Tuesday, 20 May 2014

மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) 10-ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியீடு

மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) 10V-ம் வகுப்பு தேர்வு கடந்த மார்ச் 1-ம் தேதி தொடங்கி 19-ம் தேதி முடிவடைந்தது. இந்த நிலையில் தமிழ்நாடு, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களை உள்ளடக்கிய சென்னை மண்டல தேர்வு முடிவுகளையும், திருவனந்தபுரம் மண்டல தேர்வு முடிவுகளையும் சிபிஎஸ்இ தனது இணையதளத்தில் திங்கள்கிழமை வெளியிட்டது. 
சென்னை, திருவனந்தபுரம் மண்டலங்களுக்கு உட்பட்ட பள்ளிகளில் தேர்வெழுதிய மாணவ, மாணவிகள் கீழ்க்காணும் இணையதளங்களில் தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ளலாம் என்று சிபிஎஸ்இ தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி கே.கே.சவுத்ரி அறிவித்துள்ளார். 
தமிழ்நாட்டில் 10-ம் வகுப்பு தேர்வை 23 ஆயிரம் மாணவ, மாணவிகள் எழுதி இருப்பதாகவும், சென்னை மண்டலத்தில் பள்ளிகள் வாரியான தேர்வு முடிவுகள் செவ்வாய்க்கிழமை (இன்று) காலை 10 மணிக்கு வெளியிடப்படும் என்றும் சிபிஎஸ்இ மண்டல அதிகாரி டி.சுதர்சன் ராவ் தெரிவித்தார்.