Monday, 12 May 2014

சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலை கிரிவலத்துக்கு வரும் பக்தர்களுக்கு சிறப்புப் பேருந்துகளை மே 13-ம் தேதி முதல் மே 15-ம் தேதி வரை விடுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலை கிரிவலத்துக்கு வரும் பக்தர்களுக்கு சிறப்புப் பேருந்துகளை விடுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் விழுப்புரம் கோட்டம் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
சிறப்புப் பேருந்துகள் விழுப் புரம், சென்னை, வேலூர், தாம்ப ரம், திருப்பத்தூர், காஞ்சிபுரம், பெங்களூரு, புதுச்சேரி, ஆரணி, பண்ருட்டி, கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூர், திண்டிவனம், திருச்சி, ஆற்காடு, கடலூர், ஊத்தங்கரை, செய்யார், வந்தவாசி, ஓசூர் ஆகிய ஊர்களில் இருந்து திருவண்ணா மலைக்கும், திருவண்ணாமலை யில் இருந்து அந்தந்த ஊர்களுக்கும் இயக்கப்பட உள்ளன. இந்த சிறப்பு பேருந்துகள் மே 13-ம் தேதி முதல் மே 15-ம் தேதி வரை இயக்கப்படும். சென்னை, தாம்பரம், காஞ்சிபுரம், புதுச்சேரியில் இருந்து திருவண்ணாமலை செல்லும் பேருந்துகளில் இருக்கை முன்பதிவு செய்து கொள்ள முடியும். அதேபோல் திருவண்ணாமலையில் இருந்து சென்னை செல்லும் பேருந்துகளி லும் இருக்கை முன்பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. திருவண்ணாமலையில் அனைத்து தற்காலிக பேருந்து நிலையங்களிலும், பயணிகளுக்கு சிரமமின்றி போக்குவரத்து வசதியளித்திட பொதுமேலாளர் மற்றும் துணை மேலாளர்கள் 24 மணி நேரமும் பணி மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த வசதியைப் பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags :
TAMIL NADU EDUCATION FLASH NEWS,