செய்தித் துளிகள் 3 • வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் ஆகிய 4 மாவட்டங்களில் கல்விச் சான்றிதழ்களை இழந்தவர்களுக்கான நகல்களை வழங்கும் முகாம் திங்கள்கிழமை (டிச. 14) தொடங்கப்பட உள்ளது. 132 இடங்களில் இரண்டு வாரங்களுக்கு நடைபெறும் இந்த முகாம்களில், பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு வாரத்துக்குள்ளாக கட்டணமின்றி சான்றிதழ்களின் நகல்கள் வழங்கப்படும் என அதிகாரிகள்தெரிவித்தனர்.
 • TRB NEWS | மழை வெள்ளத்தால் சேதமடைந்த TNTET தேர்ச்சி பெற்ற சான்றிதழ் மறுபடியும் DOWNLOAD செய்து கொள்ளலாம் என TRB அறிவித்துள்ளது.
 • அரையாண்டு தேர்வுகள் ஜனவரி மாதத்திற்கு ஒத்தி வைத்து தமிழக முதலமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு அரசு , அரசு உதவி பெறும் மற்றும் தனியார் தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளுக்கும் பொருந்தும் என பள்ளிக்கல்வி இயக்குநர் தெரிவித்துள்ளார்.
 • பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு தனித்தேர்வர்கள் டிசம்பர் 11 முதல் 24-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
 • பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்புக்கான பொதுத் தேர்வு தேதியை அறிவிக்காததால், தேர்வு தாமதமாகுமோ என, மாணவர்கள் குழப்பம் அடைந்து உள்ளனர்.பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, ஒவ்வொரு ஆண்டும், மார்ச்சில் பொதுத் தேர்வு நடக்கும். வழக்கமாக, டிசம்பர், முதல் வாரமே பொதுத் தேர்வு அறிவிக்கப்படும் நிலையில், இந்த ஆண்டு இன்னும் அறிவிப்பு வெளியிடப்படவில்லை.
 • 16, 18-ந் தேதிகளில் நடைபெற இருந்த அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டு உள்ளது. சென்னை உள்பட 4 மாவட்ட மாணவர்கள் தேர்வை ஏப்ரல் மாதம் எழுத வாய்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது.தேர்வுகள் தள்ளிவைப்புதமிழ்நாட்டில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரிகள் அனைத்திற்கும் செமஸ்டர் தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டன.
 • சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் கடலுார் மாவட்டங்களில், 34 நாள் விடுமுறைக்கு பின், இன்று, பள்ளிகள் திறக்கப்படுகின்றன. வெள்ளத்தில் புத்தகங்களை பறிகொடுத்த அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு, புத்தகங்கள் மற்றும் சீருடைகள் இலவசமாக வழங்கப்பட உள்ளன.
 • >சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய 3 மாவட்டங்களில் உள்ள மாணவர்களுக்கு தொற்றுநோய்கள் குறித்த பரிசோதனை திங்கள்கிழமை முதல் மேற்கொள்ளப்பட உள்ளது. அனைவருக்கும் நிறைவடையும் வரை பரிசோதனை தொடரும்.
 • ஆட்சிப்பணி உள்ளிட்ட பதவிகளுக்கு, யுபிஎஸ்சி நடத்தும் சிவில் சர்வீஸ் பிரதான தேர்வுகளை, இரண்டு மாதங்களுக்கு ஒத்திவைக்க வேண்டும் என, பிரதமர் நரேந்திர மோடியை, முதலமைச்சர் ஜெயலலிதா கேட்டுக்கொண்டுள்ளார்.
 • தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை தேர்வுக்கு,24ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.எட்டாம் வகுப்பு மாணவருக்கான இந்த தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு, மாதம், 500ரூபாய் வீதம், பிளஸ் 2 முடிக்கும் வரை, உதவித்தொகை வழங்கப்படும். இதற்கான விண்ணப்பங்களை, 11ம் தேதிக்குள், தலைமை ஆசிரியரிடம் வழங்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.தற்போது, 24ம் தேதி வரை, அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் விண்ணப்பங்களை, 14ம் தேதி முதல், 24 வரை, தேர்வுத்துறை இணையதளத்தில் ஆசிரியர்கள் பதிவேற்றம் செய்யலாம் என,தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.
 • தமிழக சுங்கச் சாவடிகளில் வருகிற 18 ஆம் தேதி வரை கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
 • வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில், ஐ.டி.ஐ., மாணவர்கள், தங்களின் கல்வி சான்றிதழ்களை இழந்திருந்தால், சிறப்பு முகாமில் நகல் சான்றிதழ் பெற்றுக் கொள்ளலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் உத்தரவின்படி, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலுார் மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ, மாணவியர்,  எந்த மாவட்டத்தில் உள்ள ஐ.டி.ஐ.,யில் படித்து தேர்ச்சி பெற்றிருந்தாலும், வெள்ளத்தில் கல்வி சான்றிதழ்களை இழந்திருந்தால், அவற்றின் நகல் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம். நான்கு மாவட்டங்களில் உள்ள, அரசு மற்றும் தனியார் ஐ.டி.ஐ., நிறுவனங்களில் நடைபெறும், சிறப்பு முகாமிற்கு சென்று, கட்டணமின்றி சான்றிதழ்களை பெறலாம்.சிறப்பு முகாம், 14ம் தேதி முதல், இரு வாரங்களுக்கு நடைபெறும்.
 • பத்தாம் வகுப்பு துணைத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, சான்றிதழ் வழங்க, அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது.அரசு தேர்வுத் துறை இணை இயக்குனர் அமுதவல்லி வெளியிட்டு உள்ள செய்திக் குறிப்பு:பத்தாம் வகுப்பு துணைத்தேர்வு எழுதியவர்களுக்கு, அசல் மதிப்பெண் சான்றிதழை, டிச., 11ம் தேதிக்குள், தேர்வு மையங்களில் பெற்று கொள்ள அறிவுறுத்தப்பட்டிருந்தது; மழையால், மாணவர்கள் சான்றிதழ்களை பெற முடியவில்லை.எனவே, தனித்தேர்வர்கள், டிச., 18ம் தேதி வரை, ஞாயிறு தவிர, பிற நாட்களில், தேர்வு மையங்களில் சான்றிதழ்களை பெறலாம். 
 • 'பி.எட்., கல்லுாரிகளில் துணைத்தேர்வுகள், டிச., 14ம் தேதிக்கு பதில், 21ம் தேதி துவங்கும்' என, அறிவிக்கப்பட்டு உள்ளது.இதுகுறித்து, தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலை வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'பி.எட்., கல்லுாரிகளில், டிசம்பரில் நடக்க வேண்டிய, பி.எட்., - எம்.எட்., படிப்புக்கான துணைத்தேர்வுகள், டிச., 14ம் தேதிக்கு பதில், டிச., 21ம் தேதி துவங்கும்' என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.
 • பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு தனித்தேர்வர்கள் டிசம்பர் 11 முதல் 24-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
 • அரையாண்டு தேர்வுகள் ஜனவரி மாதத்திற்கு ஒத்தி வைத்து தமிழக முதலமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு அரசு , அரசு உதவி பெறும் மற்றும் தனியார் தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளுக்கும் பொருந்தும் என பள்ளிக்கல்வி இயக்குநர் தெரிவித்துள்ளார்.
 • TRB NEWS | மழை வெள்ளத்தால் சேதமடைந்த TNTET தேர்ச்சி பெற்ற சான்றிதழ் மறுபடியும் DOWNLOAD செய்து கொள்ளலாம் என TRB அறிவித்துள்ளது.
 • கனமழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மாணவர்களுக்கு மாற்று கல்விச்சான்றிதழ்கள் வழங்க டிசம்பர் 14 முதல் அனைத்து மேல்நிலைப் பள்ளிகளிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் அறிவித்துள்ளார்.
 • பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான பெயர் பட்டியல் (NR) தயாரிப்பதற்கான, கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
 • டிசம்பருக்குள் தேர்வுகளை முடிக்க சென்னைப் பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்துள்ளது. தேர்வுகளுக்கான முடிவுகளை பிப்ரவரி 3-ஆவது வாரத்தில் வெளியிடுவது எனவும் பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.
 • மழை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட திருவள்ளூவர் பல்கலை., தேர்வுகள் டிசம்பர் 15ம் தேதி துவங்கி ஜனவரி 5ம் தேதி வரை நடைபெறும் என பல்கலை., பதிவாளர் (பொறுப்பு) அமல்தாஸ் தெரிவித்துள்ளார். தேர்வு அட்டவணையை பல்கலை., இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
 • 8 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை | கனமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், நாகை, திருவாரூர், தஞ்சை, திருச்சி, புதுக்கோட்டை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு 9.12.2015 புதன் கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. காரைக்கால் பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
 •  12 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை | கனமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், நாகை, திருவாரூர், தஞ்சை, நெல்லை, துத்துக்குடி மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கும், புதுக்கோட்டை, சிவகங்கை, திண்டுக்கல், கன்னியாகுமரி மாவட்ட பள்ளிகளுக்கும் 8.12.2015 செவ்வாய்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. காரைக்கால் பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
 • கையகப்படுத்தப்பட்ட நிலம், உள்ளூர் நிலவரம் உட்பட, அனைத்து விவரங்களையும் மாவட்ட கலெக்டர் முறைப்படி அனுப்பி வைத்தால், தேனியில், 'கேந்திரிய வித்யாலயா' எனப்படும், மத்திய அரசு பள்ளி துவக்க, உடனடியாக அனுமதி வழங்கப்படும்' என, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
 • சென்னை வெள்ளப்பெருக்கில், லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியரின் புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், ஸ்டேஷனரி பொருட்கள் வெள்ளத்தில் நாசமாகி விட்டன.இதற்கிடையில், வெள்ள பகுதியில் குப்பை மற்றும் கழிவு நீரால் நோய் பரவும் ஆபத்து உள்ளதால், பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு தடுப்பூசி போடவும், நோய்த் தடுப்பு மருந்துகள் கொடுக்கவும் வேண்டியுள்ளது. பல இடங்களில் பள்ளிகளும், ஆசிரியர்களும் கடுமையாக வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, நிவாரணப் பணிகளுக்கு ஏதுவாக, பள்ளி, கல்லுாரி திறப்பை ஒரு வாரம் தள்ளிப்போட, பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 • சென்னையை நிலை குலைய வைத்த வெள்ளப்பெருக்கால், டி.பி.ஐ., வளாகத்தில் உள்ள கல்வித்துறை அலுவல கோப்புகள் மற்றும் கிடங்கில் இருந்த பாடப் புத்தகங்கள் சேதமடைந்தன.
 • சென்னையில் கனமழை பெய்ததால், தேர்வு தேதிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.சென்னையில் கனமழை பெய்ததால், இரு வாரங்களாக, கல்லுாரிக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக, ராமச்சந்திரா மருத்துவ பல்கலையில், பல படிப்புகளுக்கான தேர்வு தேதிகள் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளன. இதை, www.sriramachandra.edu.in என்ற இணையதளத்தில் அறியலாம் என, பல்கலை அறிவித்துள்ளது.
 • மழையில்  காப்பீட்டு ஆவணங்களை இழந்திருந்தாலும், உடனே இழப்பீடு வழங்க, இன்சூரன்ஸ்  நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.
 • அரசுப் பள்ளிகளில் கூடுதலாக 9,623 ஆசிரியர் பணியிடங்களை இணையவழி (ஆன்லைன்) தேர்வு மூலம் நிரப்ப தில்லி அரசு முடிவு செய்துள்ளது.               இதன்மூலம், பள்ளி முதல்வர், துணை முதல்வர், ஆசிரியர், உடற்கல்வி ஆசிரியர்,  ஓவிய ஆசிரியர், நூலகர், ஆய்வக உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதால்  ஆண்டுதோறும் அரசுக்கு ரூ.540 கோடி கூடுதல் செலவு ஆகும் என தில்லி அரசு  கூறியுள்ளது.
 • 6 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை | கனமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், நாகை, திருவாரூர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு 7.12.2015 திங்கட்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி, காரைக்கால் - பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 
 • மத்திய கல்வி நிறுவனங்களில் பிஎச்.டி.,  பட்டப் படிப்பில் சேர்வதற்கான, ‘ஜாய்ன்ட் என்ட்ரன்ஸ் ஸ்கிரீனிங் டெஸ்ட்’  என்ற தேசிய தகுதித் தேர்விற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.  பாடப்பிரிவுகள்: இயற்பியல், கம்பியூட்டர் சயின்ஸ், நியூரோ சயின்ஸ். தகுதிகள்: எம்.எஸ்சி., -  இயற்பியல், கணிதம், அப்லைடு பிசிக்ஸ், அப்லைடு மேக்ஸ், இன்ஸ்ட்ருமென்டேசன்,  ஆப்டிகல் மற்றும் போட்டானிக்ஸ், பி.இ., பி.டெக்., எம்.இ., எம்.டெக்.,  எம்.சி.ஏ., தேர்வு நாள்:  பிப்ரவரி 21, 2016. விண்ணப்பிக்க கடைசி நாள்: டிசம்பர் 10. மேலும் விவரங்களுக்கு: www.jest.org.in
 • சென்னையில்  ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பால், மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக  பாதிப்படைந்ததை தொடர்ந்து பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக வங்கிகள், பல்வேறு  கடன்களுக்கான நவம்பர் மாத தவணைத் தொகையை எவ்வித அபராதமும் இன்றி செலுத்தலாம் என்ற அறிவிப்பை வெளியிட்டு வருகின்றன. இந்நிலையில்,  எச்.டி.எப்.சி வங்கியைத் தொடர்ந்து, ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியும் தங்களது சென்னை  வாடிக்கையாளர்களுக்கு சலுகைகளை அறிவித்துள்ளது. அதன்படி, இருசக்கர வாகனம்,  வீட்டுமனை கடன்கள், வீட்டு உபயோக பொருட்கள் உள்ளிட்டவைக்கு நவம்பர் மாத  தவணை தொகை கட்டுவதற்கு தாமதம் ஏற்பட்டாலும், அதனை எவ்வித அபராதமின்றி  செலுத்தலாம். மேலும், வங்கிகளில் வாடிக்கையாளர்களின் காசோலைகள் பணமின்றி  திரும்பினாலும் அதற்கும் எவ்வித அபராதமும் வசூலிக்கப்பட மாட்டாது என  தெரிவித்துள்ளது. இதேபோல்  அரசு வங்கியான எஸ்.பி.ஐ-யும், தனி நபர் கடன் உட்பட பல்வேறு கடன்களுக்கான  நவம்பர் மற்றும் டிசம்பர் மாதத்திற்கான மாத தவணை தொகையை தாமதமாக  செலுத்தினாலோ அல்லது செலுத்த முடியாமல் போனாலோ அதற்காக எந்த அபராதமும்  விதிக்கப்படாது என்று அறிவித்துள்ளது.
 • அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் அரசு பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கு 2 கட்டமாக பயிற்சி அளிக்கப்படுகிறது.  ராமநாதபுரம் மாவட்டத்தில் 1,061 தொடக்க,  நடுநிலைப்பள்ளிகள் உள்ளன. அப்பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கு  பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இந்த பயிற்சி ஒவ்வொரு பள்ளியில் இருந்து 6 பேர்  வீதம் 6,366 பேருக்கு அளிக்கப்படும். முதற்கட்டமாக டிச., 9 முதல் டிச.,11  வரையும், 2 ம் கட்டமாக டிச., 14 முதல் டிச., 16 வரையும் பயிற்சிகள்  அளிக்கப்படுகின்றன. 
 • பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை | கனமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், பள்ளி, கல்லூரிகளுக்கு டிசம்பர் 6 ம் தேதி வரை விடுமுறை. கடலூர், விழுப்புரம், நாகை, திருவாரூர்  மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு, 4.12.2015 - வெள்ளிக்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  அரியலூர்,தஞ்சாவூர் மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை டிசம்பர் 6ம் தேதி வரை அறிவிக்கப்பட்டுள்ளது.
 • மத்திய அரசில் 7.47 லட்சம் பணியிடம் காலி: நிதித்துறையில் 46 சதவீத பணியாளர் இல்லை.
 • வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள புதிய காற்று அழுத்த தாழ்வு நிலையால் டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில், கனமழை பெய்யும்' என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
 • 10 ம் வகுப்பு அறிவியல் செய்முறை பயிற்சி வகுப்புகள் நடுத்துவது குறித்து SCERT இயக்குனர் அறிவுரை - செயல்முறைகள்.
 • சுப்ரீம் கோர்ட்டின், 43வது தலைமை நீதிபதியாக, திரத் சிங் தாக்கூர், 63, நேற்று பதவியேற்றார்.சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக பணியாற்றிய எச்.எல்.தத்து, நேற்று முன்தினம் ஓய்வு பெற்றார்.
 • தமிழகத்தின் அனைத்து தேசிய நெடுஞ்சாலைகளிலும் வரும் 11-ந் தேதி வரை சுங்கக் கட்டண வசூல் ரத்து செய்யப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
 • சென்னையில் படிப்படியாக வெள்ளம் வடியத் தொடங்கியது... ஆனாலும் மழை தொடர்கிறது.
 • கனமழை, வெள்ளம் பாதித்த சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் மாவட்ட பகுதிகளை பிரதமர் மோடி, முதல்வர் ஜெயலலிதா ஆகியோர் தனித்தனியே ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட்டு ஆய்வு நடத்தினர். பின்னர் சென்னை ஐ.என்.எஸ். கடற்படை தளத்தில் ஆளுநர் ரோசைய்யா, முதல்வர் ஜெயலலிதா ஆகியோருடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.
 • சென்னையில் வரலாறு காணாத வகையில் பெய்து வரும் தொடர் கனமழைக்கு புவி வெப்பமடைதலே காரணம் என பிரான்சில் நடைபெற்ற பருவ நிலை மாற்றம் குறித்த மாநாட்டில் தெரிவிக்கப்பட்டது.
 • 7 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை | கனமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுர், கடலூர், விழுப்புரம், நாகை, திருவண்ணாமலை  மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு, 3.12.2015 - வியாழக்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
 • சிண்டிகேட் வங்கியில் சிறப்பு அதிகாரிக்கான காலி பணியிடங்கள் உள்ளதாக அந்நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. இதற்கான தகுதி, வயது வரம்பு உள்ளவர்கள் டிசம்பர் 10ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 • வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு உள்ள சென்னையில் அரசு பொதுத்துறை நிறுவனமான  பி.எஸ்.என்.எல். ஒரு வாரத்திற்கு இலவச சேவையை வழங்கும் என்று மத்திய அரசு  தெரிவித்துள்ளது.  
 • வரலாறு காணாத கன மழையால் பாதிக்கப்பட்டு ரீசார்ஜ் கடைகளும் இல்லாமல்சரிவர இணைப்பும் கிடைக்காமல் பெரும் அவதிக்குள்ளாகி வரும் சென்னை வாசிகளுக்காக முன்னணி தொலை தொடர்பு நிறுவனமான ஏர்டெல் சிறப்பு திட்டத்தை அறிவித்துள்ளது.
 • 9 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை | கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர்,காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், திருவாரூர், நாகை, தருமபுரி (சில வட்டங்கள்) மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு, 2.12.2015 - புதன் கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
 • தமிழகம் முழுவதும் அரையாண்டுத் தேர்வுகள் ஒத்திவைப்பு. ஜனவரி முதல் வாரத்தில் நடைபெறும் என்றும் தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.
 • தமிழக அரசின் 2016 ஆண்டுக்கான விடுமுறைப்பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.
 • CTET: பிப்., 21ம் தேதிஆசிரியர் தகுதி தேர்வு.
 • வட கிழக்கு பருவக் காற்றின் வேகம் அதிகரித்துள்ளதால், அடுத்த 4 நாட்களுக்கு தமிழகத்தில் பரவலாக மழை பெய்யும். சென்னையில் கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் மேற்கு வங்கக் கடலில் கடந்த நான்கு நாட்களாக நிலை கொண்டு இருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மேற்கு நோக்கி நகர்ந்ததால் தமிழக கடலோரத்தில் கனமழை பெய்யத் தொடங்கியுள்ளது.
 • அண்ணா பல்கலைக் கழகத்தின் கீழ் செயல்படும் கல்லூரிகளின் தேர்வுகள் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதே போல் சென்னை பல்கலைக் கழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரிகளின் தேர்வுகளும் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.சென்னை மாநிலக் கல்லூரியில் இன்று நடைபெறுவதாக இருந்த தேர்வுகளும் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டன.திருவள்ளூர் பல்கலைத் தேர்வுகளும் ஒத்திவைக்கப் பட்டன.
 • அடுத்த ஆண்டில் கல்வி மேலும் செலவுமிக்கதாக மாற வாய்ப்பிருக்கிறது. வடகிழக்கு பருவமழை காரணமாக கடும் சேதத்தைச் சந்தித்த தனியார் பள்ளிகள் கல்விக் கட்டணத்தை அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.கனமழையால் பள்ளிக் கட்டிடங்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதால் கட்டண நிர்ணய கமிட்டியிடம் தனியார் பள்ளி நிர்வாகங்கள் முறையீடு செய்யத் திட்டமிட்டுள்ளனர்.
 • பிளஸ்–2, 10–ம் வகுப்பு பொதுத் தேர்வை முன்கூட்டியே நடத்தும் திட்டம் இல்லை: தேர்வுத்துறை இயக்குனர் தகவல்.
 • மாற்றுத்திறனாளிஅரசு ஊழியர்கள் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு DEC 03 அன்று சிறப்பு தற்செயல் விடுப்புஎடுத்துக்கொள்ளலாம்.
 • முதல்வர் கணினித் தமிழ் விருதுக்கு இம்மாதம் 31-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண் டும் என தமிழ் வளர்ச்சித்துறை அறிவித்துள்ளது.
 • பள்ளிக்கல்வி - அமைச்சுப்பணி - உதவியாளர் பணியிலிருந்து இருக்கைப்பணி கண்காணிப்பாளர் பதவி உயர்வு முன்னுரிமை பட்டியல் வெளியீடு.
 • 9 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை | கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர்,காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், திருவாரூர், நாகை, தருமபுரி (சில வட்டங்கள்) மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு, 2.12.2015 - புதன் கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
 • தமிழகம் முழுவதும் அரையாண்டுத் தேர்வுகள் ஒத்திவைப்பு. ஜனவரி முதல் வாரத்தில் நடைபெறும் என்றும் தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.
 • தமிழக அரசின் 2016 ஆண்டுக்கான விடுமுறைப்பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.
 •  CTET: பிப்., 21ம் தேதிஆசிரியர் தகுதி தேர்வு.
 • வட கிழக்கு பருவக் காற்றின் வேகம் அதிகரித்துள்ளதால், அடுத்த 4 நாட்களுக்கு தமிழகத்தில் பரவலாக மழை பெய்யும். சென்னையில் கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் மேற்கு வங்கக் கடலில் கடந்த நான்கு நாட்களாக நிலை கொண்டு இருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மேற்கு நோக்கி நகர்ந்ததால் தமிழக கடலோரத்தில் கனமழை பெய்யத் தொடங்கியுள்ளது.
 • அண்ணா பல்கலைக் கழகத்தின் கீழ் செயல்படும் கல்லூரிகளின் தேர்வுகள் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதே போல் சென்னை பல்கலைக் கழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரிகளின் தேர்வுகளும் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.சென்னை மாநிலக் கல்லூரியில் இன்று நடைபெறுவதாக இருந்த தேர்வுகளும் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டன.திருவள்ளூர் பல்கலைத் தேர்வுகளும் ஒத்திவைக்கப் பட்டன.
 • அடுத்த ஆண்டில் கல்வி மேலும் செலவுமிக்கதாக மாற வாய்ப்பிருக்கிறது. வடகிழக்கு பருவமழை காரணமாக கடும் சேதத்தைச் சந்தித்த தனியார் பள்ளிகள் கல்விக் கட்டணத்தை அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.கனமழையால் பள்ளிக் கட்டிடங்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதால் கட்டண நிர்ணய கமிட்டியிடம் தனியார் பள்ளி நிர்வாகங்கள் முறையீடு செய்யத் திட்டமிட்டுள்ளனர்.
 •  பிளஸ்–2, 10–ம் வகுப்பு பொதுத் தேர்வை முன்கூட்டியே நடத்தும் திட்டம் இல்லை: தேர்வுத்துறை இயக்குனர் தகவல்.
 • மாற்றுத்திறனாளிஅரசு ஊழியர்கள் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு DEC 03 அன்று சிறப்பு தற்செயல் விடுப்புஎடுத்துக்கொள்ளலாம்.
 • முதல்வர் கணினித் தமிழ் விருதுக்கு இம்மாதம் 31-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண் டும் என தமிழ் வளர்ச்சித்துறை அறிவித்துள்ளது.
 • இந்தியாவில் செல்ஃபோன் data கட்டணங்கள் 15 முதல் 20 சதவிகிதம் வரை குறைய வாய்ப்புள்ளதாக பிரபல மதிப்பீட்டு நிறுவனமான ஃபிட்ச் தெரிவித்துள்ளது.
 • 7-வது ஊதியக் குழு பரிந்துரைக்கு எதிர்ப்பு: வேலைநிறுத்தத்தில் ஈடுபட மத்திய அரசு ஊழியர்கள் முடிவு.
 • TNPSC GROUP 2A STUDY MATERIALS FREE DOWNLOAD | SUBJECT - TAMIL , PHYSICS,CHEMISTRY,BIOLOGY ,HISTORY,GEOGRAPHY , HISTORY OF INDIAN FREEDOM STRUGGLE , INDIAN CONSTITUTION , INDIAN ECONOMICS, MATHS , CURRENT AFFAIRS , G.K
 • 6 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை | கனமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு, 1.12.2015 - செவ்வாய்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
 • TNPSC NEWS | தட்டச்சர்/சுருக்கெழுத்து தட்டச்சர் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான கலந்தாய்வு டிசம்பர் 4 முதல் 12-ஆம் தேதி வரையும், 14-ஆம் தேதியும் நடைபெறுகிறது.
 • நகர் மற்றும் ஊரமைப்புத் துறையான, DTCP.,யில், காலியாக உள்ள, 98, 'சர்வேயர்' மற்றும் உதவி வரைவாளர் பணியிடங்களுக்கு, டிசம்பர் 28ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
 • பிளஸ்-2 மாணவர்களுக்கு இரு வாரங்களில் பதிவெண்கள் வழங்கப்பட உள்ளது. இதற்காக பிளஸ்-2 மாணவர்களின் விவரங்களில் உள்ள பிழைகளைத் திருத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
 • பத்தாம் வகுப்பு தனித் தேர்வு எழுதிய மாணவர்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் டிசம்பர் 4-ஆம் தேதி முதல் விநியோகம் செய்யப்பட உள்ளதாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
 • மாற்றுத் திறனாளி மாணவர்களின் சிறப்புப் பள்ளிகளில் காலியாகவுள்ள ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
 • Tamil Nadu Open University B.Ed.,/B.Ed(SE).,/M.Ed(SE).,/PGPDSE & PGPCSE - DECEMBER 2015 Hall Ticket.
 • 2013 மார்ச் மாதம் முதல் 2015 பிப்ரவரி மாதம் வரை உள்ள கணக்கீட்டுத்தாள்(Account slip) மாநிலப் புள்ளி விபர மையத்தால் (Govt Data centre) வெளியிடப்பட்டுள்ளது.
 • ஒரே கல்வி ஆண்டில் வெவ்வேறு தேர்வு கால அட்டவணையில் வெவ்வேறு பல்கலைக்கழகங்களில் இளங்கலைப் பட்டம்(B.Sc) மற்றும் இளம் கல்வியியல்(B.Ed) பட்டப்படிப்பு முடித்தால் பட்டதாரி ஆசிரியர் பதவிக்கு தகுதி உண்டு.