செய்தித் துளிகள் 2 • வெள்ளத்தில் சேதமான சான்றிதழ்களுக்கு பதில், புதிய ஆசிரியர் தகுதி தேர்வு சான்றிதழ்களை, பிப்., 5ம் தேதி வரை பதிவிறக்கம் செய்யலாம் என, தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியமானடி.ஆர்.பி., அறிவித்துஉள்ளது.வெள்ளம் பாதித்த பகுதிகளில், மாற்று சான்றிதழ் வழங்கும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. ஆசிரியர் தகுதித் தேர்வு சான்றிதழ்களை இழந்தோருக்கு டி.ஆர்.பி., புதிய வசதியை ஏற்படுத்தியுள்ளது. இதன்படி, வெள்ளத்தில் சான்றிதழ் இழந்தோர், டி.ஆர்.பி.,யின், http:/trb.tn.nic.in/ இணையதளத்தில், பிப்.,5ம் தேதி வரை, சான்றிதழை பதிவிறக்கம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 • பள்ளிகளிலும், பள்ளி அருகிலும் பாரம்பரியமான தின்பண்டங்களையே விற்க வேண்டும். உடல் எடையை அதிகரிக்கும், 'ஸ்நாக்ஸ்' வகைகளை தவிர்க்க, பள்ளி நிர்வாகங்கள்  நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு உத்தர விடப்பட்டுள்ளது.
 • தனியார் நிறுவனங்களிடம் இருந்து அரசு அலுவலகங்களுக்கு இலவச இணையதள இணைப்புகளைப் பெறுவது தொடர்பான மனு மீது ஒரு மாதத்துக்குள் முடிவெடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம்  உத்தரவிட்டது.
 • தொடக்க நடுநிலைப்பள்ளிகளுக்கும் இரண்டாம் பருவத்தேர்வு ஜன -11 அன்றே தொடங்குஇயக்குனர் அறிவிப்பு.
 • உயர்நிலைப்பள்ளி தலைமைஆசிரியர் panel கேட்கப்பட்ட கடிதத்தில் 2002-2003ல் TRB மூலம் தேர்தேடுக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு பதிலாக 2001-2002ல் தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்கள் என கடிதத்தில் தவறுதலாகஉள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியம் முலம் 2002-2003ல் தேர்வு செய்யப்பட்டு 31.12.2002 வரை நியமனம் பெற்ற ஆசிரியர்களும் விண்ணப்பிக்கலாம் என்பது அறியப்பட்டுள்ளது. திருத்திய மறு கடிதம் விரைவில் வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 • விஐடி பல்கலைகழகத்தின் வேலூர் மற்றும் சென்னை வளாகங்களில் பி.டெக் பொறியியல் பட்டப்படிப்பில் மாணவர் சேர்க்கை நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்ப விநியோகம் வேலூர் தலைமை தபால் நிலையத்தில் தொடங்கியுள்ளது. 
 • G.O Ms.No.1 Dt: January 04, 2016 | மிகை ஊதியம் - சிறப்பு மிகை ஊதியம் - 2014-2015 ஆம் ஆண்டு - அனுமதி - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன.
 • G.O No. 2 Dt: January 04, 2016 | பொங்கல் பண்டிகை, 2016 - ஓய்வூதியதாரர்கள் / குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்குதல் - ஆணைகள் - வெளியிடப்படுகிறது.
 • மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ், தன்னாட்சி நிறுவனமாக மும்பையில் செயல்படும், நேஷ்னல் இன்ஸ்டிடியூட் ஆப் இன்டஸ்டிரியல் இன்ஜினியரிங் (என்.ஐ.டி.ஐ.இ.,) இந்த கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
 • பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகளை எழுதும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் வினா வங்கி, தீர்வுப் புத்தகங்கள் தயார் செய்யப்பட்டு தமிழ்நாடு மாநிலப் பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது போல நிகழாண்டுக்கான வினா வங்கி, தீர்வுப் புத்தகங்கள் வியாழக்கிழமை (ஜன.7) விற்பனை செய்யப்பட உள்ளன. 
 • ''திருவள்ளுவர் பிறந்த நாளை, தேசிய விடுமுறை தினமாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும்,'' என, தருண்விஜய் எம்.பி., கூறினார்
 • எழுத்தர், துணைநிலை அலுவலர்கள் பணியிட நேர்முகத் தேர்வை ரத்து செய்யும்படி பொதுத் துறை வங்கிகளுக்கு நிதியமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் வெளியிட்ட அறிவிப்பில், மத்திய அரசுத் துறைகளில் 8 ஆம் வகுப்பு, 10 ஆம் வகுப்பு நிலையிலான பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வு ஜனவரி 1 ஆம் தேதி முதல் ரத்து செய்யப்படுவதாக தெரிவித்திருந்தார். இந்நிலையில், நாடு முழுவதும் உள்ள 27 பொதுத்துறை வங்கிகளுக்கு மத்திய நிதியமைச்சகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது
 • பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகள், மார்ச் மாதம் நடக்க உள்ள நிலையில், அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை, மாணவர்கள் எதிர்பார்த்துள்ளனர். மழை, வெள்ள பாதிப்பு காரணமாக, பாடம் நடத்துவதில் பாதிப்பு ஏற்பட்டது. ஆனாலும், சட்டசபைக்கு தேர்தல் வருவதால், பொதுத் தேர்வை தாமதப்படுத்த முடியாமல், தேர்வுத் துறை குழப்பம் அடைந்தது. இந்நிலையில், மார்ச் முதல் வாரத்தில், பிளஸ் 2 தேர்வை துவக்க அனுமதி கேட்டு, தேர்வுத் துறை சார்பில், முதல்வர் அலுவலகத்துக்கு கோப்பு அனுப்பப்பட்டுள்ளது. இன்று அல்லது நாளைக்குள் ஒப்புதல் கிடைத்து, அதிகாரப்பூர்வமாக தேர்வு தேதி அறிவிக்க வாய்ப்புள்ளது.
 • பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு, தமிழக அரசு போனஸ் அறிவித்துள்ளது. இதில், ஆசிரியர் மற்றும் அரசு அலுவலர்கள், 12 லட்சம் பேர் பயனடைவர்; அதற்காக, 326 கோடி ரூபாய் செலவாகும் என, அரசு அறிவித்துள்ளது. ஆனால், இந்த பட்டியலில், அரசு பள்ளிகளில் பணி புரியும், 16 ஆயிரத்து, 500 பகுதி நேர சிறப்பாசிரியர்கள் இடம் பெறவில்லை; 
 • எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் சிறுபான்மையின மொழிகளை தாய்மொழியாக கொண்ட மாணவர்களும் தமிழ் மொழியை முதல் பாடமாக கொண்டு எழுத வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. 
 • மேலாண்மை படிப்புக்கான, 'சிமேட்' தேர்வுக்கான ஹால் டிக்கெட் இன்று வெளியாகிறது.மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் மேலாண்மை படிப்புகளில் சேர, சிமேட் எனப்படும், பொது மேலாண்மை நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இதை, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் நடத்துகிறது. வரும், 17ம் தேதி, இந்த தேர்வு, நாடு முழுவதும் நடத்தப்படுகிறது. தமிழகத்தில் சென்னை, கோவை உட்பட, 62 இடங்களில் நடக்க உள்ளது; இதற்கான ஹால் டிக்கெட்டை இன்று முதல் பதிவிறக்கம் செய்யலாம்.
 • 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்புக்கான சி.பி.எஸ்.இ., தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு தேர்வு மார்ச்1ம் தேதி துவங்கி மார்ச் 28ம் தேதி முடிவடைகிறது. சி.பி.எஸ்.இ., 12ம் வகுப்பு தேர்வு மார்ச் 1ம் தேதி துவங்கி ஏப்ரல் 22ம் தேதி வரை நடைபெறுகிறது.Date sheet for Main Examination 2016 Class XII   |   Class X 
 • மருத்துவ விடுப்பு விதிகள் பற்றிய தொகுப்பு. 0 - 2 வருடம் = இல்லை 2 - 5 வருடம் = 90 நாட்கள் 5 - 10 வருடம் =180 நாட்கள் 10 - 15 வருடம் =270 நாட்கள் 15 - 20 வருடம் =360 நாட்கள் 20 வருடத்திற்கு மேல் = 540 நாட்கள்.
 • பிளஸ் 2 தனித்தேர்வு எழுதியவர்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் புதன்கிழமை முதல் விநியோகம் செய்யப்படுகிறது. இவர்கள் தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துகொண்டிருந்தனர். இந்த நிலையில், இவர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ்களை தேர்வு எழுதிய மையங்களில் டிசம்பர் 23 முதல் ஜனவரி 8 வரை விநியோகம் செய்யப்பட உள்ளது. இந்த நாளுக்குப் பின்னர் அரசுத் தேர்வுகள் மண்டலத் துணை இயக்குநர் அலுவலகங்களில் பெறலாம்
 • புதுச்சேரி கூட்டுறவு புத்தக சங்கம் சார்பில், 19-வது தேசிய புத்தகக் கண்காட்சி, கடந்த 18-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. வரும் 28-ம் தேதி வரை நடைபெறும் இக்கண்காட்சியில், பல்வேறு மாநிலங்களில் இருந்து 90-க்கும் மேற்பட்ட படைப்பாளர்கள் மற்றும் வெளியீட்டாளர்களின் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன. தமிழ், ஆங்கிலம், பிரெஞ்ச், இந்தி உள்ளிட்ட பன்மொழி நூல்கள், நாவல்கள், காவியங்கள், சிறுகதைகள் குறுந்தகடுகள் ஆகியவை 10 சதவீத சிறப்பு தள்ளுபடியில் விற்பனை செய்யப்படுகின்றன. 
 • 'ஜனவரியில் வீடுதோறும் 'ஆதார்' விபரங்களை சேகரிக்கும் பணியில் 70 ஆயிரம் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுவர்,'' என மக்கள் தொகை கணக்கெடுப்பு செயலாக்க துறை இணை இயக்குனர் கிருஷ்ணராவ் பேசினார்.
 • இனி எந்த ஆவணத்தையும் கையில் எடுத்துக் கொண்டு செல்ல வேண்டியது இல்லை, நகலும் தேவை இல்லை, இந்திய அரசு டிஜிலாக்கர் என்ற புதிய மின்பூட்டு ஒன்றை அறிமுகப்படுத்தி உள்ளது.ஆதார் அட்டை எண் உள்ள அனைவரும் www.digitallocker.gov.in என்ற தளத்திற்குள் சென்று,தங்களது கடவுச்சீட்டு, ஓட்டுநர் உரிமம், 10, 12 மற்றும் பட்டச் சான்றிதழ்கள், வருமானவரிக் கணக்கு அட்டை (பான் கார்டு) மின் கட்டண அட்டை போன்ற சான்றிதழ்களைப் பதிவுசெய்து கொள்ள வேண்டும்.அதன்பிறகு நீங்கள் ஏதேனும் ஒரு அரசுத்துறைக்கு விண்ணப்பித்தால். மேற்கண்ட சான்றிதழ்கள் எதையும் தாக்கல் செய்ய வேண்டியது இல்லை. பதிலாக உங்கள் ஆதார் அட்டை எண்ணை மட்டும் கொடுத்தால் போதும். அவர்கள் சரிபார்த்துக் கொள்வார்கள். இந்தத் திட்டம் ஏற்கனவே நடைமுறைக்கு வந்துவிட்டது.
 • மாணவர் சேர்க்கைக்கு நன்கொடை கட்டணம் வசூலிக்கும் இன்ஜி., கல்லுாரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும்' என, அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ., எச்சரித்துள்ளது. 
 • குருப் இரண்டிற்கான முதல்நிலைத் தேர்வு முடிவுகள் இறுதி கட்ட பணியில் இருக்கிறது. இன்னும் பத்து முதல் பதினைந்து நாட்களில் வெளியிடப்பட உள்ளது. எனவே மெயின் தேர்வு மார்ச் மாதம் அல்லது ஏப்ரல் மாதத்திலோ இருக்க வாய்ப்பு. குருப் நான்கிற்கான அறிவிக்கையும் விரைவில் வர இருக்கிறது. குருப் ஒன்று மெயின் தேர்வு முடிவுகள் இன்னும் தயாராகவில்லை.
 • நடக்கவிருக்கும் குருப்2A தேர்வுக்கு அறிவிக்கப்பட்டுள்ள பணி இடங்களில் 1000 பணியிடங்கள் கூடுதலாக சேர்க்கப்படும் , குருப்4 - 5000 பணியிடங்களுக்கான அறிவிப்பு மற்றும் குருப்2 முதல்நிலை தேர்வு முடிவும் கூடிய விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 • அரசு ஊழியர்களுக்கான துறைத் தேர்வுகள் வரும் செவ்வாய்க்கிழமை (டிச.22) தொடங்கி, 31-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 
 • வெள்ளத்தில் தொலைந்து போன மற்றும் சேதமான இலவச பஸ் பயண அட்டையை மாற்றி தர, அனைத்து பள்ளி ஆசிரியர்களுக்கும் உத்தரவிடப்பட்டு உள்ளது.
 • 01.01.2015 நிலவரப்படி 2015/16 ல் காலியாக உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்களுக்கு முன்னுரிமைப்பட்டியலில் உள்ள முதுகலை ஆசிரியர் மற்றும் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு1 முதல் 530 வரை உள்ள நபர்களுக்கு அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களாக ஏற்கனவே பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. இதில் மேலும் பல மேல்நிலைப்பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ள காரணத்தால் கூடுதலாக 80 முதுகலை ஆசிரியர் மற்றும் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு 591 முதல் 611 வரை மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. 
 • சென்னை உயர் நீதிமன்ற உத்தரவு படி புதிய அரசாணை வெளியீடு. அரசாணை எண் :99 நாள் : 21.09.2015.நீதி மன்ற உத்தரவு படி பொது மக்கள் அளிக்கும் மனுக்கள் மீது முப்பது தினங்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என புதிய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
 • TET தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத ஆயிரம் ஆசிரியர்கள் 2016 நவம்பர் மாதத்துக்குள் தேர்ச்சி பெற்றுவிட வேண்டும் என்று காலக்கெடுவிதிக்கப்பட்டுள்ளது.
 • உதவி பேராசிரியர் பணிக்கான சிஎஸ்ஐஆர் ‘நெட்’ தகுதித் தேர்வை சென்னையில் 11 ஆயிரம் பேர் எழுதினர்.கல்லூரிகள் மற்றும் பல் கலைக்கழகங்களில் அறிவியல், கணிதம் உள்ளிட்ட பாடப் பிரிவுகளில் உதவி பேராசிரியர் பணியில் சேருவதற்கு அறிவியல் மற்றும் தொழில்ஆராய்ச்சி கவுன்சில் (சிஎஸ்ஐஆர்) அமைப்பு நடத்தும் நெட் தகுதித் தேர்வில்தேர்ச்சி பெற வேண்டும். இந்த தேர்வு ஆண்டுக்கு இருமுறை (ஜுன், டிசம்பர்) நடத்தப்படுகிறது.
 • மத்திய பள்ளி கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்சி) அனைத்து பாட புத்தகங்களையும் இலவசமாக ஆன்லைனில் வெளியிட உள்ளதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார். 
 • 2015-2016-ம் கல்வி ஆண்டுக்கான பள்ளி நாள்காட்டியில் குறிப்பிட்டுள்ளபடி தமிழ்நாடு முழுவதும் அனைத்து பள்ளிகளுக்கும் 24-ந் தேதி முதல் ஜனவரி 1-ந் தேதி வரை விடுமுறை விடப்பட்டுள்ளது.
 • டிசம்பர் 24ம் தேதி மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு அரசு விடுமுறை வழங்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து அரசு அலுவலங்கள், பள்ளிகள் மற்றும் வங்கிகளுக்கு 24ந் தேதி முதல் 27ம் தேதி வரை 4 நாட்கள் தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளது.
 • மழை பாதிப்பை அடுத்து, தமிழகம் முழுவதும் பள்ளிகளில் அரையாண்டுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நலன் வழக்கு தொடரப்பட்டிருந்தது.இந்த மனுவை விசாரித்த நீதிபதி அரையாண்டு தேர்வை ரத்து செய்ய உத்தரவிடமுடியாது என்றும் சி.பி.எஸ்.இ பொதுத் தேர்வை ஒத்திவைக்க முடியது என்றும் உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
 • 2004 முதல் 2006 வரை தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களின் பணிக்காலத்தை முறையான பணிக்காலமாக அறிவிக்க வேண்டி சென்னை உயர்நீதி மன்ற மதுரைகிளையில் வழக்குகள் பதியப்பட்டுள்ளது.
 • 10ம் வகுப்பு & 12ம் வகுப்புக்கான அரையாண்டுத் தேர்வு அட்டவணை வெளியீடு.
 • 1 முதல் 9 வகுப்புகளுக்கு ஜனவரி 11 முதல் இரண்டாம் பருவத் தேர்வு நடைபெறும் என அறிவிப்பு.
 • மிலாது நபி விடுமுறை டிச23க்கு  பதில் டிசம்பர் 24 க்கு மாற்றம் தமிழக அரசு அறிவிப்பு.
 • தமிழக அரசு தேர்வு துறையின் புதிய இயக்குநராக, வசுந்தரா தேவி நியமிக்கப்பட்டுள்ளார்.
 • ஆசிரியர் தேர்வு வாரிய இணை இயக்குனராக இருந்த உமா, பதவி உயர்வு பெற்று, ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் ஆகியுள்ளார்.
 • இந்திய ஆயுள் காப்பீட்டு கழகம் (எல்.ஐ.சி.) காலியாக உள்ள 700 துணை நிர்வாக அதிகாரி (Assistant Administrative Officer (Generalist)) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 
 • எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு, தேசிய வருவாய் வழி படிப்பு உதவி தொகை தகுதித்தேர்வு ஜன.,23ல் நடக்கிறது.ஒன்பதாம் வகுப்பு முதல்பிளஸ் 2 வரை தேசிய வருவாய் வழி படிப்பு உதவித்தொகை திட்டத்தின் கீழ், மாணவர்களுக்கு மாதந்தோறும் 500 ரூபாயை மத்திய அரசு வழங்குகிறது. இத்திட்டத்தில் உதவி பெற, தகுதித் தேர்வு ஜன.,23ல் நடக்கிறது.
 • தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாணவ-மாணவர்கள் உயர்கல்வி பயில வழங்கப்படும் மத்திய அரசின் உதவித் தொகைத் திட்டத்தின் கீழ், தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நிலுவையான ரூ.1,549 கோடியே 76 லட்சத்தை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார். 
 • நாட்டிலுள்ள அனைத்து மொழிகளிலும் திருக்குறள் மொழி பெயர்க்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
 • நடப்பு கல்வியாண்டு, பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு பொது தேர்வுகளை, முன்கூட்டியே நடத்த, கல்வித் துறை அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.
 • ரூபாய் நோட்டுகளில் ஏதாவது எழுதப்பட்டிருந்தால், அல்லது கிறுக்கப்பட்டிந்தால் அவை 2016 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1 ஆம் தேதி முதல் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என்று வெளியாகி வரும் தகவல்களை ரிசர்வ் வங்கி திட்டவட்டமாக மறுத்துள்ளது.
 • மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 58 ஆக குறைக்கும் திட்டம் ஏதும் இல்லை; மத்திய அரசு.
 • அனைத்து வகையான வங்கிகணக்கு தொடங்குவதற்கும்'பான்' எண்கட்டாயமாக்கப்படுகிறது என மத்தியநிதி அமைச்சர் அருண்ஜெட்லி தெரிவித்துள்ளார். அனைத்து வகையான வங்கிகணக்கு தொடங்குவதற்கும்'பான்' எண்கட்டாயமாக்கப்படுகிறது.
 • அரசு பள்ளிகளில் வினியோகிக்க வழங்கிய அரசின் இலவச லேப்- டாப் பதுக்கப்படுவதாக எழுந்த தகவலால் கணக்கெடுக்க பள்ளிக்கல்வித்துறைஉத்தரவிட்டுள்ளது.
 • சென்னையில் கூடிய ஜாக்டோ உயர்மட்டக் குழு கூட்டத்தில் கனமழை பாதிப்பு காரணமாக டிசம்பரில் நடக்க வேண்டிய மறியல் போராட்டம் ஜனவரி 30,31 மற்றும் பிப்ரவரி 1 ஆகிய தேதிகளில் நடத்துவென ஒருமனதாக முடிவாற்றப்பட்டுள்ளது.
 • பள்ளிக்கல்வி - பெண்கல்வி - மாணவிகள் இடைநிற்றலைத் தவிர்க்கும் பொருட்டு ரூ.3000/- ஊக்கத் தொகை - ONLINE பதிவு செய்ய இயக்குநர் உத்தரவு.
 • மழை வெள்ள பாதிப்புக்கு பிறகு சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், கடலூர் ஆகிய 4 மாவட்டங்களில் கடந்த 14–ந் தேதி பள்ளிகள் தொடங்கியுள்ளன. வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மாணவர்கள் இயல்பு நிலைக்கு திரும்ப உளவியல் ‘கவுன்சிலிங்’ வழங்கப்படுகிறது. குறிப்பாக 10–ம் வகுப்பு, 12–ம் வகுப்பு படிக்கும் மாணவ–மாணவிகள் மன அழுத்தம், மன உளைச்சலில் இருந்து மீண்டு வர பள்ளிக்கல்வி துறை சார்பில் நடமாடும் உளவியல் ஆலோசனை குழுக்கள் மாணவர்களை தேர்வு பயத்தில் இருந்து மீட்க ஆலோசனைகளை வழங்கி வருகின்றன.
 • அடுத்தடுத்து தேர்வுகளை எதிர்கொள்வது எப்படி? தமிழக அரசு தெளிவான அறிவிப்பை வெளியிட கோரிக்கை.
 • வெள்ள நிவாரணத்திற்காக பணம் வசூலிக்க மாணவர்களை கட்டாயப்படுத்தக் கூடாது,'என, தலைமையாசிரியர்களுக்கு கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
 • பள்ளிகளில், அரையாண்டு தேர்வு நடத்தாமல், ஆண்டு இறுதித்தேர்வு மட்டும் நடத்த வேண்டும்' என, தமிழ்நாடு மாணவர் பெற்றோர் நலச்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
 • அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வுக்கான (ஏஐபிஎம்டி) அறிவிப்பை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) வெளியிட்டுள்ளது.
 • நெடுஞ்சாலைத் துறையில் காலியாகவுள்ள உதவிப் பொறியாளர் பணியிடங்களை நிரப்புவதற்காக வரும் 28-ஆம் தேதி முதல் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறவுள்ளது.
 • தனியார் பள்ளி மாணவர்கள் புத்தகங்களை இழந்திருந்தால், இணையதளம் மூலம் பதிவுசெய்து வீட்டு முகவரியிலேயே புத்தகங்களை பெறலாம் என தமிழ்நாடு பாடநூல் கழகம் தெரிவித்துள்ளது.
 • மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ் உள்ள, காது கேளாதோர் மற்றும் பார்வையற்றோர் அரசு சிறப்புப் பள்ளிகளில், இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் மற்றும் துணை விடுதி காப்பாளர் பணியிடங்களுக்கு, விண்ணப்பங்கள் அனுப்ப, கடைசி தேதி, 15ம் தேதி என, அறிவிக்கப்பட்டிருந்தது. இப்போது, 21ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.
 • தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை தேர்வு (NMMS)தேதி நீடிக்கப்பட்டுள்ளது.
 • TNPSC VAO | வி.ஏ.ஓ., தேர்வுக்கு விண்ணப்பிக்க, காலக்கெடு 31.12.2015 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
 • சிவில் சர்வீஸ் தேர்வுக்கு 'இ - அட்மிட் கார்டு'.
 • நடப்பு கல்வியாண்டில் அரையாண்டு தேர்வை நடத்தக்கூடாது: தலைமை நீதிபதியிடம், வக்கீல் மனு
 • கம்பைன்டு மெடிக்கல் சர்வீஸ் 2015-க்கான தேர்வு முடிவுகளை யுபிஎஸ்சி அதன் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.
 • கல்வியை வர்த்தகப் பொருளாக்கும் உலக வர்த்தக அமைப்பு உடன்பாட்டை இந்தியா நிராகரிக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
 • பள்ளிகளில் அரையாண்டுத் தேர்வுகள் ஜனவரி முதல் வாரத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கான விடுமுறை எப்போது விடப்படும் என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.
 • 'நாடு முழுவதும், பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவை, தினமும், ஒன்று அல்லது இரண்டு பெற்றோர் சுவைத்து, சோதித்து பார்ப்பதை கட்டாயமாக்க வேண்டும்' என, மத்திய அரசு கூறியுள்ளது.
 • புதிய பென்ஷன் திட்டத்தில் பணப்பலனுக்கான அரசாணை இல்லை என, முதல்வரின் தனிப்பிரிவு கைவிரித்தது. இதனால் புதிய பென்ஷன் திட்டத்தில் சேர்ந்த 4.20 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
 • தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு வழங்கும் இலவச லேப்டாப்களில், விரைவில் 'விண்டோஸ் 10 ஆப்ரேட்டிங் சிஸ்டம்' (ஓ.எஸ்.,) வசதி செய்யப்பட உள்ளது. இதன் தொடர்ச்சியாக 'லேப்டாப்'களில் தொடுதிரை வசதி ஏற்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.
 • பத்தாம் வகுப்பு தனித்தேர்வு எழுதிய தேர்வர்கள், அசல் மதிப்பெண் சான்றிதழ்களை டிச.,18 வரை தேர்வு மையங்களில் பெறலாம்.
 • உங்கள் அன்புச் சகோதரியாகிய நான் எந்த நேரத்திலும் உங்களுடனேயே இருப்பேன்; கலங்காதீர்கள் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா உருக்கமான அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
 • வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு வரும் 21 ஆம் தேதி திருச்சியில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
 • டி.என்.பி.எஸ்.சி., குரூப்-2, வி.ஏ.ஓ., தேர்வு எழுதும் மாணவர்களிடம் வேலைவாங்கிதருவதாககூறி ஒரு சிலர் பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகபுகார் எழுந்துள்ளது.
 • பள்ளிக்கு முன்பாக சுகாதாரமற்ற முறையில் விற்கப்படும் உணவு பொருட்களை மாணவர்கள் வாங்கி உண்ணக்கூடாது என ஆசிரியர்கள் அறிவுறுத்த வேண்டும் - பள்ளிக்கல்வி இயக்குநர்
 • தனியார் கல்லூரிகளில் பணிபுரியும் விரிவுரையாளர் இன்னும் 5 ஆண்டுகளுக்குள் UGC நிர்ணயித்துள்ள கல்விதகுதியை பெற்றுக் கொள்ள வேண்டும் .இல்லையெனில் 5 வருடத்திற்கு பிறகு தாங்களாகவே வெளியேற சம்மதிக்கிறோம் என தனியார் கல்லூரயில் கையெழுத்து வாங்குகிறார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.
 • தமிழகத்தில் 10, 12-ஆம் வகுப்பு (பிளஸ் 2) தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு இனி சனிக்கிழமைதோறும் அரசுப் பள்ளிகள் செயல்படும். அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் இது தொடர்பான அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மற்ற வகுப்புகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு சனிக்கிழமைகளில் பள்ளி நடத்துவது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்றும் ஓரிரு நாள்களில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் அதிகாரிகள் கூறினர்.
 • வெள்ளத்தால் சீருடைகளை இழந்த 31 ஆயிரம் மாணவர்களுக்கு புதிய சீருடைகள் அனுப்பப்பட்டுள்ளன என சமூக நலத் துறையினர் தெரிவித்தனர்.
 • தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியின (எஸ்சி, எஸ்டி) பிரிவைச் சேர்ந்த அரசு ஊழியர்களின் பதவி உயர்வு தொடர்பாக ஓராண்டுக்கு முன்னர் அளிக்கப்பட்ட தீர்ப்பில் பிழை உள்ளதை உச்ச நீதிமன்றம் ஒப்புக் கொண்டுள்ளது. "எஸ்சி, எஸ்டி பிரிவைச் சேர்ந்த அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்விலும் இடஒதுக்கீடு வழங்குவதை அரசியல் சாசனம் அனுமதிக்கிறது. ஆனால், இது தொடர்பாக அரசுக்கு நீதிமன்றங்கள் உத்தரவிட முடியாது' என்று உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி அளித்த தீர்ப்பு ஒன்றில் தெரிவித்திருந்தது. எனினும், இந்தத் தீர்ப்பில் ஒரு பிழை இருப்பதாகவும், அதை சரிசெய்யுமாறும் கோரி சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியா உள்பட பல்வேறு வங்கிகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் மீதான விசாரணை, உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஜெ.செலமேஸ்வர் மற்றும் ஏ.கே.சிக்ரி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்தகி ஆஜராகி வாதிட்டார். அவர் கூறியதாவது: வங்கிகளில் குரூப்-ஏ பணியிடங்களில் மாதம் ஒன்றுக்கு ரூ.5,700 வரை ஊதியம் பெறும் எஸ்சி, எஸ்டி பிரிவைச் சேர்ந்த ஊழியர்களுக்கு பதவி உயர்விலும் இடஒதுக்கீடு பெற முடியும் என்று உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் ஒரு பத்தியில் கூறப்பட்டுள்ளது. எனினும், அதற்கு அடுத்த பத்தியில் அதற்கு முரணான வாசகம் இடம்பெற்றுள்ளது. அதாவது, "குரூப்-ஏ பணியிடங்களில் மாதம் ஒன்றுக்கு ரூ.5,700 வரை ஊதியம் பெறும் எஸ்சி, எஸ்டி பிரிவைச் சேர்ந்த ஊழியர்களுக்கு பதவி உயர்வில் இடஒதுக்கீடு கிடையாது; சலுகைகள் மட்டுமே உண்டு' என்று கூறப்பட்டுள்ளது. தீர்ப்பைச் செயல்படுத்துவது தொடர்பான உத்தரவைக் கொண்டிருக்க வேண்டிய இந்தப் பத்தியில் இவ்வாறு தவறான வாசகம் உள்ளது. இந்த வாசகத்தை நீக்க நீதிபதிகள் உத்தரவிட வேண்டும் என்று ரோத்தகி வாதிட்டார். இந்நிலையில், மறு ஆய்வு மனுக்கள் மீது உச்ச நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை விசாரணை நடைபெற்றது. அப்போது, அட்டர்னி ஜெனரலின் வாதத்தை ஏற்ற நீதிபதிகள், கடந்த ஆண்டு அளித்த தீர்ப்பில் பிழை இருப்பதை ஒப்புக் கொண்டனர். தீர்ப்பில் பிழையான வாசகம் அடங்கிய சம்பந்தப்பட்ட பத்தியை நீக்குமாறும் உத்தரவிட்டனர். மேலும், இந்தப் பிழை காரணமாக எஸ்சி, எஸ்டி பிரிவைச் சேர்ந்த ஊழியர்களுக்கு பதவி உயர்வு மறுக்கப்பட்டிருந்தால் அவர்கள் உச்ச நீதிமன்றத்தை நாடி நியாயம் பெறலாம் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
 • மழை, வெள்ளத்தால் கல்விச் சான்றிதழ்களை இழந்தவர்களுக்கான சிறப்பு முகாம்கள் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் மாவட்டங்களில் 132 இடங்களில் திங்கள்கிழமை தொடங்கின. இவற்றில் விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பவர்களுக்கு ஒரு வாரத்தில் சான்றிதழ் நகல்கள் அளிக்கப்பட உள்ளன.
 • உயர்நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, வெள்ளப் பாதிப்புக்கு ஆளான சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள 148 பொறியியல் கல்லூரிகளில் அனைத்து பருவத் தேர்வுகளையும் அண்ணா பல்கலைக்கழகம் ஒத்திவைத்துள்ளது. மேலும், தேர்வுகள் டிசம்பர் 28 முதல் தொடங்கி நடத்தப்படும் என்றும் அறிவித்துள்ளது.
 • FIND TEACHER POST.COM | தனியார் பள்ளிகளில் ஆசிரியர் பணி பெற பதிவு செய்யுங்கள் அல்லது 08067335589 என்ற எண்ணுக்கு MISSED CALL கொடுங்கள்.
 • கனமழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மாணவர்களுக்கு மாற்று கல்விச்சான்றிதழ்கள் வழங்க டிசம்பர் 14 முதல் அனைத்து மேல்நிலைப் பள்ளிகளிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் அறிவித்துள்ளார்.