Wednesday, 14 May 2014

தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கான டிப்ளமோ படிப்புக்கு புதன்கிழமை (மே 14) முதல் விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன.

தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கான டிப்ளமோ படிப்புக்கு புதன்கிழமை (மே 14) முதல் விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன.

விண்ணப்பங்களை அந்தந்த மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களிலும், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்
அலுவலகங்களிலும் ஜூன் 2-ஆம் தேதி வரை (ஞாயிற்றுக்கிழமை தவிர) பெற்றுக்கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க கடைசி தேதி ஜூன் 2 ஆகும். விண்ணப்பங்களை வாங்கிய மையத்திலேயே அன்று மாலை 5 மணிக்குள் விண்ணப்பங்களை ஒப்படைக்க வேண்டும்.

மாநிலம் முழுவதும் இதற்காக 10 ஆயிரத்துக்கும் அதிகமான விண்ணப்பங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் 2 ஆயிரம் இடங்கள் உள்ளன. அரசு உதவி பெறும் நிறுவனங்கள், தனியார் நிறுவனங்களில் அரசு ஒதுக்கீட்டில் 10 ஆயிரத்துக்கும் அதிகமான இடங்கள் உள்ளன.

இணையதளம் மூலம் கலந்தாய்வு:  இணையதளம் வழியாக ஒற்றைச்சாளர முறையில் கலந்தாய்வு நடத்தப்படும். விண்ணப்பதாரர் எந்த மாவட்டத்தில் விண்ணப்பித்தாரோ, அந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்திலோ அல்லது முதன்மைக் கல்வி அலுவலரால் தேர்வு செய்யப்பட்ட மையத்திலோ கலந்தாய்வில் பங்கேற்று, தமிழகத்தில் எந்த ஒரு ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தையும் தேர்வு செய்து கொள்ளலாம்.

கல்வித் தகுதி: இந்தப் படிப்புக்கு விண்ணப்பிக்க பிளஸ் 2 தேர்வில் குறைந்தபட்சம் 1,200-க்கு 540 மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். ஆதி திராவிடர், பழங்குடியின விண்ணப்பதாரர்கள் மேல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தாலே போதுமானது.

இந்தப் படிப்பில் விண்ணப்பிப்பதற்கான அதிகபட்ச வயது 31.07.2014-ஆம் தேதியின்படி 30 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். ஆதிதிராவிடர், பழங்குடியினர், மாற்றுத் திறனாளிகளுக்கு அதிகபட்ச வயது 35. கணவரால் கைவிடப்பட்ட பெண்கள் மற்றும் விதவைப் பெண்களுக்கு அதிகபட்ச வயது 40 ஆகும்.
Tags :
TAMIL NADU EDUCATION FLASH NEWS,