TRB

Monday, 12 May 2014

ஜூன் மாத இறுதியில் நடைபெற உள்ள பிளஸ்-2 சிறப்பு துணைத்தேர்வில் பங்கேற்க உள்ள தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய மையங்களில் மே 12 முதல் 16-ம் தேதி வரை பெயரை பதிவுசெய்துகொள்ளலாம்.இதற்கென தனியாக விண்ணப்பம் கிடையாது.

கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பிளஸ்-2 தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கான சிறப்பு துணைத்தேர்வு ஜூன் மாத இறுதியில் நடைபெற உள்ளது. மாணவர்கள் அவர்கள் படித்த பள்ளிகளிலும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய மையங்களிலும் மே 12 முதல் 16-ம்
தேதி வரை பெயரை பதிவுசெய்துகொள்ளலாம். தேர்வெழுத விரும்பும் பாடங்களுக்கு உரிய தேர்வுக் கட்டணத்தை செலுத்த வேண் டும். இதற்கென தனியாக விண்ணப்பம் கிடையாது. தனித்தேர்வர்கள் தங்கள் மதிப்பெண் சான்றிதழை தாங்கள் தேர்வெழுதிய மையங் களில் உடனடியாகப் பெற்றுக் கொள்ளலாம்.ஒவ்வொரு பாடத்திற்கும் ரூ. 50/-வீதம் தேர்வுக் கட்டணமும், அதனுடன் இதரக் கட்டணமாக ரூ. 35/-ம் சம்பந்தப்பட்ட பள்ளிகளில் பணமாகச் செலுத்த வேண்டும். தேர்வு கட்டணம் தவிர ரூ. 50/- பதிவு கட்டணமாக செலுத்த வேண்டும். தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்வதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும்.தேர்வர்கள் மார்ச் 2014-ல், தேர்ச்சி பெறாத / வருகை புரியாத அனைத்துப் பாடங்களுக்கும் விண்ணப்பிக்கலாம்.பதிவு செய்ய வேண்டிய நாட்கள்: 12.05.2014 (திங்கட்கிழமை) முதல் 16.05.2014 (வெள்ளிக்கிழமை) மாலை 5.00 மணி வரை.
Tags :
TAMIL NADU EDUCATION FLASH NEWS,

Popular Posts

E.Mail Free Subsciption

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

After registration, We will send an activation link to your "Inbox". Click on the link to complete registration process.