TRB

TNTET

Friday, 10 May 2013

மே 13 முதல் கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பம் வினியோகம்


இளங்கலை கால்நடை மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் மே 13ஆம் தேதி முதல் வினியோகிக்கப்பட உள்ளது.

இதுகுறித்து, நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வர் கே.ஏ.துரைசாமி வெளியிட்டுள்ள செய்தி:

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் 2013-14ஆம் ஆண்டு அளிக்கப்படும் கால்நடை மருத்துவம், மீன்வளம், உணவுத் தொழில்நுட்பம், கோழியின உற்பத்தி தொழில்நுட்ப படிப்புகளுக்கான இளங்கலை பிரிவில் சேர விண்ணப்பப் படிவங்கள் நாமக்கல் லத்துவாடியிலுள்ள கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆரய்ச்சி நிலையத்திலும், நாமக்கல் திருச்சி சாலையிலுள்ள கால்நடை மருத்துவமனை வளாகத்திலும் திங்கள்கிழமை (மே 13) முதல் வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பப் படிவத்துக்கான கட்டணம் ரூ.600, இதில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் ரூ.300 மட்டுமே செலுத்தினால் போதும். இந்தக் கட்டணத்தை யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா கிளையில் செலுத்தி ரசீது பெற்றுக் கொண்டு அந்த ரசீதுடன் விண்ணப்ப கடித்தை இணைத்து அளித்து விண்ணப்பத்தை பெற்றுக் கொள்ளலாம். மே 31ஆம் தேதிக்குள் விண்ணப்பத்தை பெற்றுக் கொண்டு அவற்றை ஜூன் 3ஆம் தேதி மாலை 5.45 மணிக்குள் சென்னையில் உள்ள தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைகழகத்தில் சமர்ப்பித்திட வேண்டும்.

விண்ணப்பப் படிவங்கள் குறித்த வழிமுறைகள் மற்றும் இதர விவரங்களையும் www.tanuvas.ac.in என்ற இணைய தளத்தில் தெரிந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 04286 – 266491 மற்றும் 04286 – 220650 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு பெறலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: