செய்தித் துளிகள் 4

 • தொழில்நுட்ப கல்வித்துறை சார்பில் கடந்த டிசம்பர் மாதம் கணினி சான்றிதழ் தேர்வு நடத்தப்பட்டது. அந்த தேர்வு முடிவு இன்று(புதன்கிழமை) வெளியிடப்படுகிறது. முடிவை தொழில்நுட்ப கல்வி இயக்க இணையதளத்திலும் ( www.tndte.com ) காணலாம். இந்த தகவலை தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது.
 • தமிழ்நாடு அரசு தேர்வுத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:கடந்த ஜூனில், தொடக்கக் கல்வி டிப்ளமோ தேர்வு எழுதியவர்கள், விடைத்தாள் நகல் கேட்டு விண்ணப்பித்தனர். அவர்கள், மார்ச், 1 முதல், 3 வரை, www.tndge.in என்ற இணையதளத்தில், விடைத்தாள் நகலை பதிவிறக்கம் செய்யலாம். பின், மறுகூட்டல், மறுமதிப்பீடுக்கு, மார்ச், 6 முதல், 8 வரை, மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் மூலம் விண்ணப்பிக்கலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
 • நீட் நுழைவுத் தேர்வு சட்டம் தமிழகத்தில் ‘நீட்’ என்ற நுழைவுத்தேர்வு தேவையில்லை என்பதற்கான சட்டத்தை நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி இருக்கிறோம். அதில் மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கைகளை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். அதில் மத்திய அரசு முடிவு தெரிவித்த பின்னர் முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர்களுடன் கலந்து ஆலோசித்து தமிழக அரசின் நடவடிக்கை பற்றி முடிவு எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறி னார்.
 • உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வு தொடர்பான வழக்கு விசாரணை மீண்டும் வருகின்ற டிசம்பர் 5 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது
 • 01.07.2016 முதல் வழங்க வேண்டிய அகவிலைப்படியினை அனைத்து மாநிலங்களும் விலைவாசி புள்ளி உயர்வுப்படி 7% விழுக்காடு வழங்க வேண்டுமென மத்திய அரசு அனுமதித்துள்ளது.தமிழக அரசு 7% விழுக்காடு அகவிலைப்படியினை நிலுவைத் தொகையுடன் அறிவித்திட நிதி அமைச்சருக்கு கோப்பு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.இரண்டொரு நாள்களில் அகவிலைப்படி அறிவிப்பு அரசாணை வெளிவருமென எதிர்பார்ப்பு.
 • 16/11/2016 உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு வழக்கானது நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.  வழக்கு மீண்டும் வருகிற 23 ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
 • நெட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நவம்பர் 23ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டதுநெட் தேர்வுக்கான கட்டணத்தை செலுத்த நவம்பர் 24ம் தேதி கடைசி நாளாகும் என சி.பி.எஸ். தகவல் தெரிவித்துள்ளது.
 • ஆதார் அட்டை தொடர்பாக சந்தேகங்களுக்கு 1947 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு மக்கள் விளக்கம் பெறலாம் என தகவல் தெரிவிக்கபட்டுள்ளது.
 • TET CASE : ஆசிரியர் தகுதித்தேர்வு வழக்குநீதிமன்ற எண் 12ல் முதல் வழக்காக 04.10.16 அன்று நீதிபதிகள் சிவகீர்த்திசிங் மற்றும் பானுமதி அவர்களின் முன்பு விசாரணை
 • பத்தாம் வகுப்பு துணைத் தேர்வு எழுத விண்ணப்பித்தவர்களுக்கான, அறிவியல் செய்முறை தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, அரசு தேர்வுத்துறை இயக்குனர் வெளியிட்டசெய்திக் குறிப்பில், 'அக்டோபரில் நடக்கவுள்ள, 10ம் வகுப்பு துணை தேர்வுக்கு விண்ணப்பித்த தேர்வர்கள், செப்., 23, 24 மற்றும், 26 ஆகிய நாட்களில் நடக்கும் செய்முறை தேர்வில் பங்கேற்க வேண்டும்' என, தெரிவித்துள்ளார்.
 • கையெழுத்திடும் நடைமுறையில் மாற்றம் .மாணவர்கள், ஆசிரியர்களுக்கு பயோ-மெட்ரிக் வருகைப் பதிவேடு சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு 
 • TEACHERS GENERAL COUNSELLING 2016-2017 | HELP CENTRE | ஆசிரியர் பொது மாறுதல் 2016-2017 | APPLICATION - TN G.O - PROMOTION PANEL DOWNLOAD
 • மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் பேராசிரியர் மற்றும் உதவி பேராசிரியர் பணி. விண்ணபிக்க வேண்டிய நேரமிது. விரிவான தகவல்கள்.
 • தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை 2016 | அண்ணா பல்கலைக் கழக பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான துணை கலந்தாய்வு அறிவிப்பு. 12 ஆம் வகுப்பு துணை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். விரிவான தகவல்கள்.
 • பாரதியார் பல்கலைக் கழகத்தில் பகுதி நேர - முழு நேர M.Phil / Ph.D பயில வாய்ப்பு .விரிவான தகவல்கள்.
 • அண்ணா பல்கலைக் கழக பொறியியல் சேர்க்கையில் தாழ்த்தப்பட்ட இன (SC) விண்ணப்பதாரர்களுக்கான B.E/B.TECH/B.ARCH நிரப்பப்படாத இடங்களுக்கான கலந்தாய்வு அறிவிப்பு. விரிவான தகவல்கள்.
 • யோகா மற்றும் இயற்கை மருத்துவத்தில் பட்ட மேற் படிப்பு (எம்.டி ) சேர்க்கை அறிவிப்பு. விரிவான தகவல்கள்
 • சென்னை, அரசு சித்த மருத்துவக்கல்லூரிகளில் 2016-2017 ஆம் ஆண்டிற்க்கான ஒருங்கிணைந்த மருந்தாளுநர் மற்றும் நர்சிங் தெரபிஸ்ட் பட்டயப்படிப்பு பயில விண்ணப்பங்கள்வரவேற்கபடுகின்றன. விரிவான தகவல்கள் .
 • NURSING ADMISSION 2016 | 2016-2017 ஆம் வருட பி.எஸ்சி உள்ளிட்ட மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பினை மருத்துவக் கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ளது . விரிவான தகவல்கள் ...
 • சிறுபான்மையினர் நலத்துறை உதவித் தொகை | சிறுபான்மையின மாணவ-மாணவியர்களுக்கு பள்ளிப் படிப்பு கல்வி உதவித்தொகை 2016-2017 ஆண்டில் வழங்க, விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் பெறப்படுகின்றன.விரிவான தகவல்கள் .
 • ஐ.டி.ஐ. மாணவ, மாணவிகள் சேர்க்கைக்கு ஜூலை 28 இல் கலந்தாய்வு
 • ஊரக வளர்ச்சித் துறையில் 903 புதிய பணியிடங்கள் : உள்ளாட்சி தேர்தலுக்காக அரசு உத்தரவு.
 • TAMIL NADU COMMON ADMISSIONS (TANCA) 2016 | ADMISSION TO M.E / M.TECH / M.ARCH | M.PLAN DEGREE PROGRAMMES NOTIFICATION
 • இந்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள டிபன்ஸ் புரொடக்சன் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு ...விரிவான விவரங்கள்....
 • தமிழ் எம்.பில்., படிப்பு விண்ணப்பங்கள் வரவேற்பு
 • பிளஸ் 2 சிறப்பு உடனடித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்காக நடைபெறவுள்ள தொடக்கக் கல்வி பட்டயப்படிப்பு மாணவர் சேர்க்கைக் கலந்தாய்வில் பங்கேற்க ஜூலை 25-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 1 வரை விண்ணப்பிக்கலாம்.
 • ஈரோடு புத்தகத் திருவிழாவில் ஜி.டி.நாயுடு விருது விண்ணப்பிக்க மக்கள் சிந்தனை பேரவைத் தலைவர் ஸ்டாலின் குணசேகரன்வேண்டுகோள்
 • பல்கலை கழக மானிய குழு விதிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது குறித்து அவை வெளியிட்டுள்ள செய்தி குறி்பபில் : மாணவர்களின் கல்வி தரத்தை மெம்படுத்துவதற்காக வெளிநாட்டு கல்வி நிறுவனத்துடன் இணைந்து யு.ஜி.சி. செயல்படும். யு.ஜி.சி.,க்கு கீழ் செயல்படும் கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் வெளிநாடுகளுக்கு அனுப்பப்படுவர் என தெரிவித்துள்ளது.
 • TRB RECRUITMENT NEWS 2016 | அரசு பள்ளிகளில் 2,316 சிறப்பு ஆசிரியர்கள், முதுகலை பட்டதாரி ஆசிரியர்களை தேர்வு செய்ய ஆசிரியர்தேர்வு வாரியம் தாமதம் செய்து வருவதாக புகார் எழுந்துள்ளது.
 • AAVIN RECRUITMENT 2016 | ஆவின் நிறுவனம் வெளியிட்டுள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு - www.aavinmilk.com - last date 20.07.2016
 • TAMIL NADU NEWSPRINT RECRUITMENT 2016 | தமிழ்நாடு நியூஸ் பிரிண்ட் நிறுவனம் வெளியிட்டுள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு - www.tnpl.com - last date 15.07.2016
 • CPS TO GPF | அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியம் கொண்டு வர வல்லுனர் குழு ஆய்வு சட்டசபையில், நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தகவல்
 • www.gct.ac.in- எம்.பி.ஏ., எம்.சி.ஏ. படிப்புக்கு 4-ந் தேதி முதல் இணையதளத்தில் பதிவு செய்யலாம்.
 • 7th CPC GOVT employees to get increased salary with 6 months arrears on Aug 1,2016
 • www.sbp.co.in-பாரத ஸ்டேட் வங்கியின் துணை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் பாட்டியாலாவில் காலியாக உள்ள 24 Faculty, Assistant, Attender பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
 •  தமிழக நிதியமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் பேசியதாவது: தமிழக அரசு ஊழியர்களுக்கு பழைய பென்சன் திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவது குறித்து நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு அளிக்கும் அறிக்கை அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் எனக்கூறினார். 
 • தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 11ம் வகுப்புகள் வரும் 23ம் தேதி முதல் துவங்கும் என பள்ளிகல்வி துறை அறிவித்துள்ளது.
 • www.aipmt.nic.in | National Eligibility cum Entrance Test (UG) - NEETII 2016 | NEETII தேர்வுக்கு விண்ணப்பிக்கும் நேரமிது. LAST DATE 21.6.2016
 • t‌n‌v‌e‌l​a‌i‌v​a​a‌i‌p‌p‌u.‌g‌o‌v.‌i‌n​-பிளஸ் 2 தேர்ச்சி பெற்றோர் இன்று முதல் பள்ளியிலேயே வேலைவாய்ப்புக்கு பதிவு செய்ய ஏற்பாடு.
 • tnauonline.in | தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் இளங்கலை படிப்பு தரவரிசை பட்டியல் வெளியீடு
 • TNEA 2016 Random Number Download | பொறியியல் கலந்தாய்வுக்கான ‘ரேண்டம் எண்’ வெளியீடு-தரவரிசை பட்டியல் நாளை (22.6.2016) வெளியிடப்படுகிறது.
 • மாநில நல்லாசிரியர் விருது பெற விண்ணப்பிக்கும் நேரமிது.... விரிவான விவரங்கள்...
 • தமிழக அரசுத் துறைகளில் உள்ள, காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்' என, தமிழ்நாடு அரசு அலுவலர் கழகம் வலியுறுத்தியுள்ளது.
 • 7-ஆவது ஊதியக் குழுவிலும் பாதிப்பு ஏற்பட்டால் போராட்டத்தி் ஈடுபடுவோம் என இடைநிலை ஆசிரியர் சங்கம் அறிவித்துள்ளது.
 • Top 10 Engineering Colleges in Tamilnadu - TNEA 2016 | தமிழகத்தின் டாப் - 50 இன்ஜினியரிங் கல்லூரிகள்!
 • www.surabooks.com | 10th Standard PTA Solution Book - 10th Standard Guide English Medium - 10th Standard Tamil Urai Nool - 10th Standard Guide Sigaram Thoduvom - 10th Standard Will to Win English Guide - buy online
 • நாடு முழுவதும் புதிய கல்வி கொள்கை | புதிய கல்விக் கொள்கையை உருவாக்க சுப்பிரமணியன் குழு பரிந்துரைகள் விவரம்...
 • பிளஸ்-2 தேர்வில் மறு கூட்டல், மறுமதிப்பீடு செய்ததில் 2,300 பேருக்கு மதிப்பெண் அதிகரிப்பு.மதிப்பீடு செய்த ஆசிரியர்கள் மீது நடவடிக்கை.
 • EDUCATION-TN-எம்.பி.பி.எஸ். கலந்தாய்வு அட்டவணை வெளியீடு:அழைப்புக் கடிதம் அவசியம் இல்லை
 • EDUCATION-TN-2 ஆண்டுகளாக ஊதிய உயர்வின்றி பணியாற்றும் பகுதி நேர சிறப்பாசிரியர்கள்
 • www.tnpsc.gov.in | TNPSC GROUP 1 முதன்மை எழுத்துத் தேர்வு முடிவு வெளியீடு.
 • www.tnhealth.org | எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு - 3 பேர் முதலிடம்.
 • பொதிகை தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளர் பணி: ஜூலை 8-க்குள் விண்ணப்பிக்க அழைப்பு.
 • EMPLOYMENT-TN-கிராமிய அஞ்சல் அலுவலர் பணி: ஜூலை 11-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு
 • www.denabank.com | தேனா வங்கியில் அதிகாரி பணி: 24-க்குள் விண்ணப்பிக்க அழைப்பு.
 • scan.tndge.in | பிளஸ் 2 பொதுத் தேர்வு மறு கூட்டல், மறுமதிப்பீடு முடிவுகள்வெளியிடப்பட்டது.
 • பிளஸ் 2 மாணவர்கள் வருகிற 20-ஆம் தேதி முதல் அசல் சான்றிதழைத் தங்கள் பள்ளியில் பெற்றுக் கொள்ளலாம்.
 • HSE Hall Ticket Download | மேல்நிலை சிறப்பு துணைத் தேர்வு ஜூன்/ஜூலை 2016 தனித் தேர்வர்கள் தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுகளை இணையதளம் மூலம் 16.06.2016 (வியாழக்கிழமை) முதல் 18.06.2016 (சனிக்கிழமை) வரை www.tngdc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் தேர்வுக் கூட நுழைவுச் சீட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
 • DOWNLOAD BT TO PGT TENTATIVE PANEL LIST 2016-2017
 • ANNA UNIVERSITY RECRUITMENT 2016 | அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள பல்வேறு வேலைவாய்ப்பு அறிவிப்புகள்...விரிவான விவரங்கள் ....
 • THIRUVARUR CENTRAL UNIVERSITY RECRUITMENT 2016 | திருவாரூர் மத்திய பல்கலைக்கழகம் THIRUVARUR CENTRAL UNIVERSITY RECRUITMENT 2016 | திருவாரூர் மத்திய பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள பல்வேறு வேலைவாய்ப்பு அறிவிப்புகள்...விரிவான விவரங்கள் ....
 • TAMIL NADU NEWSPRINT RECRUITMENT 2016 | தமிழ்நாடு நியூஸ் பிரிண்ட் வெளியிட்டுள்ள பல்வேறு வேலைவாய்ப்பு அறிவிப்புகள்...விரிவான விவரங்கள் ....
 • www.tnhealth.org | தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் ஆகிய படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான சம வாய்ப்பு எண் (ரேண்டம் எண்) வெளியிடப்பட்டது | ஜூன் 17-ல் தரவரிசைப் பட்டியல் | ஜூன் 20-ல் முதல்கட்ட கலந்தாய்வு
 • www.tnpsc.gov.in | TNPSC இளநிலை உதவியாளர், தட்டச்சர் பதவிகளில் 4,931 காலிப் பணியிடங்களை நிரப்ப குரூப்-4 தேர்வு அறிவிப்பு ஜூலையில் வெளியாகிறது
 • www.tangedcodirectrecruitment.in | தமிழ்நாடு மின்சார வாரியத்தின் காலிப்பணியிடங்களுக்காக நடைபெறும் தேர்வுகளுக்கன, தேர்வுக்கூட அனுமதிச்சீட்டை இணயதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
 • www.tnteu.in | 4 வருட பி.எட். படிப்பை தமிழகத்தில் கொண்டுவர 17 பி.எட். கல்லூரிகளுக்கு தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் அனுமதி வழங்கி உள்ளது.
 • கலை, அறிவியல் கல்லூரிகளில் ஒவ்வொரு பாடப்பிரிவிலும் இடங்களை அதிகரிப்பது என்று சென்னை பல்கலைக்கழக சிண்டிகேட் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
 • தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகத்தை துணைவேந்தர் பி.வணங்காமுடிதொடங்கிவைத்தார்.
 • www.aipmt.nic.in | National Eligibility cum Entrance Test (UG) - NEETII 2016 | NEETII தேர்வுக்கு விண்ணப்பிக்கும் நேரமிது. LAST DATE 21.6.2016
 • www.tndalu.ac.in | சட்டப்படிப்புகளுக்கு விண்ணப்பம் விநியோகம்: இன்று (JUNE 13 )முதல் துவங்குகிறது
 • பொதுப்பணித்துறையில் பல்வேறு பொறுப்புகளில் பணிபுரிந்து வரும் 1,200 பேர் வரை நடப்பாண்டில் ஓய்வு பெறுகின்றனர்.
 • ஏழைக் குழந்தைகளின் கல்விக்காக ஒவ்வொருவரும் தங்களால் இயன்ற உதவிகளை செய்ய வேண்டும் என்று நடிகர் சூர்யா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
 • IIT JEE (Advanced) 2016 Results | ஐஐடி நுழைவுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. சென்னை மாணவர் தமிழகத்தில் முதலிடம்.
 • தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கான பட்டயத் தேர்வுக்கு தனித் தேர்வர்களாக தேர்வெழுத விண்ணப்பிக்கத் தவறியவர்கள், சிறப்பு அனுமதித் திட்டத்தின் (தத்கால்) மூலம் விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
 • B.Ed., கல்லுாரிகள், ஒருங்கிணைந்த 4 ஆண்டு B.A.,B.Ed மற்றும் B.Sc.,B.Ed படிப்புகளை நடத்த, ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் தடை விதித்துள்ளது.
 • 10-ம் வகுப்பு, பிளஸ் 2 அரசு தேர்வுகளில் தேர்ச்சி சதவீதம் குறைந்த பள்ளிகள் மாவட்ட வாரியாகக் கணக்கெடுப்பு | ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கத் திட்டம்
 • ஆசிரியர் பயிற்சிக்கு விண்ணப்பிக்க தேதி நீட்டிப்பு | ஜூன் 17-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
 • எஸ்.எஸ்.எல்.சி. சிறப்பு துணைத்தேர்வு: ‘தட்கல்’ திட்டத்தில் 13, 14 தேதிகளில் விண்ணப்பிக்கலாம் அரசு தேர்வுத்துறை அறிவிப்பு
 • CPC 2016 | ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளுக்கு,இறுதி வடிவம் கொடுக்க, நாளை சிறப்பு கூட்டம் நடக்க இருக்கிறது.
 • 'பேங்க் ஆப் இந்தியா' வங்கியில் 517 அதிகாரி பணி: 14-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க அழைப்பு
 • பொறியியல் படிப்புகளுக்கும் நீட் (தேசிய தகுதி காண் தேர்வு) போன்ற தேர்வை நடத்துவது தொடர்பாக அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (ஏஐசிடிஇ) ஆலோசனை நடத்தி வருகிறது.
 • www.isro.gov.in | இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ மையத்தில் காலியாக உள்ள டெக்னீசியன், டிராட்ஸ்மேன், டெக்னிக்கல் அசிஸ்டன்ட், சயின்டிபிக் அசிஸ்டன்ட், நூலக உதவியாளர், செவிலியர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 17-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க அழைப்பு
 • மெட்ரிக் பள்ளிகளில் இருந்து, சி.பி.எஸ்.இ., பாடத் திட்டத்துக்கு மாற விண்ணப்பித்த, 500 பள்ளிகளுக்கு தடையில்லா சான்று வழங்குவதை, தமிழக அரசு நிறுத்தி வைத்துள்ளது.
 • உயர்கல்வி தரத்தை உயர்த்தும் வகையில், கல்லுாரி பேராசிரியர்களின் வேலை நேரத்தை அதிகரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
 • www.skilltraining.tn.gov.in | ஐ.டி.ஐ.க்களில் மாணவர் சேர்க்கை: ஆன்லைனில் விண்ணப்பக்கலாம்
 • www.textbookcorp.in | இ-சேவை மையங்கள் மூலம் பாட புத்தகங்களை 48 மணி நேரத்தில் பெறும் வசதி தமிழக அரசு ஏற்பாடு
 • www.upsconline.nic.in | தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தில் காலியாக உள்ள 257 அமலாக்கத்துறை அதிகாரிகள் மற்றும் அக்கவுன்ட்ஸ் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
 • TNPSC GROUP 2 A RESULT | TNPSC GROUP 2 A தேர்வு முடிவுகள் வெளியீடு. ஜூலை 4ம் தேதி முதல் சான்றிதழ் சரிபார்ப்பு.
 • LAW ADMISSION NOTIFICATION 2016-2017 | சட்ட படிப்புகளில் சேர விண்ணப்பங்கள் ஜூன் முதல் 13 வழங்கப்படுகிறது.
 • DGE | பிளஸ் 2 சிறப்பு துணைதேர்வுக்கு 10.6.2016 & 11.6.2016 ஆகிய தேதிகளில் தத்கல் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம்.
 • TNEA 2016 | இன்ஜினியரிங் படிப்புகளுக்கான, முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை பொது கவுன்சிலிங், ஜூன், 27ல் துவங்கும்' என, அண்ணா பல்கலை அறிவித்துள்ளது.
 • CPC | அரசு ஊழியர்களின் ஊதிய உயர்வு மற்றும் பணிசார்ந்த பரிந்துரைகள் வழங்க அமைக்கப்பட்ட ஊதியக்குழு வருகிற 11ம் தேதி கூடுகிறது.
 • NEET | 'மத்திய அரசின் நுழைவுத்தேர்வுகளில், தமிழக மாணவர்கள் தேர்ச்சி பெற, பாடத்திட்டத்தை மாற்ற வேண்டும்' என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
 • ANNAMALAI UNIVERSITY MBBS/BDS ADMISSION NOTIFICATION 2016-2017 | அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் MBBS/BDS படிப்பில் சேர விண்ணப்பிக்கும் நேரமிது | கடைசி தேதி 20.6.2016
 • SSLC PRACTICAL 2017 | 2017-ம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவுள்ள 10-வது வகுப்பு பொதுத்தேர்விற்கு விண்ணப்பிக்கவுள்ள நேரடித் தனித் தேர்வர், அறிவியல் பாட செய்முறைப் பயிற்சி வகுப்பில் சேர பெயர்களை பதிவு செய்துக்கொள்ளலாம் என அரசு தேர்வுகள் இயக்குனரகம் அறிவித்துள்ளது.
 • 7-வது சம்பள கமிஷன் முரண்பாடுகள் - ஜூலை 11-ந்தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் - நாடு முழுவதும் 40 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் பங்கேற்பு.
 • நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளையும் ஆராய்ந்து, தரவரிசைப் பட்டியல் வெளியிட மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
 • தமிழக பள்ளிக் கல்வித்துறையில் இதுவரை உள்ள நடைமுறைகளில் மாற்றங்களை கொண்டு வருவது குறித்து அரசு ஆலோசித்து வருகிறது.
 • TNPSC Group IV 481 விண்ணப்பதாரர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பிற்கான அழைப்புக் கடிதம் | எழுத்துத் தேர்வு நடைபெற்ற நாள் 21.12.2014 | சான்றிதழ் சரிபார்ப்பு எதிர்வரும் 15.06.2016 முதல் 17.06.2016 வரை சென்னை பிரேசர் பாலச் சாலையில் அமைந்துள்ள தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.
 • TNPSC குரூப் 1, குரூப் 2 மற்றும் விஏஓ தேர்வு முடிவுகள் விரைவில் விரைவில் வெளியிடப்படும் என்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தலைவர் அருள்மொழி தெரிவித்துள்ளார்.
 • வனத்துறையில் உள்ள காலிப் பணி யிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்குமாறு வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் அதிகாரிகளிடம் அறிவுறுத்தியுள்ளார்.
 • வங்கிகளில் புரோபேஷனரி அதிகாரி ஆகவேண்டுமா..இதோ உங்களுக்கான தேர்வு...!!
 • மாணவர் சேர்க்கைக்காக 24 மணி நேர ஹெல்ப்லைன்களை ஏற்படுத்துமாறு பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், இன்ஸ்டிடியூட்டுகளுக்கு பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) உத்தரவு பிறப்பித்துள்ளது.
 • கோவை மத்திய சிறையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
 • TAMIL G.K 0201-0220 | TNPSC | TRB | TET | 141 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்
 • www.tndalu.ac.in | சட்டப்படிப்புகளுக்கு விண்ணப்பம் விநியோகம்: இன்று (JUNE 13 )முதல் துவங்குகிறது
 • பொதுப்பணித்துறையில் பல்வேறு பொறுப்புகளில் பணிபுரிந்து வரும் 1,200 பேர் வரை நடப்பாண்டில் ஓய்வு பெறுகின்றனர்.
 • ஏழைக் குழந்தைகளின் கல்விக்காக ஒவ்வொருவரும் தங்களால் இயன்ற உதவிகளை செய்ய வேண்டும் என்று நடிகர் சூர்யா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
 • IIT JEE (Advanced) 2016 Results | ஐஐடி நுழைவுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. சென்னை மாணவர் தமிழகத்தில் முதலிடம்.
 • தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கான பட்டயத் தேர்வுக்கு தனித் தேர்வர்களாக தேர்வெழுத விண்ணப்பிக்கத் தவறியவர்கள், சிறப்பு அனுமதித் திட்டத்தின் (தத்கால்) மூலம் விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
 • B.Ed., கல்லுாரிகள், ஒருங்கிணைந்த 4 ஆண்டு B.A.,B.Ed மற்றும் B.Sc.,B.Ed படிப்புகளை நடத்த, ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் தடை விதித்துள்ளது.
 • 10-ம் வகுப்பு, பிளஸ் 2 அரசு தேர்வுகளில் தேர்ச்சி சதவீதம் குறைந்த பள்ளிகள் மாவட்ட வாரியாகக் கணக்கெடுப்பு | ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கத் திட்டம்
 • ஆசிரியர் பயிற்சிக்கு விண்ணப்பிக்க தேதி நீட்டிப்பு | ஜூன் 17-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
 • எஸ்.எஸ்.எல்.சி. சிறப்பு துணைத்தேர்வு: ‘தட்கல்’ திட்டத்தில் 13, 14 தேதிகளில் விண்ணப்பிக்கலாம் அரசு தேர்வுத்துறை அறிவிப்பு
 • ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளுக்கு,இறுதி வடிவம் கொடுக்க, நாளை சிறப்பு கூட்டம் நடக்க இருக்கிறது.
 • 'பேங்க் ஆப் இந்தியா' வங்கியில் 517 அதிகாரி பணி: 14-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க அழைப்பு
 • உ.பி. மாநிலத்தில் காத்திருக்கும் 9 ஆயிரம் ஆசிரியர்கள் வேலை..!!
 • பொறியியல் படிப்புகளுக்கும் நீட் (தேசிய தகுதி காண் தேர்வு) போன்ற தேர்வை நடத்துவது தொடர்பாக அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (ஏஐசிடிஇ) ஆலோசனை நடத்தி வருகிறது.
 • www.isro.gov.in | இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ மையத்தில் காலியாக உள்ள டெக்னீசியன், டிராட்ஸ்மேன், டெக்னிக்கல் அசிஸ்டன்ட், சயின்டிபிக் அசிஸ்டன்ட், நூலக உதவியாளர், செவிலியர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 17-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க அழைப்பு
 • மெட்ரிக் பள்ளிகளில் இருந்து, சி.பி.எஸ்.இ., பாடத் திட்டத்துக்கு மாற விண்ணப்பித்த, 500 பள்ளிகளுக்கு தடையில்லா சான்று வழங்குவதை, தமிழக அரசு நிறுத்தி வைத்துள்ளது.
 • உயர்கல்வி தரத்தை உயர்த்தும் வகையில், கல்லுாரி பேராசிரியர்களின் வேலை நேரத்தை அதிகரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
 • www.skilltraining.tn.gov.in | ஐ.டி.ஐ.க்களில் மாணவர் சேர்க்கை: ஆன்லைனில் விண்ணப்பக்கலாம்
 • பட்ட மேற்படிப்பு படிக்கும் மருத்துவ மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்க இயலாது தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக அதிகாரி பேட்டி
 • www.textbookcorp.in | இ-சேவை மையங்கள் மூலம் பாட புத்தகங்களை 48 மணி நேரத்தில் பெறும் வசதி தமிழக அரசு ஏற்பாடு
 • www.upsconline.nic.in | தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தில் காலியாக உள்ள 257 அமலாக்கத்துறை அதிகாரிகள் மற்றும் அக்கவுன்ட்ஸ் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
 • mbbs random number 2016 | தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கான ரேண்டம் எண் ஜூன் 13-ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது.
 • TNPSC குரூப் 1 மெயின் தேர்வு முடிவு 17-ஆம் தேதி வெளியாக வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 • தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்புகளில் சேர்வதற்காக மாணவர்கள் அனுப்பியுள்ள விண்ணப்பங்கள், சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்வி தேர்வுக் குழுவிடம் சென்று சேர்ந்துவிட்டதா? என்பதை இணையதளம் மூலம் உறுதி செய்துகொள்ளலாம்.சுகாதாரத் துறையின் இணையதளமான www.tnhealth.org-இல் இதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 
 • Fixation of Pay as per Report of 7th Report CPC
 • அரசு கலை, அறிவியல் கல்லுாரிகள் திறப்புதேதி, இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படாததால், மாணவர்கள் குழப்பத்தில் உள்ளனர்.தமிழகத்தில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில், மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. 83 அரசு கல்லுாரிகளில், கவுன்சிலிங் மூலம் மாணவர் சேர்க்கப்பட்டு வருகின்றனர். கலை, அறிவியல் கல்லுாரிகள், ஜூன் 8ம் தேதி திறக்க உள்ளதாக, உயர்கல்வித் துறை வட்டாரங்களில், நேற்று தகவல் வெளியான நிலையில், 'இன்னும் அதிகாரபூர்வ உத்தரவு, அரசிடமிருந்து வரவில்லை' என, அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
 • அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை, அறிவியல் கல்லுாரிகள், கோடை விடுமுறைக்கு பின், 8ம் தேதி திறக்கப்படுகின்றன. தமிழகத்தில், 83 அரசு கல்லுாரிகள் உட்பட, 700க்கு மேற்பட்ட கலை, அறிவியல் கல்லுாரிகள் செயல்படுகின்றன.
 • விரைவில் ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு...அரசு உத்தரவு ஒரு சில நாட்களில்வெளியாக வாய்ப்பு.
 • அண்ணா பல்கலை மாணவர்களுக்கு, இன்ஜினியரிங் படிப்பில் பயிற்சி தர விரும்பும் தொழில் நிறுவனங்கள், ஜூன், 15ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்' என,அண்ணா பல்கலை அறிவித்துள்ளது. 
 • மருத்துவ நுழைவுத்தேர்வு சட்டத்தை ரத்து செய்ய முடியாது என்று உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.நடப்பு கல்வியாண்டில் மருத்துவ நுழைவுத் தேர்வை ரத்து செய்து மத்திய அரசு நிறைவேற்றிய அவசரச் சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் நேற்று வழக்குத் தொடரப்பட்டது. விசாரணையில், மருத்துவ நுழைவுத்தேர்வை மத்திய அரசு ஏற்றுக் கொண்டுள்ளது. சில மாநிலங்களுக்கு தற்கலிகமாக மட்டுமே விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. தற்போது, இடைக்கால உத்தரவைபிறப்பித்தால் குழப்பங்கள் நேரிடலாம். எனவே மருத்துவ நுழைவுத்தேர்வு சட்டத்தை ரத்து செய்ய முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
 • புதுச்சேரியில் கடும் கோடை வெப்பம் நிலவி வருவதால் பளளிகளின் விடுமுறைக்காலம் வரும் ஜூன் 6-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
 • சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 28-ஆம் தேதி வெளியிடப்படுகின்றன.
 • தமிழகத்தில் பள்ளிகள் ஜுன் 1 ம் தேதி திட்டமிட்டபடியே துவங்கும் . பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் பெஞ்சமின் தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு
 • பாலிடெக்னிக் கல்லுாரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, தொழில்நுட்ப கல்வி இயக்ககம் நடத்திய, ஏப்ரல் மாத பட்டய தேர்விற்கான தேர்வு முடிவுகள், நாளை வெளியிடப்படுகின்றன. தேர்வு முடிவுகளை,www.tndte.comwww.intradote.tn.nic.in ஆகிய இணையதளங்களில் காணலாம்.
 • பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாவதால்,'104' சேவை மையத்தில் மாணவர்கள், பெற்றோருக்கு 25.5.2016 இன்றும், நாளையும் சிறப்பு ஆலோசனை வழங்கப்படுகிறது.
 • எம்.பி.பி.எஸ்., உள்ளிட்ட இளங்கலை மருத்துவ படிப்புக்கான, தேசிய நுழைவுத் தேர்வில் இருந்து, மாநிலங்களுக்கு ஓராண்டுக்கு விலக்கு அளிக்கும் அவசர சட்டத்திற்கு, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்தார். இதையடுத்து, இந்த ஆண்டு, தமிழக மாணவர்களுக்கு பொது நுழைவுத் தேர்வு இல்லை என்பது அவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 • பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்கள் தங்களது விடைத்தாளை மறுகூட்டல் செய்ய புதன்கிழமை முதல் சனிக்கிழமை (மே 28) வரை விண்ணப்பிக்கலாம்.இந்தத் தேர்வுக்கான முடிவுகள் புதன்கிழமை காலை 9.31 மணிக்கு வெளியிடப்படுகிறது. 
 • பள்ளிக்கல்வி அமைச்சரிடம் முதல் கோரிக்கையாக, பள்ளிகள் திறப்பை தள்ளிப் போட ஆசிரியர் சங்கத்தினர் மனு அளித்தனர்.
 • சி.பி.எஸ்.இ. பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் மே 27-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதிக்குள் வெளியாக வாய்ப்புள்ளது. பிளஸ் 2 தேர்வு முடிவுகள் கடந்த 21-ஆம் தேதி வெளியிடப்பட்டது. சி.பி.எஸ்.இ. பத்தாம் வகுப்புத் தேர்வுகள் மார்ச் 1 முதல் 28-ஆம் தேதி வரை நடைபெற்றது. சி.பி.எஸ்.இ. பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் மே 27-ஆம் தேதி முதல் மே 31-ஆம் தேதிக்குள் வெளியிடப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
 • சென்னை பல்கலையின் தொலைநிலை கல்வித் தேர்வுகள், மே, 28ல் துவங்க உள்ளன.
 • எல்.டி.சி., எனப்படும், மத்திய அரசு ஊழியர்களுக்கான பயணச் சலுகைக்கான முன்பணம் பெறுவதில் புதிய சலுகையை மத்திய அரசு அறிவித்துள்ளது.
 • இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனமான, ஐ.ஐ.டி., மற்றும் ஐ.எஸ்.எம்., போன்றவற்றில் சேர்வதற்கான, ஜே.இ.இ., அட்வான்ஸ்டு தேர்வு வரும், 22ல் நடக்கிறது. இதில், பங்கேற்க கடும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
 • மத்திய கல்வி வாரியத்தின் கீழ் செயல்படும் பள்ளிகளில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில்,உலகவானியல் தினத்தை கொண்டாட உத்தரவிடப்பட்டுள்ளது. 
 • அதிகளவில் பணப்பட்டுவாடா செய்யப்பட்டதாக வந்த புகாரை அடுத்து தஞ்சாவூர் தொகுதிக்கு தேர்தலை தள்ளிவைப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தஞ்சாவூர் தொகுதிக்கு மே-23ம் தேதி தேர்தல் நடைபெறும் எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.புதுச்சேரி, கேரள மாநிலங்களுடன், தமிழகத்திலும் இன்று (மே 16) தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் தஞ்சாவூர் தொகுதியில் மே-23க்கு தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஓட்டு எண்ணிக்கை மே-25 ஆம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 • சென்னை பல்கலை, அண்ணாமலை பல்கலை உள்ளிட்ட நான்கு பல்கலைக் கழகங்கள், நான்கு ஆண்டுகளாக, யு.ஜி.சி., யின் நிதியைபயன்படுத்தாதது தெரிய வந்துள்ளது. இதனால், வரும் ஆண்டுகளில் இந்த பல்கலைகளுக்கு மானியம் கிடைப்பது கேள்விக்குறியாகியுள்ளது.
 • மருத்துவ நுழைவுத் தேர்வு அறிவிப்பால், பி.இ., - பி.டெக்., படிப்புக்கான இன்ஜி., கவுன்சிலிங் நடத்துவதில், புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. மருத்துவ கவுன்சிலிங்கை நடத்தாமல், இன்ஜி., கவுன்சிலிங்கை நடத்த முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
 • மத்திய அரசின் ஆசிரியர் தகுதித் தேர்வான, சி.டெட்., தேர்வின் விடைக்குறிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
 • TNPSC துறைத் தேர்வுக்கான விண்ணப்பிக்கும் தேதி 11-04-2016 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
 • 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள், மே முதல் வாரத்தில் வெளியிடப்படும் என அரசு தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தராதேவி தகவல் தெரிவித்துள்ளார்
 • பிளஸ் 2 வேதியியல் தேர்வு கடினமாக இருந்தது என்றும் நுாற்றுக்கு நுாறு மதிப்பெண் பெறுபவர்களின் எண்ணிக்கை இந்தாண்டு கணிசமாக குறையும்என்றும் மாணவர்கள் தெரிவித்தனர்.
 • SSLC விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் 1–ந்தேதி முதல் ஏப்ரல் 25–ந்தேதி வரை நடைபெற இருக்கிறது.
 • தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது. இதில் 12,53 பள்ளிகளை சேர்ந்த 10,72,185 பேர் மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர். இதற்காக 3,371 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
 • பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கியது. இந்த தேர்வை 8 லட்சத்து 96 ஆயிரம் பேர் எழுதினர். இந்நிலையில் விடைத்தாளை திருத்தும் பணி தொடங்கியுள்ளது. தமிழகம் முழுவதும் 100-க்கும் மேற்பட்ட மையங்களில் விடைத்தாள் திருத்தும் பணி நடைபெற்று வருகிறது.முதல் நாளான ஒன்று தமிழ் மொழிப்பாடத்திற்கான விடைத்தாள் திருத்தப்படுகின்றன. இந்த பணி வரும் ஏப்ரல் 1-ம் தேதி நிறைவடைகிறது.
 • பிஎச்.டி., பட்டத்துக்காக, ஆய்வுப் பணிகளில் ஈடுபடும் காலத்தை, ஆசிரியர் அனுபவ காலமாக எடுத்துக் கொள்ளலாம்' என, பல்கலை மானியக் குழுவான, யு.ஜி.சி., அறிவித்துள்ளது. நாடு முழுவதும் பல்கலைகள் மற்றும் கல்லுாரிகளில், ஏராளமான பேராசிரியர் மற்றும் உதவி பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இவற்றை நிரப்பும் வகையில், பல்கலைகளுக்கு புதிய சலுகையை, யு.ஜி.சி., வழங்கியுள்ளது. அதன்படி, 'பல்கலை மற்றும் கல்லுாரிகளில் முதுகலை, ஆராய்ச்சிப் படிப்பு முடித்தவர்களை பணி நியமனம் செய்யும் போது, அவர்களின் அனுபவ காலத்தில், பிஎச்.டி., படிக்கும் காலத்தையும் சேர்க்கலாம்' என, யு.ஜி.சி., தெரிவித்துள்ளது. 'பிஎச்.டி., காலத்தில் விடுப்பு இன்றி ஆய்வுப் பணியில் ஈடுபடும் காலத்தை இதில் கணக்கிடலாம்' எனவும், அதில் கூறப்பட்டுள்ளது.இது, முழு நேர பிஎச்.டி., ஆய்வாளர்களுக்கு மட்டுமே பொருந்தும்; பகுதி நேர ஆய்வாளர்களுக்கு பொருந்தாது.
 • ஆசியர்கள் தகுதித் தேர்வு எழுதுவது கட்டாயம் என, கல்வித்துறை அறிவித்துள்ளது.தகுதித் தேர்வை ரத்து செய்யுமாறு கிருஷ்ணகிரியை சேர்ந்த ஆசிரியர் ஜோதி என்பவர் முதல்வரின் தனிப்பிரிவில் மனு அளித்திருந்தார். மனுவை பரிசீலித்த பள்ளிக்கல்வித்துறை ஆசிரியர் ஜோதிக்கும், மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளுக்கும் விளக்க அறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளது. மத்திய அரசின் 2009ம் ஆண்டு குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டம், தேசிய ஆசிரியர் கல்விக்குழுமத்தின் வழிகாட்டு நெறிமுறைகள் தெளிவாக உள்ளது. அதன்படி, 6 முதல் 14 வயது வரையிலான மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கும் ஆசிரியர்கள் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.எனவே அனைத்து ஆசிரியர்களும் தகுதித் தேர்வு எழுத வேண்டும். இதில் எந்த விதிவிலக்கும் இல்லை. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
 • தமிழ் வளர்ச்சி இயக்குனரகத்தில், இரண்டு தமிழ் ஆசிரியர்; ஒரு ஓட்டுனர்; இரண்டு அலுவலக உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், வரும், 10ம் தேதி மாலைக்குள், இயக்குனர், தமிழ் வளர்ச்சி இயக்ககம், தமிழ்ச்சாலை, எழும்பூர், சென்னை - 8 என்ற முகவரிக்கு நேரிலோ, தபால் மூலமாகவோ, விண்ணப்பத்தை அனுப்பி வைக்க வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு, 044 - -28190412, 044 - -28190413 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
 • மத்திய அரசின் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தகுதியான ஆசிரியர்களை தேர்வு செய்ய, மாவட்ட அதிகாரிகளுக்கு, பள்ளிக்கல்வி துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். இந்த விருதை பெற, 20 ஆண்டுகள் ஆசிரியராக பணியாற்றி இருக்க வேண்டும். ஒவ்வொரு ஆண்டும், ஒரு மாநிலத்தில், 22 பேருக்கு, இந்த விருது வழங்கப்படுகிறது. தமிழகத்தில், மாநில அரசின் நல்லாசிரியர் விருது பெற்றவர்களே, மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்படுகின்றனர்.
 • இந்த ஆண்டுக்கான விருதுக்கு, தமிழகத்தில் தகுதியான ஆசிரியர்களின் பட்டியலை அனுப்புமாறு, பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் மற்றும் அனைவருக்கும் இடைநிலை கல்வி இணை இயக்குனர் நரேஷ் ஆகியோர், மாவட்ட அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளனர். மார்ச், 15க்குள் பட்டியல் அனுப்ப உத்தரவிடப்பட்டு உள்ளது.
 • தேர்தல் தேதியால் பள்ளி தேர்வுகளுக்கு பாதிப்பு இல்லை என பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. தேர்தல் தேதிக்கு முன்பாக பள்ளி தேர்வுகள் அனைத்தும் முடிந்துவிடும் என பள்ளி கல்வித்துறை செயலாளர் சபீதா தெரிவித்துள்ளார்.
 • தமிழகத்தில் காலியாக இருந்த 125 உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களை பதவிஉயர்வு மூலம் நிரப்பி பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.
 • ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) மூலம் 1,063 முதுகலை ஆசிரியர்களை நியமிக்க பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.2016--17ம் கல்வியாண்டில் பணி ஓய்வு பெறுவோர் உட்பட 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முதுகலை ஆசிரியர் காலிப்பணியிடம் உருவாகும் நிலை உள்ளது. இதில் 50 சதவீதம் பதவி உயர்வு மூலம் நிரப்ப வேண்டும்.எஞ்சிய 50 சதவீதம் தேர்வு மூலமே நியமிக்க முடியும். பதவி உயர்விற்காக 2002--03 முதல் 2008 வரையிலும் பணியில் சேர்ந்த பட்டதாரி ஆசிரியர்களுக்கு பாடங்களை பொறுத்து பதவி உயர்விற்கு பணி மூப்பு பட்டியல் சேகரிக்கப்பட்டுள்ளது.இதற்கிடையில் நேரடி நியமன விதிமுறைப்படி 1,063 பேருக்கான டி.ஆர்.பி., எழுத்துத் தேர்விற்கு பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதற்கென சிறப்பு அரசாணை வெளியிட்ட நிலையில், தேர்வுக்கான ஏற்பாடும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மற்றும் சட்டசபை தேர்தல் காரணமாக டி.ஆர்.பி., தேர்வு தள்ளி போக வாய்ப்புள்ளது. இல்லையெனில் ஜூன் அல்லது ஜூலையில் தேர்வு நடக்கும் என, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
 • 12ம் வகுப்பு தேர்வுகளை எதிர்கொண்ட மாணவர்களிடம் உற்சாகம் அதிகரித்து காணப்படுகிறது. தமிழகம் முழுவதும் 12ம் வகுப்பு தேர்வுகள் இன்று தொடங்கின. மாநிலம் முழுவதும் 8,40,000 மாணவர்கள் தேர்வு எழுதியிருக்கின்றனர். முதல் நாளான இன்று தமிழ் முதல் தாளுக்கான தேர்வு நடைபெற்றது. காலை 10.15 மணி முதல் மதியம் 1.15 வரை இந்த தேர்வானது நடைபெற்றது. முதல் நாளான இன்று தேர்வுக்கு செல்வதால் சற்று பதற்றத்துடன் சென்ற மாணவிகள், பின்பு எந்தவொரு பதற்றம் இல்லாமலும் தேர்வு எழுதியிருக்கிறார்கள். முதல் தேர்வு என்ற போதிலும் கூட எதிர்பார்த்த அளவுக்கு கேள்விகள் மிக எளிதாக இருந்ததாகவே பல மாணவிகள் தெரிவித்துள்ளனர். தமிழ் முதல் தாளை முடித்துவிட்டு வந்த மாணவர்கள், அடுத்து வரக்கூடிய திங்கட்கிழமை அன்று தமிழ் இரண்டாம் தாள் தேர்வானது நடைபெற இருக்கிறது. அதற்கும் இது போலவே தேர்வு மிக எளிமையாக இருக்கும் என்று மாணவர்கள் எதிர்பார்ப்புடன் அதற்கும் தயாராக இருப்பதாகவும் தெரிவித்திருக்கின்றனர்.
 • வருமான வரி விகிதங்களில் மாற்றம் ஏதும் இல்லை. 
 • வருங்கால வைப்பு நிதித் திட்டத்தில் புதிதாக இணையும் ஊழியர்களுக்கான 8.33% பங்களிப்பை முதல் மூன்று ஆண்டுகளுக்கு அரசே ஏற்கும். 
 • வாடகை வீட்டில் வசிக்கும் வருமான வரிதாரருக்கு ரூ60,000 வரை வரிச்சலுகை. வாடகை வீட்டில் வசிப்போருக்கு இதுவரை சலுகை ரூ.24,000 ஆக இருந்தது. 
 • 35 லட்சம் ரூபாய்க்கு உட்பட்ட வீட்டுக்கடன் வட்டிக்கு ரூ.50 ஆயிரம் ரூபாய் வரிச் சலுகை. வீட்டின் மதிப்பு ரூ.50 லட்சத்துக்கு உட்பட்டிருந்தால் மட்டுமே இந்தச் சலுகை செல்லுபடியாகும். 
 • 60 சதுர மீட்டருக்குள் கட்டப்படும் குறைந்த விலை வீடுகளுக்கு சேவை வரியில் இருந்து விலக்கு.
 • 10 அரசு கல்வி நிறுவனங்களும், 10 தனியார் கல்வி நிறுவனங்கள் உலகத்தரத்துக்கு மேம்படுத்தப்படும். 
 • பள்ளிச் சான்றிதழ் மற்றும் பட்டயப் படிப்புச் சான்றிதழ்கள் டிஜிட்டல் ஆவணங்களாகவும் வழங்கப்படும். 
 • அடுத்த இரண்டு ஆண்டுகளில் புதிதாக 62 நவோதயா பள்ளிகள் தொடங்கப்படும்.
 • மத்திய அரசின் புதிய ஊழியர்களுக்கு ஓய்வூதியத் திட்டத்திற்கான பங்களிப்பில் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.மத்திய நிதியமைச்சர் இன்று தாக்கல் செய்த பட்ஜெட்டில், மத்திய அரசின் புதிய ஊழியர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு அவர்கள் செலுத்த வேண்டிய 8.33% பங்களிப்பை அரசே அளிக்கும் என்று கூறினார்.ஊதியக் குழு பரிந்துரையை செயல்படுத்த இடைக்கால நிதி ஒதுக்கீடு.
 • வீட்டுக்கடன்களுக்கு சிறப்புச் சலுகைகளை அறிவித்துள்ளார் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி.நாடாளுமன்ற மக்களவையில் இன்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி 2016 - 17ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.அதில், முதல் முறையாக ரூ.50 லட்சத்திற்குள் வீடு வாங்குவோருக்கு ரூ.50 ஆயிரம் கூடுதல் வரிச்சலுகை.60 சதுர மீட்டருக்குள் கட்டப்படும் குறைந்த விலை வீடுகளுக்கு சேவை வரியில் இருந்து விலக்கு.புதிய வீட்டுக்கடன் வட்டி மீது ரூ.50 ஆயிரம் கூடுதல் வரிச் சலுகை.
 • ஏழை குடும்பத்தினருக்கு மானியத்தில் காஸ் வழங்கப்படும் என்றும், திறன் மேம்பாட்டின் படி வரும் 3 ஆண்டுகளில் ஒரு கோடி பேருக்கு திறன் பயிற்சி அளிக்கப்படும் என்றும் கிராமப்புறங்களி்ல் 6 கோடி குடும்பங்களுக்கு டிஜிட்டல் கல்வி அறிவு திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்றும், அணு மின் சக்தி உற்பத்திக்கு 3 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்படும் என்றும் இன்றை பட்ஜெட் உரையில் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்தார்.வருமான வரி விலக்கில் எவ்வித மாற்றம் இல்லை என தெரிவித்தார். 
 • பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் ரத்து செய்ய கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. வழக்கு விசாரணை வருகிற வாரம் வர உள்ளது.
 • 2016-17ஆம் தனி நபர் வருமான வரி கழிவு ரூ.2000லிருந்து ரூ.5000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. வாடகை வீட்டில் வசிக்கும் வருமான வரிதாரருக்கு ரூ60,000 வரை வரிச்சலுகை ஆண்டுக்கு ரூ5 லட்சத்துக்கும் குறைவான வருமானம் உள்ளோருக்கு ரூ3,000 வரிசலுகை தனி நபர் வருமான உச்சவரம்பு மாற்றம் இல்லை
 • TNTET NEWS ஆசிரியர் தகுதி தேர்வு பற்றிய வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் வருகிற 04.03.2016 அன்று பதிவாளர் கோர்ட் எண்-2 இல் வரிசை எண் 27 ஆக விசாரணைக்கு வருகிறது.
 • தமிழக வருவாய் துறையில், காலியாக உள்ள, 813 வி.ஏ.ஓ., பணியிடங்களை நிரப்ப, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., சார்பில், எழுத்துத்தேர்வு அறிவிக்கப்பட்டது. இந்த தேர்வு, 28.02.2016 இன்று தமிழகம் முழுவதும், 244 இடங்களில்,3,466 மையங்களில் நடக்கிறது. தேர்வில், 10 லட்சத்து, 27 ஆயிரம் பேர் பங்கேற்க உள்ளனர். 
 • தேர்வுத் துறை இயக்குனர் வசுந்தராதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 'தனித்தேர்வர்களுக்கான, 8ம் வகுப்பு பொதுத்தேர்வு, ஏப்., 18ம் தேதி துவங்கும். ஏப்., 18ம் தேதி, தமிழ்; 20ம் தேதி, ஆங்கிலம்; 21ம் தேதி, கணிதம்; 22ம் தேதி, அறிவியல்; 23ம் தேதி, சமூக அறிவியல் தேர்வுகள் நடக்கும்' என, கூறப்பட்டு உள்ளது.
 • ஆய்வக உதவியாளர் பணிக்கான தேர்வு நடந்து முடிந்து, எட்டு மாதங்களுக்கு மேல் ஆகியும், இன்னும் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படாததால், தேர்வெழுதிய, எட்டு லட்சம் பேர் கவலையில் ஆழ்ந்துள்ளனர். அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள, 4,362 ஆய்வக உதவியாளர் பணிக்கு, கடந்த ஆண்டு மே, 31ல் எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது; இதில், எட்டு லட்சம் பேர் பங்கேற்றனர்.
 • பாராளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று ரெயில் மந்திரி சுரேஷ் பிரபு ரெயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதில் பயணிகள் கட்டணம் உயர்த்தப்படவில்லை. பழைய திட்டங்களை விரைந்து நிறைவேற்றும் வகையில் புதிய திட்டங்கள், புதிய ரெயில்கள் அறிவிக்கப்படவில்லை. அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் மத்திய பட்ஜெட் வருகிற 29–ந்தேதி (திங்கட்கிழமை) தாக்கல் செய்யப்படுகிறது. நிதி மந்திரி அருண்ஜெட்லி பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். 
 • பிளஸ்2 பொதுத்தேர்வுக்கு, தேர்வறை கண்காணிப் பாளர்களை நியமிப்பதில், நடப்பாண்டிலும் குலுக்கல் முறையே பின்பற்றப்படுவதாக, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
 • மாநில அளவிலான தேசிய திறனாய்வுத் தேர்வு  (NTSE), 2015 தேர்வு முடிவுகள் 28.02.2016 அன்று காலை 10.00 மணியளவில் வெளியிடப்படுகிறது.  தேர்வர்கள் தங்களது தேர்வு முடிவுகளை www.tndge.in என்ற இணையதளம் மூலம் அறிந்து கொள்ளலாம் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
 • ஏப்ரல் கடைசி வாரத்தில் தமிழக சட்டப்பேரவைத் தேர்தல்: மார்ச் 6-ல் அதிகாரப்பூர்வ அறிவிப்பு.
 • தமிழக அரசில் பணியாற்றி வரும் 5 அலுவலர்களை ஐ.ஏ.எஸ். அதிகாரிகளாக அந்தஸ்து உயர்வு அளித்து ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். அதன்படி, வி.பி.தண்டபாணி, பி.பொன்னையா, எம்.விஜயலட்சுமி, கே.ராஜமணி, வி.அன்புசெல்வன் ஆகியோருக்கு ஐ.ஏ.எஸ். அந்தஸ்து அளித்து உத்தரவிடப்படுகிறது. ஆன்ரூஸ் பொன்ராஜ் வைரமணி தொடர்ந்துள்ள வழக்கில் கோர்ட்டு பிறப்பிக்கும் உத்தரவுக்கு இணங்க இந்த அரசாணை செயல்பாட்டுக்கு வரும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
 • நடைபெறவுள்ள மார்ச்/ஏப்ரல் 2016, மேல்நிலைப் பொதுத் தேர்வெழுத, சிறப்பு அனுமதி திட்டத்தின் கீழ் (தட்கல்) மூலம் 02.02.2016 முதல் 04.02.2016 வரை ஆகிய நாட்களில் விண்ணப்பித்த தனித்தேர்வர்கள்  23.02.2016 முதல் 25.02.2016 வரை www.tndge.in என்ற இணையதளத்தின் மூலம் தேர்வுக் கூட நுழைவுச் சீட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
 • பள்ளிக்கல்வித்துறையில் காலியாக உள்ள 1062 முதுகலை ஆசிரியர்கள் போட்டித்தேர்வு மூலம் விரைவில் நியமிக்கப்பட உள்ளனர். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.
 • முதுநிலை மருத்துவப் படிப்புக்கான நுழைவுத்தேர்வு, பிப்., 14ல் நடத்தப்படும் என, மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. தமிழகத்தில், மாநில ஒதுக்கீட்டுக்கு, முதுநிலை மருத்துவப் படிப்பில், 1,163 இடங்களும்; எம்.டி.எஸ்., படிப்பில், 40 இடங்களும் உள்ளன. இந்த படிப்புகளில் சேர்வதற்கான நுழைவுத்தேர்வு, இம்மாதம், 14ம் தேதி நடக்கிறது. இதற்கான, ஹால் டிக்கெட் விண்ணப்ப தாரர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. கிடைக்காதோர், www.tnhealth.org என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என, மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.
 • 29 தலைமை ஆசிரியர்களை பதவி உயர்வு மூலம் மாவட்ட கல்வி அலுவலராக  நியமனம் செய்து பள்ளிக்கல்வி இயக்குநர் ஆணை பிறப்பித்துள்ளார். பெயர் பட்டியல்.
 • வெள்ளத்தில் மாணவர்கள் இழந்த கல்விச்சான்றிதழ் நகல்களை, விண்ணப்பித்த இடங்களிலேயே 27.01.2016 முதல் பெற்றுக் கொள்ளலாம் என பள்ளி கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் அறிவித்துள்ளார். 
 • பாலிடெக்னிக் முடித்த 1000 பேருக்கு டிவிஎஸ் நிறுவனத்தில் வேலை சென்னை கடந்த 2014, 2015-ம் ஆண்டுகளில் பாலிடெக்னிக் முடித்த 1,000 இளை ஞர்களுக்கு டிவிஎஸ் நிறுவனத்தில் வேலைபெற மாநில தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் ஏற்பாடு செய்துள்ளது. முன்னணி தனியார் நிறுவனங் களில் ஒன்றான டிவிஎஸ் குழுமம் ஆயிரம் இளைஞர்களுக்கு ஒரு மாத காலம் சிறப்பு பயிற்சி அளித்து அவர்களை தங்கள் நிறுவனத் திலேயே பணியில் அமர்த்திக் கொள்ள முன்வந்துள்ளது. பட்டி யலை தொழில் நுட்பக் கல்வி இயக்ககத்திடம் கேட்டிருக்கிறது.
 • ஓய்வு பெற்ற, இறந்தஆசிரியர்களின் விவரம், பள்ளிக்கல்வி இயக்குனர் அலுவலகத்தில்இல்லை என, தகவல் உரிமைச்சட்டத்தில்கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளிக்கப்பட்டுள்ளது. 
 • மதுரை காமராஜ் பல்கலை தொலைதூரக் கல்வி மையத்தில் நடப்பு கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. பி.ஏ., பி.எஸ்.சி., பி.காம்., பி.காம்.,(சி.ஏ.,), பி.சி.ஏ., பி.லிட்., பி.பி.ஏ., எம்.ஏ., எம்.பி.ஏ., எம்.சி.ஏ., பி.ஜி.டி.சி.ஏ., டிப்ளமோ, டிப்ளமோ(பி.ஜி.,), சர்டிபிகேட் மற்றும் பல்கலையால் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து பாடப்பிரிவுகளுக்கும் சேர்க்கை நடக்கிறது. சேர்க்கை மாணவர்களுக்கு பயிற்சி வகுப்புகள், செய்முறை தேர்வுகள் மற்றும் பல்கலை தேர்வுகள் அனைத்தும் தேனி யிலேயே நடைபெறும். ஜன.20க்குள் சேரும் மாணவர்கள் மே மாதம் முதலாமாண்டு தேர்வெழுதலாம். தேனி பெரியகுளம் ரோட்டில் உள்ள தொலைதூர கல்வி மையத்தில் இதற்கான விண்ணப்பங்களை பெறலாம், என திட்ட அலுவலர் நாராயணபிரபு தெரிவித்துள்ளார்.
 • ராணுவ பணிக்கு சென்னையில் ஜன. 31-ல் எழுத்துத்தேர்வு நடை பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடத்தப்பட்ட ராணுவ வீரர் (டிரேட்மேன்) பணிக்கான முதல்கட்ட தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பொது நுழைவுத்தேர்வு ஜனவரி 31-ம் தேதி நடத்தப்படும். தேர்வுக்கான ஹால்டிக்கெட் சென்னையில் உள்ள ராணுவ ஆள் சேர்ப்பு தலைமை அலுவலகத்தில் வருகிற 20-ம் தேதி முதல் வழங்கப்படும். இந்த தகவலை மத்திய அரசின் பாதுகாப்பு அமைச்சக பத்திரிகை தகவல் அலுவலகம் தெரிவித்துள்ளது.
 • D.ELE.ED RESULT | ஆசிரியர் கல்வி டிப்ளமோ மாணவ, மாணவியருக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
 • National ICT Awards for School Teachers-2016 | நடப்பு ஆண்டிற்கான ICT விருது பெற விண்ணப்பியுங்கள்...விரிவான விவரங்கள்...
 • PLUS TWO SPECIAL GUIDE DOWNLOAD | தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில் SCERT வெளியிட்டுள்ள பிளஸ் டூ மாணவர்களுக்கான குறைந்த பட்ச கற்றல் கையேடுகளை பதிவிறக்கம் செய்யுங்கள்...
 • SSLC SPECIAL GUIDE DOWNLOAD | தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில் SCERT வெளியிட்டுள்ள பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான குறைந்த பட்ச கற்றல் கையேடுகளை பதிவிறக்கம் செய்யுங்கள்...
 • HIGHER SECONDARY PRACTICAL EXAMINATION | பிளஸ் 2 பொதுத் தேர்வு கால அட்டவணை வெளியானதை தொடர்ந்து, பள்ளி மாணவர்களுக்கான மார்ச் 2016 – செய்முறைத் தேர்வுகளை பிப்ரவரி 5 ஆம் தேதியிலிருந்து பிப்ரவரி 25 தேதிக்குள் நடத்தி முடிக்க அரசு தேர்வுகள் இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
 • SSLC PRACTICAL EXAMINATION | SSLC பொதுத் தேர்வு கால அட்டவணை வெளியானதை தொடர்ந்து, பள்ளி மாணவர்களுக்கான மார்ச் 2016 – செய்முறைத் தேர்வுகளை பிப்ரவரி 22 ஆம் தேதியிலிருந்து நடத்தி முடிக்க அரசு தேர்வுகள் இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
 • TAMIL NADU SCHOOL EDUCATION PAY AUTHORIZATION ORDERS DOWNLOAD
 • HR SEC HM PROMOTION | மேல்நிலைக்கல்விப்பணி – 01.01.2016 அன்றைய நிலையில் – அரசு/நகராட்சி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்விற்கான முன்னுரிமை பட்டியல் தயாரிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.
 • சேலம் மாவட்டத்தில், 12,000 ஆசிரியர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. தமிழக அரசு பள்ளி ஆசிரியர் பணியிடங்களில், போலிச் சான்றிதழ் கொடுத்து பலரும் சேர்ந்துள்ளதாக எழுந்த புகாரையடுத்து, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள மேல்நிலை, உயர்நிலை, நடுநிலை, தொடக்கப் பள்ளி, தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களின் கல்விச் சான்றிதழ் சரிபார்க்கும் பணி நடந்து வருகிறது. 
 •  'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை, www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யும் வசதி உள்ளது. 
 • 'உதவி பேராசிரியர் பணிக்கான, 'செட்' தேர்வை, துணைவேந்தரே இல்லாத பல்கலை நடத்துவதால், முறைகேடுகளுக்கு வாய்ப்புள்ளது; தேர்வை ரத்து செய்ய வேண்டும்' என, பட்டதாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். அரசு கல்லுாரிகளில், பேராசிரியர் பணிக்கு செல்ல வேண்டுமென்றால், முதுகலை பட்டம், ஆராய்ச்சி படிப்புடன், தேசிய அளவிலான, 'நெட்' அல்லது மாநில அளவிலான, 'செட்' தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். 
 • வரும் 2016 - 2017 நிதியாண்டு முதல் இத்திட்டத்தை செயல்படுத்த உள்ளதாக வருமான வரித் துறை அறிவித்துள்ளது. வருமான வரி தாரர்கள் மின்னஞ்சலில் பதில்களை அளிப்பது மூலம் அவர்களுக்கு தேவையற்ற சிரமங்கள் குறையும் என வருமான வரித் துறை தெரிவித்தள்ளது. மேலும் வருமான வரித் துறையில் நடக்கும் ஊழல்களை கட்டுப்படுத்துவதற்கும் இது உதவும் என அத்துறை தெரிவித்துள்ளது. 
 • ஆசிரியர் தகுதித் தேர்வு நிபந்தனைகளுடன் 23/08/2010 க்குப் பிறகு பட்டதாரி ஆசிரியர்களாக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணி புரிந்து வரும் ஆசிரியர்கள் 09/01/2016 சனிக்கிழமை ..சென்னை DPI பள்ளிக் கல்வித் துறை வளாகத்தில் ஒன்று கூடினர். ஆசிரியர் தகுதித் தேர்விலிருந்து முழு விலக்கு கோரி அமைதியான முறையில் மனு கொடுத்தனர். தமிழக முதல்வர் கருணை உள்ளத்தோடு பணியில் உள்ள எங்களுக்கு விரைவில் நல்ல முடிவை அறிவிப்பார் எனும் நம்பிக்கையுடன் திரும்பி செல்வதாக தெரிவித்தனர். 
 • ஓய்வு பெற்ற, இறந்த ஆசிரியர்களின் விவரம், பள்ளிக்கல்வி இயக்குனர் அலுவலகத்தில் இல்லை என, தகவல் உரிமைச்சட்டத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் எரியோடையை சேர்ந்த பிரடெரிக் ஏங்கல்ஸ் என்பவர், பள்ளி கல்வி இயக்குனர் அலுவலகத்தில் தகவல் உரிமைச் சட்டத்தில் மனு அளித்தார். அதில் 2003 ஏப்., 1க்கு பின் ஆசிரியராக பணிபுரிந்து ஓய்வு பெற்ற மற்றும் இறந்தோரின் விவரம், அவர்களிடம் பிடித்த ஓய்வூதிய தொகை உள்ளிட்ட கேள்விகளை கேட்டிருந்தார். இதற்கு இயக்குனரக பொதுதகவல் அலுவலரான துணை இயக்குனர் (மின் ஆளுமை) பதில் அளித்துள்ளார்.
 • தேர்தல் மற்றும் மக்கள் கணக்கெடுப்பு பணிகளில் இருந்து ஆசிரியர்களை விடுவிப்பது தொடர்பாக மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருவதாக, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை இணை அமைச்சர் ராம் சங்கர் கேத்ரியா தெரிவித்துள்ளார்.
 • தேர்தல் மற்றும் மக்கள் கணக்கெடுப்பு பணிகளில் இருந்து ஆசிரியர்களை விடுவிப்பது தொடர்பாக மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருவதாக, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை இணை அமைச்சர் ராம் சங்கர் கேத்ரியா தெரிவித்துள்ளார்.
 • அரசு பள்ளி மாணவர்களுக்கு, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பாடங்களின் கற்றல் கையேட்டை,தமிழக கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் தயாரித்து, அரசு பள்ளிகளுக்கு இலவசமாக வழங்கியுள்ளது.