TRB

Thursday, 12 December 2019

TNPSC - DEPARTMENTAL TESTS, - POSTPONEMENT OF DATES

செய்தி வெளியீடு தமிழ் நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் துறைத் தேர்வுகள் – டிசம்பர் 2019 22.12.2019 முதல் 30.12.2019 வரை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த டிசம்பர் 2019ஆம் ஆண்டிற்கான துறைத் தேர்வுகள் உள்ளாட்சித் தேர்தலின் காரணமாக இத்தேர்வுகள் 05.01.2020 முதல் 12.01.2020 வரை புதுடில்லி உட்பட 33 தேர்வு மைய’ங்களில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்படுகிறது.  விண்ணப்பதாரர்கள் தங்களின் தனித்துவ விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை குறிப்பிட்டு தங்களது நுழைவுச் சீட்டினை 27.12.2019 முதல் 12.01..2020 வரை தேர்வாணைய இணையதளம் www.tnpsc.gov.in ல் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.   தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர்
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Wednesday, 11 December 2019

பி.எட் முடித்த பொறியியல் பட்டதாரிகள் ‘டெட்’ தேர்வு எழுதி பள்ளி ஆசிரியராகலாம்

இளநிலை பொறியியல் பட்டம் பெற்று பிஎட் தேர்ச்சி பெற்றவர் கள் ‘டெட்’ தேர்வு எழுதி பள்ளி களில் கணித ஆசிரியராகப் பணிபுரியலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கலை, அறிவியல் படிப்புகளைப் போல பொறியியல் பட்டம் பெற்ற மாணவர்களும் பி.எட் படிக்க 2015-16-ம் ஆண்டு முதல் அனுமதி வழங்கப்பட்டது. இதற்காக மொத்தமுள்ள பி.எட் இடங்களில் பொறியியல் பட்டதாரி களுக்கு 20 சதவீத இடங்கள் ஒதுக் கப்பட்டன. அதன்படி பி.இ, பி.டெக் பட்டதாரிகள் இயற்பியல், வேதியியல், கணினி அறிவியல் மற்றும் கணிதம் ஆகிய பாடப் பிரிவுகளின்கீழ் பி.எட் படிப்புகளில் சேர்ந்து படித்து வருகின்றனர்.

இதற்கிடையே இலவச கட்டாயக் கல்வி உரிமை சட்டத் தின்படி மத்திய, மாநில அரசுகள் நடத்தும் ஆசிரியர் தகுதித் தேர்வில் (‘டெட்‘) தேர்ச்சி பெற்றால் மட்டுமே அனைத்துவிதப் பள்ளி களிலும் ஆசிரியராகப் பணிபுரிய முடியும்.

இந்நிலையில், கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற ‘டெட்’ தேர்வின் போது பொறியியல் முடித்து பி.எட் படித்தவர்கள் தேர்வு எழுத அனு மதிக்கப்படாததால், அவர்கள் ஆசிரியர் பணிக்கு செல்ல முடி யாத நிலை ஏற்பட்டது.

இதனால் பி.எட் படிப்பு களில் சேர பொறியியல் பட்டதாரி கள் ஆர்வம் காட்டவில்லை. இதைத் தொடர்ந்து இடஒதுக்கீடு 10 சதவீதமாகக் குறைக்கப்பட்டது.

இந்த விவகாரம் தமிழக அரசின் கவனத்து கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து இளநிலை பொறியியல் பட்டம் பெற்று பி.எட் முடித்தவர்கள் ‘டெட்’ தேர்வு எழுத உயர்கல்வித் துறை தற்போது அனுமதி அளித்துள்ளது. அதன்படி பி.இ படிப்பில் எந்த பாடப்பிரிவை தேர்ந்தெடுத்து படித்து இருந்தாலும் அவர்கள் பி.எட் முடித்து பின்னர் ‘டெட்’ தேர்வை எழுதி பள்ளிகளில் 6, 7, 8 ஆகிய வகுப்புகளுக்கு கணித ஆசிரிய ராகப் பணிபுரியலாம் என்று உயர்கல்வித் துறை முதன்மை செயலாளர் மங்கத் ராம் சர்மா வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

அதேநேரம் பி.எட் படிப்புகளில் கணினி அறிவியல், இயற்பியல், வேதியல் பாடங்களைத் தேர்வு செய்து படிக்கும் மாணவர்களின் நிலை குறித்து அரசாணையில் விளக்கம் தரப்படவில்லை.

இதனால் அந்த பாடப் பிரிவுகளில் பி.எட் படிப்பவர்களின் எதிர்காலம் தற்போது கேள்விக் குறியாகியுள்ளது. இந்த விவகாரத் தில் ஏற்பட்டுள்ள குழப்பத்தை சரிசெய்ய தமிழக அரசு உரிய அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று பட்டதாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Tuesday, 10 December 2019

அரசின் கல்வி தொலைக்காட்சி முன்னாள் ஒருங்கிணைப்பாளர் மீதான ஊழல் வழக்கை விசாரிக்க வேண்டும் மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

தமிழக அரசின் கல்வி தொலைக்காட்சி முன்னாள் ஒருங்கிணைப்பாளர் மீதான ஊழல் வழக்கை லஞ்ச ஒழிப்புத்துறை சூப்பிரண்டு விசாரிக்க வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

மதுரையைச் சேர்ந்த வக்கீல் அருண், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

கடந்த 10 ஆண்டுகளாக தமிழின் முக்கியத்துவத்தை பெற்றோர், மாணவர்களுக்கு எடுத்து சொல்லி, தமிழ் வழிக்கல்வியை பிரபலப்படுத்தும் நடவடிக்கைகளில் ஒரு டிரஸ்ட் மூலமாக ஈடுபட்டு வருகிறேன். தமிழக அரசு சார்பில் கல்வி தொலைக் காட்சி தொடங்கப்பட்டது. இந்த சேனலானது ஆசிரியர்கள், பெற்றோர், மாணவர்கள், பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த கல்வி தொலைக்காட்சி ஒருங்கிணைப்பாளராக அமலன் ஜெரோம் நியமிக்கப்பட்டார். கடந்த 2017-2018ம் கல்வி ஆண்டில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த, பல திட்டத்தை அரசு அறிமுகம் செய்தது.

இந்த திட்டத்தின்படி தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி மாணவர்களின் கற்றல் திறனை அதிகரிப்பதற்கான சி.டி. தயாரிப்பு பணியை அமலன் ஜெரோமின் மனைவி நடத்தி வரும் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது.

கற்றல் திறன் தொடர்பான வீடியோவை இந்த நிறுவனம் சமூக வலைதளங்களில் வெளியிட்டு பல கோடி ரூபாய் சம்பாதித்தது. இதுதொடர்பாக அமலன் ஜெரோம், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர் அறிவொளி ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.

எனவே ஊழல் வழக்கில் சிக்கியுள்ள அமலன்ஜெரோமை கல்வி தொலைக்காட்சிக்கு ஒருங்கிணைப்பாளராக நியமித்திருப்பது சட்டவிரோதம். எனவே அவரை ஒருங்கிணைப்பாளர் பணியில் இருந்து நீக்கம் செய்ய உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.


இந்த வழக்கு நீதிபதிகள் துரைசாமி, கிருஷ்ணவள்ளி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் சார்பில் வக்கீல்கள் நீலமேகம், முகமது ரஸ்வி ஆஜராகி, ’அமலன் ஜெரோம், ஏற்கனவே சேலம் மாவட்டம் கொளத்தூர் தாலுகா எஸ்.எஸ்.காட்டுவளவு பஞ்சாயத்து யூனியன் தொடக்கப்பள்ளி இடைநிலை ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார். இந்த பணிக்கு கடந்த 4 ஆண்டுகளாக செல்லாமல் உள்ளார்‘ என்று வாதாடினர்.

அப்போது அரசு வக்கீல் ஸ்ரீமதி ஆஜராகி, ’ஊழல் விவகாரம் காரணமாக தமிழக அரசின் கல்வி தொலைக்காட்சி ஒருங்கிணைப்பாளர் பொறுப்பில் இருந்து கடந்த 7-ந்தேதி அமலன் ஜெரோம் விடுவிக்கப்பட்டுள்ளார்‘ என்றார்.

பின்னர் அது தொடர்பான உத்தரவு நகலையும் நீதிபதிகளிடம் சமர்ப்பித்தார்.

இதனை பதிவு செய்த நீதிபதிகள், அமலன்ஜெரோம் மீதான ஊழல் வழக்கை லஞ்ச ஒழிப்புத்துறை சூப்பிரண்டு, துணை சூப்பிரண்டு ஆகியோர் சட்டத்துக்கு உட்பட்டு விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி, வழக்கை முடித்து வைத்தனர்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

திரும்ப வசூலிக்க பலவந்த நடவடிக்கை கூடாது கல்விக்கடன்களை தள்ளுபடி செய்யும் திட்டம் இல்லை நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

கல்விக்கடன்களை தள்ளுபடி செய்யும் திட்டம் இல்லை, அந்த கடன்களை திருப்பிச் செலுத்துமாறு பலவந்த நடவடிக்கை கூடாது என்று நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

நாடாளுமன்ற மக்களவையில் நேற்று மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் பதில் அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

கடந்த 2016-2017 கல்வி ஆண்டில் இருந்து 2019-ம் ஆண்டு மார்ச் மாதம் வரையிலான 3 ஆண்டுகளில், நிலுவையில் உள்ள கல்விக்கடன்களின் தொகை ரூ.67 ஆயிரத்து 685 கோடியே 59 லட்சத்தில் இருந்து ரூ.75 ஆயிரத்து 450 கோடியே 68 லட்சமாக அதிகரித்துள்ளது. இது, பொதுத்துறை வங்கிகள் அளித்த புள்ளிவிவரப்படி, கடந்த செப்டம்பர் மாத நிலவரம் ஆகும்.

இவற்றில் 90 சதவீதத்துக்கு மேற்பட்ட கணக்குகள், நிலையானவை ஆகும்.

கல்விக்கடன்களை திருப்பிச் செலுத்துமாறு வங்கிகள் அளித்த நிர்ப்பந்தத்தால், எந்த மாணவரும் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் இல்லை. கல்விக்கடன்களை திரும்ப வசூலிக்க பலவந்த நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என்று வங்கிகளுக்கு அறிவுறுத்தி இருக்கிறோம்.

அதே சமயத்தில், கல்விக்கடன்களை தள்ளுபடி செய்யும் திட்டம் எதுவும் அரசின் பரிசீலனையில் இல்லை.

வங்கிகள் அளித்த கல்விக்கடன்களையும், கிடைத்த வேலைவாய்ப்புகளையும் ஒப்பிட்டு பார்க்கக்கூடிய புள்ளிவிவரம் எதுவும் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வுகளுக்கு தனித்தேர்வர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்: அரசு தேர்வுத் துறை அறிவிப்பு

மார்ச் மாதம் நடைபெற உள்ள பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வுகளை எழுதவிரும்பும் தனித்தேர்வர்கள் டிசம்பர்11 முதல் 20-ம் தேதி வரை தேர்வுத்துறையின் சேவை மையங்களில் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுத் துறை அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக அரசு தேர்வுகள் இயக்குநர் சி.உஷாராணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் மார்ச் மாதம் நடைபெற உள்ளன. இத்தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்களிடமிருந்து ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஏற்கெனவே பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வை பழைய பாடத்திட்டத்தில் எழுதி தேர்ச்சி பெறாதவர்கள் வரும் மார்ச் மற்றும் ஜூன் பருவத்தில் நடைபெறும் பொதுத்தேர்வுகளை பழைய பாடத்திட்டத்திலேயே எழுதலாம். கடந்த ஆண்டு நேரடி தனித்தேர்வராக பிளஸ் 1 தேர்வெழுதி தேர்ச்சி பெறாத தேர்வர்கள் அனைவரும் தற்போது பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதுவதற்கும் பிளஸ் 1 தேர்வில் தேர்ச்சி பெறாத பாடங்களை மீண்டும் எழுதுவதற்கும் சேர்த்து விண்ணப்பிக்கலாம்.

தனித்தேர்வர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வசதியாக கல்வி மாவட்ட வாரியாக சேவை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் விவரங்களையும், ஆன்லைனில் விண்ணப்பம் பதிவு செய்வது, தகுதிகள் மற்றும் அறிவுரைகளையும் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம். மேலும், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகங்கள், மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகங்கள் மற்றும்அரசு தேர்வுத் துறை உதவி இயக்குநர் அலுவலகங்களிலும் விவரங்களை அறிந்துகொள்ளலாம். சேவை மையங்களில் டிசம்பர் 11 (புதன்) முதல் 20-ம்தேதி (வெள்ளி) வரை தினமும் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை விண்ணப்பத்தை ஆன்லைனில் பதிவுசெய்யலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கில் சிக்கிய கல்வி டி.வி. நிகழ்ச்சி தயாரிப்பாளர் நீக்கம் உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்

தமிழக அரசின் கல்வி டி.வி. நிகழ்ச்சி தயாரிப்பாளர் பொறுப்பில் இருந்து அமலன் ஜெரோம் விடுவிக்கப்பட்டு மீண்டும் ஆசிரியர் பணிக்குச் செல்ல உத்தரவிடப்பட்டிருப்பதாக உயர் நீதிமன்றத்தில் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

மதுரை வளர் நகரைச் சேர்ந்த ஆர்.அருண் உயர் நீதிமன்ற கிளை யில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: தமிழக அரசு சார்பில் கடந்த ஆகஸ்ட் 26-ம் தேதி கல்வி டி.வி. தொடங்கப்பட்டது. இந்த டி.வி.யின் நிகழ்ச்சி தயாரிப் பாளராக அமலன் ஜெரோம் நியமிக்கப்பட்டார்.

இவர், ஏற்கெனவே வேறொரு அரசு திட்டத்தில் மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்துவது தொடர்பாக தயாரிக்கப்பட்ட சிடியை அரசிடம் ஒப்படைக்கும் முன்பு சமூக வலைதளங்களில் வெளியிட்டதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக கடந்த ஜனவரி 29-ம் தேதி லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

ஊழல் வழக்கை எதிர்கொண்டு வரும் அமலன் ஜெரோமை கல்வி டி.வி. நிகழ்ச்சி தயாரிப்பாளராக நியமித்தது சட்டவிரோதம். எனவே, அமலன் ஜெரோமை பணி நீக்கம் செய்து, தகுதியான ஆசிரியரை கல்வி டி.வி. நிகழ்ச்சி தயாரிப்பாளராக நியமிக்க உத்தரவிட வேண் டும். இவ்வாறு மனுவில் கூறப் பட்டிருந்தது.

இந்த மனு, நீதிபதிகள் துரைசாமி, கிருஷ்ணவல்லி அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அரசு வழக்கறிஞர் மதி வாதிடும் போது, அமலன் ஜெரோம் மீது பல்வேறு புகார்கள் வந்துள் ளன. அவர் கல்வி டி.வி. நிகழ்ச்சிக்கு குந்தகம் விளைவித்திருப்பதாகவும் புகார்கள் வந்தன. இதனால் அவர் கல்வி டி.வி. நிகழ்ச்சி தயாரிப்பாளர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு ஆசிரியர் பணிக்குத் திரும்பச் செல்லுமாறு டிச.7-ம் தேதி உத்தர விடப்பட்டுள்ளது என்று கூறினார்.

இதையடுத்து, அமலன் ஜெரோம் மீதான வழக்கு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறை எஸ்பி மற்றும் டிஎஸ்பி சட்டத்துக்கு உட்பட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

சிபிஎஸ்இ-யில் பிளஸ்-1 முடித்தவர்கள் மாநில பாட திட்டத்தில் பிளஸ்-2 எழுதலாமா? விதிமுறைகளை விளக்கி அரசாணை வெளியீடு

சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் பிளஸ்-1 தேர்ச்சி பெற்ற மாணவர் கள், பிளஸ்-2 பொதுத்தேர்வை மாநில பாடத்திட்டத்தில் எழுத அனுமதிப்பதற்கான விதிமுறை களை விளக்கி பள்ளிக் கல்வித் துறை அரசாணை வெளியிட் டுள்ளது.

இதுதொடர்பாக தமிழக பள்ளிக் கல்வித் துறை செயலாளர் பிரதீப் யாதவ் வெளியிட்டுள்ள அரசாணை யில் கூறியிருப்பதாவது:

அரசுத் தேர்வுகள் இயக்குநர் கடந்த அக்டோபர் 29, நவம்பர் 26 ஆகிய தேதிகளில் தமிழக அரசுக்கு கடிதம் எழுதியிருந்தார்.

‘தமிழக பாடத்திட்டம், சிபிஎஸ்இ, வேறு மாநில பாடத் திட்டம் ஆகியவற்றில் பிளஸ்-1 தேர்ச்சி பெற்ற 12 மாணவர்கள் குடும்பச் சூழல், பெற்றோர் பணியிட மாறுதல் போன்ற காரணங்களால் பிளஸ்-2 படிப்பை அதே பாடத்திட்டத்தில் தொடர முடியாமல், தமிழக மாநில பாடத்திட்டத்தில் பிளஸ்-2 படித்து வருகின்றனர்.

அவர்களை பிளஸ்-2 பொதுத் தேர்வு எழுத அனுமதிக்குமாறு முதன்மை கல்வி அலுவலர்கள் பரிந்துரைத்துள்ளனர். தற்போது நடத்தப்படும் பிளஸ்-1 பொதுத் தேர்வை எழுதுமாறு கூறினால், அவர்கள் மிகுந்த மன அழுத்தத் துக்கு ஆளாவார்கள் என்பதால், அவர்களது நலன் கருதி, பிளஸ்-2 பொதுத்தேர்வை மட்டும் எழுத அனுமதிக்க வேண்டும்’ என்று அதில் கோரியிருந்தார்.

இதையடுத்து, இதை ஒரு சிறப்பு நிகழ்வாக கருதி பிளஸ்-1 பொதுத்தேர்வை மீண்டும் எழுதுவ தில் இருந்து விலக்கு அளித்து, விதிமுறைகளை பின்பற்றி இந்த மாணவர்களுக்கு தமிழக பாடத் திட்டத்தில் பிளஸ்-2 தேர்வு எழுத அனுமதி வழங்கப்படுகிறது.

இவர்கள் சிபிஎஸ்இ அல்லது வேறு மாநில பாடத்திட்டத்தில் பிளஸ்-1 தேர்ச்சி பெற்று தற்போது பள்ளிகளில் சேர்ந்து பிளஸ்-2 பயின்று வரும் நிலை யில், பிளஸ்-1 பயின்ற பாடத் தொகுப்புக்கு இணையான பாடத் தொகுப்பில் நேரடியாக பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதலாம்.

2017-18 கல்வியாண்டுக்கு முன்பு தமிழக பாடத்திட்டத்தில் பிளஸ்-1 தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்கள், அதே பாடத்தொகுப்பில் பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதலாம். இந்த மாணவர்கள் பிளஸ்-2 பொதுத் தேர்வில் பெறும் மதிப்பெண்களை மட்டும் பதிவு செய்து மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும்.

நேரடி தனித் தேர்வர்களாக மேல்நிலை தேர்வு எழுதுபவர்கள், பிளஸ்-1 பொதுத்தேர்வு எழுதிய பிறகே பிளஸ்-2 தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள். தனித் தேர்வர்களுக்கு இந்தச் சலுகை பொருந்தாது.

மேலும், வருங்காலங்களில் பிளஸ்-1 பொதுத்தேர்வாக எழு தாமல் சிபிஎஸ்இ அல்லது வேறு மாநில பாடத்திட்டம் சார்ந்த பள்ளிகளில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் பிளஸ்- 2 கல்வியை தொடர பள்ளிகளில் அனுமதிக்கும் முன்பு கண்டிப்பாக பள்ளிக் கல்வி இயக்ககத்திடம் முன் அனுமதி பெற வேண்டும். இதை அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் பள்ளிக் கல்வி இயக்குநர் அறிவுறுத்த வேண்டும்.

இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Monday, 9 December 2019

TNPSC குரூப்-1 ஜனவரி மாதம் (முதல் வாரம்) – அறிவிக்கை வெளியீடு...குரூப்-2, குரூப் 4 தேர்வுகளுக்கு நிலையான கால அட்டவணையை விரைவில் வெளியிட டிஎன்பிஎஸ்சி திட்டமிட்டுள்ளது.

குரூப்-1 தேர்வுக்கான நிலையான அட்டவணையை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.

தேர்வர்கள் திட்டமிட்டு தேர்வுகளுக்கு தயாராவதை கருத்தில் கொண்டு இந்த புதிய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இனி வரும் ஆண்டுகளில் குரூப்-1 தேர்வுக்கான முதனிலைத் தேர்வு ஏப்ரல் மாதம் நடைபெறும்.

அதன் முடிவுகள் மே மாதம் வெளியிடப்பட்டு, ஜூலை மாதத்திலேயே முதன்மை எழுத்துத் தேர்வு நடத்தப்படும். அதற்கான முடிவுகள் நவம்பர் மாதம் அறிவிக்கப்படுவதோடு, டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் நேர்முகத் தேர்வும், டிசம்பர் மாதம் இறுதி வாரத்தில் கலந்தாய்வு நடத்தி இறுதி முடிவுகளும் வெளியிடப்படும். அதே போல் குரூப்-2, குரூப் 4 தேர்வுகளுக்கும் நிலையான கால அட்டவணையை விரைவில் வெளியிட டிஎன்பிஎஸ்சி திட்டமிட்டுள்ளது.
 1. ஜனவரி மாதம் (முதல் வாரம்) – அறிவிக்கை வெளியீடு
 2. ஏப்ரல் மாதம்                 – முதனிலைத் தேர்வு
 3. மே மாதம்                   – முதனிலைத் தேர்வு முடிவுகள்
 4. ஜுலை மாதம்                – முதன்மை எழுத்துத் தேர்வு
 5. நவம்பர் மாதம்               - முதன்மை எழுத்துத் தேர்வு முடிவுகள் வெளியீடு
 6. டிசம்பர் மாதம் (முதல் வாரம்) – நேர்முகத் தேர்வு
 7. டிசம்பர் மாதம் (இறுதி வாரம்)  – கலந்தாய்வு / இறுதி முடிவுகள் 
என  அறிவிக்கப்பட்டுள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

TNPSC - GROUP-I MAIN WRITTEN EXAM RESULT PUBLISHED

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் - செய்திக் குறிப்பு

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கடந்த இரண்டு ஆண்டுகளாக தேர்வு முடிவு அறிவிப்புக்களுக்கான அட்டவணையினை தேர்வாணைய இணையத்தளத்தில் வெளியிட்டு வருகிறது. இதுவரை நடத்தப்பட்ட தேர்வுகளுள், ஆறு தேர்வுகளுக்கான முடிவுகளைத் தவிர, அனைத்து தேர்வு முடிவுகளும் அறிவிக்கப்பட்ட மாதத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

தேர்வாணையத்தால், ஆண்டுதோறும், நாற்பதுக்கும் மேற்பட்ட தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. அவற்றுக்காக சுமார் முப்பது லட்சம் வரையிலான விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கின்றனர்.அவற்றில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள்-1 (தொகுதி – 1 பணிகள்) பதவிகளுக்கான 181 காலிப்பணியிடங்களுக்கான அறிவிக்கை 01.01.2019 அன்று வெளியிடப்பட்டது.  03.03.2019 அன்று 2,29,438 விண்ணப்பதாரர்களுக்கு முதனிலைத் தேர்வும், 12.07.2019, 13.07.2019 மற்றும் 14.07.2019 ஆகிய தேதிகளில் 9,442 விண்ணப்பதாரர்களுக்கு முதன்மை எழுத்துத் தேர்வும் நடத்தப்பட்டன.

தற்பொழுது, தொகுதி-1 -ல் அடங்கிய பதவிகளுக்காக அறிவிக்கப்பட்ட 181 காலிப்பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. தேர்வாணையம் தொடங்கப்பட்ட காலத்திலிருந்து அதிக காலிப்பணியிடங்களுக்காக, அதிக விண்ணப்பதாரர்கள் எழுதிய தொகுதி 1 தேர்வு இதுவாகும். அதிகப்படியான  விடைத்தாட்கள் மதிப்பீடு செய்யப்பட்டு இத்தேர்வு முடிவுகள் மிக குறுகிய காலத்திற்குள் (அதாவது நான்கரை மாதங்களில்) தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்திய அளவில் எந்த மாநில தேர்வாணையமும் இவ்வளவு விரைவாக எழுத்துத் தேர்வு முடிவுகளை வெளியிட்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

எழுத்துத் தேர்வில் விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண்கள், இடஒதுக்கீட்டு விதி மற்றும் அப்பதவிகளுக்கான அரிவிக்கையில் வெளியிடப்பட்ட பிற விதிகளின் அடிப்படையில் மூலச்சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத்தேர்வுக்கு தற்காலிகமாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள 363 விண்ணப்பதாரர்களின் பதிவெண்கள் கொண்ட பட்டியல் தேர்வாணைய இணையதளமான www.tnpsc.gov.in -ல் வெளியிடப்பட்டுள்ளது.  இவர்களுக்கான மூலச் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத் தேர்வு ஆகியன 23.12.2019 முதல் 31.12.2019 வரை (25.12.2019 மற்றும் 29.12.2019 நீங்கலாக)  நடைபெறவுள்ளது.  இதற்கான குறிப்பாணை வழக்கம்போல் தேர்வாணையத்தின் இணைய தளத்தில் வெளியிடப்பட்டு, தெரிவாளர்களுக்கு மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்தி மூலம் தகவல் தெரிவிக்கப்படும்.

வரும் 27.12.2019 மற்றும் 30.12.2019 ஆகிய நாட்களில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுவதால் மேற்படி நாட்களில் தேர்தல் நடைபெறாத மாவட்டங்களைச் (திருநெல்வேலி, தென்காசி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சென்னை) சேர்ந்த விண்ணப்பதாரர்கள் மட்டும் நேர்காணல் தேர்வுக்கு அழைக்கப்படுவர். எனினும், தேர்தல் நடைபெறும் மாவட்டங்களைச் சேர்ந்த ஏதேனும் விண்ணப்பதாரர்கள் மேற்கூறிய இரு தினங்களில் நேர்காணலுக்கு வருமாறு அழைக்கப்பட்டிருந்தால் அவர்கள் முன்கூட்டியே தேர்வாணையத்தை அணுகி, நேர்காணல் தேதியினை மற்றொரு தேதிக்கு மாற்றிக்கொள்ளலாம்.இனிவருங்காலங்களிலும், இதுபோன்ற தேர்வுகளுக்கான தேர்வு முடிவுகள் அறிவிக்கை வெளியிடப்பட்ட நாளிலிருந்து ஒரு வருட காலத்திற்குள் வெளியிடப்படும்.தொகுதி-1-ல் அடங்கிய பதவிகளுக்கான தேர்விற்கு பின்வரும் நிலையான கால அட்டவணை பின்பற்றப்படும்.

ஜனவரி மாதம் (முதல் வாரம்) – அறிவிக்கை வெளியீடு
ஏப்ரல் மாதம்                 – முதனிலைத் தேர்வு
மே மாதம்                   – முதனிலைத் தேர்வு முடிவுகள்
ஜுலை மாதம்                – முதன்மை எழுத்துத் தேர்வு
நவம்பர் மாதம்               - முதன்மை எழுத்துத் தேர்வு முடிவுகள் வெளியீடு
டிசம்பர் மாதம் (முதல் வாரம்) – நேர்முகத் தேர்வு
டிசம்பர் மாதம் (இறுதி வாரம்)  – கலந்தாய்வு / இறுதி முடிவுகள்

இதுதவிர, தொகுதி-2 மற்றும் தொகுதி-4 – ல் அடங்கிய பதவிகளுக்கான தேர்வுகளும் வழக்கமாக வருடந்தோறும் நடத்தப்படும். தொகுதி-1 -ல் அடங்கிய பதவிகளுக்கான தேர்விற்கான நிலையான கால அட்டவணையைப் போலவே மேற்படி தேர்வுகளுக்கும், நிலையான கால அட்டவணை விரைவில் வெளியிடப்படும். இரா. சுதன், இ.ஆ.ப., தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

410 தொடக்க பள்ளிகளில் 5-க்கும் குறைவான மாணவர்கள் கல்வித்துறை அதிகாரிகள் கணக்கெடுப்பில் தகவல்

தமிழகத்தில் 410 தொடக்கப்பள்ளிகளில் 5-க்கும் குறைவான மாணவர்கள் எண்ணிக்கை இருப்பதாக கல்வித்துறை அதிகாரிகள் எடுத்த கணக்கெடுப்பில் தெரியவந்து இருக்கிறது.

தமிழகம் முழுவதும் மாணவர் எண்ணிக்கை குறைவாக உள்ள பள்ளிகளை கணக்கெடுக்க வேண்டும் என்று சமீபத்தில் சென்னை கோட்டூர்புரத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், கல்வித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு இருந்தார்.

அதன்படி, அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள் மேற்கொண்ட கணக்கெடுப்பில், மாநிலம் முழுவதும் 410 தொடக்கப்பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை 5-க்கும் குறைவாக இருப்பது கண்டறியப்பட்டு இருக்கிறது.

மேலும் 1,531 தொடக்கப்பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை 10-க்கும் குறைவாக உள்ளதும் கணக்கெடுப்பில் தெரியவந்து இருப்பதாக கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மாணவர் எண்ணிக்கை குறைவாக உள்ள தொடக்கப்பள்ளி மாணவர்களை அருகாமையில் உள்ள பள்ளிகளுடன் இணைப்பது பற்றி தொடக்கக்கல்வி இயக்ககம் ஆலோசித்து வருகிறது.

அடுத்த கல்வியாண்டில் (2020-21) இருந்து இந்த பள்ளிகளை அருகாமை பள்ளிகளுடன் இணைப்பது அல்லது தற்காலிகமாக மூடுவது குறித்து முடிவு எடுக்கப்பட இருப்பதாகவும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.மாணவர் எண்ணிக்கை குறைவாக உள்ள பள்ளிகளை அருகாமை பள்ளிகளுடன் இணைக்கும் போது, பழைய பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு பள்ளி கல்வித்துறை சார்பில் இலவச போக்குவரத்து வசதி ஏற்படுத்தித்தருவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Sunday, 8 December 2019

அரசு பள்ளி மாணவர்களுக்கு அமெரிக்க நிறுவனம் ‘நீட்’ தேர்வு பயிற்சி அளிக்கிறது அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

அரசு பள்ளி மாணவர்களுக்கு அமெரிக்க நிறுவனம் ‘நீட்’ தேர்வுக்கு பயிற்சி அளிக்கும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

மருத்துவ படிப்பில் சேருவதற்கான ‘நீட்’ தேர்வில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் தேர்ச்சி பெற வேண்டும் என்ற நோக்கில் தமிழகம் முழுவதும் 412 ‘நீட்’ பயிற்சி மையங்கள் கடந்த 2017-ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டன. இங்கு தமிழிலும், ஆங்கிலத்திலும் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

இந்த மையங்களில் கடந்த கல்வியாண்டு 19,355 பேர் பங்கு பெற்றனர். முதல் 2 ஆண்டுகள் இதற்கான பயிற்சி வகுப்புகளை ‘ஸ்பீடு’ என்ற நிறுவனம் நடத்தி வந்தது. நடப்பு கல்வியாண்டுக்கான (2019-20) பயிற்சி வகுப்பு கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கியது. ராஜஸ்தானை சேர்ந்த ‘ஈடூஸ் இந்தியா’ என்ற நிறுவனம் ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளித்து நடத்தி வருகிறது.

இந்த நிலையில் அமெரிக்காவை சேர்ந்த ஒரு நிறுவனம் ‘நீட்’ தேர்வுக்கு பயிற்சி அளிக்க இருப்பதாக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்து இருக்கிறார்.

இதுகுறித்து அவர் டுவிட்டர் பக்கத்தில், ‘மாணவர்களுக்கு ‘நீட்’ தேர்வுக்கான இலவச பயிற்சி அளிப்பதற்காக ஒரு வாரத்துக்குள் அமெரிக்க நிறுவனத்தினர் வருகை தர உள்ளனர். சிறந்த முறையில் ‘நீட்’ தேர்வுக்கு பயிற்சி அளிப்பதற்கான ஒப்பந்தம் ஒரு வாரத்துக்குள் நிறைவேற்றப்பட இருக்கிறது’ என்றார்.

ஏற்கனவே பயிற்சி அளிக்கும் ராஜஸ்தான் நிறுவனத்துடன் அமெரிக்க நிறுவனமும் சேர்ந்து பயிற்சி அளிப்பார்கள் என்று கல்வித்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து கல்வியாளர் நெடுஞ்செழியன் கூறுகையில், ‘பயிற்சி மையமே தேவையற்ற ஒன்று தான். இதில் அமெரிக்க நிறுவனத்தை கொண்டு வருவதில் எந்த பயனும் இல்லை’ என்றார்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

மொழி பெயர்ப்பாளர் பணிக்கு நேர்காணல் கட்டாயமாக்கப்பட வேண்டும் பழைய நடைமுறையை பின்பற்ற தமிழ் ஆர்வலர்கள் வலியுறுத்தல் 

தமிழ் வளர்ச்சித்துறையில் மொழி பெயர்ப்பாளர் பணிக்கு தகுதியான வர்களை நேர்காணல் மூலம் தேர்வு செய்ய டிஎன்பிஎஸ்சி முன்வர வேண்டும் என தமிழ் ஆர்வலர்கள் கோரியுள்ளனர்.

தமிழக அரசுப்பதவிகளில் உள்ள பல்வேறு பணியிடங்கள் தமிழ் நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணை யம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் போட்டித்தேரவுகள் மூலம் நிரப்பப் பட்டு வருகின்றன. இந்நிலையில் தற்போதைய காலக்கட்டத்துக்கு ஏற்ப தேர்வு முறை மற்றும் பாடத்திட்டங்களை மாற்றியமைத்து பல்வேறு சீர்திருத்தங்களை டிஎன்பிஎஸ்சி மேற்கொண்டு வரு கிறது. அதன்படி சமீபத்தில் குரூப் 2 உள்ளிட்ட பதவிகளுக்கான தேர்வு முறைகள் மாற்றப்பட்டன.

இதற்கிடையே தமிழ் வளர்ச்சித் துறையின் மொழிபெயர்ப்பு பிரிவில் உதவிப்பிரிவு அதிகாரி பணியில் உள்ள 5 காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி கடந்த நவம்பர் 8-ம் தேதி வெளியிட்டது.

அதில் உதவிப்பிரிவு அதிகாரி பணிக்கு 2 தாள்கள் கொண்ட எழுத்துத் தேர்வுகள் மட்டுமே நடைபெறும். நேர்காணல் தேர்வு இல்லை என்று கூறப்பட்டுள்ளது. குரூப் 2 பதவிக்கு இணையான உதவிப் பிரிவு அதிகாரி பணிக்கு நேர்காணல் இல்லாத தேர்வு முறையால் தகுதியற்ற வர்கள் பணிவாய்ப்பு பெறும் சூழல்கள் இருப்பதாக குற்றச்சாட்டு கள் எழுந்துள்ளன.

இதுகுறித்து தமிழ் ஆர்வலர் கள் கூறியதாவது: தமிழ் வளர்ச்சித் துறையில் உதவிப்பிரிவு அதிகாரி பணியிடங்கள் இதுவரை நேர் காணல் தேர்வு மூலமே நிரப்பப் பட்டன. பழைய நடைமுறையில் 300 மதிப்பெண்களுக்கு எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது. அதில் பொது அறிவு கேள்விகள் இடம்பெறாது. மேலும் நேர்காணலுக்கு 40 மதிப்பெண்கள் ஒதுக்கப்பட்டது. ஆனால், புதிய நடைமுறையில் எழுத்துத்தேர்வு மட்டுமே நடை பெற உள்ளது. முதல்தாள் 300 மதிப்பெண்ணுக்கும், 2-ம்தாள் 200 மதிப்பெண்ணுக்கும் நடத்தப்படும்.

முதல்தாளில் தமிழ்-ஆங்கிலம், ஆங்கிலம்-தமிழ் மொழி பெயர்ப்பு, விரிவாக எழுதுதல் வடிவில் வினாத்தாள் இருக்கும். 2-ம்தாளில் பொது அறிவு, கணிதம் மற்றும் மனத்திறன் சார்ந்த கேள்விகள் இடம்பெறும். இந்த 2 தாள்களும் சேர்த்து மொத்தமுள்ள 500 மதிப்பெண்ணில் குறைந்தபட்ச தேர்ச்சியாக பொதுப் பிரிவுக்கு 200-ம், இதரபிரிவுக்கு 150-ம் நிர்ண யிக் கப்பட்டுள்ளன. நேர்காணல் இல்லாத தேர்வு முறையால் முழுவதும் மனப்பாடம் மட்டும் செய்து பட்டதாரிகள் எளிதில் பணி வாய்ப்பு பெறக்கூடிய சூழல் உருவாகியுள்ளது. இத்தகைய திறமையற்ற போட்டித்தேர்வு முறைக்கு தமிழ்வளர்ச்சித்துறை அனுமதி தந்திருக்கக் கூடாது.

அரசு ஆவணங்கள் தொடர்பான மொழி பெயர்ப்பு பணியில் உதவிப்பிரிவு அதிகாரியே முக்கிய பங்காற்றுவார். முக்கியத்துவம் பெற்ற இப்பணியில் தகுதியானவர் களை நியமிக்க வேண்டியது அவசியம். இதுதவிர உதவிப்பிரிவு அதிகாரி பதவி குரூப் 2 பணிக்கு நிகரானது. மாதம் ரூ.50 ஆயிரம் வரை ஊதியம் வழங்கப்படும்.

குரூப் 2ஏ பணியிடங்களுக்கு மாதம் ரூ.25 ஆயிரம் வரையே ஊதியம் அளிக்கப்படுகிறது. அதற்கே நேர்காணல் நடத்தப்படுகி றது. எனவே, இத்தகைய பதவி நிலையை நிரப்பும்போது நேர் காணல் தேர்வை கட்டாயமாக்க வேண்டும். இவ்வாறு கூறினர்.

இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி செயலர் நந்தக்குமார் கூறும் போது, ‘‘தேர்வு முறை வடிவங்க ளில் மாற்றம் செய்ய தேர்வாணை யத்துக்கு அதிகாரமுள்ளது. அதன் படி மொழி பெயர்ப்பு துறையில் உதவிப்பிரிவு அதிகாரி பணியிடங் களை நேர்காணல் இல்லாமல் எழுத்துத்தேர்வு மூலம் மட்டுமே நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பணியிடங்கள் குரூப் 2 பதவிகளுக்கு இணையானது என்றபோதும் நேர்காணல் தேவைப் படாது’’ என்றார்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

கேங்மேன் பணிக்கு சான்று சரிபார்ப்புக்கு புதிய தேதி அறிவிப்பு

தொடர்மழை காரணமாக, மின் வாரிய கேங்மேன் பதவிக்கான சான்றிதழ் சரிபார்ப்புக்கான புதிய தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர் மழையின் காரண மாக, கடந்த நவ.30-ம் தேதி முதல் நேற்று (7-ம் தேதி) வரை சில இடங்களில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் கேங்மேன் (பயிற்சி) பதவிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் உடல் தகுதி தேர்வு தள்ளி வைக்கப்பட்டிருந்தது.

இவற்றுக்கான மாற்று தேதி விண்ணப்பதாரர்களுக்கு குறுஞ்செய்தி (எஸ்எம்எஸ்) மற்றும் மின் அஞ்சல் மூலமாக (இ-மெயில்) அனுப் பப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு www.tangedco.gov.in என்ற இணையதளத்தைப் பார்க்க வேண்டும் என மின் வாரியம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Friday, 6 December 2019

தமிழக அரசு பணிகளில், இணையான படிப்புகள் எவை? அரசாணை வெளியீடு

தமிழக அரசு பணிகளில் புதிதாக சேருவோர் மற்றும் ஏற்கனவே பணியாற்றி, பதவி உயர்வு கோரி விண்ணப்பித்தவர்கள் அரசாணையில் உள்ள படிப்புகள் தவிர பிற பல்கலைக்கழகங்களால் வழங்கப்படும் புதிய படிப்புகளில் பட்டம் பெறுவதால் சான்றிதழ் சரிபார்ப்பில் பிரச்சினை இருந்து வருகிறது.

அதில் எந்தெந்த பட்டப்படிப்புகள் ஏற்கனவே உள்ள படிப்புகளுக்கு இணையானவை?, எவை இணையல்ல? என்பது குறித்து முடிவு செய்து அவற்றை அரசாணையாக வெளியிடுமாறு தமிழக உயர்கல்வித்துறைக்கு பரிந்துரை செய்தது.

இதை சரி செய்வதற்கும், அது தொடர்பான தெளிவான முடிவை அறிவிப்பதற்கும் தமிழ்நாடு உயர்கல்வி கவுன்சில் கூட்டம் கடந்த நவம்பர் 6 மற்றும் 12-ந் தேதிகளில் நடந்தது. அதன் அடிப்படையில் பரிந்துரையை தமிழக அரசுக்கு அனுப்பியது. உயர்கல்வி கவுன்சிலின் பரிந்துரையை ஏற்று, தமிழக அரசு பட்டப்படிப்புகள் குறித்த அரசாணையை வெளியிட்டுள்ளது.

அதன்படி, அண்ணா பல்கலைக்கழக பி.இ., பி.டெக். ஆடை தொழில்நுட்ப படிப்பு, பி.இ., பி.டெக். ஜவுளி தொழில்நுட்பத்துக்கு இணையானது அல்ல. கம்ப்யூட்டர் மற்றும் கம்யூனிகேஷன் என்ஜினீயரிங் படிப்பு கம்ப்யூட்டர் அறிவியல் என்ஜினீயரிங் படிப்புக்கும், பி.இ. படிப்பு, எம்.எஸ்சி. கணிதம் படிப்புக்கும் இணையானது அல்ல என்பது உள்பட பல்வேறு பரிந்துரைகளை அதில் தெரிவித்து இருக்கிறது என்று உயர்கல்வி துறை செயலாளர் மங்கத்ராம் ஷர்மா வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

இனி ஏடிஎம்-களில் 2000, 500 ரூபாய் நோட்டுகள் வராதா?

ஏடிஎம்-களில் 2,000 ரூபாய் நோட்டு கள் வைக்கப்படுவது படிப்படியாக குறைக்கப்பட உள்ளதாக தகவல் கள் வெளியாகி உள்ளன. ரிசர்வ் வங்கி, 2,000 ரூபாய் நோட்டுகளை அச்சிடுவதை நிறுத்தி இருப்பதாக சமீபத்தில் தெரிவித்து இருந் தது.

அதைத் தொடர்ந்தே ஏடிஎம்- களிலும் 2,000 ரூபாய் நோட்டு கள் குறைக்கப்படுகிறது என்று தெரிகிறது. ஏற்கெனவே பல ஏடிஎம்-களில் 2,000 ரூபாய் நோட்டுக்கான பெட்டிகள் நீக்கப் பட்டுவிட்டன. இந்நிலையில், நாடு முழுவதும் உள்ள அனைத்து ஏடிஎம்-களிலும் அவை நீக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து 500 ரூபாய் நோட்டுகளும் ஏடிஎம்-களில் குறைக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. எனில், இனி 100 ரூபாய், 200 ரூபாய் நோட்டு கள் மட்டுமே ஏடிஎம்-களில் இருக்கும் என்று தெரிகிறது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

நீட் தேர்வு விண்ணப்பம் ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல்

பள்ளிக்கல்வித் துறை இணை இயக்குநர் ச.சுகன்யா, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கை:

நீட் தேர்வுக்கு அரசு மற்றும் அரசு உதவி பள்ளி மாணவர்கள் விண்ணப்பிக்க ஏதுவாக பள்ளி அறிவிப்பு பலகையில் தகவல் வெளியிட வேண்டும்.

இதுதவிர நீட் தேர்வு எழுத விருப்பம் இருந்தும் விண்ணப் பிக்க இயலாத மாணவர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு தகுந்த உதவிகளை தலைமை ஆசிரியர்கள், மாவட்ட கல்வி அதிகாரிகள் செய்ய வேண்டும். மேலும், நீட் தேர்வுக்கு விண்ணப் பித்துள்ள மாணவர்களின் விவ ரங்களை டிசம்பர் 31-ம் தேதிக்குள் இயக்குநரகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களில் 50 வயதானவர்கள் அல்லது 30 ஆண்டு பணிக்காலத்தை நிறைவு செய்துள்ளவர் - துறை வாரியாக ஆய்வு செய்து விவரங்கள் சேகரிப்பு

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களில் 50 வயதானவர்கள் அல்லது 30 ஆண்டு பணிக்காலத்தை நிறைவு செய்துள்ளவர்களுக்கு கட்டாய ஒய்வு அளிப்பதற்கான ஆய்வு தமிழக அரசுத் துறைகளில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மண்டல வேலைவாய்ப்பு அலு வலகங்களுக்கான இந்த சுற்றறிக் கையில் கூறியிருப்பதாவது:

பணியாளர் அடிப்படை விதி 56 (2) ன் கீழ் கட்டாய ஓய்வு குறித்த ஆய்வு மேற்கொள்ளும் வகை யில் அலுவலர்களின் பதிவுறு நாட் கள் மற்றும் உரிய விவரங் களை அனுப்பி வைக்க வேண்டும்.

அதாவது அ, ஆ, இ பிரிவு அலுவலர்கள் கடந்த 1969 ஜன 1 முதல் டிசம்பர் 31 வரையுள்ள காலத்தில் பிறந்த தேதியைக் கொண்ட அலுவலர்கள், கடந்த 1964 ஜனவரி 1 முதல் டிசம்பர் 31-ம் தேதி வரை பிறந்த நாளுடைய அலுவலர் களும் ஆய்வு செய்யப்பட வேண்டி யுள்ளது. மேலும் கடந்த 1989-ம் ஆண்டு ஜன.1-ம் தேதி முதல் அந்த ஆண்டில் டிசம்பர் 31-ம் தேதி வரையிலான காலத்தில் பணி நிய மனம் செய்யப்பட்டு, 30 ஆண்டு கள் பணி முடித்த அலுவலர்களும் ஆய்வு செய்யப்பட வேண்டியவர் களாவர்.

இதன்படி, 55 வயது பூர்த்தி யடைந்த அடிப்படை பணியாளர் கள், 50 வயது நிறைவடைந்த மற்ற பணியாளர்கள் அல்லது 30 ஆண்டு கள் பணிக்காலத்தை முடித்தவர்கள் என இதில் முதலில் எது நிகழ்கிறதோ அந்த அலுவலர் ஆய்வு செய்யப் பட வேண்டியவராவார். எனவே, இதன் அடிப்படையில் உரிய அலு வலரின் விவரங்களை அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதுபோன்று இதர துறைகளி லும் குறிப்பாக பள்ளிக் கல்வித் துறையிலும் ஆய்வுகள் நடந்து வரு வதாக கூறப்படுகிறது. பணியாளர் கள் அடிப்படை விதிகள் 56 பிரிவு 2 என்பது கட்டாய ஓய்வு அளிப் பது குறித்து விளக்குகிறது. இப்பிரி வின்படி அரசு விரும்பும் பட்சத்தில், 3 மாதங்கள் அவகாசம் அளித்து ஓர் அரசு ஊழியரை பணியில் கட்டாய விடுப்பு மூலம் விடுவிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து அரசுத் துறை அதிகாரிகள் கூறும்போது, “இந்த விதி ஏற்கெனவே உள்ளது. புதிதாக சேர்க்கப்பட்டது கிடையாது. சில நேரங்களில் இது போன்ற சுற்ற றிக்கை அனுப்பப்பட்டு பட்டியல் தயாரிக்கப்படும். ஆனால், யாருக் கும் கட்டாய ஓய்வு அளிக்கப் படவில்லை. கொள்கை முடிவு அரசால் எடுக்கப்பட்டால் மட்டுமே முழுமையாக அமல்படுத்தப்படும்’’ என்றனர்.

தமிழக அரசை பொறுத்தவரை தேவையில்லாத பணியிடங்களை குறைக்கவும், தேவைப்படும் பணியிடங்களில் ‘அவுட் சோர்சிங்’ முறையில் பணியாளர் களை நியமிக்கவும் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஆதிசேஷய்யா தலைமையில் குழு அமைக்கப் பட்டு, அக்குழுவினர் அனைத்து துறைகளிலும் கருத்துகேட்டு வருகின்றனர்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

சிபிஎஸ்இ பள்ளிகளில் ஒழுக்கம் சார்ந்த கல்வி விருப்பப் பாடமாக அமல்

சிபிஎஸ்இ பள்ளிகளில் 6 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாண வர்களுக்கு ஒழுக்கம் சார்ந்த கல்வி விருப்பப் பாடமாக கொண்டுவரப் பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய இடை நிலை கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) சார்பில் அனைத்து மண்டல அலு வலகங்கள் மற்றும் பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை விவரம்: பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு ஒழுக்கக் கல்வியை போதிப்பது மிகவும் அவசியமானது. இதுகுறித்து ராமகிருஷ்ணா மிஷன் பிரத்யேக பாடத் திட்டங்களை உருவாக்கி புத்தகங்கள் தயாரித்துள்ளது. அந்த புத்தகங்கள் உதவியுடன் பள்ளிகளில் 6 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ஒழுக்கக் கல்வி சார்ந்த பாடத்தை கற்றுத்தரலாம். அதேநேரம் இந்தப் பாடத்தை பள்ளிகள் தங்கள் விருப்பத்தின் அடிப்படையில் தேர்வு செய்து கொள்ளலாம்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Wednesday, 4 December 2019

பொது தகுதி தேர்வு அறிமுகம் ஆகிறது மத்திய அரசு பணிகளுக்கு ஒரே தேர்வு புதிய திட்டம் குறித்து கருத்து கேட்பு

பெரும்பாலான மத்திய அரசு பணிகளுக்கு பொது தகுதி தேர்வு என்ற பெயரில் ஒரே தேர்வு நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து மாநில அரசுகளிடம் கருத்து கேட்டுள்ளது.

இதுதொடர்பாக மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

மத்திய அரசு மற்றும் அதன் நிறுவனங்களில் அரசிதழ் பதிவு பெறாத குரூப் பி பணியிடங்கள், குறிப்பிட்ட குரூப் பி பணியிடங்கள் (அரசிதழ் பதிவு பெற்றது), குரூப் சி பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய பொது தகுதி தேர்வு நடத்தப்படும். இந்த தேர்வு நடத்த பிரத்யேகமான ஒரு அமைப்பு உருவாக்கப்படும். இது, ஆன்லைன் தேர்வாக நடத்தப்படும்.

தற்போது, அரசு வேலை பெற விரும்பும் விண்ணப்பதாரர்கள், பல்வேறு தேர்வாணையங்கள் நடத்தும் தனித்தனி தேர்வுகளை எழுத வேண்டி இருக்கிறது. இவற்றுக்கு ஒரே மாதிரியான தகுதிகள்தான் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.

இந்த தேர்வுகள் 3 அடுக்குகள் கொண்டதாகவும், திறனறி தேர்வு உள்ளிட்டவையும் அடங்கியதாக இருக்கும். ஆண்டுதோறும் சராசரியாக ஒரு லட்சத்து 25 ஆயிரம் பணியிடங்களுக்கு 2 கோடியே 50 லட்சம் பேர் எழுதி வருகிறார்கள்.

இவர்களுக்காகவே பொது தகுதி தேர்வு என்ற ஒரே தேர்வு அறிமுகம் செய்யப்படுகிறது. இதனால் எண்ணற்ற தேர்வுகளை எழுத வேண்டிய சுமை நீங்குகிறது. விண்ணப்ப கட்டண செலவுகளும், தேர்வு மையத்துக்கு செல்வதற்கான பயண செலவுகளும் குறைகிறது.

மாவட்டத்துக்கு குறைந்தபட்சம் ஒரு தேர்வு மையம் அமைய வாய்ப்பு இருப்பதால், கிராமப்புற மாணவர்கள் எளிதில் சென்றுவர வழிவகை ஏற்படும். தங்களுக்கு விருப்பமான தேர்வு மையத்தை அவர்கள் தேர்வு செய்ய முடியும்.

முதல்முறையாக, பட்டதாரிகள், 12-ம் வகுப்பு தேறியவர்கள், 10-ம் வகுப்பு தேறியவர்கள் ஆகியோருக்கான தொழில்நுட்பம் சாராத பணியிடங்களுக்கு பொது தகுதி தேர்வு நடத்தப்படும். தற்போது, இந்த தேர்வுகளை எஸ்.எஸ்.சி.யும், ரெயில்வே தேர்வு வாரியமும் நடத்தி வருகின்றன.

இந்த பொது தகுதி தேர்வில் எடுத்த மதிப்பெண்கள், ஒவ்வொரு விண்ணப்பதாரரிடம் தெரிவிப்பதுடன், தேர்வாணையத்திடமும் இருக்கும். இந்த மதிப்பெண்கள், தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து 3 ஆண்டுகளுக்கு செல்லும்.

இந்த மதிப்பெண்களை கூட்டிக்கொள்ள ஒவ்வொரு விண்ணப்பதாரரும் கூடுதலாக 2 தடவை பொது தகுதி தேர்வில் பங்கேற்கலாம். எந்த தேர்வில் அதிக மதிப்பெண் கிடைக்கிறதோ, அதுவே அவரது உரிய மதிப்பெண்ணாக கருதப்படும்.

இந்த தகுதி மதிப்பெண்களை பயன்படுத்தி, மாநில அரசுகள் தங்களுக்கு தேவையான ஆட்களை தேர்வு செய்து கொள்ளலாம். அதுபோல், மத்திய அரசின் பல்வேறு துறைகளும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Monday, 2 December 2019

பள்ளிக்கல்வித்துறைக்கு புதியதாக துணை ஆனையாளர் Deputy Commissioner (Education) நியமனம்

பள்ளிக்கல்வித்துறைக்கு புதியதாக துணை ஆனையாளர் Deputy Commissioner (Education) நியமனம்


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Sunday, 1 December 2019

Teachers Bank Details & PAN No Upload Reg


Teachers Bank Details & PAN No Upload Reg.

அனைத்து வகை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு

அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் மாத ஊதியம் பெறக்கூடிய Bank  & PAN details ஐ EMIS இணையதளத்தில் விரைந்து பதிவு செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் மாவட்ட கல்வி  அலுவலர்கள், வட்டார கல்வி அலுவலர்கள்,வட்டார வள மைய மேற்பார்வையாளர்கள் மற்றும் ஆசிரியர் பயிற்றுனர்கள் தங்கள் ஆளுகைக்கு உட்பட்ட அனைத்து பள்ளிகளுக்கும் தகவல் தெரிவித்து தொடர்ந்து கண்காணித்து 100% இப் பணியை விரைந்து முடிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Step by Step

Staff➡ Staff list➡ Teacher details Part 1➡ Enter Bank details(IFSC code,Bank name, Branch & A/c No.), PAN Number ➡ Save.

மேற்கண்ட தகவல்கள்  பதிவு செய்த பிறகு கட்டாயமாக Save பொத்தானை அழுத்தவும்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்கள் ஜனவரி முதல் வாரத்தில் நிரப்பப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்

உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்கள் ஜனவரி முதல் வாரத்தில் நிரப்பப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

TANCEM RECRUITMENT 2019 | TANCEM அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.

 • TANCEM RECRUITMENT 2019 | TANCEM  அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
 • பதவி : GENERAL MANAGER .
 • மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 1 .
 • விண்ணப்பிக்க கடைசி நாள் : 15.12.2019.
 • இணைய முகவரி : www.tancem.com
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

கல்வித்துறை அதிகாரிகள் இடமாற்றம் அரசாணை வெளியீடு

தமிழ்நாடு பள்ளிக்கல்வி பணியில் வகுப்பு-1-ஐ சார்ந்த இயக்குனர் மற்றும் அதற்கு சமமான பணியிடங்களில் பணிபுரியும் கல்வித்துறை அதிகாரிகள் நிர்வாக நலன் கருதி பணி இடமாறுதல் வழங்கி அரசு ஆணையிடுகிறது. அதன் விவரம் வருமாறு:-

மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இயக்குனராக இருந்த மு.பழனிசாமி, தொடக்கக்கல்வி இயக்குனராகவும், தொடக்கக்கல்வி இயக்குனராக இருந்த எஸ்.சேதுராமவர்மா ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் செயலராகவும் இடமாறுதல் செய்யப்படுகின்றனர்.

ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் செயலராக இருந்த த.உமா, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இயக்குனராக நியமிக்கப்படுகிறார்.

மேற்கண்ட தகவல் பள்ளிக்கல்வி துறை செயலாளர் பிரதீப் யாதவ் வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

ஆங்கிலத்தில் வாசிக்க திணறிய பள்ளி ஆசிரியர்கள் சஸ்பெண்ட்

உ.பி.யில் ஆங்கிலத்தில் வாசிக்க திணறிய பள்ளி        ஆசிரியர்கள் சஸ்பெண்ட் இந்தப் பள்ளியில் உன்னாவ் மாவட்ட ஆட்சியர் தேவேந்திர குமார் பாண்டே கடந்த 28-ம் தேதி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது, 6-ம் வகுப்புக்கு சென்ற ஆட்சியர், மாணவர்களிடம் இந்தி மொழியிலான பாடப்புத்தகத்தை கொடுத்து வாசிக்க கூறியிருக்கிறார். அதனை பெரும்பாலான மாணவர்கள் தவறில்லாமல் வாசித்துள்ளனர்.

பின்னர், ஆங்கில புத்தகத்தை அவர்களிடம் கொடுத்து அதனை வாசிக்குமாறு ஆட்சியர் கூறினார். ஆனால், ஒரு மாணவர் கூட அந்தப் புத்தகத்தை பிழையில்லாமல் வாசிக்கவில்லை எனத் தெரிகிறது. இதனைத் தொடர்ந்து, அந்த வகுப்பு ஆசிரியரை அழைத்த ஆட்சியர், அவரிடம் அப்புத்தகத்தை கொடுத்து வாசிக்குமாறு கூறியுள்ளார்.

ஆனால், ஆசிரியரும் ஆங்கிலம் வாசிக்க முடியாமல் திணறியுள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஆட்சியர், அந்த ஆசிரியரை உடனடியாக இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார். அதேபோல், அப்பள்ளியின் 8-ம் வகுப்பு ஆசிரியர் ஒருவரையும் ஆங்கிலம் வாசிக்க தெரியாததால் ஆட்சியர் இடைநீக்கம் செய்தார்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

என்எம்எம்எஸ் தேர்வு தள்ளிவைப்பு

கனமழை காரணமாக, இன்று நடைபெறுவதாக இருந்த மத்திய அரசின் கல்வி உதவித்தொகைக் கான என்எம்எம்எஸ் தேர்வு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் தேசிய வரு வாய்வழி மற்றும் திறன் படிப்பு உதவித் தொகைத் திட்டத்தின்கீழ் அரசுப்பள்ளிகளில் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படுகி றது. இதற்காக மாணவர்க ளுக்கு என்எம்எம்எஸ் தேர்வு நடத்தப்படும். இதில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு 9 முதல் பிளஸ் 2 முடிக்கும் வரை மாதந் தோறும் ரூ.500 உதவித்தொகை யாக வழங்கப்படும். நடப்பாண் டுக்கான என்எம்எம்எஸ் தேர்வு இன்று நடைபெற இருந்தது. இத்தேர்வு கனமழை காரணமாக தள்ளிவைக்கப்பட்டது. தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்தது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

ஆசிரியர் வருமானத்தை கண்காணிக்க முடிவு வங்கி கணக்கு விவரங்களை சமர்ப்பிக்க கல்வித் துறை உத்தரவு 

ஆசிரியர்களின் வங்கிக் கணக்கு விவரங்களை எமிஸ் இணைய தளத்தில் பதிவேற்றம் செய்ய பள்ளிக்கல்வித் துறை உத்தர விட்டுள்ளது.

தமிழக பள்ளிக்கல்வி துறையின் கீழ் 37,211 அரசுப் பள்ளிகள் இயங்கு கின்றன. இவற்றில் சுமார் 2.3 லட்சம் ஆசிரியர்கள் பணி புரிகின்றனர். இதற்கிடையே அரசுப் பள்ளிகளின் தரத்தை மேம் படுத்த அரசு பல்வேறு நட வடிக்கைகளை மேற்கொண்டு வரு கிறது. அதன் தொடர்ச்சியாக ஆசிரியர்கள் செயல்பாடுகளைக் கண்காணிப்பதில் பள்ளிக்கல்வித் துறை தீவிரம் காட்டுகிறது.

கற்றல் பணிவிவர தின திவேடு, சொத்து விவரம், பிள்ளைகள் எந்த பள்ளியில் படிக்கின்றனர் என ஆசிரியர்கள் தொடர்பான அனைத்து தகவல்களும் கல்வி தகவல் மேலாண்மை முகமை (எமிஸ்) இணையதளம் வழியாக சேகரிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் ஆசிரியர்கள் வைத்துள்ள அனைத்து வங்கி கணக் குகள் மற்றும் பான் கார்டு விவ ரங்களை எமிஸ் இணையதளத்தில் பதிவு செய்ய பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இதற்காக எமிஸ் இணையதளத்தில் பிரத்யேக வசதிகள் செய்யப்பட்டுள் ளன. இந்த பணிகளை விரைவாக முடிக்கவும் அறிவுறுத்தப் பட்டுள்ளது. ஆசிரியர்களின் வருமானம், பணப் பரிமாற்றம் உள்ளிட்ட செயல்பாடுகளைக் கண்காணிக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

அரசுப் பள்ளி மாணவர்களின் திறனை கண்டறிய ‘நாட்டமறி தேர்வு’ பள்ளிக்கல்வித் துறை புதிய முயற்சி 

அரசுப் பள்ளி மாணவர்களின் வேலைவாய்ப்புக்கும் உயர் கல்வியை தேர்வு செய்யவும் வழி காட்டும் வகையில் பிரத்யேக திறனறி தேர்வு நடத்த பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது.

நம்நாட்டில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்று பள்ளிக்கல்வியை முடிக் கும் மாணவர்கள் தங்களுக்கு ஏற்ற உயர்கல்வி படிப்புகளை தேர்வு செய்வதில் சிரமங்களைச் சந்திக்கின்றனர். இதனால் விருப்ப மற்ற துறைகளில் படிப்பதால் மாணவர்களின் எதிர்காலம் கேள்வி யாகிறது. இதற்கு பள்ளிகளிலேயே மாணவர்களின் திறன்களை கண்டறிய கல்வியாளர்கள் வலி யுறுத்தி வந்தனர்.

இந்நிலையில் மத்திய மனித வளமேம்பாட்டுத் துறை, தேசியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி குழுமம் (என்சிஇ ஆர்டி) உதவியுடன் ‘டமன்னா’ என்ற திறனறித் தேர்வு முறை வடிவமைத்துள்ளது. அதன்படி, வாய்மொழித்திறன், மொழித்திறன் என மொத்தம் 7 தலைப்புகளில் கணினி வழியில் இந்தத் தேர்வு நடைபெறும். சிபிஎஸ்இ பள்ளிகளில் சமீபத்தில் அறி முகம் செய்யப்பட்டு நல்ல வர வேற்பு கிடைத்துள்ளது. அதைத் தொடர்ந்து மற்ற மாநிலங்களிலும் இத்தேர்வு முறையை பின்பற்ற மத்திய அரசு அறிவுறுத்தியது.

அதன்படி, தமிழகத்தில் திறனறி தேர்வு நடத்துவது குறித்து பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் கூறிய தாவது: பள்ளிகள் அளவில் ‘நாட்ட மறித் தேர்வு’ நடத்தப்பட உள்ளது. என்சிஇஆர்டி வடிவமைத்த டமன்னா தேர்வு முறையில் நம்கல்வி முறைக்கேற்ப சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, பாடத்திட்டத்துக்கு அப்பாற்பட்டு மொழி, கணிதம், அறிவியல், பொது அறிவு உட்பட பல்வேறு பிரிவுகளின்கீழ் ஒரு மணி நேரம் தேர்வு நடைபெறும்.

இந்தத் தேர்வை அரசுப் பள்ளிகளில் 9, 10-ம் வகுப்புகள் படிக்கும் 8 லட்சத்து 45,218 பேர் கணினி வழியில் எழுத உள்ளனர். தமிழ், ஆங்கிலத்தில் தேர்வு நடைபெறும். இதற்கான வழிகாட்டு கையேட்டில் மதிப் பெண்கள் வழங்குவது குறித்து வழிகாட்டுதல்கள் உள்ளன. இந்தத் தேர்வில் பெறும் மதிப் பெண்களைக் கொண்டு மாண வர்களின் தனித் திறமைகளை எளிதாக அறியலாம். இதன்மூலம் உயர்கல்வியை சிரமமின்றி தேர்வு செய்து படிக்கலாம்.

இதுதவிர மாணவர்களுக்கு எந்த துறையில் ஆர்வமுள்ளது என்பதை கண்டறிந்து அதில் சிறந்து விளங்கும் கல்வியாளர்கள், நிபுணர்கள் மூலம் அவர்களுக்கு வழிகாட்டுதல்கள் வழங்கப்படும். இந்தத் தேர்வை நடத்துவதற்கு மாவட்டம் மற்றும் வட்டார அளவில் குழுக்கள் அமைக்கப்பட உள்ளன. கணினி வசதியுள்ள பள்ளிகளை கண்டறியும் பணி கள் தொடங்கியுள்ளன. அனைத்து பணிகளையும் முடித்து ஜனவரியில் தேர்வு நடத்தப்படும்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

நாகப்பட்டினம் மாவட்டம் வடகரையில் ஒரே ஒரு மாணவிக்காக 4 பேர் பணியாற்றும் அரசுப் பள்ளி சுகாதாரத்தை மேம்படுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்த வலியுறுத்தல்

நாகை மாவட்டம் வடகரை கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய பெண்கள் தொடக்கப் பள்ளியில் பயிலும் ஒரே ஒரு மாணவிக்காக 4 பேர் பணியாற்றி வருகின்றனர். மாணவர் சேர்க்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செம்பனார்கோவில் ஒன்றியம் இளை யாளூர் ஊராட்சிக்கு உட்பட்ட வடகரையில் உள்ள பெண்கள் தொடக்கப் பள்ளி 1949-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இப்பள்ளியில் அதிக அளவில் பெண்கள் படித்து வந்தனர். தனியார் பள்ளி மோகத்தாலும், நகர்ப்புற பள்ளிகளில் மேல்நிலைக் கல்வி வரை ஒரே பள்ளியில் படிக்கலாம் என்பதாலும், ஆங்கில அறிவு மேம்பட வேண்டும் என் பதற்காகவும் சுற்று வட்டார கிராம மக்கள் தங்கள் பிள்ளைகளை நகர்ப்புறங்களில் உள்ள பள்ளிகளில் சேர்த்து வருகின்றனர்.

இதனால் கடந்த ஆண்டு வடகரை பெண்கள் தொடக்கப் பள்ளியில் 4 மாணவிகள் மட்டுமே படித்து வந்த நிலை யில் அவர்களில் 3 பேர் வேறு பள்ளியில் சேர்ந்துவிட்டதால், தற்போது ஒரே ஒரு மாணவி மட்டுமே பயில்கிறார். இப்பள்ளியில் தலைமை ஆசிரியர், உதவி ஆசிரியர், சமையலர், உதவியாளர் என 4 பேர் வேலை பார்த்து வருகின்றனர்.

அரசு நிதி விரயமாவதை தவிர்க்க 5 மாணவர்களுக்கு குறைவாக மாணவர் சேர்க்கை உள்ள பள்ளிகளின் தலைமை ஆசிரியர் பணியிடத்தை காலியிடமாக வைத்துவிட்டு, தலைமை ஆசிரியரை வேறு பள்ளிக்கு கல்வித் துறை இடமாற்றம் செய்து வருகிறது. இந்நிலையில், வடகரை பெண்கள் தொடக்கப் பள்ளியில் பணியாற்றிவரும் உதவி ஆசிரியரை வேறு பள்ளிக்கு இடமாறுதல் செய்து ஆணை வழங்கப்பட்டுள்ளது. ஆனால், அவர் அப்பள்ளிக்கு செல்லாமல் வடகரை பெண்கள் தொடக்கப் பள்ளியிலேயே பணியாற்றி வருகிறார்.

இப்பள்ளியின் அருகில் கழிவுகள் தேங்கும் தொட்டி உள்ளது. மேலும் திறந்த வெளி கழிப்பறையாக உள்ள ஆற்றங் கரைக்கு அருகில் இப்பள்ளி உள்ள நிலையில் மழைக்காலம் என்பதால் மதியம் 3 மணிக்கே கொசுக்களின் தொல்லை அதிகரித்து விடும். இங்கு தங்கள் பிள் ளைகளைச் சேர்த்தால் ஆரோக்கிய குறைவு ஏற்படும் என்பதால் வேறு பள்ளிகளில் சேர்ப்பதாக பெற்றோர் தெரிவிக்கின்றனர்.

எனவே மாவட்ட ஆட்சியர், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஆகியோர் ஆய்வு செய்து வடகரை பள்ளியில் மாணவிகளின் சேர்க்கையை அதிகப்படுத்த விழிப்புணர்வு பிரச்சாரம் செய்ய வேண்டும். மேலும், வடகரை பெண்கள் தொடக்கப் பள்ளியின் சுற்றுச்சூழலைக் காப்பதுடன் சுகாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுதொடர்பாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தினரை தொடர்புகொண்டு கேட்டபோது, ‘‘வரும் கல்வி ஆண்டில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றனர்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Saturday, 30 November 2019

இந்திய அரசு மனித வள மேம்பாட்டு அமைச்சகம் உயர்கல்வி துறை அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : ஆரோவில்லே பவுண்டேஷன் செயலாளர் . விண்ணப்பிக்க கடைசி நாள் : 10.12.2019.

 • இந்திய அரசு மனித வள மேம்பாட்டு அமைச்சகம் உயர்கல்வி துறை அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
 • பதவி : ஆரோவில்லே பவுண்டேஷன் செயலாளர்  .
 • விண்ணப்பிக்க கடைசி நாள் : 10.12.2019.
 • இணைய முகவரி : www.mhrd.gov.in
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

E.Mail Free Subsciption

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

After registration, We will send an activation link to your "Inbox". Click on the link to complete registration process.