Thursday, 15 May 2014

பொறியியல் படிப்பில் சேருவதற்கான விண்ணப்ப படிவங்கள் கடந்த 3-ம் தேதி முதல் வழங்கப்பட்டு வருகின்றன. பூர்த்தி செய்த விண்ணப்பங்களை 20-ம் தேதி மாலை 5.30 மணிக்குள் அண்ணா பல்கலைக்கழகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

பொறியியல் படிப்பில் சேருவதற்கான விண்ணப்ப படிவங்கள் கடந்த 3-ம் தேதி முதல் வழங்கப்பட்டு வருகின்றன. 10-வது நாளான புதன்கிழமை 4,554 விண்ணப்பங்கள் விற்பனை ஆகின. இதுவரை ஒரு லட்சத்து 94 ஆயிரத்து 115 விண்ணப்பங்கள் விற்பனையாகி இருப்பதாக தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலாளர் பேராசிரியர் வி.ரைமன்ட் உத்தரியராஜ் தெரிவித்தார். வருகிற 20-ம் தேதி வரை விண்ணப்பங்கள் வழங்கப்படும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை 20-ம் தேதி மாலை 5.30 மணிக்குள் அண்ணா பல்கலைக்கழகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
Tags :
TAMIL NADU EDUCATION FLASH NEWS,