Tuesday, 27 May 2014

2014ம் ஆண்டிற்கான சி.பி.எஸ்.இ. 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 26ம் தேதிவெளியிடப்பட்டன.

2014ம் ஆண்டிற்கான சி.பி.எஸ்.இ. 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 26ம் தேதிவெளியிடப்பட்டன. கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற சி.பி.எஸ்.இ. 12ம் வகுப்பு தேர்வுகளை 6 லட்சத்து 3 ஆயிரத்து 64 மாணவர்கள், 4 லட்சத்து 26 ஆயிரத்து 810 மாணவிகள் என மொத்தம் 10 லட்சத்து 29 ஆயிரத்து 874 பேர்
எழுதினர். இந்நிலையில், இத்தேர்வு முடிவுகள் சி.பி.எஸ்.இ., (www.cbseresults.nic.in ) இணையதளத்தில் வெளியிடப்பட்டன. மாணவ, மாணவிகள் தங்களது தேர்வு முடிவுகளை www.cbseresults.nic.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம். சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வு முடிவு தொடர்பாக அதன் சென்னை மண்டல அதிகாரி டி.டி.சுதர்சன் ராவ் திங்கள்கிழமை இரவு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:- தமிழகம் உள்ளிட்ட சென்னை மண்டலத்தில் 12-ம் வகுப்புத் தேர்வை 45,064 பேர் எழுதினர். இதில் 91.83 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். தேர்ச்சி வீதம் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 1.06 சதவீதம் அதிகம். மாணவர்களின் தேர்ச்சி 91.96 சதவீதம். மாணவிகளின் தேர்ச்சி வீதம் 94.6 ஆகும். தமிழ்நாட்டில் 97.02 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாணவர்களின் தேர்ச்சி 96.20 சதவீதம். மாணவிகளின் தேர்ச்சி 98.11 வீதம். மறுகூட்டல் மற்றும் துணை தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் சிபிஎஸ்இ இணையதளத்தில் (www.cbse.nic.in) தேவையான விவரங்களை தெரிந்துகொள்ளலாம். இவ்வாறு சுதர்சன் ராவ் கூறியுள்ளார். சி.பி.எஸ்.இ., 12ம் வகுப்பு தேர்வு முடிவுகளையொட்டி, மே 27ம் தேதி வரை இன்ஜினியரிங் கவுன்சிலிங்கிற்கு விண்ணப்பிக்கலாம் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. அதேபோல், பல்வேறு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளும் மாணவர்களுக்கு ஏதுவாக, தங்களது மாணவர் சேர்க்கையை சற்று ஒத்திவைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags :
TAMIL NADU EDUCATION FLASH NEWS,