Tuesday, 31 July 2018

17½ லட்சம் பேர் எழுதிய டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு முடிவு வெளியீடு

17½ லட்சம் பேர் எழுதிய டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு முடிவு நேற்று வெளியிடப்பட்டது. டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தமிழக அரசு துறைகளில் காலியாக இருக்கும் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், வரித்தண்டலர், நில அளவையர், வரைவாளர் , தட்டச்சர், சுருக்கெழுத்து-தட்டச்சர் என 9 ஆயிரத்து 351 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு முதல்முறையாக ஒருங்கிணைந்த குரூப்-4 தேர்வு நடத்தப்படும் என்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) அறிவிப்பு வெளியிட்டது. அதையொட்டி பலரும் விண்ணப்பித்தனர். இந்த தேர்வு கடந்த பிப்ரவரி மாதம் 11-ந்தேதி நடந்தது. தமிழகம் முழுவதும் 17 லட்சத்து 52 ஆயிரத்து 882 பேர் தேர்வு எழுதினர். தேர்வு முடிவு வெளியீடு தேர்வு முடிவு எப்போது வெளி வரும் என்று தேர்வு எழுதியவர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்தநிலையில் அரசு பணியாளர் தேர்வாணையம் நேற்று தேர்வு எழுதியவர்களின் மதிப்பெண் மற்றும் ரேங்க் ஆகியவற்றை தனது இணையதளத்தில் ( www.tnpsc.gov.in ) வெளியிட்டது. மனிதநேய மையம் இந்த ரேங்க் பட்டியலில் சைதை துரைசாமியின் மனிதநேய மையத்தில் பயிற்சி பெற்ற திருநாவுக்கரசு 14-வது இடத்திலும், செல்வக்குமார் 33-வது இடத்திலும் கிருத்திகா 144-வது இடத்திலும் உள்ளனர்.


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Sunday, 29 July 2018

மீன்வள ஆய்வாளர், உதவி ஆய்வாளர் தேர்வுக்கு அடுத்த வாரம் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு

மீன்வளத் துறை ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர் தேர்வுக்கான டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு அடுத்த வாரம் வெளியிடப்படுகிறது. தமிழக அரசின் மீன்வளத்துறை யில் 72 ஆய்வாளர் பணியிடங் களும் 12 உதவி ஆய்வாளர் பணியிடங்களும் போட்டித்தேர்வு மூலமாக நிரப்பப்படும் என்று டிஎன்பிஎஸ்சி 2018-ம் ஆண்டுக் கான வருடாந்திர தேர்வுக்கால அட்டவணையில் அறிவிக்கப் பட்டிருந்தது. தேர்வுக்கான அறிவிப்பு ஏப்ரல் 2-வது வாரத்தில் வெளியிடப்படும் என்றும் அதற்கான எழுத்துத்தேர்வு ஜூலை 15-ம் தேதி நடத்தப் படும் என்றும் அதில் குறிப்பிடப் பட்டிருந்தது. ஆனால், தேர்வுக் கான அறிவிப்பு இன்னும் வெளியிடப் படவில்லை. இதனால், வருடாந்திர தேர்வுக்கால அட்டவணையை எதிர்பார்த்து அத்தேர்வுக்கு தயா ராகி வரும் தேர்வர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, மீன் வளத்துறை ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர் தேர்வுக்கான அறிவிப்பு அடுத்த வாரத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளோம். ஏற்கெனவே அறிவிக்கப்பட்டதை விட காலியிடங்களின் எண் ணிக்கை சற்று அதிகரிக்கும் என்று தெரிவித்தனர். மீன்வள ஆய்வாளர் தேர் வுக்கு பிஎப்எஸ்சி பட்டதாரிக ளும், எம்எஸ்சி விலங்கியல், எம்எஸ்சி மரைன் பயாலஜி பட்டதாரிகளும் விண்ணப்பிக் கலாம். மீன்வள உதவி ஆய் வாளர் தேர்வுக்கு பிஎப்எஸ்சி பட்ட தாரிகளும் பிஎஸ்சி விலங்கியல் பட்டதாரிகளும் விண்ணப்பிக்க தகுதியுடையவர் ஆவர். மேலும், வருடாந்திர தேர்வுக் கால அட்டவணையின்படி, குரூப்-2 தேர்வுக்கான (நேர்முகத்தேர்வு உடைய பதவிகள்) அறிவிப்பு மே மாதம் முதல் வாரம் வெளி யிடப்பட்டிருக்க வேண்டும். இதன் மூலம் 1547 காலியிடங்களை நிரப்ப திட்டமிட்டுள்ளனர். ஏற் கெனவே நடத்தப்பட்ட குரூப்-2ஏ (நேர்முகத்தேர்வு அல்லாத பதவிகள்) தேர்வுக்கு கலந்தாய்வு பணிகள் முடிவடைந்ததும் குரூப்-2 தேர்வுக்கான அறிவிப்பு வெளி யிடப்படும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. நகராட்சி ஆணையர் (கிரேடு-2), சார்-பதிவாளர் (கிரேடு-2), துணை வணிகவரி அலுவலர், தலைமைச் செயலக உதவி பிரிவு அலுவலர், உதவி தொழிலாளர் ஆய்வாளர், உள்ளாட்சி தணிக்கை உதவி ஆய்வாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், கூட்டுறவு சங்கங்களின் முதுநிலை ஆய்வாளர், வருவாய் உதவியாளர், பேரூராட்சி செயல் அலுவலர் (கிரேடு-2) முதலிய பல்வேறு துறைகளில் சார்நிலைப்பணிகளில் அடங்கிய பதவிகள் குரூப்-2 தேர்வின்கீழ் வருகின்றன. குரூப்-2 தேர்வையும், குரூப்-2-ஏ தேர்வையும் தனித்தனியாக நடத் துவதால் தேவையில்லாமல் டிஎன்பிஎஸ்சி-க்கும் தேர்வு எழுது வோருக்கும் காலதாமதம் ஆவதால் முன்பு இருந்து வந்ததைப் போன்று ஒருங்கிணைந்த தேர்வாக நடத்த வேண்டும் என்று டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கு தயாராகி வரும் இளைஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கிராம நிர்வாக அலுவலர் தேர்வும், குரூப்-4 தேர்வும் தற்போது ஒருங்கிணைந்த தேர்வாக நடத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Saturday, 28 July 2018

DIRECT RECRUITMENT OF SPECIAL TEACHERS 2012 - 2016 - CV LIST | சிறப்பாசிரியர் தேர்வுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியல் வெளியானது.

DIRECT RECRUITMENT OF SPECIAL TEACHERS 2012 - 2016 - CV LIST | சிறப்பாசிரியர் தேர்வுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியல் வெளியானது.PUBLICATION OF LIST OF CANDIDATES CALLED FOR CERTIFICATE VERIFICATION As per the Notification No.5/2017 published on 26.07.2017, the Written Competitive Examination for the Direct Recruitment of 1325 Special Teachers was held on 23.09.2017. In the Written Examination 35,781 candidates appeared. As per procedure the answer sheets were evaluated and marks were published on 14.06.2018 Now, the list of candidates called for Certificate Verification in the ratio 1:2 is published subject to outcome in WA(MD).No.1296/2017 & WA(MD).No.1297/2017 Board proposes to conduct Certificate Verification on 13.08.2018 in all Districts. Certificate Verification venue and individual call letters are Published in the TRB website www.trb.tn.nic.in. The same is also communicated through mail and SMS. Teachers Recruitment Board reserves the right to correct any errors that may have crept in.
Direct Recruitment of Special Teachers 2012-2016
PUBLICATION OF LIST OF CANDIDATES CALLED FOR CERTIFICATE VERIFICATION

Dated: 27-07-2018

www.kalvisolai.com
Home


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

ஆய்வு செய்ய அதிகாரிகள் நியமனம் அரசாணை வெளியீடு

பள்ளி கல்வித்துறையில் நிர்வாக சீர்த்திருத்தம் செய்வது தொடர்பாக அனைத்து மாவட்ட கல்வி அலுவலகங்களை ஆய்வு செய்வதற்கு அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. பள்ளி கல்வித்துறையின் அரசு முதன்மை செயலாளர் பிரதீப் யாதவ் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:- பள்ளி கல்வித்துறையில் நிர்வாக சீர்திருத்தம் மேற்கொண்டு புதிய மாவட்ட கல்வி அலுவலகங்கள் தோற்றுவிக்கப்பட்டுள்ளன. அனைத்து மாவட்ட கல்வி அலுவலகங்களை ஆய்வு செய்யவும், அரசால் தோற்றுவிக்கப்பட்ட நலத்திட்டங்கள் மாவட்டங்களில் சரியான முறையில் செயல்படுத்தப்படுகிறதா? என்பதை ஆய்வு செய்யவும், பள்ளி கல்வி துறையை சேர்ந்த இணை இயக்குனர்களை மாவட்டங்களுக்கு சென்று களப்பணி மேற்கொள்ள அனுமதி ஆணை வழங்குமாறு பள்ளி கல்வி இயக்குனர் அரசை கோரியிருந்தார். பள்ளி கல்வி இயக்குனரின் கருத்துருவினை, அரசு கவனமாக பரிசீலனை செய்து அதனை ஏற்கலாம் என முடிவு செய்தது. மேலும் பள்ளி கல்வித்துறையை சேர்ந்த அனைத்து இணை இயக்குனர்களும் அவர்களுக்கு என்று ஒதுக்கப்பட்டுள்ள மாவட்டங்களுக்கு சென்று களப்பணி மேற்கொள்ள அனுமதி அளித்து அரசு ஆணையிடுகிறது. சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் அதன் விவரம் வருமாறு:- மெட்ரிக்குலேசன் பள்ளிகள் இயக்ககத்தின் இணை இயக்குனர் சி.உஷாராணி சென்னை, திருவள்ளூருக்கும், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இணை இயக்குனர் வை.பாலமுருகன் தூத்துக்குடிக்கும், அரசு தேர்வுகள் இயக்ககத்தின் இணை இயக்குனர் (மேல்நிலை) எஸ்.சேதுராமவர்மா கோவை, நீலகிரி மற்றும் திருப்பூருக்கும், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இணை இயக்குனர் எஸ்.உமா விழுப்புரத்துக்கும் நியமிக்கப்பட்டுள்ளனர். பள்ளி கல்வி இயக்ககத்தின் இணை இயக்குனர் (இடைநிலைக் கல்வி) பூ.ஆ.நரேஷ் காஞ்சீபுரத்துக்கும், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் கூடுதல் உறுப்பினர் (இணை இயக்குனர் நிலையில்) கே.சசிகலா கரூர், நாமக்கல்லுக்கும், பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககத்தின் இணை இயக்குனர் சி.செல்வராஜ் திண்டுக்கல்லுக்கும், பள்ளி கல்வி இயக்ககத்தின் இணை இயக்குனர் (பணியாளர் தொகுதி) பி.குப்புசாமி வேலூருக்கும் நியமிக்கப்பட்டுள்ளனர். மதுரை-நெல்லை பள்ளி கல்வி இயக்ககத்தின் இணை இயக்குனர் (தொழிற்கல்வி) எஸ்.சுகன்யா கடலூருக்கும், அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்ட இணை இயக்குனர் எஸ்.நாகராஜன் மதுரை, தேனிக்கும், தொடக்க கல்வி இயக்ககத்தின் இணை இயக்குனர் (நிர்வாகம்) கே.ஸ்ரீதேவி தஞ்சாவூருக்கும், அரசு தேர்வுகள் இயக்ககத்தின் இணை இயக்குனர் (இடைநிலைக் கல்வி) சி.அமுதவல்லி சிவகங்கை, புதுக்கோட்டைக்கும் நியமிக்கப்பட்டுள்ளனர். தொடக்க கல்வி இயக்ககத்தின் இணை இயக்குனர் (உதவிபெறும் பள்ளிகள்) ஆர்.பாஸ்கரசேதுபதி கன்னியாகுமரி, நெல்லைக்கும், மாநில திட்ட இயக்ககம், அனைவருக்கும் கல்வி திட்ட இணை இயக்குனர்-2 கே.செல்வகுமார் தர்மபுரி, கிருஷ்ணகிரிக்கும், மாநில திட்ட இயக்ககம், அனைவருக்கும் கல்வி திட்ட இணை இயக்குனர்-3 பி.பொன்னையா சேலம், ஈரோட்டுக்கும், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறை இணை இயக்குனர் (கள்ளர் சீரமைப்பு) வை.குமார் விருதுநகர், ராமநாதபுரத்துக்கும் நியமிக்கப்பட்டுள்ளனர். நாகை-திருச்சி பள்ளி கல்வி இயக்ககத்தின் இணை இயக்குனர் (மேல்நிலைக் கல்வி) ஏ.எஸ்.ராதாகிருஷ்ணன் நாகப்பட்டினம், திருவாரூக்கும், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இணை இயக்குனர் (பாடத்திட்டம்) பி.குமார் பெரம்பலூர், அரியலூருக்கும், ஆசிரியர் தேர்வு வாரிய கூடுதல் உறுப்பினர் நா.ஆனந்தி திருவண்ணாமலைக்கும், பள்ளி கல்வி இயக்கத்தின் இணை இயக்குனர் (நாட்டு நலப்பணி திட்டம்) எம்.வாசு திருச்சிக்கும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Thursday, 26 July 2018

என்ஜினீயரிங் கலந்தாய்வு ஆன்லைனில் தொடங்கியது தரவரிசையில் முதல் 3 இடங்களை பிடித்தவர்கள் கலந்துகொள்ளவில்லை

என்ஜினீயரிங் கலந்தாய்வு நேற்று ஆன்லைன் மூலம் தொடங்கியது. அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள உதவி மையத்தில் ஆன்லைனை பயன்படுத்தி இடங்களை மாணவ-மாணவிகள் தேர்வு செய்த போது எடுத்த படம். என்ஜினீயரிங் படிப்பில் சேருவதற்கான கலந்தாய்வு ஆன்லைனில் நேற்று தொடங்கியது. என்ஜினீயரிங் கல்லூரிகள் தமிழகத்தில் 509 என்ஜினீயரிங் கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களில் பி.இ. படிப்பில் சேர கடந்த வருடம் வரை அண்ணா பல்கலைக்கழகம் நேரடியாக கலந்தாய்வு நடத்தி வந்தது. இந்த வருடம் ஆன்லைன் மூலம் கலந்தாய்வு நடத்தப்படும் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் அறிவித்தார். விண்ணப்பித்த மாணவ- மாணவிகள் அனைவருக்கும் ரேண்டம் நம்பர் வெளியிடப்பட்டன. விண்ணப்பித்த மாணவ-மாணவிகளுக்கு சான்றிதழ் சரிபார்த்தல் 41 மையங்களில் நடைபெற்றது. வீடியோ விண்ணப்பித்தவர்களில் 1 லட்சத்து 9 ஆயிரத்து 850 பேர்தான் சான்றிதழ் சரிபார்க்க வந்தனர். இதில் தகுதியானவர்களின் விண்ணப்பம் 1 லட்சத்து 4 ஆயிரத்து 453 ஆகும். அவர்களில் 65 ஆயிரத்து 926 பேர் மாணவர்கள். 38 ஆயிரத்து 527 பேர் மாணவிகள். கலந்தாய்வில் கலந்துகொண்டு கல்லூரிகளை தேர்ந்து எடுப்பது எப்படி என்பது குறித்து தமிழ்நாடு என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கை செயலாளர் பேராசிரியர் ரைமண்ட் உத்தரியராஜ் இணையதளத்தில் வீடியோ வெளியிட்டு இருந்தார். நேற்று முதல்கட்ட கலந்தாய்வு தொடங்கியது. கலந்தாய்வுக்கு இணையதளத்தில் ( www.tnea.ac.in ) போய் விருப்ப குரூப், எந்த கல்லூரி என்பதை கிளிக் செய்ய வேண்டும். முதல்கட்ட கலந்தாய்வுக்கு 10 ஆயிரம் பேர் அழைக்கப்பட்டனர். அவர்களில் 7 ஆயிரத்து 500 பேர் கலந்தாய்வுக்காக பணம் செலுத்தினார்கள். கலந்துகொள்ளவில்லை தரவரிசை பட்டியலின்படி முதல் 3 இடங்களை பிடித்தவர்கள் யாரும் என்ஜினீயரிங் கலந்தாய்வில் கலந்துகொள்ளவில்லை. முதல் இடம் பிடித்த கோவையை சேர்ந்த மாணவி கீர்த்தனா ரவி கூறுகையில், ‘நான் பி.எஸ்சி வேதியியல் (ஆனர்ஸ்) படித்து வருகிறேன். என்ஜினீயரிங் கலந்தாய்வில் நான் கலந்துகொள்ளவில்லை’ என்றார். 2-வதாக வந்த மதுரையை சேர்ந்த மாணவர் எஸ்.ரித்விக் மருத்துவக்கல்லூரியில் இடம் கிடைத்ததால், அவரும் கலந்தாய்வில் கலந்துகொள்ளவில்லை. 3-வது இடத்தில் வந்த திருச்சியை சேர்ந்த ஆர்.ஸ்ரீவர்ஷினி, மருத்துவக்கல்லூரியை தேர்ந்து எடுத்ததால் அவரும் என்ஜினீயரிங் கலந்தாய்வில் கலந்துகொள்ளவில்லை. எனவே முதல் 3 இடங்களில் வந்தவர்களும் என்ஜினீயரிங் கலந்தாய்வில் கலந்துகொள்ளவில்லை. 30-ந் தேதி ஒதுக்கீட்டு ஆணை நேற்று என்ஜினீயரிங் கலந்தாய்வில் கலந்துகொண்டவர்கள் நாளை (வெள்ளிக் கிழமை) மாலை 5 மணிக்குள் எந்த குரூப், எந்தக்கல்லூரி என்பதை இறுதி முடிவு எடுத்து ஆன்லைனில் குறிப்பிட வேண்டும். 28-ந் தேதி அவர்கள் எந்த கல்லூரியில் படிக்க வேண்டும் என்று தற்காலிக உத்தரவை மாணவர் சேர்க்கை செயலாளர் ஒதுக்கிவிடுவார். 28 மற்றும் 29-ந் தேதிகளில் நிரந்தர உத்தரவை உறுதி செய்வார். 30-ந் தேதி ஒதுக்கீட்டு ஆணை வெளியிடப்படும். ஆகஸ்டு மாதம் 3-ந் தேதி கல்லூரிகளில் சேர்க்கப்படுவார்கள். 2-வது கட்ட கலந்தாய்வு 30-ந் தேதி தொடங்குகிறது.


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Wednesday, 25 July 2018

‘வெயிட்டேஜ்’ முறை ரத்து ஆசிரியர் பணி நியமனத்திற்கு போட்டித்தேர்வு தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் எழுத அரசாணை வெளியீடு

ஆசிரியர் பணி நியமனத்திற்கான ‘வெயிட்டேஜ்’ முறை ரத்து செய்யப்படுகிறது. தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் போட்டித்தேர்வு எழுத வேண்டுமென அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. தேசிய ஆசிரியர் கல்வி குழுமத்தின் வழிகாட்டுதல்படி இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களாக தகுதி பெறுவதற்கு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவது ஏற்கனவே கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் தகுதித்தேர்வில் பெற்ற மதிப்பெண் 60 சதவீதமும், இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணி பெறுபவர்களின் கல்வித்தகுதிக்கான சான்றிதழ் மதிப்பெண்களுக்கு 40 சதவீதமும் என்று மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு 100 சதவீதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு வந்தது. இந்த ‘வெயிட்டேஜ்’ முறை தற்போது ரத்து செய்யப்படுகிறது. இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் தகுதித்தேர்வை (தனித்தேர்வு) எழுத வேண்டும். அதில் தேர்ச்சி பெற்றவர்கள் ஆசிரியர் நியமனத்திற்காக போட்டித்தேர்வை எழுத வேண்டும். போட்டித்தேர்வில் எடுக்கும் மதிப்பெண்ணை வைத்தும், இன சுழற்சி அடிப்படையிலும் தான் ஆசிரியர் நியமனத்திற்கு தேர்ந்து எடுக்கப்படுவார்கள். இந்த இரு தேர்வுகளும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்படும். தமிழ்நாடு மாநில பொதுப்பள்ளி கல்வி வாரிய கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. மேற்கண்ட தகவலை அரசாணையில் பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர் பிரதீப் யாதவ் தெரிவித்துள்ளார்.


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Monday, 23 July 2018

டி.என்.பி.எஸ்.சி. ஆன்லைன் தேர்வு எப்படி நடைபெறும்?

என்ஜினீயரிங் கவுன்சிலிங்கை அண்ணா பல்கலைக்கழகம் இந்த ஆண்டு இணையதளம் வழியே நடத்தி உள்ளது. தற்போது தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளும் இணையதளம் வழியே நடத்தப்படும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஆன்லைன் தேர்வுக்கு ஆதரவும், எதிர்ப்பும் எழுந்த வண்ணம் இருந்தாலும், தமிழக அரசு, ஆன்லைன் தேர்வுக்கான ஒப்பந்தப்புள்ளிகளை எப்போதோ கோரிவிட்டது. விரைவில் ஆன்லைன் வழித் தேர்வுகள் நடப்பது உறுதி என்பது இதன் மூலம் தெரிய வந்துள்ளது. எந்த வகையில் ஆன்லைன் தேர்வு நடத்தப்பட வேண்டும் என்பது பற்றியும் ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பில் விவரமாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி தேர்வு எப்படி நடைபெறுகிறது, மாணவர்கள் அதை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பது பற்றி பார்ப்போம்...

விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப குறிப்பிட்ட இடங்களில் தேர்வு மையங்கள் உருவாக்கப்படும். ‘லோக்கல் ஏரியா நெட்வொர்க் (LAN)’ மூலம் அந்த தேர்வு மையத்தில் உள்ள அனைத்து கணினிகளுக்கும் இணைப்பு கொடுக்கப்பட்டிருக்கும். அவை அனைத்து தேர்வு மையங்களுக்குமான பொதுவான சர்வர் கணினியுடன் இணைக்கப்பட்டு தேர்வுகள் நடைபெறும்.

வழக்கமான கொள்குறி வகை (ஆப்ஜெக்டிவ் டைப்) கேள்விகளே ஆன்லைன் தேர்விலும் இடம் பெறும். அதாவது வினாவும், அதன் கீழ் 4 விடைகளும் கொடுக்கப்பட்டு, சரியான விடையை தேர்வு செய்ய வேண்டும்.

ஒரு வினாவுக்கு விடையை தேர்வு செய்ததும், நெக்ஸ்ட் என்ற பொத்தான் வழியாக அடுத்த கேள்விக்குச் செல்லலாம்.

தேர்வு முடிந்ததும் இறுதியாக கருத்துப்படிவம் ஒன்றும் கொடுக்கப்படும், அதிலும் கணினி வழியாகவே பதில் நிரப்பி சமர்ப்பிக்க வேண்டும்.

மாணவர்களின் சந்தேகங்கள், விளக்கங்களைப் பெறவும் ஆன்லைன் தேர்வு முறையில் வாய்ப்பு அளிக்கப்படுகிறது. இதற்காக ‘சேலஞ்ச் விண்டோ’ என்ற திரையை விண்ணப்பதாரர்கள் தேர்வு முடிந்த 7 நாட்களுக்குள் பயன்படுத்தி முறையிடலாம்.

சிறப்புகள்

தேர்வு தொடங்குவதற்கு 10 நிமிடம் முன்பாக எப்படி தேர்வு எழுத வேண்டும் என்று பயிற்சி வழங்கப்படும் என்பதால் மாணவர்கள் குழப்பமின்றி தேர்வு எழுதலாம்.

ஆன்லைன் தேர்வை சுலபமாக்கவும், குறைகளை களையவும் முதலில் குறைந்த அளவில் விண்ணப்பதாரர்கள் பங்கேற்கும் தேர்வில், பரிசோதனை முறையாக ஆன்லைன் தேர்வு நடை முறைப்படுத்தப்படும். பின்னர் படிப்படியாக அனைத்து தேர்வுகளும் ஆன்லைன் முறைக்கு மாற்றப்படும்.

ஆன்லைன் வழியே நடப்பதால் காப்பியடித்தல் உள்ளிட்ட தவறுகள் கட்டுப்படுத்தப்படும். ஒவ்வொருவருக்கும் கேள்விகள் குறிப்பிட்ட முறையில் மாற்றி அமைக்கப்பட்டிருக்கும் என்பதால் எந்த வகையிலும் காப்பியடிக்க முடியாது.

கணினி வழியே தேர்வுகள் நடப்பதால் தேர்வுத்தாளை திருத்துதல், விடைகளை வெளியிடுதல் ஆகியவற்றுக்கான நேரம் மிச்சமாகும். கணினி களால் உடனடியாக விடைகளை சரிபார்த்து முடிவுகளை அறிவிக்க முடியும்.

ஆன்லைன் தேர்வை நடத்திக் கொடுக்கும் அமைப்பாக தனியார் நிறுவனம் செயல்பட்டாலும், டி.என்.பி.எஸ்.சி. அதிகாரிகள் கண்காணிப்பில் ஈடுபடுவார்கள்.

தேர்வு முடிந்ததுமே அனைத்து தகவல்களும் சர்வர் கணினிக்குச் சென்றுவிடும், பாதுகாப்பு மற்றும் நிர்வாக வசதிக்காக சில இடங்களில் நகல்களும் பராமரிக்கப்படும். ஆனால் தேர்வு நடந்த மையங்களிலும், வேறு எங்கும் வினாத்தாள் உள்ளிட்ட எந்த விவரங்களும் சேமிக்கப்படுவதில்லை என்பது முறைகேட்டை குறைக்கும்.

சில கேள்விகள்...

ஒப்பந்தப்புள்ளி விளம்பரத்தில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் தேர்வு நடைபெறும் முறை பற்றி இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது. இன்னும் விண்ணப்பதாரர் நிலையில் எழும் சந்தேகங்கள், தேவையான வசதிகள் எல்லாம் சீர் செய்யப்பட வேண்டும்.

உதாரணமாக அடுத்த கேள்விக்கு தாவிச் சென்ற பின்பு, திரும்ப விடை தெரியாத கேள்விக்கு யோசித்து பதிலளிப்பது எப்படி? என்பது போன்ற பல்வேறு ஐயங்களுக்கு தீர்வு காணப்பட வேண்டும்.

மாதிரி தேர்வுகள் மூலம் பயிற்சிகள் வழங்கலாம், வெள்ளோட்டம் பார்த்த பின்னர் ஆன்லைன் தேர்வை நடைமுறைப்படுத்தலாம்.

தேர்வு நடத்தும் பொறுப்பு தனியாரிடம் ஒப்படைப்பதால், விண்ணப்பதாரர்களின் கட்டணத் தொகை உயரலாம் மற்றும் வினாத்தாள் வெளியாவது போன்ற முறைகேடுகள் நடைபெற வாய்ப்பு உள்ளது என்ற அச்சம் நிலவுகிறது. ஏற்கனவே குரூப்-2 தேர்வுகள் ஆன்லைன் முறையில் நடத்தப்பட்டு தோல்வி அடைந்திருப்பது அதற்கு சான்றாக காட்டப்படுகிறது. எனவே இதுபோன்ற குறைகளுக்கும் வழியிருக்கக்கூடாது.

நவீன தொழில்நுட்பத்துக்கு மாறுவது, விரைந்த செயல்பாட்டிற்கும், வளர்ச்சிக்கும் அத்தியாவசியமாகும். குறைகளை கடந்து ஆன்லைன் தேர்வு என்ற அடுத்த கட்ட வளர்ச்சிக்கு தன்னையும், தமிழக மாணவர்களையும், விண்ணப்பதாரர்களையும் தயார்படுத்த வேண்டியது தமிழக அரசின் பொறுப்பு!


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

தபால்துறையில் போஸ்டல் ஏஜென்ட் பணி.

தபால் துறையில் சேவைகளை துரிதப்படுத்தும் புது முயற்சியாக ஓ.பி.ஏ. எனப்படும் ‘அவுட்சோர்ஸ்டு போஸ்டல் ஏஜென்ட்’ பணிவாய்ப்புக்கு விண்ணப்பிக்க சென்னை அண்ணா சாலை தலைமை தபால் அலுவலகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. வெளியில் இருந்தபடி தபால்துறைக்கான தபால்கள் மற்றும் பார்சல்களை பெறவும், வினியோகிக்கவும் இந்த ஏஜென்ட் பணிவாய்ப்பு வழி செய்கிறது. குறிப்பிட்ட எடையை கையாளுவதற்கேற்ப விதிமுறைப்படி ஊதியம் பெற்றுக் கொள்ள முடியும். இந்த பணிக்கு பிளஸ்-2 படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். குறிப்பிட்ட மாதிரியான சுய விவர பட்டியலுடன், தேவையான சான்றுகள் இணைத்து, அண்ணாசாலை தலைமை தபால் நிலைய முகவரிக்கு 31-7-2018-ந் தேதிக்குள் தபாலில் விண்ணப்பம் அனுப்ப வேண்டும். விண்ணப்பதாரர்கள் வாகனம் மற்றும் டிரைவிங் லைசென்ஸ் வைத்திருப்பதுடன், கணினி அறிவு, ஸ்மார்ட்போன் மற்றும் இன்டெர்நெட் இணைப்பு பெற்றிருப்பது அவசியமாகும். நேர்காணல் நடத்தப்பட்டு தகுதியானவர்கள் சேர்க்கப்படுவார்கள். இது பற்றிய விவரங்களை 044-28520923 என்ற தொலைபேசி எண்ணிலும், doannaroadhpo.tn@indiapost.gov.in என்ற மெயில் முகவரியிலும் கேட்டுப் பெறலாம்.


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

விமான நிறுவனங்களில் வேலை வாய்ப்புகள்

இந்திய விமான ஆணையம் மற்றும் விமான துணை நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள் அறிவிக் கப்பட்டு உள்ளன. இவை பற்றிய விவரம் வருமாறு:- இந்திய விமான நிறுவனமான ஏர் இந்தியாவின் துணை நிறுவனத்தில் ஒன்று ஏர் இந்தியா ஏர் டிரான்ஸ்ட்போர்ட் சர்வீசஸ் லிமிடெட் (AIATSL) . தற்போது இந்த நிறுவனத்தில் கஸ்டமர் ஏஜென்ட், ஹேண்டிமேன், ஹேண்டி உமன் உள்ளிட்ட பணிகளுக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. நேர்காணல் அடிப்படையில் இந்த பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. விசாகப்பட்டினம் விமான நிலையத்தில் 89 பணியிடங்களும், கோவை விமான நிலையத்தில் 76 பணியிடங்களும் உள்ளன. இவை காண்டிராக்ட் அடிப்படையிலான பணிகளாகும். இதுதவிர மும்பை, டெல்லி, சென்னை, கொல்கத்தா, விமான நிலையங்களில் எச்.ஆர். அதிகாரி மற்றும் அக்கவுண்ட்ஸ் அதிகாரி பணிகளுக்கு 15 பேரும் தேர்வு செய்யப்படுகிறார்கள். காண்டிராக்ட் பணி விண்ணப்பதாரர்கள் 1-7-2018-ந் தேதியில் 28 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும். ஹஸ்டமர் ஏஜெண்ட் பணிக்கு பட்டதாரிகளும், ஐ.டி.ஐ. படித்தவர்கள் சீனியர் ரேம் சர்வீஸ் ஏஜெணட் பணிகளுக்கும், 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் ஹேண்டிமேன் பணிகளுக்கும் விண்ணப்பிக்கலாம். டிரைவிங் லைசென்ஸ பெற்றவர்களுக்கும் பணிகள் உள்ளன. விசாகப்பட்டினம் மற்றும் கோவை விமான நிலையங்களில் ஆகஸ்ட் 3-ந் தேதி முதல் 5-ந் தேதி வரை நேர்காணல் நடக்கிறது. ஒவ்வொரு பணிக்கும் ஒவ்வொரு நாளில் , வெவ்வேறு இடங்களில் நேர்காணல் நடக்கிறது. நேரடி நேர்காணலில் எழுத்துத் தேர்வு, குழு கலந்துரையாடல், மருத்துவ பரிசோதனை ஆகியவை நடைபெறும். இவை பற்றிய விவரங்களை http://www.airindia.in/ என்ற இணையதள பக்கத்தில் பார்க்கலாம். அதிகாரி பணிகள் எச்.ஆர். மற்றும் அக்கவுண்ட்ஸ் அதிகாரி பணிகளுக்கு எச்.ஆர். , சி.ஏ., எம்.பி.ஏ., படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் 30 வயதுக்கு உட்பட்டிருக்க வேண்டும். 3 ஆண்டு பணி அனுபவம் அவசியம். rftc.aiatsl@airindia.in என்ற மெயில் முகவரிக்கு விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். 3-8-18-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். இது பற்றிய விவரத்தையும் மேற்குறிப்பிட்டுள்ள இணையதள பக்கத்தில் பார்க்கலாம். விமான ஆணையத்தில் 119 பணிகள் இந்திய விமான ஆணையம் சுருக்கமாக ஏ.ஏ.ஐ. என குறிப்பிடப்படுகிறது. தற்போது இந்த நிறுவனத்தின் மேற்கு மண்டலமான மும்பை கிளையில் ஜூனியர் அசிஸ்டன்ட் (தீயணைப்பு சேவை) பணிக்கு 119 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் பொதுப் பிரிவினருக்கு 66 இடங்களும், ஓ.பி.சி. பிரிவினருக்கு 35 இடங்களும், எஸ்.டி. பிரிவினருக்கு 18 இடங்களும் உள்ளன. விண்ணப்பதாரர்கள் 30-6-18-ந் தேதியில் 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும். 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன், மெக்கானிக்கல், ஆட்டோமொபைல், தீயணைப்பு போன்ற பிரிவில் 3 ஆண்டு டிப்ளமோ படிப்பை 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். பிளஸ்-2 படிப்பை 50சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். 6-8-2018-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இது பற்றிய விவரங்களை www.aai.aero என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

ராணுவ தொழில்நுட்ப பிரிவில் பட்டதாரிகள் சேர்ப்பு ஆண்-பெண் இருபாலரும் சேரலாம்

ராணுவத்தில் தொழில்நுட்ப பிரிவில் பட்டப்படிப்பு படித்த ஆண்- பெண் இருபாலரும் சேர்க்கப்படுகிறார்கள். இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:- ராணுவத்தில் பல்வேறு பயிற்சி சேர்க்கையின்படி தகுதியான இளைஞர்கள் பணியில் சேர்க்கப்பட்டு வருகிறார்கள். தற்போது தொழில் நுட்ப பிரிவில் 52-வது சேர்க்கையின்படி ஆண்களும், 23-வது ேசர்க்கையின்படி பெண்களும் சேர்க்கப்படுகிறார்கள். எஸ்.எஸ்.சி. (டெக்) கோர்ஸ் காமென்சிங் ஏப்ரல் 2019 எனும் இந்த பயிற்சி சேர்க்கையில் மொத்தம் 191 பேர் சேர்க்கப்படுகிறார்கள். இதில் பெண்களுக்கு 16 இடங்கள் உள்ளன. ஆண்களுக்கு 175 இடங்கள் உள்ளன. ஒவ்வொரு பாடப்பிரிவிலும் உள்ள பணியிட விவரங்களை முழுமையான விளம்பர அறிவிப்பில் பார்க்கலாம். இந்த பயிற்சியில் சேர விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்க்கலாம்... வயது வரம்பு விண்ணப்பதாரர்கள் 1-4-2019-ந் தேதியில் 20 வயது பூர்த்தி அடைந்தவர்களாகவும், 27 வயதுக்கு உட்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும். விதவைகள் 35 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். கல்வித்தகுதி: பி.இ., பி.டெக் பட்டப்படிப்பில் ஏதேனும் ஒரு பிரிவில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். இறுதியாண்டு படித்துக் கொண்டிருப்பவர்களும் விண்ணப்பிக்கத் தகுதியானவர்களே. விண்ணப்பதாரர்கள் ஆண்-பெண் இருபாலரும் திருமணம் ஆகாதவராக இருக்க வேண்டும். விதவைப் பெண்களுக்கு ஒன்றிரண்டு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. தேர்வு செய்யும் முறை: எஸ்.எஸ்.பி. அமைப்பின் மூலம் ஸ்டேஜ்-1, ஸ்டேஜ்2 என இரு நிலை தேர்வுகளுக்கு உட்படுத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். படங்களை புரிந்து கொள்ளுதல், நுண்ணறிவுத் திறன், உடல் திறன் தேர்வு, கலந்துரையாடல், நேர்காணல், உளவியல் தேர்வு உள்ளிட்ட தேர்வுகள் இதில் அடங்கும். அனைத்திலும் தேர்ச்சி பெறுபவர்கள் பயிற்சியில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். பயிற்சியிலும் தேர்ச்சி பெறுபவர்கள் லெப்டினன்ட் தரத்திலான அதிகாரி பணியில் சேரலாம். மேலும் 18 நிலைகளில் பதவி உயர்வு பெறுவதுடன், 2½ லட்சம் ரூபாய் வரை சம்பள உயர்வும் பெறலாம். விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதள விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். 9-8-2018-ந் தேதி விண்ணப்பிக்க கடைசிநாளாகும். விதவை பெண்கள் தேவையான சான்றுகளுடன், தபால் மூலம் 30-9-2018-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இது பற்றிய விரிவான விவரங்களை www.joinindianarmy.nic.in என்ற இணையதள பக்கத்தில் பார்க்கலாம்.


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

விண்வெளி மையத்தில் பயிற்சி வேலைவாய்ப்பு 435 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்

விண்வெளி மைய நிறுவனத்தில் அப்ரண்டிஸ் பயிற்சிப் பணிக்கு 435 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இது பற்றிய விவரம் வருமாறு:- இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் சுருக்கமாக இஸ்ரோ என்று அழைக்கப்படுகிறது. இதன் கீழ் செயல்படும் ஆராய்ச்சி மையங்களில் ஒன்று, சதிஷ் தவான் விண்வெளி மையம் (SDPC). திருவனந்தபுரத்தில் செயல்படும் இந்த விண்வெளி மைய நிறுவனத்தில் தற்போது அப்ரண்டிஸ் பயிற்சிப் பணியிடங்களுக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 435 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். பிரிவு வாரியாக உள்ள இடங்கள் விவரம் : பிட்டர் - 75, எலக்ட்ரீசியன் - 20, மோட்டார் மெக்கானிக் - 5, டிரேடு அப்ரண்டிஸ் - 42, கெமிக்கல் - 10, சிவில் - 5, ஏர் கண்டிசன் - 10, டீசல் மெக்கானிக் - 4, ஆபீஸ் அசிஸ்டன்ட் - 125, மெக்கானிக்கல் - 17, இ.சி.இ. - 17, மெக்கானிக்கல் -14, இ.சி.இ - 22, இ.இ.இ. - 11, எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யயூனிகேசன் 11, சி.எஸ்.இ. - 8, சிவில் 10, கெமிக்கல் - 5, ஆட்டோமொபைல் -3, அக்ரி -5, கேட்டரிங்- 3, போட்டோகிராபி - 1, லைபிரரி சயின்ஸ் - 4, ஏரோனாட்டிகல் -1, நர்சிங் -6, லேப் டெக்னீசியன் -4, கன்ஸ்ட்ரக்சன் டெக்னாலஜி - 4. விண்ணப்பதாரர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை அறிவோம்... வயது வரம்பு : விண்ணப்பதாரர்கள் 28-7-2018 -ந் தேதியில் 14 வயது பூர்த்தி அடைந்தவர்களாக இருக்க வேண்டும். கல்வித்தகுதி : 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு தேர்ச்சியுடன், ஐ.டி.ஐ. படித்தவர்கள் என்.டி.சி., ஏன்.ஏ.சி. பயிற்சி சான்றிதழ் பெற்றவர்களுக்கு பணியிடங்கள் உள்ளன. சில பணிகளுக்கு டிப்ளமோ என்ஜினீயர்களும், பட்டதாரி எனஜினீயர் களும் விண்ணப்பிக்க முடியும். தேர்வு செய்யும் முறை : கல்வித்தகுதியின் மதிப்பெண் சதவீதத்தின் அடிப்படையில் தரவரிசைப்பட்டியல் தயாரிக்கப்பட்டு தகுதியானவர்களுக்கு அழைப்புக்கடிதம் அனுப்பப்படும். விண்ணப்பிக்கும் முறை : விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். 28-7-2018-ந் தேதிக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட வேண்டும். விண்ணப்பிக்கவும் விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.shar.gov.in என்ற இணையதள பக்கத்தைப் பார்க்கவும்.


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

இன்சூரன்சு நிறுவனத்தில் 685 பணியிடங்கள்

நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் நிறுவனத்தில் உதவியாளர் பணிக்கு 685 இடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இது பற்றிய விவரம் வருமாறு:- பொதுத் துறை காப்பீட்டு நிறுவனங்களில் ஒன்று நியூ இந்தியா அஸ்யூரன்ஸ். தற்போது இந்த நிறுவனத்தில் அசிஸ்டன்ட் (உதவியாளர்- கிளாஸ்-3) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 685 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இட ஒதுக்கீடு அடிப்படையில் பொதுப் பிரிவினருக்கு 375 இடங்களும், ஓ.பி.சி. பிரிவினருக்கு 113 இடங்களும், எஸ்.சி. பிரிவினருக்கு 105 இடங்களும், எஸ்.டி. பிரிவினருக்கு 60 இடங்களும் உள்ளன. மேலும் 32 பின்னடைவுப் பணியிடங்களும் நிரப்பப்படுகிறது. இந்த பணியிடங்களில் தமிழகத்திற்கு மட்டும் 83 இடங்கள் உள்ளன. ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள பணியிட விவரங்களை முழுமையான விளம்பர அறிவிப்பில் பார்க்கலாம். இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்க்கலாம் :- வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 30-6-2017-ந் தேதியில் 21 வயது பூர்த்தி அடைந்தவர்களாகவும், 30 வயதுக்கு உட்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும். அதாவது 1-7-1988 மற்றும் 30-6-1997 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்தவர்களாக இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதி முறைகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும். கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப்படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். அவர்கள் ஆங்கிலத்தை ஒரு பாடமாக படித்திருக்க வேண்டும். கட்டணம் பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினர் ரூ.600 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மாற்றுத் திறனாளிகள், முன்னாள் படைவீரர்கள் ஆகியோர் ரூ.100 கட்டணம் செலுத்தினால் போதுமானது. தேர்வு செய்யும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் மண்டல மொழித்தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். எழுத்துத் தேர்வு பிரிமிலினரி தேர்வு, மெயின் தேர்வு என இரு நிலைகளில் தேர்வு நடைபெறும். அதில் தேர்ச்சி பெறுபவர்கள் மண்டல மொழியறிவு சோதனைக்குப் பின்பு பணியில் சேர்க்கப்படுவார்கள். விண்ணப்பிக்கும் முறை : விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணைய தளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். 31-7-2018-ந் தேதி விண்ணப்பிக்க கடைசிநாளாகும். இதற்கான முதல்நிலை எழுத்துத் தேர்வு செப்டம்பர் 8,9-ந் தேதிகளில் நடத்த உத்தேசிக்கப்பட்டு உள்ளது. முதன்மைத் தேர்வு அக்டோபர் 6-ந் தேதி நடைபெற உள்ளது. விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.newindia.co.in என்ற இணையதள பக்கத்தைப் பார்க்கவும்.


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

துணை ராணுவ படைகளில் 55 ஆயிரம் பணியிடங்கள்

துணை ராணுவ படைகளில் சுமார் 55 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப எஸ்.எஸ்.சி. அமைப்பு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:- ஸ்டாப் செலக்சன் கமிஷன் (எஸ்.எஸ்.சி.) மத்திய அரசுப் பணி தேர்வாணையங்களில் ஒன்றாக விளங்குகிறது. இந்த அமைப்பு தற்போது துணை ராணுவ படைப்பிரிவுகளில் கான்ஸ்டபிள் (ஜெனரல் டியூட்டி ) பணியிடங்களுக்கு விண்ணப்பம் கோரி உள்ளது. நமது நாட்டின் உள்விவகார பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுவதற்காக துணை ராணுவ அமைப்புகள் செயல்படுகின்றன. எல்லைக் காவல் படை (பி.எஸ்.எப்.), தொழிற்சாலைகள் பாதுகாப்பு படை (சி.ஐ.எஸ்.எப்.), மத்திய ஆயுதப்படை (சி.ஆர்.பி.எப்.), சசாஸ்திரா சீமா பல் (எஸ்.எஸ்.பி.), இந்திய திபெத்திய எல்லைக் காவல் படை (ஐ.டி.பி.பீ.), அசாம் ரைபிள் போன்ற படைப்பிரிவுகள் துணை ராணுவத்தில் அடங்கும். தற்போது இந்த படைப்பிரிவில் ஆண்களுக்கு 47 ஆயிரத்து 307 இடங்களும், பெண்களுக்கு 7 ஆயிரத்து 646 இடங்களும் அறிவிக்கப்பட்டு உள்ளன. மொத்தம் 54 ஆயிரத்து 953 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. ஒவ்வொரு படைப்பிரிவு வாரியான மற்றும் இட ஒதுக்கீடு வாரியான பணியிடங்கள் விவரத்தை இணையதளத்தில் பார்க்கலாம். இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கத் தேவையான தகுதி விவரங்களை இனி பார்க்கலாம்... விண்ணப்பதாரர்கள் 1-8-2018 தேதியில் 18 முதல் 23 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அதாவது 2-8-1995 மற்றும் 1-8-2000 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் விண்ணப்பதாரர் பிறந்திருக்க வேண்டும். எஸ்.சி.,எஸ்.டி. பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓ.பி.சி. பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அனுமதிக்கப்படும். மெட்ரிக்குலேசன் தேர்ச்சி பெற்றவர்கள் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். எழுத்து தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் சேர்க்கப்படுவார்கள். குறிப்பிட்ட உடல்தகுதி பரிசோதிக்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் இைணயதளம் வழியே விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். ரூ.100 கட்டணமாக செலுத்த வேண்டும். 20-8-2018-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்துகொள்ளவும் www.ssc.nic.in மற்றும் www.ssconline.nic.in ஆகிய இணையதள பக்கங்களை பார்க்கலாம்.


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Friday, 20 July 2018

அரசு பாட புத்தகங்களை தனியார் பள்ளிகள் பின்பற்றுகிறன: உதயச்சந்திரன்

''சி.பி.எஸ்.சி., பள்ளிகளும், தனியார் பள்ளிகளும், அரசு புத்தகங்களை பின்பற்றும் நிலைக்கு மாறிவிட்டன,'' என, பள்ளிக்கல்வி துறை செயலர் உதயச்சந்திரன் தெரிவித்தார். சேலம் மாவட்டம், ஓமலுாரில், பள்ளிக்கல்வித் துறை செயலர் உதயச்சந்திரன் தலைமையில் நேற்று, புதிய பாடத் திட்டம் குறித்து, ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், அவர் பேசியதாவது: வழக்கமாக பாட புத்தகங்கள் எழுதும் பணியை, ஆசிரியர்களும், ஆசிரியர் பயிற்றுனரும் சேர்ந்து செய்வர். இந்த முறை, இது மாற்றப்பட்டு, பாடப் புத்தகம் எழுதுவது, மக்கள் இயக்கமாக மாற்றப்பட்டுள்ளது.துவக்கப் பள்ளி ஆசிரியர்கள், குழந்தைகளை எளிதாக கையாளும் வகையில், தெரிந்த சொற்களை கொண்டு, அகர வரிசையில் பாடம் நடத்தும் வகையில், அமைக்கப்பட்டுள்ளது. ஒன்று முதல் எட்டு வரை பயிலும் மாணவர்கள், எதில், பலவீனமாக உள்ளனர் என்பதை ஆராய்ந்து, புதிய பாடத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.நீட் தேர்வில், பிளஸ் 1 பாடத்திலிருந்து, 50 சதவீதம் கேள்விகள் கேட்கப்படுகின்றன. இதில், 99 சதவீத கேள்விகள், நமது புத்தகத்திலிருந்து கேட்கப்பட்டுள்ளது. இதனால், சி.பி.எஸ்.சி., பள்ளிகளும், தனியார் பள்ளிகளும், அரசு புத்தகங்களை பின்பற்றும் நிலைக்கு மாறிவிட்டன.பிளஸ் 1 பாட புத்தகத்தில், அனைத்து பாட பிரிவினருக்குமான மேற்படிப்புகள் குறித்தும், அதை எங்கு படிக்கலாம் என்பதும் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. புதிய பாடத் திட்டத்தின் மூலம், அடுத்த நான்கு ஆண்டுகளில், தமிழக மாணவர்கள், அகில இந்திய போட்டி தேர்வுகளில், அதிக அளவில் பங்கேற்கும் வாய்ப்பு பெறுவர். மாணவர்களின் கனவுகளை நிறைவேற்றுவது, ஆசிரியர்கள் கையில் உள்ளது என்றார்.


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Monday, 16 July 2018

வேலை - கால அட்டவணை - 16 JULY 2018


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

விமான நிறுவனத்தில் அப்ரண்டிஸ் பயிற்சிப் பணி

விமான நிறுவனம் இந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட் எனப்படும் விமான நிறுவனம், இந்திய விமானப்படையின் கீழ் செயல்படுகிறது. தற்போது இந்த நிறுவனத்தில் அப்ரண்டிஸ் பயிற்சிப் பணிக்கு 61 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். எலக்ட்ரானிக்ஸ், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், சிவில், ஐ.டி., கம்ப்யூட்டர் சயின்ஸ் போன்ற என்ஜினீயரிங் டிப்ளமோ படித்தவர்கள் இந்த பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் 26 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் இது பற்றிய விவரங்களை www.halindia.com என்ற இணையதள பக்கத்தில் பார்த்துவிட்டு, 27-7-2018-ந் தேதிக்குள் சென்றடையும் வகையில் விண்ணப்பம் அனுப்ப வேண்டும்.


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

சென்ட்ரல் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் எனப்படும் பொதுத்துறை நிறுவனத்தில் உதவி பொது மேலாளர், கணக்கு அதிகாரி உள்ளிட்ட பணி

எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் சென்ட்ரல் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் எனப்படும் பொதுத்துறை நிறுவனத்தில் உதவி பொது மேலாளர், கணக்கு அதிகாரி உள்ளிட்ட பணிகளுக்கு 33 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். பி.இ., பி.டெக். மற்றும் சி.ஏ., ஐ.சி.டபுள்யு.ஏ., எம்.பி.ஏ. படித்தவர்களுக்கு பணிகள் உள்ளன. அதிகபட்சம் 50 வயதுடையவர்களுக்கும் பணிகள் உள்ளன. அந்தந்த பணிக்கான சரியான கல்வித்தகுதி, வயது வரம்பு உள்ளிட்ட முழுமையான விவரங்களை இணையதளத்தில் பார்த்துவிட்டு விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பம் 21-7-2018-ந் தேதி செயல்பாட்டிற்கு வரும். 11-8-2018-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். விரிவான விவரங்களை https://hr2016.celsolar.in என்ற இணையதள பக்கத்தில் பார்க்கலாம்.


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

பெல் நிறுவனத்தில் வேலை

பாரத மிகுமின் நிறுவனம் சுருக்கமாக பெல் (BHEL) எனப்படுகிறது. தமிழகத்தின் திருச்சி உள்பட நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் இதன் கிளை நிறுவனங்கள் செயல்படுகின்றன. தற்போது பெங்களூருவில் உள்ள பெல் கிளைக்கு புராஜெக்ட் என்ஜினீயர் மற்றும் சூப்பிரவைசர் பணிக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 74 பணியிடங்கள் உள்ளன. புராஜெக்ட் என்ஜினீயர் பணிக்கு 40 இடங்களும், சூப்பிரவைசர் பணிக்கு 34 இடங்களும் உள்ளது குறிப்பிடத்தக்கது. இட ஒதுக்கீடு அடிப்படையிலான பணியிட விவரத்தை இணையதளத்தில் பார்க்கலாம். விண்ணப்பதாரர்கள் 1-7-2018-ந் தேதியில் 33 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், டெலிகம்யூனிகேசன், இன்ஸ்ட்ருமென்டேசன், சிவில், மெக்கானிக்கல் போன்ற பிரிவில் பி.இ., பி.டெக் படிப்பை 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். நேர்காணல் நடத்தப்பட்டு தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள். விருப்பமுள்ளவர்கள் ரூ.200 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் இந்த கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. இணையதளம் வழியே விண்ணப்பம் சமர்ப்பிக்க கடைசி நாள் 21-7-2018-ந் தேதியாகும். பின்னர் நகல் விண்ணப்பத்தை தேவையான சான்றுகளுடன் 26-7-2018-ந் தேதிக்குள் குறிப்பிட்ட முகவரியை சென்றடையும்படி அனுப்ப வேண்டும். விண்ணப்பிக்கவும், www.bheledn.com என்ற இணையதள பக்கத்தைப் பார்க்கலாம்.


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

மருத்துவ துறையில் மருந்தாளுனர் பணிகள்

தமிழக மருத்துவ பணிகள் தேர்வு வாரியமான எம்.ஆர்.பி. அமைப்பு, பார்மசிஸ்ட் (மருந்தாளுனர்) பணியிடங்களை நிரப்ப விண்ணப்பம் கோரி உள்ளது. மொத்தம் 229 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் சித்தா பிரிவில் 148 இடங்களும், ஆயுர்வேத பிரிவில் 38 இடங்களும், ஓமியோபதி பிரிவில் 23 இடங்களும், யுனானி பிரிவில் 20 இடங்களும் உள்ளன. இவை தற்காலிக பணியிடங்களாகும். பார்மசிஸ்ட் டிப்ளமோ படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். சில பிரிவு பணிகளுக்கு குறிப்பிட்ட பணி அனுபவம் கேட்கப்பட்டள்ளது. விண்ணப்பதாரர்கள் 1-7-2018-ந் தேதியில் 57 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் ரூ.500 கட்டணம் செலுத்தி இணையதள விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். 30-7-2018-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் http://www.mrb.tn.gov.in/ என்ற இணையதள பக்கத்தைப் பார்க்கலாம்.


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

தமிழக காவல் துறையில் 309 சப்-இன்ஸ்பெக்டர் பணிகள்

தமிழக சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் சுருக்கமாக TNUSRB என அழைக்கப்படுகிறது. தற்போது இந்த அமைப்பு காவல்துறையில் ஏற்பட்டுள்ள சப்-இன்ஸ்பெக்டா் (தொழில்நுட்பம்) பணியிடங்களுக்கு விண்ணப்பம் கோரி உள்ளது. மொத்தம் 309 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்கள் வருமாறு... விண்ணப்பதாரர்கள் 1-7-2018-ந் தேதியில் 20 முதல் 28 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வுகள் அனுமதிக்கப்படும். எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேசன் பிரிவில் டிப்ளமோ என்ஜினீயரிங்/ தொழில்நுட்பம் படித்தவர்கள் வி்ண்ணப்பிக்க தகுதியானவர்கள். விருப்பமுள்ளவர்கள் ரூ.500 கட்டணம் செலுத்தி இணையதள விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும். இணையதள விண்ணப்பம் சமர்ப்பிக்க கடைசிநாள் 10-8-2018-ந் தேதியாகும். விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் http://www.tnusrbonline.org/ என்ற இணையதள பக்கத்தைப் பார்க்கலாம்.


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

சென்னை ரெயில்பெட்டி தொழிற் சாலையில் பயிற்சிப் பணிக்கு 707 பேர் தேவை.

ரெயில்பெட்டி தொழிற்சாலையில் 707 பயிற்சிப் பணிகள் சென்னை ரெயில்பெட்டி தொழிற் சாலையில் பயிற்சிப் பணிக்கு 707 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:- சென்னை பெரம்பூரில் ஐ.சி.எப். எனப்படும் ரெயில்பெட்டி தொழிற்சாலை செயல்படுகிறது. தற்போது இந்த நிறுவனத்தில் அப்ரண்டிஸ் பயிற்சிப் பணியிடங்களுக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. மொத்தம் 707 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். பணிப்பிரிவு வாரியாக உள்ள இடங்கள் விவரம் : கார்பெண்டர்-54, எலக்ட்ரீசியன் -116, பிட்டர் -230, மெஷினிஸ்ட் - 48, பெயிண்டர் - 30, வெல்டர் - 219, எம்.எல்.டி. ரேடியாலஜி, எம்.எல்.டி. பேதாலஜி 4, பி.ஏ.எஸ்.ஏ.ஏ. -2. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி அறிவோம்... வயது வரம்பு விண்ணப்பதாரர்கள் 1-10-2018-ந் தேதியில் 15 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 24 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும். கல்வித்தகுதி 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு படித்தவர்கள் இந்த பயிற்சி பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். சில பணிகளுக்கு என்.டி.சி.,/ ஐ.டி.ஐ. பயிற்சி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். தேர்வு செய்யும் முறை கல்வியில் பெற்ற மதிப்பெண் சதவீதம், உடல்தகுதி, அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். விண்ணப்பிக்கும் முறை விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணைய தளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 8-8-2018-ந் தேதியாகும். தேவையான சான்றிதழ்கள், புகைப்படம், கையொப்பத்தை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும் என்பதால் இதற்கான ஏற்பாடுகளை முன்கூட்டியே செய்து கொள்ளவும். தகவல்கள் அனைத்தும் குறிப்பிட்ட செல்போன் எண்கள் மற்றும் மெயில் முகவரி மூலமே நடைபெறும். இது பற்றிய விவரங்களை www.icf.indianrailways.gov.in என்ற இணையதள பக்கத்தைப் பார்க்கவும்,


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் அப்ரண்டிஸ் பயிற்சிப் பணிகளுக்கு 765 பேர் தேர்வு

நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் அப்ரண்டிஸ் பணிகள் நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் அப்ரண்டிஸ் பயிற்சிப் பணிகளுக்கு 765 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இது பற்றிய விவரம் வருமாறு:- நெய்வேலி நிலக்கரி நிறுவனம் சுருக்கமாக என்.எல்.சி. என அழைக்கப்படுகிறது. மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான இது அவ்வப்போது ஏராளமான இளைஞர்களுக்கு பயிற்சிப் பணிவாய்ப்பை வழங்குவது உண்டு. தற்போது அப்ரண்டிஸ் பயிற்சிப் பணிக்கு 765 பேரை தேர்வு செய்ய அறிவிப்பு வெளியாகி உள்ளது. பிரிவு வாரியான பணியிடங்கள் விவரம் : பிட்டர் - 120, டர்னர் -45, மெக்கானிக் -130, எலக்ட்ரீசியன் - 100, வயர்மேன் - 120, மெக்கானிக் டீசல் -25, மெக்கானிக் டிராக்டர் -25, கார்பெண்டர்- 10, பிளம்பர் -20, வெல்டர் - 70, பி.ஏ.எஸ்.ஏ.ஏ. -40, அக்கவுண்டன்ட் - 20, டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் - 20, அசிஸ்டன்ட் - 20 இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்க்கலாம். கல்வித்தகுதி பணியிடங்கள் உள்ள பிரிவில் ஐ.டி.ஐ. படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். அக்கவுண்டன்ட் பணிக்கு பி.காம். பட்டதாரிகளும், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் பணிக்கு பி.எஸ்சி. கணினி அறிவியல் பட்டதாரிகளும், எச்.ஆர். அசிஸ்டன்ட் பணிக்கு பி.பி.ஏ. பட்டதாரிகளும் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு விண்ணப்பதாரர்கள் 1-10-2018-ந் தேதியில் 14 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும். விண்ணப்பிக்கும் முறை விருப்பமும், தகுதியும் இருப்பவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பம் இணைய தனத்தில் இன்று செயல்பாட்டிற்கு வருகிறது. 25-7-2018-ந் தேதி விண்ணப்பிக்க கடைசிநாளாகும். பின்னர் பூர்த்தியான விண்ணப்பத்தை நகல் எடுத்து, 30-7-2018-ந் தேதிக்குள் குறிப்பிட்ட முகவரிக்கு சென்றடையும்படி அனுப்ப வேண்டும். விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.nlcindia.com என்ற இணையதள முகவரியைப் பார்க்கவும்.


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

மத்திய தாதுவள நிறுவனத்தில் 245 பணியிடங்கள்

தாது வள நிறுவனத்தில் 245 பணியிடங்கள் மத்திய தாதுவள நிறுவனத்தில் 245 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இது பற்றிய விவரம் வருமாறு:- தாதுவள ஆராய்ச்சி கழக நிறுவனம் சுருக்கமாக எம்.இ.சி.எல். (MECL) என்று அழைக்கப்படுகிறது. பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான இந்த நிறுவனத்தில் தற்போது டெபுடி ஜெனரல் மேனேஜர், மேனேஜர், அசிஸ்டன்ட், மெக்கானிக், டிரைவர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு 245 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் அதிகபட்சமாக டெக்னீசியன் டிரிலிங் பணிக்கு 41 இடங்களும், மெட்டீரியல் அசிஸ்டன்ட் பணிக்கு 18 இடங்களும், அசிஸ்டன்ட் (எச்.ஆர்.) பணிக்கு 29 இடங்களும், டிரைவர் பணிக்கு 30 இடங்களும் உள்ளன. இதர பணிகளுக்கான காலியிட விவரங்களை இணையதளத்தில் பார்க்கலாம். இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்ப்போம்... வயது வரம்பு : ஒவ்வொரு பணிக்கும் வயது வரம்பு வேறுபடுகிறது. அதிகாரி தரத்திலான பணிகளுக்கு 40 முதல் 50 வயதுடையவர்களுக்கு பணிகள் உள்ளன. அசிஸ்டன்ட் உள்ளிட்ட அலுவலக பணிகளுக்கு 30 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மாற்றுத்திறனாளிகள், முன்னாள் படைவீரர்களுக்கு வயது வரம்பில் அரசு விதிகளின்படி தளர்வு அனுமதிக்கப் படுகிறது. கல்வித்தகுதி சி.ஏ., ஐ.சி.டபுள்யு.ஏ., பி.இ., பி.டெக் போன்ற என்ஜினீயரிங்-தொழில்நுட்ப படிப்புகள், எம்.எஸ்சி., எம்.டெக். படித்தவர்கள் அதிகாரி தரத்திலான பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். இளநிலை பட்டப்படிப்புகள், டிப்ளமோ என்ஜினீயரிங் படிப்புகள், ஐ.டி.ஐ., தட்டச்சு தெரிந்தவர்களுக்கு அலுவலக பணியிடங்களில் வாய்ப்புகள் உள்ளன. ஒவ்வொரு பணிக்குமான சரியான வயது வரம்பு, கல்வித்தகுதி, பணியிட விவரங்களை இணையதளத்தில் பார்க்கலாம். விண்ணப்பிக்கும் முறை விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பப்பதிவு இன்று (16-7-2018) தொடங்குகிறது. விண்ணப்பிக்க கடைசிநாள் 16-8-2018-ந் தேதியாகும். விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.mecl.co.in என்ற இணையதள பக்கத்தைப் பார்க்கலாம்.


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

என்.சி.சி. வீரர்கள் ராணுவத்தில் சேர்ப்பு

என்.சி.சி. வீரர்கள் ராணுவத்தில் சேர்ப்பு ராணுவத்தில் பயிற்சியுடன் கூடிய பணிக்கு என்.சி.சி. வீரர்கள் சேர்க்கப்படுகிறார்கள். இது பற்றிய விவரம் வருமாறு:- இந்திய ராணுவம் நாட்டின் பாதுகாப்பு அரணாக விளங்கி வருகிறது. பல்வேறு சிறப்பு பயிற்சிகளின் அடிப்படையில் தகுதியான இளைஞர்கள் ராணுவத்தில் சேர்க்கப்பட்டு பயிற்சிக்குப் பின் பணி நியமனம் செய்யப்பட்டு வருகிறார்கள். தற்போது என்.சி.சி. 45-வது சிறப்பு நுழைவின் அடிப்படையில் பட்டப்படிப்பு படித்த என்.சி.சி. வீரர்களை ராணுவத்தில் சேர்க்க அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 55 பேர் சேர்க்கப்படுகிறார்கள். இதில் ஆண்கள் 50 பேர், பெண்கள் 5 பேர். இந்திய குடியுரிமை பெற்ற, திருமணமான மற்றும் திருமணமாகாத ஆண்கள், திருமணமாகாத பெண்கள் இந்த பயிற்சி யில் சேரலாம். இதில் சேருவதற்கு விண்ணப்பதாரர் பெற்றிருக்க வேண்டிய இதர தகுதி விவரங்கள் கீழே... வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 19 முதல் 25 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அதாவது 2-1-1994 மற்றும் 1-1-2000 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்திருக்க வேண்டும். கல்வித் தகுதி: அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் குறைந்தபட்சம் ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப்படிப்பை 50 சதவீத மதிப்பெண்களுடன் நிறைவு செய்திருக்க வேண்டும். அத்துடன் என்.சி.சி. பயிற்சியில் “சி” சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். பட்டப்படிப்பில் இறுதியாண்டு படித்துக் கொண்டிருப்பவர்களும் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். இவர்கள் முதல் 2 வருட படிப்பில் 50 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். தேர்வு செய்யும் முறை: என்.சி.சி. பயிற்சியில் பெற்றிருக்கும் தகுதியின் அடிப்படையில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலானவர்கள் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். அவர்கள் ஸ்டேஜ்-1, ஸ்டேஜ்-2 எனும் இரு நிலைகளில் தேர்வுக்கு உட்படுத்தப்படுவார்கள். இதில் குழு தேர்வு, உளவியல் தேர்வு, நேர்காணல் ஆகியவை அடங்கும். இறுதியாக மருத்துவ பரிசோதனை நடைபெறும். அனைத்திலும் தேர்ச்சி பெறுபவர்கள் பயிற்சியில் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள். அவர்கள் 49 வார கால பயிற்சிக்கு உட்படுத்தப்படுவார்கள். பயிற்சியில் தேர்ச்சி பெறுபவர்கள் லெப்டினன்ட் தரத்திலான அதிகாரி பணியில் நியமனம் பெறலாம். விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 2-8-2018-ந் தேதியாகும். விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.joinindianarmy.nic.in என்ற இணையதள முகவரியை பார்க்கலாம்.


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Friday, 13 July 2018

அரசுப் பதவி உயர்வுகளில் எஸ்சி, எஸ்டிக்கு இடஒதுக்கீடு! தடை விதிக்க முடியாது - உச்ச நீதிமன்றம்.

அரசுப் பதவி உயர்வுகளில் எஸ்சி மற்றும் எஸ்டிக்கான இட ஒதுக்கீட்டில் கீரிமி லேயர் வரையறையைப் பொருத்துவதற்கு எதிராக இடைக்காலத் தடை விதிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு ஒன்றின் விசாரணையில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையில் நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர் மற்றும் டி.ஒய்.சந்திரசௌத் ஆகியோர் கொண்ட அமர்வானது தனது தீர்ப்பில் கூறியதாவது: 2006இல் நாகராஜ் எதிர் இந்திய அரசு என்ற வழக்கில், கீரிமி லேயா் வரையரையை அரசுப் பதவி உயர்வுகளில் எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவினருக்குப் பொருத்துவது குறித்துத் தீர்ப்பு அளிக்கப்பட்டது. அந்தத் தீர்ப்புக்கு எதிராக இடைக்காலத் தடை விதிக்க முடியாது என்று கூறியுள்ளது. ஆனால், இந்தப் பிரச்சினையை ஏழு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கொண்ட அரசியல் சட்ட அமர்வு விசாரிக்கும் என்றும் கூறியுள்ளது. முன்னதாக அரசின் அட்டார்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் இப்பிரச்சினையை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏழு பேர் கொண்ட அரசியல் சட்ட அமர்வு விசாரிக்க வேண்டும். ஏனெனில் ரயில்வேத் துறையிலும் பல்வேறு அரசின் சேவைத் துறைகளிலும் இப்பிரச்சினை குறித்து வேறுபட்டநீதிமன்ற தீர்ப்புகள் வந்துள்ளதால் குழப்பம் நிலவுகிறது. அதைத் தீர்த்து வைக்க அரசியல் சட்ட அமர்வு விசாரிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அவருக்குப் பதிலளிக்கும் விதமாக, தற்போது ஓர் அரசியல் சட்ட அமா்வானது பல்வேறு பிரச்சினைகளை விசாரித்துக் கொண்டிருக்கிறது. அதனால் இந்த வழக்கை உடனே எடுத்துக்கொள்ள முடியாது. ஆகஸ்ட் முதல் வாரத்தில் இந்த வழக்கின் விசாரணையை அரசியல் சட்ட அமர்வு எடுத்துக்கொள்ளும் என்று தெரிவித்தனர்.


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

காலி பணியிடங்களுக்கு தகுந்தபடி, ஆசிரியர்கள் நியமனம் நடைபெறும் - சிறப்பு ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு நடத்தி 15 நாட்களுக்குள் பணி நியமனம்

தமிழக பள்ளிக்கல்வித்துறையில் மேற்கொள்ளப்பட்டுள்ள நிர்வாக மாற்றங்கள் தொடர்பாக, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை ஆகிய 5 மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கான நிர்வாக பயிற்சி முகாம் திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசியதாவது: தமிழக அரசு பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.27,205 கோடி ஒதுக்கியிருக்கிறது. தமிழகம் முழுவதும் 3 ஆயிரம் ஸ்மார்ட் வகுப்பறைகள் அடுத்த மாதம் தொடங்கப்படும். அடுத்த கல்வி ஆண்டில் அனைத்து வகுப்புகளுக்கும் புதிய பாடத்திட்டம் அமல்படுத்தப்படும். அப்போது தமிழக மாணவர்களின் கல்வித்தரம் உயரும். 9 முதல் பிளஸ் 2 வரையிலான வகுப்பு மாணவர்களுக்கு கம்ப்யூட்டர் பயிற்சி அளிக்க ரூ.500 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 36 பள்ளிகளில் ஒரு மாணவர்கூட இல்லை. 842 பள்ளிகளில் 10 மாணவர்களுக்கும் குறைவாக உள்ளனர். எனவே, மாணவர் எண்ணிக்கை அடிப்படையில் ஆசிரியர்கள் மாற்றப்பட்டுள்ளனர். பள்ளிகளில் உள்ள கழிப்பிடங்களை சுத்தம் செய்வதற்காக, ஜெர்மன் நாட்டில் இருந்து ஆயிரம் நவீன இயந்திரங்கள் வாங்கப்படுகிறது. அதன்மூலம் 20 ஆயிரம் பள்ளிகளை சுத்தம் செய்ய முடியும். அதன் விபரங்கள் உடனுக்குடன் எங்களுக்கு வந்துசேரும். நீட் தேர்வை தமிழில் எழுதிய மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண் வழங்க மதுரை ஐகோர்ட் சிறப்பான உத்தரவிட்டிருக்கிறது. இதுதொடர்பாக, தமிழக முதல்வர் மத்திய அரசின் கவனத்துக்கு எடுத்து செல்வார். சிறப்பு ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு நடத்தி 15 நாட்களுக்குள் பணி நியமனம் வழங்கப்படும். காலி பணியிடங்களுக்கு தகுந்தபடி, ஆசிரியர்கள் நியமனம் நடைபெறும். 2012-13, 2013-14ம் ஆண்டுகளில் டெட் தேர்ச்சி பெற்ற 22 ஆயிரம் பேருக்கு பணி வழங்கப்பட்டுள்ளது. மேலும் 82 ஆயிரம் பேர் காத்திருக்கின்றனர். அவர்களுக்கு 7 ஆண்டுகள் வரை வாய்ப்பு இருக்கிறது. வெயிட்டேஜ் மதிப்பெண் முறை இருக்காது. டெட் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் பணி வழங்கப்படும். வேலைவாய்ப்பு அலுவலக பதிவுக்கு முன்னுரிமை கிடையாது இவ்வாறு அவர் பேசினார்.


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

அரசு உதவி பெறும் பள்ளிகளில் உபரி பணியிடங்களை, கணினிஆசிரியர் பணியிடமாக மாற்ற வேண்டும்.

அரசுப்பள்ளிகளில் பாடத்திட்டங்கள் மேம்படுத்தப்பட்டு வரும் நிலையில், அதர பழசான கம்ப்யூட்டர்களால் கற்பித்தல் பணி போராட்டமாக இருப்பதாக ஆசிரியர்கள் புலம்புகின்றனர். தமிழகத்தில் பல ஆண்டுகளுக்கு பின் பாடத்திட்டங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. முதல் கட்டமாக 1, 6, 9 மற்றும் பிளஸ் 1 பாடத்திட்டங்கள் மாற்றப்பட்டன. கற்பித்தலில் புதுமை ஏற்படுத்தும் வகையில் பல அம்சங்கள் பாடத்திட்டத்தில் புகுத்தப்பட்டுள்ளன.குறிப்பாக மேல்நிலை கல்வியில் கணினி பாடம் அனைத்து பாடப் பிரிவிற்கும் கொண்டு வரப்பட்டுள்ளது. இதனால் வாரத்தில் ஒரு கணினி ஆசிரியர் 50க்கும் மேற்பட்ட பாடவேளைகளை கையாள வேண்டியுள்ளது. அரசு பள்ளிகளுக்கு 12 ஆண்டுகளுக்கு முன் வழங்கப்பட்ட கம்ப்யூட்டர்கள்தான் தற்போதும் பயன்பாட்டில் உள்ளன. இவற்றில் 'அப்டேட் வெர்ஷனை' பயன்படுத்த முடியவில்லை. அடிக்கடி பழுதடைகின்றன. கம்ப்யூட்டர் பாடம் நடத்துவது பெரும் போராட்டமாக உள்ளதாக ஆசிரியர்கள் புலம்புகின்றனர். தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலை பள்ளி கணினி ஆசிரியர்கள் சங்க மாநில தலைவர் சங்கரலிங்கம் கூறியதாவது: ஒரு பள்ளிக்குஒரு ஆசிரியர் என்பதால் கம்ப்யூட்டர் ஆசிரியர், வாரத்தில் குறைந்தபட்சம் 40 பாடவேளை கையாள வேண்டியுள்ளது. கூடுதல் ஆசிரியர் நியமித்தால்தான் தரமான கற்பித்தல் சாத்தியமாகும். 2005-06ல் 1880 அரசு பள்ளிகளுக்கு தலா 9 கம்ப்யூட்டர்கள் வழங்கப்பட்டன. 'அப்டேட்' இல்லாத அந்த கம்ப்யூட்டர்களையே ஆசிரியர் பயன்படுத்துகின்றனர். அடிக்கடி பழுதாவதால் கற்பித்தல் பணி சவாலாகிறது. நவீன தரத்துடன் கணினி ஆய்வகம் ஏற்படுத்த வேண்டும். அரசு உதவி பெறும் பள்ளிகளில் உபரி பணியிடங்களை, கணினிஆசிரியர் பணியிடமாக மாற்ற வேண்டும், என்றார்.


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

அனைத்து வகை பள்ளிகளிலும், ஜூலை 15 - கல்வி வளர்ச்சி நாள் கொண்டாட உத்தரவு!

தமிழக பள்ளிகளில், 15ம் தேதி கல்வி வளர்ச்சி நாள் கொண்டாட, உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழக முன்னாள் முதல்வர், மறைந்த காமராஜரின் பிறந்த நாள், வரும், 15ம் தேதி, அரசின் சார்பில் கொண்டாப்படுகிறது. இந்த நாளை, கல்வி வளர்ச்சி நாளாக கடைபிடிக்க, தமிழக அரசுஉத்தர விட்டுள்ளது. இதன்படி, அனைத்து வகை பள்ளிகளிலும், அன்று, காமராஜரின் வரலாறு, அவரது திட்டங்கள், சாதனைகள், கல்விக்கு அவர் ஆற்றிய பணிகள் குறித்து, மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த, ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.பள்ளிகளில், சிறப்பு நிகழ்ச்சிகள், போட்டிகள் நடத்தி,காமராஜர் பெயரில் பரிசு வழங்கவும், உத்தரவிடப்பட்டு உள்ளது.


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

தேசிய ஆசிரியர் விருதுக்கு விண்ணப்பிக்க 2 நாள் அவகாசம்!

தேசிய ஆசிரியர் விருதுக்கு விண்ணப்பிக்க, இன்னும் இரண்டு நாட்கள் மட்டும் அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது. மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் சார்பில், ஆசிரியர்களுக்கான தேசிய விருது, ஜூனில் அறிவிக்கப்பட்டது. 'இந்த விருதுக்கு, ஜூன், 15 முதல், 30 வரை, நேரடியாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்' என, மத்திய அரசு அறிவித்தது. ஆனால், எதிர்பார்ப்பை விட குறைந்த அளவு ஆசிரியர்களே விண்ணப்பித்ததால், கூடுதலாக, 15 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டது. இதன்படி, வரும், 15ம் தேதிக்குள், தேசிய விருதுக்கு விண்ணப்பிக்க வேண்டும். 'இந்த விண்ணப்பங்களை மாவட்ட பரிசீலனை குழுவினர் ஆய்வு செய்து, வரும், 16ம் தேதி முதல், 24ம் தேதிக்குள், மாநில கமிட்டியிடம் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். 'மாநில கமிட்டியினர், ஜூலை, 31க்குள், மத்திய அரசின் தேசிய விருது பரிசீலனை கமிட்டிக்கு பரிந்துரைக்க வேண்டும்' என, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அறிவித்துள்ளது.


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

வரும் கல்வி ஆண்டில் இருந்து 11ம் வகுப்பு மாணவர்களுக்கு லேப்டாப், சைக்கிள் வழங்கப்படும்: அடுத்த வாரம் 3,000 பள்ளிகளில் 'ஸ்மார்ட் கிளாஸ்' துவக்கம்': அமைச்சர் செங்கோட்டையன்

தமிழகம் முழுவதும் இந்த ஆண்டு முதல் பிளஸ்-2 தேர்வு முடிவு வெளியான 15 நாளில், தனியார் கல்லூரிகளில் உணவு, இருப்பிட வசதியுடன் ஆண்டுதோறும் 25,000 மாணவர்களுக்கு ஆடிட்டிங் பயிற்சி (சி.ஏ) அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விரைவில் அனைத்து பள்ளிகளிலும் பயோமெட்ரிக் கருவி பொருத்தப்படும் வரும் கல்வி ஆண்டில் இருந்து 11ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு அரசின் இலவச லேப்டாப் மற்றும் சைக்கிள் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். ''தமிழகத்தில், அடுத்த வாரம் முதல், 3,000 அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் துவங்க உள்ளது,'' என, அமைச்சர் செங்கோட்டையன் பேசினார். திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த, தளரப்பாடி, சகாயபுரம், பூமாட்டு காலனி ஆகிய, ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி கட்டடம், சமையற்கூடம், கழிவறை மற்றும் ஆரணியில், ஒரு கோடியே, 61 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள பள்ளிக் கட்டடம் ஆகியவற்றை, அமைச்சர் செங்கோட்டையன் துவக்கி வைத்தார். இதை தொடர்ந்து, திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில், தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பாக, சேலம், வேலூர், திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஆகிய, ஐந்து மாவட்டங்களை சேர்ந்த, 21 பேருக்கு கனவு ஆசிரியர் விருதுகளும், 13 பள்ளிகளுக்கு, புதுமைப் பள்ளி விருதுகளும் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில், அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது: பள்ளிக்கல்வித்துறைக்கு, 27 ஆயிரத்து, 200 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில், 68 கல்வி மாவட்டத்தை, 120 கல்வி மாவட்டமாக மாற்றியமைத்து, 892 வட்டார கல்வி அலுவலர்கள் நியமிக்கப்பட்டு, கூடுதல் அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு வட்டார கல்வி அலுவலர், 35 முதல் 40 பள்ளிகள் வரை ஆய்வு செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில், 3,000 பள்ளிகளில் அடுத்த வாரம் முதல், ஸ்மார்ட் வகுப்பு துவங்கப்பட உள்ளது. ஒன்பது முதல் பிளஸ் 2 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, 500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் முற்றிலும் கணினி மயமாக்கப்படுகிறது. இவ்வாறு, அவர் பேசினார். கலெக்டர் கந்தசாமி, அமைச்சர் ராமச்சந்திரன், பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் பரிதீப்யாதவ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

பொறியியல் கலந்தாய்வை தாமதமாக தொடங்க நீதிமன்றத்தில் அனுமதி கோருவோம்: உயர்கல்வித் துறை அமைச்சர்.

மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை நிறுத்திவைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால், பொறியியல் பொதுப் பிரிவு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை காலதாமதமாக தொடங்க நீதிமன்றத்திடம் அனுமதி கோரவுள்ளதாக உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்தார். திருநெல்வேலியில் மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற பல்வேறு கட்டட திறப்பு விழா நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், செய்தியாள்களிடம் மேலும் கூறியதாவது: கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்துக்கு கட்டமைப்பு நிதியாக ரூ.20 கோடிக்கு மேல் ஒதுக்கப்பட்டு கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. இப்போது ரூ. 1.7 கோடி அளவிலான பல்வேறு பணிகள் நிறைவு பெற்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. வரும் 18ஆம் தேதி சுந்தரனார் பல்கலைக்கழகத்துக்கு தேசிய தர நிர்ணயக் கமிட்டி (நாக்) வருகை தரவுள்ளது. இப்பல்கலைக்கழகத்துக்கு ஏ++ தர அந்தஸ்தை பெறுவதற்கான அனைத்து கட்டமைப்பு வசதிகளும் மேம்படுத்தப்பட்டுள்ளன. பொறியியல் கலந்தாய்வு: நிகழாண்டு புதிதாக பொறியியல் கல்லூரிகள் உருவாக்கப்படவில்லை. பொறியியல் மாணவர் சேர்க்கைக்காக 509 கல்லூரிகள் பதிவு செய்துள்ளன. அந்தக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கான 1 லட்சத்து 78 ஆயிரத்து 139 இடங்களுக்கு கலந்தாய்வு நடைபெறவுள்ளது. பொறியியல் கலந்தாய்வுக்காக ஆன்லைன் மூலமாக 1 லட்சத்து 59 ஆயிரத்து 631 பேர் பதிவு செய்துள்ளனர். சான்றிதழ் சரிபார்ப்புக்கு பிறகு 1 லட்சத்து 4 ஆயிரத்து 453 பேர் கலந்தாய்வில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர். ஏற்கெனவே இருந்த 26 பொறியியல் கல்லூரிகள் வேறு கல்லூரிகளாக மாற்றப்படவுள்ளன. அதனால், அந்தக் கல்லூரிகளுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறவில்லை. மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு தள்ளிப்போகும் காரணத்தால், பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை தாமதமாக தொடங்குவதற்கு அனுமதி கோரி நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை மனு தாக்கல் செய்யவுள்ளோம். நீதிமன்றத்தின் அனுமதிப்படி கலந்தாய்வு நடத்தப்படும். நிகழாண்டு புதிதாக கலை, அறிவியல் கல்லூரி தொடங்குவதற்கான வாய்ப்பு இல்லை. இந்த ஆண்டு 41 உறுப்புக் கல்லூரிகள், அரசுக் கல்லூரிகளாக மாற்றப்பட்டுள்ளன. இதேபோல் 264 புதிய பாடப் பிரிவுகளை வழங்கியிருக்கிறோம். உயர்கல்வித் துறையில் இந்திய அளவில் மாணவர் சேர்க்கை விகிதம் 25.2 சதவீதமாக இருந்தாலும்கூட, தமிழகத்தில் மாணவர் சேர்க்கை 46.9 சதவீதமாக உள்ளது. இதன்மூலம் இந்தியாவுக்கே வழிகாட்டும் வகையில் தமிழக மாணவர்கள் முதலிடத்தில் உள்ளனர். வரும் 2020இல் 30 சதவீத மாணவர் சேர்க்கைக்கு மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. ஆனால் அதை நாம் இப்போதே தாண்டிவிட்டோம். முறைகேடு இல்லை: பல்கலைக்கழகத்தில் ஊழல் நடைபெறுவதாகக் கூறப்படுவது தவறான தகவல். இந்தியாவே திரும்பிப் பார்க்கும் வகையில் தமிழகம் வளர்ந்திருக்கிறது. அதற்கு அவப்பெயர் ஏற்படுத்தும் நோக்கில் தவறான தகவல் பரப்பப்படுகிறது. தவறு செய்பவர்களை கடுமையாக தண்டிக்கும் வகையில் தமிழக அரசு செயல்பட்டு வருகிறது என்றார்.


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

வேளாண் கலந்தாய்வில் அனைத்து இடங்களும் நிரம்பின: 19-ஆம் தேதி முதல் சான்றிதழ் சரிபார்ப்பு.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக மாணவர் சேர்க்கைக்காக நடைபெற்ற ஆன்லைன் கலந்தாய்வில் அனைத்து இடங்களும் நிரம்பியிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சான்றிதழ் சரிபார்ப்பு வரும் 19ஆம் தேதி தொடங்குகிறது. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் 14 உறுப்பு, 26 இணைப்புக் கல்லூரிகளில் உள்ள வேளாண்மை, தோட்டக் கலை, வனவியல், உணவு - ஊட்டச்சத்து அறிவியல் உள்ளிட்ட 12 பட்டப் படிப்புகளில் உள்ள 3,422 இடங்களுக்கு 2018-19ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைமுறைகள் கடந்த 2 மாதங்களாக நடைபெற்று வருகின்றன. சிறப்புப் பிரிவினர் உள்ளிட்ட பிற ஒதுக்கீடுகளுக்கான இடங்கள் தவிர 2,593 இடங்களை ஆன்லைன் கலந்தாய்வு மூலம் நிரப்ப முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து கடந்த 9ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை ஆன்லைன் கலந்தாய்வு நடைபெற்றது. கலந்தாய்வுக்கு உரிய கட்டணம் செலுத்தி 8,986 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்திருந்தனர். இவர்களில் 5,337 பேர் கலந்தாய்வில் பங்கேற்றுள்ளனர். இவர்கள் தங்களுக்கான முதல் மூன்று விருப்பப் பாடங்களைத் தேர்வு செய்துள்ளனர். முதல் 2,593 பேரைத் தவிர மற்ற மாணவர்கள் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர். யார், யார் எந்தெந்தப் பாடங்களுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர், யாரெல்லாம் காத்திருப்போர் பட்டியலில் உள்ளனர் என்ற விவரங்கள் பல்கலைக்கழக இணையதளத்தில் வியாழக்கிழமை வெளியிடப்பட்டது. மாணவர்கள் தங்களுக்கு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டதற்கான கடிதத்தை ஆன்லைன் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி மாணவர்கள் கடிதங்களை பதிவிறக்கம் செய்து வருகின்றனர். சேர்க்கைக் கட்டணமாக ரூ. 20 ஆயிரம் செலுத்த வேண்டும். அதன் பிறகு ஜூலை 19ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை நடைபெறும் சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்று தங்களிடம் உள்ள அனைத்து சான்றிதழ்களையும் காண்பிக்க வேண்டும். கட்டணம் செலுத்தாத, சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்காதவர்கள் யாரேனும் இருந்தால் அவர்களுக்கு அடுத்த இடத்தில் இருப்பவர்கள் அந்த இடத்தைப் பூர்த்தி செய்து கொள்வார்கள். இவ்வாறு தரவரிசைப் பட்டியலில் யாரெல்லாம் முன்னேறிச் செல்ல இருக்கின்றனர் என்ற விவரம் வரும் 21ஆம் தேதி தெரிவிக்கப்படும் என்று பல்கலைக்கழக முதன்மையர் (வேளாண்மை) மகிமை ராஜா தெரிவித்துள்ளார்


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

தமிழில் நீட் தேர்வெழுதியோருக்கு கருணை மதிப்பெண் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு: சிபிஎஸ்இ திட்டம்

தமிழில் நீட் தேர்வெழுதியோருக்கு கருணை மதிப்பெண் வழங்குமாறு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய சிபிஎஸ்இ திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நீட் தேர்வில், ஆங்கில பதிப்பில் இருந்து மொழிபெயர்க்கப்பட்ட தமிழ் கேள்விகளில் பிழை இருந்ததாக தொடரப்பட்ட வழக்கில் கடந்த 10-ஆம் தேதி உயர் நீதிமன்ற மதுரை கிளை இந்த உத்தரவை பிறப்பித்தது. பிழையுள்ள 49 கேள்விகளுக்கும் தலா 4 மதிப்பெண்கள் என்ற அடிப்படையில், 196 மதிபெண்களை வழங்கி, தரவரிசைப் பட்டியலை திருத்தி வெளியிடுமாறு சிபிஎஸ்இ-க்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. கேள்விகளில் பிழை இருந்ததால் மாணவர்கள் குழப்பத்துக்கு ஆளானதாகக் கூறி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவரும், மாநிலங்களவை எம்.பி.யுமான டி.கே.ரங்கராஜன் தொடுத்த வழக்கின் அடிப்படையில், மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் கிடைக்க வழிவகை ஏற்பட்டது. இந்நிலையில், உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு தொடர்பாக சட்ட வல்லுநர்களுடன் சிபிஎஸ்இ ஆலோசித்து வருவதாகவும், அதன் அடிப்படையில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வது குறித்து இறுதி முடிவு எடுக்கப்பட உள்ளது என்றும், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மேல்முறையீடு என்னவாகும்?: பிராந்திய மொழிகளில் நீட் தேர்வு எழுத விரும்பும் மாணவர்களுக்கு, ஆங்கிலத்துடன், அவர்களது பிராந்திய மொழியுடன் கூடிய இரண்டு கேள்வித் தாள்கள் வழங்கப்படும். ஒருவேளை, பிராந்திய மொழிக்கான மொழிபெயர்ப்பு தெளிவின்றி இருந்தால், ஆங்கில கேள்வித்தாளே இறுதியானதாகக் கருதப்படும்'' என்று நீட் தேர்வுக்காக சிபிஎஸ்இ வகுத்துள்ள விதிமுறைகளில் ஏற்கெனவே குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விதிமுறையை சுட்டிக் காட்டி, உச்ச நீதிமன்றத்தில் சிபிஎஸ்இ தமது வாதத்தை முன்வைக்கக் கூடும் என்று கருதப்படுகிறது. நீட் தேர்வானது, 180 கேள்விகளுக்கு தலா 4 மதிப்பெண் அடிப்படையில், மொத்தம் 720 மதிப்பெண்களுக்கு நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு, மொத்தம் 11 மொழிகளில், 136 மையங்களில் நடத்தப்பட்ட நீட் தேர்வு முடிவுகள் கடந்த மாதம் 4-ஆம் தேதி வெளியாகின. தமிழகத்தில் 10 நகரங்களில் 170 தேர்வு மையங்கள் மூலம் 1.07 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வு எழுதினர்.


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

திருவண்ணாமலையில் 5 மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்பு.

திருவண்ணாமலையில் 5 மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு நிர்வாக பயிற்சி வகுப்பு நடந்தது. இதில் அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டார். திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் திருவண்ணாமலை, வேலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் ஆகிய 5 மாவட்டங்களை சேர்ந்த கல்வி அலுவலர்களுக்கான நிர்வாக பயிற்சி வகுப்பு நடந்தது. இந்த பயிற்சி வகுப்புக்கு அமைச்சர் செங்கோட்டையன் தலைமை தாங்கினார். அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் முன்னிலை வகித்து பேசினார். கலெக்டர் கந்தசாமி வரவேற்றார். நிகழ்ச்சியில் அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது:- மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா பதவியில் இருந்தபோது பள்ளிக்கல்வித்துறையில் பல்வேறு திட்டங்களை கொண்டு வந்து செயல்படுத்தினார். பள்ளி மாணவர்களுக்கு 14 பொருட்களை வழங்கினார். பல கோடிகள் ஒதுக்கி நலத்திட்டங்களை கொண்டு வந்தார். தற்போதைய அரசும், இந்த ஆண்டு ரூ.27 கோடியே 25 லட்சத்து 88 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இது 4-ல் ஒரு பகுதி ஒதுக்கிய நிதியாகும். இந்த அரசின் நடவடிக்கையில் பள்ளிக்கல்வித்துறையில் பல்வேறு சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. 68 கல்வி மாவட்டங்கள் 120 கல்வி மாவட்டங்களாக மாற்றப்பட்டுள்ளது. கல்வி அதிகாரிகளுக்கு அதிகாரங்கள் பல வழங்கப்பட்டுள்ளது. ஏனெனில் நீங்கள் ஆய்வு மேற்கொள்ளும் போது, சிறிய தவறு ஏற்பட்டால் அதுகுறித்து உடனடி நடவடிக்கை எடுக்கக்கூடாது. முதலில் நீங்கள் அறிவுரை வழங்க வேண்டும். ஏன் என்றால் தவறு செய்யாதவர்கள் யாரும் இல்லை. சிறிய தண்டனைக்காக நல்ல அதிகாரியை நாம் இழந்து விடக்கூடாது. மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு வாகனங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வட்டார கல்வி அலுவலர்களுக்கும் வாகனங்கள் வழங்குவது தொடர்பாக அரசு பரிசீலனை செய்து வருகிறது. வட்டார கல்வி அலுவலர்களுக்கு பணிபுரியும் இடத்தில் அலுவலகங்கள் அமைத்துத் தர நடவடிக்கை எடுக்கப்படும். நீங்கள், கட்டிடங்கள் இருக்கிறதா? கழிப்பிடம் உள்ளதா? மாணவர்கள் பள்ளிக்கு வருகிறார்களா? என்பதை ஆய்வு செய்து அரசுக்கு கடிதம் அனுப்ப வேண்டும். பெற்றோர் ஆசிரியர் சங்கம் சரியாக செயல்படவில்லை என்றால் எங்களது கவனத்துக்கு கொண்டு வாருங்கள். அது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும். 3 ஆயிரம் பள்ளிகளுக்கு ஸ்மார்ட் கிளாஸ் கொண்டு வரும் திட்டத்தை அறிவித்திருக்கிறோம். அடுத்தவாரம் இந்த பணிகள் தொடங்க உள்ளது. இதற்கான ஒப்பந்த வேலைகள் நடைபெற்று வருகிறது. 9 முதல் 12-ம் வகுப்பு வரை கணினிமயமாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக ரூ.500 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் பலர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ஆனால் செப்டம்பர் மாதத்திற்குள் பள்ளியில் மாணவர்கள் அதிகமாக சேர்ந்தால் மீண்டும் அவர்கள் அதேபள்ளியில் மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். 848 பள்ளிகளில் 10 பேருக்கும் குறைவாக உள்ளனர். வட்டார கல்விஅலுவலர்கள் எங்கு வேண்டுமானாலும் சென்று பணியாற்றலாம். அதற்கான நடவடிக்கையை அரசு மேற்கொண்டு வருகிறது. நீங்கள் விரும்பும் பகுதிக்கு உங்களை மாற்ற அரசு நடவடிக்கை எடுக்கும். கல்வியில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த இந்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதனால் ஆசிரியர்களுக்கு இதுபோன்ற பயிற்சி வகுப்புகளை நடத்துகிறது. இந்த மாத இறுதிக்குள் 5 கட்டங்களாக பயிற்சி அளிக்கப்படும். பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான பெரிய பிரச்சினை கழிவறைகளை சுத்தம் செய்வது. இதை போக்க, ஜெர்மனி நாட்டில் இருந்து ஆயிரம் வாகனங்களை ரோட்டரி சங்கத்தோடு இணைந்து இறக்குமதி செய்ய உள்ளோம். இந்த வாகனங்கள் 20 ஆயிரம் பள்ளிகளை சுத்தம் செய்யும். இதுகுறித்து உடனடியாக கல்வித்துறைக்கு தகவல் அனுப்பும் வசதியும் முதல்- அமைச்சர் ஒப்புதலோடு செயல்படுத்தப்படும். மாணவர்கள் சேர்க்கைக்கு பிறகு வருகை குறித்து பெற்றோருக்கு குறுந்தகவல் அனுப்பும் திட்டம் கொண்டு வரப்படும். புதிய ஆசிரியர் பணியிடங்கள் விரைவில் உருவாக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார். அதைத்தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் பிரதீப்யாதவ் பேசினார். இதையடுத்து 21 ஆசிரியர்களுக்கு ‘கனவு ஆசிரியர்’ விருதுகளையும், 13 பள்ளிகளுக்கு புதுமை பள்ளி விருதும் அமைச்சர் செங்கோட்டையன் வழங்கினார். நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட செயலாளர் பெருமாள்நகர் கே.ராஜன், எம்.பி.க்கள் வனரோஜா, சேவல் வெ.ஏழுமலை, எம்.எல்.ஏ.க்கள் பன்னீர்செல்வம், தூசி கே.மோகன் மற்றும் 5 மாவட்ட கல்வி அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE