TRB

TNTET

Monday, 18 February 2013

சமுதாய ஏற்றத்தாழ்வுகளை கல்வியால் மட்டுமே சரி செய்ய முடியும் என்று தமிழ்நாடு தேர்வாணையக்குழு தலைவர் ஆர்.நட்ராஜ் பேசினார்.

எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்–2 வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வில் வெற்றி பெற வேண்டி வேலூர் அடுத்த ஸ்ரீபுரம் நாராயணி பீடத்தில் சரஸ்வதி யாக பூஜை நேற்று நடந்தது. தங்ககோவிலை உருவாக்கிய சக்தி அம்மா தலைமை தாங்கினார். விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு தேர்வாணையக்குழு (டி.என்.பி.எஸ்.சி.) தலைவர் ஆர்.நட்ராஜ் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–1992–ம் ஆண்டு இங்கு டி.ஐ.ஜி.யாக பணிபுரிந்தபோது இந்த இடம் வெட்டவெளியாக இருந்தது. தற்போது சக்தி அம்மாவின் முயற்சியால் கண்ணுக்கு குளிர்ச்சியாக, பச்சைபசேல் என்று ரம்மியமாக, கம்பீரமாக இந்த இடம் திகழ்கிறது. நீங்கள் அனைவரும் பாக்கியசாலிகள். இங்கு படிக்கும் மாணவ–மாணவிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளவேண்டும்.

சமுதாயத்தில் எத்தனையோ ஏற்றத்தாழ்வுகள் உள்ளன. கல்வி ஒன்றுதான் ஏற்றத்தாழ்வுகளை தகர்த்தெறியும் சக்தியாக உள்ளது. எனவே, கல்வியால் தான் சமுதாயத்தில் ஏற்றத்தாழ்வுகளை நிவர்த்தி செய்ய முடியும். கல்வியில் எல்லோரும் சிறந்து விளங்க வேண்டும். நாம் மட்டும் முன்னேற வேண்டும் என்று எண்ணாமல் நம்மை சுற்றி இருப்பவர்களும் முன்னேற வேண்டும் என்று சக்தி அம்மா செயல்படுகிறார். இந்த நாட்டின் எதிர்காலம் மாணவர்களிடம் உள்ளது. எனவே மாணவர்கள் பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பெருமை சேர்க்கும் வகையில் இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.விழாவில் சக்தி அம்மா பேசியதாவது:–

அனைத்து மாணவ–மாணவிகளும் எதிர்காலம் நன்றாக அமைய வேண்டும் என்று எதிர்பார்ப்பு இருக்கும். எதிர்காலம் வந்தால் போதாது, அது பிரகாசமான, ஒளிமயமான, நல்ல எதிர்காலமாக இருக்க வேண்டும். நேற்று என்பது முடிந்து போன விஷயம், நாளை என்பது என்னவென்று தெரியாது. எனவே, இன்றைய நிகழ்காலத்தில் நல்ல வழியில் நாம் பயன்படுத்தினால் எதிர்காலம் நன்றாக இருக்கும்.2020–ல் இந்தியா வல்லரசாக வேண்டும். அதற்கு நீங்கள் நன்றாக வந்தால் இந்தியா வல்லரசாகும். வல்லரசோடு நல்லரசாகவும் இருக்க வேண்டும். அதற்கு படிப்பு மட்டும் இருந்தால் போதாது. படிப்புடன் ஆன்மிகமும், பக்தியும் இருக்க வேண்டும்.படிப்பதால் கல்வி அறிவு மட்டும் கிடைக்கும். பக்தி, ஆன்மிகம் இருந்தால் ஒழுக்கம், நல்ல எண்ணம் கிடைக்கும். நாம் சமுதாயத்துக்கு பயன்பட வேண்டும். பழங்காலத்தில் மன்னர்கள் தங்களின் பிள்ளைகளை குருகுலத்துக்கு அனுப்பி வைத்தனர். கல்வி மட்டுமல்லாமல், வீரம், ஒழுக்கம், சத்தியம், ஆன்மிகம் உள்பட அனைத்தையும் அங்கு கற்று தந்தனர்.உங்களுக்கு மட்டும் நல்ல எதிர்காலமாக இல்லாமல் சமுதாயத்துக்கும் நல்ல எதிர்காலமாக இருக்க நீங்கள் பாடுபட வேண்டும்.இவ்வாறு சக்தி அம்மா பேசினார்.

No comments: