Friday, 16 May 2014

அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர மே 19-ம் தேதி முதல் ஜூன் 6-ம் தேதி வரை விண்ணப்பங்கள் வழங்கப்படுகிறது.

அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர மே 19-ம் தேதி முதல் ஜூன் 6-ம் தேதி வரை விண்ணப்பங்கள் வழங்கப்படுகிறது. இதுதொடர்பாக மாநில தொழில்நுட்பக் கல்வி ஆணையர் குமார் ஜெயந்த் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- 2014-2015-ம் கல்வி ஆண்டில் அனைத்து பாலிடெக்னிக் கல்லூரிகளில் முதல் ஆண்டு பட்டயப் படிப்பு மற்றும் பகுதிநேர பட்டயப் படிப்பில் சேருவதற்கான விண்ணப்ப படிவங்கள் மே 19 முதல் ஜூன் 6-ம் தேதி வரை வழங்கப்பட உள்ளன. விண்ணப்பங்களை அனைத்து அரசு பாலிடெக் னிக் கல்லூரிகளிலும் வேலைநாட்க ளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பத்தின் விலை ரூ.150. கட்டணத்தை ரொக்கமாகச் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம். எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கு விண்ணப்பங்கள் இலவசமாக வழங்கப்படும். இச்சலுகையைப் பெற அவர்கள் சான்றொப்பம் பெறப்பட்ட சாதி சான்றிதழ் நகலை சமர்ப்பிக்க வேண்டும். கடைசி தேதி விண்ணப்பங்களை தபால் மூலம் பெற விரும்புவோர் ரூ.150-க்கான டி.டி.யை சம்பந்தப்பட்ட கல்லூரி முதல்வர் பெயரில் எடுத்து ரூ.15 ஸ்டாம்பு ஒட்டிய, சுயமுகவரி எழுதப்பட்ட தபால் உறையை அனுப்பிப் பெறலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை அந்தந்த பாலிடெக்னிக் கல்லூரிகளில் ஜூன் 6-ம்தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு குமார் ஜெயந்த் கூறியுள்ளார்.
Tags :
TAMIL NADU EDUCATION FLASH NEWS,