Friday, 10 May 2013

மே 9 முதல் மருத்துவப் படிப்புக்கான விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படுகின்றன .

தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளின் எம்.பி.பி.எஸ். முதலாம் ஆண்டு படிப்பில் மாணவர்களைச் சேர்க்க மே 9 முதல் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படுகின்றன .

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் உள்ள 18 அரசு மருத்துவக் கல்லூரிகளில் தமிழக ஒதுக்கீட்டுக்கு மொத்தம் 1,823 எம்.பி.பி.எஸ். இடங்கள் உள்ளன.

இந்த இடங்களுக்காக மொத்தம் 40 ஆயிரம் விண்ணப்பங்கள் அச்சிடப்பட்டு விநியோகம் செய்யப்பட உள்ளன. விண்ணப்பத்தைப் பெறுவதற்கான கடைசி தேதி மே 18 ஆகும்.

பூர்த்தி செய்யப்பட்ட் விண்ணப்பங்களை சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவ சேர்க்கைக் குழுவுக்கு மே 20-க்குள் அனுப்ப வேண்டும்.

2013-2014-ம் ஆண்டு மருத்துவம் மற்றும் பல்மருத்துவப் பட்டப்படிப்பிற்கு மார்ச் 2013 மேல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் இணையதளத்திலிருந்து மேல்நிலை தேர்வு மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்து விண்ணப்பத்துடன் இணைத்து “செயலர், தேர்வுக்குழு, சென்னை-10” என்ற முகவரிக்கு அனுப்பலாம்.


No comments: