TRB

Thursday, 7 February 2013

மார்ச் 2013 பத்தாம் வகுப்பு அறிவியல் பாட செய்முறைத்தேர்வு பள்ளி மாணவர்களுக்கு 20.02.2013 முதல் 28.02.2013 வரை நடைபெற உள்ளதாக தேர்வுத்துறை அறிவித்துள்ளது.



மார்ச் 2013-ல் நடைபெறவுள்ள இடைநிலைப்பள்ளி விடுப்புச் சான்றிதழ் பொதுத் தேர்வுக்கு பள்ளி மாணவர்களுக்கு அந்தந்த பள்ளிகளிலேயே கடந்த ஆண்டினைப் போலவே செய்முறைத் தேர்வினை 20.02.2013 முதல் 28.02.2013 வரை நடத்திடவும், நேரடித் தனித்தேர்வராக (Direct Private Candidates) வருகைபுரியும் தனித்தேர்வர்களுக்கு அறிவியல் பாடத்திற்கான செய்முறைத் தேர்வுகளுக்கு அனுமதித்தல் சார்ந்தும் கீழ்க்கண்ட அறிவுரைகள் வழங்கப்படுகின்றன.

1.         தேர்வர்கள், தாம் செய்முறை வகுப்புகளில் கலந்துகொண்ட பள்ளிகளிலேயே செய்முறைத் தேர்வுகளுக்கு வருகை புரிய வேண்டும்.
2.         தேர்வர்களுக்கு அனுமதிச்சீட்டு மட்டுமே தற்போது வழங்கப்படுகிறது. இவ்வனுமதிச்சீட்டின் அடிப்படையில், செய்முறைத் தேர்வுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது. கருத்தியல் பாடத்திற்கான தேர்வுக்கூட அனுமதிச்சீட்டு, தேர்வர்களின் புகைப்படத்துடன் பின்னர் தனியே அனுப்பி வைக்கப்படும். இதனை அடிப்படையாகக் கொண்டே, கருத்தியல் பாடத்திற்கு தேர்வர்களை அனுமதிக்க வேண்டும்.
3.         செய்முறைத் தேர்வுகள் நடைபெறும் மையங்கள்/நாட்கள் குறித்த விவரத்தினை தேர்வர்களுக்கு மாவட்டக் கல்வி அலுவலர்கள் தெரிவிக்க வேண்டும்.
4.         தேர்வர்களுக்கு, அறிவியல் பாட செய்முறைத் தேர்வுக்கு அனுமதிக்கும் பொருட்டு, தற்போது அனுப்பி வைக்கப்படும் அனுமதிச்சீட்டு(Admission slips) மற்றும் கருத்தியல் பாடத்திற்குப் பின்னர் அனுப்பி வைக்கப்படவுள்ள தேர்வர்களின் புகைப்படத்துடன் கூடிய அனுமதிச்சீட்டு ஆகியவற்றை சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலர்களே தேர்வர்களுக்கு வழங்குதல் வேண்டும்.
5.         ஒரு பெயர்பட்டியலில் காணப்படும் தேர்வர்கள், வேறு வேறு செய்முறைத் தேர்வு மையங்களுக்குத் தொடர்பு உடையவர்களாக இருந்தால், பெயர்ப்பட்டியலை நகல் எடுத்து சம்பந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியர்களுக்கு வழங்குதல் வேண்டும்.

No comments:

Popular Posts

E.Mail Free Subsciption

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

After registration, We will send an activation link to your "Inbox". Click on the link to complete registration process.