Saturday, August 24, 2013

TAMIL G.K 0001-0020 | TNPSC | TRB | TET | 31 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்

TAMIL G.K 0001-0020 | TNPSC | TRB | TET | 31 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்

1. 6-ஆம் வகுப்பு | தமிழ் | “கண்ணில் கலந்தான் கருத்தில் கலந்தான்” எனத் தொடங்கும் வாழ்த்துப் பாடலை எழுதியவர் யார்?

Answer | Touch me இராமலிங்க அடிகளார்.


2.6-ஆம் வகுப்பு | தமிழ் | “திருவருட் பிரகாச வள்ளலார்” என்ற சிறப்புப் பெயர் பெற்றவர் யார்?

Answer | Touch me இராமலிங்க அடிகளார்.


3.6-ஆம் வகுப்பு | தமிழ் | இராமலிங்க அடிகளார் எங்கு பிறந்தார்?

Answer | Touch me கடலூர் மாவட்டம் மருதூரில் பிறந்தவர்


4.6-ஆம் வகுப்பு | தமிழ் | இராமலிங்க அடிகளாரின் பெற்றோர் யாவர்?

Answer | Touch me இராமையா சின்னம்மையார்


5.6-ஆம் வகுப்பு | தமிழ் | ஜிவகாருண்ய ஒழுக்கம், மனுமுறை கண்டவாசகம், ஆகிய நூல்களை எழுதியவர் யார்?

Answer | Touch me இராமலிங்க அடிகளார்.


6.6-ஆம் வகுப்பு | தமிழ் | இராமலிங்க அடிகளார் பாடிய பாடலின் தொகுப்பிற்கு பெயர் என்ன?

Answer | Touch me திருவருட்பா.


7.6-ஆம் வகுப்பு | தமிழ் | சமரச சன்மார்க்க நெறிகளை வழங்கியவர் யார்?

Answer | Touch me இராமலிங்க அடிகளார்.


8.6-ஆம் வகுப்பு | தமிழ் | பசித்துயர் போக்கி மக்களுக்கு உணவளிக்க இராமலிங்க அடிகள் அமைத்தது எதை?

Answer | Touch me அறச்சாலை


9.6-ஆம் வகுப்பு | தமிழ் | அறிவு நெறி விளங்க வள்ளலார் எதை நிறுவினார்?

Answer | Touch me ஞானசபை


10. 6-ஆம் வகுப்பு | தமிழ் | வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய கருணை மனம் யாருடையது?

Answer | Touch me இராமலிங்க அடிகள்.


11. 6-ஆம் வகுப்பு | தமிழ் | இராமலிங்க அடிகள் வாழ்ந்த காலம் எது?

Answer | Touch me 5.10.1823 முதல் 30.1.1874 வரை


12. 6-ஆம் வகுப்பு | தமிழ் | திருக்குறளை இயற்றியவர் யார்?

Answer | Touch me திருவள்ளுவர்.


13. 6-ஆம் வகுப்பு | தமிழ் | திருவள்ளுவரின் காலம் எது என்று கூறப்படுகின்றது?

Answer | Touch me கி.மு. 31


14. 6-ஆம் வகுப்பு | தமிழ் | கி.மு.31-ஐ தொடக்கமாகக் கொண்டு எந்த ஆண்டு கணக்கிடப்படுகிறது?

Answer | Touch me திருவள்ளுவர் ஆண்டு


15. 6-ஆம் வகுப்பு | தமிழ் | திருவள்ளுவரின் சிறப்பு பெயர்கள் என்ன?

Answer | Touch me செந்நாப்போதார், தெய்வப் புலவர், நாயனார்.


16. 6-ஆம் வகுப்பு | தமிழ் | திருக்குறள் எத்தனை பிரிவுகளைக் கொண்டது?

Answer | Touch me மூன்று


17. 6-ஆம் வகுப்பு | தமிழ் | திருக்குறளின் மூன்று பிரிவுகள் யாவை?

Answer | Touch me அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால்.


18. 6-ஆம் வகுப்பு | தமிழ் | திருக்குறளில் உள்ள அதிகாரங்கள் எத்தனை?

Answer | Touch me 133


19. 6-ஆம் வகுப்பு | தமிழ் |திருக்குறளில் உள்ள ஒவ்வொரு அதிகாரத்திலும் எத்தனை குறட்பாக்கள் உள்ளன?

Answer | Touch me 10


20. 6-ஆம் வகுப்பு | தமிழ் |திருக்குறளில் உள்ள மொத்த குறட்பாக்களின் எண்ணிக்கை எவ்வளவு?

Answer | Touch me 1330






No comments:

Popular Posts