TRB

TNTET

Tuesday, 17 June 2014

பொறியியல் படிப்புக்கான மாணவர் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. 271 மாணவ-மாணவிகள் 200-க்கு 200 ‘கட்ஆப் மார்க்’ பெற்றுள்ளனர். பொது கலந்தாய்வு வரும் 27-ந்தேதி தொடங்குகிறது.

பொறியியல் படிப்புக்கான மாணவர் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. 271 மாணவ-மாணவிகள் 200-க்கு 200 ‘கட்ஆப் மார்க்’ பெற்றுள்ளனர். பொது கலந்தாய்வு வரும் 27-ந்தேதி தொடங்குகிறது.என்ஜினீயரிங் கல்லூரிகள்தமிழ்நாட்டில் அரசு என்ஜினீயரிங் கல்லூரிகள், அரசு உதவி பெறும் என்ஜினீயரிங் கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழக கல்லூரிகள், தனியார் சுயநிதி என்ஜினீயரிங் கல்லூரிகள் என சுமார் 570 என்ஜினீயரிங் கல்லூரிகள் உள்ளன.மொத்தம் உள்ள என்ஜினீயரிங் கல்லூரிகளில் 2 லட்சம் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் இருக்கின்றன. இந்த இடங்களில் மாணவர்கள் சேருவதற்காக அண்ணா பல்கலைக்கழகம் கலந்தாய்வு நடத்த உள்ளது. 

இந்த கலந்தாய்வுக்காக 1 லட்சத்து 73 ஆயிரத்து 687 மாணவ-மாணவிகள் விண்ணப்பம் செய்துள்ளனர். விண்ணப்பித்த மாணவ- மாணவிகளில் சிலருக்கு ஒரே ‘கட்ஆப் மார்க்’, கணிதம், இயற்பியல் பாடத்தில் ஒரே மதிப்பெண், 4-வது விருப்ப பாடத்தில் ஒரே மதிப்பெண், பிறந்தநாள் தேதி சரி சமமாக இருத்தல் போன்றவை இருக்குமானால் அது போன்ற சமயத்தில் ரேண்டம் எண் பயன்படுத்தப்படும். இந்த ரேண்டம் எண் கடந்த 11-ந்தேதி வெளியிடப்பட்டது.தரவரிசை பட்டியல் வெளியீடுஇந்தநிலையில் என்ஜினீயரிங் படிப்புக்கான மாணவர் தரவரிசை பட்டியலை உயர்கல்வித்துறை அமைச்சர் பி.பழனியப்பன் நேற்று காலை வெளியிட்டார். இதில் துணைவேந்தர் பேராசிரியர் மு.ராஜாராம், உயர்கல்வித்துறை முதன்மை செயலாளர் ஹேமந்த் குமார் சின்கா, தொழில்நுட்ப கல்வி ஆணையர் குமார்ஜெயந்த், உயர்கல்வித்துறை கூடுதல் செயலாளர் உமா மகேஸ்வரி, மாணவர் சேர்க்கை செயலாளர் பேராசிரியர் ரைமண்ட் உத்தரியராஜ் ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழக அதிகாரி ஒருவர் கூறியதாவது:-5,264 விண்ணப்பங்கள் நிராகரிப்புஅண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் கல்ந்தாய்வுக்கு மொத்தம் 1 லட்சத்து 73 ஆயிரத்து 687 மாணவ-மாணவிகள் விண்ணப்பம் செய்திருந்தனர். அவர்களில் 1 லட்சத்து 7 ஆயிரத்து 48 மாணவர்கள், 66 ஆயிரத்து 639 மாணவிகள் ஆவார்கள்.1 லட்சத்து 68 ஆயிரத்து 423 மாணவ-மாணவிகளின் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. மொத்தம் 5 ஆயிரத்து 264 மாணவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. நிராகரிக்கப்பட்ட விண்ணப்பங்களுக்கான காரணம் அந்தந்த மாணவர்களுக்கு விளக்கங்கள் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளன.271 பேர் 200-க்கு 200 ‘கட்ஆப் மார்க்’நிராகரிக்கப்பட்டதற்கான காரணத்தை அந்தந்த மாணவர்கள் சரி செய்தால் அவர்களுடைய விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படும். தரவரிசைப்பட்டியலில் 271 மாணவ-மாணவிகள் 200-க்கு 200 கட்ஆப் மார்க் பெற்றுள்ளனர். அவர்களில் முதல் 100 பேர் 4-வது விருப்ப பாடத்திலும் 200-க்கு 200 மதிப்பெண் எடுத்தவர்கள் ஆவார்கள்.ஏற்றுக்கொள்ளப்பட்ட 1 லட்சத்து 68 ஆயிரத்து 423 மாணவர்களில், 124 மாணவர்களுக்கு ரேண்டம் எண் அடிப்படையில் தரவரிசைப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 

கடந்த ஆண்டில் இது 24 மாணவர்களுக்கு ரேண்டம் அடிப்படையில் தரவரிசைப்பட்டியல் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.வரும் 27-ந்தேதி பொது கலந்தாய்வு தொடங்குகிறது. முதல் நாள் காலை 9 மணிக்கு தொடங்கும் பொது கலந்தாய்வில் 3 ஆயிரம் மாணவர்கள் கலந்துக் கொள்கிறார்கள். அடுத்து நடைபெறும் பொது கலந்தாய்வில் நாள் ஒன்றுக்கு 5 ஆயிரம் மாணவர்கள் அழைக்கப்பட உள்ளனர். கடந்த ஆண்டு நாள் ஒன்றுக்கு 3500 பேர் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.32 நாட்கள் பொது கலந்தாய்வுமொத்தம் 32 நாட்கள் பொது கலந்தாய்வு நடைபெறுகிறது. கடந்த ஆண்டில் 37 நாட்கள் நடந்தது. விளையாட்டு வீரர்களுக்கான தரவரிசைப்பட்டியல் இன்று (திங்கட்கிழமை) மாலை 6 மணிக்கு இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.பொது கலந்தாய்வுக்கு எந்தெந்த நாட்களில் மாணவர்கள் வரவேண்டும் என்பது குறித்த அனைத்து தகவல்களும் அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இருந்தாலும் அந்தந்த மாணவர்களுக்கு அழைப்பு கடிதம் அனுப்பி வைக்கப்படும். மேலும் அந்தந்த மாணவர்களுக்கான கலந்தாய்வுக்கு 3 நாட்களுக்கு முன்பு செல்போனில் எஸ்.எம்.எஸ். அனுப்பி வைக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.தரவரிசைப்பட்டியல்மருத்துவப்படிப்புக்கு விண்ணப்பித்தவர்களும், என்ஜினீயரிங் படிப்புக்கும் விண்ணப்பித்திருக்கிறார்கள். இதில் பெரும்பாலும் மருத்துவப்படிப்புக்கே அதிகம் பேர் சேருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக கடந்த 14-ந்தேதி மருத்துவப்படிப்புக்கான தரவரிசைப்பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் முதல் 10 இடங்களில் இடம் பிடித்த மாணவர்களில் சிலர் நேற்று வெளியிடப்பட்ட என்ஜினீயரிங் படிப்புக்கான தரவரிசைப்பட்டியலிலும் இடம் பிடித்திருக்கிறார்கள். அவர்களின் விவரம் வருமாறு:-கே.சுந்தர் நடேஷ், எஸ்.அபிஷேக், வி.எஸ்.விஷ்ணுபிரியா, எம்.மிதுன், கே.ஆர். மைதிலி ஆகியோர் ஆவார்கள்.

Tags :
tnschool news ,