TRB

Monday, 5 May 2014

பாரதியார் பல்கலைக்கழகத்தில் எம்.எட்., பட்டப்படிப்பு துவக்கப்பட்டுள்ளது.

பாரதியார் பல்கலையில் எம்.எட்., பட்ட படிப்பு துவக்க விழா நேற்று நடந்தது. பல்கலையின் தொலைமுறைக் கல்விக்கூட இயக்குனர் கோவிந்தராஜ் வரவேற்றார்.பல்கலை துணைவேந்தர் ஜேம்ஸ்பிச்சை துவக்கிவைத்து
பேசுகையில், ''இந்தியாவில் பாரதியார் பல்கலையில்தான் முதன் முறையாக தொலைமுறைக் கல்வியில் எம்.எட்., பட்டப்படிப்பு துவங்கியுள்ளது. பல்கலையின் அணுகுமுறை, தரமான பயிற்றுவிப்பு முறை, மாணவர்களின் நல்லொழுக்கம் ஆகியவற்றின் அடிப்படையில்தான் எம்.எட்., பாடம் பயிற்றுவிக்க அனுமதி கிடைத்துள்ளது. இதை மாணவர்கள் நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்,'' என்றார். பேராசிரியர் பாலசுப்ரமணியன் நன்றி கூறினார்.பல்கலை பதிவாளர் மனோகரன், பேராசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
Tags :
TAMIL NADU EDUCATION FLASH NEWS,M.ED IN CORRESPONDANCE COURSE IN TAMIL NADU

Popular Posts

E.Mail Free Subsciption

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

After registration, We will send an activation link to your "Inbox". Click on the link to complete registration process.