Tuesday, 20 May 2014

பள்ளிகளில் தேர்வெழுதிய மாணவர்களுக்கு மே 21-ம் தேதி அந்தந்த பள்ளியிலேயே மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது.எனவே, மதிப்பெண் சான்றிதழ் பெற வரும் மாணவர்கள் ரேஷன் அட்டை மற்றும் 10-ம் வகுப்பு வேலைவாய்ப்பு பதிவு அட்டையை தவறாமல் கொண்டுவருமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

பிளஸ்-2 தேர்வு முடிவு மே 9-ம் தேதி வெளியானது. தனித்தேர்வர்களுக்கு தேர்வு முடிவு வெளியான அன்றே, அவர்கள் தேர்வெழுதிய மையத்தில் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டது. பள்ளிகளில் தேர்வெழுதிய மாணவர்களுக்கு மே 21-ம் தேதி அந்தந்த பள்ளியிலேயே மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்படும் என்று அரசு தேர்வுகள் இயக்குனர் கு.தேவராஜன் அறிவித்திருந்தார். அதன்படி, 12-ம் வகுப்பு மாணவர்கள் தங்கள் பள்ளிகளில் மதிப்பெண் சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்ளலாம். பள்ளியிலேயே அவர்களின் கல்வித்தகுதியை வேலைவாய்ப்பு பதிவுக்கு ஆன்லைனில் பதிவுசெய்யவும் பள்ளிக்கல்வித்துறை ஏற்பாடு செய்திருக்கிறது. எனவே, மதிப்பெண் சான்றிதழ் பெற வரும் மாணவர்கள் ரேஷன் அட்டை மற்றும் 10-ம் வகுப்பு வேலைவாய்ப்பு பதிவு அட்டையை தவறாமல் கொண்டுவருமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.