Thursday, 29 May 2014

பள்ளிகளில் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் பாலியல் குற்றங்களை கண்டறிய அனைத்து பள்ளிகளிலும் புகார் பெட்டி வைக்க அரசு உத்தரவிட்டுள்ளது .

பள்ளிகளில் குழந்தைகளுக்கு  எதிராக  நடக்கும்  பாலியல் குற்றங்களை  கண்டறிய , அனைத்து  பள்ளிகளிலும் , புகார் பெட்டி  வைக்க , அரசு  உத்தரவிட்டுள்ளது .       தமிழகம் மட்டுமின்றி  பல்வேறு  மாநிலங்களில்  பள்ளிகள் , பொது  இடங்கள் , வீடுகளில்  தனியாக  இருக்கும் , 18 வயதிற்கு
உட்பட்ட  பெண்  குழந்தைகளுக்கு  பாலியல் ரீதியான  தொந்தரவு  தரப்படுகிறது . இக்குற்றச்சம்பவங்களில்  ஈடுபடுவோர்  மீது , கடுமையான  நடவடிக்கை இல்லை . இதன்  காரணமாக  இக்குற்றங்கள் அதிகரிக்கின்றன . குறிப்பாக , பள்ளிகளில்  படிக்கும்  18 வயதிற்குட்பட்ட  சிறுமிகள்  மீது , பாலியல்  குற்றச்செயல்கள் நடைபெறாமல்  தடுக்க  வேண்டும்  என , குழந்தைகள்  நல  பாதுகாப்பு  அமைப்புகளுக்கு , அரசு  உத்தரவிட்டுள்ளது . இதற்காக , தனியார் , அரசு  பள்ளிகளில்  ஆய்வு நடத்தி , அறிக்கை  வழங்கவேண்டும் . பள்ளி சிறுமிகள்  தைரியமாக , புகார்  தெரிவிக்க  ஏதுவாக , அனைத்து  பள்ளிகளிலும் , புகார்  பெட்டி  வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது . மாதம்  ஒரு  முறை இப்புகார்  பெட்டியில்  உள்ள  மனுக்களை  தலைமை ஆசிரியர்கள்  எடுக்கவேண்டும் . மாவட்ட  கல்வி  அதிகாரிகள் , நன்னடத்தை  அலுவலர் , குழந்தைகள்  நல  பாதுகாப்பு  அலுவலர் உள்ளிட்ட  குழுவினர்  விசாரித்து  தீர்வு  காணவேண்டும் . புகார்களின் தன்மையை  பொறுத்தே , சம்பந்தப்பட்ட  குற்றச்செயலில்  ஈடுபடுவோர்  மீது , நடவடிக்கை  எடுக்கப்படும் , என , சமூகநலத்துறை  அதிகாரிகள்  தெரிவித்தனர்.
Tags :
TAMIL NADU EDUCATION FLASH NEWS,