TRB

TNTET

Friday, 7 September 2012

அக்டோபர் 2012-ல் நடைபெறவுள்ள மேல்நிலைத் தேர்விற்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான தனித்தேர்வர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க Online நடைமுறை புதிதாக அறிமுகப்படுத்தப்படுகிறது. தனித்தேர்வர்கள் www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் 07.09.2012 (வெள்ளிக்கிழமை) முதல் 12.09.2012 (புதன்கிழமை) மாலை 5.45 மணிவரை அனைத்து நாட்களிலும் தங்கள் விண்ணப்பத்தினை பதிவு செய்யலாம்.

அக்டோபர் 2012-ல் நடைபெறவுள்ள மேல்நிலைத் தேர்விற்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான தனித்தேர்வர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.  இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க Online நடைமுறை புதிதாக அறிமுகப்படுத்தப்படுகிறது. தனித்தேர்வர்கள்  www.dge.tn.nic.in  என்ற இணையதளத்தில்  07.09.2012                 (வெள்ளிக்கிழமை) முதல் 12.09.2012 (புதன்கிழமை)  மாலை 5.45 மணிவரை அனைத்து நாட்களிலும் தங்கள் விண்ணப்பத்தினை பதிவு செய்யலாம்.   பூர்த்தி செய்த விண்ணப்பத்தினையும், தேர்வுக் கட்டணம் செலுத்துவதற்கான சலானையும்    12.09.2012 வரை மட்டுமே பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.    தேர்வுக் கட்டணத்தைச் செலுத்த வேண்டிய இறுதி தேதி 13.09.2012 (வியாழக்கிழமை).  செலுத்த வேண்டிய நேரம் வங்கியின் விதிகளுக்குட்பட்டதாகும். தேர்வர்கள் Online மூலம் விண்ணப்பித்தாலும், பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பத்தில், தனித்தேர்வரின் புகைப்படத்தை ஒட்டி, அவர் இறுதியாகப் பயின்ற பள்ளியிலோ அல்லது இருப்பிட முகவரிக்கு அருகாமையில் உள்ள மேல்நிலைப்பள்ளியிலோ தலைமை ஆசிரியரின் சான்றொப்பம் பெற்று, அவர்தம் வருவாய் மாவட்டத்திற்கெதிரே குறிப்பிடப்பட்டுள்ள அரசுத் தேர்வுகள் மண்டல அலுவலக முகவரிக்கு மேற்படி பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தையும், தேர்வுக்கட்டணம் செலுத்திய இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் சலான் மற்றும் உரிய இணைப்புகளையும்  பதிவஞ்சல் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ 18.09.2012 (செவ்வாய்கிழமை) -க்குள் சேருமாறு சமர்ப்பிக்கவேண்டும்.

No comments: