TRB

Monday, 12 May 2014

மார்ச் 2014ல் மேல்நிலைத் தேர்வு குறித்து விடைத்தாள்/மறுமதிப்பீடு கோரி விண்ணப்பிக்கும் மாணவர்கள் கவனிக்க வேண்டிய மிக முக்கிய குறிப்புகள்.விண்ணப்பிக்க விழைவோர் 09.05.2014 (வெள்ளிக்கிழமை) முதல் 14.05.2014(புதன்கிழமை) மாலை 5 மணிவரை (ஞாயிற்றுக்கிழமை தவிர) பள்ளி மாணவர்கள் தங்களது பள்ளி மூலமாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையம் மூலமாகவும் விண்ணப்பிக்க வேண்டும்.இதற்கென தனியாக விண்ணப்பம் கிடையாது.

மார்ச் 2014ல் மேல்நிலைத் தேர்வு குறித்து விடைத்தாள்/மறுமதிப்பீடு கோரி விண்ணப்பிக்கும் மாணவர்களின் கவனத்திற்கு : 

அ.மறுகூட்டல் 

மறுகூட்டல் என்பது அந்த விடைத்தாளில் மதிப்பீட்டாளர்களால் வழங்கப்பட்டுள்ள மதிப்பெண்கள் வினாவாரியாக, பக்க வாரியாக மறுகூட்டல் செய்யப்படும். இதில் ஏதேனும் மதிப்பெண்கள் கூடுதலாக
வந்தால் மட்டுமே அது கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.

ஒரு விடை மதிப்பீடு செய்யப்படாமல்/திருத்தப்படாமல்/திருத்தப்பட்டும் மதிப்பெண் வழங்கப்படாமல் இருந்தால் மட்டுமே அந்த விடைக்கு உரிய மதிப்பெண் வழங்கப்படும். 

விடைகள் மதிப்பீடு செய்யப்பட்டு மதிப்பெண்கள் குறைவாக வழங்கப்பட்டிருந்தால் கூடுதல் மதிப்பெண்கள் வழங்கப்படமாட்டாது. 

மேலும் மறுகூட்டலில் மதிப்பெண்கள் உயர்ந்தால் மட்டும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். 

மதிப்பெண்கள் குறைந்தால் பழைய மதிப்பெண்ணே வழங்கப்படும். 

நேரடியாக மறுகூட்டல் மட்டுமே செய்தால் போதும் என்று விரும்புபவர்கள் விடைத்தாள் நகல் கோர வேண்டாம். அவர்கள் உரிய கட்டணம் செலுத்தி மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம்.

மறுகூட்டலுக்கான கட்டண விவரங்கள் மொழிப்பாடங்கள் மற்றும் உயிரியல் பாடத்திற்கு ரூ. 305/- இதரப்பாடங்களுக்கு ரூ.205/- 


ஆ. மறுமதிப்பீடு 

மறுமதிப்பீடு என்பது தேர்வரின் மதிப்பீடு செய்யப்பட்ட விடைத்தாளினை மூத்த மூன்று பாட ஆசிரியர் கொண்ட குழுவால் மீண்டும் அனைத்து விடைகளும் முழுமையாக மதிப்பீடு செய்யப்படும். 

இக்குழுவிற்கு விடைத்தாளில் ஏற்கனவே வழங்கப்பட்ட மதிப்பெண்களை கூட்டவோ குறைக்கவோ அதிகாரம் உள்ளது. 

இக்குழு வழங்கும் மதிப்பெண்களே இறுதியானது.

மறுமதிப்பீட்டில் கூடுதலாக மதிப்பெண் வழங்கப்பட்டாலோ ஏற்கனவே வழங்கப்பட்ட மதிப்பெண்கள் குறைக்கப்பட்டாலோ விண்ணப்பதாரருக்கு திருத்தம் செய்யப்பட்ட புதிய மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும். 

மறுமதிப்பீடு செய்ய விரும்புபவர்கள் முதலில் தாங்கள் பயின்ற பள்ளி மூலமும் தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய பள்ளி மூலமும் விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பிக்க வேண்டும். 

மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பித்தவர்கள் அறிவிக்கப்படும் தேதியில் தங்கள் விடைத்தாள் நகலினை இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். 

பின்னர் உரிய பாட ஆசிரியர்களிடம் அதனை காண்பித்து அவர்களிடம் அனைத்து விடைகளையும் முழுமையாக மதிப்பீடு செய்து கூடுதல் மதிப்பெண்கள் பெறக்கூடிய வாய்ப்பு உள்ளவர்கள் மட்டுமே மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்கலாம். 

சில விடைகளுக்கு கூடுதல் மதிப்பெண்கள் பெற வாய்ப்பு இருக்கும். சிலவற்றிற்கு மதிப்பெண்கள் குறையவும் வாய்ப்பு இருக்கும். கூடுதல்/குறைவுக்கு பின்னர் கூடுதல் மதிப்பெண்கள் பெற வாய்ப்பு இருந்தால் மட்டுமே மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்கவும். 

மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிப்பவர்கள் விடைத்தாள் நகல் பெற்ற 3 தினங்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும். 

விடைத்தாள் நகல் பெற்றவர்கள் தங்களுக்கு மறுகூட்டல் வேண்டுமா அல்லது மறுமதிப்பீடு வேண்டுமா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். 

மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பித்துவிட்டு மறுகூட்டலுக்கு கோர முடியாது. 

அதுபோலவே மறு கூட்டலுக்கு விண்ணப்பித்துவிட்டு மறு மதிப்பீட்டிற்கு கோர இயலாது. 

ஸ்கேன் நகல் கோரி விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்ட கடைசி நாளான 14.05.2014 மாலை 5.00 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். 

இவ்வாறு ஸ்கேன் நகல் கோரியவர்களது விண்ணப்பங்கள் மீது உரிய தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு ஜுன் 2ம் தேதிக்குள் அனைத்துப் பாடங்களுக்கும் உரிய விடைத்தாள் நகல்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். 

விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும்போது தங்களுக்கு வழங்கப்பட்ட ஒப்புகைச்சீட்டில் உள்ள குறியீட்டு என்ணினை பதிந்து தங்களது விடைத்தாள் நகலினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

விடைத்தாளின் நகல் கோரி விண்ணப்பிப்போர், அதே பாடத்திற்கு மதிப்பெண் மறுகூட்டலுக்கு தற்போது விண்ணப்பிக்கக் கூடாது.  விடைத்தாளின் நகல் பெற்றபிறகு அவர்கள் மறுகூட்டல் மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு அளிக்கப்படும். 

மார்ச் 2014,  மேல்நிலைத் தேர்வெழுதியோர்,  தாம் தேர்வெழுதிய எந்தவொரு பாடத்திற்கும் விடைத்தாளின் நகல் (Copy of the answer script) கோரியோ அல்லது மறுகூட்டல்(Retotalling) கோரியோ விண்ணப்பிக்கலாம்.   விண்ணப்பிக்க விழைவோர் 09.05.2014 (வெள்ளிக்கிழமை) முதல் 14.05.2014(புதன்கிழமை) மாலை 5 மணிவரை (ஞாயிற்றுக்கிழமை தவிர) பள்ளி மாணவர்கள் தங்களது பள்ளி மூலமாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையம் மூலமாகவும் விண்ணப்பிக்க வேண்டும்.

விடைத்தாளின் நகல் பெறுவதற்கான கட்டணம்
பகுதி –1 மொழி  - ரூ.550/-
பகுதி – 1 மொழி (ஆங்கிலம்)  - ரூ.550/-
ஏனைய பாடங்கள் (ஒவ்வொன்றிற்கும்) - ரூ.275/-

கட்டணம் செலுத்தும் முறை

விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கான கட்டணத்தை விண்ணப்பிக்கவுள்ள பள்ளியிலேயே பணமாகச் செலுத்தவேண்டும்.  

விடைத்தாள் நகல் - இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளும்முறை 

விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும்போது, வழங்கப்படும் ஒப்புகைச் சீட்டினை மாணவர்கள் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும்.  ஒப்புகைச் சீட்டில் குறிப்பிட்டுள்ள விண்ணப்ப எண்ணைப் பயன்படுத்தியே  தேர்வர்கள் தங்களது விடைத்தாளின் நகலினை இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளவும்,  மறுகூட்டல் முடிவுகளை அறிந்துகொள்ளவும் இயலும்.
Tags :
TAMIL NADU EDUCATION FLASH NEWS,

Popular Posts

E.Mail Free Subsciption

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

After registration, We will send an activation link to your "Inbox". Click on the link to complete registration process.