TRB

Friday, 7 September 2012

ஆசிரியர் தகுதி மறுதேர்வு எழுதுவோருக்கு வரும் திங்கள்கிழமை முதல் ஹால் டிக்கெட்டுகள் அனுப்பப்படும்

ஆசிரியர் தகுதி மறுதேர்வு எழுதுவோருக்கு வரும் திங்கள்கிழமை முதல் ஹால் டிக்கெட்டுகள் அனுப்பப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.

இதுதொடர்பாக, அந்த வட்டாரங்கள் மேலும் கூறியது: ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கான மறுதேர்வு அக்டோபர் 3-ம் தேதி நடைபெறுகிறது. சுமார் 6 லட்சத்துக்கும் அதிகமானோர் இந்தத் தேர்வை எழுதுகின்றனர்.இதற்காக ஆயிரத்துக்கும் மேற்பட்ட தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.ஆசிரியர் தகுதித் தேர்வில் வினாத்தாள் மாற்றம் போன்ற தவறுகள் நடைபெற்ற 5 தேர்வு மையங்கள் இந்தமுறை மாற்றப்பட்டுள்ளன.

அதேபோல், புதிதாக 10-க்கும் மேற்பட்ட தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு தேர்வு மையத்திலும் 400 முதல் 600 தேர்வர்கள் மட்டுமே இருக்கும் வகையில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மறுதேர்வுக்கான 90 சதவீதப் பணிகள் இப்போது நிறைவடைந்துள்ளன.அரசாணை வெளியீடு: மறுதேர்வு நடைபெறும் அக்டோபர் 3-ம் தேதி புதன்கிழமை ஆகும். அனைத்து ஆசிரியர்களும் இந்தத் தேர்வை எழுதும் வகையில் அன்றைய தினம் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அரசாணையும் வெளியாகியுள்ளதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

No comments:

Popular Posts

E.Mail Free Subsciption

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

After registration, We will send an activation link to your "Inbox". Click on the link to complete registration process.