Friday, 9 May 2014

பிளஸ் 2 தேர்வில், 90.6 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில், மாணவர்கள் 87.4 சதவீதமும், மாணவிகள் 93.4 சதவீதமும் பெற்றுள்ளனர்.

பிளஸ் 2 தேர்வில், 90.6 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில், மாணவர்கள் 87.4 சதவீதமும், மாணவிகள் 93.4 சதவீதமும் பெற்றுள்ளனர்.

வழக்கம் போல் மாணவர்களை விட மாணவிகள் தேர்ச்சி விகிதம் அதிகமாக உள்ளது.

கடந்த ஆண்டு 88.1 விழுக்காடு மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருந்தனர்.

+2 தேர்வை மொத்தம் 8,80,352 பேர் எழுதினர். இதில் 4,94,100 மாணவர்கள் 60 சதவீத மற்றும் 60 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

கிருஷ்ணகிரி ஊத்தங்கரையைச் சேர்ந்த ஸ்ரீவித்யா மந்திர் பள்ளி மாணவி
சுஷாந்தி, 1193 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் முதல் இடத்தை பிடித்தார்.

தருமபுரி ஸ்ரீவிஜய் வித்யா மந்திர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த மாணவி அலமேலு, 1192 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் இரண்டாம் இடத்தை பிடித்தார்.

நாமக்கல் போதுபட்டி கிரீன்பார்க் பள்ளியைச் சேர்ந்த துளசி ராஜன் 1191 மதிப்பெண்கள் பெற்று 3ம் இடத்தை பிடித்துள்ளார். சென்னை மடிப்பாக்கம் பிரின்ஸ் மெட்ரிக்குலேஷன் பள்ளியைச் சேர்ந்த நித்யா என்ற மாணவியும் 3ம் இடத்தை பிடித்துள்ளார்.

கணிதத்தில் 3,882 பேர் 100 சதவீத மதிப்பெண் பெற்றுள்ளனர்.

இதேபோல், இயற்பியலில் 2,710 பேரும், வணிகவியலில் 2,587 பேரும், கணக்கியலில் 2,403, வேதியியலில் 1,693 பேரும், கணினி அறிவியலில் 993 பேரும், உயிரியலில் 652 பேரும், பிஸ்னஸ் மேத்தமெக்டிக்ஸ் பாடத்தில் 605 பேரும், தாவிரவியல் பாடத்தில் 15 பேரும், விலங்கியல் பாடத்தில் 7 பேரும் 100 சதவீத மதிப்பெண் பெற்றுள்ளனர்.

மாநில அளவில் முதலிடத்தை, தமிழை மொழிப்பாடமாக எடுத்துப் படித்த கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ஸ்ரீவித்யா மந்திர் பள்ளியைச் சேர்ந்த மாணவி சுசாந்தி பிடித்துள்ளார். அவர் 1,200க்கு 1,193 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.

மாநிலத்தில் இரண்டாவது இடத்தை 1200-க்கு 1,192 மதிப்பெண்கள் பெற்று தர்மபுரி ஸ்ரீவியஜ்வித் மந்திர் பள்ளியைச் சேர்ந்த மாணவி அலமேலு பிடித்துள்ளார்.

மூன்றாவது இடத்தை நாமக்கல் கிரீன் பார்க் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவர் துளசிராஜன் 1191 மதிப்பெண்கள் பெற்று பிடித்தார். மூன்றாவது இடத்தை சென்னை மடிப்பாக்கம் பிரின்ஸ் பள்ளியைச் சேர்ந்த மாணவி நித்யாவும் 1,191 மதிப்பெண்கள் பெற்று பகிர்ந்து கொண்டுள்ளார்.

பிளஸ் 2 தேர்வு எழுதியவர்களில் 4,94,100 மாணவர்கள் 60%-க்கு மேல் மதிப்பெண் பெற்றுள்ளனர்.

பாடவாரியாக 200 மதிப்பெண் பெற்றவர்கள் விபரம்:

இயற்பியல்- 2,710

வேதியல்- 1,693

உயிரியல்- 652

தாவரவியல்- 15

விலங்கியல்- 7

கணக்கு- 3,882

கணினி அறிவியல்- 993

வணிகவியல்- 2,587

கணக்கு பதிவியல்- 2,403

வணிக கணிதம்- 605

கணித தேர்வு கடினமாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தாலும் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிக அளவிலான மாணவர்கள் கூடுதலாக முழுமதிப்பெண் பெற்றுள்ளனர்.

முதல் இடத்தை 1,193 மதிப்பெண்கள் எடுத்து 3 மாணாக்கர் பிடித்துள்ளனர். 
அதில்,

1. ஈரோடு மாவட்டம் திண்டல் பகுதி, பாரதி வித்யா பவன் பள்ளி மாணவி விஷ்ணுபிரியா சமஸ்கிருதத்தை மொழிப் பாடமாக எடுத்து படித்தவர்.

2. திருச்சி எஸ்வி ஹிந்து பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி ஆனந்தி சமஸ்கிருதத்தை மொழிப் பாடமாக எடுத்துப் படித்தவர்.

3. சுசாந்தி கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் ஸ்ரீவித்யா மந்திர் பள்ளி மாணவியாவார். இவர் தமிழை மொழிப் பாடமாக எடுத்து படித்துள்ளார்.

மாநில அளவில் 7 மாணாக்கர் 1192 மதிப்பெண்களை பெற்று 2ம் இடம் பிடித்துள்ளனர்.

அவர்களின் விவரம் :

1. அகன்ஷா அஜித் - முகப்பேர் வேலம்மாள் மெட்ரிக் பள்ளி மாணவி. இவர் சமஸ்கிருதத்தை மொழிப் பாடகமாக எடுத்துப் படித்துள்ளார்.

2. எஸ். சிவராம் - மதுரை மாவட்டம் ஜீவனா உயர்நிலைப் பள்ளி மாணவர். பிரெஞ்ச் மொழிப் பாடத்தை படித்தவர்.

3. ஷாலினி - ஈரோடு, திண்டல் பகுதியில் உள்ள பாரதி வித்யா பவன் பள்ளி மாணவி. சமஸ்கிருதத்தை மொழிப் பாடமாக படித்தவர்.

4. எம். ஸ்ரீவித்யா - சென்னை ஸ்ரீ அகோபிலமடப் பள்ளியில் சமஸ்கிருதத்தை மொழிப் பாடமாக எடுத்துப் படித்தவர்.

5. ஏஎல் அலமேலு - தருமபுரி மாவட்டம் ஸ்ரீவித்யா மந்திர் பள்ளி மாணவி. தமிழை மொழிப் பாடமாக எடுத்துப் படித்தவர்.

6. எஸ். ஸ்ரீராம் - சேலம் மாவட்டம் கன்னக்குறிஞ்சி கோல்டன் கேட்ஸ் பள்ளி மாணவர். பிரெஞ்ச் மொழிப் பாடம்.

7. கே. நிரோஷினி - நாமக்கல், பொதுப்பட்டி க்ரீன் பார்க் பெண்கள் பள்ளி மாணவி. பிரெஞ்ச் மொழிப் பாடம்.

மாநில அளவில் 1,191 மதிப்பெண்களை எடுத்து 8 மாணாக்கர் மூன்றாம் இடம் பிடித்துள்ளனர்.

1. துளசிராஜன் -  நாமக்கல், பொதுப்பட்டி க்ரீன் பார்க் பள்ளி மாணவர். தமிழ் மொழிப் பாடம்.

2. எஸ். நித்யா - செங்கல்பட்டு மாவட்டம் மடிப்பாக்கம், பிரின்ஸ் மெட்ரிக் பள்ளி மாணவி. தமிழ் மொழிப்பாடம்.

3. ஆர்.எஸ். பிரியதர்ஷினி - நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் எஸ்ஆர்வி பெண்கள் உயர்நிலைப் பள்ளி மாணவி. பிரெஞ்ச் மொழிப் பாடம்.

4. எஸ்.என். மொஹம்மது ஜவீத் - புதுச்சேரி, மூலக்குளம் பிரிம்ரோஸ் உயர்நிலைப் பள்ளி, பிரெஞ்ச் மொழிப் பாடம்.

5. கே. பொன்சங்கர் - ஈரோடு ஏஇடி உயர்நிலைப் பள்ளி, சமஸ்கிருதத்தை மொழிப் பாடமாக படித்த  மாணவர்.

6. கே. சுமித்ரா - கோவை, ஜிடி உயர்நிலைப் பள்ளி மாணவர். பிரெஞ்ச் மொழிப் பாடம்.

7. கனக பார்த்திபன் இலக்கியா - தென்சென்னை, தி.நகர் வித்யோதயா பள்ளி மாணவி. ரஷிய மொழிப் பாடம்.

8. ஆர். அபிநயா - செங்கல்பட்டு, சேலையூர் ஸியோன் பள்ளி மாணவி, பிரெஞ்ச் மொழிப் பாடம்.


Tags :
TAMIL NADU EDUCATION FLASH NEWS,