Tuesday, 11 June 2013

தமிழகத்தில் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவக்கல்லூரிகள் பட்டியல் டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் அறிவிப்பு


எம்.பி.பி.எஸ். மருத்துவ படிப்புக்கு மாணவர்கள் சேர்க்கை நடத்துவதற்கு இந்திய மருத்துவ கல்வி கவுன்சிலிடம் அங்கீகாரம் பெற்று, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்திடம் இணைப்பு பெற்றுள்ள அரசு மற்றும் தனியார் சுயநிதி மருத்துவக்கல்லூரிகளின் பெயர்ப்பட்டியலை இந்திய மருத்துவக் கவுன்சில் தன் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவக்கல்லூரிகள், மருத்துவப்படிப்புக்கு மாணவர்களை சேர்த்துக்கொள்ள அங்கீகாரம் பெற்றுள்ளது.

கல்லூரிகள் பெயர் பட்டியல்

இதுதவிர, 
  1. வேலூர், கிறிஸ்துவ மருத்துவக்கல்லூரி (சி.எம்.சி.), 
  2. கோவை பி.எஸ்.ஜி. மருத்துவக்கல்லூரி, 
  3. பெருந்துறை ஐ.ஆர்.டி. மருத்துவ கல்லூரி, 
  4. கன்னியாகுமரி ஸ்ரீ மூகாம்பிகை மருத்துவ கல்லூரி, 
  5. மேல்மருவத்தூரில் உள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவக்கல்லூரி, 
  6. காஞ்சிபுரத்திலுள்ள கற்பக விநாயகா மருத்துவக்கல்லூரி, 
  7. திருச்சியிலுள்ள சென்னை மருத்துவக்கல்லூரி, 
  8. சென்னை, மாங்காட்டிலுள்ள ஸ்ரீ முத்துகுமரன் மருத்துவக்கல்லூரி, 
  9. பெரம்பலூர் ஸ்ரீ முத்துகுமரன் மருத்துவக்கல்லூரி, 
  10. தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக்கல்லூரி, 
  11. சேலத்தில் உள்ள அன்னப்பூர்ணா மருத்துவக்கல்லூரி, 
  12. சென்னை மாதா மருத்துவக்கல்லூரி, 
  13. கோவையிலுள்ள கற்பகம் மருத்துவக்கல்லூரி 

ஆகிய தனியார் சுயநிதி மருத்துவக்கல்லூரிகள் மட்டுமே மருத்துவ படிப்புகளில் மாணவர்களை சேர்த்துக் கொள்ள அங்கீகரிக்கப்பட்ட தனியார் சுயநிதி மருத்துவ கல்லூரிகளாகும்.

மாணவர்களுக்கு கோரிக்கை

திருவள்ளூர் மாவட்டம், குன்னவலம் கிராமத்தில் உள்ள டி.டி. மருத்துவக்கல்லூரிக்கு 2011–2012, 2012–2013, 2013–2014 ஆகிய கல்வி ஆண்டில் மருத்துவப்படிப்பில் மாணவர்களை சேர்த்துக்கொள்ள அனுமதி எதுவும் வழங்கப்படவில்லை.

2013–14 கல்வியாண்டில் மருத்துவப்படிப்பில் சேரும் மாணவர்கள், அங்கீகாரம் பெற்ற தனியார் சுயநிதி மருத்துவ கல்லூரிகளின் பெயர் விபரங்களை இந்திய மருத்துவ கவுன்சிலின் இணையதளத்தில் சரிபார்த்துக் கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள் என தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் பதிவாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

No comments: