Monday, June 17, 2013

TAMIL G.K 0961-0980 | TNPSC | TRB | TET | 79 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்

TAMIL G.K 0961-0980 | TNPSC | TRB | TET | 79 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்

961. 9-ஆம் வகுப்பு | தமிழ் |“எண்பது விழுக்காடு” அளவிற்குத் திராவிட மொழிக் கூறுகளைக் கொண்டுள்ள ஒரே திராவிட மொழி எது?

Answer | Touch me தமிழ்


962. 9-ஆம் வகுப்பு | தமிழ் | நம் தாய் மொழியாம் தமிழ் எவ்வாறு ஒளிர்கிறது?

Answer | Touch me நம் தாய்மொழியாம் தமிழ் செவ்வியல் மொழியாய் ஒளிர்கிறது


963. 9-ஆம் வகுப்பு | தமிழ் |பிற மொழிகள் தோன்றி வளர அடிப்படையாகும் மொழி எது?

Answer | Touch me மூலமொழி


964. 9-ஆம் வகுப்பு | தமிழ் |ஒரு மூலமொழியிலிருந்து தோன்றி வளரும் மொழியை _______ என்பர்.

Answer | Touch me கிளைமொழி


965. 9-ஆம் வகுப்பு | தமிழ் |பாரதிதாசன் எவற்றைச் சாடினார்?

Answer | Touch me மூடநம்பிக்கையை


966. 9-ஆம் வகுப்பு | தமிழ் | உரைநடைக் காலம் என்று எந்த நூற்றாண்டைக் கூறுகிறோம்?

Answer | Touch me இருபதாம் நூற்றாண்டு


967. 9-ஆம் வகுப்பு | தமிழ் |மனிதனை விலங்கிலிருந்து வேறுபடுத்துவது எது?

Answer | Touch me மொழி


968. 9-ஆம் வகுப்பு | தமிழ் |மொழியைப் பிழையின்றிப் பேசவும் கேட்கவும் கற்கவும் எழுதவும் துணை செய்வது எது?

Answer | Touch me இலக்கணம்


969. 9-ஆம் வகுப்பு | தமிழ் | தமிழிலக்கணம் எத்தனை வகைப்படும்?

Answer | Touch me ஐந்து. அவை, எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி இலக்கணங்களாகும்.


970. 9-ஆம் வகுப்பு | தமிழ் |எழுத்துக்களின் வகைகள் யாவை?

Answer | Touch me முதலெழுத்து, சார்பெழுத்து என இருவகைப்படும்.


971. 9-ஆம் வகுப்பு | தமிழ் | பிற எழுத்துக்கள் தோன்றுவதற்கு முதற்காரணமாய் இருப்பதால் அவை எவ்வாறு அழைக்கப்படுகிறது?

Answer | Touch me முதலெழுத்துகள்


972. 9-ஆம் வகுப்பு | தமிழ் |முதல் எழுத்துகள் எத்தனை?

Answer | Touch me முப்பது (“அ” முதல் “ஒள” வரை 12-ஆம், “க்” முதல் “ன்” வரை 18-ஆம்)


973. 9-ஆம் வகுப்பு | தமிழ் |முதல் எழுத்துகளைச் சார்ந்து இயங்கும் எழுத்துகள் ______ எனப்படும்.

Answer | Touch me சார்பெழுத்துகள்


974. 9-ஆம் வகுப்பு | தமிழ் |சார்பெழுத்துகள் எத்தனை வகைப்படும்? அவை யாவை?

Answer | Touch me பத்து, அவை. 1.உயிர்மெய், 2.ஆய்தம், 3.உயிரளபெடை, 4.ஒற்றளபெடை, 5.குற்றியலிகரம், 6.குற்றியலுகரம், 7.ஐகாரக் குறுக்கம், 8.ஒளகாரக் குறுக்கம் 9.மகரக்குறுக்கம், 10.ஆய்தக் குறுக்கம்


975. 9-ஆம் வகுப்பு | தமிழ் |செய்யுளில் ஓசை குறையும்போது ஒரு சொல்லின் முதலிலும், இடையிலும், இறுதியிலும் நிற்கும் நெட்டெழுத்துகள் ஏழும் தமக்குரிய இரண்டு மாத்திரையிலிருந்து நீண்டு ஒலிக்கும் அவ்வாறு நீண்டு ஒலிப்பதை _______ என்பர்.

Answer | Touch me அளபெடை


976. 9-ஆம் வகுப்பு | தமிழ் |அளபெடை எத்தனை வகைப்படும்?

Answer | Touch me இரண்டு


977. 9-ஆம் வகுப்பு | தமிழ் |உயிரளபெடை எத்தனை வகைப்படும்? அவை யாவை?

Answer | Touch me மூன்று. அவை. செய்யுளிசை, இன்னிசை, சொல்லிசை அளபெடைகள்.


978. 9-ஆம் வகுப்பு | தமிழ் |செய்யுளில் இசையை நிறைக்க வரும் அளபெடை _______ எனப்படும்.

Answer | Touch me செய்யுளிசை அளபெடை


979. 9-ஆம் வகுப்பு | தமிழ் |ஓசை குறையாவிட்டாலும், இனிய ஓசைக்காக அளபெடுத்தலை _______ என்பர்.

Answer | Touch me இன்னிசை அளபெடை


980. 9-ஆம் வகுப்பு | தமிழ் |ஒரு சொல் மற்றொரு சொல்லாகப் பொருள்படவரும் அளபெடை _______ என்பர்.

Answer | Touch me சொல்லிசை அளபெடை






No comments:

Popular Posts