செய்தித் துளிகள் | LATEST NEWS

  • கீழ் கண்ட அனைத்து செய்திகளையும் விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் ...
  • 23/3/2017 | LAB ASST RESULT SOON | ஆய்வக உதவியாளர் எழுத்துத் தேர்வு முடிவுகள் நாளை 24.03.2017 வெளியிடப்படுகிறது. 4500 ஆய்வக உதவியாளர் நியமன தேர்வை 8 லட்சம் பேர் எழுதினர். இவர்களுக்கான தேர்வு முடிவுகள் வெகுநாட்களாக வெளியிடப்படாத நிலையில் நாளை 24.03.2017 வெளியிடப்படுகிறது.
  • 21/3/2017 | பள்ளி கல்வித்துறைக்கு போதிய ஆசிரியர்கள் உடனடி நியமனம் பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தகவல். 
  • 21/3/2017 | 6 மாதத்தில் தமிழக பள்ளி கல்வித்துறை இந்தியாவுக்கே முன்மாதிரியாக விளங்கும் பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தகவல். 
  • 21/3/2017 | நீட் தேர்வில் இருந்து தமிழகம் விலக்கு பெறுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தகவல். 
  • 21/3/2017 | எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 மாணவர்களுக்கு உயர்கல்வி, வேலைவாய்ப்பு குறித்து வழி காட்டும் வகையில் ஏப்ரல் 6, 7 தேதிகளில் வழிகாட்டி முகாம் கள் நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வி அமைச்சர் கே.ஏ.செங் கோட்டையன் தெரிவித்தார். ஏப்ரல் 6, 7-ல் இந்த முகாம் நடத்தப்படுகிறது.
  • 21/3/2017 | ஆய்வக உதவியாளர் நியமனம் தொடர்பாக 2 அல்லது 3 நாட்களில் அரசாணை வெளியிடப்படும் பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தகவல். நியமனத்துக்கு எழுத்துத் தேர்வு மதிப்பெண் சேர்க்கப்படுமா அல்லது எழுத்துத் தேர்வு மதிப்பெண், நேர்காணல் மதிப்பெண், கூடுதல் கல்வித்தகுதி, பணிஅனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் நியமனம் இருக்குமா என்பது அரசாணையில் தெரிவிக்கப்படும்.
  • வருமான வரி தாக்கல் செய்யும்போது, ‘ஆதார்’ எண்ணை குறிப்பிடுவது கட்டாயம் ஆக்கப்படுகிறது. ஜூலை 1-ந்தேதியில் இருந்து இந்த புதிய விதிமுறை அமலுக்கு வருகிறது. நிதி மசோதாவில் மேற்கொள்வதற்காக பாராளுமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்த திருத்தங்களில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் இந்த திருத்தங்கள் நிறைவேற்றப்பட்டால், ஜூலை 1-ந்தேதி முதல் அமலுக்கு வரும். அத்துடன், ‘ஆதார்’ எண் இணைக்கப்படாத வருமான வரி நிரந்தர கணக்கு எண் (பான்) அட்டைகள், ஜூலை 1-ந்தேதியில் இருந்து செல்லாததாக கருதப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
  • தமிழக அரசு  பட்ஜெட் 2017 | 100 உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும்
  • தமிழக அரசு  பட்ஜெட் 2017 | 150 நடுநிலைப் பள்ளிகள் உயர் நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும்
  • தமிழக அரசு  பட்ஜெட் 2017 |  7-வது ஊதியக்குழு பரிந்துரைபடி அரசு ஊழியர்களுக்கு புதிய ஊதியம்மத்திய அரசின் 7-வது ஊதியக்குழு பரிந் துரைகளில் உள்ள அனைத்து கூறுகளையும் ஆய்வுசெய்து அதன் அடிப்படையில் பரிந்துரைகளை வழங்கும் பொருட்டு உயர் அலுவலர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையின் அடிப்படையில் திருத்தப்பட்ட ஊதிய விகிதங்கள் நிர்ணயிக்கப்படும்.
  • தமிழக அரசு  பட்ஜெட் 2017 | தமிழ்நாடு சிறப்பு காவல் இளைஞர் படையில் காலியாக உள்ள இடங்களுக்கு, மேலும் 10,500 நபர்களை இந்த ஆண்டு தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் தேர்வு செய்யும்.
  • தமிழக அரசு  பட்ஜெட் 2017 |  2017-18-ம் ஆண்டில் 150 அரசு நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகவும், 100 அரசு உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்படும். பள்ளிக்குச் செல்லவில்லை என்று கண்டறியப்பட்ட 36 ஆயிரத்து 930 குழந்தைகளை வரும் ஆண்டில் பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்.
  • தமிழக அரசு  பட்ஜெட் 2017 | அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 11-ம் வகுப்பு பயிலும் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபின மாணவ, மாணவியருக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்க பட்ஜெட்டில் ரூ.180 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 
  • தமிழக அரசு  பட்ஜெட் 2017 |  அண்ணாமலை பல்கலைக் கழகத்திற்கான ரூ.139 கோடி உள்பட, அனைத்து பல்கலைக் கழகங்களுக்கும் மானியம் வழங்குவதற்காக பட்ஜெட்டில் ரூ.320 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • தமிழக அரசு  பட்ஜெட் 2017 |  கல்லூரி விடுதி மாணவர்களுக்கான உணவுக் கட்டணத்தை மாதம் ஒன்றிற்கு ரூ.875-ல் இருந்து ரூ.1000 ஆகவும், பள்ளி விடுதி மாணவர்களுக்கான உணவுக் கட்டணத்தை மாதம் ஒன்றிற்கு ரூ.755-ல் இருந்து ரூ.900 ஆகவும் இந்த அரசு உயர்த்தி வழங்கும்.
  • தமிழக அரசு  பட்ஜெட் 2017 |  மாணவர்களுக்கு மடிக் கணினிகள் வழங்க ரூ.758 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • எஸ்எஸ்எல்சி விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் 1-ம் தேதி தொடங்குகிறது. இப்பணியில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஈடுபடுகின்றனர். கடந்த 2-ம் தேதி தொடங்கிய எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வு 28-ம் தேதி முடிவடைகிறது. விருப்ப மொழித்தாள் தேர்வு 30-ம் தேதி நடக்கிறது. தேர்வு முடிவுகள் மே 19-ம் தேதி வெளியிடப்படும் என்று முன்கூட்டியே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
  • தமிழக அரசு  பட்ஜெட் 2017 |  அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 10, 11, 12-ம் வகுப்பு படிக்கும் மாணவிகள் படிப்பை பாதியில் நிறுத்துவதை குறைக்கும் வகையில் சிறப்பு ஊக்கத் தொகையாக அவர்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்துக்கு 2017-18-ம் ஆண்டு பட்ஜெட்டில் ரூ.314 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
  • தமிழக அரசு  பட்ஜெட் 2017 |  அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் (எஸ்எஸ்ஏ) கீழ் முந்தைய ஆண்டுகளுக்கான நிலுவைத் தொகைகள் ரூ.1,476 கோடியும், அனைவருக்கும் இடைநிலைக் கல்வி இயக்கத்தின் (ஆர்எம்எஸ்ஏ) கீழ் ரூ.1,266 கோடியும் மத்திய அரசு வழங்காத நிலையிலும் மாநில அரசு போதுமான நிதியை ஒதுக்கீடு செய்து இந்த திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. 2017-18-ம் ஆண்டில் எஸ்எஸ்ஏ திட்டத்துக்கு ரூ.2,656 கோடியும், ஆர்எம்எஸ்ஏ திட்டத்துக்கு ரூ.1,194 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. பட்ஜெட்டில் பள்ளிக்கல்வித் துறைக்கு ரூ.26 ஆயிரத்து 932 கோடி ஒதுக்கப்பட்டு இருக்கிறது.
  • தமிழக அரசு  பட்ஜெட் 2017 |  அண்ணாமலை பல்கலைக்கழகத்துக்கு ரூ.139 கோடி உட்பட அனைத்து பல்கலைக் கழகங்களுக்கும் மானியம் வழங்க பட் ஜெட்டில் ரூ.320 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. பட்ஜெட்டில் உயர்கல்வித் துறைக்காக ரூ.3 ஆயிரத்து 680 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • தமிழக அரசு  பட்ஜெட் 2017 |  பள்ளிகளில் வகுப்பறைகள், அறிவியல் ஆய்வுக்கூடங்கள், குடிநீர் வசதி, சுற்றுச்சுவர், சாய்வு தளங்கள், மாணவ-மாணவிகளுக்கு தனித்தனி கழிவறைகள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த அரசு சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது. கடந்த நிதி ஆண்டில் உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த ரூ.441 கோடி ஒதுக்கப்பட்டது. பள்ளிகளில் உள்ள கழிவறைகளில் சுகாதாரத்தைப் பேணும் வகையில் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் ரூ.57 கோடியே 63 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. நபார்டு வங்கியிடமிருந்து பெறப்படும் கடனுதவியுடன் சேர்த்து பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த 2017-18-ம் ஆண்டில் ரூ.352 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • ஆய்வக உதவியாளர் எழுத்துத் தேர்வு முடிவுகள் ஓரிரு நாளில் வெளியிடப்படுகிறது. 4500 ஆய்வக உதவியாளர் நியமன தேர்வை 8 லட்சம் பேர் எழுதினர். இவர்களுக்கான தேர்வு முடிவுகள் வெகுநாட்களாக வெளியிடப்படாத நிலையில் ஓரிரு நாட்களில் இதற்கான முடிவுகள் வெளியிடப்பட்டு இம்மாதம் 31ம் தேதிக்குள் பணிநியமனம் செய்யப்படுவார்கள் என கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
  • அரசு பள்ளிகளில் காலியாக உள்ள, 1,111 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான, 'டெட்' தேர்ச்சி பெற்றவர்களின் தரவரிசை பட்டியல், மார்ச் 10 ல் வெளியாகிறது. ஆசிரியர் தகுதிக்கான, டெட் தேர்வு, ஏப்., 29, 30ல் நடத்தப்படுகிறது. 
  • தமிழக அரசு ஊழியர்களுக்கான, பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் பிடித்தம் செய்யப்படும் தொகைக்கு, 8 சதவீதம் வட்டி நிர்ணயம் செய்து, தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.தமிழகத்தில், 2003 ஏப்., 1ல் இருந்து, அரசு பணியில் சேர்ந்தவர்களுக்கு, பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. 
  • வி.ஏ.ஓ., பதவிக்கான இரண்டாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு, மார்ச், 13 முதல், 15 வரை நடக்க உள்ளது. இதற்கான பட்டியல், இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
  • பிளஸ் தேர்வு முடிவு மே 12, பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு மே 19 ல் வெளியாகிறது.இதனால் இரு வகுப்புகளுக்கும் விடைத்தாள் திருத்தும் பணியை ஒரே சமயத்தில் துவங்க தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.ஏப்.,1 ல் துவங்கி ஏப்., 15 க்குள் முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. 
  • மேல்நிலை வகுப்புகளுக்கான பாடத்திட்டத்தை மாற்றி அமைக்கும் பணி தொடங்கியுள்ளதாக, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
  • முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தால் காலியாக உள்ள சென்னை ஆர்.கே நகர் தொகுதிக்கு  ஏப்ரல் 12-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
  • Annamalai University - DDE - December -2016 Examination Results Published..click...
  • 10 ரூபாய் நோட்டுகளில் தற்போது இருக்கும் பாதுகாப்பு வசதிகளுடன், கூடுதல் அம்சங்களையும் சேர்த்து விரைவில் புதிய நோட்டுகள் அறிமுகம் செய்யப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்து உள்ளது. மகாத்மா காந்தி-2005 வரிசையிலான இந்த நோட்டுகளில் இரு வரிசை எண் பகுதியிலும் ஆங்கில எழுத்து ‘எல்’ சேர்க்கப்படும். அச்சிடப்படும் ஆண்டான 2017, ரூபாய் நோட்டின் பின்பகுதியில் பொறிக்கப்படும்.
  • காவலர், சிறைக்காவலர், தீயணைப்பவர் எழுத்துத்தேர்வுக்கு சென்னை கிண்டியில் உள்ள மாநில தொழில் மற்றும் செயல் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளன. இத்தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள வர்கள் தங்கள் கல்வி, சாதி, வயது சான்றிதழ்களின் நகல்கள், வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அடையாள அட்டை ஆகியவற்றுடன் கிண்டி ஒருங்கிணைந்த வேலை வாய்ப்பு அலுவலகத்தில் வளாகத்தில் இயங்கும் தொழில் மற்றும் செயல் வேலைவாய்ப்பு அலுவலகத்தை இன்று காலை 11 மணிக்கு நேரில் அணுகுமாறு அந்த அலுவலகத்தின் துணை இயக்குநர் ஜி.சத்யபாமா கேட்டுக்கொண்டுள்ளார். 
  • சி.பி.எஸ்.இ. 10-வது மற்றும் 12-வது வகுப்பு தேர்வுகள் இன்று (வியாழக்கிழமை) தொடங்குகின்றன. 10-வது வகுப்பு தேர்வு தொழில்நுட்ப தேர்வுடன் இன்று தொடங்குகிறது. இந்த தேர்வை 3 ஆயிரத்து 974 மையங்களில் 16 லட்சத்து 67 ஆயிரத்து 573 பேர் எழுதுகிறார்கள். 12-வது வகுப்பு தேர்வை 3 ஆயிரத்து 503 மையங்களில் 10 லட்சத்து 98 ஆயிரத்து 420 மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள். 12-ம் வகுப்பு தேர்வு ஆங்கில விருப்ப தேர்வுடன் இன்று தொடங்குகிறது. தமிழ்நாட்டில் 10-வது வகுப்பு தேர்வை 40 ஆயிரத்து 300 பேர்களும், 12-வது வகுப்புதேர்வை 15 ஆயிரத்து 450 பேர்களும் எழுதுகிறார்கள். 10-வது வகுப்பு தேர்வு ஏப்ரல் 10-ந் தேதியும், 12-வது வகுப்பு தேர்வு ஏப்ரல் 29-ந் தேதியும் முடிவடை கின்றன.
  • தமிழ் 1-வது தாள் தேர்வு எழுதி முடிந்ததும் வெளியே வந்த மாணவர்கள் கூறுகையில், ‘தேர்வு மிக எளிதாக இருந்தது’ என்றனர். ‘தேர்வில் வந்த கேள்விகளில் பெரும்பாலானவை பாடத்தின் பின் பக்கத்தில் கேட்கப்பட்டவை ஆகும்’ என்று தெரிவித்தனர்.
  • எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. 10 லட்சத்து 38 ஆயிரம் மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினார்கள்.
  • தமிழக அரசின் நிதித்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் சமீபத்தில்தான் இந்த துறையின் அமைச்சரானார். அவர் தாக்கல் செய்யும் முதல் பட்ஜெட் இதுதான். சட்டசபையில் 16-ந் தேதி பட்ஜெட்டை தாக்கல் செய்துவிட்டு அவர் உரையாற்றுவார்.
  • தமிழகம் முழுவதும் முதற்கட்ட போலியோ சொட்டு மருந்து முகாம் ஏப்ரல் 2-ஆம் தேதி நடைபெற உள்ளது.இதன் மூலம் தமிழகத்தில் 70 லட்சத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • நாகை மாவட்டத்துக்கு மார்ச் 10-தேதி உள்ளூர் விடுமுறை என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். நாகை மாவட்டத்தில் நாகூர் தர்காவில் கந்தூரி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தன கூடு விழாவை முன்னிட்டு இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
  • 👉 2014 -2015 கணக்கீட்டுத் தாள் ஏப்ரல் மாதத்தில் தான் வெளிவர வாய்ப்பு. 👉ஊராட்சி / நகராட்சி ஆசிரியர்களின் 2014 -15 ஆம்ஆண்டு பொது வருங்கால வைப்புநிதி கணக்கீட்டு தாளை ஏப்ரல் மாதம் தான் பதிவிறக்கம் செய்ய வாய்ப்பு. 👉 நகராட்சி /மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி / மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களின் GPF கணக்காணது AG ஆல் ஏற்கனவே பராமரிக்கப் பட்டு வருவதால் அவர்களின் எண்ணை தனியாக வகைப்படுத்த வேண்டியுள்ளதால் சம்பந்தப்பட்ட கல்வி அலுவலகங்களில் விபரம் கோரப் பட்டுள்ளது. 🌷 தற்போது மேல்நிலைத் தேர்வுகள் நடைபெறுவதால் ஏப்ரல் மாதம் தான் விபரம் கிடைக்கப் பெறும். 🌲அதன் பின்பே NIC இல் பதிவேற்றம் செய்யப்படும்.அதன் பின்பே பதிவிறக்கம் செய்ய இயலும்..
  • தமிழக பட்ஜெட் மார்ச் 23-ம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழக சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் கடந்த ஜனவரி 23-ம் தேதி தொடங்கியது. அன்று ஆளுநர் வித்யாசாகர் ராவ் உரை நிகழ்த்தினார். அதைத் தொடர்ந்து கவர்னர் உரை மீதான விவாதம் பிப்ரவரி 1-ம்தேதி வரை நடைபெற்றது.முதல்வர் பழனிசாமி தலைமையிலான அரசு முதல் முறையாக பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளது. மேலும் நிதி அமைச்சர் ஜெயக்குமார் முதல் முறையாக பட்ஜெட் தாக்கல் செய்கிறார்.  ஆனாலும் இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு சட்டப் பேரவை செயலகத்தில் இருந்து ஓரிரு நாளில் வெளியாகும்.
  • பிளஸ்-2 தேர்வு கடந்த 2-ந்தேதி முதல் நடைபெற்றுவருகிறது. நேற்று ஆங்கிலம் முதல்தாள் பரீட்சை நடைபெற்றது. தேர்வு எளிதாக இருந்ததாக மாணவ-மாணவிகள் தெரிவித்தனர். அவர்கள் கூறுகையில், “பாடத்தின் பின் பகுதியில் கொடுக்கப்பட்ட கேள்விகள்தான் பெரும்பாலும் வந்திருந்தன. அதனால் மிக எளிதாக இருந்தது. பாடத்திட்டத்திற்கு வெளியே இருந்து எதுவும் கேட்கப்படவில்லை” என்றனர். இந்த தேர்வில் காப்பி அடித்ததாக அரியலூர், பெரம்பலூர், திருச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவர், விழுப்புரம் மாவட்டத்தில் 5 பேர் என மொத்தம் 9 பேர் பிடிபட்டனர். இவர்களில் 5 பேர் பள்ளிக்கூட மாணவர்கள். 4 பேர் தனித்தேர்வர்கள்.
  • பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரமாக்குவது குறித்து, தற்போதைய நிதிநிலைக்கு ஏற்ப நடவடிக்கை எடுக்க முதல்வரிடம் பேசப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். 
  • ஆசிரியர் பணி நியமனத்தில் வெயிட்டேஜ் முறையை ரத்து செய்வது குறித்து பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. தமிழ கத்தில் காலியாக உள்ள 3000 ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். 
  • மருத்துவ நுழைவுத் தேர்வை ரத்து செய்வது தொடர்பாக ஏற்கெனவே சட்டம் இயற்றி குடியரசுத் தலைவரின் ஒப்பு தலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அது தொடர்பாக பிரதமரிடம் தமிழக முதல்வர் பேசியிருக்கிறார். மருத்துவ நுழைவுத் தேர்வை ரத்து செய்வது குறித்து பிரதமர் நரேந்திர மோடிதான் முடிவு செய்ய வேண்டும். மருத்துவ நுழைவுத் தேர்வு பிரச்சினையானது இந்திய அளவிலான பிரச்சினை. நீட் தேர்வை எதிர்கொள்ள தமிழக மாணவர்கள் தயாராக உள்ளனர்.
  • 12ஆம் வகுப்பு மாணவர்களின் கல்வித்தரம் மற்றும் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க அம்ம கல்வியகம் தொடங்கப்பட்டுள்ளதாக ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். மாணவர்கள் நுழைவுத்தேர்வுகளை எதிர்கொள்ள சிறந்த பயிற்சியாளர்கள் மூலம் அம்மா கல்வியகம் இணையதளத்தில் பயிற்சியளிக்கப்படும் என்றும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவத்தார். அம்மா கல்வியகத்தின் இணையதள முகவரி www.ammakalviyagam.in ஆகும்.
  • ‘நீட்’ தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் முடிவடைந்தது. நாடு முழுவதும் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் ‘நீட்’ தேர் வுக்கு விண்ணப்பித்திருப்பதாக கூறப்படுகிறது. 
  • நாடுமுழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகள், நிகர்நிலைப் பல் கலைக்கழகங்களில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பு களுக்கான மாணவர் சேர்க்கை தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (‘நீட்’ - NEET) மூலமாக நடத்தப்படுகிறது. ‘நீட்’ தேர்வுக்கு மாணவர்கள் www.cbseneet.nic.in என்ற இணையதளத்தில் சென்று ஜனவரி 31-ம் தேதி முதல் மார்ச் 1-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) தெரிவித் திருந்தது. அதன்படி ‘நீட்’ தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் நேற்றுடன் முடிவடைந்தது. 
  • இதுதொடர்பாக சிபிஎஸ்இ அதி காரிகளிடம் கேட்டபோது, “கடந்த ஆண்டு ‘நீட்’ தேர்வுக்கு 8 லட்சத்து 2 ஆயிரத்து 594 பேர் விண் ணப்பித்திருந்தனர். 
  • இந்த ஆண்டு வரும் மே 7-ல் நாடு முழுவதும் 1,500 இடங்களில் நடைபெறும் ‘நீட்’ தேர்வுக்கு 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண் ணப்பித்திருப்பார்கள் என்று எதிர் பார்க்கப்படுகிறது. தமிழ், ஆங் கிலம், இந்தி உள்ளிட்ட 9 மொழிகளில் தேர்வு நடைபெறு கிறது” என்றார். 
  • பிளஸ் 2 தேர்வு பாடதிட்டங்களை மாற்றுவது குறித்து ஒரு வாரத்தில் முடிவு செய்யப்படும். 
  • தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வழிகாட்டுதல் மையங்கள் செயல்படுத்தப்படும். தனியாருடன் இணைந்து மருத்துவம், பொறியியல் படிப்பு பயிற்சி செயல்படுத்தப்படும்.
  • பிஎப் கணக்கில் இருக்கும் ஓய்வூதிய தொகை முழுவதையும் ஆதார் எண் இல்லாமல் எடுத்துக்கொள்ள முடியும் என பிஎப் அமைப்பின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 
  • 10 ஆண்டுகளுக்குள் பணி அனுபவம் இருப்பவர்கள், படிவம் 10சி-யை பூர்த்தி செய்து, பிஎப் கணக்கில் இருக்கும் ஓய்வூதி யத்தை முழுமையாக எடுத்துக் கொள்ளலாம். ஆனால் ஓய்வூதிய தொகையை நிர்ணயம் செய்யும் படிவம் 10டி-யை பூர்த்தி செய்யும் பட்சத்தில் அதற்கு ஆதார் எண் அவசியம் என மூத்த அதிகாரி கூறினார். ஆதார் எண்ணை கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் என கடந்த ஜனவரி மாதம் பிஎப் அமைப்பு கூறியிருந்தது. சில நாட்களுக்கு முன்பு ஆதார் எண்ணை சமர்ப்பிக்கவேண்டிய கடைசி தேதியை மார்ச் 31 வரை நீட்டித்து உத்தரவிட்டிருந்தது. 

1 comment:

Mmathesh Waran said...

In this site used all education related information collecting in site

TRB