், திருச்சி, சேலம், ராமநாதபுரம் உள்ளிட்ட 20 நிறுவனங்களை மூடுவது என அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக 20 இடங்களிலும் இந்தாண்டு மாணவர் சேர்க்கை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இதை எதிர்த்து அனைத்து மாவட்ட கல்வி மற்றும் பயிற்சி நிறுவன ஆசிரியர்கள் சங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி பவானி சுப்பராயன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசின் இந்த உத்தரவு தனியார் ஆசிரியர் பயிற்சி பள்ளிகளை ஊக்குவிக்கும் வகையில் உள்ளது. 20 மாவட்டங்களில் உள்ள ஆசிரியர் பட்டயப் பயிற்சி நிறுவனங்களை மூடுவதால் ஏழை, எளிய மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவர் என மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது. அதையடுத்து நீதிபதி, இதுதொடர்பாக வரும் ஜூன் 5-ம் தேதிக்குள் மத்திய மனித வள மேம்பாட்டுத்துறைச் செயலர், தமிழக பள்ளிக்கல்வித்துறைச் செயலர், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தார்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

சட்டப் படிப்பில் சேர ஆன்லைனில் விண்ணப்பிக்கும் வசதி அறிமுகம் அம்பேத்கர் சட்ட பல்கலை. துணைவேந்தர் தகவல்

சட்டப் படிப்புகளுக்கு இந்தாண்டு முதல் ஆன்லைனிலும் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழக துணைவேந்தர் டி.எஸ்.என். சாஸ்திரி தெரிவித்தார். தமிழகத்தில் உள்ள சட்டக் கல்லூரிகள், சீர்மிகு சட்டப் பள்ளி ஆகியவற்றில் மாணவர் சேர்க்கையை நடத்தும் முகமையாக, தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் நியமிக்கப்பட்டுள்ளது. இதன்படி, சட்டப் படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் வரும் 28-ம் தேதி தொடங் குகிறது. இதுதொடர்பாக, பல்கலைக்கழக துணைவேந்தர் டி.எஸ்.என்.சாஸ்திரி கூறியதாவது: பல்கலைக்கழக வளாகத்தில் இயங்கி வரும் சீர்மிகு சட்டப் பள்ளியில் உள்ள 5 ஆண்டுகள் ஒருங்கிணைந்த பி.ஏ., பி.காம், பி.பி.ஏ., பி.சி.ஏ. எல்எல்பி மாண்பமை (ஹானர்ஸ்) சட்டப் படிப்புகளுக்கான விண்ணப்பம் மே 28-ம் தேதி (நாளை) முதல் வழங்கப்படுகிறது. ஆதிதிராவிடர் பழங்குடியினருக்கு ரூ.500, மற்றவர்களுக்கு ரூ.1000 விண்ணப்பக் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. அஞ்சல் வழியில் பெற ரூ.600 மற்றும் ரூ.1,100-க்கான வரைவோலை எடுத்து அனுப்ப வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை அளிக்க இறுதி நாள் ஜுன் 18 ஆகும். மேலும், சட்டப் பல்கலை., சட்டக் கல்லூரிகளில் ஐந்தாண்டு பி.ஏ. எல்எல்பி படிப்புகளுக்கு ஜூன் 1-ம் தேதி முதலும், எல்எல்பி மாண்பமை சட்டப் படிப்புகளுக்கு ஜூன் 26-ம் தேதி முதலும், எல்எல்பி சட்டப் படிப்புகளுக்கு ஜூன் 27-ம் தேதியில் இருந்தும் விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. இந்த ஆண்டு முதல் ஆன்லைனிலும் விண்ணப்பிக்கும் வசதி கொண்டு வரப்பட்டுள்ளது. இதில் கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்து, வரும் ஆண்டுகளில் அமல் படுத்தப்படும். மாண்பமை சட்டப் படிப்புகளில் மொத்தம் 780 இடங்கள் உள்ளன. அம்பேத்கர் சட்டக்கல்லூரி, மதுரை, திருச்சி, கோவை, நெல்லை, செங்கல்பட்டு, வேலூர், விழுப்புரம், ராமநாதபுரம், தரு்மபுரி, திண்டிவனம் சட்டக் கல்லூரிகளில், ஐந்தாண்டு சட்டப் படிப்புக்கு 1,411 இடங்களும், மூன்றாண்டு படிப்புக்கு 1,541 இடங்களும் உள்ளன. மாண்பமை சட்டப் படிப்புகளில் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு 15 சதவீதம் இடங்கள் ஒதுக்கப்படும். இப்படிப்புகளுக்கு மத்திய, மாநில அரசுகளின் அரசாணைப்படி, உண்மையான வெளிநாடு வாழ் இந்தியர்கள் மட்டுமே சேர்க்கப்படுவார்கள். சேர்க்கை வெளிப்படையாக நடக்கும். இதில் சேரும் மாணவர்கள் பட்டியல் சிண்டிகேட் கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்ட பிறகே மாணவர்கள் அனுமதிக்கப்படுவர். இந்தாண்டு சீர்மிகு பள்ளியில் உள்ள மாண்பமை படிப்புகளுக்கு மட்டும் ரூ.10 ஆயிரம் கட்டணம் கூடுதலாக வசூலிக்கப்படும். மற்ற கல்லூரிகளில் வழக்கம் போல் கட்டணம் இருக்கும். விண்ணப்பங்கள் பெறப்பட்டு, அவை பரிசீலிக்கப்பட்ட பின், கவுன்சலிங் தேதி அறிவிக் கப்படும். Facebook Google Twitter EmailShare © 2017 All Rights Reserved. Powered by Summit exclusively for The Hindu

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

பாடப் புத்தகங்கள் பள்ளிகளுக்கு விநியோகம்

கல்வி மாவட்டத்துக்கு உட்பட்ட பள்ளிகளுக்கு பாடப் புத்தகம் விநியோகிக்கும் பணி தொடங்கியுள்ளது. செங்கல்பட்டு கல்வி மாவட்டத்தில் 99 மேல்நிலைப் பள்ளிகள், 114 உயர்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 216 அரசுப் பள்ளிகள் செயல்படுகின்றன. ஆறாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை பயிலும், மாணவர்களுக்கு வழங்குவதற்கான இலவச பாடப் புத்தகங்கள், பள்ளி வாரியாக பிரிக்கப்பட்டு, விநியோகம் செய்யும் பணி தொடங்கியுள்ளது. முதல் பருவத்துக்கான இலவச பாடப் புத்தகங்கள் மற்றும் நோட்டுப் புத்தகங்கள், பை, கல்வி உபகரணங்கள், அட்லஸ் ஆகியவை அரசு பாடநூல் கழகத்தில் இருந்து கொண்டு வரப்பட்டு, இருப்பு வைக்கப்பட்டன. இந்நிலையில், வரும் ஜூன் முதல் தேதி, கோடை விடுமுறை முடிந்து, பள்ளிகள் திறக்கப்படுவதாக பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. ஆறாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரையான மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள் மற்றும் பாடப் புத்தகங்கள் விநியோகிக்கப்படுகின்றன. பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் பாடப் புத்தகங்களை பள்ளிகளுக்கு பெற்றுச் செல்கின்றனர். பிளஸ் 1, வகுப்புகளுக்கான புதிய பாடத்திட்ட புத்தகங்கள், கல்வி மாவட்டத்துக்கு ஒதுக்கீடு பெற்றதும் பள்ளிகளுக்கு அனுப்பப்படும் என மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

பள்ளிக் கல்வி, தொடக்கக் கல்வி இயக்ககங்களை இணைக்க முயற்சி ? ஆரம்பப் பள்ளி ஆசிரியர் அமைப்புகள் குற்றச்சாட்டு

பள்ளிக்கல்வித் துறை நிர்வாகத்தில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டிருப்பது தொடக்கக் கல்வி இயக்ககத்தை பள்ளிக்கல்வி இயக்ககத்துடன் இணைக்கும் முயற்சி என்று ஆரம்பப் பள்ளி ஆசிரியர் அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன. தமிழகத்தில் 37,211 அரசு பள்ளிகளும், 8,403 அரசு உதவி பெறும் பள்ளிகளும், 12,419 தனியார் சுயநிதி பள்ளிகளும் உள்ளன. பள்ளிக்கல்வி இயக்ககத்தின்கீழ் இயங்கும் பள்ளிகளை, அதாவது அரசு மற்றும் தனியார் உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளை வருவாய் மாவட்ட அளவில் முதன்மை கல்வி அதிகாரிகளும் (32 பேர்), கல்வி மாவட்ட அளவில் மாவட்ட கல்வி அதிகாரிகளும் (67 பேர்) நிர்வகித்து வருகிறார்கள். இதைபோல், தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கீழ் இயங்கும் பள்ளிகளை, அதாவது ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளை மாவட்ட அளவில் மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரிகளும், வட்டார அளவில் உதவி தொடக்கக் கல்வி அதிகாரிகளும் (836 பேர்) நிர்வகிக்கிறார்கள். மேலும், மாநிலம் முழுவதும் உள்ள 4,322 மெட்ரிகுலேஷன் பள்ளிகளை கவனிக்க 17 மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர்கள் இருக்கிறார்கள். இந்நிலையில், பள்ளிக்கல்வித் துறை நிர்வாகத்தில் அதிரடி மாற்றங்களை கொண்டுவரும் வகையில் மே 18-ம் தேதி ஓர் அரசாணை வெளியிடப்பட்டது. அதன்படி, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு கூடுதல் அதிகாரங்கள் அளிக்கப்பட்டுள்ளன. இதுவரையில் உயர்நிலைப் பள்ளிகளையும் மேல்நிலைப் பள்ளிகளையும் ஆய்வு செய்துவந்த இந்த அதிகாரிகள் இனி கூடுதலாக நடுநிலைப் பள்ளிகளையும், தொடக்கப் பள்ளிகளையும் கண்காணிப்பார்கள். மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரி பதவியும், மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் ஆய்வாளர் பதவியும் மாவட்ட கல்வி அதிகாரிக்கு இணையான பதவி என்பதால் அப்பதவி மாவட்ட கல்வி அதிகாரி பதவியாகவே கருதப்படும். மேலும், தொடக்கக் கல்வி இயக்ககத்தில் உள்ள உதவி தொடக்கக் கல்வி அதிகாரி பதவியானது வட்டார கல்வி அதிகாரி என பெயர்மாற்றம் செய்யப்படுகிறது. இந்த அதிகாரிகள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளை மட்டுமின்றி தனியார் பள்ளிகளையும் நிர்வகிப்பார்கள். இந்த அதிரடி மாற்றங்கள் தொடக்கக் கல்வி இயக்ககத்தை பள்ளிக் கல்வி இயக்ககத்தோடு இணைப்பதற்கான முயற்சிதான் என ஆரம்பப் பள்ளி ஆசிரியர் அமைப்புகள் குற்றம்சாட்டிள்ளன. இதுகுறித்து தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலாளர் இரா.தாஸ் கூறும்போது, “இந்த புதிய மாற்றங்கள் மூலம் ஆரம்பக் கல்வி இயக்கத்தையே ஒழிக்க முயற்சி நடக்கிறது. 32 மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரி பதவிகள் இல்லாமல் போய்விடும். அரசின் இந்த முடிவை கண்டித்து பெரிய அளவில் போராட்டம் நடத்த உள்ளோம்” என்றார். ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் முன்னாள் பொதுச்செயலாளர் செ.பாலசந்தர் கூறும்போது, “அரசின் தற்போதைய நடவடிக்கை, தொடக்கக் கல்வி இயக்ககத்தை பள்ளிக்கல்வி இயக்ககத்துடன் இணைக்கும் முயற்சிதான். மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரிகள் இல்லாமல் தொடக்கக் கல்வி இயக்குநர் என்ன செய்வார் என்று தெரியவில்லை. புதிய நடவடிக்கை மூலம் தொடக்கக் கல்வி நிர்வாகத்தில் குழப்பங்கள் ஏற்படும்” என்றார்.ஜெ.கு.லிஸ்பன் குமார்

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Thursday, 24 May 2018

1, 6, 9, 11-ம் வகுப்புகளுக்கான புதிய பாடப் புத்தகங்கள் மே 31 இல் இணையதளத்தில் வெளியீடு


1, 6, 9, 11-ம் வகுப்புகளுக்கான புதிய பாடப் புத்தகங்கள் மே 31 இல் இணையதளத்தில் வெளியீடு | 1,6,9,11-ம் வகுப்புகளுக்கான புதிய பாடப்புத்தகங்கள் இணையதளத்தில் மே 31  முதல் படிப்படியாக வெளியிடப்படுகின்றன. தமிழகத்தில் நீண்ட காலமாக மாற்றப்படாமல் இருந்த பள்ளி பாடத்திட்டம் இந்த ஆண்டுமுதல் படிப்படியாக மாற்றியமைக்கப்படுகிறது. முதல்கட்டமாக 1,6,9,11-ம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். இதைத்தொடர்ந்து, மற்ற வகுப்புகளுக்கு அடுத்தடுத்த கல்வி ஆண்டுகளில் படிப்படியாக புதிய பாடத்திட்டம் அமல்படுத்தப்படும். இந்த நிலையில், 1,6,9,11-ம் வகுப்புகளுக்கான புதிய பாடப்புத்தகங்களை முதல்வர் கே.பழனிசாமி கடந்த 4-ம் தேதி வெளியிட்டார். புதிய புத்தகங்கள் இம்மாத இறுதியில் விற்பனைக்கு வரவுள்ளன. 1,6,9,11-ம் வகுப்புகளுக்கான புதிய பாடப்புத்தகங்கள் மே 23-ம் தேதி இணையதளத்தில் வெளியிடப்படும் என்று பள்ளிக் கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அண்மையில் அறிவித்தார். அதன்படி, வெளியிடவில்லை. புதிய பாடப்புத்தகங்கள் தமிழ்நாடு மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இணையதளத்தில் (www.tnscert.org) மே 31 இல் வெளியிடப்படுகின்றன. இணையதளத்தின் சர்வர் திறனுக்கு ஏற்ப, புதிய பாடப்புத்தகங்கள் வகுப்புகள் மற்றும் பாடங்கள் வாரியாக மே 31 இல் படிப்படியாக இணையதளத்தில் வெளியிடப்படும் என்று கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இயக்குநரும், புதிய பாடத் திட்டக்குழுவின் உறுப்பினர்-செயலருமான ஜி. அறிவொளி தெரிவி்த்தார். பள்ளி மாணவர்களுக்கான அனைத்து பாடப்புத்தகங்களையும் வகுப்புகள், பாடங்கள் வாரியாக தமிழ்நாடு பாடநூல் கழகம் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் இணையதளத்தில் (www.textbooksonline.tn.nic.in) பார்க்கலாம். அந்த வகையில், 1,6,9,11-ம் வகுப்பு புதிய பாடப்புத்தகங்களையும் பாட நூல் கழக இணையதளத்தில் வெளியிட ஏற்பாடு செய்யப்படும் என்று அதன் நிர்வாக இயக்குநர் டி.ஜெகந்நாதன் தெரிவித்தார். DOWNLOAD
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவு மறுகூட்டலுக்கு மே 24-ம் தேதி முதல் 26-ம் தேதி மாலை 5.45 மணி வரை விண்ணப்பிக்கலாம்.


எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவு மறுகூட்டலுக்கு மே 24-ம் தேதி முதல் 26-ம் தேதி மாலை 5.45 மணி வரை விண்ணப்பிக்கலாம். இதுதொடர்பாக அரசு தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: பள்ளி மாணவர்கள் தங்கள் பள்ளி வழியாகவும், தனித் தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய மையம் வழியாகவும் மே 24-ம் தேதி (நாளை) முதல் 26-ம் தேதி மாலை 5.45 மணி வரை மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான கட்டணமாக மொழித்தாள், ஆங்கிலத் தாளுக்கு தலா ரூ.305, கணிதம், அறிவியல், சமூக அறிவியல், விருப்ப மொழிப்பாடம் ஆகியவற்றுக்கு தலா ரூ.205 செலுத்த வேண்டும். விண்ணப்பிக்கும் இடத்திலேயே கட்டணத்தை செலுத்த வேண்டும். விண்ணப்பிக்கும்போது வழங்கப்படும் ஒப்புகைச் சீட்டை மாணவர்கள் பத்திரமாக வைத்துக்கொள்ள வேண்டும். இதில் உள்ள விண்ணப்ப எண் மூலமாகத்தான் பின்னர் மறுகூட்டல் முடிவுகளை அறிந்துகொள்ள முடியும். சிறப்பு துணை பொதுத் தேர்வு பொதுத்தேர்வில் வெற்றிவாய்ப்பை இழந்தவர்கள், தேர்வுக்கு விண்ணப்பித்து கலந்துகொள்ளாதவர்களுக்கு ஜூன் 28-ம் தேதி சிறப்பு துணை பொதுத் தேர்வு நடத்தப்படும். இதற்கு விண்ணப்பிப்பது குறித்து தனியாக அறிவிப்பு வெளியிடப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.  
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

தமிழில் சட்டப்பயிற்சி சேவைகளை மனுபாத்ரா பகுப்பாய்வு நிறுவனம் தொடங்கியுள்ளது.

தமிழில் சட்டப்பயிற்சி சேவைகளை மனுபாத்ரா பகுப்பாய்வு நிறுவனம் தொடங்கியுள்ளது. இதற்காக lawskills.com என்கிற இணையதளத்தினை அறிமுகம் செய்துள்ளது. இது தொடர்பாக மனுபாத்ரா இன்பர்மேஷன் நிறுவனத்தின் இயக்குநர் தீபக் கபூர் கூறுகையில், இந்தியாவில் சட்டக் கல்வி சிறப்பான வகையில் இருந்தாலும், சட்டக் கல்வி முடிப்பவர் கள் நீதிமன்ற நடைமுறைகளை அறிந்து கொள்வதற்காக வழக்கறிஞர்களிடத்தில் தனியாக பயிற்சி பெறுகின்றனர். இதனால் அவர்கள் சொந்தமாக தொழி லைத் தொடங்க சில ஆண்டுகள் கூடுதலாக செலவாகிறது. இந்த அனுபவப் பயிற்சி காலகட்டத்தை தவிர்க்கும் விதமாக லா ஸ்கில்ஸ் இணையதள பயிற்சி இருக்கும். அதுபோல கார்ப்பரேட்டுகள் ஈடுபடும் ஒப்பந்தங்கள், அவர்களுக்கான சட்ட நடைமுறைகளையும், மற்றும் வழக்கு நடைமுறைகளை தெரிந்து கொள்ளலாம். சட்ட மாணவர்கள் அல்லாதவர்களும் இந்திய சட்ட நடைமுறைகள் குறித்த கல்வி பெற இந்த இணைய தளம் உதவும். தேர்ந்த மொழிபெயர்ப்பாளர்களைக் கொண்டு தமிழில் சட்ட விவரங்களை அளிக்கிறோம். பயிற்சிக்கான சராசரி கட்டணம் ரூ.4,000 என்கிற அளவிலேயே நிர்ணயித்துள்ளோம். சட்டக் கல்லூரிகள் அளவில் இந்த இணைய தளத்தை கொண்டு செல்லத் திட்டமிட்டுள்ளோம். தற்போது தமிழ் உட்பட ஐந்து மொழிகளில் சட்ட விவரங்களை அளிக்கிறோம் வரும் ஆண்டுக்குள் 10 மொழிகளில் அளிக்க உள்ளோம். தினசரி வழக்கு விவரங்கள் வரை இணையதளத்தில் உடனடியாக பார்க்க முடியும் என்றார். சட்டத் தகவல்கள் தேடல், பகுபாய்வு துறையில் உள்ள மனுபாத்ரா இதன் மூலம் சட்டக் கல்வி பயிற்சியிலும் கால்பதித்துள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

தொழில் வரி திடீர் உயர்வு பெருநகர சென்னை மாநகராட்சி அறிவிப்பு

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு தொழில்வரி 2 அரையாண்டுகளாக பிரித்து செலுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் முதல் அரையாண்டுக்கான தொழில்வரியை பெருநகர சென்னை மாநகராட்சி உயர்த்தி உள்ளது. அதன்படி திருத்தி அமைத்துள்ள வரி விவரம் வருமாறு:- அரையாண்டு பழைய திருத்தப்பட்ட சராசரி வருமானம் (ரூ) தொழில்வரி (ரூ புதிய தொழில்வரி (ரூ) 21,000 வரை இல்லை இல்லை 21,001 முதல் 30,000 100 135 30,001 முதல் 45,000 235 315 45,001 முதல் 60,000 510 690 60,001 முதல் 75,000 760 1025 75,001 மற்றும் அதற்கு மேல் 1095 1250 மேற்கண்டவாறு தொழில் வரியில் திருத்தம் செய்யப்பட்டு உள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

கடந்த 20-ந் தேதி நடந்த தேர்வில் வினாத்தாள் மாறிய 16 பேருக்கு 27-ந் தேதி மறு தேர்வு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு

கடந்த 20-ந் தேதி நடந்த தேர்வில் வினாத்தாள் மாறிய 16 பேருக்கு 27-ந் தேதி மறு தேர்வு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு | TNPSC - Re-examination for 16 affected candidates in CESE Exam at Kancheepuram Center. கடந்த 20-ந் தேதி தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் பொறியியல் பணியில் அடங்கிய தேர்வை நடத்தியது. இந்த தேர்வில் காஞ்சீபுரம் மாவட்டத்தில் எஸ்.எஸ்.கே.வி. ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 20-ந் தேதி காலையில் 16 மாணவர்களுக்கு வினாத்தாள் மாற்றி வழங்கப்பட்டது. தவறுதலாக வழங்கப்பட்ட 16 மாணவர்களுக்கு மட்டும் 27-ந் தேதி மீண்டும் தேர்வு நடத்தப்பட உள்ளது. இதுகுறித்த தகவல் அவர்களுக்கு எஸ்.எம்.எஸ். மற்றும் மின்அஞ்சல் மூலமாகவும் அனுப்பப்பட்டுள்ளது. இந்த தகவலை அரசு பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

இன்று முதல் 8 நாட்களுக்கு தூத்துக்குடி மாவட்டத்தில் துறை தேர்வுகள் தள்ளிவைப்பு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு

இன்று முதல் 8 நாட்களுக்கு தூத்துக்குடி மாவட்டத்தில் துறை தேர்வுகள் தள்ளிவைப்பு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு | தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் இன்று (வியாழக்கிழமை) முதல் 31-ந் தேதி வரை 8 நாட்களுக்கு நடத்தப்பட இருந்த அரசு பணியாளர்களுக்கான துறை தேர்வுகள் நிர்வாக காரணங்களுக்காக தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் ஒத்திவைக்கப்படுகிறது. மறு தேர்வுகள் குறித்த அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE