Saturday, 10 May 2014

PLUS TWO RESULT MARCH 2014 NEWS | பிளஸ் 2 தேர்வு முக்கிய துளிகள்.

  1. பிளஸ் 2 தேர்வு முடிவுள் சென்னையில் வெள்ளிக்கிழமை (மே 9) காலை 10 மணிக்கு வெளியிடப்பட்டது.

  2. பிளஸ் 2 தேர்வில் சாதனை அளவாக 90.6 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் 93.4 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 87.4 சதவீதம் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர்.

  3. கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையில் உள்ள ஸ்ரீ வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி எஸ்.சுஷாந்தி 1,200-க்கு 1,193 மதிப்பெண் பெற்று மாநிலத்திலேயே முதலிடம் பிடித்துள்ளார்.

  4. தருமபுரி ஸ்ரீ விஜய் வித்யாலயா பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி ஏ.எல்.அலமேலு 1,200-க்கு 1,192 மதிப்பெண் பெற்று இரண்டாவது இடம் பெற்றுள்ளார்.

  5. நாமக்கல் கிரீன் பார்க் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர் டி.துளசிராஜன், மடிப்பாக்கம் பிரின்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி எஸ்.நித்யா ஆகியோர் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளனர்.
  6. பிளஸ் 2 தேர்வை தனித்தேர்வர்கள் உள்பட 8,80,352 பேர் எழுதினர். 

  7. பள்ளிகளின் மூலமாக 8 லட்சத்து 21 ஆயிரத்து 671 பேர் தேர்வு எழுதினர். இதில் 7 லடசத்து 44 ஆயிரத்து 698 பேர் (90.6 சதவீதம்) தேர்ச்சி பெற்றுள்ளனர். 76,913 பேர் தேர்ச்சி பெறவில்லை. 

  8. தனித்தேர்வர்களுக்கான மதிப்பெண் சான்றிதழ்கள் அவரவர் தேர்வு எழுதிய மையங்களிலேயே விநியோகிக்கப்பட்டதால் அவர்களுக்கான தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்படவில்லை.

  9. பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

  10. தேர்ச்சி விகிதத்தில் ஈரோடு மாவட்டம் 97.05 சதவீத தேர்ச்சியுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளது. 

  11. நாமக்கல் மாவட்டம் 96.59 சதவீத தேர்ச்சியுடன் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது.

  12. கடந்த 27 ஆண்டுகளாக முதலிடத்தில் இருந்த விருதுநகர் மாவட்டம், 96.12 சதவீத தேர்ச்சியுடன் இந்த ஆண்டு மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. 

  13. அரசுப் பள்ளிகளில் படித்த 3 லட்சத்து 45 ஆயிரம் மாணவர்களில் 2 லட்சத்து 92 ஆயிரம் (84.54 சதவீதம்) பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 

  14. தனியார் பள்ளிகளில் 97.91 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 

  15. ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளில் 81 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

  16. மாநில முதலிடம் : தமிழ் 198,ஆங்கிலம் 196,கணிதம் 200,இயற்பியல் 200,வேதியியல் 199,உயிரியல் 200,மொத்தம் 1,193 எஸ். சுஷாந்தி ஸ்ரீ வித்யா மந்திர் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி, ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி மாவட்டம்.

  17. மாநில இரண்டாம் இடம் : தமிழ் 197,ஆங்கிலம் 196,கணிதம் 200,இயற்பியல் 200,வேதியியல் 200,உயிரியல் 199,மொத்தம் 1,192, ஏ.எல். அலமேலு, ஸ்ரீ விஜய் வித்யாலயா பெண்கள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, தருமபுரி மாவட்டம். 

  18. மாநில மூன்றாம் இடம் : தமிழ் 195,ஆங்கிலம் 197,கணிதம் 199,இயற்பியல் 200,வேதியியல் 200,உயிரியல் 200,மொத்தம் 1,191, டி.துளசிராஜன், கிரீன் பார்க் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி, போதுப்பட்டி, நாமக்கல் மாவட்டம் மற்றும் தமிழ் 195,ஆங்கிலம் 197,கணிதம் 200,இயற்பியல் 200,வேதியியல் 199,உயிரியல் 200,மொத்தம் 1,191, எஸ்.நித்யா,பிரின்ஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி, மடிப்பாக்கம், சென்னை

Tags :
TAMIL NADU EDUCATION FLASH NEWS,