TRB

TNTET

Saturday, 22 March 2014

வெப்பம் மிகுந்த ஆண்டாக 2016 பதிவு ஐ.நா வானிலை முகமை அறிவிப்பு

வெப்பம் மிகுந்த ஆண்டாக 2016 பதிவு ஐ.நா வானிலை முகமை அறிவிப்பு
முந்தைய பதிவை எல்லாம் முறியடித்து 2016 வெப்பம் மிகுந்த ஆண்டாக பதிவாகி உள்ளது என்று ஐ.நா வானிலை முகமை தெரிவித்துள்ளது. அதிகரித்து வரும் தொழிற் சாலை மற்றும் வாகன மாசு காரணமாக உலகம் முழுவதும் வானிலையில் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. இதன் காரணமாக கடந்த ஆண்டு இறுதியில் பாரீஸில் நடந்த பருவ நிலை மாநாட்டில் பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.
இந்நிலையில் முன்னெப்போ தும் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டின் முதல் 6 மாதத்தில் அதிகபட்ச வெப்பநிலை பதிவாகி இருப்பதாக ஐ.நா.வின் உலக வானிலை அமைப்பு (டபிள்யூஎம்ஒ) தெரிவித்துள்ளது. இது குறித்து அதன் செயலாள ரான பெத்தேரி தாலாஸ் கூறும் போது, ‘‘நீண்டகாலமாக மாறி வரும் பருவநிலை மாற்றம் தற்போது புதிய உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. பூமியின் தட்ப வெப்பத்தை புரட்டிப் போட்ட எல்நினோ தற்போது காணாமல் போய்விட்டது. எனினும் பருவநிலை மாற்றத்தால் உலகம் முழுவதும் வெப்பம் கடுமையாக அதிகரித்து வருகிறது. ஆண்டின் தொடக்கம் முதலே ஆர்க்டிக் கடலில் உள்ள பனிக் கட்டிகள் மிக வேகமாக உருகி வருகின்றன. பருவநிலை மாற்றம் மற்றும் கரியமில வாயுவின் மட்டம் உயர்ந்து வருவதும் வெப்பமயமாதலுக்கு எச்சரிக்கை யாக உள்ளது. 19-ம் நூற்றாண்டில் இருந்ததை விட, கடந்த ஆறு மாதத்தில் சராசரி வெப்பநிலை 1.3 டிகிரி செல்சியஸ் கூடுதலாக பதிவாகி யுள்ளது. சொல்லப்போனால் ஒவ்வொரு மாதமும் வெப்பம் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் உலகத்தில் உள்ள கடல் மற்றும் தரைப் பகுதிகள் சராசரியை விட அதிக வெப்பமாகி வருகின்றன. இதனால் உலகம் முழுவதும் கூடுதலாக வெப்பம் பதிவாகும். அதன் சலனத்தால் மழைப் பொழிவும் தீவிரமாகும். பருவகாலத்தில் உருவாகும் புயல்களிலும் இந்த மாற்றம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்’’ என்றார். இதற்கிடையில் அதிகரித்து வரும் வெப்பநிலையை தடுப்பது குறித்து விவாதிக்க வரும் செப்டம்பர் 21-ம் தேதி ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ மூன் சிறப்பு கூட்டத்தை கூட்டியுள்ளார். இதில் பங்கேற்கும் உலக தலைவர்கள் பருவநிலை மாற்றம் தொடர்பாக கடந்த ஆண்டு இறுதியில் நிறைவேற்றப்பட்ட பாரீஸ் உடன்பாட்டு தீர்மானத்தை ஏற்க வேண்டும் என வலியுறுத்த வுள்ளார்.


No comments: