- KALVISOLAI R.H-2019 | கல்விச்சோலை RH 2019
- READ ALL POST...CLICK HERE...
- PAY COM COLLECTION 2017 DOWNLOAD
- பொது அறிவு தகவல்கள்-ஆன்லைன் தேர்வு
- TEACHERS GENERAL COUNSELLING 2017-2018 HELP CENTRE
- PROMOTION PANEL 2017-2018 DOWNLOAD
- MUTUAL TRANSFER ENTRY | VIEW
- TNTET EXAM - 2017 | ஆசிரியர் தகுதித்தேர்வு
- TNTET |QP,KEY & STUDY MATERIALS DOWNLOAD.
- தலைப்பு செய்திகள் | Today's Headlines!!!
- MARCH-2017-SSLC-HSC-ANSWER KEY-QP DOWNLOAD
- MARCH-2018-SSLC-HSC-STUDY MATERIALS DOWNLOAD
- NEET EXAM 2017 NEWS
- IT FORM 2017
- TNSET-2017
- TNPSC ANNUAL PLANNER 2017-2018 DOWNLOAD
- POLICE EXAM-2017
- SBI PROBATIONARY OFFICERS RECRUITMENT 2017
- TNTET EXAM - 2018 NEWS
- Police Recruitment - 2017
- TNPSC-TRB-ONLINE TEST MATERIALS
- ALL LATEST STUDY MATERIALS DOWMLOAD 2016-2017
- tnpsc study materials,question paper with answers
- DSE | DGE | DEE | G.O | OTHER DOWNLOADS
- Teachers General Counselling 2016-2017
- ALL STUDY MATERIALS DOWMLOAD 2016-2017
- CLASS 12, 10 | MARCH-2016 | Q.P | KEY ANSWER DOWNLOAD
- LATEST TOP HEADLINES 25 !!! CLICK HERE
- LATEST TOP HEADLINES 200 !!! CLICK HERE
- DSE | DGE | DEE | G.O | LATEST DOWNLOADS
- செய்தித் துளிகள்!

Friday, 30 August 2013
COMMON QUARTERLY EXAM TIME TABLE | 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு கடந்த கல்வி ஆண்டில் மாநிலம் முழுமைக்கும் பொதுவான காலாண்டுத்தேர்வு நடத்தப்பட்டதைப்போன்றே இக்கல்வியாண்டிலும் பொதுத்தேர்வு நடத்தப்பட முடிவு செய்யப்பட்டுள்ளதாக தேர்வுத்துறை அறிவித்துள்ளது.அதன் படி பிளஸ்டூ தேர்வுகள் 10.09.2013 அன்றும், பத்தாம் வகுப்பு தேர்வுகள் 12.09.2013 அன்றும் தொடங்க உள்ளது.
Wednesday, 28 August 2013
TAMIL G.K 0811-0830 | TNPSC | TRB | TET | 71 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்
TAMIL G.K 0811-0830 | TNPSC | TRB | TET | 71 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்
811. 8-ஆம் வகுப்பு | தமிழ் |தேம்பாவணியை இயற்றியது யார்?
Answer | Touch me
வீரமாமுனிவர்
812. 8-ஆம் வகுப்பு | தமிழ் |வீரமாமுனிவரின் இயற்பெயர் என்ன?
Answer | Touch me
கான்ஸ்டாண்டின் ஜோசப்பெஸ்கி
813. 8-ஆம் வகுப்பு | தமிழ் |வீரமாமுனிவரின் பெற்றோர் யார்?
Answer | Touch me
கொண்டல் போபெஸ்கீ- எலிசபெத்
814. 8-ஆம் வகுப்பு | தமிழ் |வீரமாமுனிவர் பிறந்த ஊர் எது?
Answer | Touch me
இத்தாலி நாட்டில் காஸ்திக் கிளியோன்
815. 8-ஆம் வகுப்பு | தமிழ் | வீரமாமுனிவருக்கு தமிழ் கற்பித்தவர் யார்?
Answer | Touch me
மதுரைச்சுப்பிரதீபக் கவிராயர்
816. 8-ஆம் வகுப்பு | தமிழ் |ஞானோபதேசம், பரமார்த்த குருகதை சதுரகராதி, திருக்காவலூர்க் கலம்பகம், தொன்னூல் விளக்கம் ஆகிய நூல்களின் ஆசிரியர் யார்?
Answer | Touch me
வீரமாமுனிவர்
817. 8-ஆம் வகுப்பு | தமிழ் |வீரமாமுனிவரின் காலம் எது?
Answer | Touch me
1680 முதல் 1747 வரை
818. 8-ஆம் வகுப்பு | தமிழ் |“கிறித்துவச் சமயத்தாரின் கலைக்களஞ்சியம்” என அழைக்கப்படும் நூல் எது?
Answer | Touch me
தேம்பாவணி
819. 8-ஆம் வகுப்பு | தமிழ் | நாடகத்தின் மற்றொரு பெயர் என்ன?
Answer | Touch me
கூத்துக்கலை
820. 8-ஆம் வகுப்பு | தமிழ் |சிலப்பதிகாரத்தி;ல் இளங்கோவடிகள், “நாடகமேத்தும் நாடகக் கணிகை” என்று யாரை குறிப்பிடுகிறார்?
Answer | Touch me
மாதவி
821. 8-ஆம் வகுப்பு | தமிழ் |தனிப்பாடல்களுக்கு மெய்ப்பாடு தோன்ற ஆடுவதை_______ என்பர்.
Answer | Touch me
நாட்டியம்
822. 8-ஆம் வகுப்பு | தமிழ் |“டம்பாச்சாரி விலாசம்” என்ற நாடகத்தின் ஆசிரியர் யார்?
Answer | Touch me
காசி விசுவநாதர்
823. 8-ஆம் வகுப்பு | தமிழ் |லார்ட் லிட்டன் எழுதிய ஆங்கிலக் கதையின் பெயர் என்ன?
Answer | Touch me
மறைவழி
824. 8-ஆம் வகுப்பு | தமிழ் |முதன்முதலில் நடத்தப்பட்ட தேசிய சமுதாய நாடகம் எது?
Answer | Touch me
கதரின் வெற்றி
825. 8-ஆம் வகுப்பு | தமிழ் |“நாடக உலகின் இமயமலை” என்று அழைக்கப்பட்டவர் யார்?
Answer | Touch me
சங்கரதாசு சுவாமிகள்
826. 8-ஆம் வகுப்பு | தமிழ் |“தமிழ்நாடகத் தலைமையாசிரியர்” என்று அழைக்கப்பட்டவர் யார்?
Answer | Touch me
சங்கரதாசு சுவாமிகள்
827. 8-ஆம் வகுப்பு | தமிழ் |“தமிழ்நாடகத் தந்தை” என்று அழைக்கப்பட்டவர் யார்?
Answer | Touch me
பம்மல் சம்பந்தனார்
828. 8-ஆம் வகுப்பு | தமிழ் |“தமிழ்நாடக மறுமலர்ச்சித் தந்தை” என்று அழைக்கப்பட்டவர் யார்?
Answer | Touch me
கந்தசாமி
829. 8-ஆம் வகுப்பு | தமிழ் |“மனோகரன்” நாடகம் யாருடையது?
Answer | Touch me
பம்மல் சம்பந்தனார்
830. 8-ஆம் வகுப்பு | தமிழ் |“ஒளவை சண்முகனார்” என்று அழைக்கப்பட்டவர் யார்?
Answer | Touch me
தி.க. சண்முகனார்
TNTET JUNE 2012 OCTOBER 2012 ஆகிய இரு டி.இ.டி., தேர்வுகளுக்குப் பின் நடந்த சான்றிதழ் சரிபார்ப்புகளில் பங்கேற்காதவர்கள், உரிய சான்றிதழ்களை சமர்ப்பிக்கத் தவறிய தேர்வர்கள் ஆகியோருக்கு, இறுதியாக, மீண்டும் ஒரு முறை வாய்ப்பு அளித்து, டி.ஆர்.பி., அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கடந்த ஆண்டு நடந்த, இரு டி.இ.டி., தேர்வுகளுக்குப் பின் நடந்த சான்றிதழ் சரிபார்ப்புகளில் பங்கேற்காதவர்கள், உரிய சான்றிதழ்களை சமர்ப்பிக்கத் தவறிய தேர்வர்கள் ஆகியோருக்கு, இறுதியாக, மீண்டும் ஒரு முறை வாய்ப்பு அளித்து, டி.ஆர்.பி., அறிவித்துள்ளது. அதன்படி, செப்., 6, 7 ஆகிய தேதிகளில், சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கும் என, டி.ஆர்.பி., தெரிவித்துள்ளது.
டி.ஆர்.பி., தலைவர், விபு நய்யார் வெளியிட்ட அறிவிப்பு:
கடந்த ஆண்டு, ஜூலை, 12 மற்றும் அக்டோபர், 14 ஆகிய தேதிகளில், டி.இ.டி., தேர்வுகள் நடந்தன. இதற்கான சான்றிதழ் சரிபார்ப்பு, முறையே, கடந்த ஆண்டு, செப்., 7, 8 மற்றும் நவம்பர், 6 முதல் 9ம் தேதி வரை நடந்தன. இதில் பங்கேற்காத தேர்வர்கள் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு நாளன்று, உரிய சான்றிதழ்களை சமர்ப்பிக்கத் தவறிய தேர்வர்களுக்கு, மீண்டும் ஒரு இறுதி வாய்ப்பு வழங்கும் வகையில், வரும், செப்., 6, 7 ஆகிய தேதிகளில், சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படும். இந்நிகழ்வு, சென்னை, அசோக்நகர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடத்தப்படும். கடந்த ஆண்டு, நவம்பர், 9ம் தேதி அன்று, இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணிக்கு, உரிய முழுமையான கல்வித்தகுதியை பெற்றிருந்து, உரிய பட்டயச் சான்று, பட்டச் சான்று, மதிப்பீட்டிற்கான சான்று மற்றும் மதிப்பெண் பட்டியல் போன்றவற்றை சமர்ப்பிக்கத் தவறியவர்களுக்கு மட்டும், இந்த வாய்ப்பு வழங்கப்படுகிறது. ஏற்கனவே நடந்த சான்றிதழ் சரிபார்ப்பு ஆவணங்கள் அடிப்படையில், சம்பந்தப்பட்ட தேர்வர்களின் பதிவு எண்கள், டி.ஆர்.பி., இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளன. கடந்த, இரண்டு, டி.இ.டி., தேர்வுகளில், தேர்ச்சிக்குரிய, குறைந்தபட்ச மதிப்பெண்கள் பெற்று, சான்றிதழ்களை சமர்ப்பிக்கத் தவறியவர்களின் விவரங்கள், இணையதளத்தில் தரப்பட்டுள்ளன. தேர்வர்கள், பதிவு எண்களை சரிபார்த்து, அதில் அழைக்கப்பட்டுள்ளவர்கள் மட்டும், சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்கலாம். தற்காலிக அடிப்படையில் தான், தேர்வர், அழைக்கப்படுகின்றனர். பெயர் விடுபட்டு இருந்தால், டி.ஆர்.பி., தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, விபு நய்யார் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு நடந்த சான்றிதழ் சரிபார்ப்புகளுக்குப் பிறகே, பல தேர்வர்களுக்கு, சான்றிதழ்கள் கிடைத்தன. அவர்கள், அப்போதைய டி.ஆர்.பி., தலைவர், சுர்ஜித் சவுத்ரியிடம், பல முறை முறையிட்டும், அவர், தேர்வர்களின் கோரிக்கைகளை ஏற்கவில்லை. இதனால், வேலை வாய்ப்பை பெறும் நிலையில் இருந்த பலர், சான்றிதழ் இல்லாததன் காரணமாக, வேலை வாய்ப்பை இழந்தனர். பல பெண்கள், கண்ணீர் விட்டு கதறினர். எனினும், தேர்வர்களின் நியாயமான கோரிக்கைகள், கடைசிவரை பரிசீலிக்கப்படவில்லை. இந்நிலையில், எட்டு மாதங்களுக்குப்பின், டி.ஆர்.பி.,யின் புதிய தலைவராக பதவி ஏற்ற குறுகிய நாட்களிலேயே, தகுதி வாய்ந்த தேர்வர்களுக்கு, விபு நய்யார், வாய்ப்பு அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம், தகுதி வாய்ந்த தேர்வர்களுக்கு, வேலை வாய்ப்பு கிடைக்கும் நிலை உருவாகி உள்ளது.
Tuesday, 27 August 2013
TAMIL G.K 0791-0810 | TNPSC | TRB | TET | 70 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்
TAMIL G.K 0791-0810 | TNPSC | TRB | TET | 70 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்
791. 8-ஆம் வகுப்பு | தமிழ் |எந்த இதழின் செய்தியாளர், தில்லியிலுள்ள சிறைச்சாலையின் நிலை பற்றி அறிய, தானே சிறைப்பட்டுச் செய்திகளைத் திரட்டித் தந்து புகழ் பெற்றார்?
Answer | Touch me
இண்டியன் எக்ஸ்பிரஸ்
792. 8-ஆம் வகுப்பு | தமிழ் |பொது மக்களின் கருத்துக்களை _______ வாயிலாக அறியலாம்.
Answer | Touch me
கூறெடுப்பு ஆய்வு
793. 8-ஆம் வகுப்பு | தமிழ் |ஒரு தொடரில் இருச்சொற்கள் அமைந்து, இரண்டிற்கும், இடையில் சொல்லோ, உருபோ மறையாது பொருளை உணர்த்துவது ________ எனப்படும்.
Answer | Touch me
தொகாநிலைத் தொடர்
794. 8-ஆம் வகுப்பு | தமிழ் |ஒரே சொல் பலமுறை அடுக்கி வருவது _______ எனப்படும்.
Answer | Touch me
அடுக்குத் தொடர்
795. 8-ஆம் வகுப்பு | தமிழ் |ஒரே சொல் பலமுறை அடுக்கி வந்து பொருள் தந்தால் அது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Answer | Touch me
அடுக்குத் தொடர்
796. 8-ஆம் வகுப்பு | தமிழ் |இரட்டைச் சொல்லாகவே வந்து பொருள் தராதது எது?
Answer | Touch me
இரட்டைக்கிளவி
797. 8-ஆம் வகுப்பு | தமிழ் |மற்றுப்பிற என்னும் தொடரில் “மற்று” என்பது_______
Answer | Touch me
இடைச்சொல்
798. 8-ஆம் வகுப்பு | தமிழ் |சாலப் பசித்தது என்பது _______தொடர்
Answer | Touch me
உரிச்சொல்
799. 8-ஆம் வகுப்பு | தமிழ் |கூடிப் பேசினர் என்னும் தொடர்_______ ஆகும்.
Answer | Touch me
வினையெச்சத் தொடர்
800. 8-ஆம் வகுப்பு | தமிழ் |இரண்டு என்பதன் தமிழெண் எது?
Answer | Touch me
உ
801. 8-ஆம் வகுப்பு | தமிழ் |ஏழு என்பதன் தமிழெண் எது?
Answer | Touch me
எ
802. 8-ஆம் வகுப்பு | தமிழ் | பதினொன்று என்பதன் தமிழெண் எது?
Answer | Touch me
கக
803. 8-ஆம் வகுப்பு | தமிழ் |பதினெட்டு என்பதன் தமிழெண் எது?
Answer | Touch me
கஅ
804. 8-ஆம் வகுப்பு | தமிழ் | இருபது என்பதன் தமிழெண் எது?
Answer | Touch me
உ0
805. 8-ஆம் வகுப்பு | தமிழ் |திருமந்தி;ரத்தின் ஆசிரியர் யார்?
Answer | Touch me
திருமூலர்
806. 8-ஆம் வகுப்பு | தமிழ் |திருமூலர் வாழ்ந்த காலம் எது?
Answer | Touch me
ஐந்தாம் நூற்றாண்டின் முற்பகுதி
807. 8-ஆம் வகுப்பு | தமிழ் | சைவத் திருமுறைகளில் பத்தாவது திருமுறை எது?
Answer | Touch me
திருமந்திரம்
808. 8-ஆம் வகுப்பு | தமிழ் |திருமந்தி;ரத்தின் வேறு பெயர் என்ன?
Answer | Touch me
தமிழ் மூவாயிரம்
809. 8-ஆம் வகுப்பு | தமிழ் |திருமந்திரம் எத்தனை பாடல்களைக் கொண்டது?
Answer | Touch me
மூவாயிரம்
810. 8-ஆம் வகுப்பு | தமிழ் | “ஒன்றே குலம் ஒருவனே தேவன்” இது எந்த நூலின் புகழ் பெற்ற தொடராகும்?
Answer | Touch me
திருமந்திரம்
Monday, 26 August 2013
TAMIL G.K 0771-0790 | TNPSC | TRB | TET | 69 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்
TAMIL G.K 0771-0790 | TNPSC | TRB | TET | 69 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்
771. 8-ஆம் வகுப்பு | தமிழ் |சாளுக்கியர்களின் தலைநகரான கல்யாணபுரத்தின் மீது படையெடுத்து மும்முறை போரிட்டு வென்ற சோழன் யார்;?
Answer | Touch me
இராசாதிராசன்
772. 8-ஆம் வகுப்பு | தமிழ் |கொப்பத்துப் போரில் ஆயிரம் யானைகளை வென்ற சோழன் யார்?
Answer | Touch me
இராசேந்திரன்
773. 8-ஆம் வகுப்பு | தமிழ் |திருவரங்கத்தில் பள்ளிக்கொண்ட பெருமாளுக்கு மணிகள் பலவற்றால் பாம்பனை அமைத்த சோழன் யார்?
Answer | Touch me
இராசமகேந்திரன்
774. 8-ஆம் வகுப்பு | தமிழ் |“குவடு” என்பதன் பொருள் என்ன?
Answer | Touch me
மலை
775. 8-ஆம் வகுப்பு | தமிழ் |ஒட்டக்கூத்தரின் சிறப்பு பெயர் என்ன?
Answer | Touch me
கவிச்சக்கரவர்த்தி
776. 8-ஆம் வகுப்பு | தமிழ் | விக்கிரமசோழன், இரண்டாம் குலோத்துங்கன், இரண்டாம் இராசராசன் ஆகிய மூன்று மன்னர்களின் அவையில் செல்வாக்கோடு விளங்கிய புலவர் யார்?
Answer | Touch me
ஒட்டக்கூத்தர்
777. 8-ஆம் வகுப்பு | தமிழ் |மூவருலா, தக்கயாகப்பரணி, குலோத்துங்கன் பிள்ளைத்தமிழ் ஆகிய நூல்களை எழுதிய புலவர் யார்?
Answer | Touch me
ஒட்டக்கூத்தர்
778. 8-ஆம் வகுப்பு | தமிழ் |ஒட்டக்கூத்தர் வாழ்ந்த காலம் எது?
Answer | Touch me
12-ஆம் நூற்றாண்டு
779. 8-ஆம் வகுப்பு | தமிழ் |“உலா” என்பதற்கு என்ன பொருள்?
Answer | Touch me
ஊர்க்கோலம் வருதல்
780. 8-ஆம் வகுப்பு | தமிழ் |முதற்குலோத்துங்க சோழனுடைய நான்காவது மகன் பெயர் என்;ன?
Answer | Touch me
விக்கிரமசோழன்
781. 8-ஆம் வகுப்பு | தமிழ் |விக்கிரமசோழனின் தாய் பெயர் என்ன?
Answer | Touch me
மதுராந்தகி
782. 8-ஆம் வகுப்பு | தமிழ் |விக்கிரம சோழனின் தலைநகரம் எது?
Answer | Touch me
கங்கைகொண்ட சோழபுரம்
783. 8-ஆம் வகுப்பு | தமிழ் |விக்கிரம சோழனின் காலம் எது?
Answer | Touch me
கி.பி. பன்னிரண்டாம் நூற்றாண்டு
784. 8-ஆம் வகுப்பு | தமிழ் |மகளிரின் எழுவகைப் பருவங்கள் யாவை?
Answer | Touch me
பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம் பெண்.
785. 8-ஆம் வகுப்பு | தமிழ் |மலரின் எழுவகைப் பருவங்கள் பற்றி கூறுக?
Answer | Touch me
1.அரும்பு, 2.மொட்டு, 3.முகை, 4.மலர், 5.அலர் 6.வீ 7.செம்மல்
786. 8-ஆம் வகுப்பு | தமிழ் |உலா _______ வகைகளுள் ஒன்று.
Answer | Touch me
சிற்றிலக்கியம்.
787. 8-ஆம் வகுப்பு | தமிழ் | “ஏன்? என்ன? எப்போது? எப்படி? எங்கே? யார்? எனும் அன்புத் தொண்டர் ஆறு பேர்கள் அறியச் செய்வார் செய்தியினை” என்று யார் குறிப்பிட்டது?
Answer | Touch me
கிப்ளிங்
788. 8-ஆம் வகுப்பு | தமிழ் |செய்தியைப் பெறுதல் என்பது எது போன்றது?
Answer | Touch me
துப்பறிதல்
789. 8-ஆம் வகுப்பு | தமிழ் |ஒவ்வொரு செய்தியாளரும் தமக்கு என ஒதுக்கப்பட்ட இடங்களுக்கோ அலுவலகங்களுக்கோ நாள்தோறும் சென்று செய்திகளைத் திரட்டுவர். இதனை எவ்வாறு குறிப்பிடுவர்;?
Answer | Touch me
செய்திக்களம்
790. 8-ஆம் வகுப்பு | தமிழ் |எந்த இதழின் செய்தியாளர், இந்திய சீனப்போரின் போது நேரடியாகப் போர் நடைபெறும் இடத்திற்குச் சென்று, செய்திகளை திரட்டினார்?
Answer | Touch me
இலண்டன் டைம்ஸ்
Sunday, 25 August 2013
டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 கீ ஆன்சர் இணைய தளத்தில் 26.8.13 திங்கள் வெளியிடப்படும் என டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது.
தமிழக அரசின் பல்வேறு துறைகளில் இளநிலை எழுத்தர், தட்டச்சர், சுருக்கெழுத்தர், வரைவாளர், வரித் தண்டலர் உள்ளிட்ட பதவிகளில் 5566 பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த பணியிடங்களுக்கு குரூப் 4 தேர்வு மூலம் அரசு பணியாளர் தேர்வு ஆணையம் ஆட்களை தேர்வு செய்கிறது.
இந்த தேர்வு எழுத கல்வித்தகுதி எஸ்.எஸ்.எல்.சி. என்பதால் 14 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். இளங்கலை, முதுகலை பட்டதாரிகள் பெருமளவில் விண்ணப்பித்து இருக்கிறார்கள்.
மாநிலம் முழுவதும் குரூப் 4 தேர்வு 25.8.2013 காலை 10 மணிக்கு தொடங்கியது. இதற்காக 4 ஆயிரத்து 755 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தது.
தேர்வை 70,230 கண்காணிப்பாளர்கள் கண்காணித்தனர். இது தவிர 950 பறக்கும் படையும் அமைக்கப்பட்டு இருந்தது.
இவர்கள் தவிர ஒவ்வொரு மாவட்டத்திலும் கலெக்டர், ஆர்.டி.ஓ. தாசில்தார் தலைமையில் கண்காணிப்பு அதிகாரிகள் தேர்வு மையங்களை சோதனையிட்டனர்.
அனைத்து தேர்வு மையங்களிலும் தேர்வு எழுதியது வீடியோவில் பதிவு செய்யப்பட்டது. தவறு நடக்கும் அபாயம் நிறைந்த தொலை தூர தேர்வு மையங்களில் தேர்வு நடைபெறுவது வெப்– காமிரா மூலம் ஆன்– லைனில் கண்காணித்தனர். சென்னையில் உள்ள டி.என்.பி.எஸ்.சி அலுவலகம் மற்றும் அந்த அந்த மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் செயல்படும் கட்டுப்பாட்டு அறை களில் இருந்து கண்காணித்தனர்.
மொத்தம் 200 கேள்விகள் கேட்கப்பட்டிருந்தது. ஒரு கேள்விக்கு 1 1/2 மார்க் வீதம் 300 மார்குக்கு தேர்வு எழுதினார்கள். இந்த தேர்வில் வெற்றி பெற்றால் வேலை உறுதி. காரணம் நேர்முக தேர்வு கிடையாது.
‘கீ ஆன்சர்’ இன்னும் ஓரிரு நாளில் டி.என்.பி.எஸ்.சி. இணைய தளத்தில் வெளியிடப்படும். தேர்வு அட்டவணைப்படி செப்டம்பர் மாதம் தேர்வு முடிவு வெளியிடப்பட வேண்டும். தேர்வு எழுதியவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் தேர்வு முடிவு அக்டோபர் அல்லது நவம்பர் மாதம் வெளியிடப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
Saturday, 24 August 2013
TAMIL G.K 0751-0770 | TNPSC | TRB | TET | 68 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்
TAMIL G.K 0751-0770 | TNPSC | TRB | TET | 68 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்
751. 8-ஆம் வகுப்பு | தமிழ் |“காகிதம்” என்ற மராத்தி சொல்லுக்கு சரியான தமிழ்ச்சொல் எது?
Answer | Touch me
தாள்
752. 8-ஆம் வகுப்பு | தமிழ் |“பேட்டை” என்ற மராத்தி சொல்லுக்கு சரியான தமிழ்ச்சொல் எது?
Answer | Touch me
புறநகர்
753. 8-ஆம் வகுப்பு | தமிழ் |“கெஸ்ட்ஹவுஸ்” என்ற ஆங்கில சொல்லுக்கு சரியான தமிழ்ச்சொல் எது?
Answer | Touch me
விருந்தகம்
754. 8-ஆம் வகுப்பு | தமிழ் |“பீரோ” என்ற ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல் எது?
Answer | Touch me
இழுப்பறை
755. 8-ஆம் வகுப்பு | தமிழ் | “ஆயுசு” என்ற ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல் எது?
Answer | Touch me
வாழ்நாள்
756. 8-ஆம் வகுப்பு | தமிழ் | “பேனா” என்ற ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல் எது?
Answer | Touch me
தூவல்
7578-ஆம் வகுப்பு | தமிழ் |. “ரப்பர்” என்ற ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல் எது?
Answer | Touch me
தேய்ப்பம்
758. 8-ஆம் வகுப்பு | தமிழ் |“உயில்” என்ற ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல் எது?
Answer | Touch me
இறுதிமுறி
759. 8-ஆம் வகுப்பு | தமிழ் |“லைசென்ஸ்” என்ற ஆங்கில சொல்லுக்கு சரியான தமிழ்ச்சொல் எது?
Answer | Touch me
உரிமம்
760. 8-ஆம் வகுப்பு | தமிழ் |“காவடிச்சிந்து” என்ற பாடலின் ஆசிரியர் யார்?
Answer | Touch me
அண்ணாமலையார்
761. 8-ஆம் வகுப்பு | தமிழ் |அண்ணாமலையார் பிறந்த ஊர் எது?
Answer | Touch me
திருநெல்வேலி மாவட்டத்து சென்னிகுளம்
762. 8-ஆம் வகுப்பு | தமிழ் |காவடிச்சிந்து, வீரை அந்தாதி, கோமதி அந்தாதி, வீரைப்பிள்ளைத்தமிழ் என்ற நூல்களின் ஆசிரியர் யார்?
Answer | Touch me
அண்ணாமலையார்
763. 8-ஆம் வகுப்பு | தமிழ் |அண்ணாமலையார் வாழ்ந்த காலம் எது?
Answer | Touch me
1861 முதல் 1890 வரை
764. 8-ஆம் வகுப்பு | தமிழ் |விக்கிரமசோழன் உலாவின் ஆசிரியர் யார்;?
Answer | Touch me
ஒட்டக்கூத்தர்
765. 8-ஆம் வகுப்பு | தமிழ் |குடகு மலையை ஊடறுத்து அலைமோதும் காவிரியைத் தந்தவன் யார்?
Answer | Touch me
கவேரன்
766. 8-ஆம் வகுப்பு | தமிழ் |பொய்கையாரின் களவழி நாற்பது பாடலுக்குப் பரிசாகச் சேரமான் கணைக்கால் இரும்பொறையைச் சிறை வீடு செய்த சோழன் யார்?
Answer | Touch me
செங்கணான்
767. 8-ஆம் வகுப்பு | தமிழ் | போரில் பெருமையாக எண்ணத்தக்க விழுப்புண்கள் தொண்ணூற்றாறும் பெற்ற சோழன் யார்?
Answer | Touch me
விசயாலயன்
768. 8-ஆம் வகுப்பு | தமிழ் |சிவபெருமான் ஆடலரசராய்;க் காட்சி தரும் தில்லைக்குப் பொன்வேய்ந்த சோழன் யார்?
Answer | Touch me
முதலாம் பராந்தகன்
769. 8-ஆம் வகுப்பு | தமிழ் |பதினெட்டுச் சிற்றூர்களையும், கைப்பற்றி மலைநாடு வென்ற சோழன் யார்?
Answer | Touch me
முதலாம் இராசராசன்
770. 8-ஆம் வகுப்பு | தமிழ் |வடக்கே படையெடுத்துக் கங்கையும், கிழக்கில் கடாரமும் வென்று கைக்கொண்டவன், சேரர் கப்பற்படை முழுவதையும் அழித்த சோழன் யார்?
Answer | Touch me
இராசேந்திரன்
TAMIL G.K 0001-0020 | TNPSC | TRB | TET | 31 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்
TAMIL G.K 0001-0020 | TNPSC | TRB | TET | 31 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்
1. 6-ஆம் வகுப்பு | தமிழ் | “கண்ணில் கலந்தான் கருத்தில் கலந்தான்” எனத் தொடங்கும் வாழ்த்துப் பாடலை எழுதியவர் யார்?
Answer | Touch me
இராமலிங்க அடிகளார்.
2.6-ஆம் வகுப்பு | தமிழ் | “திருவருட் பிரகாச வள்ளலார்” என்ற சிறப்புப் பெயர் பெற்றவர் யார்?
Answer | Touch me
இராமலிங்க அடிகளார்.
3.6-ஆம் வகுப்பு | தமிழ் | இராமலிங்க அடிகளார் எங்கு பிறந்தார்?
Answer | Touch me
கடலூர் மாவட்டம் மருதூரில் பிறந்தவர்
4.6-ஆம் வகுப்பு | தமிழ் | இராமலிங்க அடிகளாரின் பெற்றோர் யாவர்?
Answer | Touch me
இராமையா சின்னம்மையார்
5.6-ஆம் வகுப்பு | தமிழ் | ஜிவகாருண்ய ஒழுக்கம், மனுமுறை கண்டவாசகம், ஆகிய நூல்களை எழுதியவர் யார்?
Answer | Touch me
இராமலிங்க அடிகளார்.
6.6-ஆம் வகுப்பு | தமிழ் | இராமலிங்க அடிகளார் பாடிய பாடலின் தொகுப்பிற்கு பெயர் என்ன?
Answer | Touch me
திருவருட்பா.
7.6-ஆம் வகுப்பு | தமிழ் | சமரச சன்மார்க்க நெறிகளை வழங்கியவர் யார்?
Answer | Touch me
இராமலிங்க அடிகளார்.
8.6-ஆம் வகுப்பு | தமிழ் | பசித்துயர் போக்கி மக்களுக்கு உணவளிக்க இராமலிங்க அடிகள் அமைத்தது எதை?
Answer | Touch me
அறச்சாலை
9.6-ஆம் வகுப்பு | தமிழ் | அறிவு நெறி விளங்க வள்ளலார் எதை நிறுவினார்?
Answer | Touch me
ஞானசபை
10. 6-ஆம் வகுப்பு | தமிழ் | வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய கருணை மனம் யாருடையது?
Answer | Touch me
இராமலிங்க அடிகள்.
11. 6-ஆம் வகுப்பு | தமிழ் | இராமலிங்க அடிகள் வாழ்ந்த காலம் எது?
Answer | Touch me
5.10.1823 முதல் 30.1.1874 வரை
12. 6-ஆம் வகுப்பு | தமிழ் | திருக்குறளை இயற்றியவர் யார்?
Answer | Touch me
திருவள்ளுவர்.
13. 6-ஆம் வகுப்பு | தமிழ் | திருவள்ளுவரின் காலம் எது என்று கூறப்படுகின்றது?
Answer | Touch me
கி.மு. 31
14. 6-ஆம் வகுப்பு | தமிழ் | கி.மு.31-ஐ தொடக்கமாகக் கொண்டு எந்த ஆண்டு கணக்கிடப்படுகிறது?
Answer | Touch me
திருவள்ளுவர் ஆண்டு
15. 6-ஆம் வகுப்பு | தமிழ் | திருவள்ளுவரின் சிறப்பு பெயர்கள் என்ன?
Answer | Touch me
செந்நாப்போதார், தெய்வப் புலவர், நாயனார்.
16. 6-ஆம் வகுப்பு | தமிழ் | திருக்குறள் எத்தனை பிரிவுகளைக் கொண்டது?
Answer | Touch me
மூன்று
17. 6-ஆம் வகுப்பு | தமிழ் | திருக்குறளின் மூன்று பிரிவுகள் யாவை?
Answer | Touch me
அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால்.
18. 6-ஆம் வகுப்பு | தமிழ் | திருக்குறளில் உள்ள அதிகாரங்கள் எத்தனை?
Answer | Touch me
133
19. 6-ஆம் வகுப்பு | தமிழ் |திருக்குறளில் உள்ள ஒவ்வொரு அதிகாரத்திலும் எத்தனை குறட்பாக்கள் உள்ளன?
Answer | Touch me
10
20. 6-ஆம் வகுப்பு | தமிழ் |திருக்குறளில் உள்ள மொத்த குறட்பாக்களின் எண்ணிக்கை எவ்வளவு?
Answer | Touch me
1330
தொழில்நுட்பக்கல்வித்துறை நடத்திய கணிணி சான்றிதழ் தேர்வு முடிவு இன்று வெளியீடு இணையதளத்திலும் பார்க்கலாம்
தொழில்நுட்பக்கல்வித்துறை சார்பில் கணிணி சான்றிதழ் தேர்வு கடந்த ஜூன் மாதம் நடத்தப்பட்டது. இந்த தேர்வின் முடிவு நாளை (சனிக்கிழமை) வெளியிடப்படுகிறது. சென்னை கிண்டியில் உள்ள மாநில தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்திலும், தேர்வு நடைபெற்ற பாலிடெக்னிக் கல்லூரி மையங்களிலும் தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ளலாம். மேலும், தொழில்நுட்பக்கல்வி இயக்ககத்தின் இணையதளத்திலும் (www.tndte.com) தேர்வு முடிவை பார்க்கலாம்.
தேர்வில் வெற்றிபெற்றவர்களின் சான்றிதழ்கள் ஆவணங்களை சரிபார்த்து வழங்கப்படும். இந்த தகவலை தொழில்நுட்பக் கல்வி ஆணையர் குமார் ஜெயந்த் தெரிவித்துள்ளார்.
TAMIL G.K 1201-1220 | TNPSC | TRB | TET | 91 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்
TAMIL G.K 1201-1220 | TNPSC | TRB | TET | 91 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்
1201. 9-ஆம் வகுப்பு | தமிழ் | செய்யுளின் பல அடிகளிலும் கூறப்பட்டுள்ள சொற்களைப் பொருளுக்கு ஏற்பக் கூட்டிப் பொருள் கொள்வது______ஆகும்.
Answer | Touch me
கொண்டு கூட்டுப்பொருள்கோள்
1202. 9-ஆம் வகுப்பு | தமிழ் | செய்யுளின் எல்லா அடிகளையும் முன் பின்னாக மாற்றிப் பொருள் கொண்டாலும் பொருளும் ஓசையும் சிதையாமல் வருவது_______ஆகும்.
Answer | Touch me
அடிமறிமாற்றுப் பொருள்கோள்
1203. 9-ஆம் வகுப்பு | தமிழ் | “மாற்றார்” என்னும்சொல்லின் பொருள் யாது?
Answer | Touch me
பகைவர்
1204. 9-ஆம் வகுப்பு | தமிழ் | உவமைக் கவிஞர் சுரதாவின் இயற்பெயர் யாது?
Answer | Touch me
இராசகோபாலன்
1205. 9-ஆம் வகுப்பு | தமிழ் | கவிஞர் சுரதா எப்போது பிறந்தார்?
Answer | Touch me
23.11.1921-ஆம் ஆண்டு
1206. 9-ஆம் வகுப்பு | தமிழ் | கவிஞர் சுரதாவின் பெற்றோர் யார்?
Answer | Touch me
திருவேங்கடம் - செண்பகம்
1207. 9-ஆம் வகுப்பு | தமிழ் | பாவேந்தர் பாரதிதாசன் மீது கொண்ட பற்றுக் காரணமாகத் தம் பெயரை _______ என இராசகோபாலன் மாற்றிக் கொண்டார்.
Answer | Touch me
சுப்புரத்தினதாசன்
1208. 9-ஆம் வகுப்பு | தமிழ் | தேன் மழை, துறைமுகம், சுவரும் சுண்ணாம்பும் முதலான கவிதை நூல்களை இயற்றியவர் யார்?
Answer | Touch me
சுரதா
1209. 9-ஆம் வகுப்பு | தமிழ் | சுரதா தமிழக இயலிசை நாடகமன்றத்தின்______ பட்டத்தைப் பெற்றார்?
Answer | Touch me
கலைமாமணி
1210. 9-ஆம் வகுப்பு | தமிழ் | _______ நூலில் இயற்கையெழில் முதலாக ஆராய்ச்சி ஈறாக பதினாறு பகுதிகளாகக் கவிதைகள் இடம் பெற்றுள்ளன.
Answer | Touch me
தேன்மழை
1211. 9-ஆம் வகுப்பு | தமிழ் | காமராசரின் பெற்றோர் யார்?
Answer | Touch me
குமாரசாமி-சிவகாமி
1212. 9-ஆம் வகுப்பு | தமிழ் | காமராசர் எப்போது பிறந்தார்?
Answer | Touch me
15.07.1903
1213. 9-ஆம் வகுப்பு | தமிழ் | காமராசரின் அரசியல் குரு யார்?
Answer | Touch me
சத்தியமூர்த்தி
1214. காமராசர் எந்த ஆண்டு சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்?
Answer | Touch me
கி.பி. 1937-ஆம் ஆண்டு
1215. 9-ஆம் வகுப்பு | தமிழ் | காமராசர் எப்போது காங்கிரஸ் கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்?
Answer | Touch me
கி.பி. 1939-ஆம் ஆண்டு
1216. 9-ஆம் வகுப்பு | தமிழ் | காங்கிரஸ் கட்சியின் தலைவராக எத்தனை ஆண்டுகள் இருந்தார்?
Answer | Touch me
12 ஆண்டுகள்
1217. 9-ஆம் வகுப்பு | தமிழ் | “தலைவர்களை உருவாக்குபவர்” என்று அழைக்கப்பட்டவர் யார்?
Answer | Touch me
காமராசர்
1218. 9-ஆம் வகுப்பு | தமிழ் | காமராசர் எப்போது முதலமைச்சர் பதவியி;ல் அமர்;ந்தார்?
Answer | Touch me
1954-ஆம் ஆண்டு
1219. 9-ஆம் வகுப்பு | தமிழ் | காமராசர் முதலமைச்சர் பதவியை எப்போது இராஜினாமா செய்தார்?
Answer | Touch me
1963-ஆம் ஆண்டு
1220. 9-ஆம் வகுப்பு | தமிழ் | காமராசர் ஆட்சிக் காலத்தில் தொழில்துறை அமைச்சராக இருந்த முன்னால் குடியரசுத் தலைவர் யார்?
Answer | Touch me
ஆர்.வெங்கட்ராமன்
Friday, 23 August 2013
TAMIL G.K 1181-1200 | TNPSC | TRB | TET | 90 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்
TAMIL G.K 1181-1200 | TNPSC | TRB | TET | 90 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்
1181. 9-ஆம் வகுப்பு | தமிழ் | நோய்க்கு முதல் காரணம் எது?
Answer | Touch me
உப்பு
1182. 9-ஆம் வகுப்பு | தமிழ் | அடிப்படைத் தேவைகளுள் முதன்மையானது எது?
Answer | Touch me
உணவு
1183. 9-ஆம் வகுப்பு | தமிழ் | மஞ்சள் காமாலைக்குக் கைகண்ட மருந்து எது?
Answer | Touch me
கீழாநெல்லி
1184. 9-ஆம் வகுப்பு | தமிழ் | தூது வளையின் மற்றொரு பெயர் என்ன?
Answer | Touch me
தூதுளை, சிங்கவல்லி
1185. 9-ஆம் வகுப்பு | தமிழ் | நல்லெண்ணெயில் சமைத்த தூதுவளை இலைகளை உணவோடு சேர்த்து இருபத்தொரு நாள் உண்டு வந்தால் _______ அகலும்.
Answer | Touch me
சுவாசகாசம்
1186. 9-ஆம் வகுப்பு | தமிழ் | தூதுவளையை வள்ளலார் எவ்வாறு அழைத்தார்?
Answer | Touch me
ஞானப்பச்சிலை
1187. 9-ஆம் வகுப்பு | தமிழ் | எந்த மூலிகை நச்சுக் கடிக்கு நல்ல மருந்தாக விளங்குகிறது?
Answer | Touch me
குப்பைமேனி
1188. 9-ஆம் வகுப்பு | தமிழ் | கற்றாழைக்கு வேறு பெயர் என்ன?
Answer | Touch me
குமரி
1189. 9-ஆம் வகுப்பு | தமிழ் | பெண்களின் கருப்பை சார்ந்த நோய்களை நீக்குவதால்______ என்னும் வழக்கு ஏற்பட்டது.
Answer | Touch me
குமரி கண்ட நோய்க்குக் குமரிகொடு
1190. 9-ஆம் வகுப்பு | தமிழ் | எந்தப் பட்டையை அரைத்துப் ப10சினால் முரிந்த எலும்பு விரைவி;ல் கூடும்?
Answer | Touch me
முருங்கை
1191. 9-ஆம் வகுப்பு | தமிழ் | கரிசாலை, கையாந்த கரை, பிருங்கராசம், தேகராசம் இது எந்த மூலிகையின் வேறு பெயர்கள்?
Answer | Touch me
கரிசலாங்கண்ணி
1192. 9-ஆம் வகுப்பு | தமிழ் | வேப்பங்கொழுந்தினைக் காலையில் உண்டு வந்தால்______ நீங்கும்.
Answer | Touch me
மார்புச்சளி
1193. 9-ஆம் வகுப்பு | தமிழ் | ஒரு செய்யுளில் உள்ள சீர்களையோ பொருள் உணர்வுக்கு ஏற்றவகையில் அமைத்துக் கொள்ளும் முறையை ______ என வழங்குவர்.
Answer | Touch me
பொருள்கோள்
1194. 9-ஆம் வகுப்பு | தமிழ் | பொருள்கோள் எத்தனை வகைப்படும்?
Answer | Touch me
எட்டு
1195. 9-ஆம் வகுப்பு | தமிழ் | இடையறாது செல்லும் ஆற்றுநீரைப் போலப் பாடலின் சொற்கள் முன் பின் மாறாது நேரே சென்று பொருள் கொள்வது _______ ஆகும்.
Answer | Touch me
ஆற்றுநீர்ப் பொருள்கோள்
1196. 9-ஆம் வகுப்பு | தமிழ் | ஓரடியுள் உள்ள சொற்களை, அவைதரும் பொருளுக்கு ஏற்ப மாற்றிக் கூறுதல் ______என வழங்கப்படும்.
Answer | Touch me
மொழி மாற்றுப் பொருள்கோள்
1197. 9-ஆம் வகுப்பு | தமிழ் | மாறிமாறி இருக்கின்ற சொற்களை வரிசையாக அமைத்துப் பொருள் கொள்வது _______ ஆகும்.
Answer | Touch me
நிரல் நிறைப் பொருள்கோள்
1198. 9-ஆம் வகுப்பு | தமிழ் | வில்லின் இருமுனைகளையும் இணைத்துக் கட்டுதல் போலச் செய்யுளின் முதலில் அமைந்துள்ள சொல்லும், இறுதியில் அமைந்துள்ள சொல்லும் பொருள் படப் பொருத்துவது _____ ஆகும்.
Answer | Touch me
விற்ப10ட்டுப் பொருள்கோள்
1199. 9-ஆம் வகுப்பு | தமிழ் | ஊஞ்சலின் நடுநின்ற கயிறு முன்னும் பின்னும் சென்று வருவது போலச் செய்யுளின் நடுவி;ல் அமைந்திருக்கும் சொல், செய்யுளின் முதலிலும் இறுதியிலும் அமைந்திருக்கும் சொற்களுடன் பொருந்திப் பொருளைத் தருவது_______ ஆகும்.
Answer | Touch me
தாப்பிசைப் பொருள்கோள்
1200. 9-ஆம் வகுப்பு | தமிழ் | பாம்பு, புற்றில் தலைவைத்து நுழையும்போது, தலை மேலாகவும், உடல் அடுத்தும் செல்வது போலச் செய்யுளின் இறுதியிலிருந்து சொற்களை எடுத்து முதலில் வைத்துக் கூட்டிப் பொருள் கொள்வது _______ ஆகும்.
Answer | Touch me
அளைமறி பாப்புப் பொருள்கோள்
TAMIL G.K 1161-1180 | TNPSC | TRB | TET | 89 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்
TAMIL G.K 1161-1180 | TNPSC | TRB | TET | 89 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்
1161. 9-ஆம் வகுப்பு | தமிழ் | சாத்தனார் பிறந்த ஊர் எது?
Answer | Touch me
திருச்சிராப்பள்ளியைச் சார்ந்த சீத்தலை என்னும் ஊரில் பிறந்து மதுரையில் வாழ்ந்தவர்
1162. 9-ஆம் வகுப்பு | தமிழ் | தண்டமிழ் ஆசான், சாத்தன் நன்னூற்புலவன் என்று சாத்தனாரைப் பாராட்டிய புலவர் யார்?
Answer | Touch me
இளங்கோவடிகள்
1163. 9-ஆம் வகுப்பு | தமிழ் | சாத்தனார் வாழ்ந்த காலம் எது?
Answer | Touch me
கி.பி. இரண்டாம் நூற்றாண்டு
1164. 9-ஆம் வகுப்பு | தமிழ் | மணிமேகலை எந்த காப்பியங்களுள் ஒன்று?
Answer | Touch me
ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்று
1165. 9-ஆம் வகுப்பு | தமிழ் | இரட்டைக் காப்பியங்கள் எவை?
Answer | Touch me
சிலப்பதிகாரம், மணிமேகலை
1166. 9-ஆம் வகுப்பு | தமிழ் | மணிமேகலையின் துறவு வாழ்க்கையைக் கூறுவதால் மணிமேகலை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Answer | Touch me
மணிமேகலைத் துறவு
1167. 9-ஆம் வகுப்பு | தமிழ் | மணிமேகலை எந்த சமயத் தொடர்புடைய நூல்?
Answer | Touch me
பௌத்தம்
1168. 9-ஆம் வகுப்பு | தமிழ் | “ஆபுத்திரன் நாடு அடைந்த காதை” மணிமேகலையில் எத்தனையாவது காதை?
Answer | Touch me
24-வது காதை
1169. 9-ஆம் வகுப்பு | தமிழ் | மணிமேகலையில் உள்ள காதைகள் எத்தனை?
Answer | Touch me
முப்பது
1170. 9-ஆம் வகுப்பு | தமிழ் | ஐம்பெருங்காப்பியங்கள் யாவை?
Answer | Touch me
சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி
1171. 9-ஆம் வகுப்பு | தமிழ் | உமர்கய்யாம் பாடல்களைத் தமிழில் மொழியாக்கம் செய்தவர் யார்?
Answer | Touch me
கவிமணி தேசிகவிநாயகனார்.
1172. 9-ஆம் வகுப்பு | தமிழ் | பதினோராம் நூற்றாண்டில் வாழ்ந்த பாரசீகக் கவிஞர் யார்?
Answer | Touch me
உமர்கய்யாம்
1173. 9-ஆம் வகுப்பு | தமிழ் | உமர்கய்யாமின் முழுப்பெயர் என்ன?
Answer | Touch me
கியாதுதீன் அபுல்பாத் உமர்கய்யாம்
1174. 9-ஆம் வகுப்பு | தமிழ் | உமர்கய்யாம் எந்த பாடத்தில் புலமை பெற்றவர்?
Answer | Touch me
கணிதம், வானிவியல்
1175. 9-ஆம் வகுப்பு | தமிழ் | மலரும் மாலையும், மருமக்கள் வழி மான்மியம், குழந்தைச் செல்வம், ஆசிய ஜோதி முதலிய நூல்களின் ஆசிரியர் யார்?
Answer | Touch me
கவிமணி தேசிகவிநாயகம்
1176. 9-ஆம் வகுப்பு | தமிழ் | உமர்கய்யாம் பாடல்கள் எந்தப் பெயரில் எழுதப்பட்ட செய்யுளின் மொழி பெயர்ப்பு?
Answer | Touch me
ரூபாயத்
1177. 9-ஆம் வகுப்பு | தமிழ் | ரூபாயத் என்றால் பொருள் என்ன?
Answer | Touch me
நான்கடிச்செய்யுள்
1178. 9-ஆம் வகுப்பு | தமிழ் | கவிமணி வாழ்ந்த காலம் எது?
Answer | Touch me
1876 முதல் 1954 வரை
1179. 9-ஆம் வகுப்பு | தமிழ் | “பசிப்பிணி என்னும் பாவி” என்று பசியின் கொடுமையைப் பற்றிக் கூறும் காப்பியம் எது?
Answer | Touch me
மணிமேகலைக் காப்பியம்
1180. 9-ஆம் வகுப்பு | தமிழ் | “மீதூண் விரும்பேல்” இது யாருடைய கூற்று?
Answer | Touch me
ஒளவைபிராட்டி
TAMIL G.K 1141-1160 | TNPSC | TRB | TET | 88 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்
TAMIL G.K 1141-1160 | TNPSC | TRB | TET | 88 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்
1141. 9-ஆம் வகுப்பு | தமிழ் | சோழ மன்னன்______விற்குத் தன் தசையை அளித்தான்.
Answer | Touch me
புறா
1142. 9-ஆம் வகுப்பு | தமிழ் | மார்போலை எழுதும் எழுத்தாணி_______
Answer | Touch me
தந்தம்
1143. 9-ஆம் வகுப்பு | தமிழ் | ஆயிரக்கணக்கான யானைகளைப் போரில் கொன்ற வீரனைப் புகழ்ந்து பாடும் இலக்கியத்திற்குப் பெயர் என்ன?
Answer | Touch me
பரணி
1144. 9-ஆம் வகுப்பு | தமிழ் | பரணியை “தென் தமிழ்த் தெய்வப்பரணி” எனப் புகழ்ந்து பாராட்டியவர் யார்?
Answer | Touch me
ஒட்டக்கூத்தர்
1145. 9-ஆம் வகுப்பு | தமிழ் | “எனக்கு மிக விருப்பமான இலக்கியம் ஒன்று உண்டென்றால் அது கலிங்கத்துப் பரணியே” இது யாருடைய கூற்று?
Answer | Touch me
பேரறிஞர் அண்ணா
1146. 9-ஆம் வகுப்பு | தமிழ் | “நவ்வி” என்னும் இச்சொல்லின் பொருள் என்ன?
Answer | Touch me
மான்
1147. 9-ஆம் வகுப்பு | தமிழ் | சிற்றிலக்கியங்கள் ______வகைப்படும்.
Answer | Touch me
96
1148. 9-ஆம் வகுப்பு | தமிழ் | சாதுவன் கடல் வாணிகம் மேற்கொண்ட குறிப்பு எந்த நூலில் காணப்படுகிறது?
Answer | Touch me
மணிமேகலை
1149. 9-ஆம் வகுப்பு | தமிழ் | “தமிழ்த்தென்றல்” எனப் போற்றப்பட்டவர் யார்?
Answer | Touch me
திரு. வி;.க
1150. 9-ஆம் வகுப்பு | தமிழ் | திரு. வி.க. எங்கு எப்போது பிறந்தார்?
Answer | Touch me
துள்ளம் என்னும்; ஊரில் 26.08.1883-இல் பிறந்தார்
1151. 9-ஆம் வகுப்பு | தமிழ் | திரு. வி.க.–வின் பெற்றோர் யார்?
Answer | Touch me
விருத்தாசலனார் சின்னம்மை
1152. 9-ஆம் வகுப்பு | தமிழ் | “மார்க்சியமும், காந்தியமும்” என்ற செய்யுள் நூலை எழுதியவர் யார்?
Answer | Touch me
திரு. வி.க.
1153. 9-ஆம் வகுப்பு | தமிழ் | “நான் தனியாக வாழவில்லை@ தமிழோடு வாழ்கிறேன்” இது யாருடைய கூற்று?
Answer | Touch me
திரு. வி.க.
1154. 9-ஆம் வகுப்பு | தமிழ் | திரு. வி.க. எப்போது தனது இவ்வுலக வாழ்வை நீத்தார்?
Answer | Touch me
1953-ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 17-ஆம் நாள் தமது 71-வயதில் தமிழ்மூச்சுக்கு விடை தந்தார்.
1155. 9-ஆம் வகுப்பு | தமிழ் | “பேசுந் தாய்மொழியின் மாட்டு அன்பில்லா ஒருவன் தாயையும் நாட்டையும் பழித்தவனாவான்” இது யாருடைய கூற்று?
Answer | Touch me
திரு. வி.க.
1156. 9-ஆம் வகுப்பு | தமிழ் | இலக்கண முறைப்படி குற்றமில்லாது பேசுவதும் எழுதுவதும் ______ எனப்படும்.
Answer | Touch me
வழாநிலை
1157. 9-ஆம் வகுப்பு | தமிழ் | இலக்கண முறையின்றிப் பேசுவதும் எழுதுவதும் ______ எனப்படும்.
Answer | Touch me
வழு
1158. 9-ஆம் வகுப்பு | தமிழ் | “வழு” எத்தனை வகைப்படும்?
Answer | Touch me
ஏழு
1159. 9-ஆம் வகுப்பு | தமிழ் | இலக்கண முறைப்படி குற்றமுடையது எனினும், இலக்கண ஆசிரியர்களால் குற்றமன்று என்று ஏற்றுக் கொள்ளப்படுவது ______ ஆகும்.
Answer | Touch me
வழுவமைதி
1160. 9-ஆம் வகுப்பு | தமிழ் | மணிமேகலையின் ஆசிரியர் யார்?
Answer | Touch me
கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார்
Thursday, 22 August 2013
TAMIL G.K 1121-1140 | TNPSC | TRB | TET | 87 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்
TAMIL G.K 1121-1140 | TNPSC | TRB | TET | 87 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்
1121. 9-ஆம் வகுப்பு | தமிழ் | “கரோரா” என்ற கிரேக்க சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல் எது?
Answer | Touch me
கருவ10ர்
1122. 9-ஆம் வகுப்பு | தமிழ் | “கபிரில்” என்ற கிரேக்க சொல் தமிழில் எதைக் குறிக்கிறது?
Answer | Touch me
காவிரி
1123. 9-ஆம் வகுப்பு | தமிழ் | “திண்டிஸ்” என்ற கிரேக்க சொல்லுக்கு தமிழில் என்ன அர்த்தம்
Answer | Touch me
தொண்டி
1124. 9-ஆம் வகுப்பு | தமிழ் | “மதோரா” என்ற கிரேக்க சொல்லுக்கு ஏற்ற தமிழக நகரம் எது?
Answer | Touch me
மதுரை
1125. 9-ஆம் வகுப்பு | தமிழ் | “முசிரில்” என்ற கிரேக்க சொல் தமிழக நகரமான எதைக் குறிக்கிறது?
Answer | Touch me
1126. 9-ஆம் வகுப்பு | தமிழ் | ஆனந்தரங்கர் எங்கு எப்போது பிறந்தார்? .
Answer | Touch me
சென்னைப் பெரம்ப10ரில் 1709-ஆம் ஆண்டு மார்ச் திங்கள் 30-ஆம் நாள் பிறந்தார்
1127. 9-ஆம் வகுப்பு | தமிழ் | ஆனந்தரங்கர் யாரிடம் கல்வி பயின்றார்?
Answer | Touch me
எம்பார்
1128. 9-ஆம் வகுப்பு | தமிழ் | ஆனந்த ரங்கரின் தந்தை யார்?
Answer | Touch me
திருவேங்கடம்
1129. 9-ஆம் வகுப்பு | தமிழ் | ஆனந்த ரங்கர் யாருடைய மொழி பெயர்ப்பாளராக பணியமர்த்தப்பட்டார்?
Answer | Touch me
துய்ப்ளெக்சு
1130. 9-ஆம் வகுப்பு | தமிழ் | “துபாசி” என்றால் என்ன பொருள்?
Answer | Touch me
மொழி பெயர்ப்பாளர்
1131. 9-ஆம் வகுப்பு | தமிழ் | கி.பி. 1736- ஆம் ஆண்டு முதல் 1761 –ஆம் ஆண்டு வரை ஏறத்தாழ எத்தனை ஆண்டுகள் ஆனந்தரங்கர் நாட்குறிப்பு எழுதியுள்ளார்;?
Answer | Touch me
25 ஆண்டுகள்
1132. 9-ஆம் வகுப்பு | தமிழ் | ஆனந்தரங்கர் தம் நாட்குறிப்பிற்கு என்ன பெயரிட்டார்?
Answer | Touch me
தினப்படிச் செய்திக்குறிப்பு, சொஸ்தலிகிதம்
1133. 9-ஆம் வகுப்பு | தமிழ் | ஆனந்தரங்கருக்கு கி.பி. 1749-இல் மூவாயிரம் குதிரைகள் வழங்கி, மன்சுபேதார் என்னும் பட்டத்தையும் வழங்கியவர் யார்?
Answer | Touch me
முசபர்சங்
1134. 9-ஆம் வகுப்பு | தமிழ் | “இந்தியாவின் பெப்பிசு” எனவும், “நாட்குறிப்புவேந்தர்” எனவும் அழைக்கப்பட்டவர் யார்?
Answer | Touch me
ஆனந்தரங்கர்
1135. 9-ஆம் வகுப்பு | தமிழ் | “டைஸ்” என்னும் இலத்தீன் சொல்லுக்கு பொருள் என்ன?
Answer | Touch me
நாள்
1136. 9-ஆம் வகுப்பு | தமிழ் | “டைரியம்” என்னும் இலத்தீன் சொல்லுக்கு பொருள் என்ன?
Answer | Touch me
நாட்குறிப்பு
1137. 9-ஆம் வகுப்பு | தமிழ் | இராமநாடகத்தை ஆனந்தரங்கர் முன்னிலையில் அரங்கேற்றியவர் யார்?
Answer | Touch me
அருணாசலக்கவிராயர்
1138. 9-ஆம் வகுப்பு | தமிழ் | “ஆனந்தரங்கருடைய நாட்குறிப்புகள் அவரது காலத்தில் யாருமே புரிந்திராத அரியதொரு இலக்கியப் பணி” இது யாருடைய கூற்று?
Answer | Touch me
கே.கே. பிள்ளை
1139. 9-ஆம் வகுப்பு | தமிழ் | “தான் நேரில் கண்டும் கேட்டும் அறிந்துள்ள செய்திகளைச் சித்திரகுப்தனைப்போல் ஒன்றுவிடாமல் குறித்து வைத்துள்ளார்” இது யாருடைய கூற்று?
Answer | Touch me
வ.வே.சு
1140. 9-ஆம் வகுப்பு | தமிழ் | சேர மன்னரின் அடையாளச் சின்னம் எது?
Answer | Touch me
வில்
TAMIL G.K 1101-1120 | TNPSC | TRB | TET | 86 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்
TAMIL G.K 1101-1120 | TNPSC | TRB | TET | 86 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்
1101. 9-ஆம் வகுப்பு | தமிழ் | கெலன் கெல்லர் எத்தனை மாதக் குழந்தையாக இருந்த போது ஏற்பட்ட நோயால் கண்களின் பார்வை பறிபோய், காதுகள் கேளாமல், வாய் பேசாமல் போனது?
Answer | Touch me
19 – மாதக்குழந்தையில்
1102. 9-ஆம் வகுப்பு | தமிழ் | கெலன் கெல்லர் ஆறு வயதாக இருந்தபோது யாரால் பெர்கின்ஸ் பள்ளியில் சேர்ந்தார்?
Answer | Touch me
அலெக்சாண்டர் கிரகாம்பெல்
1103. 9-ஆம் வகுப்பு | தமிழ் | கெலன் கெல்லரின் ஆசிரியர் யார்?
Answer | Touch me
அன்னிசல்லிவான்
1104. 9-ஆம் வகுப்பு | தமிழ் | பாஸ்டனில் உள்ள எங்கே காது கேளாதவருக்கான பள்ளியில் கெலன் கெல்லர் சேர்ந்தார்?
Answer | Touch me
ஹோரஸ்மான்
1105. 9-ஆம் வகுப்பு | தமிழ் | கெலன் கெல்லர் நிய10யார்க்கிலுள்ள எந்த பள்ளியில் முறைப்படி பயின்றார்?
Answer | Touch me
ரைட் ஹ{மாசன்
1106. கெலன் கெல்லர் எந்த முறையில் எழுதவும் படிக்கவும் கற்றார்?
Answer | Touch me
பிரெய்லி
1107. 9-ஆம் வகுப்பு | தமிழ் | எந்தக் கல்லூரியில் கெலன்கெல்லர் இளங்கலைப்பட்டம் பெற்றார்?
Answer | Touch me
கேம்பிரிட்ஜ் ரெட் கிளிஃப்
1108. 9-ஆம் வகுப்பு | தமிழ் | கெலனின் ஆசிரியர் அன்னி எந்த ஆண்டு இறந்தார்?
Answer | Touch me
கி.பி. 1930-ஆம் ஆண்டு
1109. 9-ஆம் வகுப்பு | தமிழ் | அன்னிக்கு பிறகு கெலன் கெல்லர் யார் உதவியுடன் வாழ்ந்து வரலானார்?
Answer | Touch me
பாலிதாம்சன்
1110. 9-ஆம் வகுப்பு | தமிழ் | “வாழ்க்கையில் இழப்பு என்பதே இல்லை@ ஒன்று போனால் இன்னொன்று வரும். அந்த நம்பிக்கையிருந்தால் வாழ்க்கை வெறுமை ஆகாது” - இது யார் கூறிய கூற்று?
Answer | Touch me
கெலன் கெல்லர்
1111. 9-ஆம் வகுப்பு | தமிழ் | கெலன் கெல்லர் எத்தனை நாள் தனக்கு பார்வை கிட்டியதாக கனவு கண்டார்?
Answer | Touch me
மூன்றுநாள்
1112. 9-ஆம் வகுப்பு | தமிழ் | கெலன் கெல்லர் எப்போது எங்கு பிறந்தார்?
Answer | Touch me
1880 சூன் 27-இல் அலபாமா மாகாணத்தில் துஸ்கும்பியாவில் பிறந்தார்
1113. 9-ஆம் வகுப்பு | தமிழ் | கெலன் கெல்லர் எப்போது இவ்வுலக வாழ்வை நீத்தார்?
Answer | Touch me
கி.பி. 1968-ஆம் ஆண்டு சூன் முதல் நாள்
1114. 9-ஆம் வகுப்பு | தமிழ் | “உலகின் எட்டாவது அதிசயம்” எனப் பாராட்டப்படுபவர் யார்?
Answer | Touch me
கெலன் கெல்லர்
1115. 9-ஆம் வகுப்பு | தமிழ் | பார்வையற்றோருக்கான எழுத்து முறையை உருவாக்கியவர் யார்?
Answer | Touch me
பிரெய்லி
1116. 9-ஆம் வகுப்பு | தமிழ் | தொழிற்பெயரின் பகுதி திரிந்து வரும் பெயர் _______ஆகும்.
Answer | Touch me
முதனிலை திரிந்த தொழிற்பெயர்
1117. 9-ஆம் வகுப்பு | தமிழ் | பகுதி மட்டும் தொழிலைக் குறிப்பது _______
Answer | Touch me
முதனிலைத் தொழிற்பெயர்
1118. 9-ஆம் வகுப்பு | தமிழ் | செவிக்குணவாவது எது?
Answer | Touch me
கேள்வி
1119. 9-ஆம் வகுப்பு | தமிழ் | ஒழுக்கமுடையார் வாய்ச்சொல் எது?
Answer | Touch me
ஊற்றுக்கோல்
1120. 9-ஆம் வகுப்பு | தமிழ் | “அரிசி” என்ற தமிழ்ச்சொல்லுக்கு இணையான கிரேக்க சொல் எது?
Answer | Touch me
ஒரைஸா
TAMIL G.K 1081-1100 | TNPSC | TRB | TET | 85 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்
TAMIL G.K 1081-1100 | TNPSC | TRB | TET | 85 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்
1081. 9-ஆம் வகுப்பு | தமிழ் | “யாதும் ஊரே யாவரும் கேளீர்” இது யாருடைய கூற்று?
Answer | Touch me
கணியன் ப10ங்குன்றனார்
1082. 9-ஆம் வகுப்பு | தமிழ் | தொல்காப்பியத்தில், அதற்கு முன் வாழ்ந்த தமிழர் பிற நாடுகளுக்குக் கடற்பயணம் மேற்கொண்ட செய்தி _______ எனக் குறிக்கப்பட்டுள்ளது.
Answer | Touch me
முந்நீர் வழக்கம்
1083. 9-ஆம் வகுப்பு | தமிழ் | பழந்தமிழர் பொருளீட்டுதலை, தொல்காப்பியப் பொருளதிகாரத்தில் இடம் பெற்றுள்ள ____ விளக்குகிறது.
Answer | Touch me
பொருள் வயிற்பிரிவு
1084. 9-ஆம் வகுப்பு | தமிழ் | தமிழர், கிரேக்கர்களையும், உரோமானியர்களையும் ______ என அழைத்தனர்.
Answer | Touch me
யவனர்
1085. 9-ஆம் வகுப்பு | தமிழ் | பண்டைய தமிழகத்தில் கப்பல் கட்டும் ஒருவகைத் தொழிலாளர் பெயரை குறிப்பிடுக?
Answer | Touch me
கலம்செய் கம்மியர்
1086. 9-ஆம் வகுப்பு | தமிழ் | ஆழி, ஆர்கலி, முந்நீர், வாரணம், பௌவம், பரவை, புணரி என்பது எதைக்குறிக்கும் தமிழ்ச்சொற்கள்?
Answer | Touch me
கடல்
1087. 9-ஆம் வகுப்பு | தமிழ் | நாவாய், புணை, தெப்பம், திமி;ல், அம்பி, வங்கம், பஃறி போன்;ற தமிழ்பெயர்கள் எதைக் குறிக்கின்றன?
Answer | Touch me
மரக்கலம்
1088. 9-ஆம் வகுப்பு | தமிழ் | கடலில் செல்லும் பெரிய கப்பல் ______ எனப்படும்.
Answer | Touch me
நாவாய்
1089. 9-ஆம் வகுப்பு | தமிழ் | புகார் நகரத்தில் நிறுத்தப்பட்ட நாவாய்கள், அலைகளால் அலைப் புண்டு தறியில் கட்டப்பட்ட யானை அசைவது போல் அசைந்தன@ அவற்றின் உச்சியில் கொடிகள் அசைந்தாடின என எந்த நூல் கூறுகிறது?
Answer | Touch me
பட்டினப்பாலை
1090. 9-ஆம் வகுப்பு | தமிழ் | சேரமன்னர்க்குரிய துறைமுகம் எது?
Answer | Touch me
முசிறி
1091. 9-ஆம் வகுப்பு | தமிழ் | யவனர்கள் எதைச் சுமந்து வந்து, அதற்கு ஈடாக மிளகை ஏற்றிச் சென்றனர்?
Answer | Touch me
பொன்
1092. 9-ஆம் வகுப்பு | தமிழ் | யவனர்கள் தமிழகத்தில் வியாபாரம் செய்தது பற்றி எந்த நூல் கூறுகிறது?
Answer | Touch me
அகநானூறு
1093. 9-ஆம் வகுப்பு | தமிழ் | பாண்டிய நாட்டின் துறைமுகம் எது?
Answer | Touch me
கொற்கை
1094. 9-ஆம் வகுப்பு | தமிழ் | எந்த துறைமுகத்தில் முத்துக் குளித்தல் மிகச் சிறப்பாக நடந்ததாக வெனிசு நாட்டறிஞர் மார்க்கோபோலோ கூறி உள்ளார்?
Answer | Touch me
கொற்கை
1095. 9-ஆம் வகுப்பு | தமிழ் | “விளைந்து முதிர்ந்த விழுமுத்து” என எந்த நூல் கூறுகிறது?
Answer | Touch me
மதுரைக்காஞ்சி
1096. 9-ஆம் வகுப்பு | தமிழ் | சோழநாட்டின் துறைமுகம் எது?
Answer | Touch me
காவிரிப்ப10ம்பட்டினம்
1097. 9-ஆம் வகுப்பு | தமிழ் | அதியமானின் முன்னோர் காலத்தில் சீனாவிலிருந்து கொண்டு வந்து பயிரிடப்பட்ட பயிர் எது?
Answer | Touch me
கரும்பு
1098. 9-ஆம் வகுப்பு | தமிழ் | “மேலைக்கடல் முழுவதும் கப்பல் விடுவோம்” இது யாருடைய கனவு?
Answer | Touch me
பாரதியார்
1099. 9-ஆம் வகுப்பு | தமிழ் | காவிரிப்ப10ம்பட்டினத்தில் சுங்கச் சாலையும்_____ இருந்தன.
Answer | Touch me
கலங்கரை விளக்கமும்
1100. 9-ஆம் வகுப்பு | தமிழ் | கெலன்கெல்லர் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?
Answer | Touch me
அமெரிக்கா
TAMIL G.K 1061-1080 | TNPSC | TRB | TET | 84 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்
TAMIL G.K 1061-1080 | TNPSC | TRB | TET | 84 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்
1061. 9-ஆம் வகுப்பு | தமிழ் | சொல்லைக் குறிக்காது பொருளுக்குப் பெயராகி வந்தால் அது _______ எனப்படும்.
Answer | Touch me
சொல்லாகு பெயர்
1062. 9-ஆம் வகுப்பு | தமிழ் | ஓர் இடத்தில் உள்ள ஒரு பொருளின் பெயர் அது சார்ந்திருக்கும் இடத்திற்குப் பெயராகி வருவது _______ எனப்படும்.
Answer | Touch me
தானியாகுபெயர்
1063. 9-ஆம் வகுப்பு | தமிழ் | கருவி இசைக்கு ஆகி வந்தால் _______ என்பர்.
Answer | Touch me
கருவியாகுபெயர்
1064. 9-ஆம் வகுப்பு | தமிழ் | காரியத்தின் பெயர் அதன் காரணத்திற்குப் பெயராகி வருவது _______ ஆகும்.
Answer | Touch me
காரியவாகுபெயர்
1065. 9-ஆம் வகுப்பு | தமிழ் | ஒருவரால் இயற்றப்பெற்ற நூலுக்கு ஆகிவந்தால் அது ______ஆகும்.
Answer | Touch me
கருத்தாவாகுபெயர்
1066. 9-ஆம் வகுப்பு | தமிழ் | ஒருவரை அழைக்கும் பெயர் அவரைக் குறிக்காமல் அவரைப் போன்ற வேறொருவருக்கு ஆகிவந்தால் அது ____ எனப்படும்.
Answer | Touch me
உவமையாகுபெயர்
1067. 9-ஆம் வகுப்பு | தமிழ் | “நாலுமிரண்டும் சொல்லுக்குறுதி” -இத்தொடர் ______ ஆகுபெயர் ஆகும்.
Answer | Touch me
எண்ணலளவை
1068. 9-ஆம் வகுப்பு | தமிழ் | தயிரை இறக்கு. - இத்தொடர் ______ ஆகுபெயர் ஆகும்.
Answer | Touch me
தானியாகு
1069. 9-ஆம் வகுப்பு | தமிழ் | “மூன்று மீட்டர் தா” என்பது ______ பெயராகும்.
Answer | Touch me
நீட்டல் அளவை
1070. 9-ஆம் வகுப்பு | தமிழ் | “கம்பர் படிக்கிறேன்” என்பது ______ பெயராகும்.
Answer | Touch me
கருத்தாவாகு
1071. 9-ஆம் வகுப்பு | தமிழ் | “வானொலி கேட்டு மகிழ்ந்தேன்” இ;த்தொடர் ______பெயர் ஆகும்.
Answer | Touch me
கருவியாகுபெயர்
1072. 9-ஆம் வகுப்பு | தமிழ் | அ) “பெரியோர் சொல் கேள்” இத்தொடர் ___________.பெயர் ஆகும்.
Answer | Touch me
சொல்லாகுபெயர்
ஆ) “100” என்ற எண்ணுக்கு ஏற்ற தமிழெண்ணை எழுது?
க00
1073. 9-ஆம் வகுப்பு | தமிழ் | “55” என்ற எண்ணுக்கான தமிழெண்ணை எழுது?
Answer | Touch me
ருரு
1074. 9-ஆம் வகுப்பு | தமிழ் | “90” என்ற எண்ணுக்கான தமிழெண்ணை எழுதுக?
Answer | Touch me
சூ0
1075. 9-ஆம் வகுப்பு | தமிழ் | “கல்லா” - இலக்கணக்குறிப்பு தருக
Answer | Touch me
ஈறுகெட்ட எதிர்மறைப்பெயரெச்சம்
1076. 9-ஆம் வகுப்பு | தமிழ் | “திருமுருகாற்றுப்படை” யையும், “நெடு நல்வாடை” யையும் இயற்றியவர் யார்?
Answer | Touch me
மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார்
1077. 9-ஆம் வகுப்பு | தமிழ் | குறுந்தொகையைத் தொகுத்தவர் யார்?
Answer | Touch me
ப10ரிக்கோ
1078. 9-ஆம் வகுப்பு | தமிழ் | குறுந்தொகை பாடல்களின் எண்ணிக்கை ______ ஆகும்.
Answer | Touch me
401 பாடல்கள்
1079. 9-ஆம் வகுப்பு | தமிழ் | குறுந்தொகையின் அடிவரையறை ______
Answer | Touch me
4 முதல் 8 வரை
1080. 9-ஆம் வகுப்பு | தமிழ் | “திரைகடல் ஓடியும் திரவியம் தேடு” - இது யாருடைய கூற்று?
Answer | Touch me
ஒளவையார்
Wednesday, 21 August 2013
டிசம்பர் மாதம் நடைபெற உள்ள சிஎஸ்ஐஆர்-யுஜிசி நெட் தேர்வு பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.ஆன்லைனில் விண்ணப்பிக்க ஆகஸ்ட் 30 கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அறிவியல் பாடப்பிரிவுகளில் இளநிலை ஆராய்ச்சியாளர் (JRF) மற்றும் கல்லூரி உதவி பேராசிரியர் பணிகளில் சேருவதற்கான நெட் தேர்வை சிஎஸ்ஐஆர் மற்றும் யுஜிசி ஆகியவை இணைந்து நடத்துகின்றன.
டிசம்பர் மாதம் நடைபெற உள்ள சிஎஸ்ஐஆர்-யுஜிசி நெட் தேர்வு பற்றிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இத்தகுதித் தேர்வுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.
Chemical Sciences. Earth, Atmospheric, Ocean & Planetary Sciences, Physical Sciences. Engineering Sciences ஆகியவை தேர்வுக்கான பாடப்பிரிவுகளாகும்.
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் சிஎஸ்ஐஆர்-ன் மனிதவள மேம்பாட்டு குழுவின் இணையதளமான www.csirhrdg.res.in என்ற இணையதளத்தின் வழியான ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைன் விண்ணப்பித்தலின் போது கிடைக்கப்பெறும் செல்லான் பதிவிறக்கம் செய்து உரிய விண்ணப்பக் கட்டணத்தை இந்தியன் வங்கியின் ஏதாவது ஒரு கிளையின் வழியாக செலுத்த வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்த பின் கிடைக்கப்பெறும் விண்ணப்ப படிவத்துடன் தகுந்த சான்றுகளின் நகல்களையும் இணைத்து தபால் மூலம் அனுப்ப வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க ஆகஸ்ட் 30 கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 22ம் தகுதித்தேதி தேர்வு நடைபெற உள்ளது.
Sr. Controller of Examinations. Examination Unit, HRDG, CSIR Comples, Opp. Institute of Hotel Management, Library Avenue, Pusa, New Delhi - 110 012 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
::Advertisement No.: 13D | ::Exam Date: 22-12-2013 |
::Date of Start for Online Submission: 30-07-2013 | ::Date of Close of Online Submission: 30-08-2013 |
::Last Date of Receipt of Duly Completed Hard Copy of Online Application Forms:04-09-2013 | ::Last Date of Receipt of Duly Completed Hard Copy of Online Application Forms(From Remote Areas):10-09-2013 |
::Age will be calculated as on: 01-07-2013 |
Subscribe to:
Posts (Atom)