TRB

Friday, 18 May 2012

ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு வேண்டுகோள் : தெற்கு ரெயில்வேயில் டிக்கெட் பரிசோதகர்கள் தேர்ந்தெடுப்பதற்கான போட்டித்தேர்வு 27-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது. அதேநாளில் 2995 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களை தேர்வு செய்ய ஆசிரியர் தேர்வு வாரியமும் போ

டிக்கெட் பரிசோதகர்-முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு: ஒரே நாளில் இரண்டு போட்டித்தேர்வுகள் தள்ளி வைக்க ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு வேண்டுகோள்

ரெயில்வே டிக்கெட் பரிசோதகர் தேர்வும், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வும் ஒரே நாளில் (27-ந் தேதி ) நடத்தப்படுவதால், இரண்டு தேர்வுகளுக்கும் விண்ணப்பித்த மாணவர்கள் எதை எழுதுவது? எதை விட்டு விடுவது? என்ற குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.

தெற்கு ரெயில்வேயில் டிக்கெட் பரிசோதகர்கள் தேர்ந்தெடுப்பதற்கான போட்டித்தேர்வு 27-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது. அதேநாளில் 2995 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களை தேர்வு செய்ய ஆசிரியர் தேர்வு வாரியமும் போட்டித்தேர்வை நடத்துகிறது. கணிசமான மாணவர்கள் இரண்டு தேர்வுகளுக்கும் விண்ணப்பித்து இருக்கிறார்கள்.

தமிழ்நாட்டைப் பொருத்தவரையில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) என்றாலும் சரி, ஆசிரியர்களை தேர்வுசெய்யும் ஆசிரியர் தேர்வு வாரியம் என்றாலும் சரி ஒரு போட்டித் தேர்வுக்கு நாள் முடிவு செய்யும் போது அந்த தினத்தில் மத்திய அரசு பணிகளுக்கான போட்டித் தேர்வோ, ஸ்டாப் செலக்ஷன் கமிஷன் தேர்வோ, ரெயில்வே போட்டித்தேர்வோ நடத்தப்பட உள்ளதா? என்பது பார்த்துத்தான் முடிவு செய்வார்கள்.

ஆனால், இந்தமுறை என்ன காரணத்தினாலோ அல்லது கவனிக்காமல் விட்டு விட்டார்களோ தெரியவில்லை டிக்கெட் பரிசோதகர் தேர்வு நடைபெறும் மே 27-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அன்று ஆசிரியர் தேர்வு வாரியத்தின் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வும் நடத்தப்பட உள்ளது. ரெயில்வே தேர்வு அகில இந்திய அளவில் நடத்தப்படும் தேர்வு ஆகும்.

எனவே, ரெயில்வே நிர்வாகம் டிக்கெட் பரிசோதகர் தேர்வு தேதியை மாற்றி அமைப்பது என்பது கடினம். ஆனால், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தேர்வு தமிழ்நாட்டில் மட்டும் நடத்தப்படுகிற தேர்வு. எனவே, தேர்வு தேதியை வேறொரு தேதிக்கு தள்ளிவைப்பதில் சிரமம் இருக்காது. ஒரேநாளில் இரண்டு தேர்வுகளும் நடப்பதால், இரண்டு தேர்வுகளுக்கும் விண்ணப்பித்த மாணவ-மாணவிகள் எந்த தேர்வை எழுதுவது? எந்த தேர்வை விட்டுவிடுவது? என்று குழம்பிப் போயுள்ளனர்.

இரண்டு தேர்வுகளையும் எழுத வசதியாக ஆசிரியர் தேர்வு வாரியம் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வை ஒரு வாரமோ அல்லது 2 வாரமோ கழித்து வசதிப்படி வேறொரு தேதிக்கு தள்ளி வைக்க வேண்டும் என்று மாணவ-மாணவிகள் எதிர்பார்க்கிறார்கள்.

 

ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு வேண்டுகோள் : தெற்கு ரெயில்வேயில் டிக்கெட் பரிசோதகர்கள் தேர்ந்தெடுப்பதற்கான போட்டித்தேர்வு 27-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது. அதேநாளில் 2995 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களை தேர்வு செய்ய ஆசிரியர் தேர்வு வாரியமும் போட்டித்தேர்வை நடத்துகிறது. கணிசமான மாணவர்கள் இரண்டு தேர்வுகளுக்கும் விண்ணப்பித்து இருக்கிறார்கள். இரண்டு தேர்வுகளையும் எழுத வசதியாக ஆசிரியர் தேர்வு வாரியம் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வை வேறொரு தேதிக்கு தள்ளி வைக்க வேண்டும் என்று தேர்வுகளுக்கு விண்ணப்பித்த மாணவ-மாணவிகள் எதிர்பார்க்கிறார்கள்.

 

No comments:

Popular Posts

E.Mail Free Subsciption

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

After registration, We will send an activation link to your "Inbox". Click on the link to complete registration process.