TRB

Friday, 15 March 2013

ப்ளஸ் 2 இயற்பியல் தேர்வு வினாத்தாளுக்குரிய விடை எழுதிய அட்டை பள்ளி வளாகத்தில் கிடந்த விவகாரம் தொடர்பாக, சம்மந்தப்பட்ட தனியார் பள்ளியின் தேர்வு மைய அங்கீகாரத்தை, அரசு தேர்வுத்துறை இயக்குனர் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.

ப்ளஸ் 2 இயற்பியல் தேர்வு வினாத்தாளுக்குரிய விடை எழுதிய அட்டை பள்ளி வளாகத்தில் கிடந்த விவகாரம் தொடர்பாக, சம்மந்தப்பட்ட தனியார் பள்ளியின் தேர்வு மைய அங்கீகாரத்தை, அரசு தேர்வுத்துறை இயக்குனர் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.

நாமக்கல் மாவட்டத்தில், 62 மையங்களில் ப்ளஸ் 2 பொதுத்தேர்வு நடக்கிறது. மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர், கூடுதல் முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர், தொடக்க கல்வி அலுவலர் ஆகியோர் தலைமையில், 271 பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.

பறக்கும் படையினர் தேர்வு நடக்கும் மையங்களில் திடீர் சோதனை மேற்கொண்டு, முறைகேடுகளை கண்டறியும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தவிர, பள்ளி கல்வித்துறை இணை இயக்குனர்கள் கார்மேகம், முத்து, பழனிசாமி ஆகியோர் நாமக்கல் மாவட்டத்தில் முகாமிட்டு, ப்ளஸ் 2 பொதுத்தேர்வை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

ஆய்வின் போது, சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நடவடிக்கை இருந்தால் முதன்மைக் கண்காணிப்பாளர், அறை கண்காணிப்பாளர் ஆகியோர் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். சில நாட்களுக்கு முன், 62 முதன்மை கண்காணிப்பாளர்கள் மற்றும், 13 மையங்களில் பணிபுரிந்த, 300க்கும் மேற்பட்ட அறைக் கண்காணிப்பாளர்கள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டனர்.

இச்சூழலில், இணை இயக்குனர்கள் கார்மேகம் தலைமையிலான அதிகாரிகள் கடந்த, 12ம் தேதி இயற்பியல் தேர்வின் போது, நாமக்கல் அருகே பொம்மைக்குட்டைமேட்டில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஆய்வுக்கு சென்றனர். அப்போது, பள்ளி வளாகத்தில் இயற்பியல் தேர்வு வினாத்தாளுக்குரிய பதில் எழுதிய அட்டைகள் பள்ளி வளாகத்தில் கிடந்ததை அதிகாரிகள் கண்டனர்.

அவற்றை கைப்பற்றிய அதிகாரிகள், பள்ளியில் இருந்த முதன்மை மற்றும் அறை கண்காணிப்பாளர்கள், பள்ளி நிர்வாகத்தினர் ஆகியோரிடம் தீவிர விசாரணை நடத்தினர். இச்சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், சம்மந்தப்பட்ட தனியார் பள்ளி தேர்வு மைய அங்கீகாரத்தை அரசு தேர்வுத் துறை இயக்குனர் ரத்து செய்து அறிவித்துள்ளார். இனி நடக்கும் ப்ளஸ் 2 தேர்வை, அப்பள்ளியை சேர்ந்த மாணவர்கள் அருகே உள்ள செல்லப்பம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் எழுத்த வேண்டும் எனவும், உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து மெட்ரிக் பள்ளிகளின் இணை இயக்குனர் கார்மேகம் கூறுகையில், ""சம்மந்தப்பட்ட தனியார் பள்ளி தேர்வு மையத்தை மாற்றி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், விடை எழுதிய அட்டைகள் கிடந்தது தொடர்பாக, விசாரணையும் தொடர்ந்து நடந்து வருகிறது,''என்றார்.

இதுகுறித்து நாமக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் குமார் கூறியதாவது:சம்மந்தப்பட்ட தனியார் பள்ளியில், 404 மாணவ, மாணவியர் தேர்வு எழுதுகின்றனர். அந்தப் பள்ளியின் தேர்வு மையத்தை, அரசு தேர்வுத் துறை இயக்குனர் மாற்றி உத்தரவிட்டுள்ளார். எனவே அப்பள்ளி மாணவ, மாணவியர் இனி வரும் தேர்வுகளை செல்லப்பம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் எழுதுவர். அதுபோல், எஸ்.எஸ்.எல்.ஸி., தேர்வும் சம்மந்தப்பட்ட பள்ளியில் நடக்காது. வேறு பள்ளியில் நடக்கும்,'' என்றார்.

No comments:

Popular Posts

E.Mail Free Subsciption

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

After registration, We will send an activation link to your "Inbox". Click on the link to complete registration process.