TRB

Wednesday, 21 November 2012

குரூப்-2 தேர்வு நேர்காணல் அல்லாத பதவிகளுக்கான கவுன்சிலிங் வியாழக்கிழமை தொடங்குகிறது

குரூப்-2 தேர்வில் நேர்காணல் அல்லாத பதவிகளுக்கான பணி ஒதுக்கீட்டு கவுன்சிலிங் வியாழக்கிழமை தொடங்குகிறது. இதற்கு அழைக்கப்பட்டோரின் பட்டியல் டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.இதுதொடர்பாக டி.என்.பி.எஸ்.சி. செயலாளர் எம்.விஜயகுமார் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

குருப்-2 தேர்வில் நேர்காணல் அல்லாத பதவிகளுக்கான கவுன்சிலிங்கிற்கு அனுமதிக்கப்பட்டுள்ள விண்ணப்பதாரர்களின் பதிவுஎண்கள் அடங்கிய பட்டியல் டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் (ஷ்ஷ்ஷ்.tஸீஜீsநீ.ரீஷீஸ்.வீஸீ) வெளியிடப்பட்டு இருக்கிறது.கவுன்சிலிங் நாளை (22&ந் தேதி) தொடங்கி டிசம்பர் மாதம் 1-ந் தேதி வரை (நவம்பர் 24, 25 நீங்கலாக) நடைபெறும். கவுன்சிலிங் நடைபெறும் நாள், நேரம் ஆகிய விவரங்கள் அடங்கிய அழைப்புக்கடிதத்தை மேற்கண்ட இணையதளத்தில் இருந்து டவுன்லோடு செய்துகொள்ளுமாறு விண்ணப்பதாரர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

3,220 காலி பணி இடங்களை நிரப்பும் பொருட்டு 4,838 விண்ணப்பதாரர்கள் கவுன்சிலிங்கில் கலந்துகொள்ள தற்காலிகமாக அனுமதிக்கப்பட்டு உள்ளார்கள். இந்த கவுன்சிலிங் மூலம் 3,220 பேர் மட்டுமே தேர்வு செய்யப்படுவார்கள். எனவே, கவுன்சிலிங்கிற்கு அழைக்கப்பட்ட அனைவரும் மேற்படி பணி இடங்களுக்கு தெரிவுபெறுவதற்கான எவ்வித உரிமையையும் கோர இயலாது.கவுன்சிலிங்கிற்கு அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் சென்னை பாரிமுனை பிரேசர் பால சாலையில் (அரசு பல் மருத்துவக்கல்லூரி அருகில்) அமைந்துள்ள டி.என்.பி.எஸ்.சி. புதிய அலுவலகத்தில், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நாளில் கவுன்சிலிங்கில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அவ்வாறு வருகைதர தவறும் பட்சத்தில் பின்னர் பங்கேற்க வாய்ப்பு அளிக்கப்படாது. அதோடு அவர்கள் தங்கள் தரவரிசை முன்னுரிமையையும் இழக்க நேரிடும்.இவ்வாறு விஜயகுமார் கூறியுள்ளார்.

No comments:

Popular Posts

E.Mail Free Subsciption

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

After registration, We will send an activation link to your "Inbox". Click on the link to complete registration process.