TRB

TNTET

Thursday, 7 March 2013

உதவி என்ஜினீயர் தேர்வுக்கான விடைகள் டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழக அரசின் வெவ்வேறு துறைகளில் 220 உதவி என்ஜினீயர் காலி பணி இடங்களை நிரப்பும் பொருட்டு டி.என்.பி.எஸ்.சி. கடந்த 2–ந் தேதி ஒரு போட்டித்தேர்வை நடத்தியது.


இந்த தேர்வை சென்னை உள்பட தமிழகம் முழுவதும் 52 ஆயிரம் என்ஜினீயரிங் பட்டதாரிகள் எழுதினார்கள். சென்னையில் மட்டும் ஏறத்தாழ 18 ஆயிரம் பேர் தேர்வில் கலந்து கொண்டனர்.

டி.என்.பி.எஸ்.சி. ஒரு தேர்வை நடத்தியதும் ஒரு சில நாட்களில் அந்த தேர்வுக்கான விடைகளை அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் இணையதளத்தில் வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் உதவி என்ஜினீயர் தேர்வுக்கான விடைகள் டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

விடைகளில் ஏதேனும் தவறுகள் இருந்தாலோ அல்லது சந்தேகம் ஏற்பட்டாலோ அதுகுறித்து வருகிற 12–ந் தேதிக்குள் டி.என்.பி.எஸ்.சி. அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று தேர்வு எழுதியவர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

No comments: