TRB

TNTET

Saturday, 28 June 2014

டி.என்.பி.எஸ்.சி குரூப் ‘2ஏ’ பதவிக்கான தேர்வு 114 மையங்களில் நடக்கிறது. இதை 6 லட்சத்து 32 ஆயிரத்து 672 பேர் எழுதுகின்றனர்.

குரூப் ‘2ஏ’ பதவிக்கான தேர்வு 114 மையங்களில் நடக்கிறது. இதை 6 லட்சத்து 32 ஆயிரத்து 672 பேர் எழுதுகின்றனர்.தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்(டி.என்.பி.எஸ்.சி.) குரூப் ‘2ஏ’ பதவியில் (நேர்முக தேர்வு அல்லாத பதவி) அடங்கிய 2,846 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வு நடத்துகிறது. காலை 10 மணிக்கு தொடங்கும் தேர்வு மதியம் 1 மணி வரை நடக்கிறது. இதற்காக 114 தேர்வு மைங்களில் 2217 தேர்வுக்கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இத்தேர்வை மாநிலம் முழுவதும் 6 லட்சத்து 32 ஆயிரத்து 672 பேர் எழுதுகின்றனர். தேர்வு நடைபெறும் அனைத்து கூடங்களும் வீடியோ எடுக்கப்பட உள்ளன. விண்ணப்பதாரர்கள் காலை 10.30 மணி வரை மட்டும் தேர்வு கூடத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள். தேர்வு மையங்களை ஆய்வு செய்ய மாவட்ட வருவாய் அலுவலர், துணை ஆட்சியர், வருவாய் கோட்டாட்சியர் மற்றும் அவர்களுக்கு இணையான பதவியில் உள்ள அலுவலர்களை கொண்டு பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. தேர்வு கூடங்கள் அனைத்தும் ‘வெப்காஸ்டிங்’ மூலம் தேர்வாணைய அலுவலகத்தில் இருந்து நேரடியாக கண்காணிக்கப்பட உள்ளது. சில கண்காணிக்கப்பட வேண்டிய தேர்வுக்கூடங்கள் வெப்காஸ்டிங் மூலம் அந்தந்த மாவட்ட ஆட்சியராலும், தேர்வாணைய கட்டுப்பாட்டு அறைகளிலிருந்தும் கண்காணிக்கப்பட உள்ளது.
Tags :
tnschool news ,
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Wednesday, 25 June 2014

2013 -14 -ஆம் ஆண்டு முதல், GPF சந்தாதாரர்கள் தங்கள் ஆண்டு கணக்கு அறிக்கையின் நகலை மாநில கணக்காயர் www.agae.tn.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துக் கொள்ளும் வசதி செய்யப்பட்டுள்ளது.

நடப்பு நிதியாண்டு முதல், பொது வருங்கால வைப்பு நிதிக்கான(ஜிபிஎப்) ஆண்டு கணக்கு அறிக்கையை சந்தாதாரர்கள், மாநில கணக்காயர் அலுவலக இணையதளத்தின் மூலம் மட்டுமே பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும் என துணை மாநில கணக்காயர்(நிதி) வர்ஷினி அருண் தெரிவித்துள்ளார். இது குறித்து செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக அரசு ஊழியர்களுக்கான 2013-14- ஆம் நிதியாண்டின் ஜிபிஎப் கணக்கு அறிக்கை, சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு (டி.டி.ஓ.) ஜூலை இரண்டாம் வாரத்திலிருந்து அனுப்பப்பட உள்ளது. ஜிபிஎப் சந்தாதாரர்கள், கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி எந்த அலுவலகத்தில் பணியாற்றினார்களோ, அந்த அலுவலக டி.டி.ஓ.விடம் தங்களின் ஆண்டு கணக்கு அறிக்கையைப் பெற்றுக் கொள்ளலாம். மேலும், 2013 -14 -ஆம் ஆண்டு முதல், ஜிபிஎப் சந்தாதாரர்கள் தங்கள் ஆண்டு கணக்கு அறிக்கையின் நகலை மாநில கணக்காயர் அலுவலக இணையதளத்தில் (www.agae.tn.nic.in) பதிவிறக்கம் செய்துக் கொள்ளும் வசதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, ஆண்டு அறிக்கை நகல்கள் இனி மாநில கணக்காயர் அலுவலகத்தில் வழங்கப்படமாட்டாது. மேலும் நடப்பு நிதியாண்டு முதல், ஜிபிஎப் ஆண்டு கணக்கு அறிக்கையை சந்தாதாரர்கள் இணையதளத்தின் மூலம் மட்டுமே பதிவிறக்கம் செய்துக் கொள்ள வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags :
agae.tn.nic.in,
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Tuesday, 24 June 2014

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் நியமிக்கப்பட உள்ள உதவி பேராசிரியர் நியமனம் தொடர்பாக மேலும் சில தகவல்களை சமர்ப்பிக்கவேண்டும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் நியமிக்கப்பட உள்ள உதவி பேராசிரியர் நியமனம் தொடர்பாக மேலும் சில தகவல்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் காலியாகக்கிடக்கும் உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப அரசு முடிவு செய்தது. அதைத்தொடர்ந்து அதற்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்தது. இதைத்தொடர்ந்து விண்ணப்பித்தவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு 25–11–2013 முதல் 6–12–2013 வரை நடைபெற்றது. சான்றிதழ் சரிபார்த்தலின்போது அவர்கள் பெற்ற மதிப்பெண் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டது.

அரசு உத்தரவுப்படி ஆசிரியர் தேர்வு வாரியம் மேலும் சில தகவல்களை சேகரிக்கவேண்டி உள்ளது. எனவே கேட்கப்படும் சரியான ஆவணங்களை தேர்வர்கள் சமர்ப்பிக்கவேண்டும். தேர்வர்கள் பி.எட். மற்றும் எம்.எட் கல்லூரிகளில் பெற்ற சர்வீசஸ் பற்றிய விவரத்தை படிவம் 1–ல் தெரிவித்து சமர்ப்பிக்கவேண்டும்.அவர்கள் எம்.பில். மற்றும் பட்டப்படிப்பை தொலை தூரக்கல்வியில் படித்தார்களா? அல்லது திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் படித்தார்களா? என்பதற்கு படிவம் 2–ஐ சமர்ப்பிக்கவேண்டும்.சமர்ப்பிக்கவேண்டிய இடம் காயிதே மில்லத் அரசு பெண்கள் கல்லூரி ஆகும்.தமிழ் மற்றும் ஆங்கில பாடப்பிரிவினர் ஜூலை 1–ந் தேதியும், வணிகவியல் பாடப்பிரிவினர் 2–ந் தேதியும், கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், வரலாறு, பொருளாதாரம் ஆகிய பாடப்பிரிவை சேர்ந்தவர்கள் 3–ந் தேதியும், கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் இதர பாடப்பிரிவினர் 4–ந் தேதியும் சமர்ப்பிக்கவேண்டும். அனைத்து பாடப்பிரிவினரும் மேற்கண்ட குறிப்பிட்ட தேதிகளில் காலை 9–30 முதல் மாலை 5–30 மணிவரை சமர்ப்பிக்கலாம்.இந்த தகவலை ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.
Tags :
tnschool news ,
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Sunday, 22 June 2014

D.ELE.ED HALL TICKET | தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வில் பங்கேற்கும் தனித் தேர்வர்கள் மற்றும் சிறப்பு அனுமதித் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்தவர்கள் தேர்வுக்கூட அனுமதிச் சீட்டை பதிவிறக்கம் செய்துகொள்ள அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவுறுத்தியுள்ளது.

தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வில் பங்கேற்கும் தனித் தேர்வர்கள் மற்றும் சிறப்பு அனுமதித் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்தவர்கள் தேர்வுக்கூட அனுமதிச் சீட்டை பதிவிறக்கம் செய்துகொள்ள அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து இயக்ககம் வெளியிட்ட செய்தி: தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வின் (2014 ஜூன்) இரண்டாம் ஆண்டு தேர்வுகள் ஜூன் 26 முதல் ஜூலை 3-ஆம் தேதி வரையும், முதலாமாண்டு தேர்வுகள் ஜூலை 7-ஆம் தேதி முதல் ஜூலை 14-ஆம் தேதி வரையிலும் நடத்தப்பட உள்ளன. இந்தத் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள தனித் தேர்வர்கள் மற்ற்றும் சிறப்பு அனுமதித் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்தவர்கள் www.tndge.in என்ற இணையதளத்தில் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து ஜூன் 22-ஆம் தேதி முதல் 26-ஆம் தேதி வரை தேர்வுக்கூட அனுமதிச் சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
Tags :
tnschool news ,
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக எம்பிபிஎஸ் (மருத்துவம்) மற்றும் பிடிஎஸ் (பல் மருத்துவம்) படிப்புகளில் சேர விண்ணப்பித்தவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது.ஜுன் 25-ஆம் தேதி பல்கலைக்கழக நிர்வாகக் கட்டடத்தில் கலந்தாய்வு நடைபெறுகிறது என பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக எம்பிபிஎஸ் (மருத்துவம்) மற்றும் பிடிஎஸ் (பல் மருத்துவம்) படிப்புகளில் சேர விண்ணப்பித்தவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது.ஜுன் 25-ஆம் தேதி பல்கலைக்கழக நிர்வாகக் கட்டடத்தில் கலந்தாய்வு நடைபெறுகிறது என பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் (சுயநிதி) படிப்புகளில் சேர 7,651 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

இதில் மாணவர்கள் 3,011 பேர், மாணவிகள் 4,640 பேர் அடங்குவர். 11 மாற்றுத்திறனாளிகளும் விண்ணப்பித்துள்ளனர்.

எம்பிபிஎஸ் படிப்புக்கு விண்ணப்பித்தவர்களுக்கான ரேண்டம் எண் கடந்த 18-ஆம் தேதி வெளியிடப்பட்டது.

கலந்தாய்வுக்கான தரவரிசைப் பட்டியல் பல்கலைக்கழக இணையதளத்தில் வெள்ளிக்கிழமை (ஜூன் 20) வெளியிடப்பட்டது.

தரவரிசைப் பட்டியலில் மதுரையைச் சேர்ந்த வி.பிரியதர்ஷினி 200-க்கு 200 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார்.

தஞ்சாவூரைச் சேர்ந்த நிரஞ்சனா 200-க்கு 200 மதிப்பெண்கள், திருநெல்வேலியைச் சேர்ந்த ஸ்ரீதர் சிவக்குமார் 199.75 மதிப்பெண்கள் பெற்று இரண்டு மற்றும் மூன்றாவது இடங்களைப் பெற்றுள்ளனர்.

25-இல் கவுன்சிலிங்: வரும் 25-ஆம் தேதி பல்கலைக்கழக நிர்வாகக் கட்டடத்தில் எம்பிபிஎஸ்., பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது. இதற்கான அழைப்புக் கடிதம் பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

விண்ணப்பித்த மாணவர்கள் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும், விண்ணப்பித்த மாணவ, மாணவிகளுக்கு கலந்தாய்வு குறித்து ஸ்பீட் போஸ்ட் மூலம் அழைப்புக் கடிதம் அனுப்பி வைக்கப்படும்.

எஸ்எம்எஸ் மூலமும் தகவல் அனுப்பப்படும் என பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.

தரவரிசைப் பட்டியல் குறித்தும், கலந்தாய்வு அழைப்புக் கடிதம் பதிவிறக்கம் செய்து கொள்ளவும் தொடர்பு கொள்ள வேண்டிய பல்கலைக்கழக இணையதள முகவரி: www.annamalaiuniversity.ac.in .
Tags :
tnschool news ,
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Saturday, 21 June 2014

சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு ஜூலை 1, 2 தேதிகளில் நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு ஜூலை 1, 2 தேதிகளில் நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் 4 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு திருச்சி, மதுரை, விழுப்புரம், சேலம் ஆகிய இடங்களில் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு மே 21-ஆம் தேதி நடைபெற்றது. மொத்தம் 4,477 பேர் பங்கேற்ற இந்தத் தேர்வில் 933 பேர் (20 சதவீதம்) தேர்ச்சி பெற்றனர். இதையடுத்து, தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு ஜூலை 1, 2 தேதிகளில் நடத்தப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இதற்கான சுய விவரப் படிவம், அடையாளப் படிவம், அங்கீகாரப் படிவும் ஆகியவற்றை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்ய வேண்டும். இதில் பங்கேற்பதற்காக அழைப்புக் கடிதங்கள் தனியாக அனுப்பப்படாது. மாற்றுத் திறனாளிகளுக்கு சலுகை: சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்க முடியாத மாற்றுத் திறனாளிகளுக்கு மனிதாபிமான அடிப்படையில் சலுகை வழங்க ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது. அதன்படி, அவர்கள் இந்தச் சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்க வேறு யாரையாவது நியமிக்கலாம். அதற்காக அங்கீகாரக் கடிதத்தை தேர்வர் அந்த நபருக்கு வழங்க வேண்டும். 
சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் இடங்கள்:

Tags :
tnschool news ,
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

HIGH SCHOOL HM NEW PANEL | 01.01.2014 நிலவரப்படியான அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வுக்கு தகுதி வாய்ந்த பட்டதாரி ஆசிரியர் மற்றும் அதனையொத்த பணியில் உள்ள ஆசிரியர்களுக்கான முன்னுரிமைப்பட்டியல் 12-05-2014 நாளிட்ட பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகளில் வெளியிடப்பட்டது. இப்பட்டியலில் தமிழாசிரியர்கள் பணியில் சேர்ந்த நாளை முன்னுரிமைக்கு எடுத்துக்கொள்ள வேண்டி சென்னை உயர்நீதி மன்றத்தில் தொடரப்பட்ட W.P.No.16217/14, W.P.No.16218/14, W.P.No.16219/14 W.P.No.15925/14 மற்றும் இதர நீதி மன்ற வழக்கின் இறுதி தீர்ப்பிற்குட்பட்டு திருத்திய முன்னுரிமைப்பட்டியல் தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்.999/சி1-இ1/2014 நாள் 20-06-2014 ன் படி வெளியிடப்படுகிறது. இதற்கு முன் வெளியிடப்பட்ட 12/05/2014 நாளிட்ட பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகளின்படி வெளியிடப்பட்ட முன்னுரிமைப்பட்டியல் இரத்து செய்யப்படுகிறது.

HIGH SCHOOL HM NEW PANEL | 01.01.2014 நிலவரப்படியான அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வுக்கு தகுதி வாய்ந்த பட்டதாரி ஆசிரியர் மற்றும் அதனையொத்த பணியில் உள்ள ஆசிரியர்களுக்கான முன்னுரிமைப்பட்டியல் 12-05-2014 நாளிட்ட பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகளில் வெளியிடப்பட்டது. இப்பட்டியலில் தமிழாசிரியர்கள் பணியில் சேர்ந்த நாளை முன்னுரிமைக்கு எடுத்துக்கொள்ள வேண்டி சென்னை உயர்நீதி மன்றத்தில் தொடரப்பட்ட W.P.No.16217/14, W.P.No.16218/14, W.P.No.16219/14 W.P.No.15925/14 மற்றும் இதர நீதி மன்ற வழக்கின் இறுதி தீர்ப்பிற்குட்பட்டு திருத்திய முன்னுரிமைப்பட்டியல் தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்.999/சி1-இ1/2014 நாள் 20-06-2014 ன் படி வெளியிடப்படுகிறது. இதற்கு முன் வெளியிடப்பட்ட 12/05/2014 நாளிட்ட பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகளின்படி வெளியிடப்பட்ட முன்னுரிமைப்பட்டியல் இரத்து செய்யப்படுகிறது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Friday, 20 June 2014

ஐஐடி, ஐஎஸ்எம் போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் சேருவதற்கான ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வின் (அட்வான்ஸ்டு) முதன்மைத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. சிபிஎஸ்இ இணையதளத்தில் தேர்வு முடிவுகளை மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம்.

ஐஐடி, ஐஎஸ்எம் போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் சேருவதற்கான ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வின் (அட்வான்ஸ்டு) முதன்மைத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. சிபிஎஸ்இ இணையதளத்தில் தேர்வு முடிவுகளை மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம்.

ஜே.இ.இ. தேர்வை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) நடத்துகிறது. இதில் முதலில் முதல்நிலைத் தேர்வும் (மெயின்) பின்னர் முதன்மைத் தேர்வும் (அட்வான்ஸ்) நடத்தப்படும். 2014-ஆம் ஆண்டுக்கான ஜே.இ.இ. முதல்நிலைத் தேர்வு (எழுத்துத் தேர்வு) ஏப்ரல் 6-ஆம் தேதியும், ஆன்-லைன் தேர்வுகள் ஏப்ரல் 9,11,12 மற்றும் 16-ஆம் தேதிகளிலும் நடத்தப்பட்டன.இந்தத் தேர்வை நாடு முழுவதும் 11 லட்சம் பேர் எழுதினர். இந்தத் தேர்வுக்கான முடிவு மே 2-ஆம் தேதி நள்ளிரவு சிபிஎஸ்இ இணையதளத்தில் வெளியிடப்பட்டது.

இந்த முதல்நிலைத் தேர்வில் தகுதி பெறுபவர்கள் என்.ஐ.டி. போன்ற மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் பல்வேறு படிப்புகளில் சேர முடியும். மேலும் இந்த முதல்நிலைத் தேர்வில் முதல் 1.50 லட்சம் தரவரிசைக்குள் வருபவர்கள் ஐஐடி, ஐஎஸ்எம் போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் சேருவதற்கான ஜே.இ.இ. முதன்மைத் தேர்வை எழுத முடியும்.இந்த முதன்மைத் தேர்வு கடந்த மே 25-ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்தத் தேர்வு முடிவுகள் சிபிஎஸ்இ இணையதளத்தில் வியாழக்கிழமை (ஜூன் 19) வெளியிடப்பட உள்ளது.

இந்தத் தேர்வில் தகுதி பெறுபவர்கள், நாடு முழுவதும் உள்ள ஐஐடி மற்றும் ஐஎஸ்எம் உயர் கல்வி நிறுவனங்களில் பல்வேறு படிப்புகளில் சேருவதற்கு வெள்ளிக்கிழமை (ஜூன் 20) முதல் இணையதளம் மூலம் பதிவு செய்யலாம். இவ்வாறு பதிவு செய்வதற்கான வாய்ப்பு ஜூன் 24-ஆம் தேதியுடன் முடிந்துவிடும்.மேலும் இந்த உயர் கல்வி நிறுவனங்களில் வழங்கப்படும் கட்டடவியல் பொறியியல் துறைகளில் சேருவதற்கான கட்டடவியல் நுண்ணறி தேர்வு ஜூன் 26-ஆம் தேதி நடத்தப்படும். இதில் ஜே.இ.இ. முதன்மைத் தேர்வில் தகுதி பெற்றவர்கள் மட்டுமே பங்கேற்க முடியும். இந்த கட்டடவியல் நுண்ணறி தேர்வு முடிவு ஜுன் 29-ஆம் தேதி வெளியிடப்படும்.

JEE(Advanced) - 2014 Result
Tags :
tnschool news ,
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

சிதம்பரம் அண்ணாமலை பல்கலை கழகத்தில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புக்கு விண்ணப்பித்த 7ஆயிரத்து 651 பேருக்கும், பிஎஸ்சி (விவசாயம் மற்றும் தோட்டக்கலை) படிப்புக்கு விண்ணப்பித்த 11 ஆயிரத்து 654 பேருக்கும், பிஎஸ்சி(நர்சிங்), பிபிடி, பிபார்ம் ஆகிய படிப்புகளுக்கு விண்ணப்பித்த 947 பேருக்கும் ரேண்டம் எண் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

சிதம்பரம் அண்ணாமலை பல்கலை கழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் மற்றும் பிஎஸ்சி( விவசாயம்) ஆகிய படிப்புகளுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு ரேண்டம் எண் வெளியிடப்பட்டது. பல்கலைக்கழக வளகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு பல்கலைக்கழக நிர்வாக அதிகாரி ஷிவ்தாஸ்மீனா தலைமை தாங்கி 10 எண்கள் கொண்ட ரேண்டம் பட்டியலை வெளியிட்டார். பதிவாளர் டாக்டர் பஞ்சநதம், மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் பிரசாத், பல் மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் மைதிலி, விவசாயத்துறை தலைவர் டாக்டர் வசந்தகுமார், பொறியியல்துறை தலைவர் டாக்டர் வேலுசாமி, தொலைதூரகல்வி இயக்க இயக்குனர் டாக்டர் சந்திரசேகர், மாவட்ட வருவாய் அலுவலர்கள் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர், கிருஸ்துராஜ், மக்கள் தொடர்புதுறை அலுவலக மேலாளர் காளிதாஸ் மற்றும் துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், பல்கலைக்கழக ஊழியர்கள் கலந்து கொண்டனர். பின்னர் பல்கலைக்கழக நிர்வாகி ஷிவ்தாஸ்மீனா நிருபர்களிடம் கூறியதாவது : அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் முதன் முறையாக ரேண்டம் எண் பட்டியல் வெளியிடப்படுகிறது. எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புக்கு விண்ணப்பித்த 7ஆயிரத்து 651 பேருக்கும், பிஎஸ்சி (விவசாயம் மற்றும் தோட்டக்கலை) படிப்புக்கு விண்ணப்பித்த 11 ஆயிரத்து 654 பேருக்கும், பிஎஸ்சி(நர்சிங்), பிபிடி, பிபார்ம் ஆகிய படிப்புகளுக்கு விண்ணப்பித்த 947 பேருக்கும் ரேண்டம் எண் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்கள் இதை அண்ணாமலை பல்கலைக்கழக வெப்சைட்டில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு(கவுன்சிலிங்) தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றார்.

2014-15 - Know Your Random Number
Tags :
tnschool news ,
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

6.25 லட்சம் பேர் எழுத உள்ளகுரூப்2 தேர்வுக்கான ஹால் டிக்கெட், டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

குரூப்2 தேர்வு ஹால்டிக்கெட் குரூப்2 தேர்வுக்கான ஹால் டிக்கெட், டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தேர்வு கட்டுப்பாடு அலுவலர் ஷோபனா நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வருகிற 29ம் தேதி முற்பகல், ஒருங்கிணைந்த குடிமைப் பணிகளில்(குரூப் 2 பதவி) அடங்கிய 2,846 காலிப்பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வை நடத்த உள்ளது. இத்தேர்வுக்கு 6.25 லட்சத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. சரியான முறையில் விவரங்களை பதிவு செய்து உரிய விண்ணப்பக்கட்ட ணம் மற்றும் தேர்வுக்கட்ட ணம் செலுத்திய விண்ணப்பதாரர்களுக்கு தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு தேர்வாணையத்தின் இணையதளமான tnpsc.gov.in -ல் வெளியிடப்பட்டுள்ளது. நுழைவுச்சீட்டு கிடைக்க பெறாத விண்ணப்பதாரர்கள், தங்களது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளதா? என்பதை நிராகரிப்புப்பட்டியலில் கண்டறியலாம். நிராகரிப்பு பட்டியலில் இடம் பெறாத, சரியான முறையில் விண்ணப்பங்களை பதிவு செய்து, உரிய விண்ணப்பக்கட்டணம் செலுத்தியும் நுழைவுச் சீட்டு கிடைக்கப் பெறாத, தகுதியான விண்ணப்பதாரர்கள், தாங்கள் பணம் செலுத்தியதற்கான செலுத்துச்சீட்டின் நகலு டன் தேர்வாணையத்தின் மின்னஞ்சல் முகவரியான contacttnpsc@gmail.com க்கு வருகிற 23ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். நுழைவுச் சீட்டினை டவுன்லோடு செய்வதில் ஏதேனும் சந்தேகம் இருப் பின் 1800 425 1 002 என்ற கட்டணமில்லா தொலைபேசியிலோ அல்லது contacttnpsc@gmail.com  என்ற மின்னஞ்சல் முகவரியிலோ தொடர்பு கொண்டு தெளிவு பெறலாம்.
Tags :
tnschool news ,
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Thursday, 19 June 2014

மருத்துவப் படிப்பு 2-ம் கட்ட கவுன்சலிங் ஜூலை மாதத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

மருத்துவப் படிப்பு பொதுப் பிரிவு கவுன்சலிங் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் தொடங்கி நடந்து வருகிறது.தமிழகத்தில் மொத்தம் 18 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 2,023 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன. சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரியில் 84 பிடிஎஸ் இடங்கள் உள்ளன. இவை தவிர தனியார் (சுயநிதி) மருத்துவக் கல்லூரிகளில் இருந்து மாநில அரசு ஒதுக்கீட்டில் 498 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன. இவை தவிர தனியார் (சுயநிதி) பல் மருத்துவக் கல்லூரிகளில் இருந்து மாநில அரசு ஒதுக்கீட்டுக்கு சுமார் 900 இடங்கள் உள்ளன.  கவுன்சலிங் ஜூன் 22-ம் தேதி வரை நடைபெறும். தமிழகத்தில் தற்போது 7 சுயநிதி மருத்துவக் கல்லூரிகளுக்கு மட்டுமே இந்திய மருத்துவ கவுன்சில் மாணவர் சேர்க்கைக்கான அனுமதியை வழங்கியுள்ளது. அதனால் அக்கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்கள் 498-க்கான கவுன்சலிங் பின்னர் நடத்தப்படும். 2-ம் கட்ட கவுன்சலிங் ஜூலை மாதத்தில் நடத்த திட்டமிட்டிருக்கிறோம். செப்டம்பர் 1 வரை மாணவர் சேர்க்கை மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்களை செப்டம்பர் 1-ம் தேதிவரை சேர்க்கலாம். அதனால் மற்ற சுயநிதி மருத்துவக் கல்லூரிகளுக்கு இந்திய மருத்துவ கவுன்சில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி வழங்கும் பட்சத்தில், அதன் மூலம் கிடைக்கும் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு ஜூலை 12-ம் தேதிக்கு மேல் கவுன்சலிங் நடத்தி நிரப்பப்படும் .

தமிழகத்தில் 2014-15-ம் கல்வி ஆண்டில் 18 அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் மற்றும் 7 தனியார் (சுயநிதி) மருத்துவக் கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கை நடத்த இந்திய மருத்துவக் கவுன்சில் (எம்சிஐ) தற்போது அனுமதி வழங்கியுள்ளது.
அரசு மருத்துவக் கல்லூரிகளின் விவரம்:
1. சென்னை மருத்துவக் கல்லூரி (எம்எம்சி)
2. ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி
3. கீழ்பாக்கம் மருத்துவக் கல்லூரி
4. மதுரை மருத்துவக் கல்லூரி
5. தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி
6. செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி
7. திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி
8. கோயம்புத்தூர் மருத்துவக் கல்லூரி
9. சேலம் எம்.கே.எம்.மருத்துவக் கல்லூரி
10. திருச்சி கே.ஏ.பி.வி.மருத்துவக் கல்லூரி
11. தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி
12. கன்னியாகுமரி மருத்துவக் கல்லூரி
13. வேலூர் மருத்துவக் கல்லூரி
14. தேனி மருத்துவக் கல்லூரி
15. தர்மபுரி மருத்துவக் கல்லூரி
16. விழுப்புரம் மருத்துவக் கல்லூரி
17. சிவகங்கை மருத்துவக் கல்லூரி
18. திருவண்ணாமலை மருத்துவக் கல்லூரி
தனியார் (சுயநிதி) மருத்துவக் கல்லூரிகளின் விவரம்:
1. ஐ.ஆர்.டி.மருத்துவக் கல்லூரி (பெருந்துறை)
2. பி.எஸ்.ஜி.மருத்துவக் கல்லூரி (கோயம்புத்தூர்)
3. மூகாம்பிகை மருத்துவக் கல்லூரி (குலசேகரம்)
4. கற்பக விநாயக மருத்துவக் கல்லூரி (சின்னக்கோளம்பாக்கம்).
5. தனலட்சுமி சினிவாசன் மருத்துவக் கல்லூரி (பெரம்பலூர்)
6. கற்பகம் பேக்கல்டி ஆப் மெடிக்கல் சயின்ஸ் அன்டு ரிசர்ச் (கோயம்புத்தூர்)
7. வேலம்மாள் மருத்துவக் கல்லூரி (மதுரை).
Tags :
tnschool news ,
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

டிஎன்பிஎஸ்சி சமீபத்தில் நடத்திய விஏஓ தேர்வுக்கான கீ ஆன்சர், அதன் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், 3 மாதத்திற்குள் தேர்வின் முடிவுகளை வெளியிடவும் முடிவு செய்துள்ளது.

டிஎன்பிஎஸ்சி சமீபத்தில் நடத்திய விஏஓ தேர்வுக்கான கீ ஆன்சர், அதன் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், 3 மாதத்திற்குள் தேர்வின் முடிவுகளை வெளியிடவும் முடிவு செய்துள்ளது.கிராம நிர்வாக அதிகாரி (வி.ஏ.ஓ.) பதவியில் 2,342 காலி பணியிடங்களை நிரப்புவதற்காக கடந்த சனிக்கிழமை எழுத்துத்தேர்வு நடத்தப்பட்டது. சென்னை உள்பட தமிழகம் முழுவதும் 243 மையங்களில் மொத்தம், 10 லட்சத்து 8,662 பேர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டிருந்தனர். ஆனால், 7 லட்சத்து 63 ஆயிரம் பேர் மட்டுமே தேர்வு எழுதினர். 2 லட்சத்து 45 ஆயிரத்து 662 பேர் தேர்வு எழுத வரவில்லை. விஏஓ தேர்வுக்கான உத்தேச விடைகள் (கீ ஆன்சர்) டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் (www.tnpsc.gov.in) புதன்கிழமை வெளியிடப்பட்டன. உத்தேச விடைகள் குறித்து முறையிட விரும்பினால் ஜூன் 24-ம் தேதிக்குள் விவரங்களை அனுப்புமாறு டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. ஆன்சர் கீ தொடர்பாக ஆட்சேபனை இருந்தால் தேர்வர்கள் தெரிவிக்கலாம். அது குறித்து வல்லுனர் குழு ஆய்வு செய்யும். அதன் பின்னர், புதிய ஆன்சர் கீ வெளியிடப்படும். தேர்வு முடிவுகளை குறைந்த பட்சம் 3 மாதத்திற்குள் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

SSLC HALL TICKET | நடைபெறவுள்ள ஜுன் 2014, எஸ்.எஸ்.எல்.சி சிறப்பு உடனடித் தேர்வெழுத, அரசுத் தேர்வுத் துறையால் அறிவிக்கப்பட்ட நாட்களில் விண்ணப்பித்த அனைத்து தனித்தேர்வர்களும் (தட்கல் உட்பட) 19.06.2014 முதல் இணையதளத்தின் மூலம் தேர்வுக் கூட நுழைவுச் சீட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

SSLC HALL TICKET | நடைபெறவுள்ள ஜுன் 2014, எஸ்.எஸ்.எல்.சி சிறப்பு உடனடித் தேர்வெழுத, அரசுத் தேர்வுத் துறையால் அறிவிக்கப்பட்ட நாட்களில் விண்ணப்பித்த அனைத்து தனித்தேர்வர்களும் (தட்கல் உட்பட) 19.06.2014 முதல் இணையதளத்தின் மூலம் தேர்வுக் கூட நுழைவுச் சீட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். www.tndge.in என்ற இணையதளத்திற்குச் சென்று “SSLC SPECIAL SUPPLEMENTARY EXAM JUNE 2014 – HALL TICKET PRINT OUT” என்ற வாசகத்தினை ‘‘Click’’ செய்து தோன்றும் பக்கத்தில் தங்களது, மார்ச் 2014 பதிவெண் பதிவு செய்தால், அவர்களுடைய தேர்வுக் கூட அனுமதிச் சீட்டு திரையில் தோன்றும். அதனைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். உரிய தேர்வுக்கூட அனுமதிச் சீட்டின்றி எந்த ஒரு தேர்வரும் தேர்வெழுத அனுமதிக்கப்படமாட்டார்கள்.
Tags :
tnschool news ,
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Wednesday, 18 June 2014

உதவி தொடக்க கல்வி அலுவலர்களுக்கான கவுன்சலிங் | 156 உதவி தொடக்க கல்வி அலுவலர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தேர்ந்தெடுத்த இடங்களுக்கு மாறுதல் ஆணை வழங்கப்பட்டது.

உதவி தொடக்க கல்வி அலுவலர்களுக்கான கவுன்சலிங் | 156 உதவி தொடக்க கல்வி அலுவலர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தேர்ந்தெடுத்த இடங்களுக்கு மாறுதல் ஆணை வழங்கப்பட்டது. தொடக்க கல்வி இயக்குநர் இளங்கோவன் வெளியிட்ட அறிக்கை: தொடக்க கல்வி இயக்ககத்தில் உதவி தொடக்க கல்வி அலுவலர்களுக்கான பொது மாறுதல் கவுன்சலிங் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் 344 உதவித் தொடக்க கல்வி அலுவலர்கள் கலந்து கொண்டனர். கலந்து கொண்டவர்களில் 156 உதவி தொடக்க கல்வி அலுவலர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தேர்ந்தெடுத்த இடங்களுக்கு மாறுதல் ஆணை வழங்கப்பட்டது. மேலும், நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் பதவியிலிருந்து உதவித் தொடக்கக் கல்வி அலுவலராக பணிமாறுதலுக்கான கவுன்சலிங்கில் கலந்து கொண்ட நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களில் 7 நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பணி மாறுதல் மூலம் உதவித் தொடக்க கல்வி அலுவலர்களாக ஆணையும் வழங்கப்பட்டது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Tags :
tnschool news ,
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

டி.என்.பி.எஸ்.சி. நடத்திய துறை தேர்வில் பாஸ் ஆனவர்களை பெயில் என்று கெசட்டில் வெளியிட்டது. மீண்டும் பாஸ் என்று திருத்தம் செய்து சரியாக கெசட்டை வெளியிட்டுள்ளது.

டி.என்.பி.எஸ்.சி. நடத்திய துறை சார்ந்த தேர்வில், பாஸ் ஆனவர்கள், பெயில் என்று கெசட்டில் வெளியிடப்பட்டது. இது தொடர்பாக தினகரன் நாளிதழில் வெளியிடப்பட்ட செய்தியால் உடனடி நடவடிக்கையை டி.என்.பி.எஸ்.சி. நிர்வாகம் எடுத்துள்ளது.தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) துறைத் தேர்வுகளில் ஒன்றான லோக்கல் பண்ட் ஆடிட்டிங் டிபார்மெண்ட் தேர்வை கடந்த டிசம்பரில் நடத்தியது. தமிழகம் முழுவதும் இத்தேர்வை 5,000க் கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் எழுதினர். இதற்கான ரிசல்ட் கடந்த மார்ச் 7ம் தேதி வெளியிடப்பட்டது.இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் தேர்ச்சி பெற்றதாக, அவர்களின் தேர்வு எண்கள் டி.என்.பி.எஸ்.சி. இணைய தளத்தில் வெளியிடப்பட்டன. அதன் பிறகு புல்லட்டின் (கெசட்) வெளியிடும்போது தேர்ச்சி பெற்றவர்கள், மாவட்டங்கள் வாரியாக பட்டியல் வெளியிடப்பட்டது. அதில், புல்லட்டின் தலைப்பில் பாஸ் ஆனவர்கள் என்பதற்கு, பதிலாக தவறுதலாக பெயில் ஆனவர்கள் என்ற தலைப்பில் பாஸ் ஆனவர்கள் பெயர்கள் போடப்பட்டிருந்தன. இதனால், தேர்வு எழுதிய அரசு ஊழியர்கள் கடும் பாதிப்புக்குள்ளாகினர்.இந்த தவறால் அரசு ஊழியர்களுக்கான சம்பள உயர்வு, பதவி உயர்வு கிடைப்பதில் பல்வேறு சிக்கல் ஏற்பட்டது. இது தொடர்பாக டி.என்.பி. எஸ்.சி. நிர்வாகத்தின் அலட்சியத்தால் அரசு ஊழியர்கள் தவிப்பு என்ற தலைப்பில் தினகரன் நாளிதழில் நேற்று ஆதாரத்து டன் செய்தி வெளியிடப்பட்டது. இதன் தொடர்ச்சி யாக டி.என்.பி.எஸ்.சி. உடனடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இதனால், அரசு ஊழியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தினகரன் செய்தியால்தான் ஒரே நாளில் எங்களுக்கு விடிவு காலம் பிறந்துள்ளது என்று தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்தனர். இதுகுறித்து தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் இணையதளத்தில் வெளியிட்ட அறிவிப்பில், துறை தேர்வுகளில் ஒன்றான லோக்கல் பண்ட் ஆடிட்டிங் டிபார்மெண்ட் தேர்வு முடிவின் தேர்வாணைய செய்தி வெளியீட்டு எண் 6, பக்கங்கள் 591& 597 வரை உள்ள லிஸ்டில் தேர்ச்சி பெற்றோர் பட்டியலின் தலைப்பானது, பெயில் என்று பதிவாகியுள்ளது. இதனை மாற்றி தேர்ச்சி பெற்றோர் பட்டியல் என திருத்தி வாசிக்கவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags :
tnschool news ,
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

நேரடியாக என்ஜினீயரிங் 2–ம் ஆண்டு சேர கலந்தாய்வு 19–ந்தேதி தொடங்கி ஜூலை 2–ந்தேதி வரை நடக்கிறது.

நேரடியாக என்ஜினீயரிங் 2–ம் ஆண்டு சேர கலந்தாய்வு 19–ந்தேதி தொடங்கி ஜூலை 2–ந்தேதி வரை நடக்கிறது.

இதுகுறித்து தொழில்நுட்ப கல்வி ஆணையர் குமார்ஜெயந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:–

தொழில்நுட்பக் கல்வி இயக்கக கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அரசு, அரசு உதவிபெறும் பொறியியல் கல்லூரிகள் மற்றும் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் 2014–15 கல்வியாண்டுக்கான நேரடி 2–ஆண்டு பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு காரைக்குடியில் உள்ள அழகப்பா செட்டியார் பொறியியற்கல்லூரியில் வரும் 19–ந்தேதி முதல் ஜூலை 2–ந்தேதி வரை நடக்கிறது.

வரும் 19–ந்தேதி பி.எஸ்.சி. பாடப்பிரிவில் சேர்ந்து படிக்க விரும்பும், விளையாட்டுத்துறை மாணவர்கள் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் வாரிசுகள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கான கலந்தாய்வு நடக்கிறது. 20–ந்தேதி கெமிக்கல் டெக்ஸ்டைல், தோல் (லெதர்) மற்றும் அச்சகம் (பிரிண்டிங்) போன்ற பாடப்பிரிவுகளுக்கும், 20–ந்தேதி பிற்பகல் முதல் 22–ந்தேதி வரை சிவில் பாடப்பிரிவுக்கும் கலந்தாய்வு நடக்கிறது.

மெக்கானிக்கல் பாடப்பிரிவுக்கு வரும் 23–ந்தேதி முதல் 27–ந்தேதி காலை வரையும், 27–ந்தேதி பிற்பகல் முதல் ஜூலை 2–ந்தேதி வரை எலக்ட்ரிக்கல் பாடப்பிரிவுக்கும் கலந்தாய்வு நடைபெறுகிறது.

இதுகுறித்து மேலும் விவரங்களை தெரிந்துகொள்ள www.accet.in என்ற இணையதளத்தில் சென்று பார்க்கலாம். மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பித்துள்ள மாணவர்களின் மதிப்பெண்களில் மாறுதல் ஏதேனும் இருப்பின் கலந்தாய்வு மையத்திற்கு முன்கூட்டிய நாளிலேயே வருமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

விண்ணப்பித்துள்ள தகுதியான மாணவர்களுக்கு கலந்தாய்வுக்கான அழைப்பு கடிதம் தபாலில் அனுப்பப்பட்டுள்ளது. அழைப்பு கடிதம் கிடைக்கப் பெறவில்லையெனினும் தகுதியுள்ள மாணவர்களும் மேற்குறிப்பிட்ட தேதிகளில் அசல் சான்றிதழ்களுடன் கலந்தாய்வில் கலந்துகொள்ளலாம்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Tags :
tnschool news ,
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

பிளஸ்–2 சிறப்பு துணைத்தேர்வுக்கு தனித்தேர்வர்கள் ‘ஹால்டிக்கெட்’ பெற முடிய வில்லையா? இதோ அரசு தேர்வுகள் இயக்குனர் கு.தேவராஜன் கூறும் வழிமுறைகள்

அரசு தேர்வுகள் இயக்குனர் கு.தேவராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:–

பிளஸ்–2 தேர்வில் தேர்ச்சி பெறாத, வருகை புரியாத தேர்வர்களுக்கு மட்டுமே நடத்தப்படுகிற, பிளஸ்–2 சிறப்பு துணைத்தேர்விற்கு பள்ளிகள் மூலமாகவும், தேர்வு மையங்கள் மூலமாகவும் தேர்வுக்கட்டணம் செலுத்தி விண்ணப்பித்த தேர்வர்கள் கடந்த 13–ந்தேதி முதல் www.tndge.in என்ற இணையதள முகவரியில் ‘ஹால்டிக்கெட்’டுகளை பதிவிறக்கம் செய்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டிருந்தார்கள்.

எனினும், சில தேர்வர்கள் தமக்குரிய ‘ஹால்டிக்கெட்’டுகளை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்ய இயலவில்லை என தெரிவித்ததன் காரணமாக, இவ்வாறான தேர்வர்கள் தாங்கள் தேர்வுக்கட்டணம் செலுத்திய பள்ளி அமைந்துள்ள மாவட்டக்கல்வி அலுவலர் அலுவலகத்தை உடன் தொடர்பு கொண்டு ‘ஹால்டிக்கெட்’டினை பெற்றுக்கொள்ள வேண்டும்.

தேர்வுக்கட்டணத்தினை பள்ளியில் செலுத்தியதற்கு ஆதாரமாக, சம்பந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியரிடம் இருந்து தேர்வர் தேர்வுக்கட்டணம் செலுத்தியுள்ளார் மற்றும் ஜூன், ஜூலை 2014 பிளஸ்–2 சிறப்பு துணைத்தேர்வுக்கு தகுதியானவர் எனக்கடிதம் பெற்று மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகத்தில் தேர்வர் சமர்பித்த பிறகே ‘ஹால்டிக்கெட்’ வழங்கப்படும்.

மேலும் தேர்வர் 2 பாஸ்போர்ட் அளவிலான புகைப்படத்தினை எடுத்து ஒன்றினை ‘ஹால்டிக்கெட்’டில் ஒட்ட வேண்டும். மற்றொடு புகைப்படத்தினை தேர்வு மையத்தில் ஒப்படைக்க வேண்டும்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Tags :
tnschool news ,
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

மருத்துவ படிப்பில் சேருவதற்கான கலந்தாய்வு தொடங்கியது.

மருத்துவ படிப்பில் சேருவதற்கான கலந்தாய்வு நேற்று தொடங்கியது. முதல் நாள் கலந்தாய்வில் விளையாட்டுத்துறை மாணவர்கள், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள் மற்றும் மாற்றுத்திறனாளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Tuesday, 17 June 2014

2014-15 - ம் ஆண்டுக்கான அரசு / நகராட்சி மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான பதவி உயர்வுக்கான சுழற்சி பட்டியல் வரிசை எண். 1 முதல் 699 வரையில் இடம் பெற்றுள்ள அரசு / நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் முதுகலை ஆசிரியர்கள் மற்றும் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு 19.06.2014 அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் காலை 09.00 மணிக்கு ஆன்லைன் வழியாக கலந்தாய்வு நடைபெறவுள்ளது. சுழற்சி பட்டியலில் இடம் பெற்றுள்ளவர்கள் தவறாது கலந்து கொள்ள வேண்டுமெனபள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

2014-15 - ம் ஆண்டுக்கான அரசு / நகராட்சி மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான பதவி உயர்வுக்கான சுழற்சி பட்டியல் வரிசை எண். 1 முதல் 699 வரையில் இடம் பெற்றுள்ள அரசு / நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் முதுகலை ஆசிரியர்கள் மற்றும் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு 19.06.2014 அன்று அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் காலை 09.00 மணிக்கு ஆன்லைன் வழியாக கலந்தாய்வு நடைபெறவுள்ளது. சுழற்சி பட்டியலில் இடம் பெற்றுள்ளவர்கள் தவறாது கலந்து கொள்ள வேண்டுமென பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
விரிவாக பாருங்கள்
Tags :
tnschool news ,
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

பொறியியல் படிப்புக்கான மாணவர் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. 271 மாணவ-மாணவிகள் 200-க்கு 200 ‘கட்ஆப் மார்க்’ பெற்றுள்ளனர். பொது கலந்தாய்வு வரும் 27-ந்தேதி தொடங்குகிறது.

பொறியியல் படிப்புக்கான மாணவர் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. 271 மாணவ-மாணவிகள் 200-க்கு 200 ‘கட்ஆப் மார்க்’ பெற்றுள்ளனர். பொது கலந்தாய்வு வரும் 27-ந்தேதி தொடங்குகிறது.என்ஜினீயரிங் கல்லூரிகள்தமிழ்நாட்டில் அரசு என்ஜினீயரிங் கல்லூரிகள், அரசு உதவி பெறும் என்ஜினீயரிங் கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழக கல்லூரிகள், தனியார் சுயநிதி என்ஜினீயரிங் கல்லூரிகள் என சுமார் 570 என்ஜினீயரிங் கல்லூரிகள் உள்ளன.மொத்தம் உள்ள என்ஜினீயரிங் கல்லூரிகளில் 2 லட்சம் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் இருக்கின்றன. இந்த இடங்களில் மாணவர்கள் சேருவதற்காக அண்ணா பல்கலைக்கழகம் கலந்தாய்வு நடத்த உள்ளது. 

இந்த கலந்தாய்வுக்காக 1 லட்சத்து 73 ஆயிரத்து 687 மாணவ-மாணவிகள் விண்ணப்பம் செய்துள்ளனர். விண்ணப்பித்த மாணவ- மாணவிகளில் சிலருக்கு ஒரே ‘கட்ஆப் மார்க்’, கணிதம், இயற்பியல் பாடத்தில் ஒரே மதிப்பெண், 4-வது விருப்ப பாடத்தில் ஒரே மதிப்பெண், பிறந்தநாள் தேதி சரி சமமாக இருத்தல் போன்றவை இருக்குமானால் அது போன்ற சமயத்தில் ரேண்டம் எண் பயன்படுத்தப்படும். இந்த ரேண்டம் எண் கடந்த 11-ந்தேதி வெளியிடப்பட்டது.தரவரிசை பட்டியல் வெளியீடுஇந்தநிலையில் என்ஜினீயரிங் படிப்புக்கான மாணவர் தரவரிசை பட்டியலை உயர்கல்வித்துறை அமைச்சர் பி.பழனியப்பன் நேற்று காலை வெளியிட்டார். இதில் துணைவேந்தர் பேராசிரியர் மு.ராஜாராம், உயர்கல்வித்துறை முதன்மை செயலாளர் ஹேமந்த் குமார் சின்கா, தொழில்நுட்ப கல்வி ஆணையர் குமார்ஜெயந்த், உயர்கல்வித்துறை கூடுதல் செயலாளர் உமா மகேஸ்வரி, மாணவர் சேர்க்கை செயலாளர் பேராசிரியர் ரைமண்ட் உத்தரியராஜ் ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழக அதிகாரி ஒருவர் கூறியதாவது:-5,264 விண்ணப்பங்கள் நிராகரிப்புஅண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் கல்ந்தாய்வுக்கு மொத்தம் 1 லட்சத்து 73 ஆயிரத்து 687 மாணவ-மாணவிகள் விண்ணப்பம் செய்திருந்தனர். அவர்களில் 1 லட்சத்து 7 ஆயிரத்து 48 மாணவர்கள், 66 ஆயிரத்து 639 மாணவிகள் ஆவார்கள்.1 லட்சத்து 68 ஆயிரத்து 423 மாணவ-மாணவிகளின் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. மொத்தம் 5 ஆயிரத்து 264 மாணவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. நிராகரிக்கப்பட்ட விண்ணப்பங்களுக்கான காரணம் அந்தந்த மாணவர்களுக்கு விளக்கங்கள் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளன.271 பேர் 200-க்கு 200 ‘கட்ஆப் மார்க்’நிராகரிக்கப்பட்டதற்கான காரணத்தை அந்தந்த மாணவர்கள் சரி செய்தால் அவர்களுடைய விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படும். தரவரிசைப்பட்டியலில் 271 மாணவ-மாணவிகள் 200-க்கு 200 கட்ஆப் மார்க் பெற்றுள்ளனர். அவர்களில் முதல் 100 பேர் 4-வது விருப்ப பாடத்திலும் 200-க்கு 200 மதிப்பெண் எடுத்தவர்கள் ஆவார்கள்.ஏற்றுக்கொள்ளப்பட்ட 1 லட்சத்து 68 ஆயிரத்து 423 மாணவர்களில், 124 மாணவர்களுக்கு ரேண்டம் எண் அடிப்படையில் தரவரிசைப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 

கடந்த ஆண்டில் இது 24 மாணவர்களுக்கு ரேண்டம் அடிப்படையில் தரவரிசைப்பட்டியல் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.வரும் 27-ந்தேதி பொது கலந்தாய்வு தொடங்குகிறது. முதல் நாள் காலை 9 மணிக்கு தொடங்கும் பொது கலந்தாய்வில் 3 ஆயிரம் மாணவர்கள் கலந்துக் கொள்கிறார்கள். அடுத்து நடைபெறும் பொது கலந்தாய்வில் நாள் ஒன்றுக்கு 5 ஆயிரம் மாணவர்கள் அழைக்கப்பட உள்ளனர். கடந்த ஆண்டு நாள் ஒன்றுக்கு 3500 பேர் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.32 நாட்கள் பொது கலந்தாய்வுமொத்தம் 32 நாட்கள் பொது கலந்தாய்வு நடைபெறுகிறது. கடந்த ஆண்டில் 37 நாட்கள் நடந்தது. விளையாட்டு வீரர்களுக்கான தரவரிசைப்பட்டியல் இன்று (திங்கட்கிழமை) மாலை 6 மணிக்கு இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.பொது கலந்தாய்வுக்கு எந்தெந்த நாட்களில் மாணவர்கள் வரவேண்டும் என்பது குறித்த அனைத்து தகவல்களும் அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இருந்தாலும் அந்தந்த மாணவர்களுக்கு அழைப்பு கடிதம் அனுப்பி வைக்கப்படும். மேலும் அந்தந்த மாணவர்களுக்கான கலந்தாய்வுக்கு 3 நாட்களுக்கு முன்பு செல்போனில் எஸ்.எம்.எஸ். அனுப்பி வைக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.தரவரிசைப்பட்டியல்மருத்துவப்படிப்புக்கு விண்ணப்பித்தவர்களும், என்ஜினீயரிங் படிப்புக்கும் விண்ணப்பித்திருக்கிறார்கள். இதில் பெரும்பாலும் மருத்துவப்படிப்புக்கே அதிகம் பேர் சேருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக கடந்த 14-ந்தேதி மருத்துவப்படிப்புக்கான தரவரிசைப்பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் முதல் 10 இடங்களில் இடம் பிடித்த மாணவர்களில் சிலர் நேற்று வெளியிடப்பட்ட என்ஜினீயரிங் படிப்புக்கான தரவரிசைப்பட்டியலிலும் இடம் பிடித்திருக்கிறார்கள். அவர்களின் விவரம் வருமாறு:-கே.சுந்தர் நடேஷ், எஸ்.அபிஷேக், வி.எஸ்.விஷ்ணுபிரியா, எம்.மிதுன், கே.ஆர். மைதிலி ஆகியோர் ஆவார்கள்.

Tags :
tnschool news ,
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

டி.என்.பி.எஸ்.சி. குரூப்–2 உள்ளிட்ட 4 போட்டி தேர்வுகள் ஜூன் 29–ந் தேதி ஒரே நாளில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளதால், தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் மத்தியில் மிகப்பெரிய குழப்பம் ஏற்பட்டுள்ளது.

டி.என்.பி.எஸ்.சி. குரூப்–2  உள்ளிட்ட 4 போட்டி தேர்வுகள் ஜூன் 29–ந் தேதி ஒரே நாளில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளதால், தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் மத்தியில் மிகப்பெரிய குழப்பம் ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) வருகிற 29–ந் தேதி குரூப்–2 தேர்வினை தமிழகம் முழுவதும் நடத்துவதாக அறிவித்துள்ளது. இந்த தேர்வில் சுமார் 8 லட்சம் பேர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குரூப்–2 தேர்வை கடந்த 2011–ம் ஆண்டு டி.என்.பி.எஸ்.சி. நடத்தியது. அதன்பின்னர் 3 ஆண்டு இடைவெளி விட்டு தற்போது வருகிற 29–ந் தேதி நடத்துவதால், இந்த தேர்வில் கலந்துகொண்டு வெற்றி பெறவேண்டும் என்று பட்டதாரிகள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால், குரூப்–2 தேர்வு நடைபெறவுள்ள அதே நாளில் (ஜூன் 29–ந் தேதி) மேலும் 3 போட்டி தேர்வுகள் நடைபெற உள்ளது.


மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மத்திய உளவுத்துறையின் (ஐ.பி) இளநிலை உளவு அதிகாரி பதவிக்கு நாடு முழுவதும் ஜூன் 29–ந் தேதி தேர்வு நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. அதேபோல பாரத ஸ்டேட் வங்கி அதிகாரி பதவிக்கான தேர்வும், தேசிய ஆசிரியர் தகுதி தேர்வும் இதே நாளில் நாடு முழுவதும் நடைபெறுகிறது.

இதனால் இந்த 4 தேர்வுகளுக்கும் விண்ணப்பம் செய்தவர்கள் ஏதாவது ஒரு தேர்வினை மட்டுமே எழுதக்கூடிய நிலையில் உள்ளனர். இந்த 4 போட்டி தேர்வுகளில் எதில் பங்கேற்பது என்ற மிகப்பெரிய குழப்பம் பட்டதாரிகள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. இதனால், குரூப்–2 தேர்வு தேதியை தள்ளி வைக்கவேண்டும் என்று டி.என்.பி.எஸ்.சி. நிர்வாகத்துக்கு பலர் கோரிக்கை கடிதத்தை அனுப்பி வருகின்றனர். சிலர் டி.என்.பி.எஸ்.சி. அலுவலகத்துக்கு நேரில் சென்றும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

வங்கி அதிகாரி பணி, மத்திய உளவு துறை அதிகாரி பணி மற்றும் குரூப்–2 ஆகிய தேர்வுகளுக்கு விண்ணப்பம் செய்துள்ள சிலர் நிருபரிடம் கூறும்போது, ‘இந்த 3 தேர்வுகளுமே எங்களுக்கு முக்கியமானது. ஆனால், இந்த தேர்வுகள் அனைத்தும் ஒரே நாளில் வருவதால், எங்களால் எந்த தேர்வில் பங்கேற்பது என்று தெரியவில்லை. எனவே குரூப்–2 தேர்வினை தள்ளிவைக்க வேண்டும் என்று டி.என்.பி.எஸ்.சி. நிர்வாகத்துக்கு பல முறை கடிதம் மூலமாகவும், நேரிலும் கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்த பதிலும் வரவில்லை. நாங்கள் என்ன செய்வது என்றே தெரியவில்லை’ என்று வேதனையை தெரிவித்தனர்.
Tags :
tnschool news ,
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Monday, 16 June 2014

பொறியியல் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்த 1 லட்சத்து 73 ஆயிரத்து 687 பேரின் தரவரிசைப் பட்டியல் ஜூன் 16 ந் தேதி (திங்கள்கிழமை) வெளியிடப்படுகிறது.

பொறியியல் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்த 1 லட்சத்து 73 ஆயிரத்து 687 பேரின் தரவரிசைப் பட்டியல் ஜூன் 16 ந் தேதி (திங்கள்கிழமை) வெளியிடப்படுகிறது.

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் காலை 10 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சியில் உயர் கல்வித் துறை அமைச்சர் பி. பழனியப்பன் தர வரிசைப் பட்டியலை வெளியிட உள்ளார். உடனடியாக அந்த விவரம் www.annauniv.edu இணைய தளத்தில் மாணவர்களின் பார்வைக்காக பதிவேற்றம் செய்யப்பட்டுவிடும்.

முக்கியத் தேதிகள்:

விளையாட்டுப் பிரிவினருக்கான தரவரிசைப்பட்டியல் வெளியீடு: ஜூன் 17

விளையாட்டுப் பிரிவினருக்கான கலந்தாய்வு: ஜூன் 23, 24

மாற்றுத் திறனாளிகளுக்கான கலந்தாய்வு: ஜூன் 25

பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு: ஜூன் 27 முதல் ஜூலை 28 வரை

பிளஸ்-2 தொழில் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு: ஜூலை 9 முதல் 20 வரை.

Tags :
tnschool news ,
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக பொறியியல் படிப்பிற்கான ரேண்டம் எண் ஜூன் 16-ம் தேதியும், மருத்துவ படிப்பிற்கான ரேண்டம் எண் ஜூன் 18-ம் தேதியும் வெளியிடப்படுகின்றன என பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக பொறியியல் படிப்பிற்கான ரேண்டம் எண் ஜூன் 16-ம் தேதியும், மருத்துவ படிப்பிற்கான ரேண்டம் எண் ஜூன் 18-ம் தேதியும் வெளியிடப்படுகின்றன என பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 2014-15 ஆண்டிற்கான பிஇ படிப்பில் சேருவதற்கான விண்ணப்ப படிவம் கடந்த மே.9-ம் தேதி முதலும்,  பிஎஸ்சி வேளாண்மை, பிஎஸ்சி தோட்டக்கலை படிப்புகளில் சேர மே.12-ம் தேதி முதல் விண்ணப்பம் வழங்கப்பட்டது.  பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் ஜூன்.2-ம் தேதிக்குள் அனுப்பி வைக்கப்பட வேண்டும் என பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்தது.  அனுமதி சேர்க்கை முற்றிலும் தகுதி அடிப்படையிலும், அரசு விதிமுறைகள் இடஒதுக்கீடு முறையில் கலந்தாய்வு மூலம் நடைபெறுகிறது. இதுவரை பொறியியல் படிப்பில் சேர 2511 விண்ணப்பங்கள் வந்து சேர்ந்துள்ளன.பொறியியல் படிப்பு கலந்தாய்விற்கான ரேண்டம் எண் வருகிற ஜூன் 16-ம் தேதி வெளியிடப்படுகிறது.

அண்ணாமலைப் பல்கலைக்கழக எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளில் சேர 7454 பேர் விண்ணப்பித்துள்ளனர். பிஎஸ்சி வேளாண்மை, பிஎஸ்சி தோட்டக்கலை படிப்பில் சேர 11394 பேர் விண்ணப்பித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 2014-15 கல்வி ஆண்டில் பிஇ படிப்பிற்கு 3 ஆயிரம் மாணவர்களும், பி.எஸ்சி வேளாண்மை படிப்பிற்கு ஆயிரம் மாணவர்களும், பி.எஸ்சி தோட்டக்கலை படிப்பிற்கு 75 மாணவர்களும் சேர்க்கப்படுவார்கள் என பல்கலைக்கழக நிர்வாகி ஷிவ்தாஸ்மீனா தெரிவித்துள்ளார்.

ஒன்றுக்கு மேற்பட்ட மாணவர்கள் ஒரே கட் ஆஃப் மதிப்பெண் பெறும்போது, அவர்களில் யாருக்கு முன்னுரிமை அளிப்பது என்ற கேள்வி எழும். அப்போது கணிதப் பாடத்தில் அதிக மதிப்பெண் பெற்றவருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.  கணிதப் பாடத்தை அடுத்ததாக இயற்பியல், வேதியல் பாடங்களின் மதிப்பெண்களும் பலருக்கு சமமாக இருக்கும்போது, பிளஸ்-2 நான்காவது பாட மதிப்பெண் பார்க்கப்படும். நான்காவது பாட மதிப்பெண்ணும் சமமாக இருக்கும்போது, பிறந்த தேதி கணக்கில் கொள்ளப்படும். பிறந்த தேதியில் யார் மூத்தவரோ, அவருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.  பிறந்த தேதியும் சமமாக இருக்குமானால், ரேண்டம் எண் (சம வாய்ப்பு எண்) பயன்படுத்தப்படும். இது கம்ப்யூட்டர் மூலம் ஒதுக்கப்படும் 10 இலக்க எண் ஆகும். இந்த ரேண்டம் எண் மதிப்பு அதிகம் உள்ளவர் கலந்தாய்வுக்கு முதலில் அழைக்கப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags :
tnschool news ,
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

தமிழகத்தில் 18 அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 2,023 எம்.பி.பி.எஸ். இடங்களுக்கு முதல் கட்ட கலந்தாய்வு நடத்த மருத்துவக் கல்வி தேர்வுக் குழு திட்டமிட்டுள்ளது.

தமிழகத்தில் 18 அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 2,023 எம்.பி.பி.எஸ். இடங்களுக்கு முதல் கட்ட கலந்தாய்வு நடத்த மருத்துவக் கல்வி தேர்வுக் குழு திட்டமிட்டுள்ளது.எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்பில் சேர விண்ணப்பித்துள்ள சிறப்புப் பிரிவினருக்கு வரும் 17-ஆம் தேதி கலந்தாய்வு நடைபெறுகிறது. அனைத்துப் பிரிவினர் (ஓ.சி.), பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (பி.சி.) உள்ளிட்ட பொதுப் பிரிவினருக்கு முதல் கட்ட கலந்தாய்வு வரும் புதன்கிழமை (ஜூன் 18) தொடங்குகிறது.

எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர இந்த ஆண்டு மொத்தம் 27,539 பேர் விண்ணப்பித்துள்ளனர். எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர மாணவர்களிடையே இந்த ஆண்டு கடும் கட்-ஆஃப் மதிப்பெண் போட்டி ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மூன்று கட்டங்களாக எம்.பி.பி.எஸ். கலந்தாய்வு நடைபெற்றது. மொத்தம் 19 அரசு மருத்துவக் கல்லூரிகளில் தமிழக ஒதுக்கீட்டுக்கு உரிய 2,172 எம்.பி.பி.எஸ். இடங்களுக்கு கலந்தாய்வு நடத்தப்பட்டது.இந்த ஆண்டு சென்னை உள்பட 18 அரசு மருத்துவக் கல்லூரிகளில் இந்திய மருத்துவக் கவுன்சில் (எம்.சி.ஐ.) ஒப்புதல் அளித்துள்ள 2,023 எம்.பி.பி.எஸ். இடங்களுக்கு முதல் கட்ட கலந்தாய்வை நடத்த மருத்துவக் கல்வி தேர்வுக் குழு முடிவு செய்துள்ளது. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரியின் 100 எம்.பி.பி.எஸ். இடங்கள், திருச்சிராப்பள்ளி கி.ஆ.பெ.விசுவநாதம் அரசு மருத்துவக் கல்லூரியின் 50 கூடுதல் எம்.பி.பி.எஸ். இடங்கள், சேலம் அரசு மருத்துவக் கல்லூரியின் கூடுதல் 25 எம்.பி.பி.எஸ். இடங்கள் ஆகியவற்றுக்கு இந்திய மருத்துவக் கவுன்சில் (எம்.சி.ஐ) ஒப்புதல் அளிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து கடந்த ஆண்டு மொத்தம் இருந்த 2,555 எம்.பி.பி.எஸ். இடங்களின் எண்ணிக்கையில் 175 இடங்கள் போக 2,380-ஆகக் குறைந்துள்ளது; இதில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 357 இடங்கள் (15 சதவீதம்) போக, தமிழக ஒதுக்கீட்டுக்கு 2,023 எம்.பி.பி.எஸ். இடங்கள் மட்டுமே இருக்கும்.கவலை வேண்டாம்-அதிகாரிகள் நம்பிக்கை: கடந்த ஆண்டு எம்.பி.பி.எஸ். முதல் கட்ட கலந்தாய்வு தொடங்கியபோது 1,823 அரசு எம்.பி.பி.எஸ். இடங்களுக்கு மட்டுமே கலந்தாய்வு நடத்தப்பட்டது. ஆனால், தொடர்ந்து தமிழக அரசின் சுகாதாரத் துறை எடுத்த முயற்சிகள் காரணமாக 2,555 அரசு எம்.பி.பி.எஸ். இடங்கள் கிடைத்தது, தமிழக ஒதுக்கீட்டுக்கு உரிய 2,172 இடங்களுக்கு கலந்தாய்வு நடந்து முடிந்தது. அதே போன்று மேலே குறிப்பிட்ட திருவாரூர், திருச்சிராப்பள்ளி, சேலம் அரசு மருத்துவக் கல்லூரிகளின் எம்.பி.பி.எஸ். இடங்களுக்கும் இந்திய மருத்துவக் கவுன்சிலின் அனுமதி விரைவில் நிச்சயம் கிடைத்து விடும் என்று சுகாதாரத் துறை உயர் அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.

சுயநிதி மருத்துவக் கல்லூரிகள் சமர்ப்பிக்கும் அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்களுக்கும் சேர்த்து முதல் கட்ட கலந்தாய்வு (ஜூன் 18) நடைபெற உள்ளது. கடந்த ஆண்டு சுயநிதி மருத்துவக் கல்லூரிகள் மூலம் 900-த்துக்கும் மேற்பட்ட அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்கள் கிடைத்தன.இந்த ஆண்டு இந்த சுயநிதி மருத்துவக் கல்லூரிகளின் அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்களுக்கு புதுப்பித்தல் அனுமதியை இந்திய மருத்துவக் கவுன்சில் (எம்.சி.ஐ.) வழங்குவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.இதையடுத்து எத்தனை அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்களுக்கு முதல் கட்ட கலந்தாய்வு நடைபெறும் என்பது செவ்வாய்க்கிழமைக்குள் (ஜூன் 17) தெரிந்து விடும் என்று சுகாதாரத் துறை உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.


Tags :
tnschool news ,
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Sunday, 15 June 2014

தமிழகம் முழுவதும் ஆசிரியர் இல்லங்கள், உண்டு உரைவிட பள்ளிகள், வகுப்பறை கட்டிடங்கள் என ரூ.40 கோடியே 80 லட்சம் மதிப்புள்ள கட்டிடங்களை முதல்–அமைச்சர் ஜெயலலிதா திறந்துவைத்தார்.

தமிழகம் முழுவதும் ஆசிரியர் இல்லங்கள், உண்டு உரைவிட பள்ளிகள், வகுப்பறை கட்டிடங்கள் என ரூ.40 கோடியே 80 லட்சம் மதிப்புள்ள கட்டிடங்களை முதல்–அமைச்சர் ஜெயலலிதா திறந்துவைத்தார்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

கிராம நிர்வாக அதிகாரி (வி.ஏ.ஓ.) பணியில் 2,342 காலியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத்தேர்வை 7 லட்சத்து 63 ஆயிரத்து 925 பேர் தேர்வு எழுதினர்.தேர்வுக்கான உத்தேச விடைகள் (கீ ஆன்சர்) ஒருவாரத்தில் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.

கிராம நிர்வாக அதிகாரி (வி.ஏ.ஓ.) பணியில் 2,342 காலியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத்தேர்வு சனிக்கிழமை நடந்தது. தேர்வெழுத 10 லட்சத்து 8 ஆயிரத்து 662 பேர் அனுமதிக்கப்பட்டிருந்தனர். ஆனால், அவர்களில் 7 லட்சத்து 63 ஆயிரத்து 925 பேர் மட்டுமே தேர்வு எழுதினர். எஞ்சிய 2 லட்சத்து 44 ஆயிரத்து 737 பேர் (25 சதவீதம்) தேர்வெழுத வரவில்லை. தேர்வுக்கான உத்தேச விடைகள் (கீ ஆன்சர்) ஒருவாரத்தில் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்படும் என்றும், தேர்வு முடிவை எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக வெளியிட ஏற்பாடு செய்யப்படும் என்றும் டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி வெ.ஷோபனா தெரிவித்தார்.
Tags :
tnschool news ,
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் 16.06.2014 (திங்கள்கிழமை) காலை 10 மணிக்கு வெளியிடப்படுகிறது.

பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் 16.06.2014 (திங்கள்கிழமை) காலை 10 மணிக்கு வெளியிடப்படுகிறது. பொறியியல் படிப்பில் சேர ஒரு லட்சத்து 73 ஆயிரத்து 687 மாணவ-மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். அவர்கள் அனைவருக்கும் கணினி மூலம் கடந்த 11-ம் தேதி ரேண்டம் எண் வழங்கப்பட்டது. இந்த நிலையில், சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத் தேர்வு மையத்தில் தரவரிசை பட்டியலை உயர்கல்வித் துறை அமைச்சர் பி.பழனியப்பன், திங்கள்கிழமை வெளியிடுகிறார். பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்த மாணவர்கள் தரவரிசைப் பட்டியலை அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் (www.annauniv.edu) தெரிந்துகொள்ளலாம். பொது தரவரிசை பட்டியலைத் தொடர்ந்து, விளையாட்டுப் பிரிவின் கீழ் விண்ணப்பித்தவர்களுக்கான சிறப்பு தரவரிசைப் பட்டியல் ஜூன் 17-ம் தேதி வெளியிடப்படுகிறது. அவர்களுக்கான கவுன்சலிங் ஜூன் 23, 24-ம் தேதிகளிலும், மாற்றுத்திறனாளிகளுக்கு 25-ம் தேதியும் நடைபெறும். பொதுவான கவுன்சலிங் (அகாடமிக்) ஜூன் 27-ம் தேதி தொடங்கி ஜூலை 28-ம் தேதி வரை நடைபெறும் என்று தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலாளர் பேராசிரியர் வி.ரைமன்ட் உத்தரியராஜ் தெரிவித்துள்ளார்.
Tags :
tnschool news ,
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

சிறுபான்மையின மாணவர்கள், பள்ளி படிப்பு, கல்வி உதவி தொகை பெறுவதற்கான விண்ணப்பங்களை, இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

சிறுபான்மையின மாணவர்கள், பள்ளி படிப்பு, கல்வி உதவி தொகை பெறுவதற்கான விண்ணப்பங்களை, இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என, மாவட்ட ஆட்சியர் சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் அரசு உதவி பெறும் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளிக ளில், 1 முதல் 10-ம் வகுப்பு படிக் கும் கிறிஸ்தவர், இஸ்லாமியர், புத்த மதத்தினர், சீக்கியர் மற்றும் பார்சி வகுப்பை சேர்ந்த சிறுபான்மை இன, மாணவ, மாணவியர்களுக்கு, 2014-15 ம் ஆண்டிற்கான பள்ளி படிப்பு கல்வி உதவி தொகை பெற, இணையதளத்தில் விண்ணப்பங் கள் அளிக்கப்படுகின்றன உதவி தொகை பெறவிரும்பும் மாண வர்கள், ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்துக்கு மிகாமலும் பள்ளி இறுதி தேர்வில் 50 விழுக் காடு மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். மேலும், கல்வி உதவி தொகைக் கான விண்ணப்பங்களை www.bcmbcmw.tn.gov.in என்ற இணையதள முகவரியிலி ருந்து பதிவிறக்கம் செய்துகொள்ள லாம். பூர்த்தி செய்யப்பப்ட விண் ணப்பங்களை, ஆகஸ்ட் மாதத்திற் குள் மாவட்ட சிறுபான்மையின நல அலுவலரிடம் அளிக்க வேண்டும் என, மாவட்ட ஆட்சியர் சனிக்கிழமை வெளி யிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags :
tnschool news ,
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான தர வரிசை பட்டியல் சென்னை கீழ் பாக்கம் மருத்துவக் கல்வி இயக்குநர் (டிஎம்இ) அலுவல கத்தில் சனிக்கிழமை வெளியிடப் பட்டது. 132 மாணவ, மாணவிகள் 200-க்கு 200 கட்ஆஃப் எடுத்துள்ளனர். கவுன்சலிங் ஜூன் 17-ம் தேதி தொடக்கம்

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான தர வரிசை பட்டியல் சென்னை கீழ் பாக்கம் மருத்துவக் கல்வி இயக்குநர் (டிஎம்இ) அலுவல கத்தில் சனிக்கிழமை வெளியிடப் பட்டது. 132 மாணவ, மாணவிகள் 200-க்கு 200 கட்ஆஃப் எடுத்துள்ளனர்.

தமிழகத்தில் உள்ள 19 அரசு மருத்துவக் கல்லூரிகளில் மொத் தம் 2,555 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன. இவற்றில் 15 சதவீதம் (383 இடங்கள்) அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு போக, எஞ்சியுள்ள 85 சதவீதம் (2,172 இடங்கள்) மாநில அரசுக்கு உள்ளது. சென்னை தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரியில் 100 பிடிஎஸ் இடங்கள் உள்ளன. இவற்றில் 15 இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு போக, எஞ்சியுள்ள 85 இடங்கள் மாநில அரசுக்கு உள்ளது.

இதேபோல 12 தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 993 எம்பிபிஎஸ் இடங்கள், 18 தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளில் இருந்து சுமார் 900 இடங்கள் மாநில அரசுக்கு ஒதுக்கப்படுகிறது.

2014-15ம் கல்வி ஆண்டுக்கான எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் கடந்த மாதம் 14-ம் தேதி தொடங்கி 30-ம் தேதி வரை நடந்தது. மொத்தம் 30,380 விண்ணப்பங்கள் விற்பனை யாயின. பூர்த்தி செய்யப்பட்ட 28,053 விண்ணப்பங்கள் சமர்ப் பிக்கப்பட்டன. இவற்றில் 10,105 மாணவர்கள், 17,434 மாணவிகள் என மொத்தம் 27,539 விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.

சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாரிசுகள் பிரிவில் யாரும் விண்ணப்பிக்கவில்லை. மாற்றுத் திறனாளிகள் (3 சதவீதம் ஒதுக்கீடு) 79 பேரும், விளையாட்டு வீரர்கள் (3 இடங்கள்) 380 பேரும், ராணுவ வீரர்களின் பிள்ளைகள் (எம்பிபிஎஸ் 2 இடம், பிடிஎஸ் 1 இடம்) 454 பேரும் விண்ணப்பித்தனர்.

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பு மாணவர் சேர்க்கை கவுன்சலிங் குக்கு மாணவ, மாணவிகளை வரிசைப்படி அழைப்பதற்கு வசதியாக சுழற்சி முறையில் ரேண்டம் எண் கடந்த 9-ம் தேதி வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து தரவரிசை பட்டியல் சென்னை கீழ்பாக்கம் மருத்துவக் கல்வி இயக்குநர் (டிஎம்இ) அலுவலகத்தில் சனிக்கிழமை வெளியிடப்பட்டது. தரவரிசை பட்டியலை சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வெளியிட்டார்.
இதுதொடர்பாக நிருபர்களிடம் மருத்துவக் கல்வி இயக்குநர் கீதாலட்சுமி, மாணவர் தேர்வுக் குழு செயலாளர் சுகுமார் கூறிய தாவது:

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புக் கான தரவரிசை பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதில் 132 மாணவ, மாணவிகள் 200-க்கு 200 கட்ஆஃப் எடுத்துள்ளனர். இதன் விவரம் www.tnhealth.org மற்றும் www.tn.gov.in இணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ளது.

சிறப்பு பிரிவினருக்கான கவுன்சலிங் கீழ்பாக்கம் மருத்துவக் கல்லூரி வளாக அரங்கத்தில் 17-ம் தேதி தொடங்குகிறது. பொது பிரிவினருக்கான கவுன்சலிங் 18-ம் தேதி தொடங்குகிறது. தரவரிசை பட்டியலில் முதல் 10 இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு கல்லூரியில் சேர்க்கைக்கான ஆணையை சுகாதாரத் துறை அமைச்சர் அன்றைய தினம் வழங்குவார். முதல்கட்ட கவுன்சலிங் 22-ம் தேதி வரை 5 நாட்கள் நடைபெறும்.

கவுன்சலிங் முதல் நாளில் 600 மாணவ, மாணவிகள் அழைக்கப் படுவார்கள். அதற்கு அடுத்த நாட்களில் நாள் ஒன்றுக்கு 900 பேர் அழைக்கப்பட உள்ள னர். கவுன்சலிங்கில் கலந்துகொள் வதற்கான அழைப்புக் கடிதத்தை மாணவ, மாணவிகளுக்கு தபால் மூலம் அனுப்பும் பணி தொடங்கி விட்டது. அவர்களது செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தியும் (எஸ்எம்எஸ்) அனுப்பப்படும். கவுன்சலிங்கில் பங்கேற்க உள்ள மாணவர்களின் விவரம் இணைய தளத்தில் வெளியிடப்படும். அழைப்புக் கடிதம் கிடைக்காத வர்கள் எஸ்எம்எஸ் அல்லது இணையதளத்தை பார்த்து தங்க ளுக்கான நாளில் நேரடியாக கவுன்சலிங்கில் கலந்துகொள் ளலாம்.

கவுன்சலிங்கில் பங்கேற் பவர்கள் பரிசீலனை கட்டணமாக ரூ.500 கட்ட வேண்டும். கவுன்சலிங் குக்கு ஒரு மணி நேரம் முன்னதாக வந்துவிட வேண்டும். தினமும் கவுன்சலிங் முடிந்த பிறகு, அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் காலி இடங்கள் குறித்த விவரங் கள் இணையதளத்தில் வெளியிடப் படும்.
வழக்கமாக மருத்துவக் கல்லூரிகளில் வகுப்புகள் ஆகஸ்ட்டில் தொடங்கும். இந்த ஆண்டு செப்டம்பர் 1-ம் தேதி மருத்துவக் கல்லூரி வகுப்புகள் தொடங்க உள்ளன.

தரவரிசை பட்டியலில் முதல் 10 இடங்களை பிடித்த மாணவ, மாணவிகள் விவரம்:
கே.சுந்தர் நடேஷ் (கோபாலபுரம், சென்னை), எஸ்.அபிஷேக் (ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி), வி.எஸ்.விஜயராம் (தண்டல், ஈரோடு), எம்.மிதுன் (போதுப்பட்டி, நாமக்கல்), ஈ.ஸ்ருதி (போதுப்பட்டி நாமக்கல்), கே.நிவேதா (போதுப்பட்டி நாமக்கல்), கே.ஆர்.மைதிலி (அந்தியூர், ஈரோடு), ஈ.கரோலின் திவ்யா (போதுப்பட்டி, நாமக்கல்), வி.கவுதம் (போதுப்பட்டி, நாமக்கல்), எம்.மைவிழி ஸ்ருதி (ராசிபுரம், நாமக்கல்). 
Tags :
tnschool news ,
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

பிளஸ் 2 மறு மதிப்பீடு மற்றும் மறுகூட்டல் முடிவுகள் இணையதளத்தில், 15ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை), காலை, 10:00 மணிக்கு வெளியிடப்படும் என, தேர்வுத்துறை இயக்குனர், தேவராஜன் அறிவித்துள்ளார்.பிளஸ் 2 மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டில், 3,252 மாணவர்களின் மதிப்பெண்ணில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.மதிப்பெண் மாற்றம் உள்ள மாணவர்கள், 16ம் தேதி காலை, 11:00 மணிக்கு, தங்கள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில், பழைய மதிப்பெண் சான்றிதழை ஒப்படைத்து, புதிய மதிப்பெண் சான்றிதழை பெற்றுக் கொள்ளலாம்.

'பிளஸ் 2 மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டில், 3,252 மாணவர்களின் மதிப்பெண்ணில் மாற்றம் ஏற்பட்டுள்ளது,'' என, தேர்வுத்துறை இயக்குனர், தேவராஜன் அறிவித்துள்ளார்.பிளஸ் 2 மறு மதிப்பீடு மற்றும் மறுகூட்டல் முடிவு, http://student.hse14rtrv.in/ என்ற இணையதளத்தில், 15ம் தேதி (இன்று), காலை, 10:00 மணிக்கு வெளியிடப்படும். மதிப்பெண் மாற்றம் உள்ள மாணவர்களின் பதிவு எண்கள் பட்டியல், இணையதளத்தில் வெளியிடப்படும். பட்டியலில் இடம்பெறாத பதிவு எண்களுக்கான விடைத்தாளில், மதிப்பெண் மாற்றம் எதுவும் இல்லை என, தெரிவிக்கப்படுகிறது. மதிப்பெண் மாற்றம் உள்ள மாணவர்கள், நாளை, 16ம் தேதி காலை, 11:00 மணிக்கு, தங்கள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில், பழைய மதிப்பெண் சான்றிதழை ஒப்படைத்து, புதிய மதிப்பெண் சான்றிதழை பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு, தேவராஜன் தெரிவித்து உள்ளார். மறுகூட்டலுக்கு, 4,726 பேர் விண்ணப்பித்ததில், 456 பேருக்கு, மதிப்பெண்ணில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. 4,467 பேர், மறுகூட்டலுக்கு விண்ணப்பித்ததில், 2,796 பேரின் மதிப்பெண்ணில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. மொத்தத்தில், 3,252 மாணவர்களின் மதிப்பெண்ணில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
Tags :
tnschool news ,
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Saturday, 14 June 2014

TAMIL NADU EDUCATION DEPARTMENT | SSLC EXAM TIME TABLE | PLUS 2 EXAM TIME TABLE | UNIVERSITY TIME TABLE

  1. SSLC JUNE/JULY 2014 EXAM TIME TABLE

  2. PLUS 2 JUNE/JULY 2014 EXAM TIME TABLE

  3. D.Ele.Ed/DTED JUNE/JULY 2014 EXAM TIME TABLE



Tags :
trb news, tet news, tet news, tnpsc news, tnschools,
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Special Tamil Nadu Teacher Eligibility Test 2014 for Persons with Disability (PWD) Candidates - Click Here for Paper II Examination Result

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

தேனி, தேவதானப்பட்டி அருகே ஜி.கல்லுபட்டியை சேர்ந்த ஜெயசீலன், தமிழ் வழியில் சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி, தேசிய அளவில் 45 வது இடம் பெற்று ஐ.ஏ.எஸ்., தேர்ச்சி பெற்றுள்ளார்

தமிழ் வழியில் சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி, தேசிய அளவில் 45 வது இடம் பெற்று ஐ.ஏ.எஸ்., தேர்ச்சி பெற்றுள்ளார் தேனி, தேவதானப்பட்டி அருகே ஜி.கல்லுபட்டியை சேர்ந்த ஜெயசீலன், 26. சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகளை, மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.,) நேற்று வெளியிட்டது. இதில், தேவதானப்பட்டி ஜி.கல்லுபட்டியை சேர்ந்த ஜெயசீலன், தேசிய அளவில் 45 வது 'ரேங்க்' பெற்றார்; தமிழக அளவில் முதல் இடத்தை தட்டிச் சென்றார். இவர் தமிழ் வழியில் சிவில் சர்வீஸ் தேர்வு எழுதியவர். இவரது தந்தை பழனிச்சாமி, கெங்குவார்பட்டி தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி செயலாளர்; தாயார் பாண்டியம்மாள்; இரண்டு சகோதரர்கள் உள்ளனர். ஜெயசீலன் கூறியதாவது: பத்தாம் வகுப்பு வரை, ஊரில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியிலும், மேல்நிலைக் கல்வியை ராயப்பன்பட்டி புனித அலோசியஸ் பள்ளியிலும் படித்தேன். மதுரை விவசாயக் கல்லூரியில் இளங்கலை விவசாயம் படித்தேன். தமிழ் மேல் இருந்த ஆர்வத்தால், தொலைநிலைக் கல்வியில் முதுகலை தமிழ் படித்தேன். அதன்பின் தமிழில் ஆராய்ச்சி படிப்புக்கு (பிஎச்.டி.,) தயார் செய்து வருகிறேன். ஐ.ஏ.எஸ்., தேர்வில் சாதனை படைக்க வேண்டும் என்ற கனவுடன் தயார் செய்தேன். கடந்த 2012ல் தமிழ் வழியில் தேர்வு எழுதி 600 வது 'ரேங்க்' பெற்றேன். இதில் ஐ.ஆர்.எஸ்., (இந்தியன் ரெவின்யூ சர்வீஸ்) கிடைத்து நாக்பூரில் பயிற்சியில் உள்ளேன். மூன்றாவது முறையாக தேர்வு எழுதி, தற்போது 45 வது 'ரேங்க்' பெற்றது மகிழ்ச்சி. தமிழ் இலக்கியப் பாடம் எடுத்து, தமிழ் வழியில் எழுதி வெற்றி பெற்றது மறக்க முடியாதது. டாக்டர் அனந்தகுமார் ஐ.ஏ.எஸ்., கால்நடைத்துறை விஞ்ஞானி சங்கர் சரவணன், டில்லியில் உள்ள பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்., (1986ல் தமிழ் வழியில் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்) ஆகியோர் எனது வெற்றிக்கு உறுதுணையாக இருந்தனர். மக்கள் எளிதில் என்னை அணுகலாம். பள்ளிகளில் கல்வி, விவசாயம், சுகாதாரம் ஆகியவற்றை மேம்படுத்துவதற்காக, நான் பாடுபடுவேன், என்றார்.
Tags :
tnschool news ,
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

அரசு ஊழியர்கள், பணியிலிருந்து ஓய்வுபெறும் நாளிலேயே, ஓய்வூதியம் வழங்குவது குறித்த அரசாணையை, ஊழியர்கள் பெறும் வகையில், புதிய திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும்' என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.

அரசு ஊழியர்கள், பணியிலிருந்து ஓய்வுபெறும் நாளிலேயே, ஓய்வூதியம் வழங்குவது குறித்த அரசாணையை, ஊழியர்கள் பெறும் வகையில், புதிய திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும்' என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.இதுகுறித்து, மத்திய பணியாளர் நலன் மற்றும் குறைதீர் துறை இணை அமைச்சர், ஜிதேந்திரா சிங் கூறியதாவது:அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியத்தில் தாமதம் ஏற்படாமல் இருக்க, அவர்கள் பணியிலிருந்து ஓய்வு பெறும் நாளில், 'பென்ஷன் பேமென்ட் ஆர்டர்' எனப்படும், ஓய்வூதியம் குறித்த அரசாணையை, ஊழியர்கள் கையில் வழங்க அரசு திட்டமிட்டுள்ளது. மேலும், ஓய்வூதியர்களுக்கு வழங்கப்படும் பலன்களை தாமதம் இல்லாமல் வழங்க, இணையதள முறையில், ஓய்வூதியம் வழங்குதல் மற்றும் அதை சரிபார்க்கும், 'பவிஷ்யா' திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது; இதன் மூலம், லட்சக்கணக்கான அரசு ஊழியர்கள் பயன் அடைவர்.மாநில அரசு ஊழியர்களும் பயன்பெறும் வகையில், இத்திட்டத்தை அனைத்து மாநிலங்களிலும் விரிவுபடுத்துவது குறித்து, மாநில அரசு அதிகாரிகளுடன் விரைவில் ஆலோசனை நடத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
Tags :
tnschool news ,
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

ஏழாவது ஊதியக்குழு அமைக்கும் நடவடிக்கைகளில், மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.

ஏழாவது ஊதியக்குழு அமைக்கும் நடவடிக்கைகளில், மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. வரும் 2016ல், மத்திய அரசு ஊழியர்களுக்கு, புதிய சம்பள விகிதத்தை நிர்ணயிக்க, ஏழாவது ஊதியக்குழு அறிவிக்கப்பட்டது. இதன் தலைவராக, நீதிபதி அசோக்குமார் மாத்துார், உறுப்பினர்களாக, விவேக்ரே, ரத்தின்ராய், செயலராக, மீனாஅகர்வால் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். லோக்சபா தேர்தல் காரணமாக, இந்தக் குழுவின் செயல்பாடுகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.தேர்தல் நடைமுறைகள் முடிந்த நிலையில், புதிய அரசு அமைந்தபின், இக்குழு, அலுவல்களை தீவிரப்படுத்தி வருகிறது. முதற்கட்டமாக, அலுவலர்கள் நியமிக்கும் பணி நடக்கிறது. இந்த அலுவலர் குழுவில், சார்பு செயலர், தனிச்செயலர் உட்பட, 24 பேர் நியமிக்கப்பட உள்ளனர். இந்த அலுவலர்களை, பிற துறைகளில் இருந்து நியமிக்க, மத்திய பணியாளர் துறையிடம் விவரம் கேட்டுள்ளனர். இந்த நியமனத்திற்குப் பின், 18 மாதங்கள், ஏழாவது ஊதியக்குழு செயல்படும். அடுத்த ஆண்டு, ஆகஸ்ட் வரை, பல்வேறு துறைகளின், தற்போதைய சம்பள விகிதங்களை ஆய்வு செய்து, புதிய விகிதத்தை நிர்ணயிக்கும்.
Tags :
tnschool news ,
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

பொறியியல் கல்லூரி கலந்தாய்வுக்கு வரும் மாணவர்களுக்கு 50% பேருந்து கட்டணச் சலுகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பொறியியல் கல்லூரி கலந்தாய்வுக்கு வரும் மாணவர்களுக்கு 50% பேருந்து கட்டணச் சலுகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தொழில்நுட்பக் கல்வி ஆணையர் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: 2014-15ம் கல்வியாண்டில் முதலாண்டு பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு சென்னை அண்ணா பல்லைக்கழக கலந்தாய்வில் கலந்துகொள்ள வெளியூரிலிருந்து (சென்னை மாவட்டம் நீங்கலாக) சென்னை வரும் மாணவர் மற்றும் அவருடன் உதவிக்காக வரும் ஒரு நபருக்கு (1+1) அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் 50% இருவழிப் பயணக் கட்டணச் சலுகை வழங்கப்படும். இந்த சலுகையைப் பெற, கலந்தாய்வுக்கான அழைப்புக் கடிதத்தின் நகலை (ஜெராக்ஸ்) சம்பந்தப்பட்ட அரசு போக்குவரத்துக் கழகங்களின் அலுவலர்களிடம் மாணவ, மாணவிகள் சமர்ப்பிக்க வேண்டும். அதைப் பெற்றுக்கொண்ட அலுவலர்கள், ‘50% கட்டணச் சலுகை வழங்கப்பட்டது’ என்று அழைப்புக் கடிதத்தின் முன் பக்கத்தில் சான்றளித்த பின்பு தக்க பயணச் சீட்டுகளை (1+1) மாணவர்களுக்கு வழங்குவர். கலந்தாய்வு முடித்து திரும்பிச் செல்வதற்கும் இதே நடைமுறை பொருந்தும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Tags :
tnschool news ,
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

தட்டச்சர் பணிக்கான முதல் கட்ட கவுன்சலிங் ஜூன் 19 முதல் ஜூலை 5-ம் தேதி வரை நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

தட்டச்சர் பணிக்கான முதல் கட்ட கவுன்சலிங் ஜூன் 19 முதல் ஜூலை 5-ம் தேதி வரை நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி செயலாளர் மா.விஜயகுமார் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது: குரூப்-4-ல் அடங்கிய இளநிலை உதவியாளர், நில அளவர், வரைவாளர், தட்டச்சர் பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு கடந்த 25.8.2013 அன்று நடந்தது. தட்டச்சர் பதவிக்கான முதல்கட்ட கவுன்சலிங் ஜூன் 19 முதல் ஜூலை 5-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதுபற்றிய விவரம் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது. கவுன்சலிங்கிற்கு வரும்போது, அசல் சான்றிதழ்கள் மற்றும் சான்றொப்பம் பெறப்பட்ட சான்றிதழ் நகல்களை தவறாமல் கொண்டுவர வேண்டும். மேலும், ஆன்லைனில் விண்ணப் பித்தபோது, 10-ம் வகுப்பு கல்வித்தகுதியை தமிழ் வழியில் படித்தது பற்றி குறிப்பிட்டவர்கள் மட்டும் அதற்கான சான்றிதழை தாங்கள் படித்த பள்ளியின் தலைமை ஆசிரியரிடமிருந்து வாங்கிவர வேண்டும். காலியிடங்கள் பட்டியல் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படும் விண்ணப்ப தாரர்கள் அதில் தகுதிபெறும் பட்சத்தில் மறுநாள் நடக்கும் கவுன்சலிங்கிற்கு அனுமதிக் கப்படுவார்கள். ஒவ்வொரு நாளும் கவுன்சலிங் முடிவடைந்த பிறகு காலியிடங்கள் குறித்த தகவலை டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். விண்ணப்பதாரர்கள் காலி யிடங்களை பொருத்துதான் சான்றிதழ் சரிபார்ப்புக்கும், கவுன்சலிங்கிற்கும் அனுமதிக் கப்படுவர். எனவே, அழைக்கப் படும் அனைவருக்கும் பணி நியமனம் வழங்கப்படும் என்ற உத்தரவாதம் கிடையாது. கவுன்சலிங்கிற்கு வரத்தவறினால் மறுவாய்ப்பு அளிக்கப்பட மாட்டாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார். முதல்கட்ட கவுன்சலிங் ஜூன் 19 முதல் ஜூலை 5-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதுபற்றிய விவரம் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
Tags :
tnschool news ,
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

ஆசிரியர் பயிற்சிப் படிப்புகளுக்கு விரைவில் புதிய பாடத் திட்டம் கொண்டுவரப்படும் என்று தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் தலைவர் சந்தோஷ் பாண்டா தெரிவித்தார்.

ஆசிரியர் பயிற்சிப் படிப்புகளுக்கு விரைவில் புதிய பாடத் திட்டம் கொண்டுவரப்படும் என்று தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் தலைவர் சந்தோஷ் பாண்டா தெரிவித்தார். தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் 7-வது பட்டமளிப்பு விழா சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பல்கலைக்கழக அளவில் ரேங்க் பெற்ற 227 பேருக்கு உயர்கல்வித்துறை அமைச்சர் பி.பழனியப்பன் பதக்கங்களையும் பாராட்டுச் சான்றிதழ்களையும் வழங்கினார். விழாவில், தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் (என்சிடிஇ)தலை வர் சந்தோஷ் பாண்டா பட்ட மளிப்புவிழா உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:- தற்போது நாடு முழுவதும் 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் செயல்படுகின்றன. இவற்றில் ஏறத்தாழ 13 லட்சம் மாணவ-மாணவிகள் ஆசிரியர் பயிற்சி படிப்பு படிக்கிறார்கள். மொத்தமுள்ள ஆசிரியர் பயிற்சி கல்வி நிறுவனங்களில் 90 சதவீதம் தனியாரால் நடத்தப்படுகின்றன. எஞ்சிய 10 சதவீதம் மட்டுமே அரசு கல்வி நிறுவனங்கள். மத்திய அரசின் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் அமலுக்கு வந்துள்ள நிலையில், வரும் காலத்தில் பள்ளிக்கல்வி முறையில் மிகப்பெரிய அளவில் வளர்ச்சி ஏற்படும். இதைக் கருத்தில் கொண்டு ஆசிரியர் பயிற்சி படிப்பு களுக்கு விரைவில் புதிய பாடத் திட்டம் கொண்டுவரப்படும். அதில், வெறும் மதிப்பெண்ணுக்கு மட்டு மின்றி இதர செயல்பாடுகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும். இவ்வாறு சந்தோஷ் பாண்டா கூறினார். புதிய படிப்புகள் அறிமுகம் விழாவில் சான்றிதழ், பட்டயம், இளநிலை, முதுகலை படிப்புகளில் 21,614 பேருக்கு பட்டம் வழங்கப் பட்டன. முன்னதாக, துணை வேந்தர் பேராசிரியை சந்திரகாந்தா ஜெயபாலன் வரவேற்று ஆண்டறிக்கை சமர்ப்பித்தார். அப்போது, “வரும் கல்வி ஆண்டில் புதிதாக 8 முதுகலை படிப்புகளும், ஒரு இளநிலை பட்டப் படிப்பும், 2 முதுகலை பட்ட யப் படிப்பும், 21 சான்றிதழ் படிப்பு களும் தொடங்கப்படும்” என்று தெரி வித்தார். நிறைவில், பல்கலைக் கழகப் பதிவாளர் (பொறுப்பு) கே முருகன் நன்றி கூறினார்.
Tags :
tnschool news ,
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

கிராம நிர்வாக அலுவலர் தேர்வு (வி.ஏ.ஓ.) தமிழகம் முழுவதும் இன்று (சனிக்கிழமை) நடக்கிறது.

கிராம நிர்வாக அலுவலர் தேர்வு (வி.ஏ.ஓ.) தமிழகம் முழுவதும் இன்று (சனிக்கிழமை) நடக்கிறது. இதுகுறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் வெ.ஷோபனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர் பதவிக்கான தேர்வு சனிக்கிழமை காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை நடைபெறவுள்ளது. தமிழகம் முழுவதும் 243 தேர்வு மையங்களில் 3,628 தேர்வுக் கூடங்களில் 10 லட்சத்து 8 ஆயிரத்து 662 பேர் தேர்வெழுத உள்ளனர். அனைத்துத் தேர்வுக் கூடங்களும் கேமரா மூலம் கண்காணிக்கப்படும். காலை 10.30 மணி வரை மட்டுமே தேர்வர்கள் தேர்வுக் கூடத்துக்குள் அனுமதிக்கப்படுவார்கள். ஒவ்வொரு தேர்வுக் கூடத்திலும் ஒரு ஆய்வு அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் அனைத்து தேர்வு நடவடிக்கைகளையும் கண்காணித்து தேர்வுக் கட்டுப்பாடு அலுவலருக்கு அறிக்கை அனுப்புவார். இதுதவிர அனைத்து தேர்வு மையங்களையும் ஆய்வு செய்ய மாவட்ட வருவாய் அலுவலர், துணை ஆட்சியர், வருவாய் கோட்டாட்சியர் மற்றும் அவருக்கு இணையான பதவியில் உள்ள அலுவலர்களை கொண்டு பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. கூர்வுணர் தேர்வுக் கூடங்கள் (Sensitive Centres) அனைத்தும் இணையவழி நேரலை மூலமாக தேர்வாணைய அலுவலகத்திலிருந்து கண்காணிக்கப்படும். தேர்வுக்கூடம் அமைந்துள்ள இடம் குறித்த சந்தேகம் ஏதும் இருப்பின் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டில் குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். தேர்வு மைய / தேர்வுக்கூட மாற்றங்கள் மற்றும் தேர்வு பாட மாற்றங்கள் கோரும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படமாட்டாது. தேர் வெழுதச் செல்வோர் செல்போன், கால்குலேட்டர், நினைவகக் குறிப்பு, புத்தகம், மின்னணு சாதனங்கள், பதிவு செய்யும் உபகரணங்கள் உள்ளிட்டவை எடுத்துச் செல்லக் கூடாது. இவற்றுக்கு அனுமதி இல்லை. இவ்வாறு தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் ஷோபனா தெரிவித்துள்ளார்.
Tags :
tnschool news ,
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Friday, 13 June 2014

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்-பி.டி.எஸ். படிப்பில் சேர விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் சனிக்கிழமை (ஜூன் 14) காலை வெளியிடப்பட்டது.

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்-பி.டி.எஸ். படிப்பில் சேர விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் சனிக்கிழமை (ஜூன் 14) காலை வெளியிடப்பட்டது. அரசு மருத்துவக் கல்லூரிகளில் தமிழக ஒதுக்கீட்டுக்கு உரிய 2,172 எம்.பி.பி.எஸ். இடங்கள், சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்கள் ஆகியவற்றில் சேர மொத்தம் 27,907 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான சம வாய்ப்பு எண் (ரேண்டம் எண்) கடந்த ஜூன் 9-ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்வி இயக்குநர் அலுவலகத்தில் சனிக்கிழமை (ஜூன் 14) தரவரிசைப் பட்டியலை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் வெளியிடுகிறார். சுகாதாரத் துறையின் இணையதளம் www.tnhealth.org-ல் தரவரிசைப் பட்டியல் சனிக்கிழமை பிற்பகல் வெளியிடப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி அரங்கத்தில் சிறப்புப் பிரிவினருக்கு வரும் 17-ஆம் தேதி கலந்தாய்வு நடைபெறுகிறது. பொதுப் பிரிவினருக்கு வரும் 18-ஆம் தேதி முதல் கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது. மாற்றுத் திறனாளிகள் கவனிக்க...எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர சிறப்புப் பிரிவின் கீழ் விண்ணப்பித்துள்ள மாற்றுத் திறனுள்ள மாணவர்களுக்கு வரும் 17-ஆம் தேதி கலந்தாய்வு நடைபெறுகிறது. இந்தப் பிரிவு மாணவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை நடைபெறும். அப்போது தங்களது உடல் உறுப்பு குறைபாட்டுடன் கூடிய முழு அளவு படத்தை மாணவர்கள் சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான தர வரிசைப் பட்டியல், சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்வி இயக்குநர் (டிஎம்இ) அலுவலகத் தில் சனிக்கிழமை (இன்று) காலை 11 மணிக்கு வெளியிடப்படு கிறது. தமிழகத்தில் உள்ள 19 அரசு மருத்துவக் கல்லூரிகளும், சென்னையில் ஒரு அரசு பல் மருத்துவக் கல்லூரியும் உள்ளன. இதே போல 12 தனியார் மருத்துவக் கல்லூரிகளும், தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளும் உள்ளன. இந்நிலையில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பதற்காக 28,053 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதில் 146 பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப் பட்டன. மீதமுள்ள 27,907 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப் பட்டன. எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புக்கு ரேண்டம் எண் கடந்த 9-ம் தேதி வெளியிடப்பட்டது. பிளஸ்-2 மாணவ, மாணவிகள் மறுக்கூட்டல் மற்றும் மறுமதிப்பீடு முடிவுகள் வருவதில் கால தாமதம் ஏற்பட்டதால் கடந்த 12-ம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படவில்லை. தரவரிசை பட்டியலை சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், இன்று காலை 11 மணிக்கு வெளியிடுகிறார். இதனைத் தொடர்ந்து சிறப்பு பிரிவினருக்கான கவுன்சலிங் வரும் 17-ம் தேதி தொடங்குகிறது. பொது பிரிவினருக்கான கவுன்சலிங் 18-ம் தேதி தொடங்க உள்ளது. ஆகஸ்ட் 1-ம் தேதி வகுப்புகள் தொடங்கப்படும்.
Tags :
tnschool news ,
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

DEO EXAM SURVEY 2014. PL REGISTER UR DATA

DEO EXAM SURVEY 2014 | மாவட்ட கல்வி அலுவலர் (D.E.O.) பதவியில் 11 காலியிடங்களை நிரப்புவதற்கான முதல்நிலைத் தேர்வு 08.06.2014 ஞாயிற்றுக்கிழமை நடந்தது. அதன் தற்காலிக விடைகளை TNPSC வெளியிட்டுள்ளது. இதில் முதன்மைத் தேர்வுக்கு தேர்ந்தெடுக்க போகும் நபர்கள் யார்? யார்? உங்கள் விவரங்களை பதிவு செய்யுங்கள் ..விவரங்களை பாருங்கள்...
DEO EXAM SURVEY 2014. PL REGISTER UR DATA
TENTATIVE KEY ||  ENTRY  ||  VIEW

Tags :
DEO EXAM SURVEY 2014,
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

பிளஸ்-2 விடைத்தாள் 13-ந்தேதிக்குள் மறு மதிப்பீடு செய்து மாற்றம் வரும் மதிப்பெண் பட்டியல், மருத்துவம் மற்றும் என்ஜினீயரிங் கலந்தாய்வுக்கு அனுப்பப்பட உள்ளது. இதையொட்டி மருத்துவ படிப்பில் சேர்வதற்கான ரேங்க் பட்டியல் வெளியீடு 12-ந்தேதியில் இருந்து 14-ந்தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

பிளஸ்-2 விடைத்தாள் 13-ந்தேதிக்குள் மறு மதிப்பீடு செய்து மாற்றம் வரும் மதிப்பெண் பட்டியல், மருத்துவம் மற்றும் என்ஜினீயரிங் கலந்தாய்வுக்கு அனுப்பப்பட உள்ளது. இதையொட்டி மருத்துவ படிப்பில் சேர்வதற்கான ரேங்க் பட்டியல் வெளியீடு 12-ந்தேதியில் இருந்து 14-ந்தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.விடைத்தாள் நகல்தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் கடந்த மார்ச் மாதம் பிளஸ்-2 தேர்வு நடைபெற்று அதன் முடிவு கடந்த மே மாதம் 9-ந்தேதி வெளியிடப்பட்டது. அதில் மதிப்பெண் குறைவாக உள்ளது என்று நினைப்பவர்கள் விடைத்தாள் நகல் கேட்டு விண்ணப்பித்தனர். ஜெராக்ஸ் நகல் கடந்த 4-ந்தேதி அரசு தேர்வு இயக்குனரக இணையதளத்தில் வெளியிடப்பட்டது. ஆனால் பல மாணவ-மாணவிகளுக்கு அதிர்ச்சி தரும் வகையில் அவர்களின் விடைத்தாளுக்கு பதில் வேறு மாணவரின் விடைத்தாள் வந்தது.சென்னை மதுரவாயலைச் சேர்ந்த வி.எம்.கே.ஆயிஷா ரேஷ்மா என்ற மாணவியின் தந்தை காதர் மீராகனி கூறியதாவது:-எனது மகள் ஆயிஷா ரேஷ்மா மருத்துவ கட் ஆப் மார்க் தற்போது 191.25 எடுத்துள்ளார். அவர் இயற்பியல் தேர்வில் 178 மதிப்பெண் பெற்றதாக சான்றிதழில் போடப்பட்டுள்ளது. ஆனால் விடைத்தாள் நகலை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து பார்த்ததில் கூட்டலில் 20 மதிப்பெண் விடுபட்டுள்ளது. அதாவது 178 மதிப்பெண்ணுக்கு பதிலாக 198 மதிப்பெண் வருகிறது. அப்படியானால் மருத்துவ கட்ஆப் மதிப்பெண் 5 உயர்ந்து 196.25 வருகிறது. நாங்கள் பிற்பட்டோர் பிரிவைச்சேர்ந்தது மட்டுமல்லாமல் முஸ்லிம் என்பதால் கட்டாயம் மருத்துப்படிப்பில் சேர இடம் கிடைக்கும் என்று கருதுகிறேன். கடந்தவருடம் 196 மதிப்பெண்ணுக்கு முஸ்லிம் மாணவிக்கு மருத்துவ படிப்பிற்கு இடம் கிடைத்துள்ளது. ஆனால் மருத்துவ படிப்பிற்கான ரேங்க்பட்டியல் போடும் முன்பாக, மறு கூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டு மதிப்பெண் மருத்துவ கல்விக்கான தேர்வுக்குழுவுக்கு செல்லவேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்தார். முன்கூட்டியே தெரியப்படுத்த வேண்டும். 

திருச்சியைச் சேர்ந்த ஒரு பெற்றோர் கூறுகையில் ரேங்க் பட்டியல் போடும்போதே பிளஸ்-2 விடைத்தாள் மறு கூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டின் போது வரும் மாற்றம் உள்ள மதிப்பெண் சேர்க்கப்பட்டு, கலந்தாய்வு நடத்துவதற்கு 3 நாட்களுக்கு முன்பாகவாவது எந்த தேதியில் எத்தனை மணிக்கு கலந்தாய்வு என்று இணையதளத்தில் வெளியிட்டால்தான் கன்னியாகுமரி போன்ற வெளியூர்களில் இருந்து வரும் மாணவர்களுக்கு அவர்கள் புறப்பட்டு சென்னை வர சரியாக இருக்கும் என்றார். மறுமதிப்பீடு தொடங்கியதுஇது குறித்து அரசு தேர்வுத்துறை இயக்குனர் கு,தேவராஜன் கூறியதாவது:-பிளஸ்-2 விடைத்தாள் மறு மதிப்பீடு செய்யும் பணி திருச்சியில் தொடங்கியது. இந்த பணியில் 600 ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர். மறுமதிப்பீடு மற்றும் மறு கூட்டல் பணி எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவாக முடிக்க ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது. மதிப்பெண் மாற்றம் இல்லையென்றால் அது இணையதளத்தில் வெளியிடப்படும். மதிப்பெண் மாற்றம் உள்ளவர்களுக்கு அந்த மதிப்பெண் பட்டியல் மருத்துவம் மற்றும் என்ஜினீயரிங் கலந்தாய்வு நடத்தும் மையத்திற்கு அனுப்பப்படும்.இவ்வாறு கு.தேவராஜன் தெரிவித்தார்.14-ந்தேதி மருத்துவரேங்க் பட்டியல் மருத்துவப்படிப்பிற்கான ரேங்க் பட்டியல் 12-ந்தேதியில்இருந்து 14-ந்தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.13-ந்தேதிக்குள் பிளஸ்-2 விடைத்தாள் மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டை முடித்து மருத்துவ ரேங்க்பட்டியலில் சேர்க்க ஏற்பாடு நடக்கிறது. 16-ந்தேதிதான் என்ஜினீயரிங் ரேங்க் பட்டியல் வெளியிடப்படுகிறது.
Tags :
tnschool news ,
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

சிவில் சர்வீசஸ் தேர்வில் சைதை துரைசாமியின் மனிதநேய மையத்தில் படித்த 46 பேர் தேர்வு பெற்றுள்ளனர்.

சிவில் சர்வீசஸ் தேர்வில் சைதை துரைசாமியின் மனிதநேய மையத்தில் படித்த 46 பேர் தேர்வு பெற்றார்கள். பார்வையற்ற பெனோ என்ற மாணவியும் வெற்றி பெற்றார். மனிதநேய மையம்2013-ம் ஆண்டிற்கான சிவில் சர்வீசஸ் தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இதுவரை இல்லாத அளவு 1,122 பேர் இந்த தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர். இந்த தேர்வில் கடந்த 3 ஆண்டுகளாக பெண்களே அதிகளவில் தேர்வு பெற்று வந்தனர். ஆனால் இந்த ஆண்டு ஆண்கள் பெண்களை விட மிஞ்சி விட்டார்கள். ஆண்களே அதிக எண்ணிக்கையில் தேர்வு பெற்று இருக்கிறார்கள். தமிழ்நாட்டை பொறுத்தவரையில் சென்னை மாநகர மேயர் சைதை துரைசாமி தலைமையில் மல்லிகா துரைசாமி, வெற்றி துரைசாமி, வசுந்தரா வெற்றி ஆகியோரால் நடத்தப்படும் மனிதநேய பயிற்சி மையத்தின் சார்பில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற சிவில் சர்வீசஸ் தேர்வுகள் மட்டுமல்லாமல் மத்திய தேர்வு ஆணையம், தமிழ்நாடு தேர்வாணை குழு நடத்தும் பல்வேறு பணிகளுக்கான போட்டி தேர்வுகளில் கலந்து கொள்ள இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது.

46 பேர் வெற்றிகடந்த 7 ஆண்டுகளில் இந்த மையத்தில் படித்த 2,189 பேர் பல்வேறு தேர்வுகளில் வெற்றி பெற்று பணிகளில் உள்ளனர். அந்தவகையில், 2013-ம் ஆண்டு சிவில் சர்வீசஸ் தேர்வுக்கும் முதன்நிலை தேர்வு, மெயின் தேர்வுக்கும் இலவசமாக பல மாணவ-மாணவிகளுக்கு பயிற்சி அளித்த மனித நேய மையம் அந்த தேர்வுகளை கடந்து நேர்முகபோட்டிக்கான தேர்வில் கலந்து கொண்டவர்களுக்கு தீவிர பயிற்சி அளித்தது. பல நிபுணர்களை கொண்டு மாதிரி போட்டி தேர்வுகளை நடத்தி பயிற்சி அளித்தனர். மத்திய தேர்வாணையம் நேர்முக போட்டியில் ஒரு மாணவரிடம் என்ன? என்ன? வகையான கேள்விகளை கேட்பார்களோ, அது போன்ற கேள்விகளை கேட்டு எந்த வகையில் பதில் அளித்தால், வெற்றி பெற முடியுமோ? அது போன்ற பதில்களை கூறும் வகையிலான பயிற்சிகளை அளித்தனர். இந்த தீவிர பயிற்சியின் விளைவாக மனிதநேய மையத்தில் படித்த 29 ஆண்களும், 17 பெண்களும் என 46 பேர் சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர். பாராட்டுக்குரியதுஇதில் மனிதநேயத்தில் படித்த பார்வையற்ற மாணவி பெனோ வெற்றி பெற்றுள்ளது மிகவும் பாராட்டுக்குரியது. இது போல், மாற்றுத்திறனாளியான ஜெ.எஸ்.முகமது அஸ்ரப் வெற்றி பெற்றுள்ளார். சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெற்றுள்ள பார்வையற்ற மாணவி பெனோ பிறவியிலேயே பார்வையை இழந்தவர். சென்னை அண்ணாசாலையில் உள்ள லிட்டில் பிளவர் பள்ளியில் பள்ளி படிப்பை முடித்தார். அதனை தொடர்ந்து ஸ்டெல்லா மாரீஸ் கல்லூரியில் பி.ஏ. ஆங்கிலம் இலக்கியம் படித்தார். சிறு வயதிலேயே மற்றவர்களுக்கு முன் மாதிரியாக வாழ வேண்டும் என்ற எண்ணத்துடன் திகழ்ந்த அவர், வாழ்க்கையில் ஐ.ஏ.எஸ். ஆக வேண்டும், அதன்மூலம் சேவை செய்ய வேண்டும் என்ற உணர்வுடன் படித்து, தேர்வில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார், பெனோ. இவர்களுடன் மனிதநேயத்தில் படித்த 46 பேர் வெற்றி பெற்றுள்ளனர். வெற்றி பெற்றவர்களை மனிதநேய பயிற்சி மைய நிறுவனர் மேயர் சைதை சா.துரைசாமி பாராட்டினார்.வெற்றி பெற்றவர்கள் விவரம் வெற்றிச்செல்வி, திவ்யாரூத், டாக்டர் பிரம்ம வித்யா, என்.அபிநயா, அபி நந்தனா, அபூர்வா ராவ், கிருத்திகா, லட்சுமி பிரியா, முகம்மது சுஜிதா, பூங்குழலி, பிரியங்கா, எஸ்.சிமி, சி.சரண்யா, கே.சர்மிளா, எஸ். வந்தனாராஜ், பொன்.சுப்ரியா, சி.தாமோதரன், ஜி.தீபக், ஆர்.இளங்கோ, வி.பி.ஜெயசீலன், ஜி.ஜெய் அரவிந்த், ஜி.கண்ணன், ஆர்.ஆதித்யா, எம்.அம்பி, கே.பாலாஜி, பி.அருண், கே.அருண், பாபு அப்துல்காதீர், எஸ்.ஆர்.நெடுமாறன், ஜெ.முகமத்அஷ்ரப், எஸ்.நந்தகுமார், ஏ.பிரதீப், எம்.பிரதீப்குமார். கே.பிரசாத், எஸ்.ராஷிக்பரித், சாய்கிருஷ்ண பிரசாத், எஸ்.சங்கீத்குமார், என்.கார்த்திக், எஸ்.மனோஜ் பிரகாஷ், எம்.சி. சதீஷ்குமார், எம்.வாசுதேவன், பி.சித்தார்த், கே.சவுந்தரபாண்டியன், எஸ்.விஜய் ஆகியோர் மனிதநேயத்தில் படித்து தேர்வு பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மனிதநேயத்தில் மையத்தில் படித்து தேர்வான பார்வை இழந்த மாணவி பெனோ நிருபர்களிடம் கூறியதாவது:-சிவில் சர்வீசஸ் தேர்வில் நான் அடைந்த வெற்றிக்கு மனிதநேயம் மையத்தின் நிறுவனரான மேயர் சைதை துரைசாமி அளித்த ஊக்கமும், மனிதநேயம் அளித்த பயிற்சியும் தான் முதல் காரணம். புரபேஷனரி அதிகாரியாக தற்போது நான் திருவள்ளூரில் ஸ்டேட் வங்கியில் பணிபுரிந்து வருகிறேன். நான் கல்லூரியில் படிக்கும் போதே கண்டிப்பாக சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்ற தணியாத ஆசையுடன் மனிதநேய பயிற்சி மைய கதவுகளை தட்டினேன். இந்த மையத்தின் நிறுவனரான மேயர் சைதை துரைசாமி எனது உற்சாகத்தை தட்டிக் கொடுத்து, எல்லா உதவிகளையும் செய்து, அவ்வப்போது எந்த வகையில் நான் சிவில் சர்வீசஸ் தேர்வுகளுக்காக, என்னை தயார் செய்து கொள்கிறேன் என்று பயிற்சியாளர்களிடம் கேட்டு, ஆய்வு செய்து அதற்கேற்ற வகையில், நான் என்னை தயார்படுத்திக்கொள்ள உதவிய அந்த மனிதாபிமான செயல்களுக்கு நான் எப்போதும் நன்றியுள்ளவளாக இருப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.
Tags :
tnschool news ,
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

பிளஸ் 2 சிறப்பு துணை பொதுத் தேர்வுக்கான நுழைவுச் சீட்டுகளை இணையதளம் வழி பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று அரசு தேர்வுத் துறை அறிவித்துள்ளது.

பிளஸ் 2 சிறப்பு துணை பொதுத் தேர்வுக்கான நுழைவுச் சீட்டுகளை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று அரசு தேர்வுத் துறை அறிவித்துள்ளது. கடந்த மார்ச்சில் பிளஸ் 2 அரசு பொதுத் தேர்வுகள் நடந்தன. இதில் தேர்ச்சி பெறாதவர்கள் மீண்டும் தேர்வு எழுதி இந்த ஆண்டே தேர்ச்சி பெற வாய்ப்பு அளிக்கும் விதமாக ஜூன்/ஜூலையில் சிறப்பு துணை பொதுத் தேர்வு நடக்கவுள்ளது. இதற்கு விண்ணப்பித்த அனைத்து தனித்தேர்வர்களும் (தட்கல் உள்பட) ஜூன் 13-ம் தேதி (இன்று) முதல் www.tndge.in இணையதளத்தில் தேர்வுக் கூட நுழைவுச் சீட்டுகளை (ஹால் டிக்கெட்) பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். www.tndge.in இணைய தளத்துக்கு சென்று ‘HIGHER SECONDARY EXAM JUNE / JULY 2014 PRIVATE CANDIDATE HALL TICKET PRINT OUT’ என்பதை கிளிக் செய்ய வேண்டும். பின்னர் தோன்றும் பக்கத்தில் தங்களது மார்ச் 2014 பதிவெண், பிறந்த தேதியை பதிவு செய்தால் தேர்வுக் கூட அனுமதிச் சீட்டு திரையில் தோன்றும். அதை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். எழுத்துத் தேர்வு மற்றும் செய் முறை அடங்கிய பாடங்களில் செய்முறைத் தேர்வில் 40 மதிப்பெண்களுக்குக் குறை வாகப் பெற்று தேர்ச்சி அடையாத வர்கள் கண்டிப்பாக செய்முறைத் தேர்வை மீண்டும் செய்வதோடு, எழுத்துத் தேர்வுக்கும் வரவேண்டும். அதிகபட்ச மதிப்பெண் 200 கொண்ட செய்முறை மட்டும் உள்ள பாடத்தில் தேர்ச்சி பெறாதவர்கள் மீண்டும் செய்முறைத் தேர்வுக்கு வரவேண்டும். மொழிப் பாடங்களில் கேட்டல்/ பேசுதல் திறன் தேர்வு, சிறப்பு மொழி (தமிழ்) பாடத்தில் கேட்டல்/ பேசுதல் திறன் தேர்வு மற்றும் செய்முறைத் தேர்வுக்கான தேதி குறித்த விவரத்தை தேர்வு மையத்தின் முதன்மைக் கண்காணிப்பாளரை அணுகி அறிந்துகொள்ள வேண்டும்.உரிய தேர்வுக்கூட அனுமதிச் சீட்டு இல்லாமல் எந்த ஒரு தேர்வரும் தேர்வெழுத அனுமதிக்கப்பட மாட்டார். இவ்வாறு அரசுத் தேர்வுகள் இயக்குநர் கு.தேவராஜன் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
DOWNLOAD HALL TICKET
Tags :
tnschool news ,
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Wednesday, 11 June 2014

DEO EXAM Tentative Answer Keys | மாவட்ட கல்வி அலுவலர் (D.E.O.) பதவியில் 11 காலியிடங்களை நிரப்புவதற்கான முதல்நிலைத் தேர்வு 08.06.2014 ஞாயிற்றுக்கிழமை நடந்தது. அதன் தற்காலிக விடைகளை TNPSC வெளியிட்டுள்ளது.

DEO EXAM Tentative Answer Keys | மாவட்ட கல்வி அலுவலர் (D.E.O.) பதவியில் 11 காலியிடங்களை நிரப்புவதற்கான முதல்நிலைத் தேர்வு 08.06.2014 ஞாயிற்றுக்கிழமை நடந்தது. அதன் தற்காலிக விடைகளை TNPSC வெளியிட்டுள்ளது.

இத்தேர்வில் ஒரு காலியிடத்துக்கு 50 பேர் என்ற விகிதத்தில் முதன்மைத் தேர்விற்கு தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.முதல்நிலைத் தேர்வில் பொது அறிவு, திறனறிவு தொடர்பாக 200 கேள்விகள் கேட்கப்பட்டன. சென்னை, மதுரை, கோவை, திருச்சி ஆகிய 4 இடங்களில் 19 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் தேர்வெழுதினர். முதல்நிலைத் தேர்வில் இருந்து அடுத்தகட்ட தேர்வான முதன்மைத் தேர்வுக்கு 550 பேர் (ஒரு காலியிடத்துக்கு 50 பேர் என்ற விகிதாச்சாரம்) தேர்வு செய்யப்படுவர். ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் ஒரே மதிப்பெண் பெற்றிருந்தால் அவர்களும் முதன்மைத் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவர். அதுபோன்ற சூழல் ஏற்பட்டால் இந்த எண்ணிக்கை சற்று அதிகரிக்கலாம். முதன்மைத் தேர்வில் 2 பொது அறிவுத் தாள்கள், சம்பந்தப்பட்ட பாடத்தில் ஒரு தாள் என மொத்தம் 3 தாள்கள் இருக்கும். இதற்கு விரிவாக விடையளிக்க வேண்டும். ஒவ்வொரு தாளுக்கும் தலா 300 வீதம் மொத்தம் 900 மதிப்பெண். இதில் தேர்ச்சி பெறுவோர் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர். அதற்கு 120 மதிப்பெண். இறுதி யாக முதன்மைத் தேர்வு, நேர்முகத் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் 11 பேர் டி.இ.ஓ. பணிக்கு தேர்வு செய்யப்படுவர். நேரடியாக டி.இ.ஓ.வாக பணி நியமனம் செய்யப் படுபவர்கள்தான் பின்னர் பள்ளிக் கல்வித் துறையில் இயக்குநராக பதவி உயர்வு பெறுகின்றனர். முதன்மைத் தேர்வு, நேர்முகத் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் 11 பேர் டி.இ.ஓ. பணிக்கு தேர்வு செய்யப்படுவர். இவர்கள்தான் பின்னர் பள்ளிக் கல்வித் துறையில் இயக்குநராக பதவி உயர்வு பெறுகின்றனர்.
Note: Right Answer has been tick marked in the respective choices for each question. Representations if any shall be sent so as to reach the Commission's Office within 7 days. Representations received after 18th June 2014 will receive no attention.
Tags :
DEO EXAM Tentative Answer Keys DOWNLOAD ,
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE