TRB

TNTET

Wednesday, 30 January 2013

10ம் வகுப்பு தேர்வில் ஆள்மாறாட்டம் : புதுவை முன்னாள் அமைச்சர் மீதான வழக்கில் 31ம் தேதி தீர்ப்பு

புதுச்சேரியில் அமைச்சராக இருந்த கல்யாண சுந்தரம், 2011ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் நடந்த 10ம் வகுப்பு தனித் தேர்வு எழுத விண்ணப்பித்தார். ஆனால், தேர்வு நாளன்று ஆள்மாறாட்டம் செய்து வேறு நபரை வைத்து தேர்வு எழுதியதாக புகார் எழுந்தது.

இது விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். தேர்வு மைய கண்காணிப்பாளராக இருந்த ஆசிரியர் ஆதவன், திண்டிவனம் கல்வி மாவட்ட அலுவலக உதவியாளர் ரஜினிகாந்த் ஆகியோர் மீது திண்டிவனம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. சாட்சி விசாரணை கடந்த செப்டம்பர் 5ம் தேதி தொடங்கியது.

விழுப்புரம் மாவட்ட அப்போதைய முதன்மை கல்வி அலுவலர் குப்புசாமி, அப்போதைய திண்டிவனம் கல்வி மாவட்ட அலுவலர் சண்முகம், தேர்வுத் துறை இயக்குனர் வசுந்தராதேவி, விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சங்கர் உட்பட மொத்தம் 56 சாட்சிகளிடம் விசாரனை நடந்தது.

இந்த வழக் கில் நேற்று (29ந் தேதி) தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதன்படி நீதிபதி சரிதா முன்னிலையில் இறுதிகட்ட விவாதம் நடந்தது. புதுவை முன்னாள் அமைச்சர் கல்யாணசுந்தரம் சார்பில் வழக்கறிஞர் அரியலூர் சிவ குமார் ஆஜராகி வாதிட் டார்.

இதையடுத்து, கல்யாண சுந்தரம் மீதான ஆள்மாறாட்ட வழக்கில் தீர்ப்பை 31ம் தேதிக்கு (நாளை) ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

No comments: