Tuesday, 27 May 2014

அண்ணா பல்கலைக்கழக பொறியியல் சேர்க்கை | பொறியியல் படிப்புக்கான பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சமர்ப்பிக்க இன்று 27-ம் தேதி கடைசி நாள். சுமார் 2 லட்சத்து 10 ஆயிரத்து 900 விண்ணப்ப படிவங்கள் விற்பனையாகி இருப்பதாக தகவல்.

அண்ணா பல்கலைக்கழக பொறியியல் சேர்க்கை | பொறியியல் படிப்புக்கான விண்ணப்பங்கள் வாங்கவும், பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சமர்ப்பிக்கவும் நிர்ணயிக்கப் பட்டிருந்த கடைசி தேதி மே 20-ம்
தேதியிலிருந்து 27-ம் தேதி (இன்று) வரை நீட்டிக்கப்பட்டது. அதன்படி, விண்ணப்பங்கள் வாங்கவும், பூர்த்தி செய்த விண்ணப் பங்களை பெற்றுக்கொள்ளவும் இன்று (செவ்வாய்க்கிழமை) கடைசி நாள் ஆகும்.திங்கள்கிழமை மாலை 5 மணி நிலவரப்படி, 2 லட்சத்து 10 ஆயிரத்து 900 விண்ணப்ப படிவங்கள் விற்பனையாகி இருப்பதாக தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலாளர் பேராசிரியர் வி.ரைமன்ட் உத்தரியராஜ் தெரிவித்தார்.

Tags :
TAMIL NADU EDUCATION FLASH NEWS,