Saturday, 31 May 2014

சென்னையில் பணிபுரிந்து ரூ.10 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை மாத சம்பளம் பெறும் பெண்கள், மகளிர் தங்கும் விடுதியில் சேர விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி தெரிவித்துள்ளார்.

சென்னையில் பணிபுரிந்து ரூ.10 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை மாத சம்பளம் பெறும் பெண்கள், மகளிர் தங்கும் விடுதியில் சேர விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ள தாவது: சென்னை மாவட்ட சமூகநலத்துறை அலுவலகம் மூலம் பணிபுரியும் மகளிருக்கான தங்கும் விடுதி, எண்.58, சின்னக்குழந்தை தெரு, மடுமா நகர், பெரம்பூர் என்ற முகவரியில் தொடங்கப்பட உள்ளது. சென்னை மாவட்டத்தில் பணிபுரியும் மகளிர்கள் குறைந்தப்பட்சம் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம்வரை மாத சம்பளம் பெறுவோர் இதில் தங்குவதற்கு விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பப் படிவங்களை மாவட்ட சமூகநல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், சிங்காரவேலர் மாளிகை 8-வது தளம், ராஜாஜி சாலை, சென்னை-1 என்ற முகவரியில் பெற்று பூர்த்தி செய்து கொடுக்கலாம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Tags :
tnschool news ,