TRB

TNTET

Saturday, 31 May 2014

ஆசிரியர் தகுதி தேர்வு சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்காமல் விடுபட்டவர்களுக்கு ஜூன் 10 ம் தேதி முதல் 13 ம் தேதி வரை மதுரை , சேலம் , திருச்சி , விழுப்புரம் ஆகிய 4 மையங்களில் மட்டும் சான்றிதழ் சரிபார்ப்பை நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது.

ஆசிரியர் தேர்வு  வாரியம்  சார்பில் ஆசிரியர்  தகுதி  தேர்வுகள்  கடந்த ஆண்டு  ஆகஸ்ட்  17, 18 ஆகிய  தேதிகளில்  நடத்தப்பட்டது . இதற்கான  விடைகள்  கடந்த  நவம்பர் 5 ம்  தேதி  வெளியிடப்பட்டது . இதில் வெற்றி  பெற்றவர்களுக்கு  சான்றிதழ்  சரிபார்ப்பு  மாவட்டம்  வாரியாக  நடைபெற்றது . இதுவரை சான்றிதழ்  சரிபார்ப்பில்  பங்கேற்காமல்  விடுபட்டவர்களுக்கு  மேலும் ஒரு  வாய்ப்பு  வழங்கப்படுகிறது . ஆசிரியர்  தேர்வு  வாரியம்  சார்பில் ஜூன்  10 ம்  தேதி  முதல் 13 ம்  தேதி  வரை  மதுரை , சேலம் , திருச்சி , விழுப்புரம்  ஆகிய  4 மையங்களில்  மட்டும் சான்றிதழ்  சரிபார்ப்பை  நடத்த  ஆசிரியர்  தேர்வு வாரியம்  முடிவு  செய்துள்ளது . இதற்காக தேர்வர்கள் , ஆசிரியர்  தேர்வு  வாரிய  இணையதளத்தில் இருந்து  சான்றிதழ்  சரிபார்ப்புக்கான  அழைப்பு  கடிதம்  மற்றும் பயோடேட்டா  போன்றவற்றை  பெற்றுக்கொள்ளலாம்  எனவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது .       சான்றிதழ் சரிபார்ப்பு  கன்னியாகுமரி , திருநெல்வேலி , தூத்துக்குடி , ராமநாதபுரம் , சிவகங்கை , விருதுநகர் , தேனி , மதுரை , திண்டுக்கல் ஆகிய  மாவட்டங்களுக்கு  மதுரை  ஒசிபிஎம்  பெண்கள் மேல்நிலை  பள்ளியில்  நடைபெற  உள்ளது . இதனை போன்று  ஜெயராணி  பெண்கள்  மேல்நிலை பள்ளி  சேலம் , பிஷப்  ஹெர்பர் மேல்நிலை  பள்ளி  புதூர் & திருச்சி , காமராஜ்  முனிசிபல்  ஆண்கள்  மேல்நிலை  பள்ளி விழுப்புரம்  ஆகிய  இடங்களிலும்  அந்தந்த பகுதி  மாவட்டங்களுக்கு  சான்றிதழ்  சரிபார்ப்பு  நடைபெற  உள்ளது . இதற்காக தனியே  அழைப்பு  கடிதங்கள்  அனுப்பி வைக்கப்படமாட்டாது  என்றும்  ஆசிரியர்  தேர்வு வாரிய  அறிவிப்பில்  தெரிவிக்கப்பட்டுள்ளது .

Tags :
tnschool news ,