TRB

TNTET

Sunday, 15 June 2014

பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் 16.06.2014 (திங்கள்கிழமை) காலை 10 மணிக்கு வெளியிடப்படுகிறது.

பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் 16.06.2014 (திங்கள்கிழமை) காலை 10 மணிக்கு வெளியிடப்படுகிறது. பொறியியல் படிப்பில் சேர ஒரு லட்சத்து 73 ஆயிரத்து 687 மாணவ-மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். அவர்கள் அனைவருக்கும் கணினி மூலம் கடந்த 11-ம் தேதி ரேண்டம் எண் வழங்கப்பட்டது. இந்த நிலையில், சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத் தேர்வு மையத்தில் தரவரிசை பட்டியலை உயர்கல்வித் துறை அமைச்சர் பி.பழனியப்பன், திங்கள்கிழமை வெளியிடுகிறார். பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்த மாணவர்கள் தரவரிசைப் பட்டியலை அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் (www.annauniv.edu) தெரிந்துகொள்ளலாம். பொது தரவரிசை பட்டியலைத் தொடர்ந்து, விளையாட்டுப் பிரிவின் கீழ் விண்ணப்பித்தவர்களுக்கான சிறப்பு தரவரிசைப் பட்டியல் ஜூன் 17-ம் தேதி வெளியிடப்படுகிறது. அவர்களுக்கான கவுன்சலிங் ஜூன் 23, 24-ம் தேதிகளிலும், மாற்றுத்திறனாளிகளுக்கு 25-ம் தேதியும் நடைபெறும். பொதுவான கவுன்சலிங் (அகாடமிக்) ஜூன் 27-ம் தேதி தொடங்கி ஜூலை 28-ம் தேதி வரை நடைபெறும் என்று தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலாளர் பேராசிரியர் வி.ரைமன்ட் உத்தரியராஜ் தெரிவித்துள்ளார்.
Tags :
tnschool news ,