Saturday, 10 May 2014

தகவல் துளிகள்-5

பிளஸ் 2 தேர்வு முடிவுள் சென்னையில் வெள்ளிக்கிழமை (மே 9) காலை 10 மணிக்கு வெளியிடப்பட்டது.

பிளஸ் 2 தேர்வில் சாதனை அளவாக 90.6 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் 93.4 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 87.4 சதவீதம் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையில் உள்ள ஸ்ரீ வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி எஸ்.சுஷாந்தி 1,200-க்கு 1,193 மதிப்பெண் பெற்று மாநிலத்திலேயே முதலிடம் பிடித்துள்ளார். 

தருமபுரி ஸ்ரீ விஜய் வித்யாலயா பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி ஏ.எல்.அலமேலு 1,200-க்கு 1,192 மதிப்பெண் பெற்று இரண்டாவது இடம் பெற்றுள்ளார்.

நாமக்கல் கிரீன் பார்க் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர் டி.துளசிராஜன், மடிப்பாக்கம் பிரின்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி எஸ்.நித்யா ஆகியோர் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளனர்.

பிளஸ் 2 தேர்வை தனித்தேர்வர்கள் உள்பட 8,80,352 பேர் எழுதினர். 

பள்ளிகளின் மூலமாக 8 லட்சத்து 21 ஆயிரத்து 671 பேர் தேர்வு எழுதினர். 
இதில் 7 லடசத்து 44 ஆயிரத்து 698 பேர் (90.6 சதவீதம்) தேர்ச்சி பெற்றுள்ளனர். 76,913 பேர் தேர்ச்சி பெறவில்லை. 

தனித்தேர்வர்களுக்கான மதிப்பெண் சான்றிதழ்கள் அவரவர் தேர்வு எழுதிய மையங்களிலேயே விநியோகிக்கப்பட்டதால் அவர்களுக்கான தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்படவில்லை.

பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

தேர்ச்சி விகிதத்தில் ஈரோடு மாவட்டம் 97.05 சதவீத தேர்ச்சியுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளது. 

நாமக்கல் மாவட்டம் 96.59 சதவீத தேர்ச்சியுடன் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது.

கடந்த 27 ஆண்டுகளாக முதலிடத்தில் இருந்த விருதுநகர் மாவட்டம், 96.12 சதவீத தேர்ச்சியுடன் இந்த ஆண்டு மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. 

அரசுப் பள்ளிகளில் படித்த 3 லட்சத்து 45 ஆயிரம் மாணவர்களில் 2 லட்சத்து 92 ஆயிரம் (84.54 சதவீதம்) பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 

தனியார் பள்ளிகளில் 97.91 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 

ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளில் 81 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மாநில முதலிடம் : தமிழ் 198,ஆங்கிலம் 196,கணிதம் 200,இயற்பியல் 200,வேதியியல் 199,உயிரியல் 200,மொத்தம் 1,193 எஸ். சுஷாந்தி ஸ்ரீ வித்யா மந்திர் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி, ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி மாவட்டம்.

மாநில இரண்டாம் இடம் : தமிழ் 197,ஆங்கிலம் 196,கணிதம் 200,இயற்பியல் 200,வேதியியல் 200,உயிரியல் 199,மொத்தம் 1,192, ஏ.எல். அலமேலு, ஸ்ரீ விஜய் வித்யாலயா பெண்கள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, தருமபுரி மாவட்டம். 

மாநில மூன்றாம் இடம் : தமிழ் 195,ஆங்கிலம் 197,கணிதம் 199,இயற்பியல் 200,வேதியியல் 200,உயிரியல் 200,மொத்தம் 1,191, டி.துளசிராஜன், கிரீன் பார்க் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி, போதுப்பட்டி, நாமக்கல் மாவட்டம் மற்றும் தமிழ் 195,ஆங்கிலம் 197,கணிதம் 200,இயற்பியல் 200,வேதியியல் 199,உயிரியல் 200,மொத்தம் 1,191, எஸ்.நித்யா,பிரின்ஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி, மடிப்பாக்கம், சென்னை.

200-க்கு 200 எடுத்து சாதனை படைத்தவர்கள்-கணிதம் 3882,இயற்பியல் 2710,வேதியியல் 1693,உயிரியல் 652,விலங்கியல் 7,தாவரவியல் 15, கம்ப்யூட்டர் அறிவியல் 993,வணிகவியல் 2587,கணக்குப் பதிவியல் 2403,வணிக கணிதம் 605,பொருளாதாரம் 714,புள்ளியியல் 14,வரலாறு 7.

புதுச்சேரி மாநிலத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வில் 89.61 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

புதுச்சேரி மற்றும் காரைக்காலில் தனியார் மற்றும் அரசு பள்ளிகளில் 13,477 மாணவ, மாணவியர் பிளஸ் 2 தேர்வு எழுதினர். இதில் 12,077 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வு எழுதிய 6,074 மாணவர்களில் 5,231 பேரும், 7,403 மாணவிகளில் 6,846 பேரும் தேர்ச்சி பெற்றனர். மாணவர்கள் 86.12 சதவீதமும், மாணவிகள் 92.48 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். 

பிளஸ் 2 மாணவர்கள் விடைத்தாள் நகல், மறுகூட்டலுக்காக மே 14-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.அவரவர் பயின்ற பள்ளிகளிலேயே இதற்காக விண்ணப்பிக்கலாம். 

பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்காக ஜூன் இறுதியில் சிறப்பு துணைத் தேர்வு நடத்தப்படும். இந்தத் தேர்வுக்காக மாணவர்கள் மே 12 முதல் 16 வரை விண்ணப்பிக்கலாம்.

இந்தத் தேர்வுக்கு பள்ளி மாணவர்கள் தாங்கள் தேர்வு எழுதிய பள்ளிகளிலும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய பள்ளிகளிலும் விண்ணப்பிக்கலாம்.

பாட வாரியாக முதல் மூன்று இடங்கள் 

ஜெனரல் மெஷினிஸ்ட்
1. ஜே.மேல்பா (1185), எஸ்.ஆர்.எஸ்.ஐ. மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, காரமடை, கோவை.
2. வி.அஜீத் (1179), விவேகம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, கோவை மற்றும் எஸ்.மதுரீத்தா (1179), எஸ்.வி.ஜி.வி. மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, காரமடை, கோவை.
3. ஜி.தர்ஷணா (1169),எஸ்.வி.ஜி.வி. மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, காரமடை, கோவை.

எலக்ட்ரிக்கல் மெஷின்ஸ் அண்ட் அப்ளையன்சஸ்
1. எம்.ரூபா (1155), ஸ்ரீ ராகவேந்திரா மேல்நிலைப் பள்ளி, சத்யமங்கலம்.
2. எம்.ஸ்ரீஜா (1142), விவேகானந்தா மேல்நிலைப் பள்ளி, பெளந்த மங்கலம்.
3. கே.ஸ்ரீமதி (1141), ஸ்ரீ ராகவேந்திரா மேல்நிலைப் பள்ளி, சத்யமங்கலம்.

எலக்ட்ரானிக் எக்யுப்மென்ட்ஸ்
1. எஸ்.சிவபிரசாத் (1051), எஸ்.சி.எம். மேல்நிலைப் பள்ளி, வதம்பச்சேரி.
2. எஸ்.மோகன்ராஜ் (965), எஸ்.சி.எம். மேல்நிலைப் பள்ளி, வதம்பச்சேரி.
3. எம்.கோமதி (1112), எஸ்.சி.எம். மேல்நிலைப் பள்ளி, வதம்பச்சேரி.

டிராஃப்ட்ஸ்மேன் சிவில்
1. ஏ.அமராவதி (996), என்.எல்.சி. மகளிர் மேல்நிலைப் பள்ளி, நெய்வேலி.
2. எம்.ஐஸ்வர்யா (958), எம்.பி.எல். மகளிர் மேல்நிலைப் பள்ளி, குகை, சேலம்.
3. ஆர்.மணிகண்டன் (1072), எஸ்.எம். மேல்நிலைப் பள்ளி, தாராமங்கலம்.

ஆட்டோ மெக்கானிக்
1. டி.பூபதிகண்ணன் (1065), அரசு மேல்நிலைப் பள்ளி, மேட்டூர் டேம்.
2. டி.கோகுலகண்ணன் (1103), பழனிகவுண்டர் மேல்நிலைப் பள்ளி, பொள்ளாச்சி.
3. ஆர்.பாலசந்திரன் (1093), என்.சுப்ரமணியம் மேல்நிலைப் பள்ளி, சூரமங்கலம்.

டெக்ஸ்டைல் டெக்னாலஜி
1. கே.அமுதா (1155), அரசு மேல்நிலைப் பள்ளி, ஒண்ணுபுரம்.
2. என்.பி.ரேவதி (1097), அரசு மேல்நிலைப் பள்ளி, ஒண்ணுபுரம்.
3. எம்.வெங்கடேஷ் (1066), அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, கொமரப்பாளையம்.

நர்சிங்
1. எம்.பவித்ரா (1094), வி.ஆர்.வி.ஜி. மேல்நிலைப் பள்ளி, ராணிப்பேட்டை.
2. சுஜிதா எம் ரெஜி (1007), டி.சி.கே. மேல்நிலைப் பள்ளி, படந்தாலுமூடு.
3. கே.பிரியதர்ஷினி (953), கிறிஸ்ட் கிங் மகளிர் மேல்நிலைப் பள்ளி, தாம்பரம்.
டெக்ஸ்டைல் மற்றும் ஆடை வடிவமைப்பு
1. ஜே.சர்மிளா (1040), எஸ்.எச்.என். மகளிர் மேல்நிலைப் பள்ளி, சிவகாசி.
2. எஸ்.சுகன்யா (983), சத்ரியா மகளிர் மேல்நிலைப் பள்ளி, விருதுநகர்.
3. ஆர்.கஜலட்சுமி (1096), ஏ.எஸ்.அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, முதலியார்பேட்டை.

உணவு மேலாண்மை மற்றும் குழந்தை கவனிப்பு
1. ஆர்.கண்மணி (1057), சி.எஸ்.ஐ. ஜெஸ்ஸி மோசஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, அண்ணா நகர்.
2. ஏ.அஞ்சு (993), சரோஜினி மகளிர் மேல்நிலைப் பள்ளி, பூந்தமல்லி.
3. யு.சாய் சரண்யா (1075), சி.எஸ்.ஐ. பெயின் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, கீழ்ப்பாக்கம்.

விவசாய முறைகள்
1. ஆர்.திவ்யா ஸ்ரீ (1129), மங்கலம் மேல்நிலைப் பள்ளி, அந்தியூர்.
2. பி.மாதேஷ்வரன் (1124), மங்கலம் மேல்நிலைப் பள்ளி, அந்தியூர்.
3. எஸ்.கெüரிஷ்வரி (1122), மங்கலம் மேல்நிலைப் பள்ளி, அந்தியூர்.

கணக்குப்பதிவியல் மற்றும் தணிக்கையியல்
1. எம்.சரண்யா (1153), எஸ்.யு.எம். மேல்நிலைப் பள்ளி, ராயப்பன்பட்டி.
2. ஜி.இந்துமதி (1151), அரசு மேல்நிலைப் பள்ளி, கல்லாவி.
3. வி.மாரியம்மாள் (1149), ஹிந்து மேல்நிலைப் பள்ளி, ஆழ்வார்திருநகரி.

ஆபிஸ் செக்ரட்டரிஷிப்
1. எஸ்.இந்திரா (1142), மணல் மாதா மகளிர் மேல்நிலைப் பள்ளி, சொக்கான்குடியிருப்பு.
2. ஜி.முத்துமாரி (1140), டி.என்.பி.எம்.எம். அம்மையப்ப நாடார் மகளிர் மேல்நிலைப் பள்ளி, தளவாய்புரம்.
3. எம்.மாடத்தியம்மாள் (1068), திலக் வித்யாலயா மேல்நிலைப் பள்ளி, கல்லிடைக்குறிச்சி.

மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதம் - 1. ஈரோடு 97.05-2. நாமக்கல் 96.59,3. விருதுநகர் 96.12,4. பெரம்பலூர் 96.03,5. தூத்துக்குடி 95.72,6. கன்னியாகுமரி 95.14,7. கோவை 94.89,8. திருநெல்வேலி 94.37,9. திருச்சி 94.36,10. திருப்பூர் 94.12,11. சிவகங்கை 94.06,12. தருமபுரி 93.24,13. ராமநாதபுரம் 93.06,14. கரூர் 92.97,15. தேனி 92.74,16. மதுரை 92.34,17. சென்னை 91.9,18. சேலம் 91.53,19. திண்டுக்கல் 90.91,20. தஞ்சாவூர் 89.78,21. புதுக்கோட்டை 89.77,
22. கிருஷ்ணகிரி 89.37,23. திருவள்ளூர் 88.23,24. காஞ்சிபுரம் 87.96,25. நாகப்பட்டினம் 87.95,26. நீலகிரி 86.15,27. விழுப்புரம் 85.18, 28. வேலூர் 85.17,29. கடலூர் 84.18,30. திருவாரூர் 83.7,31. அரியலூர் 79.55,32. திருவண்ணாமலை 74.4

பிளஸ் 2 தேர்வில் 113 அரசுப் பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

அரசுப் பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு 5 சதவீதம் அதிகரித்துள்ளது.
கடந்த ஆண்டு அரசுப் பள்ளிகள் 79 சதவீத தேர்ச்சி பெற்றிருந்தன. இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 84 சதவீதமாக அதிகரித்துள்ளது.
அதிக மதிப்பெண் பெற்றவர்கள் எண்ணிக்கை அதிரித்துள்ளதை அடுத்து பி.இ., எம்.பி.பி.எஸ். படிப்புகளுக்கான கட்-ஆஃப் அதிகரிப்பது உறுதியாகியுள்ளது. பி.இ. படிப்பைக் காட்டிலும் எம்.பி.பி.எஸ். படிப்பில் மொத்த இடங்கள் குறைவாக உள்ளதால், கடும் போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிளஸ் 2 தேர்வில் ஒட்டுமொத்தமாக 18 மாணவர்கள் சிறப்பிடங்களைப் பிடித்துள்ளனர்.

பிளஸ் 2 தேர்வில் தமிழை முதல் பாடமாக எடுத்துப் படித்த மாணவர்கள் மட்டுமே அதிகாரப்பூர்வ ரேங்க் பட்டியலில் இடம்பெற முடியும். தமிழ் தவிர சம்ஸ்கிருதம், பிரெஞ்சு, ஜெர்மன் உள்ளிட்ட மொழிகளை எடுத்த மாணவர்கள் அடங்கிய ஒட்டுமொத்த மாணவர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

தமிழ் மொழியை முதல் பாடமாக எடுத்துப் படித்த மாணவி எஸ்.சுஷாந்தியும், இந்தப் பட்டியலில் முதலிடம் பெற்ற என்.விஷ்ணுபிரியா ஆகியோர் ஒரே மதிப்பெண்ணைப் (1,193) பெற்றுள்ளனர். இருந்தாலும், முக்கியப் பாடங்களின் கூட்டு மதிப்பெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றின் அடிப்படையில் அதிகாரப்பூர்வமாக முதல் ரேங்க் பெற்ற சுஷாந்தி இந்தப் பட்டியலில் மூன்றாவதாக இடம்பெற்றுள்ளார்.

என்.விஷ்ணுபிரியா (சம்ஸ்கிருதம்)    பாரதி வித்யா பவன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, திண்டல், ஈரோடு.    1193

பி.ஆனந்தி (சம்ஸ்கிருதம்)    எஸ்.வி.இந்து மகளிர் மேல்நிலைப்பள்ளி, திருச்சி.    1193

எஸ்.சுஷாந்தி(தமிழ்)    ஸ்ரீ வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி,ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி.    1193

அகான்ஷா அஜித் (சம்ஸ்கிருதம்)    வேலம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, முகப்பேர், சென்னை.    1192

எஸ்.சிவராம் (பிரெஞ்சு)    ஜீவனா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, மதுரை.    1192
ஏ.டி.ஷாலினி (சம்ஸ்கிருதம்)    பாரதி வித்யாபவன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, திண்டல், ஈரோடு.    1192

எம்.ஸ்ரீவித்யா (சம்ஸ்கிருதம்)    அஹோபில மடம் ஓரியண்ட்டல் மேல்நிலைப்பள்ளி, சென்னை.    1192

ஏ.எல்.அலமேலு (தமிழ்)     ஸ்ரீ விஜய் வித்யா மந்திர் மகளிர் மேல்நிலைப்பள்ளி, தருமபுரி.    1192

எஸ்.ஸ்ரீராம் (பிரெஞ்சு)    கோல்டன் கேட்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கண்ணங்குறிச்சி, சேலம்.    1192

கே.நிரோஷினி (பிரெஞ்சு)     கிரீன் பார்க் மேல்நிலைப்பள்ளி, போதுப்பட்டி, நாமக்கல்.    1192

டி.துளசிராஜன் (தமிழ்)    கிரீன் பார்க் மேல்நிலைப்பள்ளி, போதுப்பட்டி, நாமக்கல்.    1191

எஸ்.நித்யா (தமிழ்)    பிரின்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, மடிப்பாக்கம், சென்னை.    1191

ஆர்.எஸ்.பிரியதர்ஷினி (பிரெஞ்சு)     எஸ்.ஆர்.வி. மகளிர் மேல்நிலைப்பள்ளி, ராசிபுரம், நாமக்கல்.    1191

எஸ்.என்.முகமது ஜாவித் (பிரெஞ்சு)    பிரிம் ரோஸ் மேல்நிலைப்பள்ளி, மூலகுளம், புதுச்சேரி.    1191

கே.பொன்சங்கர் (சம்ஸ்கிருதம்)    ஏ.இ.டி. மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஈரோடு.    1191

கே.சுமித்ரா (பிரெஞ்சு)    ஜி.டி.மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கோவை.     1191
கனக பார்த்திபன் இலக்கியா (ஜெர்மன்)    வித்யோதயா மெட்ரிக் பள்ளி, தி.நகர், சென்னை.    1191

ஆர்.அபிநயா (பிரெஞ்சு)     சீயோன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, சேலையூர், சென்னை.    1191

மாவட்ட வாரியாக முதலிடம் பிடித்த மாணவர்களின் விவரம்..

கன்னியாகுமரி
1. மிருநளினி - 1188 - நாகர்கோயில்
2. தீப்தி - 1186 - ராமன்புத்தூர்
2. ஆனந்தலக்ஷ்மி - 1186 - நாகர்கோயில்
3. ஏஞ்ஜெல் விஷ்மி நாகா - 1185,  நாகர்கோவில்

திருநெல்வேலி
1. பால ப்ரியா - 1185 - நெல்லை
2. சீதாலட்சுமி - 1184 - சங்கர்நகர்
3. அப்ரஜிதா லோகா சுகுமாரி - இலஞ்சி
3. முத்து கோமதி - 1183 - இலஞ்சி

தூத்துக்குடி
1. பானுமதி - 1182 - கோவில்பட்டி
1. மரியஷைனி கமலசந்திரிகா - 1182 - தூத்துக்குடி
1. சாய் குமார் - 1182 - தூத்துக்குடி
2. ஜஸ்டின் ராஜா - 1181 - கோவில்பட்டி
3. சிவக்குமார்  - 1180 - தூத்துக்குடி

சிவகங்கை
1. ஸ்ரீதர் - 1186 - ராய்குடி
2. விக்னேஷ்வரன் - 1183 -  ராய்குடி
3. சுவர்ணா - 1180 -  ராய்குடி

விருதுநகர்
1. ஞானசெல்வராஜ் - 1187 - ராஜபாளையம்
2. காயத்ரி - 1186 - ராஜபாளையம்
3. மோகனப்ரியா - 1184 - ராஜபாளையம்
3. நிவேதா - 1184 - விருதுநகர்
3. சத்ய பிரியா - 1184  சிவகாசி
3. தீபா பிரியா - 1184 - சிவகாசி

தேனி
1. ரக்சனா - 1182 - தேனி
2. அட்சயா - 1179 - தேவன்பட்டி
3. மோகனபிரியா - 1177 - போடிநாயக்கனூர்
3. பால முருகன் - 1177 - தேனி

மதுரை
1. லலிதா  - 1186 -மதுரை
2. காவியா - 1185 - மதுரை
3. ரக்ஷனா ஸ்ரீ - 1183- மதுரை

திண்டுக்கல்
1. காயத்ரி தேவி - 1187 - திண்டுக்கல்
2. ஜனனி - 1185 - திண்டுக்கல்
3. பிரியங்கா - 1184 - ஒட்டன்சத்திரம்

ஊட்டி
1. மொகமது எஸ்ஸா - 1186 - நீலகிரி
2. ராகுல் ராஜ் - 1173 -  அய்யன்கொல்லி
2. வினித் குமார் - 1173 - குன்னூர்
3. வர்ஷினி - 1165 - குன்னூர்

திருப்பூர்
1. பிரீத்தி - 1187 - உடுமலைப்பேட்டை
2. மோனிகா - 1186 - தாராபுரம்
2. கிருத்திகா - 1186 -முத்தூர்
2. நிவேதா -  1186 - திருப்பூர்
3. பவித்ரா - 1185 - முத்தூர்
3. விஜய் - 1185 - உடுமலைப்பேட்டை

கோவை
1. மேகலா - 1188 - கோவை
2. ரவி சங்கர் - 1186 - பீலமடு
3. திவ்யலஷ்மி - 1185 - கோவை
3. மெல்பா - 1185 - காரமடை

ஈரோடு
1. நவீன் குமார் - 1189 - எம். பாளையம்
2. ப்ரீத்தி ஸ்ரீ - 1188 - திண்டல்
3. ஸ்வாதி - 1187 - எம். பாளையம்

சேலம்
1. கந்தநிவராஜ் - 1190 - கந்தம்பட்டி
2. ஹிரிணி  - 1187 - மாசிநாயக்கன்பட்டி
3. சுதாகர் - 1187 - வீரகனூர்
3. சுஷ்மிதா - 1186 - வீரகனூர்
3. பிரவீன் - 1186 - கந்தம்பட்டி
3. மோனிஷா - 1186 - சேலம்

நாமக்கல்
1 துளசி தாசன் - 1191 - நாமக்கல்
2 நந்த குமார் - 1190 கன்டம்பாளையம்
3 அனிதா - 1189 - போதிப்பட்டி

கிருஷ்ணகிரி
1 சுஷாந்தி - 1193 - ஊத்தங்கரை
2 பவித்ரா - 1190 - ஊத்தங்கரை
2 ரேனுகா ஸ்ரீ -  1190 - கிருஷ்ணகிரி
2 சக்தி கிஷோர் - 1190 - ஊத்தங்கரை
2 ஸ்ருதி - 1190 - ஓசுர்
3 ஜனனி - 1189 - ஊத்தங்கரை
3 ஸ்வேதா ஸ்ரீ - 1189 - ஊத்தங்கரை

தர்மபுரி
1 அலமேலு - 1192 - தர்மபுரி
2 சுஜிதா - 1190 - தர்மபுரி
3 ஸ்ரீமதி - 1188 - ஹரூர்

புதுக்கோட்டை
1 ஜனனி - 1185 - கந்தர்வகோட்டை
2 சுப்பையா - 1184 - கந்தர்வகோட்டை
3 ரம்யா - 1182 - கந்தர்வகோட்டை

கரூர்
1 பாரதி - 1186 - கரூர்
2 கவின் - 1185 - கரூர்
3 அகல்யா - 1184 - கரூர்

அரியலூர்
1 ஹரிஹரன் - 1162 - அரியலூர்
2 பிரியதர்ஷினி - 1161 - ஜெயங்கொண்டாம்
3 அன்புமலர் - 1159 - ஜெயங்கொண்டாம்

பெரம்பலூர்
1 கவிராஜ் - 1187 - பெரம்பலூர்
1 ஆனந்த் - 1187 - உடும்பியம்
2 நவநீதன் - 1184 - பெரம்பலூர்
3 குரு - 1183 - பெரம்பலூர்

திருச்சி
1 அகல்யா - 1189 - துறையூர்
2 வித்யாலக்ஷ்மி - 1188 - சமயபுரம்
3 சோபியா - 1187 - துறையூர்

நாகப்பட்டினம்
1 தேவ அபிநயா - 1180 - மயிலாடுதுறை
2 மதுவந்தி - 1179 - மயிலாடுதுறை
2 பிந்தியா - 1179 - சீர்காழி
3 வைசாலி - 1178 - மயிலாடுதுறை

திருவாரூர்
1 முர்சிதா நஸ்ருன் - 1177 - திருவாரூர்
2 ஐஸ்வர்யா - 1175 - திருவாரூர்
3 மணிவேலு - 1173 - மன்னார்குடி
3 ஷெர்வின் - 1173 - பூண்டி

தஞ்சாவூர்
1 ஸ்ரீநாத் - 1183 - தஞ்சாவூர்
2 விக்னேஷ்வரன் - 1181 - தஞ்சாவூர்
3 அனாமிகா - 1177 - பள்ளிக்கொண்டான்

புதுச்சேரி
1 சிவகனேஷ் - 1181 - புதுச்சேரி
2 ஈஷ்வர் சுப்பையன் - 1178 - காரைக்கால்
2 ஜோதிகமலி - 1178 - புதுச்சேரி
2 கௌசல்யா - 1178 - பொறையூர்
3 பூங்குழலி - 1176 - புதுச்சேரி

விழுப்புரம்
1 சரன்யாவதி - 1185 - கள்ளக்குறிச்சி
1 மணிபாரதி - 1185 - தியாகதுர்கம்
2 வாசுதேவன் - 1184 - தியாகதுர்கம்
3 அக்ஷயா - 1183 - கள்ளக்குறிச்சி

கடலூர்
1 ஆர்த்தி - 1188 - நெய்வேலி
2 எழிலோவியா - 1187 - கடலூர்
3 அனிதா - 1186 - நெய்வேலி

திருவண்ணாமலை
1 கார்த்திகா - 1189 - திருவண்ணாமலை
2 ஷன்மதிபாலா - 1180 - திருவண்ணாமலை
3 பிரதிக்ஷா - 1179 - திருவண்ணாமலை

வேலூர்
1 ஹமத் - 1186 - வேலூர்
2 தீபிகன் - 1185 - ராணிபேட்
3 சன்முக பிரியா - 1183 - அரக்கோணம்

காஞ்சிபுரம்
1 நித்யா - 1191 - மடிப்பாக்கம்
2 அக்ஷயா - 1185 - எம்.எம்.நகர்
3 நந்தினி பிரியா - 1184 - சேலையூர்
3 கஜலக்சுமி - 1184 - மேற்கு தாம்பரம்

திருவள்ளூர்
1 ரஞ்சித் - 1188 - முகப்பேர்
2 சரன்யா - 1187 - பஞ்செட்டி
2 பூஜா - 1187 - அம்பத்தூர்
3 அனன்யா - 1186 - முகப்பேர்
3 ரம்யா பிரபா - 1186 - பஞ்செட்டி

சென்னை
1 பிரீதி - 1185 - சென்னை
1 அறிவரசி - 1185 - சென்னை
1 ஸ்ரீநாத் - 1185 - சென்னை
1 மதுமதி - 1185 - சென்னை
2 மனிஷா - 1183 - சென்னை
2 பிரவின் சாய்ராம் - 1183 - சென்னை
3 சரஸ்வதி - 1182 - சென்னை

Tags :
TAMIL NADU EDUCATION FLASH NEWS,THAGAVAL THULIKAL