Saturday, 10 May 2014

தகவல் துளிகள்-3

  1. அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகள், மருத்துவக் கல்லூரிகள், பல் மருத்துவக் கல்லூரிகள், கால்நடை மருத்துவக் கல்லூரிகள், வேளாண்மைக் கல்லூரிகள், சட்டக்கல்லூரிகளில் ஒற்றைச்சாளர முறை மாணவர்  சேர்க்கை மூலம் அட்மிஷன் பெறும் முதல் தலைமுறை பட்டதாரி மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை தமிழக அரசே வழங்கி வருகிறது. இதுவரை பட்டதாரிகளே இல்லாத குடும்பங்களைச்  சேர்ந்த மாணவர்கள் தொழிற் கல்வி படிப்புகளைப் படிப்பதை ஊக்குவிக்கும் வகையில் ஜாதி வேறுபாடின்றி இந்த உதவித் தொகை வழங்கப்படுகிறது .

  2. சுயநிதிப் பொறியியல் கல்லூரிகளிலும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் சுய ஆதரவுப் படிப்புகளிலும்  (செல்ஃப் சப்போர்ட்டிங் கோர்ஸ்) சேரும் மாணவர்களுக்கு அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கவுன்சிலின் முதல் தலைமுறை பட்டதாரிக்கான கல்விக் கட்டணச் சலுகை வழங்கப்படுகிறது. ஒவ்வொரு கல்லூரியிலும் ஒவ்வொரு பாடப்பிரிவிலும் படிக்கும்  5 சதவீத மாணவர்களுக்கு இந்தச் சலுகை வழங்கப்படும். இந்த உதவித் தொகை பெற விரும்பும் மாணவர்களின்  பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.4.5 லட்சத்துக்குக் குறைவாக இருக்க வேண்டியது அவசியம்.. 

  3. ஒற்றைச்சாளர முறை மூலம் அரசு, அரசு உதவி பெறும், தனியார் பொறியியல் கல்லூரிகளில் நேரடியாக இரண்டாம் ஆண்டில்  சேர்ந்து படிக்கும் முதல் தலைமுறை பட்டதாரி மாணவர்களுக்கும் இந்தக் கல்விக் கட்டணச் சலுகை வழங்கப்படும்.

  4. வருவாய்த் துறையின் தலைமையிடத்து துணை வட்டாட்சியர் தகுதிக்குக் குறையாத அலுவலரிடம்  சான்றிதழ் பெற்று அளிக்க வேண்டும். ஒற்றைச்சாளர முறை மாணவர்  சேர்க்கைக்காக விண்ணப்பிக்கும் போதே முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழையும் வைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

  5. ஜே.ஆர்.எஃப். எனப்படும் ஜூனியர் ரிசர்ச் பெல்லோஷிப் தகுதி தேர்வை எழுதும் பொதுப்பிரிவினர் 28 வயதிற்குள் இருக்க வேண்டும். தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ஓ.பி.சி. மாணவர்கள் 32 வயதிற்குள் இருக்க வேண்டும். உதவிப் பேராசிரியர் பணியில் சேரவேண்டி நெட் தகுதித் தேர்வு எழுதுபவர்களுக்கு வயது வரம்பு ஏதுமில்லை.

Tags :
TAMIL NADU EDUCATION FLASH NEWS,THAGAVAL THILIKAL