Friday, July 19, 2013

TAMIL G.K 1881-1900 | TNPSC | TRB | TET | 125 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்

TAMIL G.K 1881-1900 | TNPSC | TRB | TET | 125 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்

1881. 10-ஆம் வகுப்பு | தமிழ் |“ஆயிரம் உண்டிங்கு சாதி எனில் அந்நியர் வந்து புகலென்ன நீதி” என வீர முழக்கமிட்டவர் யார்?

Answer | Touch me பாரதியார்


1882. 10-ஆம் வகுப்பு | தமிழ் |“பாருக்குள்ளே நல்லநாடு நாமிருக்கும் நாடு நமது என்பதறிந்தோம்” என்று பாடி விடுதலை உணர்வை ஊட்டியவர் யார்?

Answer | Touch me பாரதியார்


1883. 10-ஆம் வகுப்பு | தமிழ் |“செப்பும் மொழி பதினெட்டுடையாள் எனிற் சிந்தனை ஒன்றுடையாள்” – என்ற உயரிய தேசிய உணர்வை ஊட்டியவர் யார்?

Answer | Touch me பாரதியார்


1884. 10-ஆம் வகுப்பு | தமிழ் |“செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத் தேன்வந்து பாயுது காதினிலே” இது யார் பாடிய பாடல்?

Answer | Touch me பாரதியார்


1885. 10-ஆம் வகுப்பு | தமிழ் |“காந்தி” என்ற திரைப்படத்தில் காந்தியின் கதாபாத்திரமாக நடித்த நடிகர் யார்?

Answer | Touch me பென்கிங்ஸ்லி


1886. 10-ஆம் வகுப்பு | தமிழ் |_____எனப்படுவது வாழ்க்கைக்குத் துணைபுரியும் கல்வி, செல்வம், புகழ், வீரம், அரசியல் முதலிய பொருள்களைப் பற்றிக் கூறுவது ஆகும்.

Answer | Touch me புறப்பொருள்.


1887. 10-ஆம் வகுப்பு | தமிழ் |நெய்தல் கலியில் நல்லந்துவனார் பாடிய பாடல்கள் எத்தனை?

Answer | Touch me 33 பாடல்கள்


1888. 10-ஆம் வகுப்பு | தமிழ் |எட்டுத் தொகையுள் ஒன்றான கலித்தொகை எதனால் அமைந்தது?

Answer | Touch me கலிப்பாக்களால்


1889. 10-ஆம் வகுப்பு | தமிழ் |கலித்தொகை எந்த பாங்கில் அமைந்துள்ளது?

Answer | Touch me நாடகப்பாங்கில்


1890. 10-ஆம் வகுப்பு | தமிழ் |கலித்தொகையில் கடவுள் வாழ்த்தோடு சேர்ந்து எத்தனை பாடல்கள் உள்ளன?

Answer | Touch me 150 பாடல்கள்


1891. 10-ஆம் வகுப்பு | தமிழ் |கலிப்பா எந்த ஓசையைக் கொண்டது?

Answer | Touch me துள்ளல்


1892. 10-ஆம் வகுப்பு | தமிழ் |“கற்றறிந்தார் ஏத்தும் கலி” என்று தமிழ்ச்சான்றோர் சிறப்பித்துக் கூறும் நூல் எது?

Answer | Touch me கலித்தொகை


1893.10-ஆம் வகுப்பு | தமிழ் |கலித்தொகையைத் தொகுத்தவர் யார்?

Answer | Touch me நல்லந்துவனார்


1894.10-ஆம் வகுப்பு | தமிழ் |“பணை” என்பதன் பொருள் யாது?

Answer | Touch me மூங்கில்


1895.10-ஆம் வகுப்பு | தமிழ் |“கவிகை” என்பதன் பொருள் யாது?

Answer | Touch me குடை


1896. 10-ஆம் வகுப்பு | தமிழ் |“பொருது” என்பதன் பொருள் யாது?

Answer | Touch me மோதி


1897. 10-ஆம் வகுப்பு | தமிழ் |நந்திக்கலம்பகம் யாருடைய பெருமையைப் பற்றி கூறும் நூல் ஆகும்?

Answer | Touch me நந்திவர்மன்


1898. 10-ஆம் வகுப்பு | தமிழ் |நந்திக் கலம்பகத்தின் பாட்டுடைத் தலைவன் யார்?

Answer | Touch me பல்லவ மன்னன் மூன்றாம் நந்திவர்மன்


1899. 10-ஆம் வகுப்பு | தமிழ் |நந்திக் கலம்பகத்தின் காலம் எது?

Answer | Touch me கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டு


1900. 10-ஆம் வகுப்பு | தமிழ் |கலம்பக நூல்களில் முதல் நூல் எது?

Answer | Touch me நந்திக் கலம்பகம்






No comments:

Popular Posts